அவள் 3: (நாள் மூன்று மற்றும் நான்கு)

அவள் வீட்டிற்குள் நுழையும்போதே அவள் தந்தை பண கட்டுகளைப் பரப்பி வைத்துக்கொண்டு எண்ணிக்கொண்டு இருந்தார். ஒன்றும் பெரிதாக இல்லை வீட்டின் பக்க புரம் இருக்கும் ஒரு எட்டு அடியை வாங்கவே. அது பின்னால் இருக்கும் இடம் விற்பதற்காய் கிட்டத்தட்ட எட்டு வருடங்களாய் இழுத்தடித்துக்கொண்டு இருந்தார் நிலத்தில் முதலாளி. போன மாதமே முடிவிற்கு வந்தது.

 

வந்ததும் வராததுமாய் கைகால் “அலம்பிட்டு வா” என்று அதிகாரமாய் ஒரு வார்த்தை மட்டும் அவளுக்கோ கடுப்பாக. ஒரு அப்பாவாக அவரை மிகவும் பிடிக்கும். ஆனால் ஆண் வற்க அலப்பறைகள் அவரிடமும் இருக்கும். அப்போது மட்டும் சிறிது கடுப்பாக இருக்கும்.  அப்படியான சமயங்களில் முகத்திற்கு நேராய் பேசிவிடுவாள்.

 

ஒன்றும் பேசாமல் உள்ளே சென்று பையை வைத்துவிட்டு உடைமாற்றி முகம் அலம்பி வந்தவள் கையில் பணகட்டை  கொடுத்து எண்ணச் சொன்னார். எண்ணி எவ்வளவு என்று கூறி சரி பார்த்து எடுத்து வைத்தனர். அவள் தான் வீட்டின் cash counting machine, பள்ளி காலத்திலிருந்தே.

 

தன் கணினி முன் அமர்ந்தவள் தனக்கு பிடித்தமான அந்த வேலையைச் செய்ய ஆரமித்தாள். அதில் மொத்தமாய் மூழ்கி இருந்தவள், தன் அலைபேசியைக் கவனிக்க மறந்தாள். அதில் அவள் கல்லூரி கால சினேகிதி குறுஞ்செய்தி அனுப்பியிருக்க வெகுநேரம் கழித்து அதைக் கண்டவள் முகத்தில் புருவங்கள் முடிசிட்டது.

 

அந்த தோழி அவளுடன் உயிருக்கு உயிராய் இருந்தவள் காரணமே இல்லாமல் நடுவில் எட்டு மாதங்கள் பிரிந்து இருந்தவள். நட்பென்றால் அவர்கள் மூவர் படை மூன்று குடும்பகளும்கூட ஒருவரை ஒருவர் அறிந்தவர்கள் ஆனால் காரணமே சொல்லாமல் இவள் பேசுவதை நிறுத்திவிட்டாள். அந்நாட்கள் மிகவும் கொடுமையானவை. கூடவே இருந்த மனிதர்கள் திடீரென நீ யாரோ நான் யாரோ என்று விலகி, அதைவிடக் கண் எதிரவே சுற்றிக்கொண்டு இருப்பது கடினம்.

 

பார்ப்பவரெல்லாம் இவளிடம் தான் நீங்கள் ஏன் சண்டை போட்டுக்கொண்டீர்கள் என்று கேள்விகளால் துளைத்து எடுப்பார்கள். என்னவென்று கூற? என்று இவள் முழி முழி என்று முழிப்பாள்.

 

ஏனென்றால் அவளுக்கே தெரியப்படுத்தப்படவில்லை அவள் ஏன் விலகிச் சென்றாள் என்று?

 

இப்படியே நாட்கள் கழிய அவள் இளங்கலை படிப்பும்  முடிவிற்கு வந்தது. அடுத்து முதுகலைப் பட்டம் படிக்க இவள் வேறு கல்லூரி வந்துவிட்டாள். தன் சொந்த அக்காவின் திருமணத்திற்குக் கூட அவள் வரவில்லை. இத்தனிக்கும் அக்கா அக்கா என்று அவள் தான் பேசிக்கொண்டு இருப்பாள். ஆயிற்று வருடங்கள் இரண்டு ஓடி. இவள் அக்காவிற்கு குழந்தையே வந்துவிட்டது. இடையில் அவளே வந்து பேசினாள். மன்னிப்பையும் வேண்டினாள். ஆனால் காரணம் என்னவென்று மட்டும் கூற மறுத்துவிட்டாள்.

 

நம்மாளிடம் ஒரு கெட்ட பழக்கம். மன்னித்துவிடுவாள் ஆனால் மறக்கமாட்டாள்.

 

அவ்வப்போது ஞாபகம் வரும்போதெல்லாம் கேட்பாள் அவள் சொல்ல மாட்டாள்.

 

இவள் கேட்க அவள் மறுக்க இவள் கேட்க அவள் மறுக்க ஒவ்வொரு முறையும் முட்டிக்கொள்ளும் ஆனால் ஒரேடியாய் தூக்கி எறிந்துவிட்டு பிரிந்துசெல்ல நினைக்கவில்லை இருவருமே. அது ஒருவகையான பந்தம்

 

ஆண்களின் நட்பு வாழ் முழுவதும் தொடரும் பிரிந்த நபர்கள் வாழ்வை விட்டும் மறைந்துபோவர், பின் சந்தித்துக்கொள்ளும்போது ‘மாமா-மச்சான்’ எனக் கட்டி தழுவிக்கொள்வார்கள். பெண்களின் நட்பு, பிரிந்து தான் வாழ் முழுவதும் இருப்பார்கள் ஆனால் நட்புணர்வு நெஞ்சின் ஆழத்தில் செதுக்கியதாய் இருக்கும். காலங்கள் கடந்தாலும், எதையுமே மறக்க முடியாதது பெண்ணின் மனம்.

 

இப்போது அவளின் செய்தியைப் பார்த்து இவள் முகத்தில் புன்னகை தவந்தது. “எப்படி இருக்க, உன்னை ரொம்பவே மிஸ் பண்ணுகிறேன்டி” என்று அனுப்பி இருந்தாள்.

 

பின் அந்த உரையாடல் முடிய நடுவிரவானது. இதுவும் ‘இவள்.’ கொலையே செய்தாலும் முதுகில் குத்தினாலும் அன்பென வந்தால் விட்டுக்கொடுத்துப் போய்விடுவாள். அவளுக்குத் துரோகம் பிடிக்காது. அதற்காக யாரையும் வெறுக்க அவளால் முடியாது.

 

என்னதான் மன்னித்து ஏற்றாலும் மறக்க முடியாமல் திண்டாடுவாள். வார்த்தைகளால் குத்தி கிழித்துவிடுவாள். ஆனால் ஒவ்வொரு வார்த்தையும் அம்பென சீறிபாயும். வாக்கியத்தால் வருத்தெடுத்துவிடுவாள், மகா அழுத்தமான ஆழ்மனதில் சென்று எய்யும், எய்யத வார்த்தை கொய்யும். எதிராளி தன் தவறுணர்ந்து அவர்களே குற்றம் செய்த மனமாய் குறுகுறுக்க வைத்துவிடுவாள்.

 

அவளைத் தெரிந்தோர் புரிந்துகொள்வார்கள், தெரியாதோர் பட்டுத் திருந்துவார்கள். மனமுதிர்ச்சி, அதே நேரம் கண்டிப்பு.

 

சிறு வயதிலேயே பதின் தொடக்கத்திலேயே காதல் கத்திற்காய் என்று பேசும் நண்பர்களுக்குப் பக்குவமாய் எடுத்துக் கூறுமளவு வாழ்கையை பற்றிப் புரிந்து வைத்திருப்பவள். அதை தெளிவாய் கொண்டு செல்பவள். தன்னை சுற்றியிருப்போருக்கும் அதைப் புரிய வைப்பவள். அவள் எடுக்கும் முடிவு என்றும் சரியாக இருக்கும் என்று அனைவருக்கும் ஒரு நம்பிக்கையை விதைக்கக் கூடியவள்.

 

அன்றைய நாள் பெரிதாய் ஏதும் செய்யாமல் “such a calm day” என்று எண்ணிக்கொண்டாள்.

 

அதற்கு அடுத்த நாளும் அவள் அலுவலகத்திற்கு விடுப்பு எடுத்து இருந்தாள். தன் முதுகலை பட்டப்படிப்பின் போது சமர்ப்பித்து இருந்த சான்றிதழ்களைத் திரும்பி பெறுவதற்காய்.

 

மறுநாள் மிகவும் நன்றாகவே போனது நட்புகளின் கூடும் நிமிடங்கள். மிகவும் சந்தோசமான தருணமாய். அவள் பேராசிரியர் தான்

 

“என்ன? உன் கனவு என்னவாயிற்று?” என்று கேட்டுக்கொண்டு இருந்தார். ஆயிரம் பேரைப் பார்ப்பவர் அவளின் கனவை ஞாபகம் வைத்து கேட்டது மிகவும் சந்தோசமாக உணர்ந்தாள் அவள்

 

“கூடிய சீக்கிரமே நிறைவேறும் மேம்”

 

“All the best” நட்பாய் கூறி விடையளித்தார்.

 

அனைவருக்குமே பிடித்தமான ஒரு மாணவி அவள். எப்போதும் ஆசிரியருக்குப் பிரியமான மாணவருக்கு நட்புகள் இருக்காது. அதிக நட்புகளோடு ஆட்டம் போடும் மாணவரிடம் ஆசிரியருக்கு நெருக்கம் ஏற்படாது. இவளுக்கு இரண்டுமே கிடைத்தது. அது அவளின் நடத்தையும், நட்பான முறுவலும், இயல்பாய் இருக்கும் தன்மை மட்டுமே காரணம்.

(நாள் ஐந்து)

இன்றைய அலுவலக சுழல் சற்று வித்தியாசமாய். உள்ளே நுழையும்போதே அவளின் மென்டோர் சீக்கிரம் வந்துவிட்டு இருந்தார். பரபரப்பாய் சுற்றிக்கொண்டு இருந்தார்கள் கள அதிகாரிகள். இன்று “review” என்று கூறப்பட்டது. அதாவது அன்றைய மாதக் கணக்கு வழக்குகள் மொத்தமாகச் சரி பார்க்கப் பட்டு நிலுவைத் தொகைகளை சரி பார்த்து யார் யார் எவ்வளவு பணம் வாங்க வேண்டும் என்பது போன்ற விஷயங்கள், மாதத்தின் இலக்குகளைத் தீர்மானிப்பார்கள்.

 

காலை முழுவதும் பரபரப்பாய் செல்ல மதியம் நெருங்கும் வேளையில் பொது மேலாளர் உள்ளே வந்தார் ஒரு பெண்ணோடு.

 

“இன்று முதல் இவர்களும் உங்களுள் ஒருவர், துணை மனிதவள மேலாளராகத்  தேர்வாகியுள்ளார்.” என்று கூறி வேலை முடிந்தது என்று அவர்களுக்கான இடத்தை காட்டிவிட்டு நகர்ந்துவிட்டார். அவர்களும் இவளின் வயதே இருக்கும். சிறுபெண்.

 

இருவரும் எடுத்ததும் சிநேகம் ஆகிவிட்டனர். அந்த மேடம் தனித்துவிடப்பட அவர் உர்ரென இருந்தார். அதை புரிந்துகொண்டு அவர்களையும் தங்களுடன் அதாவது புதியதாய் வந்தவருடன் இவரைப் பேச வைக்கும் பொருட்டு இழுத்துப் பிடித்து அரட்டை அடித்துக்கொண்டு இருந்தாள் சிறிது நேரம்.

 

இப்படியாக அந்நாளும் கழிந்தது. மறுநாள் ஒரு பெரிய தலைவலியை இழுத்துவிட்டுக்கொள்ளப் போவது தெரியாமல்.

(நாள் ஆறு )

வாயில் வண்டி சாவியைக் கவ்விக்கொண்டு தன் கைப்பேசியில் மூழ்கியபடி அவள் மின்தூக்கியில் கீழே வர கிழ்தளம் வந்ததும் கதவு திறக்க 

 

“அப்போது கண்டிப்பாக கைப்பேசி எண் தரமாட்டீர்களா?” மீண்டும் அவரே கிளம்பும் தருவாயில் கேட்டுக்கொண்டு இருந்தார். அந்த இளித்த-வாயன். சாவியைக் கவ்வி இருந்த அவள் உதட்டின் மீதும் கேவலமாய் பதிந்தது அவன் பார்வை அதைக் கண்டு தீயாய் அவள் பார்க்கச் சட்டென தன் பார்வையை மாற்றிக்கொண்டு கெட்ட கேள்வியே இது.

 

“முடியாது” ஒற்றை வார்த்தையில் கூறிவிட்டு விடுவிடுவென நகர்ந்துவிட்டாள். பின் என்ன நினைத்தாளோ மின்கதவு முடிக்கொள்ளுமுன் நெருங்கியவள் சரி தரேன் என்று கூற

 

“ப்பாரா” அவன் முகத்தில் வெளிச்சம், ஆனாலும், “இப்போது வேண்டாம் cctv இருக்கு” அங்குச் சுற்றிச் சுற்றி நோட்டம் விட்டுக்கொண்டு இருந்த நிழற்படக்கருவியை காண்பித்துக் கூற

சற்று விலகியவள் “இங்க வாங்க” என்று கூற அவனும் சுற்றும் முற்றும் பார்த்த படி வந்து அவள் கூறிய எண்ணை வாங்கிக்கொண்டு கவரும் பார்வை என்று எண்ணிக்கொண்டு கன்றாவியாய் ஒரு பார்வையைப் பார்த்துவிட்டு விலகி போனான்.

 

இவளும் தனக்குள் சிரித்தபடி தன் வண்டியை நோக்கிச் சென்றுவிட்டாள்.

(நாள் ஏழு)

“ஐயோ அப்படியா பண்ண?” இது புதியவள்

 

“நீ தானே சொன்ன அவன் சரியான வழிஞ்சான் என்று பின்ன என்ன இவ்வளவு தைரியம் உனக்கு?” இது மேடம்

 

“ஹஹஹா பின்னே நானும் எவ்வளவு தான் பொறுத்து போவது? அதனால் தான்.”

 

“அதுக்கு நம்பர் கொடுத்துவிடுவாயா?”

 

“அவங்க தான் வந்ததில் இருந்து தாங்க தாங்க என்று கேட்டுக்கொண்டு இருந்தார் அதான் கொடுத்தேன்”

 

“அதுக்குனு பொதுநலன் மற்றும் பாதுகாப்பிற்காய் பகிர்ந்து இருந்த SPயின் தனிப்பட்ட நம்பரையாடி கொடுத்து வைப்பாய்? ஹாஹா” இது புதியவள் வயது பெண்ணின் கல்லூரி துருதுருப்புடன்

 

“எதுவும் வம்பாய் போகாமலிருந்தால், சரிமா” இது மேடம். அவர் வயதிற்கும் பெண்பிள்ளையின் அன்னையாய் யோசித்துச் சொல்ல

 

“பார்த்துக்கொள்ளலாம் மேம், இவங்கள மாதிரி ஆளுங்களை எல்லாம் கண்டும் காணாது விடுவதால் தான் துளிர்விட்டுப் போய் பல தவறுகளுக்கு வழி வகுக்கிறது” சற்றே கோவமாய் கூறினாளோ?

 

“சரி தான் இப்போது வேலையைப் பார்ப்போம்”

 

பின் ஒரு நேரம் யாரும் இல்லாத பொழுது அவள் மென்டோர் கேட்டார் “பேசலையா?” என்று விற்பனை மேலாளரைக் காட்டி இல்லையென உதட்டை பிதுக்கிவிட்டு நான் சிரிக்க அவரும் சிரித்தார் பின் கூறினார்

 

“கொஞ்ச நாள் அப்படி தான், அப்புறம் அவரே வந்து பேசிவிடுவார், அதுக்காகலாம் கவலைப் படாத எப்போதும்போல் இரு என்ன?”

 

அது அவளுக்கே தெரியும். அவர் சொன்னதாலோ, மேலாளரின் குணமறிந்தோ அல்ல. அது என்னவோ அவளிடம் சண்டையிடுபவர் அனைவரும் ஒரு நாள் இல்லையென்றால் ஒருநாள் அவளிடம் திரும்பி வந்து அவர்களாகவே பேசுவார்கள். அது எல்லோர் வாழ்விலும் நடப்பதா இல்லை அவளுக்கு மட்டுமா என்றெல்லாம் தெரியாது. வாழ்க்கை ஒரு வட்டம் எவ்வளவு விலகினாலும் ஒரு நாள் நாம் ஒதுங்கி இருப்போரிடமே போய் நிற்க வேண்டிய சுழல் கண்டிப்பாக அமையும் என்று நம்புவபள்.

 

“சரி சார்” பளிச் சிரிப்புடன்.

 

அவளின் சிரிப்பு அவருக்கு எப்போதும் பிடிக்கும். காண்பித்துக்கொண்டதில்லை. லேசான முறுவலைப் பார்த்தாலும் சரி அவளின் கலகல சிரிப்பும் சரி ஒரு வினாடி நின்று கவனிப்பார். அவர் பார்ப்பது அவளுக்கும் உணரும் ஆனால் எதுவும் கேட்டுக்கொள்ளமாட்டாள். விகற்பமில்லா பார்வை, அவ்வளவே.

 

மறுநாள் அவள் செய்த விளையாட்டு அவளுக்கு வினையானதா? விடிவு கொண்டு வந்ததா?