Advertisement

RD – 23

        அதிர்ந்து போய் கார்த்திகாவிடம் இருந்து தள்ளி நின்றவன் இதயம் வேகமாக துடித்தது. மீண்டும் அவள் அருகில் போய் நெற்றியை தொட்டு பார்த்தான்.

         உடல் அனல் போல் கொதித்து கொண்டு இருந்தது. உடல் வலியில் முனங்கி கொண்டு இருந்தாள் அவன் தேவதை. அவள் அருகில் அமர்ந்து தலை கோதி “கார்த்தி” என்று அழைத்தான்.

          ‘ஹ்ம்ம்’ என்று சொன்னவள், அதன் பின் எந்த ஒரு அசைவும் இல்லை. கைக்கு கிடைத்த ஒரு ஆடையை எடுத்து அவளுக்கு அணிவித்து விட்டு போனில் மருத்துவரிடம் விவரம் சொன்னவன் கீழே தன் அன்னையை தேடி சென்றான்.

           அன்று ஞாயிற்று கிழமை என்பதால், இன்னும் ப்ரண்வ் எழுந்து கொள்ளவில்லை. பூஜை அறையில் இருந்து வெளிவந்தவர் மகனின் தெளிவு இல்லாது முகம் கண்டு அவனிடம் சென்றார்.

            “அம்மா கார்த்திக்கு ரொம்ப ஜுரமா இருக்கு…. வந்து பாருங்களேன்” மகனின் பதட்டம் கண்டவர் உடனே மேலே சென்றார்.

             அவளை தொட்டு பார்த்தவர் முகமும் கவலையை பூசிக்கொண்டது. “என்னடா?! கண்ணா இப்படி கொதிக்கிறது. நேற்று இரவு ஒன்றும் சோர்ந்து போன மாதிரி தெரியவில்லை?. நல்லா தான் இருந்தாள்.” அவர் சொல்லிக்கொண்டு இருக்கும் பொழுதே அறை தட்டும் சத்தம் கேட்டு இருவரும் திரும்பி பார்த்தனர்.

             ஒரு முப்பது வயது மதிக்கதக்க பெண்மணி ஒருவர் நின்றார். யோசனையுடன் அவர் அருகில் சென்றான் விஜய்.

             “ஹலோ சார், ஐ ’ம் மிருளா. டாக்டர். தினகர் ஜூனியர்.” கார்த்திகாவின் முனங்கல் சத்தம் கேட்டு அவள் பக்கம் சென்றாள்.

           கார்த்திகாவை முழுவதுமாக பரிசோதித்து முடித்து, ‘சாதாரண வைரல் காய்ச்சல் ஒன்றும் பயப்பட தேவையில்லை’ என்றவள் சில மருந்துகளை எழுதி கொடுத்தாள்.

            “விஜய், நீ கார்த்திகா கூட இரு. நான் மருந்தை  நம்ம டிரைவர் கிட்ட சொல்லி வாங்கிட்டு வர சொல்றேன். கையோடு கஞ்சும் கொண்டு வரேன்” என்று கீழே சென்று விட்டார்.

           அயர்ந்து தூங்கி கொண்டு இருந்தவளை கண் இமைக்காமல் பார்த்தபடி நின்றான். ‘சாரி பம்ளிமோஸ் என்னால் தான் நீ இப்படி உடம்பு சரியில்லாமல் இருக்கிறாய்.’ வேதனையில் துடித்து கொண்டு இருந்தவன் பக்கத்தில் ‘க்ஹும்’ என்ற இருமல் சத்தம் கேட்டது.

            இன்னும் அந்த டாக்டர் அங்கே நிற்கவும் “ஐய்யோ சாரி டாக்டர். வேறு ஏதோ சிந்தனையில் உங்களை மறந்துவிட்டேன். ரொம்ப நன்றி உடனே வந்து என் மனைவியை பார்த்ததுக்கு” என்று கை குலுக்கினான்.

           பதிலுக்கு கை நீட்டியவள் “என்னை நிஜமாவே உனக்கு  அடையாளம் தெரியவில்லையா விஜய்?” என்றாள் ஆச்சிரியத்துடன்.

        அவள் அப்படி சொன்னதும் அவளது முகத்தை கூர்ந்து பார்த்தான். ‘தெரியவில்லை’ என்பது போல் தலையை ஆட்டினான்.  அவன் இப்பொழுது இருக்கும் நிலையில் எதை பற்றியும் யோசிக்கும் திறனில் இல்லை. இந்த டாக்டர் சீக்கிரம் போனால் நன்றாக இருக்கும் என்றே நினைத்து இருந்தான்.

        “டேய்! நான் உன் ஸ்கூல் கிளாஸ்மேட் மிருளா” என்று அவள் சொன்னதும் முகத்தில் வெளிச்சம் பரவ “ஹேய்! மிருளா. எப்படி இருக்க” என்றவன் அவளை பற்றிய விவரம் கேட்டான்.

        அதை எல்லாம் புறம் தள்ளியவள் “இங்கே வாடா” என்று பால்கனி பக்கம் இழுத்து சென்றாள்.

        அவன் யோசனையாக பார்க்கவும், அவள் பேச தொடங்கினாள் “விஜய், நேற்று உன் மனைவிகிட்ட கொஞ்சம் ஹார்சா நடந்துகிட்டியா?” என்றாள்.

       தன் தோழி அப்படி கேட்கவும் அவனின் முகம் அவமானத்தில் கன்றி சிவந்து போய்விட்டது. அதுவே அவளுக்கு தேவையான உண்மையை உரைக்க ஒரு வித  எள்ளல் சிரிப்புடன் “நீ எப்பொழுது இருந்துடா இப்படி சராசரி ஆம்பிளை மாதிரி மாறின?”

      “உன் மனைவிக்கு இம்ன்னு பவர் ரொம்ப குறைவா இருக்கு. சாதாரண தாம்பத்தியத்திலே அவள் ரொம்ப களைப்பா ஆகிருவா. நேற்று நீ செய்த காரியம் தான் அவளை இவ்வளவு தூரம் கொண்டு வந்து நிறுத்தத்திற்கு” ஆத்திரத்தில் பொறிந்து தள்ளி விட்டாள் அவனின் தோழி.

       ஏற்கனவே, குற்ற உணர்ச்சியில் இருந்தவன் இப்பொழுது அது இன்னும் அதிகமானது. கார்த்திகாவின் உடல் நிலை பற்றி அவள் அன்னை ஒரு முறை சொன்னதை நினைவில் வைத்துதான் அவளிடம் அவன் நெருங்கும் பொழுது ரொம்பவே மென்மையாக நடந்து கொண்டான்.

         ஆனால், மனதில் எழுந்த குழப்பம், வேலையில் இருந்த ஸ்ட்ரெஸ் எல்லாம் சேர்ந்து நேற்று அவனை ஒருவழி படுத்தி எடுத்துவிட்டது. அதை தன் மனைவியிடம் மொத்தமாக காட்டிவிட்டான்.

         இதை சொன்னால் இன்னும் அவன் தோழி வறுத்து எடுப்பாள் என்று அறிந்தவன் ‘இனி இப்படி நடக்காது’ என்பதோடு முடிதுகொண்டான்.

          அவளும் பின் அதை பற்றி அவனிடம் கேட்காது கிளம்பிவிட்டாள்.

         இரண்டு நாட்கள் கார்த்திகாவை விட்டு எங்கும் அகலாது அவள் அருகிலே இருந்து அவளுக்கு தேவையானவற்றை எல்லாம் கவனித்து கொண்டான்.

         கார்த்திகாவின் வீட்டில் விசயம் அறிந்து அவளை பார்க்க வந்தனர். கட்டிலில் கால் நீட்டி அமர்ந்து இருந்தவள் தன் அன்னையிடம் “அம்மா எனக்கு ஒன்றுமில்லை. சாதாரண காய்ச்சல் தான் அதுக்கு ஏன் இப்படி அழுது சீன் போடுற?” என்று கத்தினாள்.

          அவளது பேச்சை கேட்டவாறே உள்ளே நுழைந்தான் விஜய். அவனை கண்டதும் மரியாதை பொருட்டு எழுந்து நின்றார் கார்த்திகாவின் அம்மா.

          “உட்காருங்க அத்தை. எப்போ வந்தீங்க? வீட்டில எல்லாரும் நலமா?” பரஸ்பரம் விசாரித்தவன் பார்வை முழுவதும் தன் மனையாளிடமே  இருந்தது.

       அவன் உள்ளே வந்ததும் முகத்தை திருப்பி கொண்டாள் கார்த்திகா. இரண்டு நாட்கள் அவள் அருகில் இருந்து பார்துகொண்டவன் ஒரு முறை கூட அவளிடம் பேச முயற்சி செய்யவில்லை, அவளே பேசினாலும் சுருக்கமாக பதில் வரும். அத்தோடு முடித்துகொள்வான்.

      கணவனின் இந்த பாராமுகம் வேதனையை தந்தாலும் அவளும் வாய் திறந்து ஒரு வார்த்தை பேசவில்லை. ‘சரியான அழுத்தகாரி’ மனைவி தன்னிடம் ஏதாவது கேட்க வேண்டும் என்று அவனது மனமும் ஏங்கியது.

        “அம்மா நான் நம்ம வீட்டுக்கு வந்து கொஞ்ச நாள் இருக்கிறேன். அத்தைகிட்ட அனுமதியும் வாங்கியாச்சு.” அறிவிப்பு போல் சொன்னவள் விஜயையே பார்த்து இருந்தாள்.

           அவனுக்கு அப்படி ஒன்றும் அவள் போவதால் பெரிதாக சந்தோசமும் இல்லை வருத்தமும் இல்லை என்பது போல் முகத்தை எதார்த்தமாக வைத்து இருந்தான்.

           “உங்களிடம் அம்மா ஏதோ கேட்க வேண்டும்னு சொன்னாங்க அத்தை. கீழே தோட்டத்தில் இருக்காங்க, பத்து நிமிஷத்தில் உங்க பொண்ணை கூட்டிட்டு வரேன் நானே வீட்ல கொண்டு போய் விடுகிறேன்” என்றவனிடம் சரி என்று தலையாட்டியவர் மகளை ஒரு பார்வை பார்த்துவிட்டு சென்றார்.

            மனைவியை ஒரு பார்வை பார்த்தவன் துண்டை எடுத்துகொண்டு குளியல் அறைக்கு சென்று விட்டான். ‘ராட்சஷன்,!’ ஏன் அம்மா வீட்டுக்கு போற? எதுக்கு என்னிடம் சொல்லவில்லை?? இது போன்ற வார்த்தையை கணவனிடம் இருந்து எதிர்பார்த்தவளுக்கு ஏமாற்றமே கிடைத்தது.

           கணவனின் நினைப்பில் உழன்று கொண்டு இருந்தவள் அவசரமாக கபோர்டின் அருகில் சென்றாள். குளியல் அறையில் தண்ணீர் விழும் சத்தம் கேட்க விஜய் இப்போதைக்கு வர மாட்டான் என்பதை உறுதி செய்தவள் தன் கபோர்டின் துணிகளுக்கு அடியில் அன்று வைத்த கோப்பை எடுத்தாள்.

             அதில் இருந்த பேப்பர் எல்லாவற்றையும் தனது கைபேசியில் போட்டோ எடுத்தவள், பழையபடி அதை தன் துணிகளுக்கு அடியில் மறைத்து வைத்துவிட்டாள்.

        இதை பற்றி முழு விவரம் தெரிந்து கொள்ளவே அவள் இப்பொழுது தன் அன்னை வீட்டிற்கு செல்கிறாள். இந்த ரிபோர்ட்டை  சாதாரணமான ஒன்றாக அவளால் எடுத்துகொள்ள முடியவில்லை.

         இங்கு இருந்தாள் அவளால் முழு கவனம் செலுத்த முடியாது. அது மட்டும் இல்லாது ராகவ் இப்பொழுது இங்கு இருக்கிறான், அவன் இங்கு  இருக்கும் சமயம் அவனை பற்றி விசாரிக்க முடியாது எனபதும் ஒரு காரணம்.

           ராகவ் பற்றியே யோசித்து கொண்டு இருந்தவளுக்கு சிறிது நேரம் எதுவும் தோன்றவில்லை. பின், சோப்பின் மனம் குப்பென அவள் நாசியை தீண்ட திரும்பி பார்த்தாள்.

          அங்கு வெற்று மார்புடன் இடையில் பூத்துவாலையுடன் தலையில் ஈரம் சொட்ட அவளையே பார்த்தபடி நின்று இருந்தான் விஜய்.

          வயிற்றில் ஒருவித இன்ப அவஸ்தை தோன்ற “நான் கீழே செல்கிறேன்” கணவன் முகம் பார்க்காமல் சொல்லிவிட்டு நகர போனவளின் கையை இறுக பிடித்தான்.

           அவன் கையில் உள்ள குளிர்ச்சி அவள் உடலை ஏதோ செய்ய கூச்சத்தில் நெளிந்தாள். மென்மையாக தன் மனைவியை அணைத்து நின்றான்.

          கணவனின் மார்பில் கண்கள் மூடி கன்னம் சாய்த்து இடையில் கைகள் கோர்த்து அவளும் நின்றுவிட்டாள். இருவரின் மனதிலும் அப்போதைக்கு வேறு எந்த சிந்தனைக்கும் இடம் இல்லை.

           அப்படியே அவளை மஞ்சத்தில் சரித்து அவள் மீது படர்ந்து விட்டான் விஜய். அவள் கையில் இருந்த போனை எடுத்து அருகில் மேஜையில் வைத்தவன் தன் கையோடு அவளது விரல்களை கோர்த்து கொண்டான்.

           கழுத்தின் அடியில் அவனது வேகாமன மூச்சுகாற்றும், சூடான முத்தமும் அவளை சுத்தமாக நினைவிலக்க செய்தது.

           இன்னும் கீழே அவனது தேடல் போக “வி…ஜய் ப்ளீ….ஸ், ஐ கான்ட்” மயக்கத்தில் முணுமுணுக்க, அவள் உதட்டை  தன் விரல் கொண்டு தீண்டினான்.

            கண்கள் திறந்து ‘என்ன?’ என்பது போல் பார்த்தாள். “டிசிபி சார்” என்ற அவளது அழைப்பில் இன்னும் மோகம் தூண்ட அவளது இதழை முழுவதுமாக சிறை செய்தான்.

            நீண்ட நொடி பயணித்த இதழ் முத்தை ஒருவாறு விஜய் முடித்து வைத்தான். களைந்து இருந்த மனைவியின் முடியை சரி செய்தவன் “என்னை மன்னித்து விடு பம்ளிமோஸ்…. என்னால் தான் உனக்கு இப்படி ஆனது” என்ற கணவனின் கவலை அவளை ரொம்ப பாதித்தது.

          விஜயின் மார்பில் சரிந்து தலைவைத்தவள் அவன் முகம் பார்த்து “என் விஜய் யாரிடமும் சாரி சொல்ல கூடாது…. என்னிடமும்” என்றவள் அவன் நன்றாக இறுக அணைத்து கொண்டாள்.

            கண்கள் மூடி “அன்று நீங்க ஏதோ ஒரு ஸ்ட்ரெஸ்ல இருந்தது எனக்கு தெரியும் விஜய். என் மூலமா உங்க கஷ்டம் குறைந்தால் எனக்கு சந்தோஷம் தான். சீக்கிரம் அந்த கேஸ்சை முடித்து விடுங்கள், உங்களை என்னால் இப்படி ஒரு வித  மன இறுக்கத்தில் பார்க்க முடியவில்லை விஜய். எப்பொழுதும் உங்க பொறுமையை கைவிடாதிங்க விஜய். உங்களுடைய பெரிய ப்ளஸ் அதுதான்” என்றவள் மனதில் ‘தானும் சீக்கிரம் முடித்துவிடனும்’ என்ற உறுதி எழுந்தது.

              “சரிடி செல்லக்குட்டி” என்றவன் அவளை இன்னும் இறுக அணைத்து முத்தம் ஒன்றை கொடுத்துவிட்டு விலகினான். அவனது முகத்தில் பழைய கம்பீரமும், தெளிவும் இப்பொழுது திரும்பி இருந்தது.

               தனது வீட்டிற்கு வந்தவளுக்கு அந்த ரிபோர்ட் பற்றிய விவரம் எப்படி தெரிந்து கொள்ளலாம் என்ற சிந்தனையில் நுழைந்துவிட்டாள்.

               இங்கு விஜயின் மனமும் அதே கேஸ் பற்றிய சிந்தனையிலே இருந்தான்.

தேவதை வருவாள்……..   

Advertisement