Advertisement

 
                        கொஞ்சும் ஏழிசை நீ – 9
தாவரவியல் துறை முழுவதும் விழாக் கோலம் பூண்டிருந்தது. ஒரே கலகலப்பு.. சலசலப்பு.. சிரிப்பு கும்மாளம் எல்லாம். மாணவ மாணவிகள் கும்பல் கும்பலாய் ஆங்காங்கே நின்றிருக்க, ஒருசிலர் மிக மும்புரமாய் வேலைகள் செய்துகொண்டு இருக்க, ஒரு சில மாணவர்கள் கும்பலாய் ஆசிரியர்கள் அறைக்குச் செல்வதும் வருவதுமாய் இருந்தனர்.
அன்றைய தினம் யாருக்குமே வகுப்புகள் இல்லை. பின்னே, முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு ‘வெல்கம் பார்டி..’ அன்று. ஆக முதல் நாள் இருந்தே, இரண்டாவது மற்றும் மூன்றாவது ஆண்டு மாணவர்கள் வேலையில் இறங்கிவிட, இன்றைய தினம் காலையில் இருந்து யாருக்கும் வகுப்புகள் இல்லை.
ஆசிரியர்கள் அனைவரும் தங்களுக்கான அறைகளில் இருக்க, மாடியில் சித்திரைச் செல்வனும், பாஸ்கரும் இருக்க, “சித்து நீ இப்போ வர்றியா இல்லையா.. செக்கன்ட் இயர் பசங்க வந்து மூணு தடவ கூப்பிட்டு போயிட்டாங்க.. ஷார்ப்பா லெவனோ கிளாக் கேம்ஸ் ஸ்டார்ட் ஆகிடும்.. நீயும் நானும் தான் ஜட்ஜ்.. கிளம்பு வா..” என,
“ம்ம்ச்.. நீ போ.. நான் அப்புறம் வர்றேன்..” என்று அதனையே சொல்லிக்கொண்டு இருந்தான்.
“சித்து..!!!!”
“ம்ம்ச்.. நான் பேசியும் கூட அவ வரலை பாரேன்..” என,
“நீ என்ன பேசின முதல்ல??!!” என்றான் பாஸ்கரும்.
சித்திரைச் செல்வன் அதற்கு பதில் சொல்லாது அமைதியாய் இருக்க, “லுக் சித்து.. மானசா எங்கயோ போகலை. அவங்க வீட்டுக்கு தான் போயிருக்கா.. சோ கூட ரெண்டு நாள் இருந்துட்டு வரலாம்னு இருக்கலாம் இல்லையா.. அதுக்ககா நீ இப்படி இருக்கனுமா…” என,
“அப்படியில்ல இனிக்கு வெல்கம் பார்ட்டின்னு அவளுக்குத் தெரியும் தானே..” என்றான்.
“அடடா.. அதெல்லாம் ரெகுலர் ஸ்டூடன்ட்ஸ்கு தான் டா… இவங்க இப்போ இருந்துட்டு நாளைக்கு கோர்ஸ் முடிச்சி போயிடுவாங்க..” என,
ஏனோ சித்திரைச் செல்வனால் அதனை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. இன்று இல்லை என்றாலும் இதோ இன்னும் சிறிது நாளில் அவர்களின் படிப்பு முடிந்து மானசா கிளம்பிச் செல்லத்தான் வேண்டும்.
மானசா என்றில்லை, நாம் பயிலும் பள்ளியோ இல்லை கல்லூரியோ நமக்கு எத்துனை நெருக்கம் என்றாலும், எத்துனை பிடித்தம் என்றாலும், அங்கே நமக்கு மனதிற்கு நெருக்கமான ஆட்கள் இருந்தாலும் ஒருநாள் அங்கிருந்து நாம் வெளியேறித்தானே ஆகிட வேண்டும்.
பாஸ்கர் இதனைச் சொல்ல, அது தான் நிதர்சனம் என்று தெரிந்தாலும், சித்திரைச் செல்வனுக்கு அதை ஏற்றுகொள்ள மனது வரவில்லை.
வேண்டுமென்றே பிடிவாதமாய் “என்ன இருந்தாலும்.. இன்னிக்கு எல்லாரும் இங்க எவ்வளோ ஹேப்பியா இருக்காங்க.. இவதான்.. இவ தான் என்னை டென்சன் பண்றா…” என்று பல்லைக் கடிக்க,
“இங்க பாரு.. உன்னை எதுலயும் இன்வால்வ் ஆகக் கூடாதுன்னு மானசா சொல்லலை.. அதேபோல நீ ஊருக்கு போன்னு நீயும் சொல்லலை.. சோ எல்லாத்துக்கும் ஒரு ஸ்பேஸ் இருக்கு.. லுக் சித்து.. இதெல்லாம் உனக்கு இப்போ இம்பார்டன்ட் இல்லை. திஸ் இயர் நம்ம இதெல்லாம் முடிக்கணும்.. டாக்டரேட் வாங்கணும்.. புரிஞ்சதா…” என, இதில் தான் ஒருவழியாய் சித்திரைச் செல்வன் எழுந்து நின்றான்.
மானசாவிடம் பேசியும் இரண்டு நாட்கள் ஆகியிருக்க, மறுநாள் வருவாள் என்று நினைத்திருந்தான். ஆனாலும் அவள் வரவில்லை. அதற்கு அடுத்த நாளும் வரவில்லை. ஷில்பாவிற்கு தியரி எடுக்காது லேப் மட்டுமே நடத்த “மனு வந்திடட்டுமே…” என்றாள்.
இருப்பது இருவர், அதில் ஒருவரை விட்டு மற்றவருக்கு என்ன நடத்துவது..!!
“ம்ம்ச்…” என்று அப்போதும் சலிப்பை வெளிப்படுத்தியவன், “கம் லெட்ஸ் கோ…” என்று எழுந்து வர, பாஸ்கரும் அவனோடு சென்றான்.
காலை நேரம் முழுவதும், விளையாட்டு போட்டிகள் நடக்க, மதியம் தாவரவியல் துறையில் இருக்கும் அனைவருக்குமே விருந்து சாப்பாடு தான். அப்படியொரு அருமையாய் மாணவர்கள் அனைத்து ஏற்பாடுகளையும் செய்ய, அனைத்துமே சிறப்பாய் நடந்துகொண்டு இருந்தது.
மாலை ஐந்து மணிக்கு மேல் கலை நிகழ்சிகள், மற்றும் இரவு உணவு. அங்கே கலை கூடத்தில் ஏற்பாடுகள் ஆகியிருக்க, மதிய உணவு முடியவும், மாணவர்கள் அதற்கான வேலைகளை கவனிக்கச் செல்ல, ஆசிரியர்கள் அனைவரும் மீண்டும் தங்களின் அறைகளுக்கு வந்துவிட, சித்திரைச் செல்வனும், பாஸ்கரும் இவர்களோடு இன்னும் சில இள வயது ஆசிரியர்கள் சிலரை மாணவர்கள் பிடித்துக் கொண்டனர்..
“சர்…” என்றும், “அண்ணா…” என்றும் அழைத்து இதனை இப்படி செய்யலாமா, அப்படி செய்யலாமா என்றெல்லாம் சந்தேகங்கள் கேட்க, இவர்கள் எல்லாம் அவர்களோடு இருக்கும் நிலை.
இந்த வேலையில் சித்திரைச் செல்வன் சிறிது மனது தெளிந்திருந்தான்.
யாரோ.. எவளோ.. படிக்கவென்று வந்தாள்.. அவளுக்காக தான் இத்தனை குழம்பிக்கொள்ள வேண்டியது இல்லை என்று முடிவு செய்துவிட்டான்.
கலை நிகழ்சிகள் என்றால், வெறுமெனே மேடை ஏறி மாணவர்கள் இஷ்டத்திற்கு ஆடுவது என்பது இல்லை. முறைப்படி, துறைத் தலைவர் குத்துவிளக்கு ஏற்றி, பின் வரவேற்புறையில் ஆரம்பித்து, நிகழ்ச்சி சிறப்புறை எல்லாம் முடிந்து பின் வரிசையாய் நடன நிகழ்சிகள், இசை கச்சேரிகள் என்று கலைகட்டும்..
முழுக்க முழுக்க மாணவர்கள் ஏற்று நடத்துவது என்பதால், அது அவர்களுக்கும் புதுவித அனுபவம் தான்.
மாலை ஐந்து மணி என்பது ஆறாகிட அப்போது தான் விழா தொடங்க ஆரம்பித்தது. துறைத்தலைவர் சிவக்குமார் விழா சிறப்புரை பேசி, முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு அவரின் வாழ்த்துக்களைச் சொல்லி முடிக்க, பின் கலை நிகழ்சிகள் ஆரம்பம் ஆகின.
ஆண்களின் பக்கம், மூன்றாவது வரிசையில் சித்திரைச் செல்வனும், பாஸ்கரும் அமர்ந்திருக்க, நிகழ்சிகளில் ஒன்றித்தான் போயினர் இருவரும்..
“பசங்க செமையா ஆடுறானுங்க டா…” என்று பாஸ்கர் சொல்ல,
“ம்ம்.. நமக்கு வெல்கம் பார்ட்டி இப்படியாடா வச்சாங்க… சீனியர்ஸ் செம மொக்கை வாங்கினானுங்க…” என்று சித்து சொல்ல, இருவருக்கும் தாங்கள் இங்கே புதிதாய் சேர்ந்த நியாபகம் மனதில் வந்து போனது.
இது ஒன்று போதாதா, மனதில் ஒரு புது உற்சாகம் தொற்றிக்கொள்ள..!!
இப்படி இவர்கள் பேசியபடி நிகழ்ச்சிகளை ரசித்துக்கொண்டு இருக்க, தாவரவியல் மூன்றாம் ஆண்டு மாணவன் ஒருவன் “ண்ணா.. செக்கன்ட் இயர் பசங்க ஒரு விசுவல் ப்ரோக்ராம் அரேன்ஜ் பண்ணிருக்காங்க.. இப்போன்னு பார்த்து ப்ரொஜக்டர் வொர்க் ஆகல.. கொஞ்சம் வந்து ஹெல்ப் பண்ணுங்கண்ணா..” என்று அழைக்க,
“என்னடா இப்போ வந்து சொல்றீங்க..” என்று கேட்டபடியே சித்து எழுந்துவிட, உடன் பாஸ்கரும் செல்ல, கலைக்கூடத்தின் பின்னே இருந்த ஒரு அறையில் மாணவர்கள் சிலர் கையை பிசைந்து கொண்டு நிற்க,
“என்னாச்சுடா..” என்றான் சித்து.
“பைனல் டச்சா மார்னிங் இருந்து எடுத்த க்ளிபிங்க்ஸ் எல்லாம் வச்சு லாஸ்ட்டா  ஒரு விடியோ விசுவலஸ் போடலாம்னு ப்ளான் பண்ணோம். இப்போன்னு பார்த்து ப்ரொஜக்டர் மக்கர் பண்ணுது..” என,
“அபிஸ்ல புது ப்ரொஜக்டர் இருக்கே அது வாங்கிட்டு வர வேண்டியது தானே..” என்றான் சித்து.
“இதுக்கே கணேஷ் அண்ணா அவ்வளோ திட்டினாங்க.. உங்ககிட்ட கொடுத்த உருப்படியா திரும்ப வராதுன்னு..” என்று மாணவர்கள் குறைபட,
“ஹ்ம்ம்…” என்று சொல்லியபடி பாஸ்கரும், சித்திரைச் செல்வனும் என்னவென்று பார்க்க, பெரிதாய் வேறொன்றும் இல்லை, ஒரே ஒரு வயர் மட்டும் கட்டாகி இருந்தது.
“வயர் கட்.. ஒன்னும் பிராப்ளம் இல்லை. செல்லோ டேப் எடுத்துட்டு வாங்க.. ஒட்டிட்டா சரியாகிடும்..” என்று பாஸ்கர் சொல்லவும், அடுத்து இரண்டொரு நொடிகளில் செல்லோடேப் வந்துவிட, அதனை சரிசெய்து எப்படி இயங்குகிறது என்றும் பார்க்க,
“அட எப்படிடா இப்போ பெர்பாமன்ஸ் கூட கேப்சர் பண்ணி வச்சிருக்கீங்க..” என்று சித்து கேட்டுக்கொண்டு இருக்கும் போதே, கூட்டத்தில் மானசா இருப்பது போல் ஒரு புகைப்படத்தில் தோன்றியது.
அவன் கூர்ந்து பார்ப்பதற்குள் பாஸ்கர் அடுத்து மாற்றிட, “பாஸ்கி ரிவைண்ட் பண்ணு..” என,
“ஏன்டா..” என்றான் பாஸ்கர்.
“பண்ணுடா.. பசங்க செமையா கிளிக்ஸ் எடுத்திருக்காங்க..” என, பாஸ்கரும் ஏன் என்றே தெரியாது படங்களை முன்னே நகர்ந்த, சித்திரைச் செல்வனின் மனது ‘எஸ்… மானசா…’ என்று சொல்லிக்கொண்டது.
‘பாட்டில் கிரீன்..’ நிற புடவையில் இருந்தாள். அன்றைய தினம் பெண்கள் எல்லாருமே புடைவை தான். ஆனால் என்னவோ அத்தனை பேரின் மத்தியிலும் மானசாவை புடவையில் பார்க்க எதுவோ வித்தியாசமாய் இருந்தது.
அவள் கட்டியிருந்தது ஆங்காங்கே சிறு கல் பதித்த ஒரு ப்ளைன் சேலை தான். ரவிக்கை மட்டும் மிகுந்த வேலைபாடுகள் அமைந்ததாய் இருக்க, கழுத்தில் இருக்கிறதா இல்லையா என்றே தெரியாத ஒரு சங்கிலி. அது அவளின் கைகளில் படதா பாடு பட்டுக்கொண்டு இருக்கும் போதும்.
அந்த புகைப்படத்தினில் கூட, அவளின் விரல்கள் அந்தச் சங்கிலியில் தான் இருந்தது. பச்சை கல் வாய்த்த ஒரு பெரிய தோடு.. நெற்றியில் போட்டு கூட பச்சை நிறம் தான்..
‘பச்சை நிறமே.. பச்சை நிறமே..
இச்சை ஊட்டும் பச்சை நிறமே…’ என்றுதான் பாடத் தோன்றும் யாருக்கும் அவளைப் பார்த்தால்.
பார்க்கவே பசுமையாய், குளுமையாய் இருந்தாள். இதழில் எப்போதும் இருக்கும் புன்னகையோடு ஷில்பாவிடம் எதையோ பேசிக்கொண்டு இருப்பது போலிருந்தது அந்த புகைப்படத்தில்.       
பாஸ்கர், மாணவர்களோடு பேசிக்கொண்டு இருக்க, சித்திரைச் செல்வனின் கண்கள் இரண்டு நிமிடங்கள் அந்தப் புகைப்படத்தில்  தான் இருக்க, “என்னண்ணா பிக்ஸ் எல்லாம் ஓகேவா…” என்றனர்.
அதற்குள் முதுகலை மாணவர்கள் வந்து “லாஸ்ட் ப்ரோக்ராம் ஸ்டார்ட் ஆகிடுச்சு டா.. விடியோ ரெடியா..” என,
“ப்ரொஜக்டரே இப்போதான் ரெடி ஆச்சு.. காம்பியரிங் பண்றவங்கள எப்படியாவது ஒரு டென் மினிட்ஸ் அட்ஜஸ்ட் பண்ண சொல்லு..” என்ற சித்து, “ரெடி பண்ணுங்கடா…” என்றான்.
“நம்மலே பண்ணிடலாமா..” என்று பாஸ்கர் கேட்க “நோ நோ.. இவ்வளோ தூரம் மெனக்கெட்டு இருக்காங்க.. லாஸ்ட் வரைக்கும் அவங்களே பண்ணாதான் அதோட முழுமை அவங்களுக்குத் தெரியும்.. அந்த சந்தோசமும் அவங்களுக்கு இருக்கும்…” என்றான் சித்து.
உண்மையும் அதுதானே..
சில நேரம், சிலரின் கடின உழைப்பு வெற்றி பெறுகிற தருவாயில், நாம் சென்று உதவுகிறோம் என்கிற பெயரில் அவர்களின் அந்த வெற்றிச் சுவையை பங்குப் போட்டுக்கொள்ள கூடாது.
அதைதான் சித்திரைச் செல்வனும் இப்போது சொல்ல, சொன்னவனின் மனதோ அங்கே முன்னே கலைக்கூடம் செல்ல வேண்டும் என்று பரபரத்தது.
‘பிசாசு இங்க வந்துட்டு தான் கண்ணுல படாம ஆட்டம் காட்டிட்டு இருக்காளா…’ என்று நினைத்தவன், “வீடியோ காப்பி எனக்கு ஒன்னு பென் ட்ரைவ்ல போட்டு கொடுங்கடா…” என,
 “ஆல் தி பெஸ்ட் கைஸ்…” என்றுவிட்டு இருவரும் நகர்ந்தனர்.
மானசா வரிசையில் எல்லாம் இல்லை. பின்னே நிற்கும் மாணவிகளோடு நின்றிருந்தாள். அவளும் ஷில்பாவும். பேச்சும் சிரிப்புமாய் இருந்தாள். அவளுக்குத் தெரியும், இந்த கூட்டத்தில் சித்திரைச் செல்வனின் கண்ணில் தான் படமாட்டோம் என்று. ஆனால் படமாகாவே படுவோம் என்பது அறிவாளா என்ன??!!
மீண்டும் அவர்களின் இருக்கைக்கு வந்து அமர்ந்ததும் “உன்னோட பாசமலர் வந்தது உனக்குத் தெரியுமா??” என,
“ஹா.!! என்ன சொல்ற..??!!” என்றான் பாஸ்கர், பாட்டு சத்தத்தில் சித்திரைச் செல்வன் மெதுவாய் சொன்னது கேட்காது.
“ம்ம் நத்திங்…” என்று சித்து தலையை ஆட்ட,
“என்னடா..??” என்றான் பாஸ்கி.
“மானசா வந்திருக்கா…” என்ற சித்திரைச் செல்வனின் பார்வை மேடையில் இருக்க, அவள் வந்தது தான் ஏற்கனவே பாஸ்கருக்குத் தெரியுமே..
மானசா சித்துவிடம் சொல் என்றும் சொல்லவில்லை, சொல்லவேண்டாம் என்றும் சொல்லவில்லை. ஆனால் பாஸ்கர் தான் சொல்லவில்லை. அன்றைய தினம் மதியமே வந்துவிட்டாள் மானசா.
வந்தவள் இங்கே மாலை கலை நிகழ்ச்சிகளுக்கு தான் வந்தாள். என்னவோ அவளுக்கு ஒரு ஆசை, திடீரென்று கூட்டத்தில் சித்திரைச் செல்வன் தன்னைக் கண்டால் என்ன செய்வான் என்று??
அவன் முகத்தினில் எப்படியான ஓர் பாவனை வெளிப்படும் என்று காண ஆசையாய் இருந்தது.
என்னை அத்தனை பேசினாயே, இப்போது பார் என்று சொல்லவேண்டும் போலிருக்க, தான் வந்திருப்பதை வெளிக்காட்டிக்கொள்ளவே இல்லை.
ஆனால் பாஸ்கரோ சித்து சொன்னதும் “நிஜமாவா.. வந்துட்டாளா..” என்று ஒன்றும் அறியாதவன் போல கேட்க,
“டேய் ரொம்ப நடிக்காத..” என்றவன் ஒரு சிரிப்போடு நிறுத்திக்கொண்டான்.
ஒருவழியாய் நிகழ்ச்சிகள் எல்லாம் முடிந்து, மாணவர்கள் அந்த விடியோவை திரையிட, பின்னணியில் பாடல்களும் அன்றைய தின நிகழ்ச்சிகள் முழுவதிலும்  எடுக்கப்பட்ட புகைப்படங்கள் திரையில் ஒன்றன் பின் ஒன்றாய் வர, மானசா இருக்கும் புகைப்படமும் வர, அவளுள் ஓர் திக் உணர்வு.
சட்டென்று அவளின் விழிகள் சித்திரைச் செல்வனைக் காண, அவன் நேர்கொண்டு திரையைப் பார்ப்பது மட்டுமே தெரிந்தது. கண்ணிமைக்கும் நொடியில் புகைப்படம் மாறிவிட, இப்போது மானசாவினுள் ஓர் இனம் புரியாத படபடப்பு.
‘போச்சு.. போச்சு… பார்த்துட்டான்…’ என்று கழுத்துச் சங்கிலியை பிடித்து ஒரு ஆட்டு ஆட்டிக்கொண்டே இருக்க, முடிவாய் அனைத்து நிகழ்ச்சிகளும் முடிய, அனைவரும் உண்ணச் சென்றனர்.
பபே முறைதான் என்பதால், தங்களுக்கு வேண்டியதை வாங்கிக்கொண்டு மாணவர்கள், மாணவிகள் ஆசிரியர்கள் எல்லாம் அங்காங்கே குழுவாகவோ, இல்லை இருக்கைகளில் அமர்ந்த உண்டுகொள்ள, சித்துவும் பாஸ்கியும் அவர்களும் கையில் தட்டுடன் நின்று உண்டுகொண்டு இருக்க, என்னவோ மனசாவிற்கு உணவே இறங்கவில்லை.
“ம்ம் மனு சாப்பிடு…” என்று ஷில்பா சொல்ல,
“ம்ம் ம்ம்…” என்றவள், உணவை அளந்து கொண்டு இருந்தாள்.
“மனு…!!” என்று ஷில்பா அதட்ட,
“அட இரு சிப்ஸ்…” என்றவளின் பார்வை சுற்றியும் நகர, இவர்கள் நின்றிருந்த இடத்திற்கு நேரே சற்றுத் தள்ளிதான் சித்துவும் பாஸ்கியும் இருந்தனர். பாஸ்கரின் முதுகு புறம் தெரிய, சித்து இவளை நோக்கி நின்றிருந்தான்.
‘இங்கதான் இருக்கானா…’ என்று பார்க்க, சித்திரைச்செல்வனின் பார்வை சுற்றிலும் வேடிக்கைப் பார்ப்பது போல் பார்த்துக்கொண்டே இவள் மீது பார்வையை பதிக்க, இப்போது அதிர்வது மானசா தான்.
ஒரு மெல்லிய புன்னகையோடு சித்திரைச் செல்வன் பார்வையை திருப்பிக்கொள்ள ‘இப்போ பார்த்தானா இல்லையா??!!’ என்ற குழப்பத்தோடு மானசா அவனை மேலும் காண,
அவள் தன்னையே பார்ப்பது உணர்த்து ‘சாப்பிடு..’ என்று இதழ் அசைத்தவன், அதற்கேற்ப தலையை ஆட்ட, சொல்லாமல் கொள்ளாமல் மானசாவின் தலையும் சரி என்று ஆடியது.
                                            

Advertisement