Advertisement

அதற்கு மேல் அவள் வாயை திறப்பாளா என்ன?
அவர்களையே பார்த்து கொண்டிருந்த சேகர் அருகில் சென்ற மேகலா “என்ன சார் இது?”, என்று கேட்டாள்.
மற்ற நேரமாக இருந்தால் “என்ன என்ன சார்?”, என்று கேட்டு அவளுக்கு பல்ப் கொடுத்திருப்பார்.
இன்னைக்கு சந்தோசமாக இருந்ததால், “நிச்சயம் பண்ணி பல வருஷம் ஆகுது. இப்ப தான் கல்யாணம் செஞ்சு வைங்கன்னு சொல்லிருக்கான்”, என்று சிரித்தார்.
“நிச்சயம் ஆகிட்டா?”
“என்ன இப்படி கேக்குற? அவ என் மருமகன்னு இங்க எல்லாருக்குமே தெரியுமே? உனக்கு தெரியாதா? சரி சத்யா கிட்ட ஒரு ஒர்க் கொடுத்திருந்தேன். அது எந்த அளவுல இருக்குன்னு பாத்து, முடிச்சிட்டு வந்து கொடு போ”, என்று ஆர்டர் போட்டு விட்டு சென்று விட்டார்.
வீட்டுக்கு சென்றவன், அவளை கை பிடித்து உள்ளே அழைத்து சென்றான்.
“என்ன டா, இந்த நேரத்தில் சத்யாவை கூட்டிட்டு வந்துருக்க?”
“அவ கிட்ட கொஞ்சம் பேசணும் மா. சரி நான் அப்பா காரை எடுத்துட்டு வந்துட்டேன். நீ போய் அப்புறமா அவரை கூட்டிட்டு வந்துரு. வா டார்லிங் போகலாம்”, என்ற படியே மறுபடியும் அவளை தூக்கி கொண்டான்.
“அத்தை விட சொல்லுங்க ஆபிஸ்லயும் இப்படி தான் உங்க பிள்ளை செஞ்சாரு. இப்பவும் பாருங்க”
“டேய் என்ன டா இது? அவளை விடு”
“நீ, அப்பா, மாமா எல்லாரும் மாத்தி மாத்தி போன் போட்டு சீக்கிரம் கல்யாணம் செஞ்சு வைக்கிறதை பத்தி பேசுங்க. நான் ஒரு அரை மணி நேரம் என் பொண்டாட்டியை கொஞ்சிட்டு ஹாஸ்டலில் விட்டுருவேன் சரியா?”
இத்தனை நாள் அவர்களை நம்பி அவர்களுக்கு தனிமை கொடுத்த தேவகி இப்போது மட்டும் நம்பாமல் இருப்பாளா என்ன? இருவரையும் பார்த்து சிரித்தாள்.
அறைக்கு சென்றவன் அவளை இறக்கி விட முயன்றான். ஆனால் இப்போது இறங்க விருப்பம் இல்லை என்பது போல் அவன் கழுத்தை சுற்றி கை போட்டு வளைத்திருந்தாள் சத்யா.
“இறங்கு டி”
“முடியாது. எல்லார் முன்னாடி தூக்கிட்டு வந்துட்டு இங்க வந்து ஏன் இறக்கி விடணும்? இப்படியே தான் இருப்பேன்”
“இறங்கலைன்னா, இறங்க வைப்பேன்”
“எதுக்காம்?”
“பேசணும்”
“பேசுங்க”
“இப்படி இருந்தா பேச வசதியா இருக்காது”
“நான் இறங்க மாட்டேன்”
“நீ சொன்னா கேக்க மாட்ட?”, என்ற படியே அவள் இடுப்பில் கிள்ளி விட்டான்.
“ஆ”, என்ற படியே குதித்து கொண்டு இறங்கினாள் சத்யா.
அவளை இழுத்து கட்டிலில் அமர வைத்தவன் அவள் மடியில் படுத்து கொண்டான். அவள் கைகள் அவன் தலையை வருடி விட்டது.
சிறிது நேரம் அமைதியாய் இருந்தனர். பிறகு மடியில் இருந்து எழுந்தவன் கையை எடுத்து அவள் இரு கன்னத்திலும் வைத்து கொண்டான்.
“என்ன சொல்ல போறான்?”, என்ற படியே அவன் முகத்தை பார்த்தாள் சத்யா.
மெதுவாக அவள் கண்கள் மேல் உதடு பதித்தான் கார்த்திக்.
வெகு நாள் கழித்து கிடைத்த முத்தத்தில் அவள் கண்கள் மூடியது. மூடிய கண்களில் இருந்து கண்ணீர் வந்தது.
அதை துடைத்து விட்ட கார்த்திக் “இப்ப எதுக்கு அழுற?”, என்று கேட்டான்.
“நீங்க இப்ப என்னை என்ன வேணும்னாலும் செஞ்சிக்கோங்க. உங்களை விட எனக்கு எதுவும் பெருசு இல்லை. இப்படி சொந்த
வீட்டுலயே நம்ம பிரியா பேச விடுற அத்தை, மாமா, அப்பா இவங்களை நினைச்சு தான் அன்னைக்கு தடுத்தேன். உங்க உணர்வுகள் புரியாம இல்லை. அதே உணர்வுகள் தான எனக்கும் இருக்கும். இப்ப அவங்க நம்மளை என்ன சொன்னாலும் பரவால்ல. என்னை என்ன வேணும்னாலும் செஞ்சிக்கோங்க. எனக்கு நீங்க முன்ன மாதிரி பேசாம இருக்கிறதை தாங்க முடியலை. உங்களை கஷ்ட படுத்திருந்தா, என்னை மன்னிச்சிருங்க கார்த்திக்”, என்று அழுத படியே சொன்னாள் சத்யா.
அவளை இழுத்து அணைத்து கொண்டவன் “நான் தான் சத்யா உன்கிட்ட மன்னிப்பு கேக்கணும்?”, என்றான்.
அவன் நெஞ்சில் இருந்து விலகி அவன் முகத்தை பார்த்தாள்.
சிவா விசயத்தை சொன்னவன், “நான் அன்னைக்கு அப்படி செஞ்சிருந்தா நம்ம அம்மா, அப்பா இப்படி தான நம்மளை நினைச்சிருப்பாங்க. சிவா ரொம்ப பீல் பண்ணான். அப்ப தான் உண்மை புரிஞ்சது. சாரி டா”, என்றான். 
“சாரி எல்லாம் வேண்டாம். எனக்கும் அது தான் பயமா இருந்தது பா”
“நானுமே கல்யாணம் வரைக்கும் உன்கிட்ட அப்படி நடந்துக்க கூடாதுனு தான் நினைச்சேன். தப்பு பண்ண நினைச்சிருந்தா நீ முதல் தடவை வீட்டுக்கு வந்தப்பவே செஞ்சிருப்பேன்”
“எப்ப? மிக்கி மவுஸ் ஜட்டி போட்டிருந்தப்பவா?”
அவள் மூக்கை கிள்ளியவன், “இன்னைக்கும் அது தான் போட்டிருக்கேன்”, என்று சொல்லி அவளை வெட்க பட வைத்தான்.
“அன்னைக்கு உடம்பு பலவீனமா இருந்தப்ப, மனசும் பலவீனமா ஆகிட்டோ என்னவோ சத்யா? என்னையறியாமல் அப்படி நடந்துக்கிட்டேன். ஆனா, வந்த பீலிங்ஸ் மட்டும் உண்மை. என்னை நிராகரிச்சிட்டேன்னு வருத்தம். எரிச்சல். பீலிங் அடங்கலையேன்னு கோபம். எல்லாம் சேந்து தான் உன்னை திட்டிட்டேன். அப்புறமும் என் தப்பை நான் உணரவே இல்லை. இன்னைக்கு அவன் விஷயம் தெரிஞ்சப்ப தான் புத்தியே வந்தது”
“அப்ப சிவா அண்ணா விஷயம் தெரியலைன்னா, என்கிட்டே பேசிருக்கவே மாட்டிங்கள்ல?”
“அப்பா நேத்து தான் சத்யா கல்யாணத்தை பத்தி பேசினாங்க. நானுமே அதுக்கு ஓகே சொல்ல தான் யோசிச்சேன். சரினு தான் சொல்ல நினைச்சேன். அது மட்டும் இல்லாம, கல்யாணம் பண்ணி உன்கிட்ட இத்தனை நாள் மாதிரியே பேசாம இருக்கணும்னு நினைச்சேன். அது முடியுமா? பக்கத்துல இருந்தாலே உன் கை அவ மேல படும்னு மனசாட்சி என்னை கேள்வி கேட்டுட்டு இருந்தப்ப தான் சிவா போன் பண்ணான். கல்யாணம் அப்புறம் எல்லாம் என்னால சும்மா இருக்க முடியாது டி”
“ச்சி போங்க”
“ஒரே ஒரு முத்தம் கொடுத்துக்கட்டா சத்யா?”
“ம்ம்”, என்று சொல்லி கண்களை மூடி சம்மதம் சொன்னாள் சத்யா.
அன்று மாதிரி ஏதாவது ஆகி விடும் என்று நினைத்து அவளுடன் தனிமையில் இருக்க பயந்து  ஒரே ஒரு ஆழமான முத்தத்துடன்  கீழே கூட்டி வந்துவிட்டான் கார்த்திக்.
அதன் பின் கல்யாண வேலைகள் எல்லாம் பிரமாதமாக நடந்தது.
இரு வீட்டாராலும் அடுத்த முகூர்த்தத்தில் கல்யாணம் நிச்சயிக்க பட்டது.
கார்த்திக் டிக்கட் போட்டு கொடுத்தவுடனே சிவா மனைவியை அழைத்து கொண்டு விமானத்தில் பறந்து விட்டான். “கல்யாணம் முடிஞ்சு அடுத்த வாரம் எங்க வீட்ல இருக்கணும்”, என்ற கட்டளையோடு.
கல்யாண நாள் வந்தே விட்டது. இருவரும் சந்தோசத்துடன் மணமேடையில் அமர்ந்திருந்தார்கள்.
ஜஸ்டின் தன்னுடைய அத்தை பெண்ணை மணந்து அவளுடன் திருமணத்துக்கு வந்திருந்தான். ரவி, கோகிலா சித்ரா, ஜோ, கிருத்திகா எல்லாருமே வந்திருந்தார்கள்.
சண்முகநாதன் சத்யாவுக்கு எவ்வளவு நகை போட்டாரோ அதே அளவு நகையை தேவநாதனும் சத்யாவுக்கு போட்டார்.
முகில் அவன் மனைவியுடன் கல்யாணத்தில் அனைத்து வேலையையும் பார்த்தான்.
ஊரில் இருந்து சேகரின் அப்பா சோலையப்பனும் அங்கிருந்தவர்களும் வந்திருந்தார்கள்.
எல்லாருடைய ஆசிர்வாதத்தில் முகம் முழுவதும் சிரிப்புடனும், மனம் முழுவதும் காதலுடனும் அவள் கழுத்தில் தாலியை கட்டினான் கார்த்திக்.
அதை சந்தோசத்துடன் ஏற்று கொண்டாள் சத்யா. சண்முகநாதன் கண்கள் சந்தோஷத்தில் கலங்கியது. அவரை ஆதரவாக பற்றி கொண்டார் தேவநாதன்.
அதன் பின் சடங்கு சம்பிரதாயம் என நேரம் கடந்தது. 
மணமக்கள் ஆவலுடன் எதிர்பார்த்த தனிமையும் கிடைத்தது.
அன்று இரவு  அவனுடைய கட்டிலில் அவன் எதிரே அமர்ந்திருந்தாள் சத்யா.
புது பெண்ணுக்கே உரிய நாணத்திலும், வெட்கத்தில் சிவந்து தலை குனிந்து அமர்ந்திருந்தாள்.
அவளை ரசித்த  கார்த்திக் “சாரி மா உன்னை கஷ்ட படுத்திட்டேன்ல?”, என்றான்.
“நீங்க என்கிட்ட பேசாம இருந்தது கஷ்டமா தான் இருந்தது. ஆனா நாம போட்டது சண்டைனு வெளிய சொல்லிற கூடாது”, என்று சிரித்தாள் சத்யா
“ஏண்டி?”
“என்ன ஏண்டி? தினமும் எங்கயாவது பாத்துக்குறோம். ஒரு அரை மணி நேரம் சேந்து உக்காருறோம். வாய் மட்டும் தான் அமைதியா இருக்கு. ஆனா லவ் இல்லாம இல்லையே”
“அது என்னோட ஈகோ டி. அன்னைக்கு உன்னை ரொம்ப தேடுச்சு சத்யா. அது அன்னைக்கு நான் பலவீனமா இருந்ததுனாலயான்னு தெரியலை. அதான் அப்படி நடந்து கிட்டேன். அது மட்டும் இல்லாம எல்லாரும் சம்மதம் சொல்லிட்டாங்கன்னு தைரியம். உன்னோட நம்பிக்கையை கெடுக்க பாத்தேன்ல?”
“ப்ச் விடுங்க கார்த்திக். லவ்வர்ஸ் குள்ள அந்த பீலிங் வரது இயற்கை தான். ஆனா அப்ப உணர்வுக்கு அடிமை ஆகிட்டு அதுக்கு பின்னாடி தப்பு பண்ணிட்டோம்னு குற்றவுணர்வோட இருக்க விரும்பலை. நீங்களும் அதுக்கு அப்புறம் பீல் பண்ண தான் செய்வீங்க. அதனால தான் நானும் என்னை கட்டு படுத்திகிட்டு பேசுனேன்”
“தேங்க்ஸ் சத்யா என்னை புரிஞ்சிகிட்டதுக்கு”
“நான் உங்களை புரிஞ்சிக்காம வேற யார் புரிஞ்சிக்குவாங்கலாம்?”
“ஐ லவ் யு டி”
“ஐ லவ் யு கார்த்திக்”
“அன்னைக்கு கேட்டதை நான் இன்னைக்கு கேட்டா கிடைக்குமா?”
“கிடைக்காதுன்னு நான் சொல்ல மாட்டேனே”, என்று சொன்னவளின் உதடுகள் அவன் உதடுகளுடன் இணைந்தது.
மனம் முழுவதும் அவள் மேல் காதல் மட்டும் இருக்கும் போதே அவள் வேண்டும் என்று துடித்தவன் இப்போது தாலி கட்டி மனைவி ஆன பிறகு தள்ளி இருப்பானா? அன்றைய இரவை தூங்காத இரவாக்கினான் கார்த்திக்.
அவன் கை அணைப்பில் அடங்கியவளும் எல்லை இல்லா காதலுடன் அவனுடன் கலந்தாள்.
காலையில் சீக்கிரமே விழிப்பு வந்து விட்டது சத்யாவுக்கு. “அவன் முழிக்கிறதுக்குள்ள குளிச்சிறலாம்”, என்று நினைத்து எழுந்தாள். அவிழ்ந்திருந்த கொண்டையை அவள் போடுவதற்குள் அவள் சேலையை தன்னை சுற்றி மூடி கொண்டான் கார்த்திக்.
“ஐயோ என்ன பண்றீங்க? கொடுங்க ப்ளீஸ்”
“அதெல்லாம் முடியாது. அப்படியே போ”
“அட பாவி….தாங்க”
“மாட்டேன்”, என்று அவன் சொன்னதும் அவனை முறைத்தவள் அவர்களை சுற்றி இருந்த போர்வையை இழுத்து மூடி கொண்டாள்.
“ஏய் கொடு டி. இந்தா உன் சேலையவே எடுத்துக்கோ”, என்றான் கார்த்திக்.
“அப்படி வாங்க வழிக்கு”, என்று சொல்லி கொண்டே அவன் கையில் இருந்து சேலையை  வாங்க வந்தவளை இழுத்து கட்டிலில் தள்ளியவன் “இன்னும் விடியுறதுக்கு நேரம் இருக்கு”, என்று சொல்லி கொண்டே அடுத்த அத்தியாயத்தை துவங்கினான்.
இப்போது மேலே மூடி இருந்த அந்த போர்வை கூட கீழே விழுந்து கிடந்தது. 
காதலும் சீண்டலும் அவர்கள் வாழ்வில் தொடரும்..முற்றும்!!!

Advertisement