Advertisement

கொஞ்சும் ஏழிசை நீ – 35
“மனு லீவ் இட்..” என்று சித்திரைச் செல்வன் சொல்ல,
“நோ..” என்று அழுகையினூடே மறுத்தவள், “எ.. எனக்கு என்ன பண்ண தெரியலை..” என்று இன்னும் அழ, டேவிட்டிற்கு ஒன்றும் விளங்கவில்லை.
“ஹேய்…!! என்னன்னு சொல்லுங்க பர்ஸ்ட்…” என்று டேவிட் சொன்னவன் “மனு உனக்கு என்ன பிராப்ளம்..” என,
“டேவிட் நான் சொல்றேன்… என்னோட வாங்க..” என்று அவனை வெளிய அழைத்து சென்றுவிட்டான் சித்திரைச் செல்வன்.
மானசா அழுதுகொண்டு இருந்தவள் “எங்க போறாங்க..” என்று எழ, நேயாவோ “மனு..” என்று அவளின் கால்களை கட்டிக்கொள்ள,
“நீ எங்க போற மனு.. நீதான் இப்போ எல்லாத்தையும் க்ரிட்டிக்கல் ஆகிட்டு இருக்க..” என்று நீல் சொல்ல,
“நான் என்ன தான் செய்ய?? எனக்கு நிஜமா தெரியலை நீல்..” என்றாள் இயலாமையில்.
நான்கு வருடங்கள் முன்னம், எப்படி சித்திரைச் செல்வன், என்ன செய்வது என்று தெரியாது, ஒரு முடிவெடுக்க முடியாது இயலாமையில் தவித்தானோ அதே நிலை தான் இப்போது மானசாவிற்கு.
ஒருநிலையில் இருக்க முடியவில்லை.. ஒருநிலையில் இருந்திட முடியவில்லை.
இப்போது சித்து இங்கே இருந்தாலும் அவஸ்தை, இல்லையென்றாலும் பேரவஸ்தையாய் இருக்கும் போலிருந்தது.
ஒருவித குற்ற உணர்வும்..!!
ஒருவேளை இதுபோலத்தான் அவனுக்கும் இருந்திருக்குமோ??!!
அதெல்லாம் நினைக்க நினைக்க, அவளுக்கு தலை வலி வந்தது தான் மிச்சம்.
நீல் அவள் யோசிக்கட்டும் என்று தனிமை கொடுத்து அவனும் வெளி வர, சித்துவோ “லீவ் இட் டேவிட்.. அவ எதோ கன்பியூசன்ல இருக்கா.. கிவ் ஹெர் சம் டைம்.. ” என, நீல் கூட சொல்லிவிட்டானோ என்று பார்த்தான்.  
ஆனால் சித்து சொல்லவில்லை.. வேறு சொல்லி சமாளித்துவிட்டான்..
“டேவிட் அவ ஸ்டடீஸ் கம்ப்ளீட் பண்றதுக்குள்ள இப்படி எல்லாம் வரும்… நிறைய ஸ்ட்ரெஸ் இருக்கும். சில டைம் இப்படியெல்லாம் நடக்கும்.. லீவ் ஹெர்… பியூ டேஸ்ல ஷி வில் பி ஓகே.. அண்ட்.. நான் போறதுக்கும் இதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை..” என்றிருந்தான்.
அவ்வப்போது மானசா சோர்வாய் இருப்பது, சில நேரம் தனிமையை நாடுவது, நீலோடு வீணாய் விவாதம் செய்வது  இதெல்லாம் கண்டிருக்கிறானே.   ஆக அதுபோல தான் இப்போதும் என்று எண்ணிக்கொண்டான் டேவிட்.
அவனை அப்படி எண்ண வைத்துவிட்டு சென்றான் சித்திரைச் செல்வன்.
நீல் “நீயாவது சொல்லியிருக்கலாமே சித்து..” என,
“விடு நீல்.. மனு முதல்ல ரிலாக்ஸ் ஆகட்டும்..” என்றுவிட்டான்.
மறுநாள் காலை கிளம்புவதாய் இருக்க, அன்றைய இரவு சித்துவிற்கும் சரி, மானசாவிற்கும் சரி உறக்கம் என்பது சிறிதும் இல்லை. மறுநாள் வார விடுமுறை வேறு. நீல் தானும் வருவதாய் சொல்லியிருக்க, மானசாவிடம் எங்கே என்ன என்று கேட்டுக்கொண்டான்.
மானசாவிற்கு யாரையும் நேர்கொண்டு காண முடியவில்லை. ஒருவித குற்ற உணர்வு.. ஒருவித மன அழுத்தம்… நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டு தான் இருந்தது.
சித்திரைச் செல்வன் சென்ற பின்னும்.. தனுஜா ராபர்ட் வந்த பிறகும்..
“என்ன மனு.. எப்படியோ இருக்க??” என்று தனுஜா வந்ததில் இருந்து இந்த இரண்டு நாட்களாய் கேட்டுக்கொண்டே தான் இருக்கிறாள். மானசாவோ அது இது என்று சொல்லி சொல்லி சமாளிக்க,
“சரி நீ கிளாஸ் போயிட்டு வா உன்னோட கொஞ்சம் பேசணும்..” என்றாள் தனுஜா.
“எது பத்தி..??” என்று மானசா கேட்கும் போதே, உள்ளே ஒரு நடுக்கம்???!!
“அட எல்லாம் நல்ல விஷயம் தான்… நீ ஈவ்னிங் வா பேசிக்கலாம்..” என, அவளுக்கு ஒன்றும் விளங்கவில்லை.
நீலோ இவளோடு பேசினாலும் இன்னும் முகம் தூக்கிக்கொண்டு தான் இருந்தான். பல்கலைகழகத்தில் இரண்டொரு முறை சித்துவைப் பார்த்தாள். அவனோ காணாது போல் கடந்து விட, அது இன்னும் தவிக்கச் செய்யது.
ஏதோ உருவமில்லா ஒன்று தன்னை போட்டு மொத்தமாய் வாரி சுருட்டுவது போலிருந்தது அவளுக்கு.
எதிலிருந்து தப்பிக்க நினைக்கிறாளோ, அதனுள்ளேயே மூழ்குவது போலிருக்க, மூச்சு விடுவது கூட இயல்பில் இல்லை மனுவிற்கு.
இதில் தனுஜா வேறு என்ன சொல்ல காத்திருக்கிறாளோ…!!
மாலை வீடு செல்ல, அங்கே புதியவர்கள் ஒரு சிலர் இருந்தனர்.. “மனு திஸ் இஸ் தீபக்.. அப்பாவோட ஸ்கூல்மேட் சன்…” என்று அங்கிருந்த ஒருவனை அறிமுகம் செய்ய,
“ஹாய் தீபக்..” என்று சாதாரணமாய் சொன்னவள், அவளின் அறைக்கு வந்துவிட, பின் சிறிது நேரத்தில் தனுஜா வந்தாள்.
“மனு என்ன செய்ற நீ..” என்று.
“செம ஹெட் ஏக் தனு..” என்றவள் சோர்வாய் காண,
“ஓ..!!! எல்லாம் நைட் டின்னர் வெளிய போலாம்னு பிளான்.. ஒரு ஹாப் ஹவர் ரிலாக்ஸ் பண்ணிட்டு வர்றியா??” என,
“நான் வரலை நீங்க போயிட்டு வாங்க..” என்றாள்.
“ஷ் மனு..!!” என்றவள், “உன்கிட்ட சொல்லிருக்கணும். ராபி தான் சர்ப்ரைஸா இருக்கட்டும்னு சொல்லவேண்டாம் சொல்லிட்டான்…” என,
“என்ன? என்ன சர்ப்ரைஸ்…” என்றாள் மானசா ஒரு திடுக்கிடலுடன்.
“தீபக் வீட்ல இருந்து மேரேஜ் ப்ரோபோசல் வந்திருக்கு..” என்று தனுஜா சந்தோசமாய் சொல்ல
“யாருக்கு..??” என்றாள் மானசா, ஏதோ கேட்கவேண்டுமே என்று.
“யாருக்கா.. உனக்கு தான் தனு… தீபக் இங்கேதான் இருக்கார்… நீயும் இங்கே இருக்கன்னு தெரிஞ்சு தான் தீபக்ஸ் டாட் அப்பாக்கிட்ட பேசிருக்கார்.. அப்பாக்கு உன்னோடவே பேசிடனும்னு. நான் தான்.. நான் அங்கே போறேன்ல நேராவே போய் பேசுறேன்னு சொல்லி வந்தேன்.. என்ன உனக்கு ஓகே வா??” என,
அவ்வளோதான்..!! மொத்தமாய் ஆடி போனாள் மானசா..!!
“தனு..!!!” என்று அதிர்ந்தவள், “வாட் இஸ் திஸ்…” என்று கத்த, அவளின் இந்த திடீர் மாற்றம் தனுஜாவிற்கு அதிர்ச்சியை கொடுக்க,
“ஜஸ்ட் எ ப்ரோபோசல் ஒன்லி மனு…” என்றாள் தனுஜா..
“அதுக்கு.. இப்படி.. இப்படி நேரா இங்கவே வர சொல்வியா நீ.. ஹோட்டல் போலாம் சொல்வியா நீ..” என்று மானசா என்ன சொல்கிறோம் என்று தெரியாது கத்த,
அவள் போட்ட சத்தம் வெளியே இருந்தவர்களுக்கும் கேட்க, தீபக்கோடு வந்திருந்த அவனின் நண்பனும் அவனும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ள,
ராபர்ட் எழுந்து உள்ளே வந்தான் “வாட்ஸ் கோயிங்..” என்று.
“நத்திங் ராபி.. அவளுக்கு கொஞ்சம் ஹெல்த் சரியில்ல.. அது தெரியாம நாம சர்ப்ரைஸ் அது இதுன்னு ..” என்று தனுஜா இழுக்க,
“ஸ்டாப் திஸ் தனு.. இது என்ன விளையாட்டு.. சர்ப்ரைஸ் பண்ற விசயமா இது?? அட்லீஸ்ட் என்கிட்டே இன்பார்ம் ஆவது செய்யனுமா இல்லையா?? என்ன நினைச்சீங்க நீங்க.. இப்படி கூட்டிட்டு வந்து நிறுத்தினா நான் அப்படியே ஓகே சொல்லிடுவேன்னா.. வாட் யூ திங் தனு…” என்று தன் அழுத்தங்களை எல்லாம் எதோ ஒரு வகையில் வார்த்தைகளாய் கொட்ட,
பேசிக்கொண்டே இருந்தவள், அப்படியே கால் மடக்கி  கீழேயே அமர்ந்துவிட,     “மனு.. ஏய் மனு..” என்று தனுஜா அவளிடம் செல்ல,
“ஆஸ்க் ஹிம் டு கெட் அவுட்.. என்னால சும்மா கூட இப்படி எல்லாம் யாரையும் பார்க்க முடியாது..” என்றாள் மானசா.
ராபர்ட்டிற்கு இவை எல்லாம் புதிதாய் இருக்க, தனுஜாவை பார்த்தான் ‘என்ன இது..??’ என்று.
‘ஐ டோன்ட் க்னோ…’ என்று தனு முணுமுணுக்க,
“மானசா …” என்றான் ராபர்ட்.
“ப்ளீஸ் ராபி.. டோன்ட் ஆஸ்க் மீ எனித்ங்.. அண்ட் ஐ வோன்ட் கம் அவுட்..” என, அவளின் செயல்பாடுகள் எல்லாம் முற்றிலும் வேறாய் இருக்க, முகம் சிவந்து, கண்கள் கலங்கி பார்க்கவே மானசா எப்படியோ ஆகிப்போனாள்.
இந்த காதல் இருந்தாலும் அவஸ்தை.. இருந்து சென்றாலும் அவஸ்தை.. இருந்தும் இல்லாதிருப்பதும் அவஸ்தை..
“மனு.. லுக் அட் மீ.. இது ஜஸ்ட் எ கேசுவல் மீட் தான்..”
“நோ… கேசுவலா கூட என்னால இப்படி ஒரு ப்ரோபோசல்க்கு வந்து நிக்க முடியாது..” என்று கத்தியவள், “ஆர் ஐ வில் கோ அவுட்…” என்று கிளம்ப,
“ஹேய்.. ஹேய்.. நில்லு டி.. எப்போ பார் இப்படி பீகேவ் பண்ணாத.. யார்மேல கோவம்னாலும் உடனே கிளம்பிடுறது.. அதுசரி பாடம் சொல்லிக் கொடுத்தவர் கிட்டே கோவிச்சுட்டு வீட்டுக்கு வந்த ஆள் தானே நீ…” என்று தனுஜா சம்பந்தம் இல்லாது பழையதை பேச, முடிந்தது அத்தனையும்.
மானசா அவளை உணர்வுகள் அற்று ஒரு பார்வை பார்த்தவள் “நான் போறேன்.. லீவ் மீ அலோன்..” என்று சொல்லி யாரின் வார்த்தைக்கும் காத்திருக்கவில்லை.. ஓடாத குறைதான்..
அவளின் பின்னே இவர்களால் அந்த வேகத்தில் எல்லாம் வரவே கூட முடியவில்லை..
தீபக் மற்றும் அவனோடு வந்தவர்களுக்கு இதெல்லாம் வேடிக்கையாய் இருக்க, ராபர்ட்டும் தனுஜாவும் அவர்களை சமாதானம் செய்து அனுப்பும் முன்னம் போதும் போதும் என்றாகி இருந்தது.
டேவிட்டும், ஜெனியும் தான் மனுவின் பின்னே போனார்கள்.
“ப்ளீஸ் லீவ் மீ அலோன்…” என்று அவர்களிடமும் சொன்னவள், நேரே சென்று நின்ற இடம் சித்துவின் இருப்பிடம்.
அப்போதுதான் அவன் வீடு வந்திருந்தான். காலிங் பெல் விடாது அடிக்க நீலாக இருக்குமென்று நினைத்து, கதவு திறக்க, மானசா வந்து நின்ற நிலை பார்த்து திகைத்துத்தான் போனான் சித்து..
“மனு..!!!” என்று நம்பவும் முடியாது அழைக்க,
உள்ளே வந்தவள் “நான் கொஞ்ச நேரம் தூங்கனும்..” என,
“யா.. ஆ..!!” என்றவனுக்கு எதுவோ சரியில்லை என்று பட்டது.
அவள் முகமே அதனைக் காட்டிக்கொடுக்க “வா..” என்று உள்ளே அழைத்துச் சென்றவன்,
“ரிலாக்ஸ் பண்ணு..” என்று சொல்லி அவளை படுக்க வைக்க, படுத்து சில நொடிகளில் உறங்கியும் போனாள் மானசா. சித்திரைச் செல்வன் எழுந்து செல்ல முடியாதவாறு அவனின் கரம் பற்றியபடி.
 
எதோ நடந்திருக்கிறது என்று புரிந்தது ஆனால் என்னவாய் இருக்கும் என்று அவனுக்கு தெரியவில்லை. மானசா நன்கு உறங்கிய பின்னே, மெதுவாய் தன் கரம் விடுவித்து, நீலுக்கு அழைத்துக் கேட்க “ஐ டோன்ட் க்னோ சித்து…” என்றுவிட்டான்.
மானசா அப்படியே வீட்டிலிருந்து கிளம்பி வந்திருப்பது தெரிய, கையில் அவளின் அலைபேசியோ இல்லை எப்போதும் அவள் போடும் சைட் பேக்கோ இல்லை. ஆக திடீரென அப்படியே வந்துவிட்டாள். சொல்லிவிட்டு வந்தாளோ இல்லையோ என்று தெரியாது டேவிட்டிற்கு அழைத்து “மானசா இஸ் ஹியர்…” என,
“ஓ..!! தேங்க் காட்…” என்றான், சித்துவிடம் நடந்தவைகளை கூற, அவளின் எண்ணவோட்டங்களை ஓரளவு சித்திரைச் செல்வனால் புரிந்துகொள்ள முடிந்தது.
“சித்து.. அவ எழுந்ததும்.. கூட்டிட்டு வர முடியுமா??” என,
“யா கண்டிப்பா…” என்றவன் வைத்துவிட்டான்.
என்னவோ மானசா அனைத்தையும் விடுத்து, அவளின் வேண்டாம்களை எல்லாம் தாண்டி தன்னிடமே வந்துவிட்டதாய் ஓர் உணர்வு.. அதுவே தானாய் ஒரு நிமிர்வை கொடுக்க, ‘யார் வந்தாலும் பார்த்துக்கலாம்…’ என்ற தைரியம் கொடுத்தது.
அங்கே டேவிட்டோ “சித்து வீட்ல இருக்கா.. தூங்கிட்டு இருக்காலாம்..” என,
“சித்துவா…” என்று தனுஜா முதலில் புரியாது கேட்க,
“எஸ்.. சித்து…” என்றவன், அவன் யாரென்று சொல்ல,
“ஹேய்..!! நீ.. நீ சித்திரைச் செல்வனை சொல்றியா??!!” என்றாள் தனுஜா..
“எஸ்.. மனு உன்கிட்ட அவனைப் பத்தி சொல்லிருக்காளா…” என்று டேவிட் கேட்க,
“அட தே க்னோ ஈச் அதர் வெரி வெல்…” என்ற தனுஜா மானசா சர்டிபிகேட் கோர்ஸ் படிக்கப் போனது, அவனோடு சண்டை போட்டு வந்தது, பின் அங்கே அவனின் வீட்டில் தங்கியது, பின் அவர்கள் ஊட்டி வந்தது, அடுத்து இவள் திரும்பி விட்டது எல்லாம் சொல்ல,
‘இவ்வளோ நடந்து இருக்கா..??!!!’ என்று ஆச்சர்யமாய் பார்த்தனர் டேவிட்டும், ஜெனியும்.
“அட என்ன மனு எதுவும் சொல்லலையா ??” என்று தனுஜா கேட்க,
“என்ன டேவிட் இதெல்லாம் ..” என்றான் ராபர்ட் சற்றே கடின முகத்தோடு.
‘உன்னை நம்பித்தானே அனுப்பினோம்..’ என்ற கேள்வி அதில் இருக்க,
“ஹேய்… சீரியஸ்லி.. ரெண்டு பேருமே என்கிட்டே எதுவும் சொல்லலை.. சொல்லாம எனக்கெப்படி தெரியும்..” என்றவனுக்கு சற்றே விஷயம் புரிந்தது.
ஆக மானசாவிற்கும், சித்திரைச் செல்வனுக்கும் இடையில் ஏதோ ஒன்று.. ஏதோ என்ன ஏதோ??!! எல்லாம் அதுவேதான்.. அதுதான் அந்த காதல்.. ஊடல்.. தேடல்.. வாடல்.. மோதல்.. எல்லாம்.. 
இருந்தும் டேவிட் ஒரு ஊர்ஜிதம் வர முடியாது, தனுஜாவோடு மேற்கொண்டு இதனைப் பற்றி பேச, நல்லவேளை அப்போது நீலும் வந்துவிட, டேவிட் அவனிடம் கேட்டான் ‘எதுவும் தெரியுமா??’ என,
நீலோ, இனியும் சொல்லாது விடுவது மனு, சித்து இருவருக்கும் நல்லதில்லை என்று அவன் தனக்கு தெரிந்தவற்றை எல்லாம் ஒன்றுவிடாது சொல்லிட, தனுஜாவிற்கு ஆச்சர்யமாய் இருந்தது.

Advertisement