Advertisement

விமானம் ஓய்வுக்காக அபுதாபியில் இரண்டு மணி நேரம் தரையிறங்கியது. அனைவரும் வெயிட்டிங் ஹாலில் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தனர். அரவிந்த் தொலைவில் இருந்து உதயனையும் தர்னிகாவையம் பார்த்துக் கொண்டிருந்தான்.
முதன்முதலில் ஒரு பெண்ணைப் பார்த்து மனதில் பதித்து அவளைத் தேடி அலைந்து ஒரு வழியாகக் பார்த்தால் அவளுக்கு திருமணமாகி இருந்தால் எவ்வளவு வலிக்கும்.
அரவிந்த் இயல்பில் நல்லவன் தான். இதுவரை பெரிதாக எதற்கும் ஆசைபட்டதும் இல்லை அடைந்தே தீர வேண்டும் என வெறி கொண்டதும் இல்லை. அவன் விரும்பியதெல்லாம் அமைதியான மனதிற்கு பிடித்த வாழ்வு. அது அமையவே இல்லை. தர்னிகாவை பார்த்த நொடி அவன் வாழ்வில் வசந்தம் மலரும் என நம்பினான். அதற்கும் தடையானது அவள் திருமணம். இப்போது இதையாவது அடைந்தே தீர தீரவேண்டுமென நினைக்கிறான்.
தர்னிகாவை சோகத்தில் பார்க்கப் பிடிக்காத உதயன் அதிரடியில் இறங்கினான்.
ஏய். தரு! எந்திரி. இப்படி முகத்தை வச்சிக்காத பாக்க முடியலை. அப்பறம் ஆறு மாசத்துல லவ் வராது.
விலுக்கென நிமிர்ந்த தர்னிகா அவனை முறைத்தாள். அவன் தரு எனக் கூப்பிட்டது கூட அவளுக்கு உரைக்கவில்லை.
ஆமா. முறைப்பெல்லாம் என் கிட்ட மட்டும் தானே. அவன் ஏதோ சொன்னான். அவனை விட்டுட்டு இப்படி அழுது வடிஞ்சிகிட்டு இருக்க. என்னை மட்டும் என்ன அடி அடிச்ச. உன் வீரம் அவ்வளோ தானா?
நீ ரொம்ப பேசுற உதய்.
அப்படித் தாண்டி பேசுவேன். அவன் பேசுறப்பவே சப்புன்னு ஒன்னு விட்டு என்னை பத்தி எனக்குத் தெரியும் போடா வெண்ணைன்னு சொல்லிட்டு வந்தா அது என் தர்னிகா. இந்த பொண்ணு என்ன ஹனிமூன் சந்தோசமா கொண்டாடிட்டு வந்து அழுதுட்டு இருக்கு.
இதுவரை அவன் கூறுவதை அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்த தர்னிகா அவன் கடைசி வரியில் நிமிர்ந்து அவனைப் பார்த்தாள்.
எதே! ஹனிமூனை சந்தோசமா கொண்டாடினோமா?
ஆமா! ஊரெல்லாம் சுத்தி பாத்தோம். நல்லா சாப்பிட்டோம். தூங்குனோம். அசடு வழிந்தான் உதயன்.
இரு. இன்னொரு தடவை கண்ணுல மாட்டட்டும் அவன். என்ன பண்றேன்னு பாரு. அவனை ஒரு கை பாத்துட்டு உன்னை வச்சிக்கிறேன்.
நான் இங்க தான் இருப்பேன் செல்லம். என்னை பொறுமையா அடிச்சிக்கலாம். முதல்ல வெளியாளுங்களுக்கு முன்னுரிமை குடுத்து அவன் கதையை முடி.
ஏய் என்ன! என்னமோ என்னை அடியாள் ரேஞ்சுக்கு பேசிட்டே போற.
இடையில் வெட்டியது அரவிந்த்தின் குரல்.
ஹாய்!
உதயன் மனதிற்குள் நினைத்தான். வாடா வா! இன்னிக்கு ஆடு நீ தான்.
தர்னிகா அவள் ஆக்சனை தொடங்குவதற்குள் அவனே டக்கென அவன் ஷூவை கழற்றப் போனான்.
இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு ஓரடி பின்னால் நகர்ந்தனர்.
இருங்க! பயப்படாதீங்க. என்னை அடிக்க தான் கழட்டி தரேன். மூன்றாம் தர மனுஷன் மாதிரி கேவலமா பேசிட்டேன். எனக்கே மனசு உறுத்துது.
அய்யோ. அரவிந்த் நிறுத்துங்க. இது விமான நிலையம். எல்லாரும் பாப்பாங்க. உதயன் தான் பதறினான். அவளை வேறு ஏகதிற்கும் உசுப்பேற்றி இருக்கிறான். அவள் பாட்டுக்கு ஷூவை வாங்கி அடித்து விட்டால் ….
இல்ல உதய். நான் அப்படி பேசிருக்கக் கூடாது. ஒரு ஆணும் பெண்ணும் ஆணும் நண்பர்களா இருக்க முடியாதா என்ன. என்னை மாதிரி படிச்சி பையனே இதைப் பத்தி தப்பா பேசினா அப்ப மத்தவங்க எல்லாம் எப்படி புரிஞ்சுக்குவாங்க. ரியலி சாரி தர்னிகா. கை எடுத்து கும்பிட்டான் அரவிந்த்.
விட்டால் காலில் விழுந்திருப்பான் போல. தர்னிகா ஒரு வழியாக சிறிது சமாதானமடைந்தாள். என்ன தான் இருவரையும் பிரிக்க ப்ளான் செய்தாலும் அது தர்னிகாவிற்கு இவன் மீது வெறுப்பை வரவழைக்கக் கூடாது அல்லவா!
இருந்தாலும் உங்க மேல கோவம் தான் அரவிந்த். ராஜேஷ் பத்தி எங்க அம்மா அப்பாவே எதுவும் கேட்டது இல்லை. இப்போ உதய் அம்மா அப்பா கூட எப்படி புரிஞ்சிக்கிட்டாங்க தெரியுமா. ராஜேஷ் ரொம்ப நல்லவன். ஹி இஸ் ஏ ஸ்வீட் பாய்.
இப்போது உதயனே கடுப்பானான். அவன் ஸ்வீட்ன்னா நான் என்ன காரமா என நினைத்தான்.
சரி சரி. வாங்க ஏதாவது சாப்பிடலாம். என அரவிந்தையும் அழைத்தான் உதயன். (இவ்வளவு நல்லவனா இருக்கானே)
மூவரும் ஒவ்வொரு விதத்தில் மகிழ்ச்சியாக இருந்தனர்.
ஒரு வழியாக சென்னை வந்து அவர்களுக்கென பார்த்து வைத்த வீட்டில் குடியேறினர். முதல் சில வாரங்கள் இருவரது பெற்றோர்களும் மாறி மாறி உதவிக்கு இருந்தனர். பின் அவர்களும் இவர்களுக்கு தனிமை கொடுத்து ஊருக்கு சென்று விட்டனர்.
முதலில் தனிமை அவர்கள் இருவருக்குமே வித்தியாசமாக இருந்தது. எதுவுமே பேசத் தெரியாதவர்கள் போல அமைதியாக இருந்தனர். நாளாக நாளாக உதயன் கடையை விட்டு வீட்டுக்கு வந்து தர்னிகாவை பார்க்கும் நொடிக்காக காத்திருக்கத் தொடங்கினான். சில நாட்களில் சீக்கிரமே வீட்டிற்கு வந்தான்.
தர்னிகா வும் உதயன் வரும் நேரத்தில் நன்றாக மேக்கப் செய்துகொண்டு டி.வி முன் அமர்ந்திருப்பாள். (கேஷீவலா இருக்கிறாளாம்).
உள்ளே வரும் உதயன் அவளை பார்த்து விட்டு அவள் தனக்காய் அலங்கரித்துக் கொண்டு தன்னை கண்டும் காணாமல் இருப்பதைப் பார்த்து குறும்புச் சிரிப்பு ஒன்றை உதிர்த்துக் கொண்டே உள்ளே செல்வான். அவன் சென்ற பிறகு இவளும் தன்னையறிமால் சிரித்துக் கொண்டிருப்பாள்.
இருவரின் நெருக்கமும் வளர்ந்து ஹேய் பொண்டாட்டி என அவன் கூப்பிடும் அளவு வளர்ந்திருந்தது.
முழுதாக ஒரு மாத காலம் ஓடிவிட உதயனின் மனதில் தர்னிகா பரிபூரணமாக வந்திருந்தாள். இதைப் பற்றி தர்னிகாவிடம் பேசிவிட வேண்டும் என உற்சாகமாக வீட்டுக்குள் வந்த உதயன் சோபாவின் முன் ஒரு பார்சல் இருப்பதைப் பார்த்து அதை பிரிக்க அமர்ந்தான். தர்னிகாவும் அவன் அருகில் அமர்ந்தாள்.
இப்ப தான் வந்துச்சு. என்னன்னு பாரு என்றாள் தர்னிகா.
பார்சலை பிரித்தால் உள்ளே மஹதியின் உடைகள், அவள் பயன்படுத்திய பொருட்கள், அவன் அவளுக்கு பரிசளித்த பொருட்கள், அவன் உருகி உருகி எழுதிய காதல் கடிதங்கள் அனைத்தும் இருந்தது.
அதிர்ந்த உதயன் தர்னிகாவைப் பார்க்க அவள் முகம் சிவப்பாக மாறிக்கொண்டு இருந்தது. ஒரு கடிதத்தை எடுத்தவள் பிரித்துப் பார்த்தாள்.
உன்னை தவிர வேறு யாரும் என் வாழ்வில் இல்லை. விதி வசத்தால் ஏதேனும் மாறி என் வாழ்வில் வேறு பெண் வந்தாலும் அந்த வாழ்வு கடமைக்காக இருக்குமே அங்கு காதலுக்கு இடமில்லை கண்மணி என எழுதி, அடியில் உதயன் ❤. என ஹார்ட்டின் வேறு வரைந்திருந்தான்.
அதைப் படித்த தர்னிகாவின் முகம் காளி போல் மாறியது. மொத்த கடிதத்தையும் எடுத்துக் கொண்டு அறைக்குள் சென்று அறையை தாழிட்டாள்.
சிலையென அமர்ந்திருந்த உதயனுக்கு அவளை என்ன சொல்லி சமாதானம் செய்வதென புரியவில்லை. அதை விட யாரு இதை செய்தது எனவும் தெரியவில்லை. காதலித்தது ஒரு குற்றமா என தலை பிடித்துக் கொண்டு அப்படியே சோபாவில் சாய்ந்தான்.
இனி மகிழ்ச்சியாக வாழ்க்கையை தொடங்கலாம் என நினைத்தால் இப்படி ஒரு திருப்பமா?
அது யாரா இருக்கும்னு தெரிஞ்சிருக்கும் உங்களுக்கு. இப்பவே உதயன் கிட்ட சொன்னா கதை முடிஞ்சிரும். நான் வேற இன்னும் பத்து எபி ப்ளான் பண்ணிருக்கேன். அதுனால இப்ப அவன் மண்டையை பிச்சிக்கட்டும். அடுத்த யு.டி ல பார்ப்போம் மக்களே.

Advertisement