Advertisement

                          
               கொஞ்சும் ஏழிசை நீ – 10
“சமாதானம்…” என்று மானசா சொல்லி கை நீட்ட, சித்திரைச் செல்வனும் அதனை ஆமோதிப்பதாய் தலை அசைத்து “யா.. சமாதானம்…” என்று கரம் குலுக்க, இதனைப் பார்த்த பாஸ்கருக்கும், ஷில்பாவிற்கும் நிம்மதியானது.
‘ஹப்பாடி..!!’ என்ற உணர்வு இருவருக்கும்.
“இனி எந்த பஞ்சாயத்தும் இல்லைதானே டா…” என்று பாஸ்கர் கேட்க,
“இப்போதைக்கு இல்ல.. ஆனா பியூச்சர்ல சொல்ல முடியாது..” என்று மானசா பெருந்தன்மையாய் சொல்வது போல் சொல்ல,
“அடேங்கப்பா…” என்றான் பாஸ்கர்.
“இப்போதைக்கு சண்டை இல்லையே.. அது போதும்..” என்ற ஷில்பா, ‘ஓ..!! ஜீசஸ்…’ என்று சொல்லிக்கொள்ள,
மானசாவிற்கும், சித்திரைச்செல்வனுக்குமே தாங்கள் நடந்துகொண்டது அதிகப்படியாய் தான் தெரிந்தது.
“ம்ம் ஸ்டார்டிங்லையே நம்ம இப்படி இருந்திருக்கலாம்…” என்று மானசா சொல்ல,
“இப்போ எதுக்கு நீ முதல்ல இருந்து வர…” என்றான் சித்து.
நால்வரும், கேண்டீனில் அமர்ந்திருக்க, அன்றைய தின வகுப்புகள் எல்லாம் முடிந்து இருந்தது.
‘வெல்கம் பார்டி..’ முடிந்து மறுநாள் ஷில்பா மட்டுமே வகுப்பிற்குச் செல்ல, ‘எங்க அவ…’ என்றுதான் பார்த்தான் சித்து.
“மனு வரலை…” என்று ஷில்பா சொல்ல,
“ஸ்டெப்ஸ்ல நின்னுட்டு வரலைன்னு சொன்னாளா.. ஆஸ்க் ஹெர் டூ கம்..” என, ஷில்பா சென்று அழைத்தமைக்கு ‘போ டி…’ என்று சைகை செய்தாள்.
ஷில்பா மட்டுமே திரும்பி வர, ‘ரொம்ப பண்றாளே…’ என்று நினைத்தவன், தானே எழுந்து சென்று “இப்போ நீ கிளாஸ் வர்றியா இல்லையா…” என,
“இனிமே அப்படி பீகேவ் பண்ண மாட்டேன் சொல்லுங்க வர்றேன்..” என்றாள் பிடிவாதமாய்.
“ம்ம்ச்.. இப்படி நின்னு நம்ம பேசுறது யாராவது பார்த்தாலோ, இல்லை நீ பேசுறதை யாரும் கேட்டாலோ கண்டிப்பா நம்மளை தப்பா நினைப்பாங்க. சோ எதுன்னாலும் அங்க வந்து பேசு…” என்றவன் அதற்குமேல் எதுவும் சொல்லாது சென்றுவிட,
“ச்சே..” என்று முகத்தை சுருக்கியபடித்தான் மானசா அங்கே சென்றாள்.
“ம்ம்.. டெல் மீ.. என்ன பிராப்ளம் உனக்கு….” என்று சித்து கேட்க, பாஸ்கரும் அப்போது தான் உள்ளே நுழைய,
“என்னடா வந்ததுமேவா…” என்றான்.
“இல்லடா இன்னிக்கோட இதெல்லாம் ஸ்டாப் பண்ணிடலாம்…” என்றவன் “கம்மான் டெல் மீ மானசா வாட்ஸ் யுவர் ப்ராப்ளம்…” என்று கேட்க,
“நீங்க தான்…” என்றாள் அசராது.
அவனுக்கும் தெரியும், அவள் இப்படித்தான் சொல்வாள் என்று. ஆக எதையும் முகத்தில் காட்டாது “மீ..!!!” என்று ஆச்சர்யமாய் கேட்பது போல் கேட்க,
“எஸ்.. யூ ஒன்லி…” என்றாள் மானசா.
“ம்ம்.. என்ன செய்யலாம்..??!!” என்று அப்போதும் எதுவும் அறியாதவன் போல் கேட்க,
“இதோ.. இதுதான்.. உங்களோட இந்த பீகேவியர் தான் எனக்கு சுத்தமா பிடிக்கல.. எப்படி சர்.. எப்படி உங்கனால இப்படி இருக்க முடியாது.. தப்பு எல்லாம் உங்க பேர்லன்னு தெரிஞ்சும்.. என்னை கேட்கறீங்க என்ன செய்யலாம்னு..” என்று மானசா ஆரம்பித்து விட,
‘அட கொடுமையே…’ என்று பாஸ்கரும், ஷில்பாவும் பார்க்க,
“இதோ.. எனக்குக் கூடத்தான் நீ இப்படி பேசுறது பிடிக்கல..” என்றான் சித்துவும்.
இவர்கள் இப்படி பேசிக்கொண்டு இருக்கும் போதே பியூன் வந்து “ஹச்ஓடி ரவுண்ட்ஸ் வர்றார்பா…” என்றுவிட்டு போக,
அப்படியே பேசிக்கொண்டு இருந்தவைகளை விட்டு, சமர்த்தாய் மானசாவும், ஷில்பாவும் அமர்ந்துவிட, பாஸ்கர் அவனின் இருக்கைக்கு செல்ல, சித்து வெள்ளை நிற பலகையின் முன் நின்று மார்கரில் எதையோ வரைய ஆரம்பிக்க, அடுத்த இரண்டு நிமிடங்களில்
“ஹலோ கைஸ்…” என்றபடி வந்தார் சிவக்குமார்.
நால்வரும் எழுந்து நின்று “குட் மார்னிங் சர்…” என,
“குட் மார்னிங்… உக்காருங்க..” என்றவர், அங்கிருந்த இருக்கை ஒன்றை தானே இழுத்துப் போட்டு அமர, பின் இவர்கள் நால்வரும் அமர
“தென் எப்படி போகுது கிளாஸ்.. போரிங் ஆர் இன்ட்ரெஸ்ட்டிங்??!!” என்று ஷில்பாவிடமும் மானசாவிடமும் கேட்க,
“கோயிங் குட் சர்..” என்றனர் இருவரும்.
“ம்ம் குட்…” என்றவர், மேலும் சிறிது நேரம் பேசிவிட்டு “நெக்ஸ்ட் வீக் ஜார்ஜ் சர் வந்திடுவார்.. சோ நீங்க ப்ரீ ஆகிடலாம்..” என, நிஜமாகவே இது சித்திரைச் செல்வனுக்கும் சரி, பாஸ்கருக்கும் சரி அப்படியொன்றும் சந்தோசம் கொடுக்கவில்லை.
அவர் சொல்வதற்காக “ஓகே சர்..” என்றிட, அடுத்து அவரும் கிளம்பிச் செல்ல, அப்படியே அங்கே மௌனம் மட்டுமே.
ஷில்பாவும், மானசாவும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக்கொள்ள, பாஸ்கர் தான் “என்ன சித்து இப்படி சொல்லிட்டு போறார்..” என,
“உண்மை தானேடா.. ஜார்ஜ் சர்க்கு பதிலா தானே நம்ம எடுக்கிறோம்..” என்று சொன்னாலும், அவனுக்குமே அதில் அப்படியொன்றும் மகிழ்ச்சியாய் இல்லை.
எதோ ஒரு உணர்வு.. சொல்ல முடியாது இருந்தது… சட்டென்று கனமாய் ஒன்று தனக்குள்ளே வந்தமர்ந்தது போலிருந்தது.
இவர்களுக்கு வகுப்பே எடுக்க பிடிக்கவில்லை என்றவன் தான் இப்போது, இவர்களின் வகுப்பினை வேறொருவர் எடுக்கப் போகிறார் என்றதும் அதையும் ஏற்றுகொள்ள முடியாது நிற்கிறான். ஆனால் அதை மற்றவர் முன்னே ஒத்துக்கொண்டால் அது சித்திரைச் செல்வன் இல்லையே.
“சோ இப்போ ஹேப்பியா…” என்று மானசாவிடம் கேட்க,
“இதையே நானும் கேட்கலாம் தானே…” என்றாள் பதிலுக்கு.
“ஓ..!! காட்.. ப்ளீஸ் ஸ்டாப் திஸ்…” என்று ஷில்பா முதல் முறையாய் சற்று குரல் உயர்த்தவும் தான் இவர்கள் இருவரும் வாய் மூட,
“சித்து.. நீ கிளாஸ் முடி.. எல்லாம் கேண்டீன் போலாம்.. நான் லேப் போறேன்..” என்று பாஸ்கர் கிளம்பிட, சித்திரைச் செல்வனும் அடுத்து பாடம் நடத்த, பெண்கள் இருவரும் அமைதியாகவே உள் வாங்கிக்கொண்டனர்.
ஒருவழியாய் எல்லாம் முடிந்து இவர்கள் கேண்டீன் செல்லவும் தான், முதலில் மானசாவே இறங்கி வந்து “சமாதானம்..” என்று கை நீட்ட, சித்துவும் அதற்கு சம்மதித்துக்கொண்டான்.
வேறு வேறு விஷயங்கள் நிறைய பேசினர். பேச்சினூடே “நான் நெக்ஸ்ட் வீக்கும் ஊருக்கு போறேன்..” என்று மானசா சொல்ல,
ஷில்பாவும் “நானும் பூவாம்…” என்று சொல்ல,
“வந்தது நேத்து அதுக்குள்ள என்ன நெக்ஸ்ட் வீக் வேற..” என்று கேட்டது சித்திரைச் செல்வனே.
“டாடி பர்த்டே பார்ட்டி இருக்கு.. சோ…” என்று மானசா சொல்லவும்,
“பார்ட்டியா அப்போ நாங்க..” என்றான் பாஸ்கி.
‘டேய்…’ என்று சித்து முறைக்க,
“நெக்ஸ்ட் மன்த் என் அக்காவோட எங்கேஜ்மென்ட் இருக்கு. அப்போ நம்ம எல்லாம் சேர்ந்து கண்டிப்பா போறோம்.. ஓகே வா..” என்று மானசா சொல்ல, ஷில்பாவும், பாஸ்கரும் சரி என்று தலையை ஆட்ட, சித்து எதுவுமே சொல்லாமல் இருக்க,
“எந்தா சாரே…” என்றாள் மானசா.
“லுக் மானசா.. எங்கக்கிட்ட பேசுறது போல எல்லாம் நீ ஜார்ஜ் சார்கிட்ட பேச முடியாது. ஹி இஸ் வெரி ஸ்ட்ரிக்ட்.. புரிஞ்சதா…” என,
“இப்போ நான் என்ன பேசுறேன்.. நீங்க என்ன சொல்றீங்க..??!!” என்றாள் மானசா.
“சொல்லணும் தோணிச்சு..”
‘நல்லா தோணிச்சு..’ என்று முணுமுணுக்க, “ம்ம்ம் ஐ க்னோ ஹவ் டு பீகேவ் வித் அதர்ஸ்…” என்றாள் கடுப்பாக.
‘அப்போ நாங்க மட்டும் யாரு…’ என்று கேட்க வந்ததை அப்படியே விழுங்கியவன் “ஓகே யூ கைஸ் கேரி ஆன்.. ஐ ஹேவ் சம் வொர்க்ஸ்…” என்றுவிட்டு சித்து எழுந்து சென்றுவிட,
“எப்படி பாஸ்கிண்ணா உங்களுக்கு இப்படி ஒரு பிரண்ட்…” என்றாள் மானசா என்ன முயன்றும் அவளுக்கு எரிச்சலை கட்டுப்படுத்த முடியவில்லை.
“ம்ம் அவன் கொஞ்சம் டென்சன்ல இருக்கான்..”
“ஏன்.. என்னாச்சு..??!!”
“நாளைக்கு ஈவ்னிங் ஒரு பேப்பர் சம்பிட் பண்ணனும்.. அது அவன் இன்னும் கம்ப்ளீட் பண்ணல.. அதான்..” என்று பாஸ்கர் சொல்லும்போதே,
“ஏன்.. சின்சியார் சிகாமணி ஆச்சே உங்க பிரண்ட்…” என்றாள் மனு.
“லீவ் போட்டான்ல.. அதான்..” என,
ஷில்பா “நம்ம ஹெல்ப் செய்யாம்..” என்று சொல்ல, “ம்ம் அதானே.. நாங்க எதுவும் செய்ய முடியுமா??!!” என்றாள் மானசாவும்.
“என்ன பண்ண முடியும் நீங்க?? கேட்டாலும் அவனே வேணாம் தான் சொல்வான்..”
“அட அதுக்காக.. என்ன செய்யனும்னு சொன்னா நாங்க செய்வோம் தானே.. இப்போ இருந்து நாங்க ப்ரீயா தான் இருப்போம்..” என்ற மானசா “வாங்க போலாம்..” என, மீண்டும் மூவரும் கிளம்பி அவர்களின் வகுப்பறைக்கு வர, சித்திரைச் செல்வன் அவனின் மடி கணினி வைத்து தீவிரமாய் எதையோ டைப் செய்துகொண்டு இருந்தான்.
இவர்கள் வந்த சத்தம் கேட்டு நிமிர்ந்தவன் ‘என்ன…’ என்பது போல் பார்க்க,
“நாங்களும் ஏதாவது செய்றோம்..” என்று மானசா சொல்லும் முன்னமே,
“நீ சும்மா இருந்தாலே அது பெரிய ஹெல்ப்..” என்றவன், மீண்டும் பார்வையை கணினி திரையில் பதிக்க,
“சித்து… டூ ஹண்ட்ரட் பேஜஸ் டைப் பண்ணனும் நீ.. கொடுத்தா ஆளுக்கு கொஞ்சம் டைப் செய்யலாம் தானே..” என்று பாஸ்கர் சொல்ல,
“சித்து சேட்டா.. வி டூ…” என்று ஷில்பாவும் சொல்ல, “இல்ல இருக்கட்டும்.. ஐ வில் கம்ப்ளீட் இட்..” என்றான் சித்து அப்போதும்.
“டேய் ரொம்ப பண்ணாத டா… உன்னோட டாக்டரேட்ல இவங்க பங்கு கேட்க மாட்டாங்க..” என்று பாஸ்கர் சொல்லும் போதே,
“நாங்க போய் எங்க லேப்டாப் எடுத்துட்டு வர்றோம்..” என்று பெண்கள் இருவரும் கிளம்பிவிட்டனர்.
“ஏன் பாஸ்கி.. சிலது எல்லாம் நான் டிஸ்டன்ஸ்ல வைக்கணுன்னு நினைக்கிறேன். தேவையில்லாத பேச்சுக்கு இடம் கொடுக்கக் கூடாது..” என்று சித்திரைச் செல்வன் சலிப்பாய் சொல்ல,
“ஏன்டா.. அவங்களும் இங்க உக்கார்ந்து டைப் அடிச்சு கொடுக்கப் போறாங்க.. இதுல யாரும் தப்பா பேச என்ன இருக்கு??” என்று பாஸ்கர் கேட்க,
“அப்படியில்ல..” என்றான் சித்து.
“எப்படியும் இல்ல.. நீ என்ன எதுன்னு சொல்லு.. சீக்கிரமே முடிச்சிடலாம்..” என்றவன் அவனின் மடிக்கணினி எடுத்து வைத்து அமர்ந்துவிட, சித்திரைச் செல்வனுக்கு அதற்குமேல் மறுக்க முடியவில்லை.
ஷில்பாவும், மானசாவும் கூட சில நொடிகளில் அடுத்து வந்துவிட, “இந்த பேப்பர்ஸ்ல இருக்கிறது எல்லாம். மிஸ்டேக் எதுவும் இருக்கக் கூடாது..” என்றபடி சித்திரைச் செல்வன் சொல்ல,
இம்முறை மானசா நிஜமாகவே விளையாட்டுத் தனம் எல்லாம் விட்டுத்தான் அமர்ந்து வேலை செய்தாள்.
இடையிடையில் அவளுக்குப் புரியாதவற்றை எல்லாம் அவனிடம் கேட்டு தெரிவு செய்துகொள்ள, ஷில்பாவும் அவளுக்குப் புரியாத வற்றை கேட்டு அடிக்க, பேச்சோடு பேச்சாய் அங்கே வேலை நடந்தது.
சித்திரைச் செல்வனுக்கே ஆச்சர்யம் தான் மானசா இத்தனை பொறுப்பாய் அமர்ந்து அவன் சொன்னதை செய்வது. அவள் கேட்கும் சந்தேகங்கள் சிலது அவர்களின் படிப்பு சம்பந்தமாகவும் இருக்க,
‘பரவாயில்ல, கிளாஸ் நல்லா கவனிச்சு இருக்க.. இல்லன்னா இந்த டாபிக்கோட ரிலேட் பண்ணி இப்படி கேட்க முடியாது..’ என்று நினைத்துக் கொண்டவனுக்கு தானும் நன்றாகவே சொல்லிக் கொடுத்திருக்கிறோம் என்ற திருப்தி இருந்தது.
பொதுவாய் ஆராய்ச்சி மாணவர்களுக்கு என்று ஒதுக்கியிருக்கும் அறை பக்கம் வேறு யாரும் வர மாட்டார்கள். அப்படியே வந்து பார்த்தாலும் கூட, இங்கே தவறாய் நினைக்கவோ, பேசவோ எதுவுமில்லை என்பதால் யாருக்கும் எதுவும் வித்தியாசமாகத் தெரியவில்லை.
நால்வரும் சேர்த்து டைப் செய்ததில் அடுத்த இரண்டு மணி நேரத்தில் எல்லாம் முடிந்து விட
“ஒன்ஸ் செக் பண்ணிக்கோங்க..” என, தனி தனியாய் டைப் செய்த அனைத்தையும், சித்திரைச் செல்வனின் மடிக்கணினிக்கு மாற்ற, அடுத்த அரை மணி நேரம் அவன் அனைத்தையும் சரி பார்க்க, அனைவரும் அமைதியாகவே தான் இருந்தனர்.
ஷில்பா தான் “பாஸ்கி சேட்டா நீங்க பினிஷ்டா??” என,
“நான் எப்பவோ முடிச்சாச்சு..” என்றவன், “என்னடா ஓகே வா..” என,
“எஸ் டா..” என்றவன் “தேங்க்ஸ் கைஸ்…” என்றான் உளமார்ந்து.
“தோடா..!!!” என்றாள் மானசா.
அவள் அப்படி சொன்னாலும், அதை ஒரு புன்னகையோடு ஏற்றுக்கொண்டவன், சாதாரணமாய் நேரம் பார்க்க அது மதியம் இரண்டு என்று காட்ட “ஹேய்… நீங்க யாரும் லஞ்ச் போகலை..” என்று சித்து சொல்ல,
“இட்ஸ் ஓகே..” என்றாள் ஷில்பா.
“நோ நோ.. லேட்டாச்சு.. கிளம்புங்க..” என,
“இப்போ போனாலும் மெஸ்ல ஏதும் இருக்காது.. ரூம்ல போய் கூக் எல்லாம் செய்ய முடியாது.. சோ கேண்டீன் தான்..” என்றபடி மானசா எழ,
பாஸ்கர் “டேய் நானும் தான்டா சாப்பிடல..” என்றான்.
“அப்போ வாங்க எல்லாம் அகைன் கேண்டீன் போலாம்..” என்று மானசா அழைக்க,
“நோ..” என்ற சித்து, “பார்சல் வாங்கிட்டு நீங்க ரூம் போங்க..” என,
“நோ தேங்க்ஸ்.. நாங்க தனியா போய் சாப்பிட்டுப்போம்…” என்றவள் “வா சிப்ஸ்..” என்று அழைத்துக்கொண்டு சென்றுவிட்டாள்.
“யப்பா நல்லவனே.. முடியலடா..” என்றபடி பாஸ்கர் எழ,
“இங்க பார் பாஸ்கி.. நம்ம இத்தனை நாள் எப்படி இருந்தோமோ அப்படியே இருக்கிறது தான் நல்லது.. வேற கேர்ள்ஸ் கூட பேசுறோமா இல்லைதானே.. இப்போ இவங்களோட மட்டும் நம்ம ரொம்ப க்ளோஸ் அப்படின்னு காட்டிக்கிட்டா கண்டிப்பா எல்லாரும் அதை வித்தியாசமா நினைப்பாங்க.. ” என்றான் சித்திரைச் செல்வன், பார்வையை வேறெங்கோ வைத்து.
“அப்படின்னு நீயா நினைச்சுக்கோ..”
“நோ டா.. நம்ம எதுக்கும் இடம் கொடுக்கக் கூடாது..”
“இதை நீ எனக்கு சொல்றியா.. இல்லை உனக்கு நீயே சொல்லிக்கிறியா?!!” என்று பாஸ்கர் சொன்னதும், சித்திரைச் செல்வன் முகத்தினில் ஒரு அதிர்ந்த பார்வை.
“ம்ம் நானும் உன்கிட்ட கொஞ்சம் பேசணும்னு தான் நினைச்சேன் மச்சி.. பட் சிலது நானே தேவையில்லாம கன்பியூஸ் பண்ணது போல இருக்கக் கூடாதுன்னு தான் கேட்கலை..” என்றவன், சித்திரைச் செல்வனின் முகம் பார்க்க,
“என்ன கேட்கப் போற??!!” என்றான் அவன்.
“ம்ம் நான் கெஸ் பண்ணது சரியா தப்பா தெரியலை. பட் கிளியர் பண்ணிக்கிறது நல்லது..”
“ம்ம்ச் என்னன்னு முதல்ல கேட்டுத் தொலை..” என்றவன், அவனின் மடிக்கணினி எல்லாம் அமர்த்தி வைத்து எடுத்து வைக்க,
“மானசா மேல உனக்கு ஏதும் பீலிங்க்ஸ் இருக்கா??” என்ற பாஸ்கரின் கேள்வியில் ஒரு நொடி அதிர்ந்தது நிஜமே.
பாஸ்கருக்கு முதுகு காட்டி நின்று இருந்தவன், இன்னமும் அப்படியே நிற்க, “சொல்லு சித்து.. ஆம் ஐ ரைட்…” என்ற பாஸ்கரின் குரலில், வேகமாய் தன்னை சீர் செய்துகொண்டவன்,
“என்னடா சொல்ற??!!” என்றான் புதிதாய் ஏதோ கேட்பது போல்.
“சித்து..!! நான் ரீசன் இல்லாம கேட்கமாட்டேன் தெரியும்..” என்று பாஸ்கர் சீரியசாய் முகம் வைக்க, இதற்குமேல் இவனிடம் இல்லை என்று சொல்ல முடியாது என்று நினைத்தவன்,
“ம்ம் பீலிங்க்ஸ்னா.. நீ நினைக்கிறது போல எல்லாம் இல்லை.. சொல்லப் போனா டாக்டரேட் வாங்காம நான் அதெல்லாம் நினைக்கவே போறது இல்லை..” என்றவன், சில நொடி இடைவெளி விட்டு,
“பட் மானசா.. ம்ம்.. சொல்லத் தெரியலை.. அவளால எனக்குள்ள சில டிஸ்டர்பன்ஸ்.. அது நிஜம்.. எதோ ஒரு வகையில அவளோட ப்ரசன்ஸ் என்னை டிஸ்டர்ப் பண்ணுது…” என்றான் ஒருவித ஆழ்ந்த குரலில்.
“ம்ம் அந்த டிஸ்டர்பன்ஸ் ஏன்னு தெரிஞ்சுக்கலாமா டா. ஏன்னா எனக்கு தெரிஞ்சு அந்த பொண்ணு இப்படியே தான் இருக்கு. சேஞ்சஸ் எல்லாம் உன்கிட்ட தான்.. சோ இதை நான் எப்படி எடுத்துக்கிறது??” என,
அவன் தோள் மீது கை போட்டவன் “எப்படியும் எடுத்துக்க வேண்டாம்.. ஜஸ்ட் ஒன் வீக் தான். தென் ஜார்ஜ் சர் வந்து கிளாஸ் டேக் ஓவர் பண்ணிட்டா எல்லாம் மாறிடும்.. நீ வா..” என்று அவனை இழுக்காத குறையாய் இழுத்துக்கொண்டு சென்றான் சித்திரைச் செல்வன்.
ஆனால் அவன் சொன்ன அதே ஒரு வாரத்தில் தான் இன்னும் இன்னும் தனக்கு மானசாவின் மீது தனக்கு பிடிப்பு ஏற்படும் என்பது அவனே அறியவில்லை.        

Advertisement