Advertisement

IM 10 

கல்பலதிகா, வெறித்துக் கொண்டிருந்தாள்.. பாஸ்கர் வந்து இவளை திட்டி சென்ற, அதே தோழியின் அலுவலகம். இன்னமும் அவளது சுற்றுலா முடியாததால், பூட்டியே கிடந்தது.. ஆனால், லதிகா, தினமும் அங்கு போவதை வழக்கமாக்கி இருந்தாள் .. அவன் தூசியில் எழுதி சென்ற அலைபேசி என்னை கூட இன்னமும் அழிக்காமல், அதை எழுதியபோது கோபத்தில் சிவந்திருந்த அவனின் முகத்தை, சிலும்பிய கேசத்தை மனக்கண்ணில் பார்த்துக் கொண்டிருந்தாள்.

“கண்டதும் காதல்”-ல்லாம், சினிமா-ல, கதை-ல தான் வரும். தினம் அரை மணிநேரம் நம்ம கூட வர்ற வண்டியையே எவ்வளவு பாத்து பாத்து வாங்கறோம். வாழ்நாள் மொத்தமும் கூட வர்றவன , ஒரு தடவ பாத்தோடனே பத்திக்குமா?,” – இது கிண்டலாய் அவள் தோழிகளிடம் சொன்னதுதான்.

இந்த ஒரு வருட வழக்கறிஞர் தொழிலில், பொது நல வழக்குகள் தவிர்த்து, அவள் அதிகம் கண்டது, விவாகரத்துக்களே.. அதிலும், தம்பதிகள் ரத்திற்கு சொல்லும் காரணங்கள்….அப்பப்பா… இவளுக்கு காதலிலும், திருமணத்திலும் இருந்த நம்பிக்கையை அசைத்திருந்தனர்.. அதிலும், போன மாதம் இவளிடம் வந்த ஒரு பெண், பத்தொன்பதே வயது ஆனவள், “அக்கா, நேத்தியோட எனக்கு கல்யாணம் முடிஞ்சு ஒரு வருஷம் ஆகுது… தயவு செய்து எனக்கு அவன் கிட்ட இருந்து விடுதலை வாங்கி குடுத்துடுங்க”, என்று கூற .. இவள் அதிர்ந்து போய் “என்ன விஷயம்?, காரணம் சொல்லுங்க ?”, துருவ….

கல்லூரிக்காதல்… இவள் இரண்டாம் வருடம், இளங்கலை படிக்கும் மாணவி அவனோ முதுகலை முதலாம் வருடம்… இருவரும் படிக்கும் மாணவர்கள்… பேருந்து பயணத்தில் .. கண்கள் பார்க்க .. ஹார்மோன் கோளாறை காதல் என்று கணக்கிட்டு.. லைலா மஜ்னு ஆகினர் இருவரும்… வீட்டில் கண்டித்ததால், வயது ஒன்றை மட்டுமே தகுதி என நினைத்து, பெரும் சாதனை போல்… பதிவுத் திருமணம் செய்து., படிப்பை துறந்து.. பசியும் பட்டினியுமாய், ஒற்றை அறையில் குடித்தனம் செய்து… வாழ்க்கையின் எதார்த்தம் முகத்தில் அறைய…..இரண்டே மாதத்தில் காதல் கசந்து வழிந்தது…

விவாகரத்து வேண்டி நின்ற பெண்ணின் தலையாய கண்டுபிடிப்பு .. கணவன் சம்பாதிப்பது போதவில்லை… என்பது.. முனைவர் பட்டம் பெற்றவர்களே, முட்டி போட்டு BPO -வில் முழி பிதுங்கும் காலத்தில் .. இளங்கலை படித்தவன் சுந்தர் பிச்சை-யாய் சம்பாதிப்பானா என்ன?

அந்த பெண்ணுக்கு தக்க அறிவுரை கூறி, ஒரு வேலையும் தேடி தந்தாள்.. கூடவே, “உங்களுக்காக, அவர் [??], அவங்க வீட்டையெல்லாம் விட்டு வந்து, சம்பளம் கம்மியா இருந்தாலும் பொறுப்பா ஒரு வேலை பார்த்து, குடும்பம் நடத்தறாரா இல்லையா?, காதல் பண்றது பெரிசு இல்ல .. கல்யாணம் பண்ணி தலை நிமிந்து வாழ்ந்து காமிக்கணும்… “, தொடர்ந்து.. “காதல் தோத்துப்போகலாம், கல்யாணம் தோத்து போகக்கூடாது “, என்ற எப்போதோ கேட்ட ஒரு படத்தில் வரும் வசனத்தையும் சேர்த்து கூறினாள் .. என்ன புரிந்ததோ அப்பெண்ணுக்கு ?, [ஜீன்ஸ் போட்ட சகுனி – ங்கிறா மாதிரி, குர்தி போட்ட கூனி -ன்னு நம்மள யோசிச்சிருப்பாளோ?-என்ற சந்தேகம் அடிக்கடி வரும்]

அன்று முதல்… “கண்டதும் காதல்”, என்ற பதம் அவளுக்கு வேம்பானது… அதனால் தான், பாஸ்கருக்கு அவ்விதம் பதிலுரைத்தாள். அவனை மனதிற்கு பிடித்தாலும், அறிவு, “பொறு பொறு”, என்றது.. யோசித்து முடிவெடுக்க, அவகாசம் தேவைப்பட, அவனே அதை கொடுக்கவும் .. மௌனமாய் அழுத மனதை கட்டி… இதோ இத்தனை நாளும் அவனை சுற்றியே அவள் நினைவு..

முடிவெடுத்திருந்தாள் .. அவனுக்காய் எதையும் செய்ய.. இனி அவனை பாராமல் முடியாது என்னும் நிலைக்கு வந்திருந்தாள் .. பதினைந்து நாள் முடிந்து , அவனும் தெளிந்து வர .. காத்திருக்கிறாள்.

பால் மழைக்குக் காத்திருக்கும் பூமி இல்லையா ஒரு
பண்டிகைக்குக் காத்திருக்கும் சாமி இல்லையா…..
வார்த்தை வரக் காத்திருக்கும் கவிஞன் இல்லையா
நான் காத்திருந்தால் காதல் இன்னும் நீளும் இல்லையா

கண்ணீரில் தீ வளர்த்துக் காத்திருக்கிறேன்
உன் காலடித் தடத்தில் நான் பூத்திருக்கிறேன்

++++++++++++++++++++++++++++++++++++

பாஸ்கர் ஆதித்யா, அவனது வோல்ஸ்வேகனில், ஜனவரி மாத இரவில், சன்னமான மழையில், ரஹ்மானின் மெல்லிசையை ஒலிக்கவிட்டு ரசித்துக் கொண்டு, திருப்பதி சென்று கொண்டிருந்தான். அவனை அவனே சீராய்வு செய்து கொண்டிருந்தான்..

லதிகா இவனை தெரியாதென எள்ளியபோது, அவளிடம் சண்டையிட்டபோது வந்த கோபம் … உணர்த்தியது.. இத்தனை உரிமையாய் யாரிடமும் கோபம் கொண்டதில்லை என்பதை… எப்போதும்.. யாரையும்… தொலைவில் நிறுத்துபவன், உணர்ச்சிகளை கட்டுக்குள் வைத்து பழகியவன் .. பாஸ்கர் ஆதித்யா..

ஆனால், லதிகா ?? ஒரே ஒரு முறை பார்த்தவள்…. தன்னை புரிந்து கொள்ளவேண்டும், தன்னை பிரதிபலிக்க வேண்டும் என எதிர்பார்த்தான். அவ்வாறு இல்லை என்பதைவிட, அதை அவள் உணர்ந்தும் உணராமல் இருப்பது , இவன் கோபத்தை தூண்டியது.. தன்னவள் என்ற எண்ணத்தில் விளைந்த தடங்கலில்லா திட்டுக்கள்… இன்னமும் அவள் நம்பர் தெரியாது.. முகவரி அட்டையை பார்க்கவில்லை..பார்த்தால் , பேசத் தோன்றும் என்பதால், விட்டிருந்தான்..

இதோ, அக்கா தியாவின் திருமண வேலைகள், ஓய்வெடுக்கவொட்டாமல் அவனை பம்பரமாய் சுற்ற வைத்தாலும், மனதின் ஓரம் அவள்… நங்கூரம் பாய்ச்சி நின்றாள்… தனியாய் சில நிமிடங்கள் கிடைத்தாலும், கற்பனையிலும் அவளுடன்தான் பேசினான். சில பிடித்தங்கள், தெரிந்து வருவதில்லை, வந்தபின் போவதில்லை… இது இறைவன் வகுத்த விதி.. 

ஆயிற்று.. இன்றோடு பதினோரு நாட்கள், …நாளை மாப்பிள்ளை அழைப்பு, மறுதினம் திருமணம்.. லதிகா -வை அழைக்க வேண்டும் என்று கூக்குரலிட்ட மனதினை, அடக்கி.. தியாவின் சகோதரனாய் அவன் கடமையை செவ்வனே செய்துகொண்டுள்ளான்…

வீட்டினர் அனைவரும் இரண்டு தினத்திற்கு முன்பே திருப்பதி சென்றிருக்க …. இவன் மீதமுள்ள ஏற்பாடுகளை செய்து, திரும்பி மணமக்கள் வரும்போது அவசியமானவைகளையும் முடித்து திருமணத்திற்கு செல்கிறான்…

=====================================

இளம்பரிதி, அதிதிசந்த்யா திருமணம் எளிமையாய் திருப்பதியில் செய்ய முடிவானது. பரிதியின் அம்மா வழி பாட்டி, “எங்க வீட்டு பழக்கம் திருப்பதி-ல பண்றதுதான், ஆனா உங்க வசதிக்கு ….. “, என இழுக்க… அங்கேயே செய்வதாய் தீர்மானித்தான் SNP. பெண்ணுக்கு ஒரு சொல் வரக்கூடாது, அவள் துவங்கும் வாழ்க்கையில் ஒரு குறையும் வந்துவிடக்கூடாது என்பது மட்டுமில்லாமல், பரிதியின் மேல் அவன் உறவுகள் வைத்திருந்த பாசத்தின் காரணமாயும், இத்தீர்மானம்..

இளம்பரிதியின் மொத்த சொந்தமும், இவனுக்கு திருமணம் என்று தகவலறிந்த மறுதினம், அவனது வீட்டில் இறங்கி இருந்தது. பெண் யார், எப்படி? என்ற அவர்களது கேள்விகளுக்கு, தியாவை நேரிலேயே கூட்டி சென்று காண்பித்தான், பரிதி . இவளது பாங்கான முகத்தை கண்டவர்கள், “பொண்ணு மகாலச்சுமி மாரில்ல இருக்கு.. அதேன் இந்தப்பய யாரையும் ஏறெடுத்தும் பாக்கமாட்டேன்னு ஒத்தக் கால்ல நின்னேன்”. பெண்ணுக்கு நற்சான்று கொடுத்து, பேரனுக்கு ஒரு சிம்மாசனத்தையும் போட்டு வைத்தார், அப்பாட்டி … தியாவின் மனதில்…

காதலிப்பதை விட, காதலிக்கப்படுகிறோம் என்ற உணர்வு சுகமானதல்லவா?, அதை தியா ஒவ்வொரு நொடியும் அனுபவித்து மகிழ செய்தான் இளம்பரிதி. அதிலும், அவன் அம்மாவின் மாங்கல்யத்தை SNP -இடம் கொடுத்து, “இது எங்கம்மாவோடது, அவங்க ஆசீர்வாதமா இதை சந்த்யா-க்கு குடுக்க நினைக்கிறேன்”, என்று சொல்ல ….. SNP படு flat … எவன் ஒருவன் அம்மாவை மதிக்கிறானோ, அவன் பெண்டாட்டியை தாங்குவான் என்பதை செயலால் அறிந்தவனாயிற்றே ? 

அடுத்த அனுராதா நக்ஷத்திரத்தில், வெள்ளிக்கிழமையும் சேர்ந்து வரும் சுபயோக சுபதினத்தில், முஹூர்த்தம் ஸ்ரீனிவாச சாஸ்திரிகளால் நிச்சயிக்கப்பட… வீட்டில் மூவரும் நிற்க நேரமின்றி பறந்தனர்.. ஆரவாரமின்றி, அவளுண்டு அவள் வேலையுண்டு என்று இருந்து , கிடைத்த நேரத்தில் பரிதியுடன் கடலை போட்டு .. அமைதியாய் இருந்தது அதிதிசந்த்யா மட்டும்தான்… பட்டு மற்றும் நகைகள் எடுக்கவென, இரண்டு நாட்கள் அலைந்ததை தவிர, அவள் செய்வதற்கு ஏதுமில்லை.. பரிதிக்கும் இவளின் நிலையேதான்.. தியாவின் நகை தேர்வுக்கு , பரிதியை அழைக்க.. “அத்தை ப்ளீஸ், இது உங்க ஆசைக்கு எடுக்கறீங்க, என்னை கேட்டா.. வைரத்துக்கும், தங்கத்துக்கும்,சுரங்கம் வெட்டி,டன் கணக்குல மண்ணை பிரட்றாங்க.., ஆப்ரிக்கா-ல குழந்தைங்களை , எந்த சேப்டியும் இல்லாம… சின்ன ஓட்டைக்குள்ள போவாங்க-கிற ஒரே காரணத்துக்காக, அவங்கள கொத்தடிமையா வேலை வாங்கறாங்க… காரணம்.. இந்த காஸ்ட்லி மெட்டல் /ஸ்டோன் க்கு இருக்கிற டிமாண்ட்… 

டிமாண்ட்-ம் அதிகம், விலையும் அதிகம், ரிஸ்க்கும் அதிகம். லாபம் முதலாளிக்கு, ரிஸ்க் மட்டும் அப்பாவிக்கு ..” -ன்னு நான் லெக்ச்சர் கொடுப்பேன்.. நல்லா இருக்காது பாருங்க… உங்க பாசத்தை நீங்க இதுல காமிக்கறீங்க.. எனக்கு உடன்பாடு இல்லேன்னாலும், நான் தலையிடலை, அதே மாதிரி நான் வரவும் மாட்டேன்..”, என்று உரைக்க… 

“இதுக்கு முடியாது-ன்னு ஒரு வார்த்தை-ல சொல்றதுக்கு என்ன?”, தியா வினவ…

“ஏய்..என் கொள்கையை நான் எப்போ அவங்களுக்கு புரிய வைக்க? சான்ஸ் கிடைச்சா மிஸ் பண்ண கூடாது பேபி…” என்ற இளம்பரிதியின் பதிலுக்கு, அனலாய் பார்வை தியாவிடமிருந்து..[இது சும்மா.. ல்லுல்லாய் கோபம்… ] 

அவளது புடவைகளை , இவன் தேர்வு செய்யும்போது , தியாவிடம் “இவ்வளவு கிராண்ட்-டா வெளில கட்ட மாட்ட…நாம வீட்ல இருக்கும்போது .. இது தேவைப்படாது-ங்கிறத விட ரொம்ப கஷ்டம் ” – என்று பட்டுப்புடவையை மெயின்டைன் செய்வதை நினைத்து பரிதி கூற… 

அதன் அர்த்தம் புரிந்தவனாய் SNP சரண்யு பார்த்து சின்னதாய் சிரித்து புருவம் உயர்த்த செங்கோழுந்தாய் சிவந்தது சரண் . 

“பக்கி .. என்ன பேசறோம்-னு யோசிச்சு பேச மாட்ட? இனி எதுக்காவது வாய தொறந்த …”, தியா …பரிதியின் அருகே வந்து கடித்து துப்ப , அப்போது தான் …. தான் பேசியதை ரீவைண்ட் செய்து யோசித்தான்.. ஸ்ஸ்ஸ்ஸ் … கையை கொண்டு நெற்றியில் தட்டி, முகம் மறைத்து அசடு வழிய… சுற்றியிருந்த அனைவரும் சிரிக்க … ஆஹா..ஆனந்த அழகு.. [/QUOTE]

இதோ வந்தே விட்டது திருமணநாள்… 

திருமணத்தில் பங்கு பெற வருவோரை கவனிக்க பாஸ்கர் வரவேற்பில் நின்றிருந்தான்.. யார் வருகிறார்கள் என்பதை மேடையில் இருந்தே காணுமாறு CCTV அமைத்து, தொலைக்காட்சியில் ஒளிபரப்ப ஏற்பாடாகி இருந்தது.. தவிர, பாஸ்கரின் ஐடியாவின் படி, இவனுக்கும், தியா & பரிதிக்குமாய் wireless ப்ளூடூத் -தை கொடுத்து, ஒரு அலைபேசியை குரூப் காலில் போட்டு விட்டிருந்தான். மேடையில் தேவை என்றாலும் இவனுக்கு தெரியும், வருவோர் போவோரை யார், எப்படி, என்பதை அறிந்து கொள்ளவுமாய் இந்த ஏற்பாடு.. 

ஸ்ரீனிவாச சாஸ்திரிகள், ஸ்ரீனிவாச திருத்தலத்தில், மேடையில் அமர்ந்து ஹோமம் வளர்த்து … திருமண மந்த்ரங்களை அதன் அர்த்தத்தோடு ஒலிபெருக்கியில் கூற.. இளம்பரிதி அதிதிசந்த்யாவின் கழுத்தில் மாங்கல்யம் பூட்டி மனைவியாய் வரிக்க ..பெரியவர்கள் மனம் நிறைந்து .. ஆசி கூறினர் . 

சரண்யுசாயாவிற்கு , தியா பிறந்தவுடன் , அவளை முதன் முறை பார்த்தபோது இளம் ரோஜாகுவியலாய், கண்ட நினைவு வர, மனம் உவகையில் மூழ்க, கண்களில் நீருடன் வாழ்த்தினாள்…

SNP-க்கும் மகளின் நினைவலைகளே … தியாவை முதலில் கைகளில் ஏந்திய நேரம், உலகை வென்றதாய் மகிந்திருந்த நேரம் அது .. பின் அவள் தவழ்ந்தது, நடந்தது, பள்ளி சென்றது… பெண்ணாய் மலர்ந்த தருணம், படிக்கவென வெளியூர் சென்று, குழந்தையாய் இருந்தவள் , பொறுப்பான மருத்துவராய் திரும்பியது அனைத்தும் நொடிகளில் வந்து செல்ல…. திருமணமாகி .. திருமதியாய் நின்ற பெண்ணை.. வலியும் , சந்தோஷமுமாய் பார்த்துக் கொண்டிருந்தான்.. இது பெண்ணை பெற்றவர்களுக்கு மட்டுமேயான சுகமான வலி…

கதிரொளி தீபம் கலசமு டனேந்தி,
சதிரிள மங்கையர் தாம்வந்தெ திர்கொள்ள,
மதுரையார் மன்ன னடிநிலை தொட்டு,எங்கும்
அதிரப் புகுதக் கனாக்கண்டேன் தோழீநான். 

பருவத்தாலும் வடிவத்தாலும் அழகு மிகுந்த இளம்பெண்கள், சூரிய ஒளி போன்ற மங்கள விளக்கையும் பொற்கலசங்களையும் தங்கள் கைகளில் தாங்கியவர்களாக எதிர் கொண்டு அழைக்க, மதுரை மன்னன் கண்ணன் பாதுகைகளை அணிந்தவராக பூமி அதிர கம்பீரமாக நடந்து வந்து, உள்ளே புகுவதைக் கனவினில் கண்டேன் தோழி!

மத்தளம் கொட்டவ ரிசங்கம் நின்றூத,
முத்துடைத் தாம நிரைதாழ்ந்த பந்தற்கீழ்
மைத்துனன் நம்பி மதுசூதன் வந்து,என்னைக்
கைத்தலம் பற்றக் கனாக்கண்டேன் தோழீநான். 

மத்தள மேளங்கள் கொட்ட, வரியுடைய சங்குகளை ஊத, மைத்துனன் முறையுள்ள நம்பியான அந்த மதுசூதனன், முத்து மாலைகள் கட்டித் தொங்க விடப்பட்ட அழகிய பந்தலின் கீழே வந்து நின்று, என் கைத் தலத்தைப் பற்றி அருள்வதாகக் கனவு கண்டேன் தோழி!

வாய்நல் லார்நல்ல மறையோதி மந்திரத்தால்,
பாசிலை நாணல் படுத்துப் பரிதிவைத்து,
காய்சின மாகளி றன்னானென் கைப்பற்றி,
தீவலம் செய்யக்க னாக்கண்டேன் தோழீநான். 

வேத உச்சரிப்பில் வல்லவர்களான வேதியர்கள் சிறந்த வேதத் தொடர்களை ஓத, அந்தந்தச் சடங்குகளுக்கு உரிய மந்திரங்களாலே, பசுமையான தர்ப்பைகளையும், ஸமித்துகளையும் பரத்தி வைத்து வேள்வி செய்து, சினம் கொண்ட மத யானை போன்ற கண்ணன் என் கையைப் பிடித்துக் கொண்டு அக்னியை வலம் வருவதை, கனவினில் கண்டேன் தோழி!

இம்மைக்கு மேழேழ் பிறவிக்கும் பற்றாவான்,
நம்மையு டையவன் நாராய ணன்நம்பி,
செம்மை யுடைய திருக்கையால் தாள்பற்றி,
அம்மி மிதிக்கக் கனாக்கண்டேன் தோழீநான். 

இந்தப் பிறவிக்கும், மேல் வரும் எல்லாப் பிறவிகளுக்கும் அடைக்கலமான பற்றுக்கோடாக, நமக்கு நாயகத் தலைவனாக உள்ள நம்பியான நாராயணன், தன் செவ்விய திருக்கையால் எனது கால்களைப் பிடித்து அம்மியின் மேல் எடுத்து வைப்பதைக் கனவினில் கண்டேன் தோழி!

வரிசிலை வாள்முகத் தென்னைமார் தாம்வந்திட்டு
எரிமுகம் பாரித்தென் னைமுன்னே நிறுத்தி,
அரிமுக னச்சுதன் கைம்மேலென் கைவைத்து,
பொரிமுகந் தட்டக் கனாக்கண்டேன் தோழீநான். 

வில்லினை ஒத்த புருவமும், ஒளி பொருந்திய முகமும் கொண்ட என் தமையன்மார்கள் வந்து, ஹோம குண்டத்தில் நெருப்பை இட்டு வளர்த்து, என்னை அதன் முன்னே நிறுத்தி, அச்சுதனான அந்தக் கண்ணன் கைமேல் என் கையை வைத்து, பொரிகளை அள்ளி அக்னியில் சேர்ப்பதைக் கனவினில் கண்டேன் தோழி!

குங்கும மப்பிக் குளிர்சாந்தம் மட்டித்து,
மங்கல வீதி வலம்செய்து மணநீர்,
அங்கவ னோடு முடஞ்சென்றங் கானைமேல்,
மஞ்சன மாட்டக்க னாக்கண்டேன் தோழீநான். 

ஹோமப் புகையின் முன்னே நெடுநேரம் நின்றிருந்ததால் ஏற்பட்ட வெப்பத்தைத் தணித்து குளிரூட்டும் வகையில் குளிர்ந்த குங்குமக் குழம்பை உடலில் பூசி, சந்தனத்தை நிறையத் தடவி விட்டனர். பின் அங்கிருந்த ஒரு யானையின் மீது நான் கண்ணனுடன் கூடி அமர, அலங்காரம் மிகுந்த தெருக்களிலே திருமண ஊர்வலம் வந்து, நிறைவாக வாசனை நீரில் மஞ்சன நீராட்டுவதைக் கனவினில் கண்டேன் தோழி!

ஆயனுக் காகத்தான் கண்ட கனாவினை,
வேயர் புகழ்வில்லி புத்தூர்க்கோன் கோதைசொல்,
தூய தமிழ்மாலை ஈரைந்தும் வல்லவர்,
வாயுநன் மக்களைப் பெற்று மகிழ்வரே. 

வேயர் குலத்தில் புகழ் மிக்க திருவில்லிபுத்தூர் தலைவரான பெரியாழ்வாரின் மகள் கோதை, தான் கண்ணனைத் திருமணம் செய்து கொண்டதாகக் கண்ட கனவை, தூய தமிழ் மாலையாக அருளினாள். இந்தப் பத்துப் பாசுரங்களையும் பயில வல்லவர்கள், நல்ல குணங்களுடைய குழந்தைகளைப் பெறுவர். கன்னியர் கண்ணனைப் போன்ற கணவனைப் பெற்று மகிழ்வர்.

 

Advertisement