Advertisement

அத்தியாயம்  9
என்னைப் பிரியும்
வேளையில் வரும் உன்
ஒற்றைக் கண்ணீர் கூட
அழகான கவிதையே!!!

“இந்த பொண்ணுக்கு தான் சார் அடி பட்டிருக்கு. ரொம்ப ரத்தம் வீணாகிட்டு”, என்றார் லைப்ரேரியன்.
அவள் கீழே விழாமல் பிடித்திருந்தான் கார்த்திக்.
“இது பர்ஸ்ட் இயர் சத்யா தான? கார்த்திக் அன்னைக்கு உன்னை சஸ்பென்ஷன்ல இருந்து காப்பாத்துன பொண்ணு தான?”, என்று கேட்டார் பிரின்சிபால்.
“ஆமா சார்”
“நானே உங்க ரெண்டு பேரையும் பாக்கணும்னு நினைச்சேன். ஜஸ்டினை ஹாஸ்ப்பிட்டல்ல போய் பாத்தோம். அவனே தப்பை ஒத்துக்கிட்டான். நாளைக்கு காலேஜ்க்கு வந்தா சஸ்பென்ஷன் கொடுத்துருவேன் சரியா?”
“அதெல்லாம் வேண்டாம் சார், தெரியாம பண்ணிட்டான். வார்ன் பண்ணுங்க போதும். இப்ப இவளுக்கு டிரீட்மென்ட் கொடுக்கணும் சார்”
“இனி ஹாஸ்ப்பிட்டல் போனா லேட்டா ஆகிரும். லைப்ரரியன் வீட்டுக்கு போகட்டும். நீங்க அவளை அவளோட ஹாஸ்டல்ல வச்சு ட்ரீட்மென்ட் கொடுக்க சொல்லுங்க. அப்புறம் அங்க ஹாஸ்டல் வார்டன் லதாவை என்னோட ஆபிஸ் ரூம்க்கு வர சொல்லுங்க”
“அப்புறம் சார், எப்படியும் காலேஜ் நாளைக்கு இருக்காது. சத்யாவை எங்க வீட்டுக்கு கூட்டிட்டு போறோம். அதோ அம்மா அப்பா வந்திருக்காங்க. இப்ப காலேஜ்ல இருந்து அவ பிரண்ட்ஸ் கிளம்பிட்டாங்கன்னா, அவ அங்க தனியா சிரம படுவா. இந்த நிலைமைல அவளை தனியாவும் பஸ்ல அனுப்ப முடியாது”
அப்போது தேவகிவும், சேகரும் வந்து சத்யாவை தாங்கி கொண்டார்கள்.
அவர்களை பார்த்து அவளும் சோர்வாக சிரித்தாள்.
அதை பார்த்த பிரின்சிபால், “கார்த்திக் மேல எனக்கு நம்பிக்கை இருக்கு. பிரில்லியண்ட் பாய். சத்யாவை நீங்களே அழைச்சிட்டு போங்க. ஆனா அவங்க வீட்ல இன்பர்ம் பண்ணிருங்க. அதனால வேற பிரச்சனை வர கூடாது. அப்புறம் ஹாஸ்டல்ல இன்பார்ம் பண்ணிருங்க”, என்று சொல்லி விட்டு நகர்ந்து விட்டார்.
“அடி பலமா இருக்கு கார்த்திக். ஹாஸ்ப்பிட்டல் போகலாமா?”, என்று கேட்டார் சேகர்.
“இல்ல பா, இங்க ஹாஸ்ட்டல்ல டாக்டர் இருப்பாங்க. அங்க பாத்துட்டு வீட்டுக்கு போகலாம்”
“நான் உங்க வீட்டுக்கு வரலை. நான் ஹாஸ்ட்டல்ல இருக்கேன்”, என்று தர்ம சங்கடமாக சொன்னாள் சத்யா.
“ஏன் மா நாங்க என்ன தீண்ட தகாதவங்களா?”, என்று கேட்டாள் தேவகி.
“ஐயோ ஆண்ட்டி அப்படி எல்லாம் இல்லை. அப்பாக்கு தெரிஞ்சா எதாவது நினைப்பாங்க. அதான்”
“அது தான் பிரச்சனைன்னா, நாங்க பாத்துக்குறோம் மா. நீ உங்க அப்பா நம்பர் சொல்லு”, என்று ஏற்கனவே சம்பந்தி என்று சேவ் பண்ணி இருந்த நம்பரை போனில் எடுத்து கொண்டார் சேகர்.
“அங்கிள்”, என்று தயங்கியவளை பார்த்து  “சீக்கிரம் சொல்லு சத்யா. ஹாஸ்டல் வார்டனை சீக்கிரம் பாக்கணும். அப்ப தான் அவங்க லீவு சொல்லி பிள்ளைங்க கிளம்ப முடியும். இப்பவே மணி ஏழு ஆக போகுது”, என்றான் கார்த்திக்.
“சரி”, என்று நம்பரை சத்யா சொன்னவுடன் “நாங்க பேசிக்கிறோம். இன்னைக்கு எங்க வீட்ல தங்கிட்டு நாளைக்கு ஊருக்கு போகலாம்”, என்று சொன்ன தேவகியின் கையில் கார்த்திக் மற்றும் சத்யா  பேகை கொடுத்து விட்டு அவளை கை பிடித்து அழைத்து சென்றான் கார்த்திக்.
“இந்த நேரத்தில் இந்த பையன் பொண்ணுங்க ஹாஸ்டலுக்கு எதுக்கு  வந்திருக்கிறான்?”, என்று நினைத்து அவனை பார்த்தவர்களை கண்டு கொள்ளாது நேரடியாக வார்டனை பார்த்து அவளுக்கு மருந்து போட சொல்லி விட்டு பிரின்சிபால் சொன்னதை சொன்னான்.
“ரெண்டு வாரம் காலேஜ் லீவு இருக்கும் மேடம். நீங்க உடனே ஆபிஸ் போங்க. அதுக்குள்ள கரசும் வந்துருப்பார். சீக்கிரம் போனா தான் வந்து ஸ்டுடென்ட்ஸ் கிட்ட சொல்லி நைட் கிளம்புறவங்க கிளம்ப முடியும். காலேஜ் பஸ் கொடுத்து பொண்ணுங்களை  பஸ் ஸ்டாண்ட்ல விட சொல்லுங்க. மத்தவங்களை நாளைக்கு காலைல கூட அனுப்பிக்கலாம். அப்புறம் சத்யா என்னோட ரிலேட்டிவ். அவளை எங்க வீட்டுக்கு கூட்டிட்டு போக அம்மா அப்பா வந்திருக்காங்க. அவங்க அப்பா கிட்டயும் நாங்க கேட்டுட்டோம். பிரின்சிபால் கிட்டயும் சொல்லிட்டோம். சார் உங்க கிட்டயும் ஒரு வார்த்தை சொல்ல சொன்னாங்க”
“சரிங்க தம்பி, நோட்ல சைன் பண்ணிட்டு அவளை கூட்டிட்டு போங்க. நான் ஆபிஸ் கிளம்புறேன்”, என்று சொல்லி சென்று விட்டார் லதா.
கட்டு போட்டு வெளியே வந்தாள் சத்யா. அவள் முகத்தை கூர்ந்து பார்த்தான் கார்த்திக். அதில் முகம் சிவந்தாள் சத்யா.
“மருந்து மட்டும் தான் போட்டாங்களா? ஊசி போடலையா?”, என்று கேட்டான் கார்த்திக்.
“போட்டாங்க”
“எங்க?”, என்று கேட்க வந்த உதடுகளை தடுத்தவன் அவளையே பார்த்து கொண்டிருந்தான்.
அவன் பார்வையை தாங்க முடியாமல் “கண்டிப்பா உங்க வீட்டுக்கு வரணுமா?”, என்று கேட்டாள்.
“என்னை உனக்கு பிடிக்கும்னா வா. இல்லைனா வேண்டாம்”, என்றான் கார்த்திக்.
“சரி கிளம்பலாம். நான் போய் ரெண்டு டிரெஸ்ஸாவது எடுத்துட்டு வரேன்”
“ஹ்ம்ம் இது நல்ல பிள்ளைக்கு அழகு. அப்புறம் உன் பிரண்ட்ஸ் கிட்டயும் இப்ப வீட்டுக்கு போறதா இருக்குறவங்களை பேக் பண்ணி கிளம்பி இருக்க சொல்லிட்டு வா”
“ஹ்ம்ம் நீங்க வெளிய வெயிட் பண்ணுங்க. எல்லா பொண்ணுங்களும் உங்களையே பாக்குறாங்க”, என்று தடுமாற்றத்துடன் சொன்னாள் சத்யா.
அதை ரசித்தவன் “சரி வெளியே நிக்குறேன்”, என்றான்.
அப்போது எதுக்கோ தயங்கியவள் அவன் முகத்தை பார்த்தாள்.
“என்ன மா?”
“அது…. அது வந்து… எங்க சீனியர் வைசாலின்னு ஒரு பொண்ணு உங்களை விரும்புதுன்னு சொன்னா. அதை நான் உன்கிட்ட சொல்லணும்னு சொன்னா. உங்களோட நிறைய போட்டோவை சேத்து வச்சிருக்கா. அதை உங்ககிட்ட காட்டுறேன்னு சொல்லி பிடுங்கிட்டு வந்துட்டேன். பேக்ல தான் இருக்கு. சொல்ல சொன்னா சொல்லிட்டேன். ரூம் போய்ட்டு வரேன்”, என்று சொல்லி சென்று விட்டாள்.
வேண்டா வெறுப்பாக விசயத்தை சொன்னவளை ரசித்து பார்த்தான் கார்த்திக். “ஈவினிங் என் மேல கோபமா இருந்ததுக்கு காரணம் இது தானா? லூசு சத்யா. என்னோட கணவனை நீ எப்படி லவ் பண்ணலாம்னு சண்டை போடாம என்கிட்ட வந்து சொல்றா பாரு. என் போட்டோவை கூட பிடுங்கிட்டியா? சமத்து டி செல்லம்”, என்று நினைத்து கொண்டே
வெளியே வந்து மரத்தடியில் நின்றவனை பார்த்து விட்டாள் வைசாலி .
அவள் முகம் பிரகாசமாக ஒளிர்ந்தது. உடனடியாக ஓடி வந்தாள்.
“கார்த்திக் நீங்களா? நீங்க என்ன இந்த பக்கம்? இன்னும் வீட்டுக்கு போகலையா?”
“ஹ்ம்ம் போகணும். ஆனா நீங்க யாரு?”
“என் பேர் வைசாலி”
“ஓ நீ தான் அந்த வைசாலியா?”
“என் பேர் தெரியுமா? சத்யா சொல்லிட்டாளா?”
“ஹ்ம்ம் சொன்னா. நிறைய போட்டோ எல்லாம் வச்சிருக்க போல?”
“ஹ்ம்ம் ஆமா நீங்கன்னா எனக்கு உயிர்”
“அப்படியா? சரி எனக்கு ஒரு உதவி பண்ண முடியுமா?”
“என்ன செய்யணும்? சொல்லுங்க கார்த்திக்”
“என் போட்டோ இருக்குற கேமரா எடுத்துட்டு வர முடியுமா? என் போட்டோவை என்னோட மொபைலுக்கு மாத்திக்கிறேன். எங்க அம்மாவுக்கு என்னோட போட்டோ கலெக்ட் பண்றது ரொம்ப பிடிக்கும்”
“அப்படியா? இதோ இப்பவே எடுத்துட்டு வரேன்”, என்று சிட்டாக பறந்து எடுத்து வந்து அவன் கையில் கொடுத்தாள்.
அதை வாங்கியவன் அதில் இருந்து மெம்மரி கார்டை கழட்டினான்.
புரியாமல் பார்த்தவளிடம் “இதுல மட்டும் தான் என் போட்டோ இருக்கா?”, என்று கேட்டான்.
“ஹ்ம்ம் ஆமா. ஒரு காப்பி பிரிண்ட் போட்டேன். அதை தான் சத்யா கொண்டு வந்தா”
“அப்ப சரி, இந்த மெமரி கார்ட்ல வேற போட்டோஸ் இருக்கா?”
“ஹ்ம்ம், என் பிரண்ட்ஸ் கூட எடுத்தது இருக்கு”, என்று வைசாலி சொல்லும் போதே அங்கு சத்யா ஒரு கவருடன் வந்தாள். வைஷாலியை பார்த்ததும் மறைந்து போன எரிச்சல் மீண்டும் வந்தது. கார்த்திக்கை முறைத்தாள்.
அவள் முறைப்பை பார்த்து மனதுக்குள் சிரித்தவன்   “சத்யா உன்கிட்ட ஒரு பைவ் ஹண்ட்ரட் இருக்கா?”, என்று கேட்டான்.
“ஹ்ம்ம் இருக்கே”, என்று எடுத்து கொடுத்தாள் சத்யா.
அதை வாங்கி கேமராவையும், ஐநூறு ரூபாயையும் வைசாலி கையில் திணித்தவன் “உன்னோட காதலை பத்தி சத்யா என்கிட்ட சொன்னா. ஆனா எனக்கு  பிடிக்கலை. எனக்கே தெரியாம என்னை போட்டோ எடுத்து தந்ததுக்கு தேங்க்ஸ். போட்டோ கிராபர் வேலைக்கும் இந்த மெமரி கார்டுக்கும் தான் இந்த ஐநூறு ரூபாய். இப்ப இரண்டு வாரம் காலேஜ் லீவு விட போறாங்க. அதனால காலேஜ் ஆரம்பிச்ச அப்புறம் இந்த மெம்மரி கார்டும், அதுல இருக்குற என்னோட போட்டோ தவிர மித்த போட்டோஸ் எல்லாம் உன் கைல கிடைக்கும். இன்னொரு தடவை போட்டோ எடுக்குற வேலை தெரிஞ்சது அடிச்சு கொன்னுருவேன். என்னை பத்தி தெரியும்னு நினைக்கிறேன்”, என்றவன் “வா சத்யா போகலாம்”, என்று சொல்லி அவள் கையில் இருந்து கவரை வாங்கி விட்டு அவள் கையை பிடித்து கொண்டு சென்றான்.
சத்யா முன்பு அவமான படுத்தியது, பணம் கொடுத்து அசிங்க படுத்தியது, அவனுடைய போட்டோவையும் ஏமாற்றி பிடுங்கியது, அதுக்கும் மேல  சத்யாவின் கையை பிடித்து கொண்டு போவது எல்லாவற்றையும் பார்த்து எரிச்சல் வந்தது வைஷாலிக்கு.
அந்த எரிச்சலில் “கார்த்திக்…”, ஆங்காரமாக கத்தினாள் வைசாலி.
“என்ன கத்துற? இதுக்கெல்லாம் நான் பய பட மாட்டேன். காதலை சொல்லவே தூது வைக்கிறவங்க காதலிக்க தகுதியே இல்லாதவங்க. அப்படியே நீயே வந்து சொல்லிருந்தாலும் எனக்கு உன்னை பிடிச்சிருக்காது. எனக்கு ஏற்கனவே ஆள் இருக்கு மா. போகலாமா சத்யா?”, என்று சொல்லி  குண்டை தூக்கி போட்டு விட்டு சத்யாவுடன் நடந்தான்.
வைசாலி அதை எதிர் பார்க்கவே இல்லை. அவன் போட்ட குண்டு, சத்யா தலையிலும் இறங்கியது. அவன் முகத்தையே பார்த்தாள். 
அதை பார்த்தவன் “இந்தா. இதுல இருக்குற போட்டோசை நீயே பத்திரமா வச்சிக்கோ. இந்த மெமரி கார்ட்ல இருக்குற என்னோட போட்டோவை  அழிச்சிட்டு,  கார்டை அவ கிட்ட கொடுத்துரு. என்னோட போட்டோ அவ கிட்ட இருக்குறது எனக்கு பிடிக்கலை. அது உன் கிட்ட இருக்கணும்னு நான் நினைக்கிறேன். என்ன முழிக்கிற? வா”, என்று குதூகலமாய் நடந்தான்.
அவள் உதடுகளிலும் புன்னகை தவழ்ந்தது.
“என்ன சத்யா சிரிக்கிற?”
“ஒன்னும் இல்லை”
“சரி உன் பிரண்ட்ஸ் கிட்ட சொல்லிட்டியா? நீ கிளம்புனதுக்கு என்ன சொன்னாங்க?”
அவர்கள் கார்த்திக் வீட்டுக்கு என்றதும்  கலக்கு கலக்கு என்று கிண்டல் செய்ததை சொல்ல முடியாமல் முகம் சிவந்தாள்.
“ஏதோ சொல்லிருக்காங்க. ஆனா என்கிட்ட சொல்ல மாட்ட. சரி அப்புறம் கேட்டுக்குறேன்”, என்று சொல்லி கொண்டே தேவகி, சேகர் அருகில் சென்றான்.
சேகர்,  சண்முகநாதனிடம் தான் இன்னமும் பேசி கொண்டிருந்தார். சேகர் சொன்னதுக்கு முதலில் கலவரம் அடைந்தாலும் அவர்கள் பாத்து கொள்வார்கள் என்று நிம்மதியானார் சண்முகநாதன்.
சத்யாவை பார்த்ததும் “சத்யா கிட்ட நீங்களே ஒரு வார்த்தை சொல்லிருங்க. அவ எங்க அப்பா விட மாட்டாங்கன்னு சொல்லிட்டே இருக்கா”, என்று சொல்லி போனை அவள் கையில் கொடுத்தார் சேகர்.
அதை வாங்கியவள் “அப்பா”, என்று உள்ளார்ந்த அன்புடன் அழைத்தாள்.
“பாப்பா ரொம்ப வலிக்குதா டா?”
“இல்லை பா. சின்ன அடி தான். இப்ப கிளம்பி ஊருக்கு வரவா பா?”
“இல்லை மா. நாங்க எல்லாரும் உங்க அண்ணியோட ஊருக்கு வந்திருக்கோம். அவ அண்ணனுக்கு நாளைக்கு கல்யாணம்னு சொன்னேன்ல. நீ நைட் வந்து இறங்கினாலும் உன்னை கூப்பிட வர ஆள் இல்லை டா. நீ கார்த்திக் வீட்ல தங்கிக்கோ. அப்பாவே அங்க வந்து உன்னை கூப்பிட வரேன்”
“அன்னைக்கு பைக்ல…. வேண்டாம்னு சொன்னீங்கள்ள பா?”
“அது அப்ப யாருனு தெரியாதே மா. இப்ப தெரியுமே. அப்பா தான சொல்றேன். உடம்பை பாத்துக்கோ பாப்பா”
“சரிப்பா. காலைல போன் பண்றேன்”
“ஹ்ம்ம் கார்த்திக் அப்பா கிட்ட போனை கொடு மா”
“அங்கிள், அப்பா உங்க கிட்ட பேசணுமாம்”, என்று போனை கொடுத்தாள் சத்யா.
“இப்படி எல்லாம் தயங்குனா நான் உன்கிட்ட பேச மாட்டேன்”, என்று விளையாட்டுக்கு கோப பட்டாள் தேவகி. “ஐயோ ஆண்ட்டி ப்ளீஸ் கோப படாதீங்க”, என்று சிரித்து கொண்டே கெஞ்சினாள் சத்யா.
அவளை அவர்களுடன் காரில் அனுப்பி விட்டு தன்னுடைய பைக்கை எடுத்து கொண்டு அவர்கள் பின்னே வீட்டுக்கு சென்றான் கார்த்திக்.
அவர்கள் வீட்டுக்குள் நுழையும் போது சத்யா கால்கள் அவளை அறியாமலே வலது காலை எடுத்து வைத்தது.
அதை பார்த்த கார்த்திக் றெக்கை இல்லாமல் வானத்தில் பறந்தான்.

Advertisement