Advertisement

சாரு சொன்னது போல்  அவள் சொன்ன நேரத்திற்க்கு முன் அந்த பள்ளி வளாகத்தில் காத்துக் கொண்டு இருந்த ஷ்யாமை, அதிகம் நேரம் கத்திருக்க வைக்காது  சக்தி வரவும், அவள் முன் ஓடி நிற்காது தூரத்தில் இருந்து தன் காரின் மீது சாய்ந்த படி அவளின் அழகை ரசித்துக் கொண்டு இருந்தான்…

சக்தியும் அந்த பள்ளி வளாகத்தில் நுழைந்ததுமே  ஷ்யாமை பார்த்து விட்டாள்.. அவன் தன் முன் வந்து பேச்சு கொடுத்து இருந்து இருந்தால், அவளும் அவனிடம் சாதரணமாக பேசிக் கொண்டு இருந்து இருப்பாளோ என்னவோ..

ஆனால் அவன் தன் அருகில் வராது…   தூரம் நின்று  பார்க்கும் அந்த பார்வையில் அவள் நடையில்  ஒரு பிசிறு போல் சேலை தட்டி விழுந்து விடுவோமோ என்று பயந்து விறு விறு என்று நடந்து வந்தவள் தன் நடையின்  வேகத்தை குறைத்து கொண்டவளாக நடந்து வந்தவளுக்கு இது தான் தோன்றியது..

முதல்  முறை இவனை பார்க்கும் போது நமக்கு இந்த தடு மாற்றம் என்ன  எந்த தடுமாற்றமும் வரவில்லை..காரணம் அப்போது இவனை கடன் கொடுத்தவன் என்ற பட்சத்திலும், தன் வீட்டை காப்பாற்றி கொள்ள வேண்டும் என்ற முனைப்பு மட்டுமே அப்போது தன் மனது முழுவது ஆக்கிரமித்துக் கொண்டு இருந்தது…

பின் தன்னை  மணக்க கேட்க தன் வீட்டுக்கு வந்த போதும், பின் தனிமையில் தன் வீட்டு தோட்டத்தில் பேசும் போதும்  கூட…

எதை கொண்டு தன்னை மணக்க நினைக்கிறான்.. இந்த விருப்பு கடைசி வரை இருக்குமா..? இன்று சாருவை ஏற்றுக் கொள்பவன் நாளை ஏதாவது பிரச்சனை செய்தால். என்று இதை கண்டுக் கொள்ளும் படியாக தான் அன்றைய பேச்சு வார்த்தைகள் அமைந்தது..

இதில் எங்கு இருந்த நாணம். வெட்கம் எல்லாம் வரும்… ஆனால் இன்று தூரம் நின்று பார்க்கும் ஷ்யாமின் இந்த பார்வையில் கன்னி மனம் ஏனோ தடுமாறி  கன்னம் இரண்டும் சிவந்து விட்டது…

தூரம் நின்று சக்தியையே பார்த்துக் கொண்டு இருந்த ஷ்யாமும் அனைத்தையும் கவனித்து கொண்டு தான் இருந்தான்..முதலில்  பள்ளி வளாகத்தில் நுழைந்ததும், தான் வந்து விட்டேனா என்று தெரிந்துக் கொள்ள பார்வையை சுழல விட்டவளின் கண்ணில் தான் பட்டதும், முதலில்  சிரித்த முகமாக தன்னை பார்த்துக் கொண்டே மெல்ல முகத்தில் புன்னகையை தவழ விட்ட வாறு நடந்து வந்து கொண்டு இருந்தவள்..

பின் தன் பார்வையில் அவளின் நடை தடுமாறியதும்,  அதன் பின் கன்னம் சிவந்து தலை குனிந்து  கொண்டவளின்  அந்த வெட்கமும்..

 ஆண் அவன் கண்ணுக்கு மிக அழகாக தெரிய,  வைத்த கண் விடாது தான் அவளை பார்த்துக் கொண்டு இருந்தான்..

அன்று பேரன்ஸ் மீட்டிங் என்பதால் இவர்களை போலவே  குழந்தைகளின் பெற்றோர்கள் வந்த வண்ணம்  இருந்தனர்..

ஷ்யாம் வாகனம்  நிற்கும் இடத்தில் தன் காரை நிறுத்தி விட்டு,  அதன் மேல் சாய்ந்த படி நின்று கொண்டு இருந்ததால் அவனை  நோக்கி  வந்து கொண்டு இருந்த சக்தியின் அருகில் ஒரு இரு சக்கர வாகனம் உரசுவது போல் வந்ததில்,  சக்தி பதறி விலகி நிற்பதற்க்குள்ளாகவே ஷ்யாம் அவள் அருகில் ஓடி வந்து  அவள் கை பிடித்து தன் பக்கம் இழுத்துக் கொண்டவன்..அந்த இரு சக்கர வாகன  ஓட்டியை பார்த்து முறைக்க..

அவனோ  தன் பார்வை மூலம் தாங்கள் இருக்கும் இடத்தை சுற்றி வளம் வந்து சுட்டி காட்டிய பின் தான் ஷ்யாம் ஒன்றை கவனித்தது..அந்த பகுதி முழுவதும் இரு சக்கரம் நிறுத்தும் இடம்.

அங்கு முழுவதும் இரு சக்கரம் நிற்க வைத்து இருக்கு.. அங்கு இருந்த  கொஞ்சம் இடைவெளியில் தான் சக்தி தலை குனிந்து நடந்து வந்ததாலும், ஏதோ ஒரு மயக்கத்தில் இருந்ததாலும், அதை கவனியாது போய் விட்டாள்..

அதே நிலையில் தான் ஷ்யாமும் இருந்ததால், அவனும் கவனியாது விட்டு விட… இப்போது ஷ்யாமை முறைக்கும் முறை அந்த இரு சக்கர வாகனம் ஓட்டியவருடையது  ஆனது..

நல்ல வேலை ஷ்யாமை காப்பாற்றும் பொருட்டு, சாருவின்  வகுப்பி ஆசிரியர் சக்தியை பார்த்து விட்டு, அவள் அருகில் ஓடி வந்தவர்..

“ வாங்க சக்தி… உங்களுக்காக தான் வெயிட் செய்துட்டு இருந்தேன் ..” என்று சொல்லிக் கொண்டே சக்தியின் கை பற்றி நடந்து செல்கையில் ஷ்யாமும் அவள் பின் நைசாக அந்த இடத்தில் இருந்து நழுவி விட்டான்…

சக்திக்காக சாருவின் வகுப்பு ஆசியர் என்ன அந்த பள்ளியின் தலமை ஆசிரியரே காத்து கொண்டு இருந்தார்.. அந்த அளவுக்கு சாருவின் அறிவு திறன் அந்த பள்ளி முழுவதும் பரவி இருந்தது…

சாருவை பற்றி எந்த ஒரு கம்பிளைடண்டும் இல்லாததால் அனைத்து வகையிலும் பாரட்டு  பெற்ற  சாரு… பின் அவள் வகுப்பு ஆசிரியர்..

சக்தியை பார்த்து.. “ உங்களை தலமை ஆசிரியர் பார்க்கனும் என்று சொன்னார்.. அவரை பார்த்து விட்டு போங்க..” என்று சொல்லவும்..

ஷ்யாம்.. “ எதுக்கு..?” என்று கேட்டான்..

சாருவின் வகுப்பி ஆசிரியர் ஷ்யாமின்  கேள்விக்கு பதில் அளிக்காது சக்தியின் பக்கம் யார் இவர் என்பது போல் பார்க்க..

சக்தி.. “ சாருவின் அப்பா..” என்று மிக சுருக்கமாக அந்த ஆசிரியருக்கு ஷ்யாமை அறிமுகம் படுத்த, உடனே அந்த ஆசிரியர் ஷ்யாமின் பக்கம் மரியாதை தக்க பார்வையை செலுத்தி விட்டு..

பின்.. “  நீங்க  ரொம்ப லக்கி சார்.. சாருவை போல ஒரு மகள் கிடைக்க..” என்று பாராட்டினார்..

அந்த பாராட்டை ஏற்றுக் கொண்ட ஷ்யாம்.. தன் பக்கத்தில் நின்று கொண்டு இருந்த சாருவை  பெருமிதத்தோடு பார்த்தவன்,  சட்டென்று அவளை தூக்கி கொண்ட  ஷ்யாம், இந்த பக்கம் நின்று கொண்டு இருந்த சக்தியின்  தோள் மீது  கை போட்டு கொண்டு நடந்து தலமை ஆசிரியர் அறைக்கு வழி கேட்டு  சென்றவன் மனதில் இத்தனை ஆண்டு  ஆக்கிரமித்து கொண்ட வெறுமை சடுதியில் மறைந்து அங்கு  அனைத்திலும் தான்  முழுமை பெற்றது போல் ஒரு நிறைவு தோன்றியது..

அந்த மன நிறைவோடு தலமை ஆசிரியரை ஷ்யாம் சக்தி சாருவோடு சந்தித்தான்..சக்தி தலமை ஆசிரியரிடம் முறையே தன்னை அறிமுகம் செய்த பின் ஷ்யாமையும் அறிமுகம் படுத்த.. அங்கும்  சாருவால் இருவருக்கும் பாராட்டு மழை தான் கிடைத்தது…

பின் அந்த தலமை ஆசிரியர் சொன்ன.. “ உங்க மகள் சாருவின் பள்ளி படிப்பு  முழு செலவும்  எங்கள்  பள்ளியே ஏற்றுக் கொள்ளும்.. உங்கள் மகள் எங்கள் பள்ளியில் படித்தால் அது எங்கள் பள்ளிக்கு தான்  பெருமை..

கண்டிப்பாக சாரு.. பத்தாம். பன்னிரெண்டாம் வகுப்பில் மாநிலத்தில் முதலவதாக வருவாள் என்பதில்  எங்களுக்கு எந்த வித சந்தேகமும் கிடையாது..

எங்களுக்கு வேண்டியது எல்லாம்.. உங்க மகள் பள்ளி இறுதி வரை எங்கள் பள்ளியில் தான் படிக்க வேண்டும் என்பது தான்..” என்று சொன்ன அந்த தலமை ஆசிரியர் ஆர்வமுடன்  சக்தி ஷ்யாமின் பதிலுக்காக அவர்கள் முகத்தை பார்த்திருந்தார்..

சக்தி ஷ்யாம் முகத்தை பார்க்க, ஷ்யாமோ கண் மூடி திறந்து நான் பேசி கொள்கிறேன் என்பது போல்  சமிஞ்சை செய்து விட்டு அந்த  தலமை ஆசிரியரிடம்..

“ மகேந்திரா பைனான்ஸ் பத்தி கேள்வி பட்டு இருப்பிங்க..” என்று  ஷ்யாம் முடிக்கும் முன் அந்த தலமை ஆசிரியர்..

“ ஆ தெரியுமே. பத்து வருடம் முன் இந்த பள்ளியை விரிவுப்படுத்த அங்கு இருந்து தான் பைனான்ஸ் வாங்கினோம்..” என்று அவர் சொல்லி முடிக்கவும்..

ஷ்யாம்.. “ அது என்னுடையது தான்.. என்றதும் அந்த தலமை ஆசிரியரின் பார்வையில் இன்னும் மரியாதை கூடியது .. பணத்திற்க்கு இருக்கும் மதிப்பே தனி தானே..

“ அதனால எங்கள் மகளுடைய படிப்பு செலவை நாங்களே பார்த்து கொள்வோம்.. இது நான் என் பணத்திமிரில்   சொல்ல வில்லை..

நீங்கள் கொடுக்கும் இந்த ஸ்காலர்ஷீப் உண்மையில்  படிப்பு இருந்து பணம் கொடுக்க முடியாது இருக்கும் ஒரு மாணவனுக்கோ.. மாணவிக்கோ போனால் நல்லது என்ற வகையிலும்..

என் மகளுக்கு இடையில் இதோடு வேறு  பள்ளியில் படித்தால் இன்னும் அவள் எதிர்காலம் நல்ல முறையில் இருக்கும் என்று நான் நினைத்தால் மாற்றவும் தான்..” என்ற ஷ்யாமின் பேச்சை அந்த தலமை ஆசியர் மறுப்பதற்க்கு இல்லை என்பதால்..

அவர்களை மரியாதையோட விடை கொடுத்து அனுப்பி வைத்தார்..

அந்த பள்ளி  வளாகத்தை விட்டு காரில் ஏறி வெளி வரும் வரை சாருவின் பேச்சு மட்டுமே அங்கு கேட்டு கொன்டு இருந்தது..

ஷ்யாம் சாருவின்  கேள்விக்கு பதில் அளித்துக் கொண்டு வந்தாலும், இடை இடையே சக்தியின் யோசனை படிந்த முகத்தையும் பார்த்துக் கொண்டே தான் வந்தான்..

இடையில் ஒரு பெரிய உணவகத்தில் தான் காரை நிறுத்திய ஷ்யாம், சாருவை கையில் தூக்கி  கொண்டவன் சக்தியின் பக்கம் வந்து கதவை திறந்து விட்டு..

“ இறங்கு சக்தி..” என்று  அவன் சொன்னதும் தான்,  சக்தி கார்  உணவகத்துக்கு முன் நிற்கிறது என்பதையே  கவனித்தாள்…

“ நான் சாப்பிட்டு தான் வந்தேன்..” என்று சக்தி காரில் இருந்து இறங்காது சொல்லவும், ஷ்யாம் தன் கையில் இருந்த சாருவை காட்டி..

“ அவள்  படித்து படித்து எப்படி கலைத்து போய் இருக்கா பார்…நானும் ஆபிசில் இருந்து அப்படியே வந்துட்டேன்.. எனக்கும் பசிக்குது.. நீ எங்களுக்கு கம்பெனி கொடு..

கூடவே… சாருவை பற்றி சந்தோஷத்தோடு இடை இடையே உன் முகத்தில் வந்து போகும் யோசனைக்கு காரணம் என்னது என்றும்  சொல்.. அது  போதும்..” என்று சொன்னதோடு அவள் கை பிடித்து காரை விட்டு இறக்கியவன் அவள் தோள் மீது கை போட்டு கொண்டு அந்த உணவகத்திற்க்குள் நுழைந்தான்…

அவர்கள் உண்ணும் உணவை வர வழைத்து  சாப்பிட்டு முடிக்கும் வரை அங்கு எந்த வித பேச்சு வார்த்தையும் நடை பெறாது அமைதியாகவே கழிந்தது..

பின் தன் உதட்டை தன் கை குட்டை கொண்டு துடைத்தவன் சக்தியை பார்த்து..

“ இப்போ சொல்.. என்ன பிரச்சனை..?” என்ற கேள்விக்கு, சக்தி..

சாருவை காண்பித்து  வாய் அசைவில்..அவள் அப்பா என்று சொன்னவள் பின்.. மெல்ல.. “ அவங்களுக்கு இன்னும் குழந்தை இல்லை…” என்று சொன்னவள் பின் தயங்கிய வாறு..

“ எங்க தெருவில் இருக்கும் ஒருத்தவங்க சொன்னாங்க..  குழந்தைக்காக இரண்டு வருடமா ட்ரீட்  மெண்ட்டுக்கு  போயிட்டு இருக்காங்கலாம்.. இன்னும்  நல்ல ரிசல்ட் வரல… ட்ரீட் மெண்டில்  இரண்டு  தடவையும்  பைலியர் ஆகி விட்டது..”  என்று சொன்ன சக்தி 

பின் மீண்டும் தயங்கிய வாறு.. “ ஒரு வாரமா என்ன என்று தெரியல… அவன் நம்ம சாருவையே பார்த்துட்டு இருக்கான்.. நான் இவளை  ஸ்கூல் அழைத்துக் கொண்டு போகும் போது பின்னவே வரான்..” என்று சொல்லி முடித்தவள்..

“ நான் எதுக்கு பயப்படுறேன் என்று தெரியுது தானே..?” என்று கேள்வியும் கேட்டாள்..

அதற்க்கு  ஷ்யாம்… “ தெரியுது.. “  என்பதோடு கூடவே  “ இது பயப்படுற விசயம் தான்..” என்று சொன்னதுமே சக்தியின் முகத்தில் அவ்வளவு பதட்டம்.

என்ன இவன் இப்படி சொல்கிறான் என்பது போல் ஷ்யாமை பார்க்க.. அவனோ டேபுல் மீது இருந்த சக்தியின் கை மீது கை வைத்து அதில் அழுத்தம் கொடுத்தவன்..

“ நான் பயப்படுற விசயம் என்று சொன்னேன்.. ஆனால் என்னால் எதுவும் செய்ய முடியாது என்று சொல்ல வில்லையே.

லீகலா பார்த்தா அவனுக்கு தான் முழு உரிமை இருக்கு… அது தான் எப்படி இதை இல்லீகலா கொண்டு போவது என்று யோசித்து கொண்டு இருக்கேன்…

ஆனால் ஒன்று லீகலோ இல்லீகலோ சாருவுக்கு நாம தான் பெற்றோர்.. அவள்  நம்மிடம் தான் இருப்பா.. இதில் எந்த  மாற்றமும் இருக்காது.. என்னை நம்பு..” என்ற அவன் சொன்ன தைரியத்தில்  சக்தியின் முகம் தெளிவடைந்தது….

 

Advertisement