Advertisement

அடுத்த செமினார்க்கு சொன்னது போலவே சத்யாவையும், கோகிலாவையும் பொறுப்பாக கூட்டி சென்றது மட்டுமல்லாமல் அவள் எப்படி பேச வேண்டும் என்றும், எதை எல்லாம் செய்ய  கூடாது என்றும் பொறுமையாக விளக்கினான்.
ஒரு வாரம் ஊருக்கு போவாள் சத்யா. இல்லை என்றால் சண்முகநாதன் அவளை பார்க்க வருவார். அதுக்கு அடுத்த வாரம் தேவகியும், சேகரும் அவளை பார்க்க வருவார்கள். வரும் போது அவளுக்கு பிடித்த அனைத்தையும் அவனிடம் கேட்டு அவளுக்கு வாங்கி வருவார்கள்.
ஆனால் அவனும் “கூட வருவேன்”, என்று ஆர்ப்பாட்டம் செய்யும் போது “கேர்ள்ஸ் ஹாஸ்டலுக்கு எல்லாம் வர கூடாது”, என்று சொல்லி விடுவாள் தேவகி. 
காலேஜ் போன அடுத்த நாளே லேபில் இருந்து அந்த மெம்மரி கார்டில் உள்ள போட்டோ அனைத்தையும் தன்னுடைய மெயிலுக்கு மாற்றியவள் கார்த்திக் போட்டோ அனைத்தையும் அழித்து விட்டு வைஷாலியிடம் போய் கொடுத்தாள். 

கொஞ்சம் அவமானத்துடன் வாங்கி கொண்ட வைசாலி “உனக்கு கார்த்திக் லவ் பண்ற பொண்ணு யாருன்னு தெரியுமா சத்யா?”, என்று கேட்டாள்.

“எனக்கு தெரியாதே”, என்று உதட்டை பிதுக்கினாள் சத்யா.

ஆனால் இருவரும் லைப்ரேரியில் பேசுவதை பார்த்த வைசாலி மற்றொரு முறையும் அவளை ரூமுக்கு அழைத்தாள்.

“இந்த தடவை என்ன சொல்ல போறாளோ?”, என்ற எரிச்சலில் சென்றாள் சத்யா.

“நான் அன்னைக்கு கார்த்திக்கை லவ் பண்றேன், நீ போய் அதை அவன் கிட்ட சொல்லுன்னு சொன்ன உடனே நீ சொல்லிட்டியா? அதனால  அன்னைல இருந்தே உன்னை எனக்கு ரொம்ப பிடிக்கும் சத்யா”, என்று ஆரம்பித்தாள் வைசாலி.

“என்னையும் லவ் பண்றேன்னு சொல்ல போறாளோ?”, என்று கிறுக்குதனமாக யோசித்தாள் சத்யா.

“எனக்கு என்னமோ கார்த்திக் உன்னை தான் லவ் பண்றான்னு தோணுது. உன்கிட்ட லவ் பண்றேன்னு சொன்னானா?  அவன் உன்னை பார்க்கும் போது அவன் கண்ணுல அப்படி ஒரு சந்தோசம் தெரியுது. உனக்கு தெரியுதா?”

“என்னையா?”, என்று அதிர்ச்சியாக கேட்பது போல நடித்தாள் சத்யா. இருவரின் உரையாடலை கேட்டு இந்த தடவையும் கெக்கே பிக்கே என்று சிரித்து வைத்தாள் கோகிலா.

கோகிலாவை முறைத்த வைசாலி “கார்த்திக் உன்னை லவ் பண்றேன்னு சொன்னா சரின்னு சொல்லு சத்யா. அவனை மாதிரி ஒரு பையன் கிடைக்கிறது ரொம்ப அபூர்வம். அவன் கிடைச்சா நீ தான் இந்த உலகத்துல கொடுத்து வச்சவள். எனக்கு அந்த கொடுப்பனை கிடைக்கலை. நீ பிரண்டா தான் பழகுறேன்னு அவன் கிட்ட சொல்லி, அவனை வேண்டாம்னு சொல்லிராத”, என்றாள்.

“இவள் பார்க்க தான் திமிராய் தெரிந்தாலும் ரொம்ப நல்லவ தான்”, என்று நினைத்து கொண்டாள் சத்யா.

ரூமுக்கு வந்த பிறகு “சித்ரா உனக்கு விஷயம் தெரியுமா? கார்த்திக் அண்ணாவும் சத்யாவும் பிரண்டா பழகுறாங்களாம். அந்த அண்ணா வந்து லவ் சொன்னா சத்யா சரின்னு தலை ஆட்டிரணும்னு அந்த வைசாலி அட்வைஸ் பண்றா டி”, என்றாள் கோகிலா.

“இந்த மாதிரி காமெடி நடக்கும் போது என்னையும் கூட்டிட்டு போனா நானும் சிரிப்பேன்ல டி?”, என்று சிரித்தாள் சித்ரா. 
“சும்மா இருங்க, என்னை கிண்டல் பண்ணா நான் கார்த்திக் கிட்ட சொல்லி கொடுத்துருவேன்”, என்று சிரித்தாள் சத்யா.

“ஐயோ வேண்டாம் பா. நாங்க உன்னையும் ஒன்னும் சொல்லலை. உன் வீட்டுக்காரரையும் ஒன்னும் சொல்லலை”, என்று சொல்லி அவளை வெட்க பட வைத்தார்கள்.
இப்படியே  படிப்பும், காதலும் தொடர்ந்தது.
அந்த செமஸ்டரில், எதிர்பார்த்ததை விட அதிக மதிப்பெண்ணே வாங்கி இருந்தாள் சத்யா. அதை அவனிடம் சொல்லி பெருமை பட்டவள் அவனுடைய மார்க்கை கேட்டு அசடு வழிந்தாள். அவன் தான் இந்த செமஸ்டரிலும் முதலாக வந்திருந்தான்.
எந்த பிரச்னையும் இல்லாமல் சென்றது. முதல் வருடம் மட்டும் தான் தேவகியும், சேகரும் அவளை காலேஜ்க்கு பார்க்க வந்தது. அடுத்த வருடத்தில் ஸ்டுடண்ட்ஸ் வெளியே போகலாம் என்பதால் அவளை வீட்டுக்கே வர சொல்லி விட்டார்கள்.
மாதத்தில் ஒரு முறை பஸ் பிடித்து அவன் வீட்டுக்கு போவாள். அன்று மாலை வரை அவர்களுடன் இருந்து விட்டு மாலை அவளை காலேஜில் விடுவான் கார்த்திக். 
கார்த்திக்கின் நண்பன் சிவா ஓரு தடவை வீட்டுக்கு வந்திருக்கும் போது கதவை திறந்த சத்யாவை பார்த்து திகைத்தான்.
அதன் பின் அவள் யாரென்று தெரிந்த பின்னர், கார்த்திக்கை திட்டி தீர்த்தான் சொல்லாமல் மறைத்ததற்க்கு. அடுத்து சத்யாவுக்குமே சிவா நல்ல நண்பனாகி போனான். 
கார்த்திக் பைனல் இயரிலும், அவள் தேர்ட்  இயரிலும்  அடி எடுத்து வைத்தார்கள். ஆனால் அவளுடன் அதிக நேரம் செலவழிக்க முடியாமல் தவித்தான் கார்த்திக்.
அவனுக்கு தினமும் காலேஜ் கிடையாததால் பார்க்க வேண்டும், அவளுடன் இருக்க வேண்டும் என்ற தவிப்பு அதிகமாகும். 

அவனுடைய உணர்வுகளை அவன் அவளிடம் வார்த்தையால் சொல்லும் போது, அவளும் அவளுடைய அவனுக்கான தேடலை வெளி படுத்துவாள்.

அவன் பைனல் இயர் முடிந்து போகும் போது, அவளை பார்த்து அழவே செய்து விட்டான்.

அவனை பார்த்து சிரித்த சத்யா “இன்னும் ஒரு வருஷம் கழிச்சு கல்யாணம் செஞ்சிக்கலாம்”, என்று சமாதான படுத்தி அனுப்பி வைத்தாள். 

அவள் பைனல் இயர் படிக்கும் போது, அவன் ஒரு பெரிய கார் கம்பெனியில் வேலைக்கு சேர்ந்திருந்தான்.
அவர்கள் குடும்பம் பணக்காரர்கள் என்று தெரிந்தாலும், அவனும் வேலைக்கு போகணுமே என்ற கவலை இருந்த சண்முகநாதனுக்கு அவன் வேலைக்கு போன செய்தி கேட்டு நிம்மதியாக இருந்தது.
“கம்ப்யூட்டர் கிளாஸ் போகவா?”, என்று சத்யா கேட்டதற்க்கு “கம்ப்யூட்டர் தனியா படிச்சு, உனக்கு யூஸ் இல்லை சத்யா. பேசிக் உனக்கு தெரியும். அதனால அது வேண்டாம். இங்கிலீஸ் ஸ்பீக்கிங் கிளாஸ் போ, அப்புறம் கார் டிரைவிங் படி”, என்று வழி காட்டினான்.
வேலைக்கு போன பிறகு, அவளை ரொம்ப மிஸ் செய்தான் கார்த்திக். மாதம் ஒரு முறை அவள் வீட்டுக்கு வரும் போது பார்ப்பது தான். அடுத்து அவளை பார்க்க முடியவில்லை.
அப்படி ஒரு நாள் அவள் வரும் போது தான் சேகரும், தேவகியும் எங்கேயோ கிளம்பி கொண்டிருந்தார்கள்.
“வா சத்யா, இன்னும் உன்னை காணுமேன்னு நினைச்சேன். அப்புறம் சாரி மா, தெரிஞ்சவங்க ஒருத்தர் இறந்து போய்ட்டார். அவங்க வீட்டுக்கு தான் நானும் மாமாவும் கிளம்புறோம். சமைச்சு வச்சிட்டேன். சாப்பிடு. அவனுக்கும் கொடு. சீக்கிரம் வந்துருவோம்.  அப்புறம் நாங்க வந்த பிறகு நீ கிளம்புனா போதும்.  மாமா உன்னை ஹாஸ்டலில் விடுவார் சரியா? அப்புறம் கார்த்திக்குக்கு காச்சல் அடிக்குது. அவனை மாத்திரை போட வச்சிரு”, என்று சொன்ன தேவகி அவள் சரி சொன்னதும் கிளம்பி போனாள்.
அவர்கள் காரில் ஏறி கிளம்பியதும், ஒரே பாய்ச்சலில் அவனுடைய அறைக்கு சென்றாள் சத்யா.
அங்கே கண்களை மூடி சோர்வாக படுத்திருந்தான் கார்த்திக். “தூங்குறானோ?”, என்று நினைத்து அவன் தலையில் கை வைத்து அவன் நெற்றில் படிந்த முடியை விலக்கி விட்டாள். அந்த தொடுகையில் கண் விழித்தவன் அடுத்த நொடி அவள் மடியில் தலை வைத்து படுத்து கொண்டான்.
அவன் உடம்பு சூடாக இருந்தது. “ஹாஸ்பிட்டல் போனீங்களா?”
“ஹ்ம்ம் அம்மாவும் நானும் போனோம் சத்யா. டாக்டர் டேப்லெட் கொடுத்துருக்காரு”
“இன்னும் குறையவே இல்லை. என்ன திடிர்னு காச்சல்?”
“நேத்து நானும் சிவாவும் படம் பாத்துட்டு வந்தப்ப மழையில் நனஞ்சிட்டோம்”
“அதானே பாத்தேன். என்ன டா திடிர்னு எப்படி பீவர் வரும்னு யோசிச்சேன்”
“ஹ்ம்ம்”
“எதாவது சாப்டீங்களா?”
“ஹ்ம்ம் அம்மா கஞ்சி கொடுத்தாங்க. நீ சாப்பிட்டியா?”
“ஹாஸ்டல்ல சாப்டுட்டு தான் வந்தேன்”
“ஹ்ம்ம்”, என்று சொல்லி கண்களை மூடிக்கொண்டான்.
அவன் தலையை வருடி விட்டு கொண்டே இருந்தாள் சத்யா.
அந்த தொடுகை அவனுக்கு பிடித்திருந்தது. அவள் மடியில் முகம் பதித்திருந்தவன் அவள் வயிற்றோடு ஒண்டினான்.
“காச்சல்னால இப்படி செய்றான்”, என்று நினைத்து அவனை அவளும் தட்டி கொடுத்து கொண்டே இருந்தாள்.
ஆனால் வயிற்றோடு முகம் புதைத்தவன், அவள் வயிற்றில் உதடு பதித்தான்.
அந்த முத்தத்தில் அவள் தேகமும் சிலிர்த்தது.
அந்த தவிப்பை தாங்க முடியாமல் அவனை நிமிர வைத்து தலையணையை எடுத்து “இதுல தலையை வச்சிக்கோங்க கார்த்திக்”, என்றாள்.
“ம்ம்”, என்று படுத்தவன் அவளையும் தன் அருகே இழுத்து கொண்டான்.
“என்ன ஆச்சு கார்த்திக்? மாத்திரை போட்டுருக்கீங்க தான? தூங்குங்க”
“ஹ்ம்ம்”, என்று முனங்கியவனோ அவள் மார்பில் முகம் புதைத்தான்.
அவனை அப்படியே இறுக்கி கொள்ள சொல்லி மனது கட்டளை இட மூளை அது தப்பென்று உரைத்தது.
“ஒரு நிமிஷம் தண்ணி குடிச்சிட்டு வரேன்”, என்று சொல்லி எழுந்து விட்டாள்.
மறுபடியும் உள்ளே  வந்தவளிடம் “இன்னைக்கு பஸ் சீக்கிரம் கிடைச்சிட்டா?”, என்று கேட்டான் கார்த்திக்.
“ஹ்ம்ம் வந்த உடனே இருந்தது”
“ஒரு போன் வாங்கி வச்சிக்கோ டி. ப்ளீஸ் டி நான்  வாங்கி தரேன். நைட் தினமும் பேசேன். இந்த வருஷம் தான் ரொம்ப படிக்க வேண்டாம்ல ப்ளீஸ் மா. மாசம் ஒரு தடவை தான் பாக்க முடியுது. சண்டே மட்டும் தான் போன் பண்ற? அதுவும் அஞ்சே அஞ்சு நிமிஷம். எனக்கு உங்கிட்ட பேசணும் போல இருக்கு “, என்று தவிப்புடன் சொன்னான் கார்த்திக்.
“ஐயோ ஹாஸ்டலில் போன் வச்சிக்க கூடாது பா”
“படுத்தாத டி, அதான் இப்ப எல்லாரும் வச்சிருப்பீங்களே. உங்க கிளாஸ் பிள்ளைங்களே வச்சிருக்காங்க தான?”
“ம்ம்”
“அவங்க போன்ல இருந்தாவது பேசலாம்ல?”
“லவ் பண்றவங்க வச்சிருக்காங்க? அவங்க கிட்ட எப்படி தாங்கன்னு கேக்க?”
“அவங்களை மாதிரியே  நீயும் செக்கிங் வந்தா டிரஸ் குள்ள ஒளிச்சி வச்சிக்கோ டி. நான் வாங்கி தரவா?”

Advertisement