Advertisement

                           
மனதிற்குள்ளே எதையுமே வைத்துகொள்ள தெரியாதவள், இந்த நான்கு ஆண்டுகளில் இத்தனை மறைத்து வைத்திருக்கிறாள்.. சின்னதாய் தலை வலித்தால் கூட வீட்டினில் அப்படியொரு ஆர்பாட்டம் செய்வாள் மானசா. இப்போதோ பெரும் பாரம் ஒன்றினை சுமந்துகொண்டு அதை வெளிக்காட்டாது எப்படித்தான் இருந்தாளோ என்று நினைக்கவே மலைப்பாய் இருந்தது.
அவளும் காதலித்து திருமணம் செய்தவள் தானே..!!
ராபர்ட்டோ “நான் அங்கிள் கிட்ட பேசுறேன்…” என,
“ராபி.. டாடிக்கிட்ட நான் பேசிக்கிறேன்.. நீ ப்ரீயா விடு..” என்றவள், செந்தமிழுக்கு அழைத்து பேச, அவருக்கு முதலில் நம்பிடவே முடியவில்லை.
“என்ன தனுமா சொல்ற நீ??!!” என்றார்.
“எங்களுக்கும் இப்போதான்ப்பா எல்லாம் புரிஞ்சது..” என,
“ம்ம்ச்.. நீங்களா புரிஞ்சிட்டு பேசுறது எல்லாம் எப்படி சரியா இருக்கும்.. மானசா சொன்னாளா ?? அவ சொல்லட்டும்.. ப்பா எனக்கு சித்துவ பிடிச்சிருக்குன்னு.. அடுத்து பேசிக்கிறேன்..” என்றார் மனிதர்.
“ப்பா அவ எந்த டெசிசனும் இப்போதைக்கு வரமாட்டா ப்பா..”
“ஏன் வரணும்?? இன்னும் யோசிக்கட்டும். அவளுக்கே தெளிவு வரட்டும்.. லைப் விஷயம் டா.. இப்போ எமோசனல் ப்ரேக் டவுன்ல இருக்கா.. ரிலாக்ஸ் ஆகி வரட்டும்.. அப்புறம் அவளே பேசுவா…” என்றவருக்கு இதில் தான் மறுக்க என்ன இருக்கிறது என்ற எண்ணமே.
செந்தமிழின் பேச்சினை வைத்தே அப்பா மறுக்க மாட்டார் என்று புரிந்துகொண்டாள் தனுஜா..!!
நேரம் செல்ல செல்ல, மானசா வருவதாய் காணோம். டேவிட் திரும்ப அழைத்து சித்துவிற்கு “நல்லா தூங்கிட்டு இருக்கா.. எழுப்பி வேணா கூட்டிட்டு வரவா..” என்று கடிய,
“நோ நோ.. வி வில் கம்..” என்றவன், தனுஜாவையும் ராபர்ட்டையும் அழைத்துக்கொண்டு கிளம்ப, உடன் நீலும் வந்துவிட்டான்.
அவனுக்கு சந்தோசமாய் இருந்தது. எப்படியாவது இவர்கள் இருவரும் ஒன்றிணைந்துவிட்டால் போதுமென்று..
ஒரு பத்து நிமிட நடை பயணம்..!! அவ்வளவே..
சித்துவின் அந்த ஒற்றை படுக்கையறை கொண்ட சிறய பிளாட் இப்போது இவர்களால் நிரம்பி இருக்க, “ஹாய் சித்து… ஹவ் ஆர் யூ..” என்றாள் தனுஜா..
“ஐம் குட் …” என,
“அவதான் இப்படியெல்லாம் பண்ணா.. நீங்களுமா??” என்றவளுக்கு  எல்லாமே ஆரம்பித்து வைத்தது நான்தானே என்று எப்படி சொல்ல முடியும்.
அவனின் பலவீனங்களை அவன் இவர்களோடு பகிர வேண்டும் என்ற அவசியம் இல்லையே.. மானசாவோடு பகிரலாம்.. நட்புக்களோடு பகிரலாம்.. பலரிடமும் இல்லவே.
பதில் சொல்லாது ஒரு வெற்று புன்னகை சிந்த, “ரெண்டு பேருமே வெல் மெச்சூர் பட்.. லவ்வ ஹேண்டில் பண்ண தெரியாம.. இப்படியா??” என்று டேவிட் கேட்க,
‘போதும்டா டேய்..’ என்றுதான் பார்த்தான் சித்து.
எல்லாரும் தன்னை கேள்வி கேட்பார்கள் என்று எண்ணியது மானசா. இப்போது அவள் நிம்மதியாய் உறங்க, தன்னை சுற்றி இவர்கள் அமர்ந்து தன்னிடம் கேள்வி கேட்பது எண்ணி ஒருபுறம் அவனுக்கு சிரிப்பாய் இருந்தது.
‘இப்படி மாட்டிவிட்டுடியே மனு…’ என்ற அவனுள்ளம் செல்லமாய் கடிந்தும் கொள்ள.
தனுஜாவும், ராபர்ட்டும் தான் நிறைய பேசினர். செந்தமிழ் பேசியதை பற்றியும் சொல்ல, “பர்ஸ்ட்  மனு கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகிக்கட்டுமே…” என்று சித்து சொல்ல,
“யா.. பட் இனி அவளுக்கு புரிய வைக்கவேண்டியது நீங்கதான்.. ஏன்னா நாங்க பேசினா கண்டிப்பா இதோ இப்படி இங்க வந்து தூங்கிடுவா..” என்று ஹாஸ்யமாகவே தனுஜா சொன்னாலும், தங்களை தாண்டி இவனிடம் இப்படியொரு பிணைப்பா என்று இன்னும் அவளுக்கு நம்பிட முடியவில்லை.
பேசினர், பேசினர், பேசிக்கொண்டே தான் இருந்தனர்… மானசா எழுவதாய் காணோம்.
“ஓகே.. மார்னிங் கொண்டு வந்து விடுங்க..” என்று ராபர்ட் சொல்ல,
“ஐ வில் டேக் கேர்…” என்றான் இவன்..
கிளம்பும் போது தனுஜா தான் சொன்னாள் “தொலைநோக்கு பார்வை தேவை தான்.. அதுவே தொல்லை நோக்கு பார்வையா இருந்திடக் கூடாது..!! ஜஸ்ட் அப்பப்போ இருக்கிற மொமன்ட் என்ஜாய் பண்ணுங்க.. பியூச்சர்ல என்னாகும் எதாகும்னு எல்லாம் யோசிச்சு யோசிச்சு இப்போ இந்த நிமிஷம் என்ன இருக்க அதை ஸ்பாயில் பண்ணிக்கவேண்டாம்..” என்றுவிட்டு போனாள்.
உண்மையும் இதானே….!!!
வாழ்வில் திட்டமிடல் அவசியம் தான்.. திட்டமிடலே வாழ்வாய் இருந்திட முடியாதில்லையா??!!!
நேரம் சென்றதுதான் மிச்சம், மானசா புரண்டு படுத்தளே தவிர, கண் விழிப்பதாய் காணோம். அவனுக்கும் அவளை எழுப்ப மனதில்லை..
ஒரு பீன் பேக்கை இழுத்துப் போட்டு, அதில் அமர்ந்தவன், கால்களை தூக்கி கட்டில் மீது வைத்துக்கொண்டு உறங்கும் அவளைத்தான் பார்த்துக்கொண்டு இருந்தான்.
காதல் வந்தால் தான் பல விசித்திரங்கள் நடக்கும்.. இவர்களது காதலே விசித்திரமாய் இருந்தது..!!
நினைத்துப்பார்த்தால் சிரிப்புதான் வந்தது..!!
இந்நேரம் அழைத்து அவனின் வீட்டில் பேசிட முடியாது. நள்ளிரவு அங்கே.. விடியட்டும் என்று காத்திருக்க, அவனும் அப்படியே கண்ணயர்ந்து போனான்..
வழக்கமாய் சித்திரைச் செல்வன் கண் விழிக்கும் நேரத்தில் விழித்துவிட, மானசா இரவு எப்படி படுத்திருந்தாளோ அப்படியே தான் இப்போதும் இருக்க ‘என்ன ஒரே பொசிசன்ல படுத்திருக்கா..’ என்று பார்த்தவன், குறுக்கலாய் வைத்திருந்த அவளின் கால்களை சற்றே நீட்டிவிட,
“ம்ம்..” என்ற முனங்களோடு புரண்டு படுத்தாள்.
‘எவ்வளோ நேரம் தூங்குவா…’ என்று நேரம் பார்த்தவன், விழிக்கையில் விழிக்கட்டும் என்று விட்டுவிட்டான்.
மேலும் ஒரு அரைமணி நேரம் கடந்திருக்கும். சித்து சமையல் அறையில் இருக்க, அப்போதுதான் மானசாவிற்கு கண்கள் திறக்க மனம் வந்ததுவோ என்னவோ, கண் விழித்துப் பார்த்தவளுக்கு இடம் புதிதாய் இருக்க, எழுந்தமர்ந்து சுற்றி சுற்றி பார்த்தாள்.
பின்னே தான் புரிந்தது.. தான் சித்துவிடம் வந்தது.
“ஷ்..!! போச்சு..” என்று தலையில் தட்டிக்கொண்டவள், எழுந்து வெளிவர, சித்திரைச் செல்வன் எதுவோ பாடல் முணுமுணுத்தபடி, சமையல் செய்துகொண்டு இருந்தான்.
அதிலும் அவளுக்கு பிடித்த தோற்றம்… ஷார்ட்ஸ் மற்றும் ஒரு பனியன்.. அவ்வளவே… எப்போதுமே மானசாவிற்கு சித்திரைச் செல்வன் இப்படி இருந்தாள் பிடிக்கும்.. கல்லூரியிலேயே ரசித்தாள் தானே. இங்கேயும் அடிக்கடி இப்படித்தான் காட்சியளிப்பான்.
‘இப்படி கிளம்பி வந்திருக்கியே.. இவன் என்ன நினைப்பான்..’ என்றிருந்தாலும்,
‘நினைச்சா நினைச்சிட்டு போகட்டும்.. அதுக்காக..’ என்று அவள் எப்போதும் போல் தலையை சிலுப்ப, சரியாய் திரும்பிவிட்டான் சித்திரைச் செல்வன்.
“ஓய் சிலுப்பி…” என்று சித்து அழைக்க,
“ம்ம்ச் அப்படி சொல்லக் கூடாது..” என்றவள், உரிமையாய் பிகு செய்ய,
“அப்போ நீ எந்தா சாரே சொல்லு…” என்றான்.
“அதுவும் சொல்ல முடியாது.. நான் கிளம்பனும்..” என்றவளுக்கு போக மனதில்லை.
அனைவரும் என்ன சொல்வார்களோ என்ற தயக்கம்..
“கிளம்பனும் சொல்லிட்டு இப்படி நின்னா எப்படி??!!” வேண்டுமென்றே சீண்டுகிறான் என்பது புரிய,
“போறேன்..” என்றாள் வாசல் வரைக்கும் சென்று.
அவளாய் போக மாட்டாள் என்பது அவனுக்குத் தெரியாதா??!!
“சரி போ..” என்றவனுக்கு அப்படியொரு சிரிப்பு.
“ம்ம்ச் இப்போ எதுக்கு சிரிக்கிறீங்க…” என்றவள், முகத்தினை உர்ரென வைத்து அங்கேயே சோபாவில் அமர,
“நீ பண்றது எல்லாம் பார்த்தா சிரிக்காம என்ன செய்ய?? நேத்து நீ வந்து நல்லா தூங்கிட்ட.. இங்க வந்து எல்லாம் என்னை ரவுன்ட் கட்றாங்க…” என்றான் புன்னகை மாறாது.
“என்னது வந்தாங்களா ??!!!”
“ம்ம் வந்தாங்க.. கேட்டாங்க.. அவங்களே சொன்னாங்க…”
“என்ன கேட்டாங்க.. என்ன சொன்னாங்க..??”
“நமக்கு லவ் எல்லாம் செட் ஆகாதாம்.. சோ மேரேஜ் பண்ணிட்டு லவ் பண்ண ட்ரை பண்ணுங்க சொன்னாங்க..” என,
“என்னது??!! என்ன.. என்ன சொன்னீங்க…” என்றவளுக்கு இதழ்கள் துடித்தது.
அட நிஜமா என்றவன், முதல் நாள் இரவு நடந்தவைகளை சொல்ல, “ஓ..!!! காட்..” என்று கால்களையும் மடக்கி அப்படியே இன்னும் அழுந்த புதைந்துகொண்டாள் சோபாவினுள்.
தனுஜா சொன்னவைகளை சொன்னவன் “ட்ரூ தானே… நம்ம ரொம்ப யோசிச்சிட்டோம்…” என, அவளின் கண்கள் இடுக்கியது கண்டு.
“நம்ம இல்ல நானு.. போதுமா..” என்றபடி,   சித்திரைச் செல்வன் அவளுக்கு பருக டீ கலந்து கொடுக்க, அமர்ந்திருக்கும் விதம் ஒரு இம்மியளவு கூட மாறாது அதனை அப்படியே வாங்கிக் குடிக்க, அவளின் முன்னமே தான் வீட்டிற்கு அழைத்துப் பேசினான்.
பூபதிக்கு தான் அழைத்தான்.
“என்ன செல்வா இந்த டைம்ல..” என்று அவர் ஜெர்மனி நேரம் வைத்து கேட்க,
“ப்பா..” என்றவன் மேலோட்டமாய் அனைத்தையும் சொல்ல, “ஓ..!!” என்றார் அவர்.
அனைத்தையும் ஒருவித திகில் பார்வையோடு தான் மானசா பார்த்துக்கொண்டு இருந்தாள். அவர்கள் என்ன சொல்வார்களோ என்று..!!
திடுக் திடுக் என்று இதயம் அடிக்க, டீ வேறு தீர்ந்து போயிருந்தது.
“ப்பா..!!!” என்று சித்து அவர் மௌனம் கண்டு அழைக்க,
“ம்ம் நீ இங்க வந்தப்புறம் மேற்கொண்டு எதுவும் பண்ணிக்கலாம் தானே..” என்றார் பூபதி.
“அப்பா..!!!” என்று சித்து விளங்காது கேட்க,
“ஷ்..!! பெரிய பெரிய படிப்பெல்லாம் படிக்கிறவங்களுக்கு இப்படி சின்ன சின்னது எல்லாம் புரியாதுங்கிறது சரிதான் போல..” என்று பூபதி சிரிக்க,
“அப்பா.. என்னப்பா…” என்றான் சிறுவன் போல சிணுங்கலாய்.
“ஹா.. ஹா..” என்று சிரித்தவர், “ரெண்டு பேரும் போன வேலையை முடிச்சிட்டு வாங்க.. பார்த்துக்கலாம்..” என,
“அம்மா..!!” என்றான் தயக்கமாய்.
“ஸ்பீக்கர்ல போட்டுத்தான் டா பேசிட்டு இருக்கேன்..” என்றதுமே, சித்துவிற்கு முகம் அப்படியே அஷ்ட கோணலாய் மாற, “ம்மா…” என்றான் குரலே எழும்பாது.
“உன்னைய என்னவோன்னு நினைச்சேன் டா செல்வா..” என்று மீனா ஆரம்பிக்க, “ம்மா…” என்றான் பாவமாய்.
“இந்த காதல் கண்றாவி எல்லாம் இவனுக்கு வராது போல.. நம்மலே பிடிவாதமா யாரையும் கட்டி வச்சாதான் ஆச்சு போலன்னு.. நெனச்சேன்.. அதான்டா இப்போ என்னவோ அதென்ன.. ம்ம்..” என்று யோசித்தவர்,
“அதான் மீமா.. ம்ம் மீம்ஸ்.. அதெல்ல்லாம் வருதே நயன்டீஸ் கிட்ஸ்.. அதானே நீயி..” என்றவர், “என்னது ஒரு ரெண்டு வருஷம் முந்தி பிறந்திருப்ப..” என்று சொல்ல,
“ம்மா இதெல்லாம் டூ மச் மா…” என்றான் வந்த சிரிப்பை அடக்க முடியாது.
“இனியாவது உருப்படுற வழிய பாரு.. நான் அப்புறம் மனுவோட பேசிக்கிறேன்..” என்றவர் வைத்துவிட,
இது இத்தனை எளிதாய் முடியும் என்பது இருவருக்குமே வியப்பாய் இருந்தது..
மீனாவின் தொனி கிண்டலாய் இருக்கும்போதே சித்து ஸ்பீக்கரில் போட்டுவிட, இப்போது மானசாவோ அடக்கமாட்டாது சிரித்துக்கொண்டு இருந்தாள்.
“சரி சரி ரொம்ப சிரிக்காத …” என்றவன், அவள் குடித்து வாய்த்த கோப்பையை எடுத்துக்கொண்டு செல்ல,
“ஹா ஹா.. பட் செம.. ஆன்ட்டி தான் எனக்கு நல்லா செட்டாவாங்க..” என்றாள்.
“போ டி.. சரியான சிலுப்பி..” என்றவன் அங்கிருந்த ஒரு சிறு தலையணையை அவள் மீது வீச,
“ஹா ஹா..” என்று இன்னும் சிரித்தவள் “அதென்ன சாங் நான் வர்றப்போ ஹம் பண்ணிட்டு இருந்தது..” என,
“சொல்ல முடியாது…” என்றான்..
“ம்ம்ச் சொல்லுங்க…”
“சொல்ல முடியாது…” என்றவன் அவள் முன்னே ஹம் மட்டுமே செய்ய அவளும் அதனை அப்படியே பிடித்துக்கொண்டாள்.
“ஏய் நான் பாடுறப்போ நீ பாடாத..” என,
“எந்தா சாரே..!!!” என்றாள் இடுப்பினில் கை வைத்து முறைப்பாய்..
“அப்படி சொல்..!!” என்று அவளின் தலையில் முட்டிச் செல்ல, “என்ன சாங் அது.. பர்ஸ்ட் லைன் தெரியலை…” என்று அவளும் அவன் பின்னோடு போக, கெஞ்சல் கொஞ்சல் என்றாகி, இருவரும் தயாராக,
அது என்ன பாடலாய் இருந்தால் தான் என்ன, அவன் கொஞ்சும், அவனை கொஞ்சும் ஏழிசையும் அவள் மட்டும்தானே..
சித்திரைச் செல்வனின் மனதை நிறைத்தவள், மானசா மட்டும்தானே..!!
காதல் – எப்போதுமே அவர்களை கொஞ்சும் ஏழிசை தானே..!!!        
                    
                               
          
            
 
 
  
                     
        
                 
 
 
           
 
   
         
                         
 
 
         
 
      
              
      
 
 
 
 
                               
                
 
 
         
 
     
 
      
 

Advertisement