Advertisement

RD – 22

     ஆங்கிலத்தில் ஒரு பழமொழி சொல்வார்கள் ‘Physically present, mentally absent’  அந்த நிலையில் தான் கணவன், மனைவி இருவரும் இருந்தனர்.

     விஜய் வரும் சத்தம் கேட்டதும் கீழே சென்றவள், அவன் குளித்து முடித்து வரவும் , சாப்பிட சாப்பாடை எடுத்து வைத்து கொண்டு இருந்தாள்.

       அவளது கைகள் தன் போக்கில் பரிமாற நினைவோ ராகவ் பற்றியே இருந்தது. விஜய் நிலையும் இதுவே கையும், வாயும் தன் போக்கில் அதன் வேலையை செய்து கொண்டு இருந்தது… ஆனால், மனமோ  ‘அந்த பெரிய குற்றவாளி யாரா இருக்கும்?’ என்று அலசி கொண்டு இருந்தது.

         இருவரது சிந்தனைக்கும் உரிய நாயகன் ஒருவன் தான். ஆனால், அதை அவர்கள் உணரும் தருணம் கூடிய விரைவில் வருமா? என்பது அந்த கடவுளுக்கு தான் வெளிச்சம்.

                   யோசனையில் இருந்தவனுக்கு சாப்பாட்டின் ருசி சிறிதும் தெரியவில்லை. அவனின் மனையாளோ வேறு உலகத்தில் சஞ்சரித்து கொண்டு இருந்தாள்.

           ஜன்னல் வழியாக வந்த தென்றல் காற்றின் ஸ்பரிசம் தீண்டியதன் மூலம் நிகழ்வுக்கு வந்தான். தன் அருகில் நின்ற மனைவியை நிமிர்ந்து பார்த்தான்…. ‘மேடம் ரொம்ப யோசனையில் இருக்கிற மாதிரி இருக்கு?’ என்று நினைத்தவன் மனதில் அவள் கல்லூரியில் நடந்து கொண்டது நினைவு வந்ததும் உதட்டில் குறுநகை ஒன்று வந்து ஒட்டி கொண்டது.

         அப்பொழுதும் அவள் ஒரே நிலையில் இருக்க சாப்பிட்டு முடித்து தட்டிலே கை கழுவினான்.  கையை அவள் சேலை முந்தியில் துடைத்தவன் கையோடு அவளை தன் புறம் இழுத்தான்.

          நொடி பொழுதில் எல்லாம் நடந்துவிட்டது. விஜய் இழுத்த வேகத்தில் அவன் மடியில் விழுந்தவளுக்கு சிறிது நேரம் ஒன்றுமே புரியவில்லை.

          கோபமாக அவனை கண்டு முறைத்தவள் “டிசிபி சார் இது நம்ம பெட்ரூம் இல்லை,!  வீட்டு ஹால்….” அவள் சொல்லிக்கொண்டு இருக்கும் பொழுதே அவன் இதழ் கொண்டு தன் மனையாளின் இதழை மூடிவிட்டான்.

          கணவனின் கைகளோ அவளின் வெற்றிடையில் சுதந்திரமாக வலம் வர…… அவன் செய்கைகளை தடுக்க சென்ற அவள் கையை எடுத்து தன் தோள் மீது போட்டு கொண்டு அவளை இன்னும் எலும்பு நொறுங்கும் அளவிற்கு இறுக்கினான் அந்த காவலன்.

         விஜயின் முரட்டு தனத்தில் ரொம்பவே திணறி போய் விட்டாள். ஒரு நிலைக்கு மேல் அவளுக்கு முடியவில்லை…. சுவாசத்திருக்கு காற்று தேவைபட கால்களை உதைத்து அவனிடம் இருந்து போராடி விடுபட்டவள் கைகள் இரண்டும் நெஞ்சுகூட்டில் வைத்து வேகமாக மூச்சை இழுத்து விட்டாள்.

          இன்னும் ஒரு நொடி தாமதித்தால் கூட அவள் சுயநினைவு இழந்து இருப்பாள்… அந்த அளவிற்கு இருந்தது விஜயின் வேகம்.

          கார்த்திகா எழுந்து கொண்ட சிறிது நேரத்தில் அவள் பின்புறமாக இருந்து எலும்பு நொறுங்கும் வண்ணம் இறுக்கமாக அணைத்து இருந்தான்.

           உதடுகளோ அவளின் கழுத்தின் வளைவில் ஊர்வலம் நடத்தி கொண்டு இருந்தது. கண்கள் சொருகு அவன் செய்கையில் மூழ்கி இருந்தவளுக்கு அவனின் நெருக்கம் போக போக அதிகரித்து கொண்டே சென்றது.

          உடல் வலி எடுக்க ஒருவாறு மோனநிலையில் இருந்து வெளி வந்தவள் விஜயிடம் இருந்து விலகி நின்றாள்.

           அவள் விலகியதும் எரிச்சல் வர “ப்ளீஸ் பம்ளிமோஸ்…. ஐ நீட் யூ ரைட் நொவ்” என்றவன் கார்த்திகா அருகில் நெருங்கி வந்தான்.

          அவனின் வேகத்தில் பயந்தே போய் விட்டாள் பெண்ணவள். அது எப்படி? சாதாரணமாக சாப்பிட்டு கொண்டு இருந்தவன் இப்படி நடந்து கொண்டது கார்த்திகாவிற்கு ஒன்றும் விளங்கவில்லை.

          அவளுக்கு தெரிந்த விஜய் மிகவும் மென்மையானவன். இதுவரை அவர்கள் இருவருக்கும் நடந்த கூடலில் அவன் காட்டியது முழுவதும் மென்மை, நிதானம் மற்றும் காதல், காதல் , காதல்……….. மட்டுமே.

          ஆனால், இப்பொழுது? அந்த மென்மை சிறிதும் அவனிடம் தென்படவில்லை. அவனுக்குள் இப்படி ஒரு முரட்டுதனம் இருப்பதை இந்த சிறிது நேர இதழ் முத்தத்தில்  தெளிவாக புரிந்து கொண்டாள் அவனின் தேவதை.

         அவனை நெருங்க விட்டாது தடுத்து “வெயிட் சார்…. நீங்க ஏன் இப்படி நடந்து கொள்றீங்க? ரொம்ப வித்தியாசம இருக்கு சார்”….

         “ஏய்! சார்னு சொல்லாதடி… ஐ’ம் யூவர் விஜய்” என்றான் ஒருமாதிரி குரலில்.

          தன் முன் நிற்பது தன்னுடைய கணவனா? என்று விழி விரித்து பார்த்தாள் பெண்ணவள். அவனுக்கு அவளுடைய  ‘சார்’ என்ற அழைப்பு ரொம்ப பிடிக்கும்.

          தனிமையில் ஒருமுறை “நீ சார்னு கூப்பிட்டு என்னை மொத்தமா பித்து பிடிக்க வைக்கிறடி…. ” என்று அவன் சொல்லி அவளை அணைக்கவும் ஒருவித கர்வத்தில் அவள் மனம் மிதந்து கொண்டு இருந்தது.

         அப்படி சொன்னவன் இப்போ இவ்வாறு சொல்லவும் தன்னவன் ஏதோ ஒன்றில் டிஸ்டர்ப்பா இருக்கான் என்பதை அவள் புரிந்து கொண்டாள்.

        அவள் சிந்தனையில் இருக்கும் பொழுதே அவளை தன் கைகளில் ஏந்தி கொண்டான் அந்த காவலன்.

         அவளது மறுப்பை பொருட்படுத்தாது அறையின் மஞ்சத்தில் கிடத்தினான். அடுத்த ஒரு நொடி கூட தாமதிக்காது அவள் மீது படர்ந்து விட்டான்.

         விலகி செல்ல முயன்றவளின் பாதத்தை தன் முரட்டு பாதம் கொண்டு இறுக்கியவன் அவள் இதழை வன்மையாக முத்தமிட்டான்.

          கொஞ்சம், கொஞ்சமாக அவன் முரட்டு தனத்தில் மயங்கியவள் இறுதியாக தன்னை அவனிடம் ஒப்படைத்துவிட்டாள்.

            கூடலின் இடையில் சிணுங்கிய அவள் கொலுசின் சத்தத்தை தன் கால்கள் கொண்டு அடக்கியவன்…… முணுமுணுத்த வாயிற்க்கு அதற்கு உரிய தண்டனை கொடுத்தான்.

           விஜயின் இந்த முரட்டுதனம் கூட அவளுக்கு பிடித்தது. இறுதியில், தன் மனையாளின் நெஞ்சின் ஓரம் இளைப்பாறி கண்கள் மூடி நொடியில் நித்திரைக்கு சென்று விட்டான்.

           வியர்த்து போய் தன்னுடன் ஒன்றி போய் படுத்து இருந்தவனின் தலை முடியை கோதி விட்டவளுக்கு அவனின் நிர்மல்லான முகம் ரொம்பவே வசீகரித்தது.

           குனிந்து அவன்  நெற்றியில் முத்தம் கொடுத்தவள் விஜயின் வெற்று முதுகை இறுக்கமாக அணைத்து அவனுடன் இன்னும் ஒன்றிபோனாள்.

          அவனை அணைத்தப்படி படுத்து இருந்தவளுக்கு தூக்கம் பெயருக்கும் இல்லை. ‘எதுவோ இவர் மனதை அறித்துகொண்டு இருக்கிறது…. எப்பொழுதுமே அவரிடம் இருக்கும் நிதானம் இன்று பெயருக்கு கூட இல்லை’ என்று நினைத்தவளுக்கு, அவனின் இந்த பரினாமம் ரொம்பவே பிடித்தமாக ஒன்றாகவே இருந்தது.

           மறுநாள் காலையில் அவள் ஒருபுறம், இவன் ஒருபுறம் என்று போர்வையை இழுத்து மூடி படுத்து இருந்தனர்.

            கதவு தட்டும் ஓசையில் தூக்கத்தில் இருந்து விழித்தனர் இருவரும். உடல் முழுவதும் வலிக்க கார்த்திகாவால் சுத்தமாக அசைய முடியவில்லை.

          இரவில் தெரியாத வலி இப்பொழுது நன்கு உணர முடிந்தது. தனது ஆடையை எடுத்து அணிந்தவன் கதவை திறந்தான். வேளையால் கையில் காபியுடன் நிற்க திரும்பி அறையில் மாட்டி இருந்த கடிகாரத்தை பார்த்தான்.

       அது மணி ஏழு முப்பது என்று காட்ட திகைத்து போய்விட்டான். காபியை வாங்கி கதவை அடைத்துவிட்டு தன் தேவதை நோக்கி வந்தான்.

        அவள் போர்வையை இறுக அணைத்தபடி படுத்து இருப்பதை பார்த்தவனுக்கு பாவமாக போய்விட்டது. நேற்று அவன் காட்டிய காதல் ரொம்பவே அதிகம்.

         அந்த கேஸ் விஷயம் ரொம்ப தொந்தரவாக இருக்க அந்த நேரம் அதில் இருந்து மீள வேறு வழி தெரியாது இப்படி நடந்து கொண்டான்.

          ஆனால், அதன் பின் அவன் மனம் உணர்ந்த நிம்மதியை வார்த்தையால் சொல்லிவிட முடியாது. மனம் முழுவதும் காதல் நிறைந்து இருக்க மஞ்சத்தில் விழுந்து அவளை அணைக்கவும் கார்த்திகாவின் உடல் விறைக்க திகைத்து போய் அவளிடம் இருந்து விலகினான் அந்த ரட்சகன்……

 

தேவதை வருவாள்………    

      

 

Advertisement