Advertisement

அவர்கள் ஒளிச்சு வைக்கும் இடம் நினைவில் வந்தது சத்யாவுக்கு. என்ன சொல்ல என்று தெரியாமல் உதடு கடித்தாள்.
“என்ன டி அமைதியாகிட்ட?”
“அதெல்லாம் வேண்டாமே. இன்னும் கொஞ்ச நாள் தான? ஹாஸ்டல் போன்ல இருந்து வேணும்னா பேசுறேன் பா”
“ஹ்ம்ம் சரி”, என்று அரைமனதாக சொன்னான் கார்த்திக்.
சூழ்நிலையை மாற்ற எண்ணியவள் “ஆமா பொண்ணுங்க ஒளிச்சு வைக்கிற இடம் உங்களுக்கு எப்படி தெரியும்?”, என்று கேட்டாள்.
“இது பெரிய ரகசியமா? ஏய் ஏய் என்னை சந்தேக படாத மா. நான் எல்லாம் இனி தான் உங்கிட்ட இருந்து எல்லாம் தெரிஞ்சிக்கணும். பசங்க கிளாஸ்ல பழைய காலத்துல பாட்டிஸ் எல்லாம் பர்ஸை ஜாக்கெட் குள்ள வச்சிருக்குற மாதிரி தான் இப்ப பொண்ணுங்க மொபைலை ஒளிச்சு வைக்கிறாங்கன்னு பேசி கிட்டாங்க டி. அதனால தான் தெரியும்?”
“ஹ்ம்ம்”
“சத்யா”
“என்ன?”
“நான் வேணும்னா உனக்கு எப்படி ஒளிச்சு வைக்கன்னு சொல்லி தரவா?”
அவன் கேட்டதில்  உதட்டை கடித்து, தன் வெட்கத்தை அடக்கினாள் சத்யா.
அவள் வெட்கத்தை ரசித்தவன் அவளை விட முடியாமல் அவளை இழுத்து தன் மேல் போட்டு கொண்டான்.

அவனை விலக்க முடியாமல் விலக்க தோன்றாமல் அப்படியே இருந்தாள் சத்யா.
ஆனால் அவனோ, அவளுக்குள்ளே புதைந்து விடுபவன் போல அவளுடனே ஒண்டினான். அவள் கழுத்தில் முத்தமிட்டவனின் உதடுகள் இன்னும் இறங்க முற்பட்டது. அடுத்த நொடி அவனை தள்ளி விட்டாள் சத்யா.
அந்த உதாசீனத்தில், தவித்தவன் “எனக்கு நீ வேணும் சத்யா”, என்றான்.
“கார்த்திக் காச்சல் இருக்கு. பேசாம படுங்க”
“நீ தா. காச்சல் சரியா போயிரும்”, என்று சொல்லி கொண்டே அவள் உதடுகளில் முத்தமிட்டான்.
அவன் முத்தத்தில் அவளும் கரைந்தாள். அவன் தொடுகைக்கு தன்னுடைய உடலே சம்மதிக்கும் போது என்ன செய்ய என்று தெரியாமல் பலவீனமாக மறுத்தாள் சத்யா.
“நீ நல்ல படிச்சு ஒரு வேலைக்கு போகணும் பாப்பா. நம்ம ஊருலே நீ தான் பெரிய படிப்பு படிக்கிற? உன் முகில் அண்ணன் கூட காலேஜ் முடிச்சிட்டு, விவசாயம் தான் பண்றான். ஆனா நீ பெரிய வேலைக்கு போய் கார்த்திக் தம்பியை கல்யாணம் பண்ணிட்டு சந்தோசமா இருக்கணும் டா”, என்ற சண்முகநாதன் குரல் மனதில் வர அடுத்த நிமிடம் அவனை உதறி விட்டு கட்டிலில் இருந்தே எழுந்தவள் அவனை முறைத்தாள்.
“ப்ளீஸ் சத்யா, எனக்கு நீ வேணும். என்னால என்னையே கண்ட்ரோல் பண்ண முடியலை டி. ப்ளீஸ் சத்யா. என்னை புரிஞ்சிக்கோயேன்”, என்று சொல்லி கொண்டே அவளை நெருங்க முயன்றான்.
“என் மேலே உண்மையிலே உங்களுக்கு அன்பு இருந்தா என்னை இப்படி நீங்க செய்ய கூடாது “, என்றாள் சத்யா.
அடுத்த நிமிடம்  “வெளிய போடி”, என்று கத்தியவன் அவள் கையை பிடித்து இழுத்து அறைக்கு வெளியே விட்டு விட்டு அறைந்து கதவை சாத்தினான்.
மனதுக்கோ அவள்  வேண்டும் என்று ஆசை. உடலுக்கோ தன் தவிப்பை அவள் அடக்க வேண்டும் என்று எதிர் பார்ப்பு. அதற்கு அவள் தன் அன்பை தடை வைத்ததை வெறுத்தான் கார்த்திக்.
அவன் உணர்ந்த அவள் வாசனையும், அவள் மென்மையும் வேண்டும் என்று தகித்தது  அவன் உடல்.
அவளுடைய  நிலைமையையோ, வாழ்க்கையின்  நிதர்சனத்தையோ  யோசிக்க  மறந்தான்  கார்த்திக். அவனை  அவள்  வேண்டாம்  என்று   சொல்லி  விட்டாள்  என்பது  மட்டுமே  அவன்  நினைவுக்கு  வந்தது. 
பெற்றவர்கள் மனது கஷ்ட பட கூடாது என்பதற்காக அவளிடம் போனில் பேச வேண்டாம் என்று சொன்ன  கார்த்திக்கே, இன்று அவளை எடுத்து கொள்ள நினைத்தது தப்பு என்றே நினைக்க மறந்தான்.
கண்களில் வழிந்த கண்ணீரை துடைத்து கொண்டே கீழே சென்றாள் சத்யா. கண்ணீர்  துடைக்க  துடைக்க  பெருக்கெடுத்தது.
“எனக்கு  மட்டும்  ஆசை  இல்லையா? ஏன் இப்படி  செய்றான்? இப்படி  எல்லாம்  செஞ்சு  எல்லாருக்கும்  தெரிஞ்சா  என்ன  நினைப்பாங்க? நம்பி  இப்படி  தனியா  வீட்ல  விட்டுட்டு  போயிருக்காங்க. ஆனா  இவன்  எதுவுமே  யோசிக்காம   இப்படி  செய்றான்”, என்று  நினைத்து  அழுத  படி  இருந்தவள்  என்ன  செய்ய  என்று  தெரியாமல்  மறுபடியும்  எழுந்து  அவன்  அறை  கதவை   தட்டினாள். ஆனால்   அவன்  திறக்கவே  இல்லை.
உணர்வுகள் அவனுக்கு அடங்குவேனா என்று அடம் பிடித்தது.  நேரடியாக குளியல் அறைக்கு சென்றவன் காச்சல் என்பதையும் மறந்து சவரில் வெகு நேரம் நின்றான்.
அதன் பின் உணர்வுகள் மடிந்தாலும், என்னோட உணர்வுக்கு அவள் மதிப்பு கொடுக்கலை என்று கோபம் வந்தது.
“நான் கேட்டதை அவ தரலைல்ல? இனி அவ கிட்ட ரொமான்டிக்கா பேச மாட்டேன்.  காலைல ஒழுங்கா சாப்பிட்டிருக்க மாட்டா. இப்ப பசிச்சிருக்கும்”, என்று நினைத்து கொண்டு கீழே  வந்தான்.
அவள் சோபாவில் சாய்ந்து படுத்திருந்தாள். மறுபடியும் அவளை கண்டதும், அதுவும் அவளுடைய துப்பட்டா விலகி அவள் அழகை வேற காட்டியதில் மறுபடியும் அவளை அடைய வெறி வந்தது.
அவள் சொன்ன வார்த்தை நினைவு வர தன்னை கட்டு படுத்தியவன்  “சத்யா”,  என்று அழைத்தான்.
திடுக்கிட்டு கண் விழித்து அவனை பார்த்தாள்.
“பசிக்கிது சாப்பிடலாம்”, என்றான் கார்த்திக்.
அவன் பேசியதே போதும் என்பது போல “வாங்க சாப்பிடலாம்”, என்று நடந்தாள்.
அவனுக்கு கஞ்சி வைத்திருந்ததால் அதை எடுத்து கொடுத்தவள், அவளுக்கு செய்திருந்த வெஜ் பிரியாணியை எடுத்து வைத்து கொண்டு சாப்பிடாமல் அளைந்து கொண்டிருந்தாள்.
“ஒழுங்கா சாப்பிடு”, என்று அவன் அரட்டியதும் தான் சாப்பிட்டாள் சத்யா.
சாப்பிட்டு முடித்த பின்னர் “நீ டிவி பாரு. நான் டேப்லெட் போட்டுட்டு தூங்குறேன்”, என்று சொல்லி விட்டு மேலே செல்ல முயன்றான்.
“கார்த்திக் நான் ஏன் அப்படி செஞ்சேன் தெரியுமா?”, என்று ஆரம்பித்தாள் சத்யா.
“அந்த மாதிரி உணர்வுகள் வந்தா நான் உன்னை தவிர வேற யார் கிட்ட சத்யா கேக்க முடியும்? நீ என்னோட உணர்வுகளை புரிஞ்சிக்கலல? இனி இதை பத்தி நாம எப்பவுமே பேச வேண்டாம்”, என்று சொல்லி விட்டு மேலே சென்று விட்டான்.
அவனுடைய விலகல் புரிந்தாலும், “இதுக்கு எப்படி நான் சமாதான படுத்த முடியும்?”, என்று யோசித்து அமைதியாய் இருந்தாள் சத்யா.
சாயங்காலம் சேகர், தேவகி வரும் வரைக்கும் இருந்தவள் சேகர் “கிளம்பலாமா சத்யா?”, என்று கேட்டவுடன் “சரி மாமா, கார்த்திக் கிட்ட சொல்லிட்டு வரேன்’, என்று மேலே போனாள்.
அங்கே அவன் நல்ல உறக்கத்தில் இருந்தான். “சாரி கார்த்திக்”, என்று சொல்லி அவன் நெற்றியில் முத்தமிட்டவள் ஹாஸ்டலுக்கு கிளம்பி விட்டாள்.
அதன் பின் முன்பு போல அவன், அவளை சீண்டுவதே இல்லை. அவளிடம் பேசுவான் தான். ஆனால் கையை பிடித்து கொள்ள மாட்டான். தனிமை கிடைத்தாலும் முத்த மிட மாட்டான்.
அவன் இப்படி இருக்குறது நல்லது தான் என்று தோன்றினாலும் அவள் மனது அவன் விலகலை நினைத்தும் வருந்தும்.
அதை பத்தி அவனுக்கு புரிய வைக்க அவள் முயற்சி செய்தாலும் “அதை பத்தி பேச வேண்டாம்”, என்று சொல்லி விட்டான் கார்த்திக்.
அந்த வருடம் முழுவதும் அவன் விலகல் தொடர்ந்தது.

எத்தனை முறையோ அவள் பேச வந்தாலும் அவன் அதை கேட்கவும் இல்லை. அதை பற்றி யோசிக்கவும் இல்லை.

நாள்கள் செல்ல செல்ல அவள் மீது கோபம் அவனுக்கு இல்லாமல் போனது தான். ஆனால், இப்படியே விலகி இருக்க முடிவு செய்தான். “எதுக்கு வம்பு ? கிட்ட போய் குளோசா பேசுனா அன்னைக்கு மாதிரி தோணும். அப்புறம் அவ  தடுப்பா. வேண்டாம் பா”, என்று யோசித்து அப்படியே நடந்து கொண்டான்.

எல்லா விஷயத்துலயும் மெச்சூரிட்டியோட நடந்து கொள்ளும் கார்த்திக் இந்த விஷயத்தில் மட்டும் சிறு பிள்ளை தனமாக நடந்து கொள்கிறானே என்று தவித்தாள் சத்யா. காலேஜ் படிப்பும் முடிந்தது.
படிப்பு முடிந்த பிறகு சோகமான மனதுடன் தான் வீட்டுக்கு கிளம்பி போனாள் சத்யா. ஆனால் இரண்டு மாதம் தன்னுடன் இருக்க வைத்த சண்முகநாதன், “படிச்சிட்டு சும்மா இருக்க கூடாது பாப்பா. உன் கூட படிச்ச பிள்ளைக வேலை தேடுறாங்கனு சொன்னியே? அவங்க கூட போய் தேடு டா. கல்யாணம் எப்படியும் ஒரு வருஷம் கழிச்சின்னு கார்த்திக் தம்பி சொல்லுது. அது வரைக்கும் எதுக்கு சும்மா இருக்கணும்?”, என்று சொல்லி அனுப்பி வைத்தார். 
கோகிலா, சித்ரா, ஜோ எல்லாரும் தங்கி இருந்த ஹாஸ்டலுக்கு வந்து சேர்ந்தாள் சத்யா.

அவள் மறுபடியும் சென்னை வந்த விஷயம் கேட்டு “எதுக்கு வேற இடத்துல வேலை தேடணும்? என்னோட கம்பெனியும் நீ படிச்சது ரிலேட்டட் தான். இப்போதைக்கு ஒரு வேலை தான் காலி இருக்கு. நீ முதலில் செரு. அப்புறம் யாரும் வேலை விட்டு போனா உன்னோட பிரண்ட்ஸையும் சேத்துக்கலாம்”, என்று சொல்லி விட்டார் சேகர். 
அதுக்கு சண்முகநாதனும் சரி சொல்லி விடவே,  சத்யா சேகருடைய ஆபிசுக்கே  வேலைக்கு போக ஆரம்பித்திருந்தாள் ஹாஸ்டலில் இருந்தே.  

இது தெரிந்த அடுத்த நாள் அவளை சேகர் ஆபிசுக்கே பார்க்க வந்த கார்த்திக் அவளுடைய கையில் புது போனை திணித்தான். 

“இதுல எல்லாம் சரியா தான் இருப்பான்?”, என்று மனதில் திட்டி தீர்த்தாள் சத்யா. 

அவளை வீட்டுக்கு அழைத்து செல்ல ஹாஸ்டலுக்கு வந்து விடுவான். அவன் பைக்கில் ஏறி போகும் போது, தெரியாமல் அவன் மீது கை வைத்தால் கூட “ஏய் கையை எடு டி”, என்று சொல்லி விடுவான்.

அப்படி சொல்லும் போது அவனுக்கு வலிக்கிற மாதிரி ஒரு கிள்ளு கொடுத்து விட்டு கையை எடுப்பாள் சத்யா.  அவளை அவன் தான் திருப்பி கொண்டு விடுவான். 

இவர்கள் சண்டை பெற்றவர்களுக்கு தெரியாமல் பார்த்து கொண்டார்கள். இவர்களே சண்டை இல்லாமலே சண்டை போட்டு கொண்டிருந்தார்கள்.

மறுமுறை “கார்த்திக் சாரி”, என்று அவள் ஆரம்பித்த போது “அதை பத்தி பேசாதேன்னு சொன்னேன் சத்யா”, என்று கத்தினான்.

“இல்லை அப்பாவும், மாமாவும் கல்யாணம் பத்தி பேசுறாங்க?”

“அன்னைக்கு என்னோட உணர்வுக்கு நீ மதிப்பு கொடுக்கலைல? என்னோட தவிப்பு உனக்கு புரியாதப்ப, எதுக்கு கல்யாணம் பண்ணி ஒரே வீட்ல, உன்னை வெறிச்சு வெறிச்சு பாத்துட்டு இருக்கணும்? இதை பத்தி பேசினாலே எரிச்சல் ஏறுது. பேசாத ப்ளீஸ்”,  என்று சொல்லி விட்டு போய் விட்டான்.

வீட்டுக்கு வந்தவன்  அவளை பற்றியே யோசித்து கொண்டிருந்த போது அவன்  பக்கத்தில் சேகர் வந்து அமர்ந்தார்.

“படிக்கும் போது கல்யாணம் கல்யாணம்னு குதிச்ச? ஆனா இப்ப அதை பத்தி பேசவே இல்ல?”, என்று ஆரம்பித்தார் சேகர்.

“இல்லை பா. அவ இப்ப தான படிச்சிட்டு வேலைக்கு போறா? அதான் கொஞ்ச நாள் போகட்டும்னு”

“வேலைக்கு வேற எங்கேயோவா போறா? நம்ம ஆபிஸ்க்கு தான வாரா? நீ மெக்கானிக்கல் எடுத்தப்ப கவலை பட்டேன். எனக்கு அப்புறம் நம்ம ஆபிஸை யாரு பாப்பான்னு? இப்ப சத்யாவே பாத்துக்குவா. கல்யாணம் அப்புறமும், இதே வேலையை பாக்க தான போறா? கல்யாணம் பண்ணிட்டு பாக்கட்டுமே கார்த்திக்”


“என்ன டா அமைதியா இருக்க? நேத்து சம்பந்தி போன் பண்ணிருந்தாரு. அவர் கல்யாணத்துக்கு நாம எப்ப சம்மதிப்போம்னு கேக்க தயங்குற மாதிரி இருக்கு. அவருக்கும் ஆசை இருக்கும்ல? ஒரே பொண்ணை சீக்கிரம் கட்டி கொடுக்கணும்னு?”

“ஹ்ம்ம், யோசிச்சு சொல்றேன் பா”

“ஹ்ம்ம் சரி”, என்று சொல்லி விட்டு சேகர் எழுந்து போன பிறகு அவளை பற்றியே மறுபடியும் யோசித்து கொண்டிருந்தான். 

அப்போது சிவா கார்த்திக்கை போனில் அழைத்தான். 

“சொல்லு சிவா என்ன இந்த நேரத்தில் பண்ணிருக்க?”, என்று கேட்டான் கார்த்திக்.

“நாளைக்கு வட பழனி கோயில்ல வச்சு எனக்கு கல்யாணம் டா. நீ வந்துரு. அம்மா அப்பாவை கூட்டிட்டு வா”

“என்ன டா எருமை சொல்ற?”

“ஆமா, திடீர் கல்யாணம் தான். விவரம் நேர்ல சொல்றேன். நீ வா”

“ஹ்ம்ம்”, என்று சொல்லிவிட்டு வைத்தவனுக்கு குழப்பமாக இருந்தது. 
சீண்டல் தொடரும்….

Advertisement