Advertisement

எதுக்கு இப்படி இழுக்கறீங்க?? அத்என்றவள் அவர் நின்றிருந்த இடத்தை பார்த்திடஅப்போவே போய்ட்டாங்க. குட் மம்மி
இப்படி உட்காருஎன்றவன் அவளை தன் மடி மீது அமர்த்திக் கொண்டான்.
வேணாம். அத்தை வருவாங்க
வரமாட்டாங்க நீயா உள்ள போற வரை அவங்க வெளிய வரமாட்டாங்க…”
என் மானத்தை வாங்குறீங்க
பரவாயில்லைஎன்றவன்நிஜமாவே இது எனக்கு பிடிக்காதுன்னு தெரிஞ்சு தான் செஞ்சியா
வேணுமின்னு எல்லாம் செய்யலை. வேற வழியில்லாம தான் செஞ்சேன், கடை பக்கத்துல இருந்தா போய் வாங்கிட்டு வந்திருப்போம். கொஞ்ச தூரம் நடந்து போய் வாங்கணும் அதான் போகலை. அத்தை சொன்னாங்க வேற எதாச்சும் செய்யலாம்ன்னு
நான் தான் வேற மாதிரி செய்யறேன் அத்தை ஒரு வேளை அவருக்கு பிடிச்சாலும் பிடிக்கும்ன்னு சொல்லி இப்படி செஞ்சேன், நல்லாயிருக்கா??”
ஹ்ம்ம் ரொம்ப நல்லா இருக்கு, கலரும் வித்தியாசமா இருக்கு
இதுக்கு பேரு கிச்சடி, யூடியூப்ல பார்த்திருக்கேன். இப்போ தான் முதல் முறையா செய்யறேன். எங்கம்மா உப்புமாவே தேங்காய் எல்லாம் துருவி போட்டு செய்வாங்க. எனக்கு அது பிடிக்கும்
எங்கம்மா இஞ்சி எல்லாம் போட்டு செய்வாங்க. எனக்கு உப்புமான்னாலே அலர்ஜி தான் எப்பவும்
சரி பேசிட்டு இருந்தது போதும் கிளம்புங்க, சிவகாசி வரைக்கும் போகணும்ன்னு சொன்னீங்க
ஹ்ம்ம் ஆமா அந்த ஏரியா பக்கம் போய் ஒரு சின்ன மார்க்கெட்டிங் பண்ணலாம்ன்னு தான்
இங்க வர்ற வருமானமே போதாதா நமக்குஎன்றாள் அவன் முகம் பார்த்து.
நீ இதை எனக்கு ஊட்டிவிடு அப்போ தான் நீ கேக்குறதுக்கு எல்லாம் பதில் சொல்ல எனக்கு வசதியா இருக்கும்” 
நான் எவ்வளவு சீரியஸா பேசிட்டு இருக்கேன், நீங்க என்னன்னா ஊட்டி விடச் சொல்றீங்க
ஊட்டிவிடுஎன்று அதிலேயே நின்றான் அவன்.
அவன் சொன்னதை அவள் செய்ய அவளை பார்த்தவன் பொண்டாட்டி சமையலை ருசிச்சாச்சு. அதை அவ ஊட்டிவிட்டா எப்படி இருக்கும்ன்னு பார்க்க ஆசை அதான்…”
இனிமே தினமும் நீயே எனக்கு ஊட்டிவிடு
போங்கஎன்றவள் அவன் மடி மீதிருந்து எழ ஊட்டிவிட்டு போ
நான் கேட்டதுக்கு மட்டும் பதில் சொல்ல மாட்டீங்கல்ல ஊட்டிவிட மாட்டேன் போங்க
இப்போ என்ன தெரியணும் உனக்கு. நமக்கு இங்க இருக்கறது போதாதான்னு நீ யோசிக்கறே?? எனக்கு இது இங்கவே முடிஞ்சிட கூடாது கடல் கடந்தும் போகணும்ன்னு ஆசை
அது தான் எதுக்கு??”
ஒண்ணு உன்னோட கைப்பக்குவம் இந்த உலகமே தெரிஞ்சுக்கணும், அடுத்தது எவ்வளவு நாளைக்கு இதுலவே இருக்க சொல்றே. அடுத்து போக வேணாமா, திருநெல்வேலி சாந்தி ஸ்வீட்ஸ், இருட்டு கடை அல்வா, A2B, கிருஷ்ணா ஸ்வீட்ஸ் மைசூர்பாகு இந்த மாதிரி நம்ம கடையும் மாறணும்ன்னு எனக்கு ஆசை
அவங்களோட நாம போட்டி போட முடியுமா
யார் போட்டி போட சொன்னது. அது போல நமக்குன்னு ஒரு நல்ல பேரை வாங்கணும்ன்னு தான் சொல்ல வர்றேன்
நம்மால முடியுமா??”
நிச்சயமா முடியும்என்றான் நம்பிக்கையாய்.
சாப்பிட்டு அன்னையிடமும் மனைவியிடமும் சொல்லிக்கொண்டு அவன் கிளம்பியிருந்தான். சினமிகா கடைக்கு தேவையானதை தயார் செய்வதற்காய் சமையலறைக்குள் புகுந்தாள்.
சீதா அவளுக்கு உதவி செய்ய, அவள் செய்து முடித்ததை எடுத்து ஆறவிட்டாள். கடையில் அமர நம்பிக்கையான பெண் ஒருவரை வேலன் தான் ஏற்பாடு செய்திருந்தார்.
கடைக்கு யாரோ வந்திருப்பர் போலும் அப்பெண் அழைக்க சினமிகா தன் மாமியாரிடம் அத்தை நீங்க போய் பார்க்கறீங்களா. நான் ஒரு எட்டு போய் குளிச்சுட்டு வந்திடறேன்
நீ போம்மா நான் பார்த்துக்கறேன். இதெல்லாம் இப்படியே இருக்கட்டுமா
இருக்கட்டும் அத்தை ஆறட்டும். நீங்க போகவும் அந்த அக்காவை இதை பார்த்துக்க சொல்லுங்க. நான் ஐஞ்சு நிமிஷத்துல வந்திடறேன்என்றவள் அவர்கள் அறைக்கு சென்றாள்.
குளித்து முடித்து வேறு சேலை அணிந்துக் கொண்டிருந்தவள் கொசுவம் வைத்து சொருக போகும் போது தான் கீழே அணிந்திருந்த புது சேலையில் ஸ்டிக்கர் ஒட்டியிருந்ததை கவனித்தாள். கொசுவத்தை சொருகி முடித்து குனிந்து அதை கிழித்து எறியும் போது கட்டிலில் இருந்த குமிழ் அவள் பார்வையில் விழுந்தது.
இதுல என்ன தான் இருக்குன்னு இன்னைக்கு பார்த்திடணும்என்று சொல்லிக் கொண்டு அந்த குமிழை பிடித்து திருக அது திறக்கவேயில்லை.
என்னடா இது திறக்க மாட்டேங்குதுஎன்றவாறே அதை எதிர் திசை நோக்கி திருப்ப கிளிக் என்ற சத்தம் கேட்டது.
திறந்திடுச்சாஎன்றவாறே அதை இழுக்க அதில் வெறும் காகிதங்களே இருந்தது. சிலவற்றில் ஏதோ வரைந்திருக்க, ஒரு சிலதில் ஏதோ எழுதியிருந்தது. அதையெல்லாம் கையில் எடுத்து பார்த்தாள். ஒன்றும் விளங்கவில்லை அவளுக்கு.
என்னது இது, இதை ஏதோ பொக்கிஷம் மாதிரி பத்திரமா வைச்சிருக்காங்கஇது வேற கனவுல வந்து பெரிசா பில்டப் எல்லாம் கொடுத்திடுச்சுஎன்று அவள் பாட்டுக்கு பேசிக் கொண்டிருந்தாள்.
 
வேறு எதுவும் இருக்கிறதா என்று உள்ளே கையைவிட்டு பார்க்க அதற்கு மேல் அதில் ஒன்றும் இல்லை. அது ஒரு சிறிய இழுப்பறையாகவே இருந்தது. “ஆமா இந்த ஒரு குமிழ் தான் இருக்கா இல்லை வேற எதுவும் இருக்குமாஎன்று யோசித்தாள்.
ஏனென்றால் அதில் பெரிய கட்டில் அதில் ஒன்றல்ல ஆறேழு இழுப்பறைகள் கூட இருக்கலாம் அவ்வளவு பெரிய கட்டில் அது. அவள் எழுந்து சென்று அடுத்த பக்கம் பார்க்க அது பிளைனாகவே இருந்தது.
இப்படி இருக்க முடியாதே. இருந்தா ரெண்டாச்சும் இருக்கணுமேஎன்று இவள் கட்டிலை மீண்டும் ஒரு முறை சுற்றிப்பார்க்க அதற்குள் சீதா அவளை அழைக்கும் குரல் கேட்க முதலில் அவள் திறந்து வைத்திருந்த குமிழை மூடிவிட்டு அங்கிருந்து நகர்ந்தாள்.
அதன் பின் மாலை வரை வேலை நெட்டித் தள்ளியது. அவர்களின் கடை அப்போது தான் திறக்கப் பட்டிருந்தாலும் அவர்கள் கடையின் ஸ்பெஷலான குல்பிக்கு அதிக கிராக்கியாகி போனது.
அது விற்க விற்க இவளும் செய்து வைத்துக் கொண்டு தானிருந்தாள். எவ்வளவு செய்தாலும் அது விற்று போனது. குல்பி வாங்க வருபவர்கள் மற்ற இனிப்புகளையும் வாங்கிச் சென்றுக் கொண்டு தானிருந்தனர்.
நாளை மறுநாள் ஒரு திருமண வீட்டிற்கான ஆர்டரை உதிரன் எடுத்திருந்தான். அதன் வேலை தான் தற்போது ஓடிக் கொண்டிருந்தது
கை சுத்து முறுக்கு அவளுக்கு நன்றாகவே செய்ய வரும். ஐநூறு முறுக்கும், இனிப்புகளும் கேட்டிருந்தனர். முறுக்கு செய்வதற்கு உதவிக்காய் வேலனின் ஏற்பாட்டில் சிலர் வந்திருக்கவே வேலை கொஞ்சம் சீக்கிரம் முடிந்தது.
அவர்கள் கிளம்பவும் சீதா அவளருகே வந்தவர் அவள் கையை பிடித்து நீவிவிட்டார்.
அத்தை விடுங்க நீங்க எதுக்கு இதெல்லாம் செய்யறீங்க??”
என்ன தப்பு சினா, இந்த வீட்டுக்காக நீ செய்யற, உனக்காக இதை நான் செஞ்சா என்ன தப்புன்னு சொல்லுஎன்றவர் மெதுவாய் பிடித்துவிட சினமிகாவிற்கு சங்கோஜமாய் இருந்தது.
அத்தை அவர் போன் பண்ணாராஎன்று கேட்டவாறே அவரிடமிருந்து கையை மெதுவாய் உருவிக்கொண்டாள்.
மதியம் ஒரு தரம் போன் பண்ணான், நீ முறுக்கு சுத்திட்டு இருந்ததால டிஸ்டர்ப் பண்ண வேணாம்ன்னு சொல்லிட்டான்
எப்போ வருவேன்னு சொன்னாரா
அங்க இருந்து ஸ்ரீவில்லிபுத்தூர் போற வேலை இருக்கு அதையும் முடிச்சுட்டு வீட்டுக்கு வர்றேன்னு சொன்னான்மாஎன்றார்.
!!” என்று கேட்டுக் கொண்டவள் எழுந்திருந்தாள்.
எண்ணெய் வாடை அடிக்குது அத்தை, திரும்பவும் குளிச்சுட்டு வர்றேன்
உனக்காக தண்ணி சுட வைச்சிருக்கேன், இந்த நேரத்துல தண்ணி ஐஸா இருக்கும்என்றவர் அதை ஒரு வாளியில் ஊற்றிக் கொண்டு வந்து அவளிடம் கொடுத்தார்.
சினமிகா அதை எடுத்துக் கொண்டு நகரும் போது இங்க உதிரன் அப்படிங்கறதுஎன்ற குரல் கேட்க வெளியில் கடையில் இருந்த பெண் “அம்மா உங்களை கூப்பிடுறாங்க…” என்று அவர் அழைக்க  சினமிகா வாளியை கீழே வைத்துவிட்டு வெளியே சென்றாள்.
வந்திருந்தது ஒரு காவலர் ‘இவர் எதுக்காக இங்க வந்திருக்கார்’ என்று யோசனை மனதினில் ஓட “சொல்லுங்க சார் என்னோட ஹஸ்பெண்ட் தான் அவரு” என்றாள் அவள்.
அவரோ அவளை ஏற இறங்க பார்த்துவிட்டு “வீட்டில பெரியவங்க யாரும் இல்லையாம்மா” என்றார்.
“என்ன விஷயம் சார் சொல்லுங்க??” என்று கேட்கும் போதே உள்ளுக்குள் எதுவோ செய்தது அவளுக்கு. சீதாவும் அப்போது வெளியில் வந்திருந்தார். அவரை பார்த்த காவலர் “இவங்க யாரு??” என்று கேட்க “என்னோட அத்தை” என்றாள்.
“உதிரன்”
“என்னோட பையன் தான் சொல்லுங்க சார் என்ன விஷயம்” என்ற கேட்ட சீதாவுக்கும் எதுவோ பதைபதைப்பு உள்ளுக்குள் தோன்றியது.
“பைபாஸ்ல ஒரு ஆக்ஸிடென்ட்”
“என்னது!!” என்று அதிர்ந்த சீதாவுக்கு கண்கள் இருண்டது. 
“சார் எதுவா இருந்தாலும் நேராவே சொல்லுங்க” என்று தைரியத்தை வரவழைத்துக் கொண்டு சினமிகா சொல்ல அந்த காவலர் சொன்ன சேதி கேட்டு மயங்கியிருந்தார் சீதா.
அவர் சொன்னது பைக் ஒன்று சிவகாசியில் இருந்து ஸ்ரீவில்லிபுத்தூர் செல்லும் வழியில் ஆக்ஸிடென்ட் ஆகி அதில் சென்றவர் ஸ்பாட் அவுட் என்றிருந்தார்…

Advertisement