Advertisement

15
சினமிகா இரவில் வந்த கனவில் வெகுவாய் குழம்பியிருந்தவள் உடன் படுத்திருந்த உதிரனை அணைத்துக் கொண்டு அவன் மார்பில் தலைவைத்து படுத்துக் கொண்டாள். வெகு நேரமாய் உறக்கம் வாராது ஒரு வழியாய் உறங்கியிருந்தாள் அவள்.
காலையில் முதலில் கண் விழித்த உதிரன் தன்னை அவ்வளவு நெருக்கமாய் அணைத்து படுத்திருக்கும் மனைவியை தான் பார்த்தான்.
அன்றைய காலை அவனுக்கு இனிய காலையாகவே தோன்றியது அவனுக்கு. மனதிற்குள் உற்சாகம் பீறிட அவனும் அவளை தனக்குள் இறுக்கிக் கொண்டான்.
அவன் அணைப்பின் இறுக்கத்தில் உறக்கம் லேசாய் களைய சினமிகா மெலிதாய் சிணுங்கினாள். “சிமிஎன்று மெதுவாய் அவள் காதில் சொல்ல திடுக்கிட்டு கண் விழித்தாள் அவள்.
உதிரனின் மார்பில் தலைவைத்திருப்பது புரிய சட்டென்று எழ முயன்றவளை தடுத்தான் கணவன்.
விடுங்கஎன்ன விளையாட்டு பண்றீங்க??”
யாரு நானா விளையாட்டு பண்றேன். நீ தான்டி என் மேல வந்து படுத்திருக்கஎன்றான் அவன்.
அது தான் அவளுக்கே தெரியுமே. இரவில் கனவு வந்ததும் குழப்பமும் பயமும் மேலிட அவள் அவனை ஒட்டி படுத்ததும் தான் அறிவாளே.
அதை அவனிடம் காட்டிக்கொள்ள பிரியப்படாதவளாய்தூக்கத்துல தெரியாம வந்து கட்டி பிடிச்சிருப்பேன்என்றாள்.
தெரியாம நீயா??” என்றான் அவன் ஒரு மாதிரி குரலில்.
ச்சு விடுங்க. விடிஞ்சுட்டு போல நான் எழணும்என்று அவனிடம் இருந்து விடுபட முயற்சி செய்தாள்.
எழுந்து அமர்ந்தவள் கீழே இறங்கப் போக ஒரு கையால் அவள் இடையை வளைத்து இழுத்தவன் தன் மீது அவளை போட்டுக் கொண்டு இருக்கரத்தால் அவள் எழாதவாறு கட்டிக் கொண்டான்.
ப்ளீஸ்ங்க
நீ தானே என்னை உசுப்பெத்திவிட்டே, நான் பாட்டுக்கு சிவனேன்னு தான் படுத்திருந்தேன்
அதுக்கு இப்போ என்ன செய்யணும்
நைட் விட்டதை இப்போ தொடரலாம்
என்னது அதெல்லாம் வேலைக்கு ஆகாது. நேரமா கடையை திறக்க வேணாமா
வேணாம், இன்னைக்கு கடைக்கு லீவு
விளையாடாதீங்க
சரி நான் விளையாடாம ஒண்ணு கேட்கறேன், பதில் சொல்லு விட்டிறேன்
கேளுங்க
நைட் கனவு எதுவும் கண்டியா??” என்று அவளை அறிந்தவன் போல் கேட்டான்.
அவள் முகம் வதங்கிவிட அவன் மீதே சாய்ந்துக் கொண்டாள். அவள் முகத்தை நிமிர்த்தியவன் என்னாச்சு எதுவும் கெட்ட கனவா??”
அவள் கனவை பற்றி அவனுக்கு பெரிதாய் எந்த எண்ணமும் இல்லை. அது நடக்கும் நடக்காது என்றெல்லாம் கூட அவன் யோசித்ததில்லை இதுவரை. அவள் ஆழ்மனதின் எண்ணங்களோ அல்லது எப்போது கேட்ட படித்த சம்பவங்களோ தான் கனவில் வருகிறது என்ற எண்ணம் தான் அவனுக்கு.
அவனை அவள் கனவில் கண்டதாக சொன்ன போது அவனுக்கு அது சுவாரசியமானதாக இருந்தது. அதனால் தான் அவள் கனவை பற்றி சொன்ன போது முழுதாய் காது கொடுத்து கேட்டிருந்தான்.
இரவில் தன்னருகில் அவளாய் நெருங்கி படுத்திருக்கிறாள் என்றால் அது ஏதோ கெட்ட கனவாக இருக்குமோ என்று தான் அவளை இப்போது கேள்வி கேட்டுக் கொண்டிருந்தான்.
நீயா வந்து என் பக்கத்துல ஒரு நாளும் இப்படி படுத்ததில்லை. அதுவும் இவ்வளவு நெருக்கமா. பயத்துல கட்டிப்பிடிச்சு தூங்கின மாதிரி தான் இருந்துச்சு. நான் எழ முயற்சி பண்ணப்போ நீ என்னை விடாம இறுக்கி பிடிச்சிட்டு இருந்தே
அதுக்கு அப்புறம் தான் நானும் உன்னை கட்டிக்கிட்டேன். சொல்லு சிமி என்னாச்சு??” என்று அவன் கேட்கவும் அவள் கடைசியாக தனக்கு வந்த கனவை பற்றி அவனிடம் சொன்னாள். உதிரனை ரத்த வெள்ளத்தில் பார்த்ததையும் சேர்த்தே சொன்னாள்
அவள் சொல்லி முடிக்கும் வரை எந்த குறுக்கீடும் செய்யாதவன் பின்எனக்கு எதாச்சும் ஆகிடும்ன்னு நினைச்சு பயப்படுறியா??”
அவளோதெரியலைஎன்றாள் குழப்பமாய்.
கனவுல நடக்கறதெல்லாம் நிஜத்துல நடக்காது சிமி. நான் உன்னைவிட்டு போக மாட்டேன். அதை மனசுல வை. அந்த மரணம் கூட தொலைதூரம் தள்ளித்தான் போகும் என்னைப் பார்த்து
ப்ச் எதுக்கு இப்படியெல்லாம் பேசி வைக்கறீங்க
தீன்னு சொன்னா நாக்கு சுட்டுடாதுசரி இன்னைக்கு ஏதோ கனவு சொன்னியே ஆமா உன்னை யாரோ தள்ளிவிட்டாங்கன்னு…”
ஹ்ம்ம் ஆமா
எதுக்கு தள்ளிவிட்டாங்க
அது தான் தெரியலையே
அப்புறம் ஏன் அதே யோசிக்கறே
இல்லை தள்ளி…” என்றவள் பாதியிலேயே நிறுத்தினாள் பேச்சை.
என்ன தள்ளின்னு சொல்லிட்டு நிறுத்திட்டே??”
ஒண்ணுமில்லை
சொல்லு சிமி
அது வந்து தள்ளிவிட்டவங்களை…”
உனக்கு தெரியுமா??”
அத்இல்லை எனக்கு தெரிஞ்சவங்க மாதிரி இருந்துச்சு
யாரு??”
அது தான் நினைவுக்கு வரலைஎன்றாள் அவனிடம். அவன் தாயை தான் கனவில் கண்டாள். அதை அவனிடம் சொன்னால் எப்படி எடுத்துக்கொள்வான் என்று தெரியவில்லை.
தவிர அது நிஜமில்லையே, கனவு தானே. கனவில் வந்தது நிஜத்தில் நடந்தால்என்று யோசித்தவளுக்கு பகீரென்றது. ‘கடவுளே அது நடக்கக்கூடாது. நிஜத்தில் நடக்கவே கூடாதுஎன்று வேண்டுதல் வைத்தாள்.
அவனிடம் பேசிக் கொண்டிருக்கும் போதே அவ்வப்போது அவள் யோசனைக்கு செல்வதும் அவள் முகம் பலவித உணர்வுகளை காட்டுவதையும் படிக்க முயற்சி செய்துக் கொண்டிருந்தான் அவள் கணவன்.
சிமிஎன்றழைத்து அவள் கவனத்தை தன் புறம் திருப்பினான்.
எதையும் யோசிக்காதேநான் எப்பவும் உன் கூட உனக்கு துணையா இருப்பேன், உன்னைவிட்டு போக மாட்டேன்என்றவன் அறியவில்லை அடுத்து நடக்கப் போவதை.
அவன் பேசியதில் அவள் முகம் சற்றே தெளிந்தது. அவள் நெற்றியில் அழுத்தமாய் ஒரு முத்தம் பதித்தான். “சரி நீ போய் குளிச்சுட்டு வெளிய போ. நான் கொஞ்ச நேரத்துல கிளம்பி வர்றேன்
இன்னைக்கு எனக்கு சிவகாசி வரைக்கும் போற வேலை இருக்கு
சினமிகா குளித்து முடித்து வெளியே சென்றுவிட உதிரனும் சொன்னது போலவே வெளியே செல்ல கிளம்பி வந்தான்.
அம்மா இன்னைக்கு டிபன் என்ன??”
உப்புமா
ரொம்ப தப்புமா
என்னது??”
உப்புமாவெல்லாம் ஒரு டிபனா என்னம்மா இப்படி பண்றீங்களேம்மாஎன்றான் அவன்.
சினா நான் தான் சொன்னேன்லம்மா அவனுக்கு உப்புமா பிடிக்காதுன்னு. இப்போ நீ செஞ்சதை என்ன செய்யஎன்றார் சீதாதேவி.
அம்மாம்மா என்ன சொன்னீங்க?? திரும்ப சொல்லுங்க
அப்போது சினமிகா சமையலறையில் இருந்து வெளியில் வந்தாள். “ஏங்க நீங்க உப்புமா சாப்பிட மாட்டீங்களா
மாவு தீர்ந்துடுச்சு, அத்தை பொங்கல் பண்ணலாம்ன்னு சொன்னாங்க. பாசிப்பருப்பு இல்லை நான் தான் ரவை இருக்கே உப்புமா செய்வோம்ன்னு சொன்னேன்
நான் வேணாம்ன்னு தான் சொன்னேன்ப்பாஎன்று மகனை ஓரக்கண்ணால் பார்த்துக் கொண்டே சொன்னார் சீதா.
ஆமா அத்தை வேணாம்ன்னு தான் சொன்னாங்க. ஆனா நான் தான் வேணாம்ன்னு சொன்னா விட்டிருவீங்களா வீட்டில என்ன செய்றாங்களோ அதை சாப்பிட்டு தான் ஆகணும்ன்னு சொல்லி செஞ்சேன்
ஏன்டி எங்கம்மா வேணா எனக்கு பிடிக்காதுன்னு சொன்னா அதே செய்வியா நீஎல்லா பொண்டாட்டியும் புருஷனுக்கு என்ன பிடிக்கும்ன்னு அவங்கம்மாகிட்ட கேட்டு அதை தான் செஞ்சு போடுவாங்கன்னு கேள்விப்பட்டிருக்கேன். நீ என்னடான்னா பிடிக்காதை செஞ்சு வைச்சிருக்கே
ரொம்ப சினிமா பார்த்து இருக்கீங்கன்னு நினைக்கிறேன். நீங்க சொல்ற சீன் எல்லாம் அங்க தான் வரும். இங்க வராது, இது ரியல். என்ன இருக்கோ அதை வைச்சு தான் சமைக்க முடியும். ஒழுங்கா சாப்பிட்டு கிளம்புங்கஎன்று ஆர்டர் போட்டாள் அவள்.
அம்மா உங்க முன்னாடியே என்னை மிரட்டுறாம்மா
அதனாலென்ன உதிரா அவ சொல்றதை தான் கேளேன்
நீங்க எப்போம்மா இப்படி ஆனீங்கஎன்றான் பாவமாய் முகத்தை வைத்துக் கொண்டு.
பின்சரி சரி ரெண்டு பேரும் கூட்டணி போட்டு என்னை வைச்சு செய்யறதுன்னு முடிவு பண்ணிட்டீங்க. டிபனை கொண்டு வாங்க சாப்பிட்டு கிளம்பறேன்என்றவனின் முன்னே டிபன் தட்டை நீட்டினாள் அவன் மனைவி.
முதல் முறையா சமைச்சு கொடுத்திருக்கே அதுவும் எனக்கு பிடிக்காததா. பரவாயில்லை சின்ன பொண்ணாச்சேன்னு மன்னிச்சுக்கறேன்
என்னது
சரி சாப்பிடுறேன்னு சொன்னேன்
என்ன இருக்கோ…” என்று அவள் ஆரம்பிக்க என்ன போட்டாலும் சாப்பிடுறேன் தாயே. நீ லெக்சர் அடிக்க ஆரம்பிக்காதேஎன்றவன் அவள் முதன் முதலாய் அவனுக்காய் செய்த உப்புமாவை நன்றாகவே உண்டான்.
அவன் அன்னை செய்வது போல இல்லாமல் அது புதுவிதமாய் இருந்தது, ருசியாகவே இருந்தது. “இன்னும் கொஞ்சம் வைக்கலாமே. கொஞ்சமா வைச்சா எப்படி பத்தும்என்று எங்கோ பார்த்துக் கொண்டு சொல்ல சினமிகா அவனுக்கு இன்னமும் கொஞ்சம் வைத்தாள்.
சீதா ஒரு சிரிப்புடன் அதை பார்த்திருந்தவர் அவர்களை தனியேவிட்டு அங்கிருந்து நகர்ந்திருந்தார். அதை ஓரக்கண்ணால் பார்த்திருந்தவன் எதிரில் நின்றவளை தன் புறம் இழுத்தான் ஒரு கையால்.

Advertisement