Advertisement

14
சிமிஅடுத்து என்ன பண்றதா உத்தேசம்??”
தெரியலைங்க பார்ப்போம்
மேகாகிட்ட நீ இவ்வளவு கடுமை காமிச்சு இருக்க வேணாமோ??”
நான் கடுமையா நடந்துக்கலைங்க
எனக்கு உன்னோட நிலை புரியுது. அவளோட நிலைமையை நினைச்சு தான் அப்படிச் சொன்னேன். நீ செஞ்சது நிச்சயம் தப்பு இல்லை. நம்மளை ஒருத்தருக்கு பிடிக்கலைன்னா அவங்க முன்னாடி நடமாடி அவங்களோட வெறுப்பை சம்பாதிக்கறதை விட விலகிப் போய்டலாம்ன்னு நீ நினைச்சிருக்க சரி தானேஎன்று அவன் சொல்ல அவன் மீது சாய்ந்துக் கொண்டாள்.
எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்குங்க. என்னை ஏன் அவங்களுக்கு பிடிக்கலை. எல்லாருக்கும் எல்லாரையும் பிடிக்கணும்ன்னு அவசியம் இல்லை அது எனக்கும் தெரியும்
கூடப்பிறந்த பாசம் கூடவா இருக்காது. அப்படி நான் என்ன தப்பு செஞ்சுட்டேன்??” என்று சொல்லும் போது குரல் உடைந்து கண்ணிலும் உடைப்பெடுத்தது.
சிமி ப்ளீஸ் உன்னோட கண்ணீரை வேஸ்ட் பண்ணாத. அவங்க அதுக்கெல்லாம் தகுதியானவங்க கிடையாது
இல்லைங்க மனசு கேட்கலை. என் மேல என்ன தப்புன்னும் எனக்கு புரியவே இல்லை. பெரிசா நான் எதையும் யார்கிட்டயும் எதிர்பார்த்ததே இல்லை. அப்புறம் ஏன் இப்படி??”
எல்லாரும் ஒரே மாதிரி யோசிக்கணும்ன்னு நாம எப்படி நினைக்க முடியும் சொல்லு
நான் அப்படி சொல்லவே இல்லையே
ஆனா உனக்கு ஏன் இப்படின்னு கேட்டல்ல?? அவங்களை பொறுத்த வரை மாமா உனக்கு பேவரா எல்லாம் செய்யறாங்கன்னு அவங்க எண்ணம். அப்படித்தான் அவங்க நினைக்கிறாங்க
ஒரு கோடு வரையறோம் அது ஒருத்தருக்கு நேரா இருக்க மாதிரி தெரியும். இன்னொருத்தவங்களுக்கு படுத்து இருக்க மாதிரி தெரியும். அப்படி தான் ஒவ்வொருத்தரோட எண்ணமும்

அது ஒரே திசையில பயணிக்கிறது இல்லை. நீ பீல் பண்ண எதுவுமில்லை, விட்டுத்தள்ளு. வருத்தப்படாதே பாசிட்டிவா யோசிஎல்லாமே நல்லதுக்கா தான் இருக்கும்
ஹ்ம்ம்என்றவளின் முகம் இப்போது தெளிந்திருந்தது. இரு கைகளாலும் உதிரனை இறுக்கமாய் அணைத்துக் கொண்டாள்.
ஹேய் என்ன??”
ஒண்ணுமில்லைஎன்றவாறே இன்னும் இறுக்கினாள்.
இங்க பாரு இப்படிலாம் பண்ணே அப்புறம் அடுத்து என்ன நடந்தாலும் நான் பொறுப்பில்லை சொல்லிட்டேன்
அடுத்து என்ன நடக்குமாம்என்றாள் ஒன்றுமே தெரியாதவள் போல்.
என்ன வேணா நடக்கும், அதுக்கு முன்னாடி நீ சொல்லு
என்ன சொல்லணும்
எதுக்கு இப்படி என்னை இறுக்கறே??”
தெரியலை
நான் உன்னைவிட்டு எங்கயும் போக மாட்டேன்என்றான் காதில் ரகசியமாய்.
தெரியும் நானும் உங்களை விடமாட்டேன்என்று அவள் சொல்லவும் லேசாய் சிரித்தான்.
நிமிர்ந்து அவனை பார்த்தவள்எதுக்கு சிரிக்கறீங்க??”
உன்னோட அந்த பீலிங்க்ஸ்க்கு எல்லாம் புல்ஸ்டாப் வை. நம்ம வேற பீலிங்க்ஸ்குள்ள போவோம்
எதுக்கு சிரிச்சீங்க
நீ எதுக்கு கட்டிப்பிடிச்சேன்னு சொல்லு. அப்போ தான் சொல்வேன்
அது வந்து
ஹ்ம்ம் அதான் வந்திட்டேன்ல
நீங்க என் லைப்ல வந்தது தான் எனக்கு வரமே. உங்களை எப்பவும் விடமாட்டேன்னு
நான் ஒண்ணும் ரொம்ப நல்லவன்லாம் இல்லையே. வரம்ன்னுலாம் சொல்லி என்னை பெரிய மனுஷன் ஆக்குறே
என்னை பொறுத்தவரை அப்படித்தான்என்றவள் அவன் மீது சாய்ந்துக் கொண்டு கண்ணை மூடிக்கொண்டாள்.
மீண்டும் சிரித்தான்நான் சொல்றது சிரிப்பா இருக்கா உங்களுக்கு??”
இல்லை சந்தோசமா இருக்கு. உன்னை பொறுத்தவரை நான் உனக்கு வரம்ன்னு சொன்னே. என்னை பொறுத்தவரை அம்மாக்கு பிறகு எல்லாமே இனி நீ தான்…” என்றவனும் அவளை இறுக்கினான்.
பின் மெதுவாய் அவளை தன்னில் இருந்து விலக்கி அவள் நெற்றியில் கன்னத்தில் என்று வரிசையாய் முத்தமிட்டான்.
நீலவண்ணன் பிரச்சனையை எப்படி சமாளிக்க??”
பார்த்துக்கலாம் விடுங்க. அவன் சொன்னது உண்மை இல்லையே, நாம ஏன் கவலைப்படணும்??”
மேகா அவனுக்கு சாதகமா பேசினா உன்னால என்ன செய்ய முடியும்??”
எதுவும் செய்ய முடியாதா என்ன??”
அதைத் தான் கேட்கறேன். உன் எண்ணம் என்ன??”
இப்பவும் சொல்றேங்க நாம தப்பு செய்யலை. அப்படியே நாம செஞ்சாலும் அது நமக்கு உரிமையானது தானே. அதை இல்லைன்னு சொல்லிட முடியுமா
ஏதோ பெரிசா பிளான் பண்ணிட்டியா என்றான் அவள் பேச்சை கேட்டு.
பிளான் எல்லாம் இல்லை அவனோட பேராசையை பத்தி தான் நான் அங்க எடுத்துக்காட்ட போறேன். அதுக்கு பெரிய உதாரணமே நாம கடையை எழுதிக்கொடுத்தது தானே
அவனே அவனுக்கு ஆப்பு வைச்சுக்கறான், இதனால என்னை அசிங்கப்படுத்திட்டதா அவனுக்கு தோணலாம். ஆனா அவன் தான் அசிங்கப்பட போறான் என்றாள் அவள்.
ஹ்ம்ம் புரியுது, ஆனா மாமாவும் அத்தையும் தான் இதுல ரொம்ப கவலைப்படுவாங்க என்ன செய்ய
என்னை சொல்லிட்டு நீங்க பீல் பண்ணுறீங்க?? எனக்கு கடையை குறிச்ச நேரத்துல திறக்க முடியாதுன்னு தான் கொஞ்சம் கவலையா இருக்கு
அதெல்லாம் யோசிக்காத, எது எது எப்பப்போ நடக்கணுமோ அப்போ தான் நடக்கும். தாமதமா நாம கடையை திறக்கறதுனால ஏதோ நன்மை நடக்கப் போகுதுன்னு நினைச்சுக்குவோம் விடு
அட்வகேட் பார்க்கணும்ல
ஹ்ம்ம் நான் பார்த்துக்கறேன், ஸ்கூல் பிரண்ட் ஒருத்தன் இங்க தான் ப்ராக்டீஸ் பண்றான். நாளைக்கு போய் பேசிட்டு வருவோம்
நீலவண்ணனால் எதுவும் பேச முடியவில்லை. சினமிகா தெளிவாக அனைத்தையும் அங்கு கூறியிருந்தாள். வந்த தீர்ப்பு சினமிகாவிற்கு சாதகமானதாகவே இருந்தது. உடன் நீலவண்ணனுக்கு எச்சரிக்கை செய்வதாகவும் இருந்தது
அவளின் வேலையில் அவன் இனி எந்தவிதத்திலும் தடை செய்யக்கூடாது, தடையாக இருக்கக்கூடாது என்று கண்டிப்பாக சொல்லியிருந்தது. மேலும் நீலவண்ணனின் வழக்கு பொய்யான வழக்கு என்று சொல்லி அதற்காகவும் அவனை கடுமையாக கண்டித்து வழக்கை தள்ளுப்படி செய்திருந்தனர்.
வேலனும் தமிழும் பெரிய மகளுக்காக தான் வந்து பேசியிருந்தனர். இதில் யாரும் எதிர்பார்க்காத ஒன்றாய் வேலன் ஒன்றை செய்திருந்தார்.
அது அவர் சொந்த உழைப்பில் கட்டிய வீட்டை தன் மகளின் பெயருக்கே மாற்றி உயில் எழுதி அதை சட்டப்படி பதிவும் செய்துவிட்டார். அதை நீதிமன்றத்தில் அனைவரின் முன்னேயும் சொல்லியிருந்தார்.
மகனால் மேலும் தன் மகளுக்கு சிரமம் வருவதை அவர் விரும்பவில்லை. அதனாலேயே அப்படியொரு ஏற்பாட்டை செய்து முடித்திருந்தார். சினமிகாவிற்கு அது முன்பே தெரியாது.
மனைவியை மட்டும் கலந்துக்கொண்டு அதை செய்து முடித்திருந்தார் அவர். வீட்டின் பின் பகுதியில் இருந்த பழைய ஒட்டு வீடும், மாட்டுக்கொட்டகை இருந்த பகுதியும் அவர் தந்தையுடையது, அதை மூன்று மக்களுக்கும் பிரித்து எழுதிவிட்டார் அவர்.
நீதிமன்றத்தில் அவர் தெளிவாகவே அனைத்தையும் சொல்லியிருதார். “இதை இங்க இப்போ நான் சொல்ல காரணம் ஒருத்தரால மத்தவங்களுக்குன்னு யாருக்கும் எந்த கஷ்டமும் வர்றதை நான் விரும்பலை. என் மகனால என் மகளோட வாழ்க்கையில எந்த குறுக்கீடும் இனி இருக்கக்கூடாது அப்படிங்கறதுக்காக மட்டும் தான் இதை இங்க சொன்னேன்
மூணு பிள்ளைகளுமே எனக்கு சமம் தான். அவங்களுக்கு என்ன செய்யணுமோ அதை சமமா தான் நான் செய்யணும்ன்னு நினைச்சேன், அதைத்தான் செஞ்சேன். அவங்க ஒற்றுமையா இருக்கணும்ன்னு ஆசைப்பட்டேன். அது தான் நடக்காம போய்டுச்சுஎன்று அவர் இறுதியில் சொல்லும் போது லேசாய் கண் கலங்கி போனது அவருக்கு.
வெளியில் வந்த பின்னே சினமிகா தன் தந்தையிடம்ஏன்பா என்கிட்ட கூட ஒரு வார்த்தை சொல்லாம இப்படி செஞ்சீங்க??”
இல்லைம்மா நான் அங்க சொன்னது தான் எனக்கு நீங்க எல்லாரும் ஒண்ணு தான். யாருக்கும் பாரபட்சம் பார்க்க என்னால முடியாதும்மா
எனக்கு புரியுதுப்பா. அவனோட கோபம் இன்னும் அதிகமாகுமே
அதைப்பத்தி எனக்கு கவலையில்லை. நான் அவனை நம்பி இந்த உலகத்தில பிறக்கலைம்மாஎன்று அவர் சொல்லிட அதில் அவரின் தன்மானம் கம்பீரமாய் மிளிர்ந்ததை உணர்ந்தாள் மகள்.
அடுத்து வந்த ஓர் நல்ல நாளில் அவர்களின் கடை திறப்பு விழா நடக்க அதை வேலனே அமோகமாய் தொடங்கி வைத்து முதல் வியாபாரமும் அவர் கையாலேயே செய்ய உதிரனுக்கும் சினமிகாவிற்கும் அப்படியொரு மகிழ்ச்சி.
வேலனும் தமிழும் கையோடு அவளிடம் ஒரு பத்திரத்தை ஒப்படைக்கஎன்னப்பா??” என்றாள் அவள்.
மாப்பிள்ளைஎன்று அழைத்திருக்க உதிரனும் பார்த்திருந்தான்.
என்ன மாமா??”
இது வீட்டோட பத்திரம், சினா பேருக்கு மாத்தி எழுதிட்டேன்
அப்பா!! இப்போவே இதை கொடுக்கணுமாஎன்றாள் மகள்.
எதுக்கு மாமா இதெல்லாம்??”
என்னோட கடமை மாப்பிள்ளை அதை நான் சரியா செய்யணும். கடையை தான் நீங்க அவனுக்கு மாத்தி கொடுத்திட்டீங்களே. உங்களுக்கு நான் எதுவும் செய்யலைன்னா என்னால நிம்மதியா சாகக்கூட முடியாதுங்க
அப்பா கடைசில இதுக்கு தான் நான் எல்லாம் செஞ்சேன்னு அவங்க நினைப்பாங்கப்பா
அவன் சொல்வான் இவன் சொல்வான்னே நம்ம வாழ்க்கையை வாழ முடியாதும்மா. இது அப்பாவோட கடைசி ஆசைன்னு வைச்சுக்கோ
அன்னைக்கு கோர்ட் சொன்னது தான்டா அவன் இதை எதிர்த்து கேஸ் போட முடியாது. ஏன்னா அந்த வீடு நான் சம்பாதிச்சு கட்டினது. பின்னாடி உள்ள பூர்வீக  இடத்தை உங்க மூணு பேருக்கும் பிரிச்சு எழுதிட்டேன், அது எங்க காலத்துக்கு அப்புறம் உங்களுக்கு வர்ற மாதிரி எழுதிட்டேன்
என்ன சொல்லுங்கப்பா இதுல எனக்கு இப்போவரைக்கும் எந்த உடன்பாடு இல்லை…”
சினா இது அப்பா அம்மாவோட மனநிம்மதிக்காக. உனக்காக எதையுமே நாங்க செய்யலைன்னு குற்றவுணர்ச்சியில எங்களை தவிக்க விட்டிறாதம்மாஎன்று அவர் பலவாறு எடுத்துச் சொல்ல சினமிகா மனமிறங்கினாள்.
உதிரன் அலைந்து திரிந்து கல்யாண வீட்டிற்கு மொத்தமாய் ஸ்வீட் செய்யும் ஆர்டர் ஒன்றை எடுத்திருந்தான் அது நல்லபடியாக முடிய தொடர்ந்து அது போல ஆர்டர்கள் வரவாரம்பித்தது. ஆரம்பத்தில் சினமிகா தனியாளாகத் தான் செய்ய ஆரம்பித்தாள்.
சீதாவும் அவளுக்கு ஒத்துழைப்பு கொடுத்தார், இருந்தாலும் மேலும் ஒருவர் இருந்தால் நன்றாக இருக்கும் என்ற யோசனையில் சினமிகா இருக்க உதிரன் ஒரு பெண்ணையும் ஒரு ஆணையும் வேலைக்கு சேர்த்தான்.
ஆஹா ஓஹோ என்றில்லாவிட்டாலும் கையை கடிக்காது அவர்களின் தொழில் நல்ல முறையிலேயே வளர ஆரம்பித்தது.
மேடம் ரொம்ப பிசியாக்கிட்டீங்க என்னை கண்டுக்கவே மாட்டேங்கறீங்கஎன்றான் உதிரன் கட்டிலில் படுத்துக்கொண்டு.
சினமிகா அப்போது பாலை எடுத்துக்கொண்டு அவர்கள் அறைக்குள் வந்திருந்தாள். அவனிடம் ஒரு கிளாசை நீட்டிவிட்டு தானும் ஒன்றை குடித்து முடித்தாள்.
கேள்வி கேட்டா பதில் சொல்ல மாட்டேங்குறா என் பொண்டாட்டிஎன்றான் உதிரன் தொடர்ந்து.
சொல்லுங்க உங்களை எப்படி கவனிக்கணும்??” என்றவள் அவனை நோக்கி திரும்பினாள்.
எப்படி வேணும்னாலும் கவனிக்கலாம்என்றவன் அவளை இழுத்து தன் மேல் போட்டுக் கொண்டான்.
!!” என்று அவள் வலியில் முனகஎன்னாச்சுஎன்று அவள் கையை திருப்பி பார்த்தான்.
இல்லை ஒண்ணுமில்லைஎன்று அவள் கையை இழுக்க போக அவன் விடாது அதை திருப்பி பார்த்தான்.
எண்ணெய் தெறித்திருக்கும் போல கையில் பெரிதாய் ஒரு கொப்புளம் வெடித்திருந்தது.
சிமி என்னம்மா இதெல்லாம்என்றவனுக்கு அவ்வளவு கஷ்டமாக இருந்தது அதை பார்க்கும் போது. கட்டிலில் இருந்து எழுந்தவன் ஷெல்பில் இருந்து மருந்தொன்றை தேடி எடுத்து வந்தான்.
அவள் கையை தன் மடி மீது வைத்துக்கொண்டவன் அதன் மீது மருந்தை தடவினான்.
ஏன் என்கிட்ட சொல்லலை??”
இதுக்கெல்லாம் போய் சொல்வாங்களா. இது சின்ன காயம் தாங்க
நீ சொல்லணும் எதுவா இருந்தாலும் நீ என்கிட்ட சொல்லணும். காயம் சின்னதா பெரிசான்னு நான் தான் முடிவு பண்ணுவேன்
நீ ஈசியா சொல்றே சின்ன காயம்ன்னு என் மனசுல அது தான் இப்போ பெருங்காயமா இருக்கு
பெருங்காயமா அது குழம்புக்கு தானே போடுவாங்கஎன்று அவள் சொல்லி சிரிக்கஉன்னை கடிச்சிடுவேன்டி
எப்போ பார்த்தாலும் கடிப்பேன் கட்டிப்பிடிப்பேன்னுட்டு போங்கஎன்றாள்.
எங்கே போக??”
உன்னைவிட்டா யாரும் எனக்கில்லை பாரு பாரு என்ன கண்டேன் நானும் உனக்குள்ளஎன்று அவன் காதலாய் பாட அதில் உருகி போனவளாய் அவன் நெஞ்சின் மீது சாய்ந்திருந்தாள்.
அவளை ஆதரவாய் தாங்கிக் கொண்டவன் அவள் கைக்கு வலிக்காதவாறு அதை பற்றிக்கொண்டு மெதுவாய் வருடிக் கொடுத்தான். அதிலேயே அவள் கண்கள் சொருக உறங்கிப் போனாள்.
———————-
டொக் டொக் என்ற சத்தம் சினமிகாவை விழிக்கச் செய்ய மெதுவாய் கண் திறந்து பார்த்தாள். நேரம் பார்க்க மணி இரண்டை தாண்டியிருந்தது.
சத்தம் எங்கிருந்து வருகிறது என்று அவள் அமர்ந்த வாக்கிலேயே பார்க்க மீண்டும் அதே சத்தம் கதவு பக்கமிருந்து வரஅத்தை எழுப்புறாங்களோஎன்று எண்ணிக்கொண்டே எழுந்துச் சென்று கதவை திறக்க பைரவர் நின்றிருந்தார்.
நீங்க எங்க இங்க??” என்றவாறே அவள் சுற்றிமுற்றி பார்க்க அறையின் ஒரு ஓரத்தில் மட்டுமே விளக்கெரிந்தது. அது பூஜையறை என்பதால் இரவு விளக்கு எரிந்துக் கொண்டிருந்தது அங்கு.
பைரவரோ இவள் புடவையை இழுக்கஎங்கே கூட்டிட்டு போறீங்க??” என்றவள் அவருடனே நடக்க இருட்டில் அவர் ஓரிடத்திற்கு கூட்டிச் சென்றார்.
அங்கு ஒருவர் எதையோ இருளில் தேடிக் கொண்டிருக்கயாரது??” என்ற இவள் குரலில் அப்படியே அடங்கியது.
யாருங்க அது??” என்றவள் அங்கு சுவிட்ச் எதுவும் தெரிகிறதா என்று தான் பார்த்தாள். இருளுக்கு கண்கள் நன்றாகவே பழகியிருந்தது. எங்கோ தெரிந்த லேசான வெளிச்சம் அறைக்குள் இருந்தும் இல்லாதிருந்தது.
எதையோ உருட்டும் சத்தம் கேட்கயாருன்னு கேட்கறேன்ல்லஎன்றவள் சுவற்றை தடவி தடவி மின்விளக்கின் சுவிட்சை கண்டுப்பிடித்து அதை உமிழவிட அறையெங்கும் ஒளிவெள்ளம் பாய்ந்தது.
அங்கிருந்த உருவம் இவளைக் கண்டதும் ஓட முயல இவள் பின் தொடர்ந்து அதை பிடிக்க முயல அவரோ வெளியே ஓடினார். இவளும் பின்னேயே ஓட ஓரிடத்தில் அவ்வுருவம் நின்றது.
பௌர்ணமிக்கு ஓரிரு தினம் முன்பாக இருந்ததால் முழுநிலவாக இல்லாத போதும் வெண்ணிலா பவனி வந்து வெளிச்சத்தை கொடுத்தது.
இருளில் அவ்வுருவம் சினமிகாவின் கண்களுக்கு புலப்படவில்லை, எங்கோ அது மறைந்திருக்க இவள் அங்குமிங்கும் தேடியவள் களைத்து போய் ஓரிடத்தில் அமரப்போக அவளை யாரோ அங்கிருத்து தள்ளிவிட நிமிர்ந்து பார்த்தவள் திடுக்கிட்டு போனாள். அதுஅதுஅவ்வுருவம்உதிரனின் தாய் சீதா

Advertisement