Advertisement

மறுநாள் காலைப் பொழுது புலர்ந்ததும் ஆறு மணிக்கு உதயனின் கைப்பேசி அலாரம் அடித்தது. அவன் எழவில்லை. தர்னிகாவின் தூக்கம் கலைந்து அவள் தான் எழுந்தாள். அலாரத்தை அமர்த்தியவள் கைப்பேசியை கீழே வைக்கும் போது தான் பார்த்தாள், வால்பேப்பரில் ஒரு பெண்ணின் படம் இருப்பதை.
அது யார் என யூகிக்க அவளுக்கு நேரம் தேவைப்படவில்லை. மஹதியாக இருக்கும் என நினைத்தவள் போனை எடுத்து புகைப்படத்தை நன்றாகப் பார்த்தாள். அழகான முகம் தான். எவரையும் மற்றொரு முறை திரும்பிப் பார்க்க வைக்கும் அழகிய கண்கள்.
நேற்று தேவையில்லாமல் அடித்து விட்டோமோ பொறுமையாக பேசியிருக்கலாம் என்று எண்ணியே எழுதாள் தர்னிகா. ஆனால் மஹதியின் புகைப்படத்தைப் பார்த்த பிறகு இன்னும் நாலு அடித்திருக்கலாம் எனத் தோன்றியது.
எவ்வளவு திமிரு இருந்தால் இதை மாற்றாமல் வைத்திருப்பான். நிச்சயத்திற்குப் பிறகு மாற்றியிருக்க வேண்டும். குறைந்தபட்சம் திருமணம் அன்றாவது மாற்றியிருக்க வேண்டும். நேற்று நடந்ததற்குப் பிறகும் இவளை வால்பேப்பரில் வைத்திருக்கிறான் என கோபத்தில் சிவந்தவள் அவனை முறைத்தாள்.
சிறிது தூக்கம் தெளிந்து எழுந்த உதயன் தர்னிகா தன்னை முறைப்பதைக் கண்டு எழுந்து அமர்ந்தான். அவனைப் பார்த்ததும் அடக்கி வைத்த கோபமெல்லாம் வெளியில் வர பளாரென வலது கன்னத்தில் அறைந்தாள்.
இருந்த மிச்ச தூக்கமும் தெளிய உதயனுக்கும் கோபம் வந்தது. நேற்றைக்கு அறைந்தாள் சரி. இன்று ஒன்றுமே நடக்கவில்லையே என எண்ணியவன்,” என்னடி. சும்மா சும்மா அடிக்குற” எனக் கேட்டான்.
அவனை முறைத்துப் பார்த்தவள் அவன் கைப்பேசியை அவனிடமே தூக்கிப் போட்டுவிட்டு குளியலறைக்குச் சென்றாள்.அவள் தூக்கிப் போட்ட போனை எடுத்து பார்த்தவனுக்கு அவள் அறைந்த காரணம் புரிந்தது.
இன்னைக்கு நாளே பிராமதமா ஆரம்பம் ஆயிருக்கு என்று எண்ணியவன் அவசரமாக வால்பேப்பரை மாற்றினான். நல்லவேளையாக நிச்சயதார்த்தம் சமயம் எடுத்த புகைப்படம் ஒன்று இருந்தது. அதை வைத்தவன் போனை அவள் கண்ணில் படும் இடத்தில் வைத்துவிட்டு பால்கனிக்குச் சென்று நின்று கொண்டான்.
குளித்துவிட்டு வந்த தர்னிகா எதையும் பார்க்காமல் கீழே சென்றாள். கீழே ஒரு பட்டாளமே இவள் வரவுக்காக காத்திருந்தது. அவள் பெற்றோர் மறுவீட்டிற்கு அழைக்க வந்திருந்தனர். அவர்களின் கண்களில் தெரிந்த ஆர்வத்தைக் கண்டவள் சிரித்து வைத்தாள்.
சமயலறைக்குச் சென்றவள் தேவியிடம் ,” குட்மார்னிங் அத்தை” என்று கூறினாள்.
குளித்து முடித்து பளிச்சென இருக்கும் தர்னிகாவைப் பார்த்த தேவி திருஷ்டி கழித்தாள்.
அழகா இருக்க தர்னிகா. எப்படி உதய்? உனக்கு பிடிச்சிருக்குல்ல. அவன் எப்படி நடந்துகிட்டான் என மறைமுகமாகக் கேட்டார்.
உங்க பையனா?  ஓ.கே அத்தை ஒன்னும் பிரச்சனையில்லை.
இப்பதான் நிம்மதியா இருக்கு. இந்தாம்மா காபி எடுத்துக்கோ என்றவர் உதயனும் கீழிறங்கி வந்ததைப் பார்த்தார்
அவனிடம் சென்று, ” தர்னிகா நல்ல பொண்ணுடா. பாத்து நடந்துக்கோ. முரட்டுத்தனமா இருக்காத” என்றார்.
எது நான் முரட்டுத்தனமா இருக்கேனா? நேத்துல இருந்து அவ தான் என்னை அடி வெளுக்குறா. இனியெல்லாம் அடி தாங்க முடியாது. அவ ரூமுக்கு வந்ததும் கால்ல விழ வேண்டியது தான் என நினைத்தவன் ,”அம்மா காபி” என்றான்.
இனிமே உன் பொண்டாட்டி கிட்ட தாண்டா இதெல்லாம் கேக்கணும் என்ற தேவி வெளியில் சென்றுவிட வேறு வழியின்றி தர்னிகாவிடம் சென்றான்.
ஹும்ம் என தொண்டையை இருமினான். அவள் கண்டுகொள்ளாமல் காபியை ரசித்து குடித்துக் கொண்டிருந்தாள்.
அது வந்து .. காபி என இழுத்தான்.
அவனைப் பார்த்து திரும்பியவள், ” எனக்கு பேர் இல்லையா? ” எனக் கேட்டாள்
ம்ம் தர்னிகா என மென்மையாக அழைத்தான்.
இதுவரை இத்தனை மென்மையாக அவள் பெயரை யாரும் உச்சரித்ததில்லை. அவளுக்குள் மெல்லிய சாரல் அடித்தது.
நல்ல வேளை. பெயர் கூடத் தெரியலையோன்னு நினைச்சேன். என்ன வேணும்?
காபி வேணும்.
காபியை கையில் கொடுத்தவள், ” எங்க அம்மா அப்பா வந்திருக்காங்க தெரியுமா” எனக் கேட்டாள்.
தெரியும். பேசிட்டு தான் வந்தேன். அவங்க ரொம்ப சாஃப்ட் இல்லை.
ஆமா. எங்க வீட்டுல எல்லாருமே சாஃப்ட் தான்.
இதைக் கேட்டதும் காபி புரையேற இருமியவன், ஓகோ! இதான் சாப்ஃட்டோ என அவன் கன்னத்தை வருடியபடியேக் கேட்டான்.
அவளுக்கு சிரிப்பு வந்துவிட, மறுவீட்டுக்கு கூப்பிட வந்திருக்காங்க. அப்படியே சென்னைல ரிசப்ஷன் போகணும்.
தெரியும்.
கல்யாணத்துல இருந்தியே அப்படி உராங்குட்டான் மாதிரி உர்ன்னு இருந்தன்னு வை, மவனே ஆறு மாச டைமை மூணு மாசமா ஆக்கிருவேன். எங்க ஏரியால எனக்கு டிமாண்ட் ஜாஸ்த்தி. இப்படி வேணாம்னு சொல்றவனைக் கல்யாணம் பண்ணத் தான் எங்களை ரிஜெக்ட் பண்ணியான்னு கிண்டல் பண்ணுவாங்க. ஒழுங்கா இரு சொல்லிட்டேன்.
சொல்லிவிட்டு வெளியே சென்றவளையே கண்கொட்டாமல் பார்த்தான் உதயன். இதுவரை அவனிடம் பணிந்து பேசியவர்களே அதிகம். அவனையே மிரட்டியவர் யாருமில்லை. அவனையறியாமலே புன்சிரிப்பு படர்ந்தது இதழில்.
உதயன் தர்னிகா இருவருமே கோவையைச் சேர்ந்தவர்கள். எனவே திருமணத்திற்கு அனைவரும் வந்துவிட்டனர். சென்னையில் புதியதாக தொடங்கியிருக்கும் கிளையை கவனிக்கும் பொறுப்பை உதயனிடம் ஒப்படைத்த அவன் தந்தை அவர்கள் இருவரையும் மட்டும் சென்னையில் தங்கி கிளையை கவனிக்கக் கூறினார். தொடங்கியிருக்கும் புதுக்கிளைக்கு விளம்பரம், பெரிய பிஸினஸ் மனிதர்களுக்காகவே இந்த ரிசப்ஷன்.
மறுவீட்டிற்கு அழைத்த தர்னிகாவின் பெற்றோர் அவர்களுக்கு தேனிலவிற்காக வெனிஸ் நகரைத் தேர்வு செய்து பயணயச்சீட்டை வழங்கினர்.
இன்னும் பேசவே இல்லை அதற்குள் தேனிலவா என நினைத்த உதயன் குழப்பதுடனே அறைக்கு வந்தான். அவன் பின்னே வந்த தர்னிகா “என்ன மிஸ்டர், யோசனை” எனக் கேட்டாள்.
இல்லை நம்ம இருக்கிற நிலைமையில ஹனிமூன் தேவையா? இன்னும் நமக்குள்ள புரிதலே இல்லையே
அதுக்கும் இதுக்கும் என்ன சம்மந்தம். நானே ரொம்ப நாளா போகணும்னு நினைச்ச நாடு வெனிஸ். இப்ப அருமையான சந்தர்ப்பம் வந்திருக்கு. உன் சோகக் கதைக்காக என் ஆசையெல்லாம் கெடுத்துக்க முடியாது. தேனிலவு போறதே நல்லா புரிஞ்சிக்கணும்னு தான். பேசாம பேக் பண்ற வழியப் பாரு.
இல்லை. அங்க நம்ம கூட யாரும் இருக்க மாட்டாங்க. நீயும் நானும் மட்டும் தான் ஓகே வா.?
யாருடா நீ! ஹனிமூன்னா கணவன் மனைவி தான் போவாங்க. ஊரேவா கூட வரும். நான் கடிச்சு தின்னுட மாட்டேன் உன்னை.
நீ கடிக்க மாட்ட. என்னை அடிக்காம இருந்தா போதும் என்றான் நேற்றைய இரவை நினைத்து.
இங்க பாரு! சும்மா எதையாவது பேசி நல்ல சான்சை கெடுக்காத. அடுத்த வாரம் நாம வெனிஸ் போறோம். ஆறு மாசம் நியாபகம் இருக்குல்ல. என் கூட பழகலைன்னா எப்படி லவ் பண்ணுவ? போ. போய் பேக்கிங் பண்ணு.
கூறிவிட்டு சென்றுவிட்டாள் தர்னிகா. அவளிடம் நேற்று இருந்த தயக்கம் இன்று இல்லை உதயனுக்கு. ஆசையோடு திருமணம் செய்த தர்னிகாவிற்கு உண்மையாக இருக்க வேண்டும். இனி அவளிடம் நன்றாக பழக வேண்டும் என்று நினைத்தான் உதயன்.
என் மைண்ட் வாய்ஸ்(நீ இப்பதான் பழகுறதுல ஃபர்ஸ்ட் கோர்ஸ் வந்திருக்கியாப்பா. நீ இன்னும் ஆறு மாசத்துவ லவ் பண்ணி குழந்தை பெத்து… முடியலை ). என்ன நடக்குதுன்னு பாப்போம் அடுத்த எபிஸோடுல.

Advertisement