Advertisement

IM 15 – 2

SNP யின் மனதில் கோபம் கனன்று கொண்டிருந்தது… .. கண் மண் தெரியாத கோபம் … எப்படி இந்த வார்த்தைகளை, சரண் சொல்லலாம்.. ?இதில் இந்த தியா வேறு .. வேலையாட்கள் அனைவரும் சுற்றி இருக்க அதையே சொல்லியது நினைவில் வர.. முகம் பாறை போல் இறுகியது… 

“பாஸ்கரா.. உடனே உங்கம்மா-வ வீட்ல விட்டுட்டு வா… , கிளம்பு “. என…

“ஏன்.. ? நான் ஏன் வீட்டுக்கு போகணும்?, இங்க என்ன நடக்குதுன்னு தெரியாம.. யாரு எப்போ வந்து என்ன சாபம் கொடுப்பாங்கன்னு நிமிஷத்துக்கு நிமிஷம் பயந்து அங்க உக்காந்துகிட்டு இருக்கணுமா? “, என்று கத்த… அதே நேரம் ஜி. எம். உள்ளே வர….

“என்னய்யா?” ஹை -டெசிபலில் … SNP ஏகமாய் எகிற….

“சார்.. சார்.. வக்கீல்.. ரொம்ப நேரமா செல்-லுல கூப்பிடறார்…. நீங்க அட்டென்ட் பண்ணலியா… அதான் லேண்ட் லைன்-கு கூப்பிட்டு இருக்கார்… பேசிடுங்க…. “, விளக்கம் சொல்லி… ஓட்டமும் .. நடையாய் வெளியேறினார்… போனை கையில் எடுத்தவன், 

“சொல்லுங்க ….ஏதாவது அவசரமா?”

“இல்ல அதெல்ல்லா இல்லை .. பேமென்ட் ரிமைண்டர் காக… சீனியர் கால் பண்ண சொல்லி இருந்தார்.. அதான்…”

“சரி சொல்லிடீங்கள்ல… நாளைக்கு நெப்ட் -ல [NEFT ] வந்துடும்…. வச்சுடுங்க…”, அவர் அங்கே வைக்கும் முன் .. SNP…. கட் செய்திருந்தான்… “சரண்யுசாயா … இனி ஒரு தடவ .. தொழில் செய்யற இடத்துக்கு வந்து… வித்துடு… விட்டுடு -ன்னு யாராவது சொன்னீங்க… என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது…”

“எல்லாம் விளையாட்டா போச்சா உங்களுக்கு?, ஒரு தொழில் ஆரம்பிக்கறதுன்னா என்ன கஷ்டம்-னு யோசிச்சு பாத்திருக்கீங்களா? நாப்பது இடத்துல லோனுக்கு அலைஞ்சு.. பத்து கவெர்மென்ட் ஆபீசுக்கு நடையா நடந்து அப்ரூவல், லைசென்ஸ், வெயிட்ஸ் ன் மஷர்ஸ், சேல்ஸ் டாக்ஸ் … இப்போ லேட்டஸ்ட்-டா …GST .. எல்லாம் வாங்கி… ஆர்டர்க்கு நாய் மாதிரி காத்து கிடந்து … ஒரு வேலைய எடுத்து பன்றோம்-னா .. ஏன்? அது அந்த வேலை மேல இருக்கிற வெறி… ” …

“நம்ம பார்வைல… இது … நமக்கு இருக்கிற எத்தனையோ பாக்டரி-ல ஒன்னு… இங்க வேலை பாக்கிற ஒரு ஒருத்தனுக்கும்… இதுதான் வயித்துப்பாடு.. இதை நம்பி .. அவனவன் ….. வீடு லோன் … படிப்புக்கு லோன்…. தங்கச்சி கல்யாணம்…. பொண்டாட்டி பிரசவம்-ன்னு ஆயிரம் கனவு வச்சிருப்பான்… எனக்கும் உனக்கும் வேணா இது வழக்கா தெரியலாம்… ஆனா இங்க இருக்கிற ஓரொரு எம்ப்ளாயிக்கும் … இது வாழ்க்கை…, அதைத்தான் இந்த கம்பெனியோட எக்ஸ்-பாஸூம் சொல்லிட்டு போனாரு…”

“அப்படின்னா… தயாரிப்பையாவது நிறுத்துங்க… தரமில்லாத பொருளை மார்க்கெட்-ல கொடுக்கறது மட்டும் நியாயமா?, அதை சட்டம் மூலமா தடுத்தா அது தப்பாமா?”, என்று கருப்புச்சட்டைக்காரியாய் சரண் வாதாட…

பாஸ்கருக்கு “இப்படித்தான் நானும் லதிகாவும் அடிச்சிகிட்டே இருப்போமோ?”, எதிர்காலம் பற்றிய பயத்தில் கண்ணில் பூச்சி பறந்தது….அவன் கவலை அவனுக்கு…. 

“எஸ்.. தரமில்லாத பொருளை கொடுக்கறது தப்புதான்…”, சொல்லும்போது SNP குரல் உள்ளே போயிருந்தது.. 

“அப்போ ப்ரொடக்சனை நிறுத்துங்க.. அங்க வேலை பாக்கறவங்க … வெட்…டியா சம்பளம் வாங்கினாலும் பரவாயில்லைன்னு… கொடுங்க….”, கொஞ்சம் அலட்சியம் இருந்ததோ.. பேச்சில் ?

“சரண்.. இன்னொரு முறை தொழிலாளிகளை பத்தி கேவலமா ஒரு வார்த்த வந்தது…. …”, என்று உறும ….

சர்வமும் பதறியது சரணுக்கு…. “சாரி….”

” சாரி… யாருக்குடீ வேணும் உன் ஸாரி ? எலக்சன் நேரத்துல காசும் , எலக்சன் முடிஞ்சதும் இலவசமும் வாங்க க்யூ-ல நிக்கிற சாதாரண கூட்டம்தானே -ன்னு … இளக்காரமா போச்சு.. இல்ல? .” 

“இங்க…அப்படியில்லை… ஒரு நாள் வேலை இல்லன்னா ஒத்துப்பான்… போனா போகுது ரெண்டு நாள் இருப்பான்… அடுத்த நாள் வர்றதுக்கு யோசிப்பான்.. ஏன்னா…. அவனவன் வேலைங்கிறது அவனோட நம்பிக்கை… நான் என் குடும்பத்தை காப்பாத்த உழைக்கிறேன்-ங்கிற கர்வம்…. , இந்த உழைப்பு கொடுக்கிற நிம்மதி…. இது எவ்வ்ளோ பிச்சை போட்டாலும் /வாங்கினாலும் வராது…. “

“இப்போ நீ வீட்டுக்கு போலாம் “, பாஸ்கர் முன் நடக்க… சரண் மெதுவாய் எழுந்தாள்… “நான் பிச்சைங்கிற அர்த்ததுல சொல்லல., நரேன் .. “, கண்களில் இருந்து நீர் விழட்டுமா என கேட்க…., நிமிர்ந்து பார்த்தவனின் மனம் வலித்தது… 

“ம்ம்ம்ம்… ஹூம் “, பெருமூச்சொன்றை விட்டு, “சரிம்மா… சரி .. சாயங்காலம் ஆச்சு …வீட்டுக்கு போ…சீக்கிரம் வர பாக்கிறேன்….”, மனைவியை தேற்றி அனுப்பி வைத்தான்….

++++++++++++++++++++++++++++++++++++++++++++

“என்ன மாப்பிள்ளை… ? புருஷனும் பொண்டாட்டியும் ..சொல்லாம கொள்ளாம வந்தீங்க… உடனே மாயமாயிட்டிங்க?”, அலைபேசியில் பேசுவது SNP … கேட்பது.. வேற யாரு? புது மாப்பிள்ளைதான்… சரனை பாஸ்கருடன் அனுப்பிவிட்டு .. தியாவுடன் பேச நம்பரை அழுத்தி இருந்தான் … என்ன இருந்தாலும் செல்ல மகளாயிற்றே ??

“ரொம்ப மரியாதை செஞ்சுட்டிங்க மாமா.. அதான்…. முடியாம வந்துட்டோம்…”, இளம்பரிதி முறுக்க…

“அப்பாட்ட இப்படித்தான் பேசுவீங்களா?… கொடுங்க….”, பரிதி வீட்டம்மா-வின் கட்டளையை கேட்டு… 

“இரு ஸ்பீக்கர்-ல போட்டு தர்றேன்… ஏதாவது ஏடாகூடமா பேசினாரு …. அப்பறம் என்னை குறை சொல்லாத..” இருவரும் ரகசியமெல்லாம் பேசவில்லை.. எதிராளிக்கு தெரிய வேண்டுமென்ற பேச்சு… 

“இல்லம்மா.. நான் மாப்பிள்ளை கிட்ட பேசத்தான் கால் பண்ணினேன்… அவர் பொண்டாட்டிய எல்லார் முன்னாடியும் பேசினது தப்புதான்… ஆனா, அத்தனை பேருக்கு சாப்பாடு போடற கம்பெனியை… அங்க வேலை பாக்கறவங்க முன்னாலேயே மூடிடுங்க -ன்னு, அவர் பொண்டாட்டி சொன்னது சரியா? ன்னும் யோசிக்க சொல்லு…”

“ப்பா… அவர் தான் ஏதோ புரியாம பேசுறார்னா.. நீங்களும் ஏன்பா?…சாரிப்பா.. புரிஞ்சுக்காம சொல்லிட்டேன்… ஆமா… அம்மா வீட்டுக்கு போயிட்டாங்களா ? அந்த பொம்பள யாரு டாட்? கன்னா பின்னா-ன்னு கத்திட்டு போகுது?.. “

“அதெல்லாம் அம்மாட்ட அப்பறம் நிதானமா கேட்டுக்கோம்மா .., இப்போ நீங்க ரெண்டு பேரும் வீட்டுக்கு வராம.. ஏன் இங்க வந்தீங்க?, எப்படி இந்த இடம் உங்களுக்கு தெரியும்? “, வரிசையாய் கேள்விகளை அடுக்க….

அவளும், மருத்துவ மனையில் நடந்தது.. முகவரி பார்த்து , அங்கே வந்தது …. போன்றவற்றை சொல்லி முடிக்க… “அப்போ… நீ மட்டும் தனியாதான் வந்தியா?.. அதே நேரத்துல … மாப்ளை எப்படி டான்-ன்னு வந்தாரு? “…

“அது மாமா.. உங்களோட .இறக்குமதியாற ….பொருட்களை… வழிலேயே கடத்தி.. லோக்கல் பொருளை உள்ள வைச்சு .. இங்க வருது… நீங்களும் அதை மார்க்கெட்-ல சப்ளை பண்றீங்க…. அந்த வண்டிய ஃபாலோ பண்ணி வந்தா…. அங்க உங்க பொண்ணு நிக்கறா [ டேய்.. இப்போ மட்டும் உன் பொண்டாட்டி …. என் பொண்ணு ஆகிட்டாளா?]. எனக்கு முதல்ல..ஒன்னுமே புரியலை.. “

“அப்பறம் கொஞ்சம் புரிஞ்சது… ஆனா… சொல்லத்தேவை இல்லன்னு போயிட்டிங்க? அப்படித்தானே மாப்பிள்ளை ? “, என குற்றம் சாட்டும் குரலில் வினவவும் வும் “சாரி மாமா….., அது அந்த நிஷத்துல வர்ற கோபம்…”

“இருக்க வேண்டியதுதான்… ஆனா மொத்தமும் தெரிஞ்சுக்கிட்டதுக்கு அப்பறம் காமிச்சு இருக்கணும்…. “

“ஒரு டிஸ்கஷன் பண்ணனும்.. சாப்பிட்டு எட்டு மணி வாக்குல வர முடியுமா?”

“ஓ.எஸ் .. கண்டிப்பா… ஆனா, மாமா , இனிமே இளா -ன்னே கூப்புடுங்க….”

“ஹா ஹா ஹா… உங்க கோபம் போச்சா…?சரி … சீக்கிரம் வாங்க…”, பேசியை நிறுத்தி … என் பொண்டாட்டி.. டக்குனு உங்க பொண்ணு ஆயிட்டாளே ?

போனை வைத்த பரிதியோ , இழைந்து கொண்டு இருந்தான்… “கதவை லாக் பண்ணிக்கோ… நான் வந்து பெல்-லை ரெண்டு தடவ அழுத்தினத்துக்கு அப்பறம் தான் கதவை தொறக்கணும்….”

“உங்கப்பனுக்கு அறிவே இல்லடீ… புதுசா கட்டிக்கிட்டவங்களாச்சே… ன்னு ஒரு இங்கிதம் வேணாம்? “

“கரெக்ட்… இரு கேக்கறேன்…”, என்று தியா போனை எடுக்க… “ஏய்… ஏண்டீ… வொய் திஸ் கொலைவெறி?” நீ மட்டும் இத கேட்ட… ஒரு ஒரு முறை பேசும்போதும் இதையே சொல்லி காட்டுவாருடீ… உங்கப்பா.., அந்தாளு எனக்கு வில்லனா? ஹீரோவாண்னே தெரியல… “…

இளம்பரிதியின் புலம்பலில்.. தியா வாய்விட்டு சிரிக்க… “மொத்த குடும்பமும் சேர்ந்து நம்மள காமெடி பீஸாக்குது ….. நீ சிரிக்கிற…? உன்னை எப்படி ஆஃப் பண்ணனும்-ன்னு எனக்கு தெரியும்டி.. என் தியாக்குட்டி…” என்று அவள் மேலே படர்ந்து … 

உடலில் இதழால் கோலம் போட… அவளும் மயங்க ஆரம்பிக்க.. வாய் மட்டும்… “அப்பா அங்க வெயிட் பண்ணுவாங்க”, என்று முணுமுணுக்க…. “நான் முதல்ல அப்பா ஆகற வேலைய பாத்திட்டு .. அப்பறம் உங்கப்பாவை பாக்கிறேன்… “, என்ற பரிதியின் உதட்டினை அவசரமாய் மூடினாள் .. தியா அவள் இதழால்….

மொழிவோம்….

Advertisement