கொஞ்சும் கிளிகள் அத்தியாயம் 23

    அபிராமி பார்வை முழுக்க வெற்றி மீது தான். அவன் திருமண வாழ்வின் லட்சணத்தை  தனம்  ஒன்று விடாமல் சொல்லி விட்டார்.  பார்க்கவே பரிதாபமாக, நொந்து போய் திரிந்தான். 

      அவனோடு பேச, தோலில் சாய்ந்து ஒரு மூச்சு அழுது கரைய மனம் உந்தியது.  கண்ணோடு கண் கலந்து ஒரு பார்வை பார்க்க எண்ணம் பிறந்தது. மாயாவை பிடித்து தான் வெற்றியை அறைக்கு வர வைத்தாள்.

   என்னவோ என்று வந்தவன், அபிராமியை எதிர்பார்க்க வில்லை. ஒரு நொடி மனதில் சரண்யா முகம் தான், நெஞ்சில் பயம் கவ்வியது. வெற்றி மனதில் முன் நின்றது சரண்யா தான். அபிராமியை மறக்க முடியவில்லையே தவிர, மனைவியாக மனதில் நின்றது சரண்யா தான். 

    “அபி…”  குரலில் பயம்  கொட்டி கிடந்தது. 

        “மாமா…” காதலும், அதை இழந்த வலியும் முன் நின்றது.

    “ வலிச்சாலும் கடந்திடு அபி. உனக்கு துரோகம் செஞ்சவன், கோபப்படு, சாபம் விடு. ஆனா, உன் வாழ்க்கையை பாரு…  திரும்ப மீள முடியாத பாதையை தொட்டாச்சு. இனி அதை கடக்க தான் பார்க்கணும். நீ நல்லா வாழனும், நல்லா தான் வாழ்வ, நல்லா இரு…” கண்கள் கலங்கியது.  அவள் தலையில் கைவைத்து தடவியவன், நகர போக…

   “மாமா…” என்ற கேவலில் தோல் சாய்ந்தாள்.

    பதறி போய் அவளை பிரிக்க பார்க்க, முடியவில்லை. ஒரு நொடி தான் என்றாலும் அவன் கண் காதலை, நேசத்தை கொட்டி விட்டது. அந்த நேரம் தான் சரண்யா உள்ளே வந்தது.  

      சரண்யாக்கு இரத்தம் மொத்தமும் உறைந்து போனது.  கணவன் கண்ணில் தோன்றிய காதல்,அவளை மொத்தமாக உடைய செய்தது.  என்னவோ  பயம், பதட்டம், நடுக்கம்  என்று மனதில்  கலவையான உணர்வு, தன்  பயத்தை கோபம் கொண்டு மறைக்க பார்த்தாள்.

    “என்ன நடக்குது இங்க…” சத்தமா குரல் எழுப்ப.

    பதறி போய் விலகி நின்றார்கள் இருவரும்.  அபிராமி அவன் பின்னே நிற்க, வெற்றி வேகமாக மனைவி அருகில் வந்தவன்.

    “எதுவும் நினைக்காத சரண்யா. இங்க ஒன்னும் இல்லை…”

   “என்ன நினைக்காத,  இழவு வீட்டுல பண்ணுற காரியமா இது?… கட்டுன பொண்டாட்டி நான் நிக்க, யாரோ ஒருத்தி கூட கட்டி பிடிச்சு நிக்கற, அசிங்கமா இல்லை…” மாலை ஆறு மணி என்பதால் அவள் சத்தத்தில் எல்லோரும் வந்து விட்டார்கள். 

   வெற்றி நிஜமாகவே பயந்து விட்டான். “ சரண்யா வா வெளிய போகலாம்…” கை பிடித்து அழைத்து செல்ல பார்க்க.

     “முடியாது, எல்லாருக்கும் உங்க கேவலம் தெரியட்டும்.  எனக்கு ஒரு பதில சொல்லுங்க… ஏன் எனக்கு இப்படி ஒரு அநியாயத்தை பண்ணீங்க…” என்று கத்த

    மற்றவர்களும் , “என்ன வெற்றி இதெல்லாம்… அபி மேல பழி சொல்லி பேசுது. வயசு பிள்ளை சும்மா கூட ஒரு பேச்சு வர கூடாது…” பொதுவாக வார்த்தைகள் வர, கோபம் கரை கண்டது சரண்யாக்கு.

     இந்த இடத்தில் தான் சரண்யா ஒரு தப்பு செய்தாள். எல்லா பெண்களை போல கணவனை விட்டு, அபியை பிடித்து கொண்டாள்.அவள் நேரடியாக வெற்றியை தான் தாக்கி பேசி இருக்க வேண்டும், அதை விட்டு அபியை தாக்கி பேசி, எல்லோரையும் பகைத்து கொண்டாள். கட்டிய கணவன் மனதில் தான் இல்லையே என்ற நினைப்பு ஒரு ஆற்றாமையை, இயலாமையை கொடுத்தது. 

     அங்கிருக்கும் எல்லோருக்கும் இவர்கள் காதல் கதை அறியும் என்பதால், சரண்யாவை தான் வெளியேற்ற பார்த்தார்கள். ஏனெனில் அவள் தான் கத்தி கொண்டு இருந்தது. அபிராமி தலை குனிந்து நின்றவள் தான் கண்ணீர் மட்டும் தான் வெளி வந்தது.  அவளை பார்க்கவும் பாவமாக இருந்தது.

    தன் நியாயம் எடுபடும் இடம் இதுவல்ல என்று சரண்யா அறியவில்லை. இதில் முழுக்க பாதிக்கப்பட்டது தான் என்ற நினைப்பு மட்டுமே…

      “அடுத்தவ புருசன் கூட உங்க வீட்டு பொண்ணுக்கு என்ன வேலை?… அதுவும் யாருமில்லாத தனி அறையில்?…” என்று சரண்யா கேட்க. 

   “சரண்யா வா வெளிய, அம்மா நாங்க வீட்டுக்கு போறோம்…” தரதரவென அவளை இழுத்து செல்ல. 

    “கை விடுங்க, எனக்கு ஒரு நியாயம் சொல்லுங்க.  பக்கத்து ரூம்ல பொண்டாட்டி இருக்க, அடுத்த ரூம்ல கள்ள காதலி கூட கூத்தடிக்கிற …” சொன்ன நொடி, ஒரு பக்க கன்னம் வீங்கும் அளவுக்கு அடி விழுந்தது.

       சுவற்றில் முட்டி தான் கீழ விழுந்தாள். பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து தூக்கி நிறுத்தினார்கள்.

        “ஏம்ப்பா வெற்றி, மாசமா இருக்குற பிள்ளை மேல போய் கை வைக்கிற… எதுவா இருந்தாலும் உள்ள கூட்டி போய் பேசு…” அங்கிருக்கும் சிலர் அறிவுரை கூற.

    சரண்யாக்கு காது  வரை இழுத்து பிடித்து வலித்தது. அந்த நேர கோபம் தான் கணவன், மனைவி இருவருக்கும்… யாரேனும் ஒருவர் பொறுத்து போய் இருந்தால், விசயத்தை கொஞ்சம் தள்ளி போட்டால்  நிலமை சீராகி இருக்கும். 

     அவரவர் மனம், அவரவர் பாடு… கட்டிய மனைவியை விட யாரோ ஒருத்தி முக்கியம் என்றால் நான் யார், உன் தாலியை சுமந்து, உன் பிள்ளையை சுமந்து நிக்கும் எனக்கு, உன் மனதில் என்ன இடம்.

       வெற்றிக்கு மனைவியை அறிய வில்லை. அவனை பொறுத்த வரை  வலி அபிராமிக்கு மட்டும் தான். ஏனெனில் இழந்தது அவள் தான். வெற்றி கூட குடும்பம் என்ற கூட்டுக்குள் வந்து விட்டான். தனிமரமாக நிற்பது அபிராமி அல்லவா… தன்னை மனதார காதலித்தது தவிர, எந்த தப்பும் செய்யாத அவளுக்கு தன் வாங்கி கொடுத்த பெயர் கள்ள காதலி… மூன்று மாத முன் வந்த மனைவியை விட நான்கு வருட காதல் ஜெயித்தது. அப்படி தான் சொல்ல வேண்டும். அபிராமி இடத்தில் அவள் வலியை உணர்ந்தவன், மனைவி இடத்தில் நின்று அவள் மனம் படும் பாடை கவனிக்க வில்லை. அது தான் அவளின் ஆத்திரம் கூட… இவனின் இயலாமையை, கோபத்தை வெளிப்படுத்தும் இடம் மனைவி தானா…

    

   ஏதேனும் பேசி அபியின் பெயரை உள்ளே இழுக்க கூடாது என்று தான் அமைதி காத்தான்.  எப்போதும் ஒதுங்கி போகும் மனைவியிடம் எத்தனை கோபம், அவேசத்தை எதிர்பார்க்க வில்லை. தற்போது சரண்யாவை வெளியேற்றி விட்டாள் போதும் என்று தோன்றியது.

     “ஒரு வார்த்தை பேச கூடாது சரண்யா. வாய திறக்காம என்கூட வா…” வீட்டின் நிலை படியை  தாண்டும் போது, 

    “விட்டி தட்டான் மாதிரி இருந்துட்டு, எம்புட்டு துள்ளுறா…  அவ வாழ வேண்டிய வாழ்க்கைய தான், நீ தூக்கி வச்சுகிட்ட. அந்த மனுசன் மட்டும் ஒழுங்கா இருந்திருந்தா, உம் மூஞ்சிக்கு உன் வீடு தேடி வருவோமாக்கும்…” ஒரு பக்கம் தனம் எகிற.

    கணவன் பிடியில் இருந்தவள், நின்று விட்டாள். இங்கு யாரையும் அவளுக்கு தெரியாது. கணவனை நம்பி தான் இந்த ஊர் வந்தாள். இங்கும் அவளின்  அழகு விமர்சிக்க படுகிறது. அதுவும் வீட்டில் இத்தனை பேர் நிக்க, தன் தோற்றத்தை வைத்து பேசும் மாமியார் மேல் கோபம் வந்தது. சரண்யா வாய் கட்டுப்பாட்டை இழந்தது.

       “யார் வாழ்க்கையை யார் விட்டு கொடுத்தது. என் வாழ்க்கைய தட்டி பறிக்க தான் உங்க தம்பி மக பாக்குற… முறையா பொண்ணு பார்த்து, நிச்சயம் பண்ணி, தாலி கட்டி வந்தவ  நான்… யாருக்கும் தெரியாம அடுத்தவ புருசனை ரூம்க்கு தள்ளி போகல…” என்று சரண்யாவும் கத்த

     “ஏய்! எங்க வீட்டுக்கு வந்து எங்க வீட்டு  பொண்ணையே பேசுவியா… வயித்து பிள்ளைகாரி பார்த்து பேசு, நல்ல படியா பெத்து எடுக்கணும்ன்னு நினை,  வயசு பிள்ளை மேல அபாண்டமா வாக்கு விடாத…” சரண்யாக்கும் எதிர்ப்பு குரல் வந்தது.

       யாரும் அபாண்டமா  பேசலைங்க. நீங்க எல்லாரும் எனக்கு பதில் சொல்லுங்க, எம் புருசன் கூட அந்த  பொண்ணுக்கு ரூம்ல என்ன வேலை. அங்க இருந்தது அவரோட அக்காவோ, தங்கச்சியோ இருந்தா பேச்சில்லை. எனக்கு எப்படி இருக்கும். எம் மனசு என்ன பாடு படும். தாலி கட்டுன பொண்டாட்டி  என்ன ஏதுன்ன

       சாந்தி வந்து அபிராமியின் முதுகில் நாலு போட்டார். “உனக்கு இதெல்லாம் தேவையா… இப்படி கண்டவளும் வந்து பேசவா, உன்னை பெத்து வளர்த்தேன். உனக்கு என்னடி குறை… யார் யார் கிட்டையோ பேச்சு வாங்குற.” என்று அடிக்க

    சரண்யா கையை விட்ட வெற்றி, ஓடி சென்று அபிராமியை தன் பக்கம் இழுத்து கொண்டான்.

   “அத்தை, என்ன இது சின்ன புள்ளைய மாதிரி அடிக்கிரீங்க. அவ ஏதோ லூசு மாதிரி உளருனா, நீங்க நம்ம அபி மேல கையை வைப்பீங்களா… தப்பு அத்தை. அந்த அறிவு கெட்டவ சொல்றதை உண்மையாக்காதீங்க…” வெற்றி புரிய வைக்க பார்க்க.