Advertisement

மறுவீடு செல்வதற்கான நாளும் வந்தது. உதயனும் தர்னிகாவும் மட்டும் முன் செல்வதாக பேச்சு. பின் மறுதினம் மற்ற அனைவரும் அங்கு சேர அங்கிருந்து சென்னைக்கு ரிசப்ஷன் செல்ல ஏற்பாடு செய்திருந்தனர்.
பேக்கிங் முடித்து விட்டு மாமனார் மாமியாரிடம் கூறிவிட்டு ரூமிற்கு வந்த தர்னிகா ரூமின் உள்ளே பேச்சு சத்தம் கேட்கவே வெளியே நின்றாள். உதயனின் தங்கை ஹரிணி தான் உள்ளே பேசிக்கொண்டு இந்தாள்.
ஏண்ணா! உங்க கல்யாணத்துல எடுத்த செல்பி யை என் போனுக்கு அனுப்பலாம்னு போன் எடுத்து கேலரிக்குள்ள போனா பழைய கோப்புகள் உள்ள மஹதி போட்டோவா இருக்கு. இன்னும் அழிக்கலையா அதை
இல்ல ஹரிணி இனி தான் பண்ணணும்.
இதுவே ரொம்ப லேட் அண்ணா. அண்ணி பாத்தா என்ன நினைப்பாங்க. பிரச்சனை ஆகும். ப்ளீஸ் அண்ணா. அண்ணி நல்லவங்களா இருக்காங்க. இன்னும் உன்னை விட்டு வச்சிருக்காங்க பாரு
ம்க்கும். இது தெரிஞ்சா என்னை போட்டு தள்ளிருவா என்று நினைத்துக் கொண்டான் உதயன்.
கதவை தட்டி விட்டு உள்ளே நுழைந்தாள் தர்னிகா.
அண்ணி. உங்க ரூம் உள்ளே வர கதவை ஏன் தட்டுறீங்க.
இல்லம்மா. பேச்சு சத்தம் கேட்டுது அதான். உன் கிட்ட பேசவே நேரம் இல்லை ஹரிணி.
சென்னைல தானே இருக்கப் போறீங்க. நான் ஓடி வந்துருவேன். சரி நான் போய் ரிசப்ஷன் ட்ரெஸ் செலக்ட் பண்ணணும். வரேன் அண்ணி. வரேண்ணா என்று கூறிவிட்டு சென்றுவிட்டாள் ஹரிணி.
கேட்டுருப்பாளோ? கேட்டிருந்தா இந்நேரம் செவிலு பிஞ்சிருக்குமே என குழம்பிக் கொண்டிருந்தான் உதயன்.
இனி இவனுக்கு ஷாக் ட்ரீட்மெண்ட் தான் என நினைத்த தர்னிகா அவள் போனை எடுத்து அவள் நண்பன் ராஜேஷ் உடன் சேர்ந்து எடுத்த போட்டோவை வால்பேப்பரில் வைத்து விட்டு போனை மேஜையின் மீது வைத்துவிட்டு பைகளை சரி பார்த்து கொண்டிருந்தாள்.
அவள் கேட்கவில்லை என நினைத்து ஆசுவாசமடைந்தான் உதயன்.
சிறிது நேரத்தில் அவள் தொலைப்பேசி ஒலிக்க உதயனை எடுக்கக் கூறினாள். அவள் பெற்றோர் தான். கிளம்பியாயிற்றா எனக் கேட்க அழைத்தனர். பதில் கூறிவிட்டு பேசியை கட் செய்தவன் வால்பேப்பரில் ஒரு அழகான இளைஞன் உடன் தர்னிகாவின் படம் இருப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தான்.
அவளிடம் எப்படிக் கேட்பது எனத் தெரியாமல் புகைப்படத்தையே குறுகுறுவென பார்த்துக் கொண்டிருந்தான். அவன் போனைப் பார்ப்பதை பார்த்த தர்னிகாவிற்கு சிரிப்பு வந்தது. பின் அவனிடம்,
உதய்! என்ன பாத்துட்டே இருக்க. போனைக் குடு. என்றாள்.
தன் பெயரை முதன்முறையாக அவள் உச்சரிப்பதைக் கேட்ட உதயனுக்கு ஏதோ ஒரு உணர்வு தோன்றியது.
பின் மெதுவாக, இந்த வால்பேப்பர்ர்ர்ர்ர்ர் என இழுத்தான்.
ஆமா அதுக்கென்ன!
இது எந்த இடம்? சம்மந்தமே இல்லாமல் ஏதோ கேட்டான்.
பொங்கிய சிரிப்பை அடக்கிக் கொண்டு ,” ஏற்காடு. நீ போனதில்லையா” எனக் கேட்டாள்.
இல்லை. நீ மட்டுமா போன?
பாத்தா தனியா போன மாதிரியா இருக்கு
அசடு வழிந்தான். இல்லை கூட ஒரு பையன் இருக்கானே!
அவன் மட்டும் இல்லை. கல்லூரில எல்லாரும் போனோம். டூர் அப்ப எடுத்தது.
இது உன் ஃப்ரண்டா?
இல்லை. என் எதிரி. ஆளைப் பாரு. என் நெருங்கிய நண்பன் அவன். ராஜேஷ்.
கல்யாணம் ஆய்டுச்சே. இப்படி வால்பேப்பரில் வச்சா எல்லாரும் கேப்பாங்களே.
சார் மட்டும் கேலரி முழுக்க வேற பொண்ணோட போட்டோ வச்சிக்கலாம் அப்படித் தான!
அந்தக் கேள்வியில் அவள் அனைத்தையும் கேட்டுவிட்டாள் எனப் புரிந்தது அவனுக்கு.
வேகமாக அவன் போனை எடுத்தான். மடமடவென அனைத்து புகைப்படத்தையும் அழித்தவன் அவளைப் பார்த்து, சாரி என்றான்.
பின் அவன் முதுகில் மொத் மொத்தென்று சாத்திய தர்னிகா அவனை கோபத்துடன் பார்த்தாள். பின் அவனிடம்
என்ன பாக்குற? கன்னத்துல அடிச்சா கை விரல் பதியுது. அப்புறம் எல்லாரும் கேப்பாங்க. அதான் இடத்தை மாத்திட்டேன். இந்த இடம் யாருக்கும் தெரியாதுல்ல அதான் என்றாள்.
அடிப்பாவி. இடத்தை மாத்துனாலும் அடியை மாத்தா மாட்டேங்குறாளே! என்னா அடி என்று எண்ணியவன், ” சரி. உன் போன்ல இருக்கிறதை மாத்து ” என்றான்.
அவ்வளோ பொறாமை பிடிச்ச ஆளா நீ. மவனே இதை வச்சே உன்னை வழிக்கு கொண்டுவரேன் என்று நினைத்தவள் வேறு புகைப்படம் மாத்திவிட்டு,
போட்டோக்கே இப்படியா? அங்க என் வீட்டுக்கு நேராவே வருவான் ராஜேஷ். ரிசப்ஷன் கூட வரான் என்றபடி ஒரு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்துவிட்டுச் சென்றாள்.
தர்னிகாவின் வீடு,
உதயன் தர்னிகாவிடம் தான் உம்முனாமூஞ்சியாக இருந்தானே தவிர மற்ற அனைவரிடமும் கலகலவென பேசினான். அதுவும் அவள் அத்தைப் பெண் திவ்யாவிடம் விழுந்து விழுந்து சிரித்துக்கொண்டு பேசினான்.
எப்படி எங்க தர்னிகா என்று கேட்டாள் திவ்யா.
ம்ம்ம்ம்ம்ம் சூப்பர் என்றான் உதயன்.
ஆமா சுப்பர் தான். ஆனா கோவம் வந்திரும். அவ கிட்ட எத்தனை அடி வாங்கிருக்கேன் தெரியுமா
என்ன நீயுமா என உதயன் கேட்க
அப்ப நீங்களுமா என திவ்யா சிரிக்க
இருவரும் ஹை ஃபை அடித்துக் கொள்ள, அதை தொலைவில் இருந்து பார்த்துக் கொண்டிருந்த தர்னிகா பொறாமையில் சிவந்து போனாள்.
நீ இன்னிக்கு ரூமுக்கு வா.  உன் முதுகுல மத்தளம் வாசிக்கிறேன் என்று மனதிற்குள் கறுவிக்கொண்டாள் தர்னிகா.
சரியாக அந்த நேரம் ராஜேஷ் வந்தான். ஹாய் டார்லிங் என்றபடி வந்தவன் தர்னிகாவின் கன்னத்தை தட்டி புதுப்பொண்ணு எப்படி டி இருக்க எனக் கேட்டான்.
அடேய் நான் கூட இதெல்லாம் பண்ணலை இப்படி கூப்பிடலை என்று முழித்த உதயன் தர்னிகாவின் அருகில் சென்று நின்று கொண்டு,” யார் டார்லிங் இது? உன் ஃப்ரெண்டா” என்று கேட்டான்.
அவன் அருகில் வந்தது, டார்லிங் என அழைத்தது எல்லாம் தர்னிகாவிற்கு நாணத்தை ஏற்படுத்தியது.
சிறிது வெட்கத்துடன்,  ஆமா. நான் சொன்னேனே ராஜேஷ் என் க்ளோஸ் ஃப்ரெண்டு. இவன் தான் என்றாள்.
அவள் சிவந்த கன்னத்தைக் கண்டவனுக்கு என்ன தோன்றியதோ அவள் கையை இயல்பாய் எடுத்து தன் கையில் வைத்துக்கொண்டான்.
ஹாய் ப்ரோ. நான் ராஜேஷ் என்றவன் படதிற்கான டிக்கெட்டை கொடுத்தான். உங்களுக்காக தான் பாஸ். போய்ட்டு வாங்க என்றான்.
இப்பவா? இப்ப தான் சாப்பிட்டோம் பாஸ் அதான் என்று இழுத்தான் உதயன்.
டேய் ராஜேஷ் விடு. அவரு ரெஸ்ட் எடுக்கட்டும் நாம போவோம் என்றாள் தர்னிகா.
இவ என்ன என்னை கழட்டி விடுறதுலையே இருக்கா! சரியில்லையே என்று நினைத்த உதயன்
உனக்கு டயர்டா இருக்குமேன்னு சொன்னேன் டார்லிங். மத்தபடி நான் ரெடி பாரு வண்டி சாவி கூட எடுத்திட்டேன் என்று கூறிவிட்டு வாசலுக்கே சென்று விட்டான்.
தர்னிகாவிற்கு சிரிப்பு பொத்துக் கொண்டு வர அவனைப் பார்த்து சிரித்துக்கொண்டே வண்டியில் ஏறினாள்.
மனதிற்குள் ராஜேஷ் நீ மட்டும் என் கூட இருந்தா ஆறு மாசமே வேணாம். ஒரே மாசம் போதும் போலையே என்று நினைத்து மகிழ்ந்தாள்.
அவள் மகிழ்ச்சி நிலைக்குமா?? பார்ப்போம் அடுத்த எபிஸோடில்

Advertisement