Advertisement

“ நானும் விளையாட்டுக்கு எல்லாம் பேசல சக்தி.. சீரியசா தான் பேசுறேன்.. ஏன் நான் உன்னை காதலிக்க கூடாதா..? “ என்று கேட்டான்.

அதற்க்கு சக்தியும்.. “ ஏன் கூடாது தாரளமாவே காதலிக்கலாம்..” என்ற சக்தியின் பேச்சில் ஷ்யாம் அடுத்து இவள் ஏதாவது வில்லங்கமாக தான் பேச போகிறாள் என்று புரிந்தவனாக அவள் பேச்சுக்கு எந்த பதிலும் சொல்லாது, அவள் அடுத்து என்ன பேச போகிறாள் என்ற பாவனையில் தான் ஷ்யாம் சக்தியின் முகத்தையே பார்த்து இருந்தது…

சக்தியும் தன் பேச்சுக்கு அவன் ஏதாவ்து பேசுவான் என்று என்று எதிர் பார்த்தவளாக, தான் பேசியதும் தொடர்ந்து பேசாது சிறிது நேரம் அவன் முகத்தை அமைதியாக சக்தியும் பார்த்து இருந்தாள் தான்..

ஆனால் அவனும் தன் போலவே தன் பேச்சுக்கு தன் முகத்தையே பார்த்துக் கொண்டு இருப்பதை பார்த்து, ஏனோ சக்திக்கு இவ்வளவு நேரமும் இருந்த தீவிர முக பாவனை மாறியவளாக…  சட்டென்று சத்தமாகவே  சிரித்து விட்டாள்..

சரியாக அதே சமயம் சக்தியின் அன்னை,, என்ன இவர்கள் பேச போய் இவ்வளவு  நேரம் சென்றும், என்ன ஏது என்று சொல்ல  வீட்டுக்குள் வரவில்லையே என்று வெளியில் வந்து எட்டி பார்த்த  தாட்சாயிணின் கண்ணுக்கு,  தன் மகள் வருங்கால மாப்பிள்ளையை பார்த்து சிரித்துக் கொண்டு இருப்பதை பார்த்து முகத்தில் மகிழ்ச்சி  பொங்க மீண்டும் வீட்டுக்குள் நுழைந்தார்..

 இந்த சந்தோஷமான விசயத்தை ஷ்யாமின் தாத்தா பாட்டியிடம் சொல்ல…

இதை சக்தி கவனிக்காது இருந்தாலும், ஷ்யாம் கவனித்து விட்டு இப்போது அவன் சிரிக்க, சக்தி அவன் சிரிப்பதை மனது நிறைவுடன் பார்த்து இருந்தாலும், அவன் சிரிப்பதற்க்கு உண்டான  காரணம் தெரியாது கொஞ்சம் குழம்பி போன முகபாவனையுடன் தான் ஷ்யாமை பார்த்து கொண்டு இருந்தாள்..

அதை  புரிந்து கொண்ட ஷ்யாம்.. “ இல்ல இப்போ கொஞ்ச நேரம் முன் நீ எதுக்கு  என்னை பார்த்து சிரித்தே என்று தெரியல.. ஆனா வெளியில் வந்து எட்டி பார்த்த உன் அம்மா கண்ணுக்கு நீ என்னிடம் சிரித்து பேசுவதை பார்த்தவங்களுக்கு அர்த்தம் ஒன்னா தான் இருக்கும்.

அது உனக்கு என்னை  பிடித்து இருக்கு என்று தான். அதனால் தான் அதை என் தனம்மா, அப்பா கிட்ட சொல்ல அவ்வளவு சந்தோஷமா வீட்டுக்குள் போறாங்க..” என்று ஷ்யாம் தன் சிரிப்போடு அவன் கணித்ததை சொன்னான்…

இப்போது சக்தியின் முகத்தில் மகிழ்ச்சியும் இல்லை.. அதே போல் குழம்பிய முக பாவனையும் இல்லாது, முகத்தில்  தெளிவு தெரிவது போல் அவள் பேச்சும் தெளிவாக..

“ இப்போ நான் உங்களை கல்யாணம் செய்ய மறுக்க எந்த காரணமும் கிடையாது.. இன்னும் கேட்டா உங்களை நான் கல்யாணம் செய்து கொள்வது எனக்கு ஜாக்பார்ட் தான் என்று நான் சொல்வேன்.. ஆனா உங்களுக்கு” என்று தொடர்ந்து பேசிக் கொண்டு இருந்த சக்தி தன் பேச்சை பாதியில்  விடுத்து ஷ்யாம் முகத்தை பார்த்தாள்..

சக்தி பேச பேச ஒரு புன் சிரிப்போடு அவள் பேச்சை கேட்டுக்   கொண்டு இருந்த  ஷ்யாம் இப்போது..

“ நீ எதை வைத்து என்னை கல்யாணம் செய்வது  உனக்கு ஜாக் பார்ட் என்று சொன்னேன் என்று எனக்கு தெரியவில்லை..

ஆனா என்னை பொறுத்த வரை… முதல்ல சொன்ன காதலோ .. இல்லை நீ சொன்னது போல் நான் உன்னை கல்யாணம் செய்து கொள்வது ஜாக் பார்ட்டோ என்பதை விட.. ஏனோ உன்னை கல்யாணம் செய்துக்கோ தோனுச்சி… அதுக்கு பிடித்தம் என்று கூட சொல்லலாம்.” என்று ஷ்யாம் சொல்லவும்..

இப்போது சக்தி… “ இப்போ இருக்க இந்த அந்த பிடித்தம் எதனால்  என்று என்னால் கொஞ்சம் கெஸ் பண்ண முடியுது…

மகனை விட்டு உங்க அம்மா சாரி உங்க மனசு இந்த பேச்சு வேதனை  கொடுக்கும் தான்.. ஆனால் இதை நாம பேசி தான் ஆகனும்…” என்று மன்னிப்பு குரலில் பேசியவள்..

பின்.. “ அவங்க உங்களை விட்டுட்டு வேறு வாழ்க்கை அமைத்து கொண்டாங்க.. நான் என் எக்ஸ்  கிட்ட என் அக்கா குழந்தைக்காக அவனோடான என் திருமணத்தை மறுத்ததால், உங்களுக்கு என் மீது பிடித்தம் உண்டாகி இருக்கலாம்..” என்று சொல்லி விட்டு சக்தி ஷ்யாம் முகத்தை பார்த்தாள்..

அதற்க்கு ஷ்யாமும் உடனே ஏற்றுக் கொண்டது போல்..” இருக்கலாம்..” என்று பதில் அளிக்கவும்..

சக்தி.. “ இதை வைத்து மட்டும் நாம கல்யாணம் செய்துக் கொண்டால், அந்த வாழ்க்கை மகிழ்ச்சியா போகும் என்று நீங்க நினைக்கிறிங்களா…?” என்ற சக்தியின் கேள்விக்கு  ஷ்யாம் உடனே..

“ கண்டிப்பா.. நம்ம வாழ்க்கை  மகிழ்ச்சியா போகும் என்று எனக்கு நம்பிக்கை இருக்கு..  வெறும் தோற்றம்.. பின் வசதி.. இல்ல படிப்பு.. அதுவும் இல்லேன்னா சொந்தம் விட்டு விட கூடாது இப்படி எதோ ஒரு காரணத்துக்காக  கல்யாணம் செய்தவங்க எல்லாம் சந்தோஷமா இருக்கும் போது..

 உன் குணம் எனக்கு  பிடித்து.. பரவாயில்லை  பார்க்கவும் நல்லா தான் இருக்கா… என்று என் கண் என்  மனதுக்கு தகவலாக உறுதி அளித்த  பின்,

 நான் உன்னை கல்யாணம் செய்துக் கொள்ளலாம் என்று எடுத்த என் முடிவு நம் வாழ்க்கையை  மகிச்சியா  கொண்டு செல்லும் தான் எனக்கு தோன்றுக்கிறது..” என்ற அவனின் பேச்சை..

“ ஓ அப்படியா..?” என்பது போல் கேட்டுக் கொண்டு இருந்த சக்தி மீண்டும் தன் சந்தேகமாக..

“ என் குணம் அதாவது நான் சாருவுக்காக நான் ப்ரேக்கப் செய்தது  பிடித்த உங்களுக்கு இதே காரணத்துக்காக நாளை பிடிக்காது போய் விட்டால்…?” என்று சந்தேகம் எழுப்பி விட்டு  சக்தியும் ஷ்யாமை பார்த்தாள்…

“ எனக்கு புரியல சக்தி.. ஆனா  ஏதோ என் கிட்ட  இருந்து ஒரு உறுதிய எதிர் பார்க்குற வரை எனக்கு புரியுது.” என்ற அவன்  தன்னை அறிந்துக் கொண்டவனின் பேச்சில் சக்திக்கு உண்மையாகவே ஒரு மன நிறைவு வந்து விட்டது என்று தான் சொல்ல வேண்டும்..

பரவாயில்லை.. இவன் சொன்னது போல் இவனோடான தன் வாழ்வு  மகிழ்ச்சியாக போகவில்லை என்றாலும், கண்டிப்பாக சுமூகமாக போகும் என்று நினைத்தாள்.. இருந்தாலுமே தன் சந்தேகத்தை தெளிவு படுத்திக் கொள்ளவும் அவள் தவரவில்லை..

“ ம் நீங்க சொன்னது உண்மை தான்..  இப்போ என் மகளாக பார்க்கும் சாருவை உங்களுக்கு பிடித்து இருக்கு.. நாளைக்கு இந்த பிடித்தமே வேறு மாதிரி மாறலாம்..

இல்ல என் ப்ரேக்கப் அதை பெரியதாக தெரியாது.. அவ்வளவு ஹன்சமானவனை குழந்தைக்காக தூக்கி எரிந்த  என் முந்தைய காதல் கூட பின்னால் உங்கள் மனதை உறுத்தாது என்பது என்ன நிச்சயம்..?” என்று சக்தி கேட்க…

அதற்க்கு ஷ்யாம்.. “ இதற்க்கு என்னிடம் கடன் வாங்கியவங்க கிட்ட கைய்யெழுத்து வாங்குவது போல் உன் கிட்ட  நீ சொன்னது எல்லாம் எழுதி உறுதி மொழி பத்திரம் எல்லாம் கொடுக்க முடியாது.. 

ஏன்னா அப்படி கொடுத்து விட்டு அதை நான் கடைப்பிடிக்கவில்லை என்றாலும், உன்னால் என்னை எதுவும் செய்ய முடியாது..

அது உனக்கும் தெரியும்…  ஒரு சிலதை  நாம் வாழ்ந்து பார்த்து தான் அறிந்துக் கொள்ள முடியும்..” என்று சொன்னவன்.

பின் ஏதோ தோன்றியவனாக… “ உன் அம்மா உன் அப்பா குணசேகரன் என்று சொன்ன போது எந்த வித சந்தேகமும் இல்லாது நம்பி இருப்ப தானே..

இப்போ அதே நம்பிக்கையை நீ என் மீது வைக்கலாம். நான் உன்னிடம் சண்டை போட மாட்டேன்.. அதே போல் நமக்குள் எந்த வித பிரச்சனையும்  வராது என்று எல்லாம் நான் சொல்ல மாட்டேன்..

ஆனால் ஒன்று சொல்வேன்.. சாருவை வைத்தோ உன் அந்த எக்ஸ் வைத்தோ நம்மிடம் எப்போதும் பிரச்சனை வராது என்பதை..” என்று சொல்லி  விட்டு ஷ்யாம்  இப்போது அவள் பதிலுக்காக, சக்தியை  பார்க்காது அன்னாந்து வானத்தை பார்த்தான்.

அவன் காதில் இலைகள் மிதி படும் ஒசையும், கூடவே மெல்லிய சலங்கையின் ஓசையும் கேட்டு பின் போக போக அந்த ஓசை குறைந்து பின் மறைந்தும் போனது..

ஆனால் அவன் வானத்தை பார்த்துக் கொண்டு இருந்த தன் பார்வையை மட்டும் மாற்றாது இருந்தவன் அருகில், தன் வயதையும் மறந்து ஓடி வந்த  அவனின் தனம்மா..

அவன் வாயில் சீனியை கொட்டி.. “ பேத்தி எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் கல்யாணத்தை  வைக்க  சொல்லிட்டா ஷ்யாம்..” என்று மகிழ்ந்து போ தன் சுருக்கம்  விழுந்த கை கொண்டு ஷ்யாமின் கன்னத்தை பற்றி  தன் வரண்ட உதடு கொண்டு  அவனுக்கு  முத்தம் மிட..

அந்த காட்சியை மனது நிறைவோடு  தன் கையில் சாருவை பிடித்துக் கொண்டு பார்த்து கொண்டு இருந்தாள் ஷ்யாமின் அனைத்தும் சக்தியாக மாறப்போகும் நம் சக்தி…

 

 

Advertisement