Advertisement

அத்தியாயம்….8…2

தோட்டத்திற்க்கு வந்தவர்கள் எதுவும் பேசாது ஒரு சில நொடி ஒருவர் பேசட்டும் மற்றவர் அமைதியாக இருக்க, அங்கு நேரம் தான் சென்றதே ஒழிய இருவரும் வாய் திறப்பது போல் காணவில்லை..

சிறிது நேரம் அமைதி காத்த  ஷ்யாம், பின் பேச்சை ஆரம்பிக்கும் போதே தோட்டத்தை சுற்றி பார்த்தவன்..

“ பரவாயில்லை இருக்கும் கொஞ்ச இடத்தை  கூட அழகா பயனுள்ளதாக ஆக்கி இருக்காங்க உங்க அம்மா…” என்று அங்கு இருக்கும்  பூ செடிகளையும், காய் கனி  செடிகளையும் பார்த்து பாராட்டும் வகையாக  தன் பேச்சை ஆரம்பித்தான்..

ஆனால் அதற்க்கு எதிரொலியாக சக்தியிடம் இருந்து எந்த பதிலும் இல்லாது  போக,  இப்போது முழுவதும் சக்தியின் முகம் பார்ப்பது போல் திரும்பி அவளை பார்த்தான்..

பார்த்தவன் கண்ணுக்கு தெரிந்தது தன் பாராட்டில் மகிழாது தான்  பார்த்த பூ தோட்டத்தையும். காய் வகைகளையும் பார்த்து ஒரு விரக்தியாக  புன்னகை புரிந்த  சக்தியும்  இப்போது நேருக்கு நேர் ஷ்யாம் முகத்தை பார்த்தாள்..

பின்.. “ இப்போ எல்லாம் அம்மா இந்த தோட்டத்தை பார்ப்பது இல்ல.. ஏன் இப்போ எல்லாம் அவங்க வெளியில் வந்து  நிற்பது கூட கிடையாது…” என்று அவள் பேசிக் கொண்டு இருக்கும் போதே, எதிர் வீட்டின் முன் ஒரு கார் வந்து நின்றது…

அதில் இருந்து இறங்கியவனின் பார்வை இந்த வீட்டையே  பார்த்த வாறு அவன் வீட்டின் கேட்டை திறந்தான்..  பின் அவன் காரை அந்த வீட்டிக்குள் விட்ட பின், அந்த வீட்டின் கேட்டை மூடும் போது கூட அவன் பார்வை இங்கு தான்..

இங்கு தான் என்று சொல்வதை  விட,  இவர்கள் பக்கம் தான் நிலைத்து இருந்தது… குறிப்பாக தங்கள் பக்கம் தான் அவன் தன் பார்வையை செலுத்திக் கொண்டு இருந்தான்.. தன்னையும், சக்தியையும் ஒரு அளவிடும் பார்வை பார்த்து விட்டு, அதுவும் குறிப்பாக அவன் வீட்டுக்குள் நுழையும் போது தன்னை அவன் அதிகம் கவனித்து சென்றது போல் ஷ்யாம் உணர்ந்தான்..

அசன் வீட்டுக்குள் நுழையும் வரை ஷ்யாமும் எதுவும் பேசாது அவனையே பார்த்து கொண்டு இருந்தவன், அவன் சென்ற பின் தான் சக்தியை  ஷ்யாம் கவனித்தான்.

ஏதோ தன்னை பார்த்து பேச ஆரம்பித்த சக்தி, அந்த எதிர் வீட்டுக்காரனின் வரவில் அமைதியானதை கவனித்தவன் தான் வந்த விசயத்தை மறந்தவனாக..

“ சக்தி அவன்  உங்க வீட்டுக்கு ஏதாவது  பிரச்சனை செய்யிறானா..? குறிப்பா உனக்கு..” என்று  ஷ்யாம் கேட்டான்..

அதற்க்கு.. “இல்லை..” என்று தலையாட்டி மறுத்த சக்தி..

“ அவன் செய்ய வேண்டியது எல்லாம் செய்து முடித்து விட்டான்.. இனி புதுசா என்ன இருக்கு செய்ய..?” என்று சொன்ன சக்திக்கு  அப்போது புரியவில்லை..

தன் அக்காவின்  முன்னால்  கணவன்,  இன்னும் செய்ய காத்து கொண்டு இருக்கிறான் என்று..

சக்தியின் பேச்சில் ஷ்யாமின் முகம் குழப்பத்தை பூசிக் கொண்டது.. ஆனால் எதுவும் கேட்கவில்லை.. எது என்றாலும்  அவளே சொல்லட்டும் என்று கை கட்டி பேசு நான் கேட்கிறேன் என்பது போல் அவளையே பார்த்த வாறு நின்று கொண்டு இருந்தவனை பக்கத்தில் இருந்த கல் மேடையை காட்டி..

“ உட்காரலாமா…?” என்று சக்தி ஷ்யாமிடம் கேட்டுக்  கொண்டே  அந்த பெரிய மேடையில் ஒரு பக்கம் அவள் அமர்ந்து கொண்டு பின்  அவன் அமர தாரளமாக இடம் கொடுத்தவளுக்கு ஒரு நன்றியை தெரிவித்து விட்டு..

ஷ்யாமும் அவளுக்கும் தனக்கும்  போதிய  இடைவெளி கொடுத்து விட்டு அமர்ந்து கொண்டான்…

இப்போது ஷ்யாமின் முகத்தை சக்தி நேராக பார்த்தவள்..  “ நான்  சொன்னது உங்களுக்கு புரியல என்று நினைக்கிறேன்…” என்று சொன்னவள் பின் எதிர் வீட்டின் பக்கம்  கை காட்டி…

“ அவன் தான் சாருவின் பிறப்புக்கு காரணம் ஆனவன்…” என்று சொன்னவளின் பேச்சில்,  ஒரு நிமிடம்  அதை உள் வாங்கி கொண்டு புரிந்தவன் உடனே சக்தியின் முகத்தை பதட்டத்துடன்  பார்த்தான்..

“ குழந்தையை வைத்து ஏதாவது பிரச்சனை செய்யிறானா..?” என்று  பதட்டத்துடன் கேட்டான்..

“ம்…” என்று மறுப்பாக தலையாட்டிய சக்தி.. “ அவனுக்கு குழந்தை பாசம் இருந்து இருந்தால், ஏன்  சசியை விட்டு  இருக்க போறான்..” என்ற சக்தியிடம்..

“ யார் ச்சி..?” என்ற ஷ்யாமின் கேள்விக்கு சக்தி.. “ என் அக்கா சசி கலா.. இதோ இந்த தோட்டம் அழகா இருக்கு என்று சொன்னிங்களே.. இதை அம்மா ஆசை ஆசையா அப்பா கிட்ட கேட்டு வெச்சது.. இதில் விலையும் காய் அவ்வளவு விலை எல்லாம் இல்ல..

ஆனால் அம்மா இதில் இருந்து வரும் அந்த இரண்டு கத்திரிக்காய்.. மூன்று பச்சமிளகாய்  நான்கு வெண்டைக்காய் அதை   பரித்து எங்க கிட்ட காட்டும் போது ஏதோ பிசினசில் கோடி கோடியா லாபம் வந்தது போல் அவ்வளவு மகிழ்ச்சியா அப்பா கிட்ட சொல்லுவாங்க..

அப்பாவும்  அம்மாவுக்கு  தக்கப்படி தான் பேச்சு  இருக்கும்… அம்மாவின் எந்த ஒரு செயலையும் அப்பா குறச்சி  இது என்ன என்பது போல் பேச மாட்டார்..

அப்படி பார்த்து பார்த்து இந்த தோட்டத்து பக்கமே அம்மா இப்போது வரது கூட இல்ல.. ஏனோ  இந்த தோட்டத்தினால் தான் அக்கா எதிர் வீட்டை பார்த்தா.. அதனால் தான் காதல் பின் அவள் இறப்பு அதன் பின் அப்பா இறப்பு என்று இந்த வீடு.. குறிப்பா இந்த தோட்டமே அம்மாவுக்கு பிடிக்காது போய் விட்டது…” என்று சக்தி அவள் அம்மா அப்பாவின்  வாழ்ந்த வாழ்க்கையை சொல்லும் போது அவள் முகத்தில் வந்து போன அந்த பெருமிதம்..

பின் அக்காவின் இறப்பு தந்தையின்  இறப்பு, அதன் பின் இந்த வீட்டை பற்றி பேசும் போது,  அவள் குரலில் தெரிந்த அந்த வெறுமை அனைத்தையும் பார்த்த ஷ்யாம்..

ஏனையதை  விட்டு விட்டு… “ உங்க அம்மாவும், அப்பாவும்  அந்நியோனிய தம்பதிகளா வாழ்ந்தாங்க போல..” என்ற ஷ்யாமின் அதிசயமிக்க கேள்வியில்..

இது என்ன கேள்வி என்பது போல் சக்தி பார்த்தாலும்.. “ ஆமாம்.. அப்பாவுக்கு அம்மான்னா அவ்வளவு பிடித்தம்.. எந்த அளவுக்கு பிடித்தம் என்றால், எங்களுக்கு சுமாரா தெரியும் அம்மா சமையல்.. அவருக்கு சூப்பாரா தெரியும் அளவுக்கு  அம்மாவின் மீது அப்பாவுக்கு பிடித்தம் இருந்தது…” என்று கண்கள் மின்ன பேசியவளின் பேச்சில், ஷ்யாம்..

“ யூ ஹார் லக்கி கேல்..” என்று சொன்னவனின் குரலில் தெரிந்த  ஏக்கத்தில் இப்போது சக்தி ஷ்யாம் முகத்தை பார்த்தாள்..

ஷ்யாம் கல் மேடையில் விழுந்து இருந்த   ஒரு குச்சியை கையில்  எடுத்துக்   கொண்டு அங்கு இருக்கும் தழையின் மீது அடித்த வாறே..

“ என் கூட வந்து இருக்கிறவங்க என் அம்மா அப்பா கிடையாது..” என்றவனின் பேச்சில் சக்தி வாய் திறந்து பேசவில்லை என்றாலுமே, மனதுக்குள்..

“ ஓ அது தான்  ரொம்ப வயதானவங்களா தெரியிறாங்களா..?” என்று  நினைத்துக் கொண்டள்..

ஷ்யாமும் அதையே தான் சொன்னான்.. “ நீ கூட  நினைத்து இருக்கலாம் என்ன வயதானவங்களா இருக்காங்களே என்று..

அவங்க என் அப்பாவோட அம்மா அப்பா… அதாவது எனக்கு தாத்தா பாட்டி..  என் அப்பா இறந்ததால் இவங்க எனக்கு அப்பா அம்மாவா ஆகிட்டாங்க..” என்றனின் பேச்சில் சக்தி..

“  உங்க அம்மா..” என்று  சொல்ல போற விசயம் நல்லது போல் இல்லை என்றாலும்,  தயங்கி என்றாலும் கேட்டு விட்டாள்..

ஷ்யாமும் அனைத்தும் ஒன்று விடாது உள்ளது உள்ளப்படியே சொன்னவன்..

“ எனக்கு உன்னை பிடிக்க காரணம் என் வாழ்க்கையில் நான் கடந்து வந்த பாதையா கூட இருக்கலாம்..” என்ற அவனின் பேச்சில் சக்தி கேள்வியாக ஷ்யாமின் முகத்தை பார்த்தாள்..

அவள் பார்வையில் ஷ்யாமின் பேச்சு கொஞ்சம் தடைப்பட்டாலும்,  சக்தியின் முகத்தை நேராக பார்த்து வாறே..

“ உங்க அக்கா குழந்தைக்காக  உங்க காதலை நீங்க தூக்கி போட்டது கூட உங்க மேல எனக்கு ஒரு பிடிப்பு வர காரணமா இருக்கலாம்..”

அவள் முந்தைய காதலை அவளிடம் சொன்னால், அவள் ஏதாவது  தவறாக நினைத்துக் கொள்ள வாய்ப்பு இருக்கிறது என்று தெரிந்தே ஷ்யாம் சக்தியிடம் வெளிப்படையாக அதை பேசினான்..

சக்தியும் ஒரு நிமிடம் அவன் பேச்சில் தயங்கினாலும், பின் அவளும் அவனை பார்த்து ஒரு மெல்ல புன்னகை புரிந்தவள்..

“ எனக்கு புரியுது..” என்பது  போல் சிரித்துக் கொண்டே சொன்னவள்..

 தன் சிரிப்பை விடாது.. “ ஒரு கல்யாணத்திற்க்கு இது மட்டும் போதுமா..?” என்று கேட்டாள்..

ஷ்யாமும் உடனே.. “ போதாது தான்.” என்று பதில் அளித்தவன் தொடர்ந்து..

“ ஆனால் நான் சொன்னதை நீங்க சரியா கவனிக்கல என்று நினைக்கிறேன்… அதுவும் ஒரு காரணமா இருக்கலாம் என்று  சொன்னேன்.. அது மட்டும் காரணம் என்று சொல்லலேயே…” என்று சொன்னவின் பேச்சை இப்போது சக்தி இடையிட்டு தடுத்து நிறுத்தியவள்..

“ அப்போ காதல் என்று  சொல்ல  வர்றிங்களா..?” என்று தன் சிரிப்பை விடுத்து கிண்டலாக கை கட்டி  சக்தி  கேட்ட விதத்தில், ஷ்யாமும் அதே பாவனையில், அதாவது சக்தியை போலவே கை கட்டி அவளை விட மிக தெனவெட்டாக..

“ ஏன் இருக்க கூடாதா…?” என்று கேட்டான்..

அதற்க்கு சக்தியும் விடாது.. “ எப்போ என் ப்ரேக்கப் ஆன உடனேவா…” என்று கேட்டாள்..

“ ம் சொல்வது என்றால் அப்போ  இருந்து கூட உன்னை எனக்கு பிடிக்க ஆரம்பித்து   இருக்கலாம்.” என்ற அவனின் பேச்சில் சக்தி இப்போது  தன் முகத்தில் தீவிர முகபாவனையை கொண்டு வந்தவளாக..

“ இப்போ உங்க வீட்டு பெரியவங்களை அழச்சிட்டு எங்க வீட்டுக்கு வந்து இருக்கிங்கன்னா…” என்ற அவள் பேச்சை தடுத்து நிறுத்திய ஷ்யாம்..

“ சும்மா இல்ல.. பெண் கேட்டு..” என்ற அவனின் இடை நிறுத்தலை கவனியாதது போல  சக்தி தொடர்ந்து…

“ சும்மா இது போல் விளையாட்டு பேச்சு பேசுறதுக்கு இல்லேன்னு நான் நினைக்கிறேன்…” என்று சக்தி மிக தீவிர முக பாவனையில் பேசவும், ஷ்யாமும் தன் விளையாட்டை கை விட்டவனாக..

Advertisement