Advertisement

அத்தியாயம்….15

“ சட்டப்படி போவேன் என்று நான் உனக்கு சொல்லவே இல்லையே…” என்று சொன்ன ஷ்யாமை இப்போது சரண் அதிர்ச்சியுடன் பார்த்தான்..

“ என்ன புரியலையா…?” என்று கேட்டவன்.. காலை அவ்வளவு சந்தோஷமா ஆபிஸ் போன நீ இப்போ மனது நிம்மதி இல்லாம இங்கு வந்து..” கடல் அலைகளின் சீற்றதை காண்பித்த வாறு..

“ பீச்சில் கொண்டு வந்து நிறுத்தி இருக்கேன்… சட்டத்தின் வழி போக முடியாது தானே நான்  இந்த  வழியில் போனேன்..” என்ற ஷ்யாமின் பேச்சில் இன்னும் அதிர்ந்து போன சரண் முகத்தில் கிலியுடன் அவனை பார்த்தவன்..

திக்கி திணறி.. “ நீங்க யார்..?” என்று கேட்டான்…

“ ம்  பரவாயில்லை நான் அனுமானித்ததை விட… நீ ரொம்ப புத்தி சாலியா தான் இருக்க  குட்..” என்று ஷ்யாம் சரணுக்கு ஒரு பாராட்டு பத்திரத்தை வழங்கி விட்டு தன்னை அவனுக்கு முழுமையாக அறிமுகம் படுத்திக் கொண்டான்…

ஷ்யாம் யார் என்று தெரிந்ததில் கடல் காற்றையும் மீறி காதுக்கருகில் வியர்வை வழி… அதை தன் கை  குட்டை கொண்டு துடைத்த வாறே அடுத்து என்ன பேசுவது என்பது போல் ஒரு  வித பயத்துடன் தான்  சரண் ஷ்யாமை பார்த்தான்…

ஷ்யாமே தொடர்ந்து.. “ ம் இப்போ சொல்லுங்க .. என் சின்ன பேபி சாருவை பற்றி  என்ன முடிவு எடுத்து இருக்கிங்க..?” என்று கேட்ட உடன் பதில் அளிக்க இது ஒன்றும் சின்ன விசயம் கிடையாதே..

ஆனால் இப்போது “ எனக்கு சாரு வேண்டும்.. அதனால் எனக்கு என்ன இடையூறு செய்தாலும்,  பரவாயில்லை..” என்று சொல்ல முடியாது தயங்கி ஷ்யாமை பார்த்தான்..

அவனுக்குமே இப்போது சாரு மிக முக்கியம் என்றான நிலையில்,  முதலில் பேசிய திமிர் பேச்சை கை விட்டவனாக மிக தன்மையாகவே…

“ நீங்க ரொம்ப  பெரிய இடம் சார்.. உண்மையில் சக்தி ரொம்ப  கொடுத்து வைத்தவள் தான்..” என்ற அவனின் பேச்சை இடையிட்டு தடுத்து நிறுத்திய  ஷ்யாம்..

“ மரியாதை..” என்ற வார்த்தையில், இவன் யார் என்று தெரிந்த உடன் மரியாதையாக தானே பேசுகிறேன் என்று குழப்பத்துடன்  யோசித்தவன் ஷ்யாமின் பார்வையில்..

“ உங்க  வருங்கால மனைவி..” என்ற அவன் வார்த்தை  திருத்ததில்..

“ ஆ இப்போ சொல்..” என்பது போல் அவன் பார்வையில் சரண்  தொடர்ந்து…

“ குழந்தையோடு கல்யாணம் செய்தா.. அது  உங்களுக்கு தான் நாளை பின்ன வீண் பிரச்சனையில் வந்து நிற்கும்.. அதோடு உங்களுக்கு என்ன சார் தலை எழுத்து மத்தவங்க குழந்தைக்கு நீங்க தகப்பனாக..” என்று பேசிக் கொண்டு போனவனை கை நீட்டி தடுத்து நிறுத்துய ஷ்யாம்..

“ இது தான் சாத்தான் வேதம் ஓதுவது என்று சொல்றது போல.. மத்தவங்க நல்லது பத்தி எல்லாம் கூட நீ யோசிப்பியா என்ன..?

கட்டின மனைவி இருக்கும் போதே மத்த பெண்ணை நாடிய போது உன் மனைவியை பற்றி யோசிச்சியா..?

இல்ல மனைவி நிறைமாத கற்பினியா இருக்கும் போது அவளை விவாகரத்து செய்ய யோசிச்சியா..? அதுவும் நீ விவாகரத்து கொடுக்கவில்லை என்றால்., அவள் நடத்தையை அசிங்கப்படுத்துவேன் என்ற மிரட்டலோடு…

எதிர் வீட்டில் மனைவி இறந்த  பின்   அவங்க உறவை எதிர் வீட்டில் வைத்து கொண்டு உன் புது மனைவியோடு சந்தோஷமா இருக்கும் போது, தெரியலையா மத்தவங்க ரணம்…

கட்டின பெண்டாட்டிய பத்தி எதையும் யோசிக்காது, மத்தவனான என்னை பற்றி ரொம்ப யோசிக்கிற..?” என்று கேள்வி கேட்ட ஷ்யாமே …

“ இதே நான் ஒரு சாதரணமானவனா இருந்து இருந்தால், உன் டீலிங்கே வேறு மாதிரி இருந்து இருக்கும்..” என்று பதிலும் தந்தான்..

ஆம் ஷ்யாம் சொன்னது போல் அவன் சாதரணமானவனாக இருந்து இருந்தால் சரண் இது போல் எல்லாம் பணிந்து பேசுபவன்  கிடையாது..

தன் மகிழ்ச்சி… தன் சுகம்…  தன்   தேவை..  என்று  தான் யோசிப்பான்.. அதனால் தான் கட்டிய மனைவி  கற்பினி என்று தெரிந்தும் விவாகரத்து செய்தது..

அவள் இறந்த பின் கூட தன் குழந்தை என்று சாரு முகத்தை கூட அவன் ஊன்றி கவனித்தது கிடையாது… தன் மனைவிக்கு குழந்தை பிறக்க ஒரு சில சிக்கல் இருக்கிறது என்று தெரிந்த பின் கூட..

சிகிச்சையில் பெற்று கொள்ளலாம் என்று தான் யோசித்தானே தவிர.. சாருவை பற்றி யோசிக்கவில்லை..  அடுத்து அடுத்த சிகிச்சையில் மூன்று முறையும் தோல்வியை தழுவிய பின்..

மருத்துவர் சொன்ன.. “ இனி உங்க மனைவிக்கு  குழந்தைக்கு என்று சிகிச்சை  செய்தால் அவங்க உடல் நிலையை தான் பாதிக்கும்..” என்றான பின்..

அவன் மனைவி மஞ்சுளா சொன்ன… “ என்னாலேயும் முடியல.. பேசாம ஒரு குழந்தையை தத்து எடுத்து கொள்ளலாம்..” என்று சொன்ன  பின் தான்..

சரண் அம்மா… “ என் மகன் பெண்ணே தேவதை போல் எதிர் வீட்டில் வளரும் போது,  நாம ஏன் யாருக்கோ  பிறந்ததை எல்லாம் தத்து எடுக்க வேண்டும்…” என்று சொன்னவள் உடனே சரணை பார்த்து..

“ வாடா நாம போய் அந்த  குழந்தையை வாங்கிட்டு வரலாம்..” என்று சொன்னார்..

சரண் அம்மா பேச்சை கேட்டு கொண்டு இருந்தாலும், மனைவியின் முக மாற்றத்தையும் கவனித்து கொண்டு இருந்ததான்,..

“ அம்மா பொறும்மா.. இது என்ன சின்ன விசயமா..? இன்னும் ஒரு வாரம் போகட்டும்.. நாம போய் சாருவை கேட்போம்..”

அவனுக்குமே யாரோ குழந்தைக்கு நான் ஏன் அப்பன் ஆவது.. என் குழந்தை இருக்கும் போது.. தத்து என்ற பேச்சு  தன் மனைவி  வாயில் இருந்து வந்த பின், அவன் நினைத்தது…

தாயும்  அவன் நினைத்த்து போல் பேசவும்… முடிவு செய்து விட்டான்.. சாருவை அழைத்து வருவதை பற்றி..

அவன் ஒரு வாரம் டைம் கேட்டது கூட தன் மனைவியை சமாதானப்படுத்த தானே ஒழிய.. சாருவை அவர்களிடம் இருந்து வாங்க கிடையாது..

தன் குழந்தை கேட்டால் கொடுத்து விடுவார்கள்.. அவர்களால் என்ன செய்ய முடியும்..? இப்படி தான் சாருவை வாங்குவதை பற்றி சாதரணமாக நினைத்து விட்டான்..

சக்தி திருமணம் செய்யும் இடம் இவ்வளவு பெரிய இடமாக இருக்கும் என்று அவன் நினைத்து கூட பார்க்கவில்லை..

தான் பேசியதற்க்கு சரண் அனைத்தையும் நினைத்து அமைதியாக நிற்கவும்..

“ என்ன உன் வேலை மட்டும் போனது பத்தாது போலவே உன் மனைவியின், “ என்று  ஷ்யாம் தன் பேச்சை பாதியில் முடிக்கவும், சரண் இப்போது அதிர்ந்து போய் ஷ்யாம் முகத்தை பார்த்தானே தவிர, அப்போது கூட வாய்  திறந்து  எதுவும் பேசாது இருக்கவும்…

“ ஓ வேலை மட்டும் பிடிங்கினா வழிக்கு வந்துடுவ என்று உன்னை நாம் ரொம்ப ஈசியா நினச்சிட்டேன்.. பரவாயில்லை நீ ரொம்ப ஸ்டாங்கானவனாக தான் இருக்க…

இதுக்கு அப்புறமும் என்ன செய்யலாம்..” என்று யோசிப்பது போல் தன் தாடையில் கை வைத்து யோசித்தவன்..

“ ஆ இப்படி செய்தா வழிக்கு வந்து விடுவியா..? பெண் விசயமா..?  எல்லோரும் நம்புவது  ரொம்ப ஈசியா இருக்கும்.. அது தான் மனைவி இருக்கு போதே வேறு ஒரு பெண் கூட ரிலேஷன் ஷீப்பில் இருந்தது ..

உன் ஆபிஸ் முழுவதும் தெரியுமே.. என்ன அடுத்தது அதை  ட்ரை செய்யட்டா…” என்ற ஷ்யாமின் பேச்சில் சரண் ஆடி தான்  போய் விட்டான்..

தன் வேலை போனதிலேயே அவன் அடுத்து என்ன என்று தான் யோசித்தவன்.. சிக்கனம் என்பது அவன் அகராதியில் கிடையாது..  இரண்டு இடத்தில் ஆடம்பரமாக ப்ளாட் வாங்கி போட்டு இருக்கிறான்…

அதற்க்கு கட்ட வேண்டும்.. இவன் தான் ஆடம்பரம் என்றால், இவன் மனைவி இவனை விட அதிகம் என்பது போல் தான் கட்டின உடையை திரும்ப போடுகிறளா என்பது போல் தான்..

நாளுக்கு ஒன்று  வித  விதமாக உடுத்துபவள்.. சரண் அளவுக்கு இல்லை என்றாலும், அவளுமே கை நிறைய சம்பாதிப்பதால் செலவு அது பாட்டுக்கு சென்று கொண்டு இருக்கும்..

இப்பொது இருவருக்கும் வேலை போவதே மிக பெரிய இடி எனும் போது, தன்னை பெண்கள் விசயத்தில், அவனால்  நினைத்து  கூட பார்க்க முடியவில்லை…

அதோடு  மஞ்சுளாவும் சாருவை  அழைத்து வருகிறேன் என்றதில் இருந்து வீட்டில் ஒரே பிரச்சனை தான் ஓடிக் கொண்டு இருக்கிறது..

அதனால் ஷ்யாமுக்கு பணிந்து  போனவனாக.. “ இனி நான் சாருவை பற்றி எடுக்க மாட்டேன்..” என்று  சொல்லவும்..

“ எனக்கு இது மட்டும் போதாதே..”  என்றதில் இன்னும் என்ன என்பது போல் சரண் அதிர்ந்து ஷ்யாமை பார்த்தான்..

“ சட்டப்படி சாருவை எங்க குழந்தையா தத்து கொடுக்க… கைய்யெழுத்து போட கூப்பிட்டா  வர வேண்டும்…” என்று சொன்னவன் கூடவே..

“ நாளையில் இருந்து நீங்க உங்க ஆபிசுக்கு  போகலாம்..” என்று ஷ்யாமிடம் பேசிக் கொண்டே தன் போனில் மெசஜை தட்ட..

அடுத்த  நிமிடம்  சரணுக்கு அவனின்  உயர் அதிகாரியிடம் இருந்து அழைப்பு வந்தது…

“ பிரச்சனை எல்லாம் சால்வ் ஆகி விட்டது.. நாளையில் இருந்து ஆபிசுக்கு வரலாம் என்று…”  இன்று  மாலை கொஞ்ச நேரம் முன் இங்கு வந்ததில் இருந்து எத்தனை வித அதிர்ச்சி.. பணி சிலை போல் நின்று விட்டவனிடம் இருந்து..

“ நீ பாசத்தில் குழந்தையை கேட்டு இருந்தால், நான் யோசித்து இருக்கலாம்.. நல்லா கவனி  அப்போ கூட யோசித்து தான் இருப்பேன்.. ஆனா நீ வேறு வழி இல்லாது சாருவை கேட்ட..

 இதே உன் மனைவிக்கு குழந்தை பிறந்து இருந்தால் நீ சாருவை நினைத்து கூட பார்த்து இருக்க மாட்ட.. போ போய் முதல்ல சக்தி வீட்டுக்கு போய் சாரு உங்க கிட்டயே இருக்கட்டும்..

சக்திக்கு சட்டபடி தத்து  கொடுத்து விடுகிறேன் என்று சொல்.. ஆ அப்புறம் நடந்தது எதையும் நீ அங்கு பேச கூடாது புரியுதா..?” என்று ஷ்யாம் சொன்ன அனைத்திற்க்கும் சரண் தலை ஆட்டலை மட்டுமே கொடுத்தவன்..

ஷ்யாம் சொன்னது போல்  சரண் சக்தி  வீட்டில்  அவன் சொன்னதை மனப்பாடம் செய்தது போல் ஒப்பு வித்தான்..

ஒரு வாரமாக மனதில் அழுத்திய பாரம் தகர்ந்த்தில் சக்தி எப்போதும் போல் இல்லாது அன்று இரவில் ஷ்யாமோடான அவளின்  உரையாடலில்,  காதல் பேச்சும் அங்கு அங்கு தெளித்தது போல் தான்  காணப்பட்டது…

“ என்ன மேடமின் பேச்சு எல்லாம் இன்னைக்கு ஒரு மாதிரியா போகுது..” என்று ஷ்யாம் கூட கேட்டான்..

அதற்க்கு சக்தி.. “ ஏன் பேச கூடாதா..? உங்களுக்கு பிடிக்கலேன்னா நான் பேசலேப்பா…” என்று சக்தி பிகு போல் சொல்லவும்..

“ நான் அப்படி சொன்னேனா..? இது வரை இப்படி பேசியது இல்லையே… அது தான்  கேட்டேன்..”

அதற்க்கு சக்தி.. “ இது வரை எனக்கு சாருவை பற்றிய பயம் மனதில் ஓரத்தில் இருந்து கொண்டே தான்  இருந்தது.. இப்போ தான் மனசு நிம்மதியாவே இருக்கு..” என்று சொன்னவள்..

“ நீங்க அடி தடில எல்லாம் இறங்க வில்லை தானே…” என்று கேட்க..

“ அய்யோ நான் ஏன்மா அவனை  அடிக்க போகிறேன்… “ என்று சக்தியிடம் பதறி சொன்னவன்…

 மனதில் ‘யாரை யாரை எப்படி அடிக்கனுமோ அங்கு அடித்தால் தான் வேலைக்கு ஆகும்.’ என்று நினைத்து கொண்டான்…

சாரு பிரச்சனை முடிந்ததில் ஒரு நிம்மதி  சக்திக்கு மட்டும் கிடையாது  ஷ்யாமுக்கே  உண்டானது…

இது வரை குடும்ப பிரச்சனை என்று,  அவன் தொழிலை பார்க்காது விட்டது கிடையாது.. சரியாக வட்டி எப்போது வசூலிக்க வேண்டும்.. வராத கணக்கை தனியாக  எடுத்து வசூலித்து விடுவான்..

ஒரு பத்து நாளாகவே  இதை கவனிக்காது விட்டு விட, தன் பைனான்ஸ் கம்பெனிக்கு சென்ற உடன் சூர்யாவிடம்..

“ இந்த மாதம் வட்டி யார் ..?  யார்…?  கொடுக்கவில்லை .. என்ற விவரத்தை கேட்க.. சூர்யா ஷ்யாம் செய்வது போல் தனி தனியாக விவரத்தை எடுத்து வைத்து..

தராதவர்களிடம்  இருந்து மூக்கால் வாசி வசூலித்து விட்டான்.. மீதம் இருக்கும் நபர்களும் எப்போதும் நியாயமாக தந்து விடுப்பவர்கள் தான்…

 இந்த மாதம் வேறு அவசர பண தேவை இருப்பதால் தான் கொடுக்க முடியவில்லை என்று டைம் கேட்டு இருக்கிறார்கள் என்ற சூர்யாவின் விளக்கத்தை ஷ்யாம் ஏற்றுக் கொண்டான்..

அவனுமே அது போல் சலுகைகள் கொடுப்பவன் தான் ….அவனுக்கு தெரியும்.. யார்..? ஏமாற்ற தராது இருக்கிறார்கள்..

யார்…? உண்மையில் பிரச்சனையில் கொடுக்க முடியாது இருக்கிறார்கள் என்று… அதனால் அதை பெரிய விசயமாக எடுக்காது கடன் கேட்டவர்களின் டாக்குமெண்டை பார்த்தான்..

பின் சூர்யாவிடம்…

“ எனக்கு தெரிந்து சரியா தான் இருக்கு.. எதற்க்கும்..  நம்ம  லாயரிடம் ஓபினியன் கேட்டு விடு.. பின் ஈசி போட்டு பார்… “ என்று  சொல்லிக் கொண்டு இருக்கும் போது அவன் அறைக்கு தனுஜா வந்து நின்றாள்..

ஷ்யாம்  அந்த டாக்குமெண்டை, குனிந்து பார்த்து கொண்டே சூர்யாவிடன் பேசிக் கொண்டு இருந்ததால், அவள் வந்ததை அவன் கவனிக்கவில்லை..

ஆனால் சூர்யா தனுஜா அந்த அறைக்குள்  நுழைந்ததுமே பார்த்து விட்டதால், பதட்டதுடன் ஷ்யாமை பார்த்தவன்.. பின் தனுஜாவை  இந்த பெண் எதற்க்கு இப்போது வந்தது என்று  நினைத்து பார்த்து கொண்டு இருந்தான்…

தான் இவ்வளவு சொல்லியதற்க்கு சூர்யாவிடம் இருந்து பதில் இல்லாது போகவும் தான் ஷ்யாம் நிமிர்ந்து சூர்யாவை  பார்த்தான்…

 ஷ்யாமின் பார்வை வேறு  எங்கோ இருப்பதை பார்த்து, ஷ்யாமும் சூர்யா பார்வை சென்ற திசையில் பார்வையை செலுத்த அங்கு நின்று கொண்டு இருந்த தனுஜாவை பார்த்து..

“ யார் சூர்யா இந்த பெண்.. உனக்கு தெரிந்தவங்களா..? என்று கேட்டான்… 

தன் அன்னை குடும்பத்திற்க்கு,  கொஞ்ச நாட்களாக உதவிகள் செய்து வந்து இருந்தாலுமே, அவர்களை  ஷ்யாம் யாரையும்  ஊன்றி  கவனிக்க வில்லை என்பது தான் நிஜம்…

ஷ்யாமின் இந்த கேள்வியில்  சூர்யா மட்டும் அல்லாது தனுஜாவுமே  தான் அதிர்ச்சியுடன்   ஷ்யாமை பார்த்தது…

தன்னை திட்டுவார்.. தன்னிடம் பேசமாட்டார்… ஏன் இங்கு வந்தே என்று சொல்லி தன்னை வெளியில் அனுப்பி விடுவார் என்று தான் நினைத்தாளே தவிர.. தன்னையே தெரியாது  ..

ஷ்யாமின்  இந்த பேச்சில் தனுஜா அதிர்ச்சியில்   நின்று விட்டாள்…

 ஆனால் சூர்யா அதிர்ச்சியில் இருந்து உடனே வெளி வந்தவன் அப்போது தான் தனுஜாவின் நிலை புரிந்து..

“ ஏன் நிற்கிறிங்க.. இங்கு உட்காருங்க..” என்று அங்கு இருந்த இருக்கையை காட்டி சொன்னான்..

சூர்யாவின் பேச்சில், ஓ இவனுக்கு தெரிந்த பெண் போல.. ஆனால்  ஏன் இங்கு வர வழைத்தான்…? என்று யோசித்த்வன்.. பின் அவனே  பணம் தேவையா இருக்குமோ… அதற்க்கு தான் இங்கு வர வழைத்தானோ… என்று அந்த ஒரு சில நொடிகளில் அவனுக்கு அவனே நினைத்து கொண்டு இருக்க..

நீ நினைத்ததில் எதுவும் இல்லை… என்ற வகையாக அந்த இருக்கைக்கு அமர நாலடி அடிகள்  தனுஜா எடுத்து வைக்க.. அப்போது தான் இந்த பெண்… யோசித்தவனாக சூர்யாவை  பார்த்தான்…

  

Advertisement