Advertisement

கெளசல்யா பேச பேச இரு பெண்களுமே  விக்கித்து தான் போயினர்.. அவர்களுக்கு ஏற்கனவே தன் அன்னை மகிழ்ச்சியுடன் இல்லை என்பது  தெரியும் தான்.

அதுவும் பார்த்திபன் குணம் என்ன என்று வளர்ந்த இரு பெண்களுக்கும் தெரியாதா இருந்து இருக்கும்… ஆனால் தன் தாய் தன் மகனை நினைத்து கலங்கிய கலக்கம்..

அதுவும் வெளியில் சொல்ல முடியது உள்ளுக்குள் வைத்து இத்தனை  ஆண்டு தவித்த தப்பிற்க்கு வேறு ஒருவர் யாராவது இருந்து இருந்தால், கண்டிப்பாக மன அழுத்திற்க்கு ஆளகி இருப்பார்கள் என்பது நிச்சயமே என்று நினைத்து இருபெண்களும் தன் அன்னையின் இரு பக்கமும் அமர்ந்து கொண்டு நான் இருக்கிறேன் என்று போல் தோள்  மீது கை வைத்து அழுத்தம்  கொடுத்தனர்…

அதுவும் தனுஜாவின் நிலை தான் இன்னும் மோசம்..   வேறு ஒருவள் பெற்ற தன்னை பெற்ற பெண் போல் வளர்க்க வேண்டும்.. ஆனால் சொந்த மகனை பார்ப்பது என்ன அவனை பற்றி பேசவும் கூடாது என்பது எந்த வகையிலும் நியாயம் இல்லையே..

நல்ல வேலை கெளசல்யா  அம்மா நல்லவர்களாக இருந்த தொட்டு தான் சித்தி கொடுமையில் இருந்து தப்பித்தோம்..

இதே வேறு யாராவது இருந்து இருந்தால், கண்டிப்பாக அவர் மகனை அவரிடம் இருந்து  பிரித்ததிற்க்கு பழியாக தனக்கு தான் தண்டனை கொடுத்து இருப்பார்கள் என்று நினைத்தவள்.. கூடவே ..

இப்போது தான் தன் தந்தை இல்லையே…எப்படியாவது இவர்களை அண்ணாவிடம் சேர்த்து வைத்து விட வேண்டும்..

இனியாவது மகனோடு இருக்கட்டும் என்று நினைத்தவளுக்கு அப்போது தெரியவில்லை..

அது அவ்வளவு சுலபமாக முடியாது என்பதும்…  தன் தந்தை  பேசி  தன் அம்மாவை காயம் செய்தது என்ன…? அதை விட பெரிய காயம் எல்லாம் கெளசல்யா  அவர் மகனால் பட போகிறார் என்று தெரியாது தன் அண்ணாவையும், தன் அம்மாவையும் எப்படி  சந்திக்க  வைப்பது என்று  தன்  தங்கையிடம் ஆலோசனை  செய்து கொண்டு இருந்தாள்…

ஷ்யாம்  எப்போதும் போல்  தன் இரவு உணவை தன் தனம்மாவின் கையில் பரி மாறி உண்டு கொண்டு இருந்தவன். இடை இடையே தனம்மாவையும் பார்த்து கொண்டு தான் இருந்தான்..

பாதி உணவில்.. “ என்ன தனம்மா என் கிட்ட ஏதாவது சொல்லனுமா…? என்று கேட்டதற்க்கு, அவனின் தனம்மா பதில் அளிக்காது..

“ சாப்பிடு கண்ணா பேச்சு என்ன எப்போதும் பேசுவது தானே…” என்று கேட்டார்..

அப்படியா என்பது போல் அவரை பார்த்த ஷ்யாம் சிரித்துக் கொண்டே … தன் உணவை தொடர்ந்தான்..

என்ன எப்படி கேட்டாலும், தன் தனம்மா சொல்ல மாட்டார் என்பது அவனுக்கு தெரியும்… சாப்பிடும் போது பேச கூடாது என்பது கிடையாது..

தனக்கு பிடிக்காத விசயம் என்றால், தான் இப்படி தான் சாப்பிட்டு முடிக்கும் வரை அந்த விசயத்தை சொல்ல மாட்டார்… காரணம் இடையில்  முழுவதும் சாப்பிடாது  எழுந்து விடுவேன் என்பதால்,

தனம்மா தன்னிடம் பேச தான்  காத்து கொண்டு இருகிறார் என்று தெரிந்ததால், தன் உணவை விரைவில் முடித்து கொள்ள கட கட என்று சாப்பிட..

தனம்மா அப்போதும்.. “ என்ன ஷ்யாம் அவசரம்,  மெதுவா தான் சாப்பிடேன்…” என்று தன் பேரன் உணவை ரசித்து சாப்பிடாது இருக்கிறானே என்று ஷ்யாமின் மீது இருக்கும் பாசத்தில் சொன்னார்..

“ தனம்மா நான் மெதுவா தான் சாப்பிடுறேன்..” என்று சொல்லி சாப்பிட்டு முடித்தவன்,  எழுந்து கை கழுவிய பின் தனம்மாவின்  கை பிடித்து அழைத்து ஹாலில் இருக்கும் இருக்கையில் அமர வைத்தவன்.. அங்கு வேலை செய்யும்  வேலையாளிடம் டையினிங் டேபுலில் இருப்பதை சுத்தம் செய்ய  சொல்லி விட்டு..

“ம் இப்போ சொல்லுங்க  தனம்மா என் கிட்ட என்ன சொல்லனும்..” என்று கேட்டான்..

இவ்வளவு நேரமும் அவன் சாப்பிட்டு முடிக்கும் வரை அவனிடம் பேச காத்துக் கொண்டு இருந்த அவனின் தனம்மா, அவனே என்ன விசயம் என்று கேட்ட பின்  எப்படி சொல்வது என்று தயங்கினார்..

அதுவும்  அவன் சாப்பிடும் வேலையில் பேரனுக்கு பார்த்து, பார்த்து பரி மாறிக்  கொண்டு இருந்தாலுமே, மனதில் ஓரத்தில் அது பாட்டுக்கு.

பேச்சை எப்படி ஆரம்பிப்பது.. அதுவும்  அவனை கோபப்டுத்தாது, அவன் அம்மாவை பற்றி எப்படி பேசுவது என்று யோசித்து தான் வைத்திருந்தார்..

ஆனாலும் இப்போது ஷ்யாம் என்ன என்று கேட்கவும்  இப்போது பேசுவதா..? வேண்டாமா…? என்று யோசித்துக் கொண்டு இருந்தார்…

பேரன் கேட்ட உடன் என்ன விசயம் என்று சொல்லவில்லை என்றாலுமே , சிறிது நேரம் கழித்து..

“ கெளசல்யா போன் செய்தா கண்ணா…” என்று சொல்லி விட்டு ஷ்யாமின் தாடையை  பிடித்து கொண்டவர்..

“ கோபப்படாது நான் சொல்றதை கேட்பது மட்டும் இல்லாம கொஞ்சம் யோசிச்சி பாருப்பா… ஒரு தாய்க்கு குழந்தையை விட்டு பிரிவது என்பது  சந்தோஷத்தை  கொடுக்கும்  என்று நினைக்கிறியாப்பா…?” என்று கேட்ட அவனின் தனம்மாவுக்கு ஷயாமிடம் இருந்து உடனே பதில்  கிட்டியது..

“ இல்லை… சந்தோஷம் என்ன..?  அவங்க வாழ் நாள் முழுவதும் நிம்மதி இல்லாது தான் இருப்பாங்க..” என்று சேர்த்தும் சொன்னான்…

அவனின் பேச்சு தனமாவுக்கு குழப்பத்தி தான்கொடுத்த்து.. இப்போது இவன் உள்ள நிலையை சொல்கிறானா..? இல்லை வரும் காலங்களில் கூட கெளசல்யா நிம்மதியற்று தான் இருப்பாள் என்று வருங்காலத்தையும் சேர்த்து  குறிப்பிடுகிறானா..? என்று குழப்பத்துடன் தான்  தன் பேரன் முகத்தை பார்த்தார்..

“ தனம்மா நான் இப்போ கோபம் எல்லாம் படவில்லை.. இருந்த சூழ்நிலை.. அவங்க இருக்கும் சூழ்நிலை இதை தான் சொல்றேன்…” என்றவனின் பேச்சில் அந்த மூதாட்டிக்கு கொஞ்சம்  தைரியம் வரலாயிற்று…

பரவாயில்லை நாம் இன்னும்  பேசினால், அவன் தாயோடு இல்லை என்றாலும், பேசியில் பேசுவான் வரப்போவதுமாக  இருப்பான் என்ற தைரியத்தில்..

“ அது தான் சொல்றேன் கண்ணா.. என் மகன் யாரின் மனதையும் நோக அடித்ததா இருக்க கூடாது கண்ணா.. அதுவும் ஒரு தாயின் மனதை.. இருக்கவே இருக்க கூடாது…” என்ற தனம்மாவின் பேச்சில், ஷ்யாம் புருவம் மேலிட அவரின் முகத்தை பார்த்தான்.

ஷ்யாமின் பார்வையில்  அவனின்  தனம்மா… “ எனக்கு உன் வேதனையும்  புரியுது கண்ணா.. ஆனால் போனதை யாராலு மாத்த முடியாது.. ஆனா   இனியாவது யாரின் மனதும் நோகாது இருக்கலாம் கண்ணா… அதுவும் நாங்க இன்னும் எத்தனை நாளோ..” என்ற அவரின் பேச்சில் தன் தாடையை பற்றி இருந்த தன் தனம்மாவின் கையை தட்டி விட்டவன்..

“ தனம்மா இந்த பேச்சு.. இனி ஒரு தரம் என் முன் பேச கூடாது .. ஆமா சொல்லி விட்டேன்..” என்று கோபத்தோடு பேசி விட்டு, எழுந்து செல்ல பார்த்தவனின் கை  பிடித்து தடுத்து நிறுத்திய தனம்மா…

“ கோச்சிக்காதே கண்ணா.. நான் நிதர்சனத்தை பேசுறேன். எனக்கும் உன் பாட்டானுக்கும் வர வர வயது ஏறுதா..? குறையுதா…? குறுத்து கட்ட உன் அப்பனே உடைந்து விட்டான்.. நான் எல்லாம் உதிர போகும் சருகு கண்ணா…

நாளை பின்ன எது என்றாலும் நடக்கலாம்.. நான் போகும் முன் உன்னை மனைவி குழந்தை என்று மட்டும் இல்லாம உன் அம்மா தங்கை என்று உன்னை ஒரு பெரிய குடும்பமா பார்த்துட்டா போதும் கண்ணா…” என்று  பேசிக் கொண்டு இருந்த தனம்மாவின் கண்ணில் இருந்து வந்த கண்ணீரை  துடைத்து விட்ட ஷ்யாம்..

“ இப்போ என்ன தனம்மா நான் அம்மா தங்கையோடு ஒரு பெரிய  குடும்பமா இருக்கனும் அவ்வளவு தானே..?” என்று மிக எளிதாக   பேசிய  ஷ்யாமின் பேச்சை..  அவனின் தனம்மா நம்ப முடியாது அவனை நிமிர்ந்து பார்த்தார்..

பக்கத்தில் அமர்ந்து இருந்த தனம்மா தன் முகத்தை பார்க்க நிமிர்ந்து பார்த்துக் கொண்டு பேசுவதில் அவர் கழுத்து வலிக்கும் என்று அப்போது தான் ஷ்யாம் உணர்ந்தவனாக..

சட்டென்று  எழுந்தவன் தனம்மாவின் காலுக்கு கீழ் அமர்ந்து கொண்டவன்.. சிரித்துக் கொண்டே அவரின்  மடி  மீது தன் தாடையை பதித்த வாறு, இப்போது தான் நிமிர்ந்து தனம்மாவை பார்த்து கொண்டே..

“சக்தி அம்மாவை நான் அம்மாவா ஏத்துக்கிறேன்..” என்ற அவனின் பேச்சில், தனம்மா நான் என்ன சொல்றேன் இவன் என்ன பேசுக்கிறான் என்ற கோபத்தில் அவனை முறைத்து பார்த்தார்..

“ என்ன தனம்மா முறைக்கிறிங்க.. ஏன் மாமியாரை அம்மாவா பார்க்க கூடாதா..?” என்று கேட்க..

தனம்மா…” பார்க்கலாம்..” என்று சொன்னவரை அதற்க்கு அடுத்து பேச விடாது அவனின் ஷ்யாம்..

“ ம் அவங்க அம்மா அப்புறம்… நம்ம சூர்யா எப்போ பார்த்தாலும் எனக்கு இரண்டு தங்கை… இரண்டு தங்கை …என்று புலம்பிட்டே இருக்கான்… 

அவங்களுக்கு நான் எப்போ சீர் செய்து கல்யாணம்   செய்து கொடுப்பது.. நான் எப்போ குடும்பஸ்த்தன ஆவது என்று ஒரே புலம்பல்..

அவன் தங்கைகளும் சின்ன வயதில் இருந்து என்ன பாசமா அண்ணா அண்ணா என்று தான் கூப்பிட்டு இருக்காங்க .நான் அவங்களை ஸ்வீகாரம் எடுத்து கொண்டா  சூர்யாவின் பிரச்சனையும் சால்வ்..

உங்க ஆசையான நான் பெரிய குடும்பமா உங்க கண் முன் வாழ்வேன்.. என்ன சொல்றிங்க..?” என்று கேட்டு விட்டு எப்போதும் செய்வது போல் அவன் தன் புருவத்தை உயர்த்தியும்  கேட்க..

 தனம்மாவுக்கு புரிந்து விட்டது.. ஷ்யாம் தன் மனதை வருத்தம் செய்யாது இந்த பேச்சை இலகுவாக முடித்து விட நினைக்கிறான் என்று..

ஆனாலும் மதியம்  அந்த பெண் தனுஜாவும்,  ஷைலஜாவும் , கெளசல்யா பேசியதை சொல்லி விட்டு..

“ ப்ளீஸ் பாட்டி  ப்ளீஸ்… நீங்க தான் எப்படியாவது அண்ணாவை அம்மாவிடம் பேச வைக்கனும்..” என்று கெஞ்சியது ஒரு பக்கம் தனம்மாவின் மனது வலித்தாலும், அவர்கள் சொன்ன..

பார்த்திபனை பற்றி.. கெளசல்யா ஷ்யாமை பற்றிய பேச்சை எடுத்தாலே, தன் மகனை நினைக்கிறாயா..? என்று கேட்கும் போது ஒரு பெண்ணாக கெளசல்யாவின் மன வேதனையை தனம்மாவால் நன்கு உணர முடிந்தது…

அதோடு அந்த பெண் ஷைலஜா.. அப்பா வேறு வேறு இருந்தாலும், அம்மா ஒன்று தானே… தன்  பேரன் சிறு வயது முதல் தனித்து இருந்தது போதும்.. இனி தங்கை என்ற உறவாக அவள் இருக்கட்டுமே  என்று நினைத்து தான் தன் பேரனை எப்படியாவது அவன் அம்மாவோடு பேச வைத்து விட வேண்டும் என்று நினைத்தார்..

பார்க்கலாம் அவர் முயற்ச்சி வெற்றி பெருமா என்று…

Advertisement