Advertisement

அத்தியாயம்…14

கணவனின் பேச்சில் அப்படி ஒரு கோபம் உண்டானது சரஸ்வதிக்கு “  என்ன பேச்சு பேசுறிங்க நீங்க..? அவங்க  தான் நம் பேரனை இப்படி வளர்த்து இருக்காங்க… வேறு யாராவது இருந்து இருந்தால்…” என்று மனைவி  அவன் வளர்ச்சியை வைத்து, ஒரு விதத்தில்  பேச்சை ஆரம்பித்தார் என்றால், அவர் கணவனோ அதை வேறு விதமாக கொண்டு சென்றார்..

“ அதை தான் நானும் சொல்றேன்.. அவங்க தான் நம் மீது பாசம் இல்லாது வளர்த்து இருக்காங்க.. அதுவும் சொந்த தாய் மீதே இப்படி  விரோதத்தை  சொல்லி கொடுத்து..” என்றவரின் பேச்சில சரஸ்வதிக்கு இன்னும்  தான் கோபம் கூடியது…

“ புரிந்து தான் பேசுறிங்களா..?” என்று தன் கோபத்தை அடக்கி தான் தன் கணவரிடம் கேட்டார்..

“ ஆமா .. அம்மாவின் சூழ்நிலையை சொல்லி வளர்க்காது அவங்களையே அம்மா  அப்பா என்று தானே வளர்த்து இருக்காங்க.. இதில்  இருந்து தெரியல அவங்க எண்ணம்…  குழந்தை மீது உண்மையான பாசம் இருந்து இருந்தால் என்ன செய்து இருக்கனும்…?” என்ற கணவனின் கேள்விக்கு..

“ என்ன செய்து இருக்கனும்.. அதை நீங்களே சொல்லுங்களே..?” என்று   சொன்னதற்க்கு சொக்கலிங்கம்…

“ ஷ்யாம் அப்பா இறந்த உடனே அவங்க கூட்டிட்டு போய் இருந்து இருக்கனும் தானே… அதுவும் அவர் அவங்களுக்கு ஒரே மகன் எனும் போது..” என்ற கணவனின் பேச்சில் துளி கூட நியாயம் இல்லாதது சரஸ்வதிக்கு  நன்கு தெரிந்தது தான்..

ஏன் இதோ பேசிக் கொண்டு இருக்கும் தன் கணவருக்குமே தெரியுமே.. தன் மகளை முதலில் கட்டி கொடுத்த சம்மந்தி வீட்டு ஆட்கள் எவ்வளவு பெறுந்தன்மையானவர்கள் என்று..

அப்போது எல்லாம் இவரே அதை பல முறை சொல்லி இருக்கிறாரே.. இருந்தும்  இப்போது  பேரன் வேண்டும் என்ற சூழ்நிலை…  இவரை எப்படி எல்லாம் பேச வைக்கிறது என்று நினைத்து தன் கணவனை  சரஸ்வதி அமைதியுடன் பார்த்து கொண்டு  இருந்தார்..

தன் பேச்சுக்கு தன் மனைவியிடம் இருந்து எந்த பதில் பேச்சும் இல்லாது போக,  தன் பேச்சை நிறுத்திய சொக்கலிங்கம் தன் மனைவியை பார்த்தார்..

கணவனின் பார்வையில்.. “ என்ன பேச வேண்டியது எல்லாம் பேசி முடிச்சிட்டு அமைதியா ஆகிட்டிங்களா..? இல்ல உங்க பேச்சு உங்களுக்கே அபத்தமா தெரியுதா..?” என்ற சரஸ்வதியின் கேள்விக்கு இப்போது சொக்கலிங்கத்திடம் இருந்து அமைதியே பதிலாக கிடைத்தது…

“ அவங்க அங்கு அழைத்து போனா நம்ம மகளுக்கு வேறு ஒரு நல்ல வாழ்க்கை கிடைக்காது என்று தான் அழச்சிட்டு போகல.. இது நான்  சொன்னது கிடையாது..

அப்போ நீங்க என் கிட்ட சொன்னது.. குழந்தை விசயமும் அதே தான்  குழந்தைக்கு அப்பா இல்ல.. அம்மாவையும் ஏன் பிரிக்கனும் என்று … இதையும் நீங்க தான் என் கிட்ட சொன்னது..

அது உங்க நியாபகத்தில் இருக்கா.. அதே போல் நம்ம பெண் திருமணத்திற்க்காக பேரனை மொத்தமா அவங்க கிட்ட  கொடுத்த  போது  கூட எந்த மறுப்பும் சொல்லாது..

ஏன் நம்ம கிட்ட ஒரு கேள்வி கூட கேட்காது வாங்கி கொண்டாங்க.. நம்ம பெண் கல்யாணம் ஆன பின் குழந்தைக்கு காய்ச்சல் என்று அந்த பெரிய மனிதர்  ஓடி வந்தது நினைவு இருக்கா..?  

அதே போல்  வெறும் கைய்யோட  திரும்பி போன போது அவர் கை பிடித்து கொண்டு.. 

“எங்க சூழ்நிலை இப்படி ஆகி விட்டது.. எப்படியாவது குழந்தையை நல்ல முறையில் வளர்த்து விடுங்க.. “  என்று  நீங்க சொன்னது நியாபகம் இருக்கா..? இருக்காது.. இப்போ எதுவும் உங்க நியாபகத்தில் இருக்காது..

ஆனால் எனக்கு இருக்குங்க.. எல்லாம் நியாபகத்தில் இருக்கு…

அப்பா இறந்துட்டார்.. அம்மா இனி பார்க்கவே வர மாட்டா என்று தெரிந்த பின் என்ன செய்வாங்க அவங்க.. . அதான் அவங்களே அம்மா அப்பாவா மாறிட்டாங்க..

மகேந்திரா  பைனான்ஸ் .. அப்போவே  எவ்வளவு பெரியது என்று உங்களுக்கு நான் சொல்ல தேவையில்லை.. 

நம்ம பெண்ணுக்கு அந்த இடத்தில் ஜாதகம் பொருந்தி இருக்கு பெண் பார்க்க வரோம் என்று சொன்ன போது.. நீங்க சொல்லி பூரித்த விசயம்.. அது எவ்வளவு பெரிய இடம் என்று..

மகன் இழந்த சோகத்தை மறைத்து.. பேரனுக்காக அவங்க எப்படி எல்லாம் அந்த நிறுவனத்தை கட்டி காப்பாத்தி நம்ம பேரன் கிட்ட கொடுத்து இருக்காங்க..

நிறுவனம் விடுங்க.. நம்ம பேரனை எப்படி  வளர்த்து ஆளாக்கி விட்டு இருக்காங்க.. முப்பது வயது  ஆகுது.. என் பேரனை பத்தி சொந்த பந்தம் எல்லாம்.. பெண்கள் விசயத்தில்  ஒரு குறை இல்ல.. அப்பழுகற்றவன் அவன் என்று சொல்லும் போது எனக்கு எவ்வளவு சந்தோஷமா இருக்கு தெரியுங்களா..

ஏன் போன மாதம் கூட நீங்களே என் கிட்ட சொன்னிங்களே… என்ன எல்லாம் மறந்து விட்டிங்களா….?    என்று சரஸ்வதி சொக்கலிங்கம்  தன் சம்மந்தி வீட்டை பற்றி சொன்ன ஒரு குறைக்கு, அவர்களை பற்றி  ஓராயிரம் நிறைகளை அடுக்கியதில் சொக்கலிங்க வாய்  மூடி  கொண்டார்..

அவருக்குமே இது எல்லாம் தெரிந்த விசயம் தானே.. ஆனால் தன் பேரன் வளர்ந்து அனைவரும் பாராட்டும் படியாக இருப்பவன்..

தங்களிடம் பேசாது… தங்களை தவிர்த்து ஒரு பார்வை கூட இல்லாது இருக்க… ஆனால் அவர்களிடம் அப்படி ஒரு பாசத்தை பொழிவதை பார்த்து, தன்னால் மனதில் எழுந்த பொறாமை உணர்வு தான் அவரை இவ்வாறு எல்லாம் பேச தூண்டுக்கிறது என்பதை அறிந்து கொண்ட சரஸ்வதி.. அடுத்து அதை பற்றி பேசாது..

திரும்பவும் தங்கள் மகள் பிரச்சனையில் வந்து நின்றார்..  எப்போ தான் நம்ம பெண்ணுக்கு விடிவு வரும் என்று…

ஷ்யாமால் இப்போது  முடிந்த ஒரு விசயம் கெளசல்யா வீட்டில் எது நடந்தாலும், அதாவது உறவு இல்லாது யார் அந்த வீட்டில் சென்றாலும், அவனுக்கு தகவல் வந்து விடுவது போல் ஏற்பாடு  செய்தவனுக்கு அடுத்து சாருவின் பக்கம் சரண் போக முடியாத காரியத்தில்   இறங்கினான்…

ஐடி கம்பெனியில் லகரத்தில் சம்பாதிக்கும் சரணுக்கு, எப்போதும் தான் என்று ஒரு திமிர் இருக்கும்.. அதுவும் பிறந்த போதே மத்தியதர்கத்தோடு கொஞ்சம் உயர்ந்து வசதியான வாழ்க்கை வாழ்வதாலும், கூடவே பார்க்க கண்ணுக்கு லட்சணமாக இருப்பதாலும், கூடவே தெனவெட்டும் இருந்தன..

கல்லூரி காலங்களில் அவன் பிரன்ஸ் பிகரை மடக்க அரும்பாடு பட்டால், இவன் ஒரு பார்வைக்கே பெண்கள் விழுந்து விடுவார்.. அது என்னவோ அவன் ஒரு சிரிப்புக்கே கல்லூரியில் அவனுக்கு என்று பெண் விசிரிகளை வைத்திருந்தான்… ஆனால் இவன் ஒரு எல்லைக்குள் தான் அனைவரிடமும் பழகியது..

ஆனால் சசிகலா  இருக்கும்  இடத்தில் வீடு கட்டி சென்ற போது, அவளை பார்த்த உடன் மற்ற பெண்களை போல் இல்லாது  ஏனோ அவள் பால் அவன் மனம் சாய்ந்தது என்பது உண்மை தான்..

அது என்ன என்று உணரும் முன்னவே  அவன் பிரன்ஸ்..

“ மச்சி  காதலை உடனே கல்யாணத்தில் முடிச்சிடு இல்லேன்னா பட்சி பறந்து விடும்..” என்ற போதனையாலும், சசிகலாவும்  தோள் மீது கை போட்டாளே தூரம் விலகி ஓடுவதாலும், அந்த வயதுக்கே உரிய ஒரு ஆர்வத்தில் பதிவு திருமணம் செய்து கொண்டான்..

பின் வீட்டுக்கு தெரிந்து குடும்பம் நடத்திட வரை சரி தான்.. ஆனால் தன் ஆபிசில் புதியதாக வேலைக்கு சேர்ந்த மஞ்சுளாவை பார்த்த உடன்  அவனுக்குள் உண்டான மாற்றத்தை பார்த்து..

“ அவசரப்பட்டு விட்டோம்.. சசியிடம் வந்தது இன கவர்ச்சி.. இது தான் காதல் என்பதை..அதுவும் அனைத்து பெண்களும் அவனை பார்க்க.  இவன் மஞ்சுளாவை பார்க்க..

பின் அவர்கள் உறவு அடுத்து அடுத்த கட்ட நகர்வில் சசிகலா இறப்பின்  விளம்புக்கு தள்ளப்பட்டாள்…

மஞ்சுளா  இவனை  விரும்பும் போது  சசிகலா குழந்தை  உண்டாகி இருந்தாள்..

அவள் சொன்னது இது தான்.. “ இரண்டாம் தாரமாக இருந்தாலும் உன்னை ஏற்றுக் கொள்வேன்.. குழந்தையை ஏற்க மாட்டேன் என்று.. அதே போல் தான் உங்களுக்கு குழந்தை என்றால் அது நம் இருவருக்கும் பிறக்கும் குழந்தையாக மட்டும் தான் இருக்க வேண்டும் என்பதும்..” 

சரண் அனைத்திற்க்கும் சம்மதித்து தான் மஞ்சுளாவை  திருமணம் செய்து கொண்டது.. என்ன ஒன்று குழந்தை பிறக்க அனைத்து மருத்துவ உதவி நாடியும்.,, எதுவும் அவர்களுக்கு பயன் அளிக்காது போகவும்.. தான் அவனின் கவனம் சாருவின் பக்கம் வந்தது…

அதுவும் சாருவின் அறிவு திறமை தெரிந்ததில் இருந்து, சரணின் மனம் தன்னால்..

“ என் இறத்தம் எப்படி இருப்பான்..” என்றும் நினைக்க வைத்தது…

அதுவும் இப்போது சக்திக்கு திருமண பேச்சு நடைப்பெறவும்.. தன் குழந்தையை கேட்டால் கொடுத்து விடுவார்கள்.. இங்கும் அதே கதையாக ஆண்பிள்ளை இல்லாத வீடு..

சக்தி தனக்கு கணவனாக வர இருப்பவன்.. சாருவை ஏற்று கொள்கிறான் என்று சொன்னதை சரண் பெரியதாக எண்ணவில்லை..

“ அடுத்தவன் பெத்ததை இவன் ஏத்துப்பான்.. சக்தி அழகு.. அழகுக்கு ஆசைப்பட்டு இப்போ ஏத்துகிறேன் என்று சொல்லி இருக்கான்.. நான் அப்பன்காரன் கேட்டால், சக்தி மறுத்தாலும் அவனே பேசி சரி செய்து  கண்டிப்பாக கொடுத்து விடுவான். என்ன தான் இருந்தாலும் திருமண வாழ்வில் இந்த குழந்தை அவர்களுக்கு இடஞ்சலாக தானே இருப்பாள் என்று சரண் அந்த விசயத்தை மிக லேசாக  நினைத்து விட்டான்..

ஆனால் சாருவை லேசாக என்ன…?  என்ன தான் கடினப்பட்டாலும், அவளிடம் நெருங்க கூட முடியாது என்பது போன்றான நிகழ்வுகள்  முதலில் அவன் அலுவலகம் சென்ற போது நடந்தது…

ஆனால் அது நடந்த போது பாவம்  அது  எதற்க்கு என்று தெரியாது  முழித்து இருந்தது தான்  அவனுக்கு வேதனையானதாக இருந்தன…

அன்று அவன் அலுவலகம் சென்ற உடனேயே   அவனின் உயர் அதிகாரி  அழைக்கிறார் என்று சொன்னதுமே..

“ ஏன் என்று யோசித்துக் கொண்டே சென்றவனுக்கு.. ஓ இரண்டு நாள் முன் தான் ஒரு   பிரஜெக்ட் முடிந்தது…இப்போது புது புரஜெக்ட் பத்தி பேச இருக்கும் என்று நினைத்து அவரை பார்க்க சென்றான்..

அவரோ.. “ செய்த ப்ரஜெக்ட் அனைத்தும்  எரர் வருது.. நீ என்ன செய்து வைத்து இருக்க என்று சத்தம் போட போட அவனுக்கு ஒன்றும் புரியவில்லை..

“ எப்படி..?”  என்று புரியவில்லை..

அவன் அதை பற்றி விவரிக்க வரவும், அந்த உயர் அதிகாரி அவன் பேச்சை காது கொடுத்து கேட்பதாக இல்லை..

“ இனி அவங்க நம்ம கிட்ட எதுவும் கொடுக்க மாட்டேன் என்று சொல்லிட்டாங்க.. உன்னால் நம்ம கம்பெனிக்கு எத்தனை கோடி லாஸ்  தெரியுமா..?

மதியம் மீட்டிங்க இருக்கு… நீ அதுக்கு விளக்கம் கொடுக்க வேண்டும் ..” என்று    சரணை பேச விடாது அந்த உயர் அதிகாரி மட்டும் பேசி அவனை அனுப்பியதோடு, மதியம் மீட்டிங்கள்  விளக்கம் கொடு என்றவர்கள் அவனை வாயே திறக்க விடாது.. அவர்களும் அவனுக்கு எந்த விலக்கமும் கொடுக்காது, அவனை வேலையில் இருந்து நீக்கினர்…

இது போல் நடக்காது. என்ன தான்  வேலையில் பெரிய பிரச்சனை வந்தாலுமே, இது போல் எல்லாம் செய்ய முடியாது..

சரண் கொஞ்சம்  அறிவாளி .. புரிந்து விட்டது… தான் செய்த வேலையில்  எரர் வரவில்லை.. வரவழைக்கப்பட்டு  இருக்கிறது..

ஏன்..? யார்.? என்று தெரியாது குழம்பி போனவன் முன் ஷ்யாம் நின்றான்.. ஷ்யாமை சரணுக்கு தெரியவில்லை..

சக்தி திருமணம் விசயத்தை மட்டும் தான் தாட்சாயிணி அம்மா சொன்னது.. யாரை திருமணம் செய்ய இருக்கிறாள்.. எவ்வளவு பெரிய இடம் என்ற  விவரம்   அவனுக்கு தெரிவிக்க படவில்லை..

சரணும்  நோண்டி  எந்த விவரமும் கேட்கவில்லை.. அவனுக்கு தேவை அவன் குழந்தை மட்டுமே அவ்வளவு தான்..

சக்தி சாருவை  எனக்கு   கணவனாக வருபவன் ஏற்றுக் கொண்டான் என்று சொன்ன போது கூட, சரண் அது எப்படி…?  நான்  பார்க்கிறேன் என்பது போல் சவால் விட்டான்..அவன் யார்..? என்று கூட கேட்காது…

 ஒரு சமயம் இவர்கள் வீட்டில் பெண் எடுப்பவன் அப்படி என்ன பெரியவனாக இருந்து விட போகிறான் என்று  குறைத்து மதிப்பிட்டானோ என்னவோ..

அதனால் ஷ்யாம் சரணிடம் கை நீட்டி… “ நான் சக்தியை திருமணம் செய்ய  இருக்கிறவன்..” என்று அறிமுகம் படுத்தி கொள்ளவும்..

“ உங்களை எங்கேயோ பார்த்த நியாபகம்..” என்று சொல்லி கொண்டு சரணுமே ஷ்யாமின் கரம் பிடித்து விடுவித்தான்..

“ம் கண்டிப்பாக பார்த்து இருக்கிங்க.. என்ன ஒன்று அன்று என்னை கவனியாது என் பக்கத்தில் நின்று கொண்டு இருந்த சக்தியை தான் நீங்க கவனிச்சிங்க.. அதனால் கூட என்னை சரியா நியாபகத்தில் இல்லாது இருக்கலாம்..” என்றவனின் பேச்சில், இப்போது சரண் ஊன்றி ஷ்யாமை பார்த்தான்..

இவன் சாதரணமாக சொல்கிறானா..? இல்லை மறை முகமாக  குத்தி பேசுகிறானா.. என்று யோசனை செய்தாலும், வாய் திறந்து பேசவில்லை.. எது என்றாலும், அவன் வாயில் இருந்தே வரட்டும் என்று ஷ்யாம் முகத்தை  கை  கட்டி பார்த்து கொண்டு இருந்தான்..

ஷ்யாமும் அவனின்  முக பாவனையை  பார்த்து கொண்டே தானே தன்னை அறிமுகம் படுத்திக் கொண்டான்..

சரண் தன்னை எடை போடுகிறான் என்று அவனுக்கு தெரிந்து இருந்ததால், அவனும்  கையை தன் பேன்டில் விட்டு கொண்டு அகல கால் விரித்து ஜட்ஜ் செய்து கொள் என்பது போல் அவனும் சரணை பார்த்து கொண்டு இருந்தான்…

ஷ்யாம் எதாவது பேசுவான் என்று காத்து கொண்டு இருந்தா சரண்.. அவன் ஒன்றும் பேசாது தன்னையே பார்த்து கொண்டு இருப்பது அவனுக்கு ஒரு வித எரிச்சலை ஏற்படுத்தி கொண்டு இருந்தது…

இவன் வேறு..? என்று தான் சரண் அப்போது நினைத்தான்.. தன் வேலை போனதில் குழம்பி போய் இருந்தவனுக்கு, இப்போது இவனோடு பேச வேண்டுமா…? என்று தான் முதலில் நினைத்தான்..

ஆனால் இவன்  சாருவை பற்றி பேச வந்து இருந்தால், இப்போது அவனுக்கு வேலை எவ்வளவு முக்கியமோ… அதே அளவுக்கு சாருவும் முக்கியமானவளாக ஆகி போனாள்..

கண்டிப்பாக நான் வளர்த்து கொள்கிறேன் என்று சொன்னால் குழந்தையை  கொடுத்து விட்டு போகிறான் என்று நினைத்தான்.. கூடவே அவன் ஷ்யாமை எடையும் போட்டு கொண்டு இருந்தான்..

“ பார்க்க நல்லா இருக்கான்.. அவன் போட்டு இருப்பது எல்லாம் பிராண்ட்டடு நல்ல சம்பாதிப்பவனா இருப்பானோ என்று நினைத்து கொண்டு இருந்தவன்..

அவன் வாய் திறக்காது தன்னையே பார்த்து கொண்டு இருப்பதை பார்த்து.. அவனே..

“ சாருவை பற்றி பேச தானே வந்திங்க…” என்று சரணே பேச்சை ஆரம்பிக்க..

அதற்க்கு ஷ்யாமிடம்  இருந்து.. “ ஆமாம்..” என்று ஒரு தலையாட்டலோடு  முடித்து கொண்டவன்.. இப்போதும் வாய் திறந்து பேசாது சரணையே பார்த்து கொண்டு இருந்தான்..

அவன் பார்வையில் சரணுக்கு எரிச்சல் கூட.. “ சார் இப்படி என் முகத்தையே பார்த்து கொண்டு இருந்தால் என்ன..? நான் ஏற்கனவே எரிச்சலில் இருக்கேன்.. இதில் நீங்க வேறு..

சாரு என் மகள்.. பார்த்தா படித்தவர் போல் தான் இருக்கிங்க..  சட்டம் தெரியும் தானே…?” என்ற சரணை இப்போது மேலே பேச விடாது ஷ்யாம் பேச ஆரம்பித்தான்..

 

 

Advertisement