Advertisement

அத்தியாயம்…9…

ஷ்யாமிடம் பேச வேண்டி அவன்  அறைக்கு சென்ற சூர்யா அங்கு அவன் தன் தனம்மாவிடம்…

“ இல்லேம்மா  நீங்க சக்தியை அழச்சுட்டு போயே  எல்லாம் வாங்குங்க… அந்த நகையா…?” என்று கேட்டவன் பின் சிறிது  யோசித்து விட்டு..

“ தனம்மா நான் சொல்றேன்னு நீங்க தப்பா எடுத்துக்க கூடாது… உங்க கிட்ட இருப்பது எல்லாம் பாட்டிக்காலத்து நகைங்க.. அதை போய் சக்திக்கு கொடுக்கனும் என்று சொல்றிங்க..?” என்று ஷ்யாம் தொலை பேசியில் இந்த பக்கம் பேச்சுக்கு அந்த பக்கத்தில் இருந்து அவனின் தனம்மா என்ன சொன்னார்களோ..

அதற்க்கு ஷ்யாம்… “ ஆமாம் .. நான் சரியா தான் சொல்லி இருக்கேன்… உங்க நகை என்றால் அது பாட்டி காலத்து நகைங்க தானே…” என்று சொல்லி விட்டு  சிரித்த ஷ்யாம் ..

பின்.. “ தனம்மா நீங்க சொன்னது போல உங்க கிட்ட இருப்பது எல்லாம் கெட்டி கெடியா… கெம்பு கல் வைத்து பார்க்க நல்லா தான் இருக்கு.. நான் இல்லேன்னு சொல்ல வில்லை..

அதே போல் திரும்பவும் பழைய பேஷன் தான் இப்போ ட்ரேண்ட் ஆகிட்டு இருக்கு.. அதுவும் வாஸ்தவம் தான் தனம்மா.. ஆனா சக்தியோட விருப்பு என்று  ஒன்று இருக்குலே  தனம்மா..?” என்று இந்த பக்கம் இருந்த ஷ்யாம் நியாயம் கேட்டான்..

பின் சிறிது நேரம் அமைதிக்கு பின் ஷ்யாம் சிரித்துக் கொண்டே… “ ஆமா இனி சக்தி விருப்ப படி தான் நம்ம வீட்டில் எல்லாம் நடக்கும்.. நீங்களா நீங்களா..? “ என்று சிரித்துக் கொண்டே தன் தனம்மாவிடம் கல கல என்று  பேசிக் கொண்டு இருப்பவனின்  இப்போதைய மகிழ்ச்சியை நாம் கெடுக்க வேண்டுமா என்று யோசித்த சூர்யா..

பேச வந்ததை பேசாது திரும்ப பார்த்தவனின் யோசனையான முக பாவனையை பார்த்த ஷ்யாம் என்ன நினைத்தானோ   சூர்யாவிடம் ஜாடையாக இரு என்பது போல் சைகை காட்டி  விட்டு தன் தனம்மாவிடம்..

“ ஈவினிங் வீட்டுக்கு வந்து பேசுறேன் தனம்மா.. ஆ நியாபகம்  இருக்கு … புடவை எடுக்கவும் நகை எடுக்கவும் இன்னும் இரண்டு நாள் இருக்கே தனம்மா.. ஆ எவ்வளவு அமெண்ட் ஓ. சரி தனம்மா சரி  சரி..” என்று அவசர அவசரமாக தன் பேச்சை முடித்துக் கொண்ட   ஷ்யாம் சூர்யாவிடம்..

“ என்ன விசயம் சூர்யா..” என்று கேட்டான்..

சூர்யா விசயம் சொல்ல தான் வந்தான்.. ஆனால் இப்போது அந்த விசயத்தை சொன்னால் ஷ்யாமின் இந்த இதமான மனநிலை மாறி விடுமே என்று யோசித்தவனாக..

“ ஒன்னும் இல்லையே ஷ்யாம்..” என்று மறைக்க பார்த்தவனிடம்.

“ சூர்யா..” என்று அவனின் பெயரை அழுத்தம் திருத்தமாக  ஷ்யாம் அழைத்த  பாங்கிலேயே சூர்யா சட்டென்று..

“ உங்க அம்மா போன் செய்தாங்க ஷ்யாம்..” என்று சொல்லி  விட்டான்…

ஷ்யாமோ.. “ இப்போ அவங்க கிட்ட  தானே பேசிட்டு இருந்தேன்..” என்று சொல்லி கொண்டு வந்தவன் பின் புரிந்தவனாக சூர்யா நினைதத்து போலவே இவ்வளவு நேரமும் இலகுவாக இருந்த அவன் முகம் இறுகி விட்டது…

எதுவும் பேசாது தன்னையே பார்த்து கொண்டு இருந்தவனிடம் அவன் எதுவும் கேளாது  சூர்யாவே…

“ அவங்க உங்களை பார்க்கனும் என்று சொன்னாங்க ஷ்யாம்…” என்று சொன்னவன் இதற்க்கு அவன் என்ன சொல்வானோ என்று  சூர்யா ஷ்யாம் முகத்தை பார்த்தான்..

ஷ்யாமோ எதுவும் பேசாது அதே முகம் பாவனையோடு தன்னையே பார்த்துக் கொண்டு இருப்பதில் கெளசல்யா தன்னிடம் பேசிய  மிச்சம்  மீதம் பேச்சான…

“  அவங்களை  பணம்  கொடுக்க வைத்த்திற்க்கு  ரொம்ப நன்றி சொன்னாங்க ஷ்யாம்.. நீ  எந்த ஸ்டெப்பும் எடுத்து இருக்கலேன்னா அவங்க குடும்பத்தோட தற்கொலை தான் செய்து இருந்து இருப்பாங்கலாம்.. ஒரே ஒரு முறை உன்னை பார்த்தா மட்டும் போதும் என்று சொல்லிட்டு ரொம்ப அழுதாங்க ஷ்யாம்…” என்று தான் சொல்ல வேண்டியதை அனைத்தையும் சூர்யா கட கட என்று சொல்லி முடித்து விட்டான்…

சூர்யாவின் இவ்வளவு பேச்சையும் அமைதியாக முகம் இறுக்கத்தோடு கேட்டுக் கொண்டு இருந்த ஷ்யாம் அவன் பேசி முடித்ததும்,  தன்னையும் மீறி எழுந்த கோபத்தை அடக்கியவனாக..

“ இனி ஒரு முறை அவங்க இங்கு போன் செய்ய  கூடாது… அவ்வளவு தான்..” என்று சொன்னவன்..

நீ போ என்பது போல் சைகை காட்டியவன் சூர்யா சென்ற பின் என்ன தான் தன் கோபத்தை அடக்க நினைத்தாலும், அது அடங்காது போனதில் கண்கள் இரண்டும் சிவந்து போய் தாடைகள் இறுக தன்னை அடக்க எழுந்து அந்த அறைக்குள் நடந்தான்…

 பின் அங்கு இருந்த தண்ணீரை தன் சட்டை நனைவது கூட பொருட் படுத்தாது,  கட கட என்று தன் வாயில் கொட்டி தீர்த்தான்…

அப்போதும் அடங்காது தன் முன் இருந்த மேஜையை தட்டியவன்  பல்லை கடித்துக் கொண்டே…

“ என்னை ஒரே ஒரு தடவை பார்க்கனுமாம் அழுவுறாங்கலாம்.. நானும் அழுதேன்.. அம்மா அம்மா என்று சொல்லிட்டு நான் அழுதேன்.. வருவாங்க வருவாங்க என்று காத்துட்டு இருந்தேன். 

ஆனா அவங்க அவங்க புருஷன் கூட  கல்யாணம் ஆனதும் ஹனிமூன் போய் இருந்தாங்க.. 

அப்போ நான் ஹாஸ்பிட்டலில் இருந்த போது.. இப்போ பார்க்கனுமாம்… எதுக்கு எதுக்கு.. நான் தேடின போது  வராதவங்க எப்போதும் என் முன் வர கூடாது..” என்று  தனக்கு தானே சொல்லிக் கொண்டவனுக்கு, கோபம் போவேனான் என்று இருந்தது..

 என்ன..?  செய்யலாம் என்ன செய்யலாம் என்று  அவன் யோசிக்கும் போது தான் அவன் கை  பேசி ஒலித்தது…

அவன் இருக்கும் மன நிலைக்கு அந்த பேசியை  ஏற்க்கும் மன நிலை  இல்லாது.. அது அடித்து ஓயும் வரை அதை எடுக்காது  இருந்தான்…

அதுவும்  விடுவேனா என்பது போல் தொடர்ந்து அவனின் கைய் பேசி அவன் கையில்  எடுத்தால் தான் விடுவேன் என்பது போல் தொடர்ந்து  தொல்லை கொடுத்ததில்..

யார்..?  என்று  கூட பாராது தன் குரலையும் மாற்றது… “ என்ன..?” என்று இரண்டு முறை அழைத்தும் எடுக்கவில்லை என்றால் விட வேண்டியது தானே.. அப்படி என்ன தலை போகும் காரியம் என்று  கோபத்தில்  கேட்டான்…

ஷ்யாமின் கோபக் குரலுக்கு  பேசியின் அந்த பக்கம் இருந்தவர்கள் எதுவும் பேசாது அமைதி காக்கவும் அப்போது தான் ஏதோ ஒரு சந்தேகத்தில் பேசியில் அழைத்தது யார்..? என்று பார்த்தான்..

சக்தி என்ற பெயரை பார்த்ததும் பேசியிலேயே தன் நெற்றியில் அடித்துக் கொண்டவன்..

பின் தணிந்த குரலில் “ சாரி சக்தி சாரி.. இங்கு கொஞ்சம் டென்ஷன்.. அது தாய் யார்…?  என்று  பாராது கத்தி விட்டேன்..  திரும்பவும் சாரிடா..” என்று ஷ்யாம் மன்னிப்பு வேண்டவும்..

இப்போது கை பேசியில் அந்த பக்கத்தில் இருந்தவளிடம் இருந்து களுக் என்று சிரிப்பு சத்தம் கேட்கவும்..  ஒரு நிமிடம் குழம்பிய ஷ்யாம்..

“ ஹாய் சாரு பேபியா…?” என்று சந்தோஷமாக கேட்கவும்..

இப்போது “ ஆமா நான் சாரு தான் அங்… ஷ்யாம் அப்பா..” என்ற சாருவின் அழைப்பில் இவ்வளவு நேரமும் இருந்த இறுக்கம் அவனுக்கு மெல்ல தளரலாயிற்று..

“ இ..ப்போ என்னை  எப்படி கூப்பிட்ட…? ”  சந்தோஷம் மிகுதியில்  உணர்ச்சி  வசப்பட்டவனாக கேட்டான்..

அதற்க்கு சாரு திரும்பவும்.. “ ஷ்யாம் அப்பா..” என்று அழுத்தம் திருத்தமாக சொன்னவள்.. பின் அவளே..

“ சக்தியம்மா தான் இனி உங்களை அங்கிள் என்று கூப்பிட கூடாது…  ஷ்யாம் அப்பா என்று தான் கூப்பிடனும் என்று சொன்னாங்க…” என்று சொல்லி விட்டு பின் அவளே..

“ பிடித்து இருக்கா  ஷ்யாம் அப்பா..?” என்று கேள்வியும் எழுப்பினாள்..

“ பிடித்து இருக்கு.. ஆனால் ரொம்ப எல்லாம் பிடிக்கல..” என்று ஷ்யாம் பதில் அளிக்க..

உனக்கு நான் சளைத்தவள் இல்லை என்பது போல் சாரு.. “ உங்களுக்கு ரொம்ப பிடிக்க நான் எப்படி அழைக்கனும்…” என்று கேட்டாள்..

அதற்க்கு ஷ்யாம் சிரித்துக் கொண்டே.. “ ஷ்யாமை விட்டு விட்டு அப்பா மட்டும் கூப்பிடு பேபி.. அதே போல் சக்தியை விட்டு அம்மா என்று  கூப்பிடு..” என்று சொன்னவனுக்கு சாரு உடனே..

“ சரி அப்பா..” என்று சொன்னவள் பின் கேட்டாளே ஒரு கேள்வி..

“ நீங்க மட்டும் ஏன் அப்பா பெரிய பாட்டியை தனம்மா என்று  கூப்பிடுறிங்க..” என்று..

சாருவின் கேள்வியில் ஷ்யாம் ஒரு நிமிடம் திணறி தான் போனான்.. இப்போ இருக்கும் குழந்தைங்க கேட்கும் கேள்விக்கு, பெரியவங்களால் பதில் சொல்ல முடியாது என்று எல்லோரும் சொல்லி கேட்டு இருக்கேன்..

நம்ம பேபி ஏற்கனவே எக்ஸ்ட்ரா பிரிலியண்ட்.. இவள் கேட்கும் கேள்விக்கு பதில் அளிக்கவே நான் தினம் லைப்ரேரி போக வேண்டி இருக்கும் போலவே என்று சிறிது நேரம் திணறினாலும்..

பின் .. “ நான் உன்னிடம் சொன்னது போல் என் சின்ன வயதில் உன் பெரிய பாட்டி சொல்லவில்லையே பேபி..” என்று ஏதோ சொல்லி  சமாளித்து விட்டான்..

பின் சாரு அழைத்த காரணமாக.. “ அப்பா நீங்க போன எடுக்கலேன்னதும் அம்மா வேண்டாம் அவர் ஏதோ வேலையா இருப்பார்.. 

உங்களை டிஸ்ட்டப் பண்ணாதே என்று சொன்னாங்க அப்பா.. ஆனால் பேரன்ஸ் மீட்டிங்கில் என்னுடைய  பேரன்ஸ்சான நீங்க இரண்டு பேரும் வருவது தானே அப்பா அது  பேரன்ஸ் மீட்டிங் ஆகும்..

அது தான் அப்பாவை டிஸ்ட்டப் பண்ணாதே என்று அம்மா சொல்லியும், நான் உங்களை டிஸ்ட்டப் பண்ண கூப்பிட்டு விட்டேன்..” என்ற மகளின் பேச்சில் ஷ்யாம்..

“ இது டிஸ்ட்டப் இல்லேடா…ஸ்வீட்  டாக்கிங்..” என்று சொன்னவன்…  பின் எந்த நேரம் பேரன்ஸ் மீட்டிங் என்று கேட்டு கொண்டவன் சக்தியிடம் கொடு என்று சொன்னவன்..

சக்தியிடம்.. “  பேபி உன் பக்கத்தில் இருக்காளா…?” என்று கேட்டு இல்லை அவளை சக்தியின் அம்மா சாப்பாடு ஊட்ட அழைத்து கொண்டு சென்று இருக்கிறார்கள் என்று தெரிந்த பின்..

“ பேபி கிட்ட என்னை டிஸ்ட்டப் பண்ணாதே என்று சொன்னியாமே… “ என்று கேட்டதற்க்கு,  சக்தி “ இல்ல  அவள் போன் செய்யும் போது சொல்லலே… அதை நீங்க எடுக்காம விடவும் தான் நீங்க பிஸியா இருப்பிங்க எதற்க்கு  டிஸ்ட்டப் செய்யனும்..

மிஸ் கால் பார்த்தா நீங்களே கூப்பிடுவிங்க என்று சொன்னேன்..” என்ற சக்தியின் விளக்கத்தில் ஷ்யாமின் மனது வேகமாக கணக்கு போட்டது…

எதிர் காலத்தில்  எந்த வித பிரச்சனைகளையும் தான் சொல்லாமலேயே புரிந்து கொள்வாள்… வீண் மன பிரச்சனைகள் தங்களுக்கிடையே வராது என்று நினைத்து கொண்டவனாக..

காதல் மொழி இல்லை என்றாலும், அந்த  சிறிது நேரம் அவர்களுக்குடையே நடந்த உரையாடல்கள் இருவருக்கும் மன நிம்மதியோடு,  இதழ்களுக்கு இடையே சிறு புன்னகை பூக்கும் படியும் செய்தது.. 

Advertisement