Advertisement

                             அத்தியாயம்….10

சொக்கலிங்கம் தன் மனைவி தன்னிடம் கொடுத்த சத்து மாவு கஞ்சியை குடிக்காது, கையிலேயே வைத்து கொண்டு இருப்பதை பார்த்த அவர் மனைவி சரஸ்வதி…

“ என்னங்க   யோசனையாவே இருக்கிங்க… அது தான் நம்ம மகள் பிரச்சனை தான் ஒரு முடிவுக்கு வந்து விட்டதே.. இன்னும் ஏன் இப்படி  ஏதையோ பரி கொடுத்தது போலவே  இருக்கிங்க..?” என்று கேட்டார்..

அதற்க்கு சொக்கலிங்கத்திடம் இருந்து பதில்  வராது, அவர் இன்னும் யோசனையிலேயே இருக்க.. அவரின் தோளை தொட்டு அவரை நிகழ் உலகுக்கு கொண்டு வந்த சரஸ்வதி…

மீண்டும்..” என்னங்க.. அது தான் எல்லாம் பிரச்சனையும் முடிந்து விட்டதே…” என்று சொல்லவும்..

சொக்கலிங்கம்..” எங்கு முடிந்தது..? பணப்பிரச்சனை ஒரு முடிவுக்கு வந்து விட்டது தான்… அது ஒன்று  தான் முடிவுக்கு வந்து இருக்கு..ஆனால்  அந்த பெண் தனுஜா கல்யாணம்.. 

அடுத்த மாதம் வந்தா  அந்த பெண்ணுக்கு  இருபத்தியெட்டு வயது.. இந்த வயதில் நம்ம இனத்து பெண்கள் இரண்டு குழந்தைக்கு அம்மாவாக ஆகி  இருப்பாங்க..” என்று ஒரு பெரும் மூச்சை விட்டு அந்த பெரியவர் சொன்னார்…

அதற்க்கு சரஸ்வதியம்மா.. “ அது தான் போன இடம் திரும்பவும் கல்யாணம் செய்து கொல்கிறேன் வந்து இருக்காங்க என்று நேத்து காலையில் நம்ம மகள் கெளசல்யா சொன்னாளேங்க…” என்று கேட்டார்…

“ ஆமா..ஆமா திரும்பவும் வந்தாங்க தான்… ஆனா முதல்ல மாப்பிள்ளை இருக்கும் போது முடிந்த நிச்சயம் …பின் கடன் நகைகள் அடகில் இருக்குன்னு தெரிந்து நிப்பாட்ட சொன்னது..

பின் நம்ம கடையை எழுத கொடுக்கிறேன் என்று சொன்னதும் திரும்ப வந்தது.. பின் திரும்ப போனது.. இப்போ அங்கு எந்த பணப் பிரச்சனையும் இல்லேன்னு தெரிந்து கொண்டு திரும்பவும் பல்லை இளித்து கொண்டு வர்றாங்க…

எனக்கு நேத்து கெளசல்யா  போன் செய்து சொல்லும் போதே,  மனசுல இடறிச்சி தான்.. நாளை கல்யாணம் ஆன பின்னும் ஏதாவது பிரச்சனை வந்தா.. அந்த பெண்ணை நடுத்தெருவில் நிற்க  வைக்க மாட்டாங்க என்று என்ன நிச்சயம் என்று..?

அந்த பெண்ணும் அதையே தான் சொல்லி இருக்கா.. கூடவே  ஷைலஜாவும்  இந்த இடம்  வேண்டாம் என்று தன் அக்காவுக்கு சப்போர்ட்டா நிற்கிறா…அதோடு இரண்டு பேத்திகளும் சொல்லிட்டாங்க.. இனி அந்த  பைனான்ஸ் கம்பெனியை நாங்க இரண்டு பேரா பார்த்துக்குறேம் என்று..” என்று ஒரு பிரச்சனையை சொக்கலிங்கம் சொல்லி முடிக்கவும்..

“ இதுக்கா இப்படி சோகத்தில் இருக்கிங்க.. அது தான் பேத்திங்க வெளியில் வந்து நாளும் கத்துக்க நினைக்குதுங்களே.. அதை நினைத்து சந்தோஷப்படுங்க..” என்று சொல்லி சரஸ்வதியம்மா தன் கணவனை தேற்றினார்..

பிரச்சனை இது மட்டும் இருந்து இருந்தால், அவரும் மனதை தேற்றி கொண்டு இருந்து  இருப்பாரோ என்னவோ.

ஆனால் அனைத்தையும் விட பெரிய  பிரச்சனை ஷ்யாம் பிரச்சனை கண்  முன் நிற்க்கும் போது, அவரால் எப்படி நிம்மதியாக இருக்க முடியும்..?

அதை சொல்லி விட்டார்.. “ நம்ம கெளசல்யா ஷ்யாம் பைனான்ஸ் கம்பெனிக்கு போன் செய்து பையன் கிட்ட பேச பிரியம் பட்டு இருக்கும்  போல.. ஆனா அவன் பேசல.. ஏன்  அவன்  குரல் கூட நம்ம மகளாள்  கேட்க முடியல   போல..

அது தான் போனில்  அவன் திட்டி இருந்து இருந்தா  கூட என் மனது   ஆறி இருந்து இருக்கும்.. ஆனால் அவன் என் கிட்ட பேச என்ன என் முகத்தை பார்க்க கூட அவனுக்கு அவ்வளவு வெறுப்பா இருக்கு  போலப்பா… என்று  அவள் கதறி   அழும் போது தான் என்னால் பார்க்க முடியல..

இப்போ தோனுது நாம பெரிய தப்பு  செய்து விட்டோமோ என்று..”

தாயும் மகனையும் பிரித்ததை காலம்  சென்று அதை நினைத்து வேதனைப்பட்டு என்ன  லாபம்..

“ அப்போ  நம்ம மகளுக்கு இரண்டாம்  கல்யாணம் செய்து வைத்தது தப்பு என்று சொல்ல  வர்றிங்களா..?” என்று சரஸ்வதியம்மா  தன் கணவனிடம் கேட்டார்..

“ நான் இரண்டாம் கல்யாணம்  செய்து வைத்தது தப்புன்னு சொல்ல வரல… குழந்தையோடு  ஏத்துக்கிறவங்களா பார்த்து கட்டி வைத்து இருக்கனும்…” என்று காலம் கடந்து இப்போது யோசித்து  பேசிக் கொண்டு இருந்தார்…

“ அது தான் நாம மூன்று வருடமா பார்த்துட்டு இருந்தோம்மே… ஒரு இடம் கூட முடியாது..

குழந்தை வளர்ந்துட்டு வர்றான் என்று தான் இந்த இடத்தை முடித்து வைத்தோம்..” என்று அவர்கள் ஏன் அந்த முடிவை எடுத்தனர் என்பதை அந்த சூழலை சரஸ்வதியம்மா தன் கணவருக்கு நியாபகம் படுத்தினார்..

“ ம் நீ சொல்வது எல்லாம் வாஸ்த்தவம் தான்.. ஆனா குழந்தை வளருது என்று பார்த்து நம்ம மகளுக்கு அவசரமா திருமணம் முடித்த நாம, கடைசியிகே அந்த குழந்தையை நாம பார்க்கவே இல்லலே…” என்று சொக்கலிங்கம் பேசிய அனைத்து பேச்சும்  நியாயமான பேச்சு தான்..

ஆனால் என்ன ஒன்று.. யோசிக்கும் சமயத்தில் யோசிக்காது… காலம் கடந்து யோசித்ததில் மொத்தமாக பாதிப்பு உள்ளானது ஷ்யாம் மட்டுமே.. என்று நாம் நினைத்துக் கொண்டு இருக்க..

அங்கு கெளசல்யா இத்தனை வருடங்கள்,  தன் மனதில் ஏற்றிக் கொண்டு இருந்த பாரத்தை தன் இரு மகள்கள் முன் கொட்டி கொண்டு  இருந்தார்.

தனுஜா இந்த இடம்  வேண்டாம் என்று மறுத்த போது கெளசல்யா அவளை வற்புறுத்த வில்லை,

“ உன் முடிவு சரி தான்..” என்பது போல் தான் சொன்னார்…

“ ஆமா ஒரு நிலையான மனது இல்லாதவனை கட்டி கொள்வதை விட, தனியாவே  இருந்து விடலாம்… மனதை  பாராது மற்றது முக்கியம் என்பவன்  உனக்கு வேண்டாம்.. அது ரண வேதனை..” என்று சொன்னவர் ஏதோ நினைத்து தன் நெஞ்சில் அடித்து கொண்டு கதறி தீர்த்து விட்டார்…

“ என்னிடம் உன் அண்ணன் பேசவே மாட்டானா.. ஷைலஜா..?” என்று ஏக்கத்துடன் கேட்கும் தாயுக்கு அந்த மகள் என்ன என்று ஆறுதல் சொல்வாள்..

“ நீங்கள் அப்போது செய்தது தப்பு தானேம்மா…?” என்று இந்த காலத்து பெண் மனதில் சரி என்று படுவதை அது யாராக இருந்தாலும் கேட்டு விடும் தன்மையில் கேட்டு விட்டாள்..

ஆனால் அதற்க்கு தன் அம்மா அழுத அழுகையில், ஷைலஜாவுக்கு  ஏன் கேட்டோம் என்று  ஆகி விட்டது…

தனுஜாவும் தங்கையை முறைத்து விட்டு.. “ அம்மா அவ ஏதோ தெரியாது பேசிட்டா அதை விடுங்க..” என்று கெளசல்யாவின் தோளை பிடித்து ஆறுதல் படுத்திய வளர்ப்பு மகளின் மீதே சாய்ந்து கொண்டவர்..

“ இல்ல தனு அவள் சொன்னது சரி தான்.. நான் செய்தது தான் தப்பு..

இதோ இப்போ நீ முடிவு எடுத்தியே.. இது போல ஒரு இடம் வேண்டாம் என்று.. நான் ஏன் அப்போ ஒரு முடிவு எடுக்கல.. குறைந்த பட்சம் உன் அப்பாவை பார்த்து உன் மகளை என் மகளா நான் வளர்க்கனும்..

ஆனால் நான் என் சொந்த மகனை பார்க்க கூட கூடாது என்று சொல்ல நீங்க யா…? ர் என்று கேள்வி கேட்க தைரியம் இல்லாது போயிடுச்சி…

என் அம்மாவிடமாது சொல்லி இருக்கனும்… என் மகனோடு என்ன ஏத்துக்கிறவனை என்னை கல்யாணம் செய்து வைங்க.. இல்லேன்னா எனக்கு கல்யாணமே வேண்டாம் என்று..

அப்பா சொன்ன என் காலத்துக்கு அப்போ நீ எப்படி  தனியா இருப்ப.. பணத்துக்கு குறை இல்லை தான்.. ஆனா மத்த பிரச்சனை..

அப்பா பிரச்சனை என்று  சொல்லும் போது என் கடையில் வேலை பார்த்தவன் முன் எல்லாம் என்னை மரியாதையா தான் பார்ப்பான்..

ஆனால்  நான் அப்படி ஆன பின்  கடை சாவீ வாங்கும் போதும்.. கொடுக்கும் போதும் கையை தடவி விட்டு அவன்  ஒரு சிரிப்பு சிரிப்பான் பாரு.. எனக்கு அப்படி அருவெறுத்து போயிடும்…

இது போல விசயத்தை தைரியமா சொல்ல  கூட எனக்கு அப்போ பயம்.. அப்போ என்ன உன் அப்பாவை திருமணம் செய்த பின்..

இதை ஒரு மகளா உங்க கிட்ட சொல்லலாமா  என்று கூட எனக்கு தெரியல.. ஆனா இது சொன்னாலாவது என் நெஞ்சி பாரம் கொஞ்சமாவது குறையாதா..? என்று தான் சொல்றேன்..” என்று சொன்ன கெளசல்யா…

“ படுக்கை அறையில் கூட  ஷ்யாம் அப்பாவை பத்தி ஒப்பிட்டு பேசுவார்… அப்போ என் மனசுல தோனும்… உங்க முதல் மனைவி கூட நீங்க சந்தோஷமா இல்லாமலேயா தனுஜா பிறந்தா என்று..

ஆனா அவர் சர்வ சாதரணமா சொல்ற விசயத்தை  என்னால்  நேக்கு போக்கா கூட  சொல்ல முடியாது… ஏன்னா நான் பொம்பளை…

தப்பா எடுத்துகாதே தனு..  நீ என்னை அம்மா என்று கூப்பிடும் போது எல்லாம்,  எனக்கு என் சொந்த மகன் என்னை அம்மா என்று கூப்பிட வழி இல்லாது இருக்கே என்று தான் எனக்கு தோன்றும்…

உங்க அப்பா பேச்சு கொஞ்சம் நஞ்சம் இருக்காது… ஓரிரு முறை நான் என் மகனை பத்தி பேச்சு எடுத்தாலே.. உனக்கு அவன் நியாபகம் வருதா அவன் அப்பா நியாபகம் வருதான்னு தான் கேட்பார்..

ஆனா இங்கு நான் வருடம் வருடம் அவர் முதல் மனைவிக்கு திதி கொடுத்துட்டு இருக்கேன்.. அவரும் அன்னைக்கு சாப்பிடாது தர்பணம் கொடுத்துட்டு வந்து  தான் சாப்பிடுவார்..

நீ செய்யும் ஒரு சில விசயத்தை பார்த்து  அவள் அம்மா போலவே செய்யிறா என்று சொல்வார்… ஆனா நான்  என் மகனை பத்தி பேச்சு கூட எடுக்க கூடாது..

உடனே உன்  அப்பாவுக்கு அவன் அப்பா தான் முதல்ல நியாபகத்தில் வரும்.. பின் தான் தெரிந்தது ஷ்யாமை   விட்டு என்னை  தூரம் விலக்கியதே.. எந்த சூழநிலையிலும் எனக்கு ஷ்யாம் அப்பா நியாபகத்தில் வரவே கூடாது என்று நினைக்கிறார் என்று…

அதுவும் உங்க அப்பாவை கல்யணம் முடித்து உன்னோடு தான் நாங்க தேன்நிலவு என்று கூட்டிட்டு போனார்.. மகனை  பிரிந்த புதிது..  ஏன் சிரிக்க மாட்டேங்கிற… ஏன் பேச மாட்டேங்கிற…?  அப்போ எனக்கு எப்படி இருக்கும்…?

அதுவும் நான் வீடு வந்த போது ஷ்யாமோட தாத்தா வந்து குழந்தை ஹாஸ்பிட்டலில் இருக்கான்..” என்று சொன்ன கெளசல்யவால் அதற்க்கு அடுத்து பேச கூட முடியாது விக்கி விக்கி அழுதவர்.. அதன் பின் ஓய்ந்து தான் போனார்…

Advertisement