Advertisement

அத்தியாயம் 5
என்னைச் சுற்றி
சுழன்று அடிக்கிறது
உன் அழகான பிம்பம்!!!
 
“இது அதுக்கான நேரம் இல்லை டா கார்த்திக். இடமும் ஒத்து வராது”, என்று தனக்கு தானே சொல்லி கொண்டவன் “இங்க எல்லார் கிட்டயும் போன் இருக்கும். கொஞ்ச நாளில் உங்க கிளாஸ்ல கூட எல்லாரும் வச்சிருப்பாங்க”, என்றான்.
 
“பையங்க வேணா தைரியமா வச்சிருப்பாங்க. பொண்ணுங்க எல்லாம் செய்ய மாட்டாங்க”
 
“யார் சொன்னா? உங்க சீனியர் பொண்ணுங்க கிட்ட கேளு. எல்லார் கிட்டயும் இருக்கும்”
 
“செக் பண்ண மாட்டாங்களா?”
 
“பண்ணுவாங்களே. அதும் ஹாஸ்டலில் அடிக்கடி செக் பண்ணுவாங்க”
 
“அப்ப மாட்டிக்க மாட்டாங்களா?”
 
“அதெல்லாம் மாட்ட முடியாத இடத்துல ஒளிச்சு வச்சிக்குவாங்க”
 
“அப்படி எங்க ஒளிச்சு வைப்பாங்க?”, என்று கேட்டு கார்த்திக்கை சோதித்தாள் சத்யா.
 
“அதை இன்னொரு நாள் சொல்றேன். நீ ஹெல்ப் வேணும்னா கேன்டீன்ல இருந்து இந்த நம்பர்க்கு கால் பண்ணு”, என்று அவன் கையில் இருந்த அவள் நோட்டில் நம்பரை எழுதினான்.
 
“ஹ்ம்ம் சரி”, என்று மண்டை ஆட்டியவளை “அப்படியே கூட தூக்கிட்டு போ”, என்று சொன்ன மனசாட்சியை அடக்கி விட்டு “பை நான் கிளம்புறேன்”, என்று சொல்லி எழுந்தான் கார்த்திக்.
 
“மணி”, என்று அழைத்தாள் சத்யா.
 
திரும்பி பார்த்தவன் திகைத்தான். அங்கே சிரிப்பை அடக்கி கொண்டு அமர்ந்திருந்தாள் சத்யா.
 
அதை பார்த்து அவன் முகமும் புன்னகையை சிந்தியது. அவள் அருகில் சென்றவன் “ஏய் வாலு”, என்ற படியே அவள் தலையில் கொட்டினான். “இன்னும் நீ இதை மறக்கலையா?”, என்று கேட்டான்.
 
“மறக்க கூடிய விஷயம் இல்லையே”, என்று சிரித்தாள் சத்யா.
 
“அதுவும் சரி தான். சாரி என்ன? அன்னைக்கு நீயா கண்டு பிடிச்சிக்கட்டும்னு நினைச்சு தான் பேர் மாத்தி சொன்னேன். கோபம் இல்லை தான?”
 
“சே சே அதெல்லாம் இல்லை. காலேஜ் புல்லா உங்க புகழ் தான் பரவி இருக்கு. அது எப்படி?”
 
“அதுவா? அது பர்ஸ்ட் இயர் சேந்தப்பவே, பைனல் இயர் பையன் என்கிட்ட ரொம்ப வம்பு பண்ணான். நாலு காட்டு காட்டினேன். அதுல பேமஸ் ஆகிட்டேன் போல?”
 
“நீங்க தான் கார்த்திக்னு தெரிஞ்ச உடனே சந்தோசமா, பெருமையா இருந்துச்சு தெரியுமா?”
 
“ஹா ஹா பெருமையாவா? எங்க அம்மா காதில் இதை சொல்லி வை. எப்ப பாத்தாலும் என்னை கறிச்சு கொட்டுவாங்க”
 
“ஹா ஹா, சரி ஆண்ட்டி எப்படி இருக்காங்க?”
 
“அவங்களுக்கென்ன? வீட்டில் தினமும் உன் பேச்சு தான். என்னை செமையா கலாய்ச்சு எடுத்துட்டாங்க. அப்பா தான் உன்னை பாக்கணும்னு சொல்லி கிட்டே இருக்காங்க. பர்ஸ்ட் இயர்ல உன்னை வெளிய விட மாட்டாங்க. இந்த வாரம் சண்டே அவங்களை கூட்டிட்டு வரட்டுமா?”
 
“சாரி, நான் எங்க ஊருக்கு அப்பாவை பாக்க போறேனே”
 
“ஓ சரி. பத்திரமா போய்ட்டு வா. அப்புறம் ஜஸ்டின் விஷயம் தெரியுமா அப்பாவுக்கு?”
 
“இல்லை. சொல்லலை. சொன்னா பயந்துருவாங்க. அப்பா கிட்ட இந்த விஷயம் தான் மறைச்சிட்டேன்”
 
“அதுவும் நல்லது தான். தெரிஞ்சா அங்க இருந்து ஜஸ்டினால எதாவது பிரச்சனை வருமோன்னு பயப்படுவாங்க. சரி நெக்ஸ்ட் வீக் முடிஞ்சா பாக்கலாம். பை”, என்று சொல்லி விட்டு சென்று விட்டான்.
 
போன அவனையே பார்த்து கொண்டிருந்தாள் சத்யா.
 
அவள் முதுகில் சப்பென்று ஒரு அறையை வைத்து அவளை நிகழ் காலத்துக்கு அழைத்து வந்தாள் சித்ரா.
 
“எதுக்கு சித்ரா அடிச்ச?”, என்று முதுகை தடவி விட்டு கொண்டே கேட்டாள் சத்யா.
 
“நான் இங்க கிளம்பலாமான்னு கேட்டுகிட்டே இருக்கேன். நீ கண்டுக்காம இருக்க?”
 
“ஓ கேட்டியா? நான் கவனிக்கலையே”
 
“எப்படி கவனிப்ப? நீ தான் ஹீரோவை பாத்துட்டு இருந்தியே”
 
“உண்மை தான்”, என்று மனதில் நினைத்து கொண்டு “அப்படி எல்லாம் இல்லை சித்ரா. கிளம்பலாமா?”, என்று கேட்டாள்.
 
“ஹ்ம்ம் சரி”. என்று அவளுடன் நடந்த சித்ரா, ரூமுக்கு போனதும் நடந்த அனைத்தையும் கோகிலாவிடம் ஒப்பித்தாள்.
 
“ஏய் சத்யா, கார்த்திக் கிட்ட பேசினியா? அந்த அண்ணன் உனக்கு எழுதி கொடுத்தாங்களா? என்னால நம்பவே முடியலை டி. எங்க நோட்டை காட்டு பாப்போம்”, என்று சொல்லி பிடுங்கி பார்த்தாள்.
 
“ஆள் தான் செமையா இருக்காங்கனு பாத்தா எழுத்து கூட சூப்பர் டி. கார்த்திக் அண்ணா பெஸ்ட். எப்படி உனக்கு அவங்களை தெரியும்?”, என்று கேட்டாள்.
 
“நீங்க ரெண்டு பேரும் தான் எனக்கு பிரண்ட். இதை வேற யார் கிட்டயும் சொல்ல வேண்டாம் சரியா? அன்னைக்கு அந்த ஜஸ்டினால பிரச்சனை வந்ததுன்னு சொன்னேன்ல? அதுக்கு முன்னாடியே கார்த்திகை எனக்கு தெரியும்”, என்று ஆரம்பித்து அனைத்தையும் அவர்களிடம் சொன்னாள்.
 
ஆனால் அந்த குஞ்சு மணியை மட்டும் சொல்லாமல் “பேர் கார்த்திக்னு சொல்லாம மணின்னு சொன்னாங்க”, என்று சொன்னாள். அவனை பார்த்து அவன் அம்மா சிரித்த போது, ஒன்றும் தோன்றவில்லை சத்யாவுக்கு.
 
ஆனால் “நானும், ஆண்ட்டியும் கார்த்திக்கை பார்த்து சிரிப்போம். ஆனா இவங்க அந்த பேரை கேட்டு அவனை பார்த்து சிரிக்க கூடாது”, என்று நினைத்த போது தான் உணர்ந்தாள் அவள் மனதை.
 
“இப்ப எதுக்கு இப்படி நினைச்சேன். அவங்க ரெண்டு பேரும் எனக்கு என்ன ஸ்பெஷல்? என் பிரண்ட்ஸை பிரிச்சு வச்சு நான் ஏன் கார்த்திக் குடும்பத்துடன் கூட்டு சேர்ந்தேன்”, என்று யோசித்தாள் சத்யா.
 
யோசித்து யோசித்து பார்த்து விடை தெரியாததால் “சே அவனை பத்தி யோசிக்கவே கூடாது”, என்று நினைத்து கார்த்திக் பற்றியே யோசித்து கொண்டிருந்தாள் சத்யா.
 
அதன் பின் தினமும் அந்த அறையில் கார்த்திக் புராணம் இல்லாமல் இருக்காது.
 
எதுக்கு எடுத்தாலும் கார்த்திக் பற்றியே அவளுடன் சேர்த்து வைத்து பேசினார்கள் கோகிலாவும், சித்ராவும்.
 
எங்காவது அவனை கண்ணில் பார்த்தால் கூட “ஏய் அந்த கார்த்திக் அண்ணாவும் நீ போட்டுருக்க கலர்ல சட்டை போட்டுருக்காங்க. எங்க கூட தான இருந்த? எப்ப டி அவங்க கிட்ட சொன்ன?”, என்று கேட்டு அவளை கிண்டல் செய்தார்கள்.
 
அது பிடித்திருந்தாலும் “சும்மா இருங்க பா”, என்று சிணுங்குவாள் சத்யா. அடுத்து அந்த பேச்சும் அவளுக்கு பழகி விட்டது. அவளுடைய பேச்சில் மட்டும் இல்லாமல், அவள் மூச்சிலும் கலந்து விட்டான் கார்த்திக்.
 
அன்று வெள்ளி கிழமை, மாலை ஊருக்கு கிளம்ப வேண்டும் என்பதால், எல்லாம் பேகில் எடுத்து வைத்தாள் சத்யா.
 
“மதியம் சாப்பிட்டுட்டு காலேஜ் போகும் போது கீழ நோட்ல சைன் பண்ணிட்டு பேக் எடுத்துட்டு போயிரலாம் கோகிலா. அப்படியே காலேஜ்ல இருந்தே ஊருக்கு கிளம்பிரலாம் சரியா?”, என்றாள் சத்யா.
 
“ஹ்ம்ம் சரி டி”, என்று சொல்லி விட்டு அவள் வேலையை பார்த்தாள் கோகிலா.
 
எல்லாம் எடுத்து வைத்தவளுக்கு, கார்த்திக் நினைவு வந்தது.
 
அன்று லைப்ரேரியில் பார்த்து பேசியதோடு சரி. அதன் பின் அவனிடம் பேச வில்லை. அதன் பின் ஒரு நாள் அவன் வெளியே நடந்து போகும் போது கிளாஸ் உள்ளே இருந்து பார்த்தாள் தான். ஆனால் பேச முடிய வில்லை. ஏனோ இன்று அவனை பார்க்க வேண்டும் போல் இருந்தது.
 
டேபிள் மீது இருந்த, அந்த நோட்டை எடுத்தாள் சத்யா. 
 
அவன் எழுதிய கை எழுத்தின் மீது அவள் கரம் மெதுவாக தடவியது. இன்னைக்கு அவனை பார்க்க ஏக்கம் அதிகமாக வந்தது. 
 
“இந்த வாரம் ஊருக்கு போகலைன்னா, அவனை சண்டே பாத்துருக்கலாம்”, என்று நினைக்கும் போது துடித்து விட்டாள் சத்யா.
 
“அப்பாவை பாக்க போறதை விட அவனை பாக்குறதை முக்கியமா நினைக்கிறேனா? சே நான் ஏன் இப்படி மாறி போனேன்? எனக்காகவே உயிர் வாழும் அந்த ஜீவனை, முக்கியமில்லாத மாதிரி ஒரு நிமிஷம் நினைச்சிட்டேனே. ஏன் நான் கார்த்திக்கை பார்த்தேன்? அன்னைல இருந்தே நான் சரி இல்லை. இனி அவனை பாக்கவே கூடாது”, என்று சந்தோசமாக அவனை நினைக்க ஆரம்பித்து வருத்தத்தில் முடித்தாள் சத்யா.
 
நினைக்க கூடாது நினைக்க கூடாது என்று நினைத்தே நினைப்பது தானே மனித இயல்பு. அதில் சத்யா மட்டும் விதி விலக்கா என்ன? அவனை பற்றியே நினைத்து நொந்தே போனாள்.
 
அன்று மாலை, கிருத்திகா மற்றும் கோகிலாவுடன் பஸ்ஸில் ஏறி
அமர்ந்து விட்டாள். இன்று முழுவதும் அவன் அவளுடைய கண்ணில் படவே இல்லை. மனது வெறுமையாக இருந்தது.
 
“இப்ப பஸ் கிளம்பினா, அவன் இருக்கும் ஊரை விட்டு போகணும்”, என்று நினைத்து அவனை விட்டே போக போவது போலவும். திரும்பி வரவே மாட்டாள் என்பது போலவும் யோசித்து கொண்டிருந்தாள் சத்யா. இரண்டு நாள் பிரிவுக்கு இவ்வளவு வலியா?
 
“பஸ் எப்ப எடுப்பாங்க?”, என்று கிருத்திகா, கோகிலாவிடம் கேட்டாள்.
 
“ஹ்ம்ம் தெரியலை”, என்றாள் கோகிலா.
 
அப்போது, முன்னாடி சீட்டில் அமர்ந்திருந்த பெண்மணி, “இன்னும் அரை மணி நேரம் ஆகுமாம் பாப்பா”, என்று சிரித்தாள்.
 
ஜன்னல் கம்பிகளில் சோகத்துடன் முகம் சாய்த்து அமர்ந்திருந்தவளின் கண்ணில் எதிரே அவளையே பார்த்து நின்று கொண்டிருந்த கார்த்திக் பட்டான். 
 
“கார்த்திக் தானா? கார்த்திக்கே தானா? என்னை தான் பாக்குறானா?”, என்று நினைத்து பரவசமாகி அவள் முகம் எல்லாம் பூவாக மலர்ந்தது. 
 
அவளுடைய ஒவ்வொரு அசைவையும் அவனும் பார்த்து கொண்டிருந்தான். அவன் உடம்பில் உள்ள அனைத்து செல்லும் துடித்தது. கண்களால் இமைக்க மறந்து அவளுடைய சந்தோசத்தை பார்த்தான்.
இப்போது அவனிடம் பேச வேண்டும் என்று மனது ஏங்க, பக்கத்தில் இருந்த கோகிலாவின் கையை கிருத்திகாவுக்கு தெரியாமல் சுரண்டினாள் சத்யா.
 
என்னவென்று கண்களால் கேட்ட கோகிலாவிடம் கார்த்திகை பார்த்து கண்ணை காட்டினாள் சத்யா.
 
“போ”, என்று சைகை செய்தாள் கோகிலா.
 
அடுத்த நொடி எழுந்து விட்டாள் சத்யா. கோகிலாவும் வழி கொடுத்தாள்.
 

 

Advertisement