Advertisement

அத்தியாயம்….12

சக்தி உன்னை நம்பி  பேசி விட்டேன்… என்ற அவளின்  பேச்சில் ஷ்யாம்..

“ நம்பி பேசிட்டே தானே… அந்த நம்பிக்கை அப்படியே இருக்கட்டும்.. இனி அதை பற்றி நினைத்து நீ கவலை படாதே.. நான் பார்த்து கொள்கிறேன்..” என்று சொல்லி விட்டு.. பின்   அதை விடுத்து  மற்றதை பேசினான்.

மற்றது என்றால் அந்தரங்கமானது என்று கிடையாது.. ஏன் என்றால் ஷ்யாம் சக்தியிடம்  பேசிக் கொண்டு இருக்கும் போதே, அவனின்  சின்ன  பேபியின் குரல் கேட்கவும்.. சாருவும் சக்தியின் அருகில் தான் இருக்கிறாள் என்றதை அறிந்ததும்,, சாதரண பேச்சான.. திருமணத்திற்க்கு எடுக்கும் புடவைகள்… நகைகள்..

அது எங்கு எடுப்பது..?  என்றான பேச்சிலேயே அவனின் எல்லை கோட்டை நிறுத்திக்  கொண்டான்.. இந்த காலத்து குழந்தைகள் எதிரில் பேசும் போது மிக ஜாக்கிரதையாக தான் பேச வேன்டி இருக்கிறது.. அப்படி இருக்க நம் சாருவின் புத்தி கூர்மைக்கு ஷ்யாம் இன்னும் ஜாக்கிரதையாக தான் இருக்க வேண்டும் என்று தன் திருமணத்திற்க்கு பிறகான வாழ்க்கையை  கூட அவன் மனதில்  திட்டமிட்டு இருந்தான்..

பின் அவனின் சின்ன பேபியிடமும் பேசி விட்டு தன் கை பேசியை அணைத்தவன் மனது முன்  போல் அமைதி இல்லாது இருக்கவில்லை..

அடுத்து சரணை என்ன செய்யலாம்… எந்த வழியில் சாருவை பற்றி அவன் யோசிக்க கூட கூடாது என்று யோசித்தவன் யாருக்கோ   பேசியில் அழைத்து, சொல்ல வேண்டியது அனைத்தையும் சொல்லி  முடித்தவன்..

பின்.. “ மூன்று நாட்களுக்குள்  முடித்து விட வேண்டும்..” என்றதற்க்கு மட்டும் அந்த பக்கத்தில் கொஞ்சம்  தயங்கி கொண்டு..

“ ஒரு வாரம் ஆகும் சார்..” என்றதில்… சிறிது யோசித்த  ஷ்யாம்..

“ ஐந்து நாட்களுக்குள் முடித்து விட வேண்டும்..” என்று திட்ட வட்டமாக சொல்லியவன் “ அதற்க்கு மேல் ஆக கூடாது..” என்றும் சொல்லி விட்டான்..

திருமணத்திற்க்கு இன்னும் ஒரு மாதம் கூட கிடையாது.. அடுத்து  இரண்டு நாட்களில் வருவது தான் துணி மணி எடுக்க நல்ல நாள் என்று   அவனின் தனம்மா சொல்லி விட்டார்கள்..

தன் திருமண நாள் என்ன.. ?  திருமணத்திற்க்கு  நிகழ்வுகளின்  அனைத்துமே சக்தி மன மகிழ்ச்சியோடும் …நிம்மதியோடும்…   இருக்க வேண்டும் என்று ஷ்யாம் நினைத்தான்..

அவனுக்கு தெரியும்.. சாருவின் பக்கம் சரணை அண்ட விடாமல் அவனால் செய்ய முடியும் என்று.. ஆனால் சக்திக்கு அவனை பற்றி முழுவதுமாக தெரியாது  அல்லவா…? ஆம் அவன் நினைத்தது போல் சக்திக்கு ஷ்யாம் ஏதோ பைனான்ஸ் வைத்து நடத்திக் கொண்டு இருக்கிறான்..

அதுவும் அது அவன் தாத்தா ஆரம்பித்தது…  அதை இவன் எடுத்து செய்கிறான் என்ற அளவில் மட்டுமே அவனை பற்றி அவளுக்கு தெரிந்த விசயம்..

இன்னும் கேட்டால் ஷ்யாமை பற்றி கொஞ்சம் லேசான மதிப்பீடு தான் அவளிடம் உள்ளது என்று சொன்னால் சரியாக இருக்கும்..

ஏன் என்றால் தன் விசயத்தில் தன் அப்பா போட்ட ஜாமீன் கைய்யெழுத்தில் எதுவும் செய்யாது விட்ட அன்று தன் அன்னையிடம்  பேசும் போது..

ஷ்யாமை பற்றி குறிப்பிடுகையில்… “ ரொம்ப  இலகிய மனசு போல…  நல்லவர் தான். ஆனால்  அவர் செய்யிறது  பைனன்ஸ் .. இது  போல இருந்தா.. அது எப்படி  போகுமோ..” என்று  சொன்னாள்.. 

சக்தியின் மனதில் ஷ்யாம் நல்லவன் என்று தான் இருக்கிறது.. ஆனால் கூடவே இந்த மதிப்பீடும் உள்ளது தான்.. ஷ்யாம் சாருவை பற்றி பேசும் போது சொன்னான் தான்.. லீகலா…?  இல்லீகலா…? போவதா என்பதை பற்றி..

சக்தி அதை பற்றி எப்படி எல்லாம் யோசிக்கவில்லை.. இப்போது அந்த இரவு நேரத்தில் ஷ்யாமிடம் பேசிய பின் தான் ஷ்யாம் இன்று  மாலை சொன்ன வார்த்தைகள் நியாபகத்தில் வந்தது. ,

அதனால்  வாட் சாப்பில் மெசஜாக… “ பழக்கம் இல்லாத வேலை செய்து பிரச்சனையில் மாட்டி கொள்ளாதிங்க.. .” என்று  சக்தி ஷ்யாமுக்கு அனுப்பினாள்…

சாருவை பற்றி ஷ்யாம் பேச வேண்டியவர்களிடம் பேசி விட்ட பின் சக்தி அனுப்பிய மெசஜை  படித்தவன்..  மெல்ல தனக்குள் புன்னகைத்துக் கொண்டான்..  கூடவே இவளுக்கு நான் செய்யும் தொழில் தெரியும் தானே…  என்று அப்போது அவன் மிக ஈசியாக அதை நினைத்து விட்டான்…

திருமண புடவை எடுக்கும் நாளும் வந்தது… சக்தி விருப்ப படி  அவள் நினைத்த கடையில் இரு குடும்பமும் சேர்ந்தனர்.. குடும்பம் என்றால், சக்தி வீட்டின் குடும்பம் என அவள், அவள் அம்மா, சாரு.. ஷ்யாம் வீட்டில் அவன் , அவனின் தனம்மா , கிருஷ்ணமூர்த்தி, கூடவே சூர்யா அவ்வளவே..

சூர்யாவை பார்த்து தனம்மா.. “ என்னடா   மத்தவங்க வாயில் அடித்து பிடுங்க போகலையா…?” என்று  கொஞ்சம் ஆதாங்கத்துடன் தான் கேட்டார்..

சூர்யா.. தர்மசங்கடத்துடன் தன் நண்பன் ஷ்யாம், பெரியவர் கிருஷ்ணமூர்த்தியின் முகத்தை பார்க்க, ஷ்யாமோ எப்போதும் செய்வது போல்..அவர் தோளின் மீது கை போட்டு அவரை மலை இறக்கும் பணியில் இறங்கினான்..

ஆன் தனம்மாவுக்கு இந்த பைனான்ஸ் வைத்து நடப்பது  சுத்தமாக பிடிக்கவில்லை.. 

“ தனம்மா..” என்று ஒரு சில கொஞ்சல் பேச்சில் அப்போது, அதாவது தற்காலிகமாக அவரின்  ஆதங்கத்தை குறைத்து  விட்டான் என்று வேண்டுமானலும் சொல்லலாம்…

இந்த பேச்சு வார்த்தையின் போது சக்தியும், அவள் தாயும் சிறிது தள்ளி நின்று கொண்டு இருந்ததால், வார்த்தைகள் காதில் விழவில்லை..ஆனால் காட்சி… 

ஷ்யாம் தனம்மாவின் தோள் மீது கை போட்டு தன் அருகில் நெருக்கி கொண்டு ஏதோ பேசுவதை சக்தி மகிழ்ச்சியுடன் பார்த்து கொண்டு இருந்தாள்..

சக்தியின் தாயோ… “ சக்தி நீ ஷ்யாம் தம்பியை நல்லா பார்த்துக்கனும்… காசு, பணம் இருந்து என்ன புன்னியம் பாவம்  அம்மா பாசத்துக்கு ஏங்கி இருந்து இருக்கான்.. 

தனம்மா மூன்று நாள் முன் போன் செய்து சொன்னப்ப எனக்கு ஒரு மாதிரி ஆகி விட்டது..  எப்போவும்  நீ ஷ்யாமை புரிந்து நடந்து கொள்ள  வேண்டும்…”  என்றதற்க்கு..

 சக்தி…  “ கண்டிப்பாம்மா.. நான் எப்போவும் உங்க மாப்பிள்ளை மனசு அறிந்து  நடந்து கொள்வேன் போதுமா..?” என்று கேட்டுக் கொண்டே சக்தியும் ஷ்யாம் செய்தது போல் தன் தாயின் தோள் மீது கை வைத்து செல்லம் கொஞ்சினாள்..

சாருவும்.. “ நானு நானு..” என்று தன் இரு கையையும் சக்தி பக்கம் நீட்டி தன்னை தூக்கும் மாறு சொல்லவும், சக்தியும் சிரித்துக் கொண்டே சாருவை தூக்க.. அவளும் தன் அன்னையின் தோள் மீது கை வைத்து அவளின் இரு கன்னத்திலும் முத்தம் மிட.. அதை அழகாக  ஷ்யாம் தன் கை பேசியில் படமாக  பிடித்துக் கொண்டான்…

கடையின் வெளி பக்கம் இது போல் பாச பயிர் வளர்த்தவர்கள்.. கடையின் உள்ள காதல் பயிர்.. உணர்ச்சிகரமான சம்பவம் என்று எல்லாம் நடந்தது….

ஷ்யாம்  இங்கு வருவதற்க்கு முன்னவே  தன் தனம்மாவிடம்  சொல்லி விட்டான்ன.

“ தனம்மா புடவை.. நகை எது என்றாலும், சக்திக்கு பிடித்தது போல் எடுத்து கொள்ளட்டும் என்று..”

“ அது தான்  முன்னவே சொல்லிட்டியே கண்ணா..” என்று சொல்ல..

கிருஷ்ணமூர்த்தியோ.. “ உன் மனைவிக்கு பிடித்தது போல் மட்டும் தான் எடுக்க வேண்டும் என்றால், என் மனைவி ஏன்டா வர வேண்டும்…?” என்று கோபமாக கேட்பது போல் இருந்தாலும், கிருஷ்ணமூர்த்தியின் குரலில் கொஞ்சமும் கோபம் இல்லை..

அதற்க்கு ஷ்யாம்.. “ ஆமாம் தானே… எதுக்கு நீங்க இரண்டு பேர் வரனும்… நீங்க வந்தா என் பெரிய பேபி என் கிட்ட பேசவே ரொம்ப கூச்ச படுறா…?” என்று கிண்டல் பேசி முடித்து தான் இதோ இங்கு வந்தது.

ஆனாலும் அவனின் தனம்மா  கடைக்குள் நுழைந்த உடன்  பெரிய பெரிய சரிகை வைத்து..  புடவை விலை அதிகமாக  இருக்கும் இடம்  பக்கம் அவரின் கால்கள் சென்றது..

சக்தியோ தயக்கத்துடன் முதலில் சாப்ட் சில்க் சரிகை அதிகம் இல்லாத புடவையின் பக்கம் நின்று விட்டவள்..

இப்போது இங்கு பார்ப்பதா.,.?  இல்லை பாட்டியை பின் தொடர்வதா…?  என்று யோசிக்கும் போதே  அவளின் அன்னை சக்தியின் கை பற்றி..

“ அவங்க பின் போ..” என்பது  போல் ஜாடை காட்டினார்..

இதை அனைத்தையும்  கையில் சாருவை பிடித்து கொண்டு பார்த்து கொண்டு இருந்த ஷ்யாம்… தன் பக்கத்தில் நின்றுக் கொண்டு இருந்த தன் தாத்தா கிருஷ்ணமூர்த்தியிடம்..

“ பார்த்திங்களா உங்க மனைவி என செய்யிறாங்க என்று..?” சொன்னதற்க்கு..

கிருஷ்ணமூர்த்தி.. “ சக்திக்கு எடுக்க இருக்காதுடா.. வீட்டில் சொன்னா குலதெய்வம் கோயிலுக்கு பட்டு புடவை சாத்தனும் என்று.. அதுக்கா இருக்கும்.. இல்லேன்னா உன் கல்யாணத்துக்கு  என் பொண்டாட்டி அதிக விலையுள்ள புடவை கட்ட கூடாதா என்ன..?”என்று கிருஷ்ணமூர்த்தி  சொல்லி முடித்தார்..

அப்போது   தனம்மா சக்தியை பார்த்து.. “ இங்கு வா…” என்பது போல் சைகை  செய்ய… சக்தியின் தாயோ.. “ போ..” என்பது போல் செய்கை செய்தார்..

சக்தி ஆசையோடு தான் நின்று கொண்டு இருந்த இடத்தில் அடிக்கி வைத்திருந்த புடவையின் பக்கம் பார்வை செலுத்திய வாறே, தனம்மாவிடம் செல்ல  பார்த்தவளை இப்போது கை பிடித்து தடுத்து நிறுத்திய  ஷ்யாம்..

கிருஷ்ணமூர்த்தியின் பக்கம் பார்த்திங்களே என்பது போல் ஒரு பார்வை பார்த்து கொண்டே சக்தியிடம்..

“ நீ இங்கேயே எடு. நான் தனம்மாவை அழச்சிட்டு வர்றேன்..” என்று  ஷ்யாம் சொன்னதுமே, சக்தியின் முகத்தில் அவ்வளவு நிம்மதி..

அது என்னவோ சக்திக்கு அதிகம் சரிகை உள்ள.. அதுவும் விலை அதிகம் போட்டு பட்டு புடவை எடுத்து அதை ஒரே ஒரு  முறை அணிந்து  பீரோவில் வைப்பவர்களை நினைத்தால், இவர்கள் ஏன் அதற்க்கு இவ்வளவு காசு போடுறாங்க..

பீரோவிலேயே  வைத்து அது  நஞ்சி தான் போக போகிறது.. அதற்க்கு நகை வாங்கி வைத்தாலாவது வருடம் போக போக அதன் மதிப்பு உயரும் என்பது அவளின் எண்ணம்..

 அதை சக்தி தன் அக்கா அப்பா உயிரோடு இருக்கும் போது தன் அன்னையிடம் சொல்லி இருக்கிறாள்..

“ எனக்கு எல்லாம் இவ்வளவு விலை கொடுத்து புடவை எடுக்க கூடாது என்று..”

அதற்க்கு அவள் அக்கா.. “ பட்டு புடவை அவங்க தான்டி  எடுத்து கொடுப்பது..” என்றதற்க்கு..

“ யார் பணமா இருந்தால் என்ன..?” என்று சொன்னவள் கூடவே..

“ நகையும் எடுத்து கொடுப்பாங்க தானே.. இந்த பணத்தை அதில் போடட்டும்.”  என்று  சக்தி சொன்னதும் அவள் அக்கா …

 “ பார்த்தியாமா  உங்க சின்ன  பெண் எவ்வளவு விவரமா இருக்கா என்று…” என்று அன்று அந்த உரையாடல் சக்தி அவள் அம்மா இருவருக்குமே நியாபகத்தில் வந்தது..

“ உன் விருப்ப படி தான் அவரும் ஆடரார்..” என்று தன் வருங்கால மருமகனை  காட்டி  சொன்ன அவள் அன்னைக்கு, சின்ன மகளின் வாழ்க்கை நினைத்து மகிழ்ந்த அதே வேளயில்,  தன் பெரிய மகளின் வாழ்க்கை இவ்வளவு சீக்கிரம் முடிந்து இருக்க வேண்டாம் என்று நினைத்தவரின் பார்வை தன்னால் தன் பேத்தி சாருமதியின்  பக்கம் சென்றது..

இந்த கடைக்கு வநத்து முதல் தன்  அப்பாவின் தோள் மீது ஏறியவள் தான்.. இறங்காது இதோ இப்போது ஷ்யாம் அவன்  தனம்மாவை அழைக்க செல்லும் போதும் தூக்கி கொண்டு செல்பவரை பார்த்தவருக்கு தன் பெரிய மகள் வாழ்க்கை தான் இப்படி முடிந்து விட்டது..

தன் சின்ன மகளும், தன் பேத்தியும் நன்றாக இருந்தால் போதும் என்று அந்த கடவுளுக்கு அவசர அவசரமா ஒரு க வேண்டுதல் வைத்தார்..

அதற்க்குள் ஷ்யாம் தன் தனம்மாவை  இவர்கள் இருக்கும் இடத்திற்க்கு அழைத்து வந்து விட்டார்… அழைத்து வரும் போது ஷ்யாம் தன் தனம்மாவிடம் என்ன பேசினான் என்று தெரியவில்லை..

தனம்மாவின் முகத்தில் பழைய பொலிவு சிறிது குறைந்து காணப்பட்டது.. அதை கவனித்த சக்தி..

“ பாட்டிம்மா உங்களுக்கு அங்கு இருக்கும் புடவை தான் பிடித்து இருக்கு என்றால், நாம அதையே  எடுத்துக்கலாம்..” என்று சொன்னதோடு தனம்மாவின் கை பற்றி அங்கு அழைத்து செல்ல பார்த்த சக்தியின் கை பிடித்து தடுத்து நிறுத்திய தனம்மா..

“ ஷ்யாம்  சொன்னது எல்லாம் சரி தான்டா.. இப்போ இருக்கும் பெண்கள் இது போல் பெரிய சரிகையை விரும்புவது இல்லை தான்..

ஆனா நான் அந்த காலத்து மனுஷி இல்லையா.. அது தான் கல்யாண புடவை என்றாலே, என் கண் முன் பெரிய பார்டர் வைத்த புடவை தான் வருது…” என்று சொன்னவர் பின் ஒரு தயக்கத்திற்க்கு பின்..

“ எனக்கு பெண் குழந்தை என்றால்  மிக பிடித்தம் சக்தி..  அவங்களுக்கு தானே அழகாக உடை நகை போட்டு பார்க்கலாம் …ஆனா  எனக்கு .. “ ஷ்யாமை காட்டி..

“ இவன் அப்பன் பிறந்தான்.. அடுத்து பிறக்கும் என்று ஆசைப்பட்டேன்.. ஆனால் கடவுள் எனக்கு ஒரே மகன் தான் என்று தலையில் எழுதி விட்டான் போல்..

சரி வரும் மருமகளுக்கு  வாங்கி போட்டு அழகு பார்க்கலாம் என்று நினைத்தேன்.. கல்யாணம் ஆன அடுத்த மாசமே மசக்கை.. இது போல சமயத்தில் எல்லாம் பொண்ணுங்களும் அம்மா கூட இருக்க தான் ஆசைப்படும்..

அவளும் ஆசைப்பட்டா… அனுப்பி  வைத்தேன்… சீமந்தம் முன் நாள் வர  வழைத்து செய்தேன்.. திரும்பவும் அங்கு போனா.. அதுக்கு அப்புறம் தான் உனக்கு தெரியுமேம்மா..” என்று சொல்லில் கொண்டு  வந்த தனம்மா கண்களில் கண்ணீர் முட்டி கொண்டு தான் வந்தது…

ஆனால்  திருமணத்திற்க்கு புடவை எடுக்க என்று வந்து விட்டு, அழகூடாது என்றே தன்னை அடக்கி கொண்டார்..

 ஷ்யாமுக்கு   தன் தனம்மாவின்  நிலை புரிந்து.. “ இப்போ என்ன தனம்மா  சக்திக்கு எல்லாம் வாங்கி போட்டு அழகு பார்க்கனும் என்று நினைக்கிறிங்க.. அவ்வளவு தானே.. கல்யாண புடவை மட்டும் அவள் தேர்வா இருக்கட்டும்.. இனி அவள் உடுத்தும் எல்லாம் நீங்க வாங்கி தந்ததா தான் இருக்கும்.. போதுமா..?” என்று சொன்னவனின்  கையை பிடித்து கொண்டார் தனம்மா..

“ நீ பொழச்சிப்ப.. என் மனமும்  நோக கூடாது.. பெண்டாட்டியையும் சந்தோஷப்படுத்தனும்..” என்று கிண்டல் செய்ய… இவை அனைத்தையும் சக்தியின் அம்மா ஷ்யாமின் தாத்தா மன நிறைவோடு பார்த்து கொண்டு இருந்தனர்..

கடையின் உள்ளே ஷாமின் குடும்பம் மகிழ்ச்சியில் திளைக்க.. அவன் குடும்பத்தின் மற்றோரு அங்கமான அவனின் தாய் வேதனையில் துடித்து கொண்டு இருந்தார்… அதை சூராவின் கை பேசியின் மூலம் தெரிவித்து கொண்டும் இருந்தார்…

Advertisement