ஆருவின் முகம் சற்றே தெளிய, “நன்றி…!’’ என்றாள் கரகரத்த குரலில். “அதற்கு அவசியம் நேராது என்று தான் நினைக்கிறேன்.’’ என்று லூ சொல்ல, ஆரு கீழ் கண்களால் அவனை முறைத்தாள்.
அந்த நேரம், லூவை நெருங்கிய ஜோ, “நான் கிளம்பலாம். தட்ப வெப்பநிலை ஏதுவாக இருக்கிறது.’’ என்றான்.
லூ தலை அசைக்கவும், விமான பணிப்பெண்கள் இருவருக்கும் இடுப்பு பட்டியை பொருத்தினர். அடுத்த இரண்டாம் நிமிடம் அந்த இயந்திர பறவை மெல்ல மெல்ல மேலெழுந்து மேக கூடத்தின் நடுவே தன் பயணத்தை தொடர்ந்தது.
பயணம் முடிவுக்கு வந்திருந்த போது, ஆரு உறக்கத்தின் பிடியில் இருந்தாள். லூ அவளை லேசாக உலுக்க, புரண்டு படுத்தவள், அவள் வலுவாக உலுக்கவும், பட்டென விழிகளை திறந்தாள்.
தூக்க கலக்கம் மறையாதிருக்க லூவை பார்த்து லேசாக இதழ் பிரித்து புன்னகைத்தாள். அது அவன் பசிய விழிகளில் பளபளப்பை தோற்றுவிக்க, அக்கண்களில் நடை பெற்ற வேதியல் மாற்றத்தில் தூக்கம் கலைய ஆரு வேகமாய் எழ முயன்றாள்.
“ஹே… ஈஸி…! நல்லா தூங்கிட்ட. நாம இறங்க வேண்டிய இடம் வந்தாச்சு.’’ என்று லூ மென்மையாக உரைக்க, ஆரு மெதுவாக எழுந்து அமர்ந்தாள். அவர்கள் விமானத்தில் இருந்து இறங்கவும், அவர்களை அழைத்து செல்ல மகிழுந்து ஒன்று தயாராய் காத்திருந்தது.
விமானத்தை போலவே, அந்தமகிழுந்தின் பெயரும் ஆருவின் மனதிற்குள் ஒரு ஆச்சர்யத்தை எழுப்பினாலும், இந்தமுறை முன்று தன் முகமாற்றை வெளிக் காட்டாமல் மறைந்து கொண்டாள். ஆனால் லூ அதையும் உணர்ந்து கேலியாய் அவளை நோக்கி தன் புருவங்களை உயர்த்தினான்.
“டின்னர் சாப்பிட இவ்ளோ தூரம் ட்ராவல் செய்யணுமா…?’’ ஆரு தன் இதழ்களுக்குள் முணுமுனுக்க, அந்த இதழ்களை தன் பார்வையால் அளந்த லூ, “ஒரு டின்னருக்கு இவ்ளோ தூரம் ட்ராவல் செய்ய தேவை இல்லை தான். ஆனா மெமரிஸ் கிரியேட் செய்ய இவ்ளோ தூராம் ட்ராவல் செய்யலாம் தப்பில்ல.’’ என்றான்.
தலை குலுக்கி கொண்டவள், அதன் பிறகு ஏதும் பேசாமல் அமர்ந்து கொண்டாள். கண்களை வாகனத்தின் சாளரத்தில் பதித்து வேடிக்கை பார்த்து வந்தவள், அங்கிருந்த விளம்பர பதாகைகளில் குறிப்பிடப்பட்டிருந்த இடத்தின் பெயரை வாசித்து வாயைப் பிளந்தாள்.
கண்களில் கொஞ்சமும் வியப்பு மறையாமல் லூவை ஏறிட்டவள், “நாம டின்னர் சாப்பிட வெனிஸ் வந்திருக்கோமா…?’’ என்றாள். லூ லேசாக இதழ் பிரித்து கண்களை மூடி திறக்க, “ஓ மை கோஷ்…! என்னால நம்பவே முடியல.’’ என்றவள் நன்றாக தலையை நீட்டி இரவிலும் தங்கமாய் ஒளிரும் நகரை ரசிக்க துவங்கினாள்.
மெதுவாக அவள் தலையை பின்னால் இழுத்தவன், “இப்போ நாம போக போற ஹோட்டல்ல இருந்து முழு சிட்டியும் தெரியும். அப்போ நல்லா பாத்துக்கோ.’’ என்றான். அடுத்த சில நொடிகளில் வாகனம் நிற்க, லூதான் இறங்கி, ஆரு இறங்க வாகனத்தின் கதவை திறந்து நின்றான்.
ஆருவிடமிருந்த இறுக்கம் சற்றே தளர்ந்திருக்க, சூழ்ந்திருக்கும் அழகியலை ஆராயும் விழிகளுடன் இறங்கினாள். அருகில் எங்கோ ஒரு நதியின் சலசலப்பு. அவளின் கரம் பற்றி லூ மெதுவாக முன் நடத்தி செல்ல, ஜோ அவர்களை பின் தொடர்ந்தான். “தி கிரிட்டி டெரஸ்…’’ என்று தனக்கு முன்னால் ஒளிர்ந்த எழுத்துகளை கண்டதும், ஆரு அவளையும் மீறி, “வாவ்…’’ என்றாள்.
“நாம இன்னைக்கு இங்க தான் சாப்பிட போறோமா…?’’ என்றாள் லூவிடம். அவன் பதில் பேசாமல் உணவகத்தின் வரவேற்பறைக்கு அவளை நடத்தி சென்றான். வரவேற்பில் இருந்த பெண் மிகுந்த மரியாதையுடன் லூவை வரவேற்று, உணவகத்தின் மேல் தளத்திற்கு செல்லும், மின்தூக்கிக்கு வழி காட்டி நடந்தாள்.
மின் தூக்கி மேல் தளத்தை அடைந்ததும், அங்கு வாயிலில் காத்திருந்த இரண்டு சிப்பந்திகள், மலர்கொத்து கொடுத்து இருவரையும் வரவேற்றனர். சுவர்களற்ற அந்த மேல்தளத்தில் அருகில் நதி சலசலத்துக் கொண்டிருக்க, குளிர்ச்சியான காற்று வந்து ஆருவை ஆர தழுவியது.
சுகந்தமாய் பூக்களின் வாசம் நாசியில் நிறைய, ஆழ்ந்த மூச்செடுத்தவள், “மார்வலஸ்” என்றாள். “இட்ஸ் ஷோ டைம்.’’ என்ற லூ மீண்டும் அவளின் கரம் பற்றி இருவருக்கு மட்டுமே அமைக்கப்பட்டிருந்த உணவு மேஜைக்கு நடத்தி சென்றான்.
அவர்கள் நாற்காலியில் சென்று அமர்ந்ததும், எங்கிருந்தோ, மெல்லிய பியானோ இசை தவழ்ந்து வந்தது. அங்கிருந்த இரவு விளக்குகள் மின்னி மின்னி ஒளிர, திடுமென ஆருவின் தட்டில் ஒற்றை வெளிச்சம் உயிர் பெற அதில் சிப்பந்தி போல உடை அணிந்த முயல் குட்டி நடனமாட துவங்கியது.
“ஓ… மை… காட்..’’ என்று ஆரு தன் கை கொண்டு வாயை மூடிக் கொண்டு அதிசயிக்க, லூ அவளின் கரம் பற்றி எழுப்பி நிறுத்தி இருந்தான். அடுத்த நொடி இன்னும் சில இடங்களில் வெளிச்ச புள்ளிகள் தோன்ற, அளவில் பெரிதும் சிறிதுமான முயல் குட்டிகள் சிப்பந்தி உடையில் நடமாட துவங்கின.
“நாமும் அவர்களோடு ஆடலாம் தேவதையே.’’ என்றவன் ஆருவோடு சேர்ந்து அசைய துவங்கினான். முதலில் தன்னை சுற்றி ஆடிக் கொண்டிருந்த அழகிய முயல்களின் மீதே, கவனமாய் இருந்தவள், பின்பு இசையின் மயக்கத்திலும், முயல்களின் துள்ளாடத்திலும் அவைகளை போன்று அசைய துவங்கினாள்.
இசை உச்சத்தை அடைந்த நேரம், அதுவரை ஒளி வடிவமாக ஆடிக் கொண்டிருந்த முயல்கள், வரிவடிவம் பெற்று அவர்கள் முன் குதித்தன. ஆர்கலி, அவளையும் மீறி, “ஐயோ…’’ என அலறி இருந்தாள்.
லூ அவள் மீதிருந்த பிடியை சற்றும் தளர்த்தாமல், தொடர்ந்து அவளை நடமாட வைக்க முனைய, அந்த வரி வடிவங்களை உற்று பார்த்தவள், உண்மையை போன்றே பிரதிபலிக்க கூடிய செயற்கை வடிவங்கள் (விர்சுவல் இமேஜஸ்) என்பதை உணர்ந்த பிறகே இயல்பிற்கு திரும்பினாள்.
இசை ஓய முயல் குட்டிகள் ஒவ்வொன்றாய் மறைய, இருவரும் ஆடுவதை நிறுத்தி, தங்கள் மேஜைக்கு திரும்பினர். ஆரு முயன்றும் கட்டுப் படுத்த முடியாது வாய் விட்டு சிரித்துக் கொண்டிருந்தாள்.
அப்போது ஒரு சிப்பந்தி உணவை கொண்டு வந்து வைக்க, மீண்டும் அவள் தட்டில் தோன்றி முயல்குட்டி இம்முறை கண்ணை சிமிட்டி, ஒரு சிறு தீப்பந்தத்தை பற்ற வைக்க, அவள் தட்டிள் இருந்த உணவு பற்றி எரிய துவங்கியது.
ஆரு பட்டென எழுந்து நிற்க, சற்றே எம்பி அவளை அமர வைத்த லூ, “ஈசி ஏஞ்சல்…! இது ஸ்மோக் புட். நீ பயப்படுற மாதிரி எதுவும் இல்ல. கூல்…!” என்றான்.
“ஏதோ மாயாஜால உலகத்துக்குள்ள நுழைஞ்ச மாதிரி இருக்கு.’’ என்றவள், அடுத்து என்ன நடக்குமோ என்ற எதிர்பார்ப்புடன் சுற்றி சுற்றி பார்த்து கொண்டிருந்தாள்.
“அவ்ளோ தான். ஷோ ஓவர். இப்போ டின்னர் டைம். இத்தாலியில என்ன என்ன புட் எல்லாம் ரொம்ப பேமஸோ, அது எந்த செப் செஞ்சா சூப்பரா இருக்குமோ, அவங்களை எல்லாம் வர வச்சு உனக்காக பாத்து பாத்து ரெடி செஞ்ச டின்னர். சோ என்ஜாய் யுவர் புட்…’’ என்றவன் தன் கையில் இருந்த மது குடுவையை அவளை நோக்கி உயர்த்தினான்.
வயிற்றுக்காக அல்லாது அன்றைக்கு நாக்கிற்காக உண்டு அத்தனை வித உணவுகளையும் சுவை பார்த்தாள் ஆரு. அவள் ஒவ்வொடு உணவனையும் சுவை பார்க்கும் போதும், அவள் முகத்தில் மின்னி மறையும் ஒவ்வொரு உணர்வுகளையும் இமைக்காமல் இரசித்துக் கொண்டிருந்தான் லூ.
ஒரு வழியாய் உண்டு முடித்தவள், “இதுக்கு மேல ஒரு வாய் கூட சாப்பிட முடியாது. லூ உன்னால நான் குண்டாக போறேன். அப்புறம் இந்த வாட்டி மல்கோத்ரா என்னை ரிஜக்ட் செய்ய போறார்.’’ என்றாள் ஒரு பெரிய ஏப்பத்தை வெளியிட்டபடி.
“ஒரு நாள் சாப்பிடுறதால பெருசா குண்டாக மாட்ட. அப்படி உனக்கு பயமா இருந்தா நாளைக்கு காலைல என் கூட வந்து நீயும் ஜிம்ல வொர்க் அவுட் பண்ணு.’’ என்றவன் எழுந்து நிற்க, ஆரு இயல்பாய் நீட்டிய அவன் கரத்தோடு தன் கரம் கோர்த்து கொண்டாள்.
மீண்டும் சாலை, மற்றும் ஆகாய வழியே பிரயாணித்து வீட்டை அடைந்த போது, ஆரு ஆழ்ந்த உறக்கத்தின் பிடியில் இருந்தாள். அவளை சுமந்து வந்து படுக்கையில் கிடத்தியவன், அவள் காலணிகளை அகற்றி, போர்வையை கழுத்துவரை போர்த்திவிட்டான்.
முட்டி போட்டு அமர்ந்தவன், லேசாய் குனிந்து அவளின் முன் நெற்றியில் மென்மையாக இதழ் பதித்து, “குட் நைட் ஏஞ்சல்.’’ என்றான். உறக்கத்தின் பிடியில் இருந்தவளோ, லேசாக ஒரு புன்னகையை சிந்திவிட்டு புரண்டு படுத்தாள்.
கடக்க முடியாத நதியின் பள்ளத்தாக்கில் மெல்ல மெல்ல இறங்கிக் கொண்டிருக்கிறோம் என்பதை உறங்கிக் கொண்டிருந்த அவள் அறிந்திருக்க வாய்ப்பில்லை.