Advertisement

“இது என்ன கும்பலா வந்துருக்காங்க? அவர் ஒருத்தர் தான வருவேன்னு சொன்னார்”, என்று நினைத்து கொண்டிருக்கும் போதே அங்கு வந்த தேவகி “சத்யா வீட்ல இருந்தா வந்துருக்கீங்க? உள்ள வாங்க. உங்களை பாத்ததுல என் வீட்டுக்காரர் அதிர்ச்சியாகிட்டார்”, என்றாள்.
அதன் பின் உபசரிப்பு எல்லாம் நல்லா  படியாக நடந்தது. 
“தம்பி காலேஜ் போய்டுச்சா?”, என்று விசாரித்தார் சண்முகநாதன்.
“இல்லை குளிச்சிட்டு இருக்கான். இருங்க கூட்டிட்டு வரேன்”, என்று சொல்லி விட்டு தேவகி மேலே சென்றாள்.
கண்ணாடி முன்னே நின்று தலை சீவி கொண்டிருந்தான் கார்த்திக்.
“டேய் உன் மேக்கப் போதும். அவங்க வந்துட்டாங்க”
“இவ்வளவு சீக்கிரமாவா?”
“சத்யாவை காலேஜ்ல விடனும்ல அதான். சரி நீ கீழே வா. உன்னை பாக்கணுமாம்”
“அம்மா எனக்கு கூச்சமா இருக்கு மா”, என்று வெட்க பட்டான் கார்த்திக்.
“அட ச்சி பொண்ணு மாதிரி நெளியுற? வந்து தொலை. எதுக்கும் கொஞ்சமா கெத்தா வராம சாதுவா வா டா. உன்னை ரொம்ப பயந்த சுபாவம்னு நினைச்சிட்டு இருக்காங்க”
“எனக்கு தெரியும். நீ போ. வரேன்”
கீழே சென்றவன் யார் எவர் என்று தெரியாமல் குழம்பி பொதுவாக ஒரு “வாங்க”, என்ற வரவேற்பை கொடுத்தான்.
மொத்த குடும்பமும் வந்திருப்பதை பார்த்த உடனே “சொன்ன மாதிரியே  மாப்பிள்ளை பாக்க தான் வந்திருக்காங்க”, என்று நினைத்து தனக்குள் சிரித்து கொண்டான்.
அவனை கை பிடித்து, தன் அருகில் அமர வைத்து கொண்ட சேகர் “இது தான் என் பையன். என்னடா காதல்னு சொன்ன உடனே நாங்க ஒத்துக்கிட்டோம்னு தப்பா நினைக்க வேண்டாம். சும்மா நேரம் கழிக்க அப்படி எல்லாம் செய்ற பையன் இவன் இல்லை. சத்யாவை நல்ல படியா பாத்துக்குவான். நாங்களும் அவளை பொண்ணு மாதிரி பாத்துக்குவோம். கார்த்திக்கும் ரொம்ப பொறுப்பான பையன். எந்த கெட்ட பழக்கமும் இல்லை. இப்பவே எனக்கு வேலைல நிறைய உதவி அவன் தான் பண்றான். படிச்சு முடிச்ச அப்புறம், அவன் நல்ல நிலைமையில இருக்கிறதை பாத்துட்டு நீங்க கல்யாணம் செஞ்சு வச்சா போதும்”, என்றார்.
எல்லாருக்கும் திருப்தியாக இருந்தது. சண்முகநாதன் அண்ணன் முகத்தை பார்த்தார்.
தேவநாதன் “எங்களுக்கு பரிபூரண சம்மதம்”, என்று வெளிப்படையாகவே சம்மதம் சொல்லி விட்டார்.
சிரித்து நேரத்திலே முகிலும், கார்த்திக்கும் நன்கு சிரித்து பேச ஆரம்பித்து விட்டார்கள். அங்கேயே காலை உணவை முடித்து விட்டு மொத்த குடும்பமும் அரட்டை அடித்தது. 
சத்யாவின் அண்ணி மற்றும் பெரியம்மா, தேவகியுடன் சேர்ந்து சமையலுக்கு உதவுவது வரைக்கும் வந்து விட்டார்கள். 
இங்கே சந்தோஷத்தில் இருக்கும் போது, அங்கே முகத்தில் முள்ளை கட்டி கொண்டு இருந்தது போல உம்மென்று இருந்தாள் சத்யா. 
மதிய சாப்பாடையும் முடித்து விட்டு சத்யா குடும்பம் சந்தோசமாக ஊரை நோக்கி பயணித்தது. 
கார்த்திக் கனவுகளில் மூழ்கி இருந்தான். அடுத்த நாள் காலை, அவள் கிளாசுக்கு வரும் போதே அங்கே நின்றிருந்தான் கார்த்திக்.
அவனை பார்த்ததும் அவள் முகம் மலர்ந்தாலும், நேற்று அவன் சொன்ன வார்த்தைகள் முள்ளாய் தைத்தால் அமைதியாக கிளாஸ் உள்ளே செல்ல போனாள்.
“ஏய் என்ன பாத்துட்டு பாக்காத மாதிரி போற? இப்ப பேச முடியாது. இப்ப பெல் அடிச்சிரும்.  ஈவினிங்  லைப்ரரில வெயிட் பண்ணு சத்யா”, என்றான் கார்த்திக்.
“ம்ம்”, என்று சொல்லி விட்டு சென்று விட்டாள்.
அவள் கோபத்தை ரசித்தவன் சிரித்து கொண்டே அவனுடைய டிபார்ட்மென்ட் நோக்கி சென்றான்.

அன்று மாலை தோழிகளை கழட்டி விட்டு விட்டு லைப்ரரி வந்தாள் சத்யா.
அவன் அங்கு அமர்ந்திருந்தான். பேருக்கு அங்கு இருந்த ஒரு இங்கிலீஸ்  புக்கை எடுத்து கொண்டு அவன் அருகே சென்று அமர்ந்தாள் சத்யா.
அவளை பார்த்ததும் அவன் சிரித்தான். ஆனால் அவள் சிரிக்காமல் அமர்ந்திருந்தாள்.
அவள் முகத்தில் இருந்த கோபத்தை பார்த்தவனுக்கு அவளை கட்டி கொள்ள வேண்டும் என்று தோன்றியது.
“என் மேல கோபமா சத்யா?”, என்று கேட்டான் கார்த்திக்.
“இல்லையே. நான் எதுக்கு கோப படணும்?”
“ம்ம். அப்புறம்  ஏன் பேசாம இருக்க?”
“பேச தான செய்றேன்?”
“சரி நான் கொடுத்த சாக்லேட்டை என்ன செஞ்ச?”
“அன்னைக்கு ஒன்னு சொல்லணும்னு சொல்லிட்டு,  நான் ஆசையா என்னனு கேக்க வந்தா காலேஜ்க்கே வராம இருந்துட்டு, இப்பவும் அதை என்னனு சொல்லாம சாக்லெட்டை பத்தி கேக்குறான் பாரு”, என்று மனதில் நினைத்து கொண்டு “சாப்பிடலை. பேக்ல தான்  இருக்கு. வெளியே போன உடனே தந்துறேன். நீங்களே உங்க சாக்லேட்டை சாப்பிடுங்க “, என்று சொல்லி அவனை வெறுப்பேத்தினாள்.
“அது உனக்கு வாங்கி கொடுத்தது. அதை ஏன் நான் கேக்க போறேன்?”
“எனக்கு என்ன தெரியும்? நீங்க எப்ப எதை பேசுவீங்களோ? சாக்லேட்டை பத்தி பேசுன உடனே  வேணும் போலன்னு நினைச்சேன். சரி எதுக்கு வர சொன்னீங்க?”
“செம கடுப்புல மேடம் இருக்காங்க போல?”, என்று நினைத்து கொண்டு “நீ எதுக்கு சத்யா போன் பண்ண?”, என்று கேட்டான்.
“ஆன் அது.. அது அன்னைக்கு நீங்க ஏதோ சொல்லணும்னு சொன்னீங்கள்ள? அதை கேக்க தான் போன் பண்ணேன். என்னனு சொல்லுங்க?”
“அதுவா, அடுத்த வாரம்  எல். என் காலேஜ்ல செமினார் இருக்கு. நீயும் கலந்துக்கோன்னு சொல்ல தான் கூப்பிட்டேன்”
“என்னது செமினாரா?”, என்று கேட்டவளின் மனது, பல்ப் பியூஸ் போனது போல ஆனது . “நான் என்ன எதிர் பாத்தேன்? இப்ப எதுக்கு எனக்கு மனசுக்கு கஷ்டமா இருக்கு?”, என்று அவளையே கேட்டு கொண்டாள். பாவம் விடை தான் தெரிய வில்லை.
அவள் முகத்தில் வந்து போன உணர்வுகளை படித்தவனுக்கு தன் வாழ்வின் ஒட்டு மொத்த சந்தோஷமும் அவள் தான் என்று தோன்றியது. மனதுக்குள்ளே சிரித்து கொண்டவன் “ஆமா. அதை தான் சொல்ல வந்தேன். நீ என்ன நினைச்ச?”, என்று அவளிடம் கேட்டான்.
“ஒன்னும் இல்லை”
“சரி சத்யா. அதுல நீயும் சேரு. எக்ஸ்பீரியன்ஸ் கிடைக்கும். நீ டாபிக் சொல்லு. நான் கன்டன்ட் ரெடி பண்ணி தரேன்”
“அதெல்லாம் வேண்டாம். நான் வரலை”
“ஏன்?”
“எனக்கு அங்க எல்லாம் போய் பேசுற அளவுக்கு இங்கிலீஸ் வராது”
“முதலில் அப்படி தான் இருக்கும். முதல் தடவை நான் கொடுக்குறதை மனப்பாடம் செஞ்சி பேசு. கொஞ்ச நாள்ல பழகிரும் என்ன? கொஞ்சம் தைரியம் கிடைக்கும் மா. எப்படி பேசணும்னு நான் சொல்லி தரேன். நான் சொன்னா கேப்ப தான சத்யா?”
“ம்ம்”
“ஹ்ம்ம். இப்ப தான் நீ நல்ல பொண்ணு. நாளைக்கு இதே நேரம் இங்கயே வந்துரு என்ன? சரி கிளம்பு. நானும் வீட்டுக்கு போறேன்”
கொஞ்ச நேரம் கூட பேசாமல் உடனே போக சொன்னது சத்யாவுக்கு எரிச்சலை தந்தது. “கூட கொஞ்ச நேரம்  பேசுனா தான் என்னவாம்?”, என்று மனதில் நினைத்து கொண்டு அவனை பார்த்தவள் “மாப்பிள்ளை பாக்க வந்தவங்க என்ன சொன்னாங்க?”, என்று கேட்டு பேச்சை வளர்த்தாள்.
“ஹா ஹா அதை உண்மைன்னு நம்பிட்டியா? அதுக்கு தான் உம்முன்னு இருக்கியா?”, என்று சிரித்தான் கார்த்திக்.
“மாட்டிகிட்டேனே”, என்று நினைத்து கொண்டு “உங்களை மாப்பிள்ளை பாக்க வந்தா நான் எதுக்கு உம்முனு இருக்கணும்?”, என்று கடுப்புடன் கேட்டாள்.
“அப்படியா? நம்பிட்டேன்”, என்று சொல்லி மேலும் சிரித்தான்.
“இப்படி சிரிச்சா என்கிட்ட நீங்க பேசவே வேண்டாம். நான் போறேன்”, என்று எழ பார்த்தாள் சத்யா.
“ஏய் ஏய் சத்யா இரு. நான் விளையாட்டுக்கு தான் செஞ்சேன். மாப்பிள்ளை எல்லாம் பாக்க வரலை. எனக்கு ஒரே பீவர். அதனால தான் நேத்து வரலை”, என்று ஒரு பிட்டை போட்டான்.
“நிஜமாவா?”, என்று கேட்டு நிம்மதியாக மூச்சு விட்டாள் சத்யா.
“எனக்கு காய்ச்சல்ன்னு சொல்றேன். நீ நிம்மதியா நிஜமாவான்னு கேக்குற? நிஜமா தான் சொல்றேன். நீ வேணா பாரு “, என்று சொன்னவன் சுற்றும் முற்றும் பார்த்து விட்டு அவள் கையை பிடித்து இழுத்து தன் கழுத்தில் வைத்தான்.
பயத்தில் வியர்த்து போனாள் சத்யா.
அவள் கண்கள் சுற்றி யாரும் இருக்காங்களா என்று வட்டம் அடித்தது. கையை உருவி கொள்ளாமலே அவன் கழுத்தில் வைத்திருந்தாள்.
அதை பார்த்தவனுக்கு சிரிப்பாக இருந்தது. “அடுத்தவங்க பாப்பாங்களோன்னு  பயப்படுறவ எதுக்கு கையை எடுக்காம வச்சிருக்கணும்? தட்டி விட்டுட்டு கையை எடுத்துருக்கலாமே?”, என்று நினைத்தவன் அவள் கை விரலை வருடினான்.
அந்த தொடுகையில் பயத்தை மறந்து  சிலிர்த்தாள் சத்யா.
அவன் கழுத்தில் இருந்த அவளுடைய கை காச்சல் இருக்கிறதா என்று பரிசோதிக்க அழுத்தமாக பதிந்தது.
இப்போது சூடு குறைவாக இருந்தது, அவளுக்கு நிம்மதியாக இருந்தது.
அப்போது அங்கே யாரோ வருவது போல இருந்தது. உடனே “இப்ப காச்சல் குறைஞ்சிட்டே”, என்ற படி கையை விலக்க முயற்சி செய்தாள் சத்யா.
“ஹ்ம்ம் குறையவே இல்லை. இன்னும் அதிகமா தான் ஆகிட்டு. நல்லா தொட்டு பாரேன்”, என்று சிரித்தான் கார்த்திக்.
“காலேஜ்ல வச்சு என்ன ரகளை பண்றான் பாரு”, என்று நினைத்து கொண்டு “யாராவது பாக்க போறாங்க. கையை விடுங்க”, என்று தயக்கத்துடன் சொன்னாள்.
அவள் கையை விட்டவன் “அப்ப யாருமே இல்லைன்னா கையை பிடிக்கலாமா சத்யா?”,  என்று கேட்டான்.
ஆன் என்று அவனை பார்த்து விழித்தவள் பதில் சொல்ல முடியாமல் தடுமாறினாள்.
தடுமாற்றத்தை அவனிடம் இருந்து மறைக்க “நான் கிளம்பட்டுமா?”, என்று கேட்டாள் சத்யா.
“கொஞ்ச நேரம் இரேன்”, என்றான் கார்த்திக்.
“அப்ப போக சொன்னவன், இப்ப இருக்க சொல்றான்”, என்று நினைத்து கொண்டு அவனை பார்த்தாள்.
என்ன என்னும் விதமாய் கண்களை அவளை பார்த்து தூக்கினான். அவனுடைய ஒவ்வொரு மேனரிஸத்தையும் ரசித்தாள் சத்யா.
“அவளோட படிப்பு முக்கியம் தம்பி”, என்ற சண்முகநாதன் குரல் அவன் மனதுக்குள் கேட்டது.
“நான் இப்படி எல்லாம் செஞ்சா அவ எப்படி படிப்பா? கார்த்திக் கண்ட்ரோல் பண்ணிக்கோ. இவ எங்க போயிற போறா? உன் பொண்டாட்டி டா”, என்று நினைத்தவனுக்கு அந்த பொண்டாட்டி என்ற வார்த்தையே கிக்கை தந்தது.
நினைவுகளில் இருந்து தன்னை மீட்டவன் “சரி சத்யா நேரம் ஆகுது. நீ கிளம்பு. நாளைக்கு நீ டாபிக் சொல்லு. நான் ஒரு நாளில் கன்டென்ட் ரெடி பண்ணி தரேன்”, என்றான்.
“ஹ்ம்ம் என்னோட பிரண்ட்ஸ் அதுக்கு வரலாமா?”
“ஹ்ம்ம் வரலாமே. நாளைக்கு தான் உங்களுக்கு சொல்லுவாங்கன்னு நினைக்கிறேன். நீ பேர் கொடுத்துரு. கொடுக்குற. இல்லைனா நான் போய் கொடுத்துருவேன் பாத்துக்கோ. நாளைக்கு பாக்கலாம்”, என்று சொல்லி எழுந்து கொண்டான்.
அவளை பார்த்ததும் காதலை சொல்ல வேண்டும் என்று தான் நினைத்தான். ஆனால் காதலை வெளிப்படையாக சொல்லாமல் அதை அவளிடம் கொட்டி, அதுக்கான பதில் காதலையும் அவளுடைய கண்களில் பார்ப்பது அவனுக்கு பிடித்திருந்தது.
“என்னைக்கு அவசியம் வருதோ அன்னைக்கு சொல்லிக்கலாம்”, என்று நினைத்து லைப்ரரி வெளியில் வரை அவளுடன் நடந்தவன் அவள் ஹாஸ்டல் போகும் வரை அங்கேயே நின்றான்.
அவளோ “நான் என்ன எல்லாம் சொல்லுவானு நினைச்சு வந்தேன். ஆனா செமினார் பத்தி பேசி பல்ப் கொடுத்துட்டானே”, என்று நினைத்து அவனை திரும்பி திரும்பி பார்த்த படி சென்றாள்.
சீண்டல்  தொடரும்….

Advertisement