Advertisement

அத்தியாயம்  11
உன் கை விரல் படும்
ஒவ்வொரு தருணமும்
வெந்து சாகிறேன்
நான் பெண்ணே!!!
கீழே வந்தவளுக்கு, தன்னுடைய காதல் தேவகிக்கும், சேகருக்கும் தெரிந்ததில் வெட்கம் வந்தது. சங்கடத்துடன் தேவகி அருகில் சென்று காபி கப்பை வைத்து விட்டு அதை கழுவ ஆரம்பித்தாள்.

அவள் முகத்தில் வந்து போன உணர்வுகளை வைத்தே “கார்த்திக் எல்லாத்தையும் அவளிடம் சொல்லி இருப்பான்”, என்று யூகித்த தேவகி, “என்ன மா காபி குடிச்சிட்டானா?”, என்று சாதாரணமாக பேச்சை ஆரம்பித்தாள்.

“என்ன சொல்ல?”, என்று தெரியாமல் ஒரு நிமிடம் விழித்தவள் “ஹ்ம்ம் ஆமா அத்தை”, என்றாள்.

“சரி சரி உன் வருங்கால புருஷன் குடிச்ச கப்பு தான். அதையே எவ்வளவு நேரம் தான் கழுவ போற? பிளேட், தண்ணி மட்டும் டேபிள்ள எடுத்து வை. சாப்பிடலாம்”

“அத்தை”, என்று அழைத்தவளுக்கு சிரிப்பும், வெட்கமும் ஒருங்கே வந்தது. அவள் வெட்கத்தை ரசித்த தேவகி, “அழகா இருக்க சத்யா. என் கண்ணே பட்டுரும் போல இருக்கு. எல்லா உண்மையையும் சொல்லிட்டானா?”, என்று கேட்டாள்.

“ம்ம், ஆனா அப்பா கிட்ட பேச தயக்கமா இருக்கு”

“அண்ணா, உன்னை எதுவும் சொல்லமாட்டாங்க டா. நீ கவலை படாத. நீ நம்ம வீட்டுக்கு மருமகளா வர நாங்க கொடுத்து வச்சிருக்கணும்”
“ஹ்ம்ம், தேங்க்ஸ் அத்தை. நானும் தான் ரொம்ப ரொம்ப கொடுத்து வச்சிருக்கேன். சரி   நான்  சாப்பிட எல்லாம்  எடுத்து வைக்கிறேன்”, என்று சொல்லி நகர்ந்தாள் சத்யா.
குளித்து முடித்து கீழே வந்த கார்த்திக் “அம்மா காபி தாயேன்”, என்று சொல்லி சத்யாவை மாட்டி விட்டான்.
“ஐயோ போச்சு. நான் குடிச்சிட்டாங்கன்னு சொன்னேனே”, என்று விழித்தாள் சத்யா.
“டேய் ஒரு நாளைக்கு எத்தனை காபி, குடிப்ப. ஒழுங்கா உக்காந்து சாப்பிடு”, என்றாள் தேவகி.
சத்யா அருகில் அமர்ந்தவன் “காபி அபிஷேகம் பண்ணதை அம்மா கிட்ட சொல்லலையா?, என்று கண்ணடித்தான். 
டேபிள் அடியில் அவனுடைய கையை கிள்ளி விட்டாள் சத்யா.

இது தான் சாக்கென்று கிள்ளிய கையை இறுக்கி பிடித்து கொண்டான் கார்த்திக்.

“அத்தையும், மாமாவும் பாத்துருவாங்களோ?”, என்ற தடுமாற்றத்துடன் பயந்து பயந்து அவனை முறைத்து கொண்டே சாப்பிட்டாள்.

சிறியவர்கள் சேட்டை புரிந்தாலும் அதை கண்டு கொள்ளாமல் இருந்தார்கள் தேவகியும், சேகரும். 

அடுத்து சேகர் வேலைக்கு கிளம்பும் போது, அவருக்கு உதவ கார்த்திக்கும் சென்று விட்டான். அவர்கள் போன பிறகு மதியம் பேசிய படியே சமைத்து சாப்பிட்டு விட்டு, “நீ டிவி பாரு சத்யா, இல்லைனா கார்த்திக் ரூம்ல எதாவது புக்ஸ் வச்சிருப்பான். அவனோட போட்டோஸ் எல்லாம் வச்சிருப்பான். வேணும்னா போய் பாரு. நான் தூங்க போறேன்”, என்று சொல்லி விட்டு சென்று விட்டாள் தேவகி.

உடனே அவன் அறைக்கு போய் அவனுடைய புகை படங்களை பார்க்க ஆசை வந்தாலும் “உடனே போனா அலையுற மாதிரி இருக்கும்”, என்று நினைத்து கொண்டு டிவி முன்னே அமர்ந்தாள்.
சிறிது நேரம் பார்த்தவள், அதுக்கு மேல் முடியாமல் அவனுடைய அறைக்கு சென்று விட்டாள்.
அவனுடைய ஆல்பம் எல்லாம் எடுத்து கட்டிலில் வைத்தவள், ஒவ்வொன்றாய் பார்வை இட ஆரம்பித்தாள்.
அப்போது கீழே “என்ன தம்பி நீங்க மட்டும் சீக்கிரம் வந்துடீங்க? அப்பா வரலையா?”, என்று கேட்டு கொண்டிருந்தார் செக்யூரிட்டி.
“அப்பா ஈவினிங் தான் வருவாங்க அண்ணா. எனக்கு நேரம் போகலை. அதான் வந்துட்டேன்”, என்று சிரித்தான் கார்த்திக்.
“ஹ்ம்ம் சரி”, என்ற படி அவனை உள்ளே விட்டு கதவை மூடினார்.
உள்ளே வந்தவனுக்கு கண்கள் அவளை தேடியது.
“அம்மா ரூம்ல தூங்கிருப்பா. சரி எழுப்ப வேண்டாம். அம்மாவும் எந்திரிச்சிருவாங்க”, என்று நினைத்து கொண்டு அறைக்குள் வந்தான் கார்த்திக்.
அவன் கட்டிலில் குப்புற படுத்து, அவன் தலையணையில் முகம் புதைத்து ஒவ்வொரு போட்டோவாக சிரிப்புடன் பார்த்து கொண்டிருந்தாள் சத்யா.
லட்டு போல கிடைத்திருக்கும் வாய்ப்பை நழுவ விடுவானா? சந்தோசத்துடன் “ஏய் திருடி என்னோட ரூம்ல என்ன டி செய்ற?”, என்ற படியே அவள் அருகில் கட்டிலில் அமர்ந்தான்.
திடிரென்று அவனை எதிர் பார்க்காததால், திடுக்கிட்டு எழுந்து அமர்ந்து  பெ பெ என்று முழித்தவள் “நான் சும்மா, போட்டோ பாக்க வந்தேன். அத்தை தான் பாக்க சொன்னாங்க”, என்று பட படப்புடன் சொன்னாள்.
“இப்ப எதுக்கு தந்தி அடிக்கிற? என் ரூம்க்கு நான் வருவேன்னு தைரியமா சொல்ல வேண்டியது தான டி லூசு? நம்ம ரூம் பிடிச்சிருக்கா?”
“நம்ம ரூமா?”
“கல்யாணம் அப்புறம் நீ இங்க தான இருக்கணும். இப்படி என்னோட பெட்ல படுக்கலாம். நான் உன் மடில இப்படி படுக்கலாம்”, என்று சொல்லி கொண்டே அவள் மடியில் தலை வைத்து கொண்டான்.
நடுங்கி போனாள் சத்யா. அவள் நடுக்கத்தை உணர்ந்தவன் “என்ன நடுங்குற? இப்படி கை பிடிச்சு பேசலாம். இப்படி முத்தம் கூட கொடுக்கலாம்”, என்று சொல்லி கொண்டே அவள் கழுத்தை வளைத்து தன் முகத்தை நோக்கி இழுத்தவன் அவள் உதடுகளை கவ்வி கொண்டான்.
சிறிது நேரம் கழித்து அவளை நிமிர வைத்து அவள் முகத்தை பார்த்தான். அவள் அவனை கள்ள பார்வை பார்த்து கொண்டு தலை குனிந்திருந்தாள்.
“இன்னும் என்னனென்னவோ செய்யலாம் சத்யா”
“எதுக்கு? இதை செய்யலாம், அதை செய்யலாம்னு எல்லாமே இப்பவே செஞ்சு காட்டவா? நீங்க நகருங்க. நான் கீழே போறேன்”
“உன்னை பார்த்த உடனே நான் கெட்டு போய்ட்டேன். எல்லாமே தன்னால தோணுது, என்ன செய்ய சொல்லு. சரி இனிமே எதுவும் செய்ய மாட்டேன். நல்ல பையனா மடில மட்டும் படுத்துக்குறேன். நாம  போட்டோ மட்டும் பாக்கலாம்”, என்று சொல்லி சொன்ன படி நடந்து கொண்டான் கார்த்திக்.
அடுத்த நாளே சண்முகநாதன் வந்து விட்டார். அவரை பார்த்ததும் குற்றவுணர்வுடன் தலை குனிந்தாள் சத்யா. அதை பார்த்தவர் “காதல் எப்ப யார் மேல வரும்னு சொல்ல முடியாது ம்மா. நான் உங்க அம்மாவை கடை விசயமா பேச போகும் போது தான் பார்த்தேன். அவ பேரு கூட தெரியாம பிடிச்சு போச்சு. அவளுக்கும் பிடிச்ச அப்புறம் தான் கல்யாணம் செஞ்சிக்கிட்டோம். ரொம்ப சந்தோஷமான நேரங்கள் அதெல்லாம். அவ கூட இருந்த வரைக்கும், வாழ்கை அழகா இருந்தது. எப்ப விஷ காச்சல்ல என்னை விட்டு போனாளோ அப்பவே நீ தான் என் உலகம்னு ஆகிட்ட சத்யா. உன்னோட சந்தோசம் தான் என்னோட சந்தோஷமும். இன்னும் நாலு தலை முறைக்கு அப்புறம் இந்த ஜாதி,  சம்ப்ரதாயம் எல்லாம் அழிஞ்சு போக போகுதோ என்னவோ? அதுக்கு போய் முக்கியத்துவம் கொடுத்து உன்னோட சந்தோசத்தை கெடுக்க மாட்டேன் பாப்பா”, என்றார்.
“அப்பா”, என்ற படியே அவர் நெஞ்சில் சாய்ந்து கொண்டாள் சத்யா.
“நீங்க பாப்பா பாப்பா னு சொல்லி பாப்பா மாதிரி தான் இருக்கா மாமா”, என்று அவளிடம் வம்பிழுத்தான் கார்த்திக். சண்முகநாதனும் அவனை பார்த்து சிரித்தார்.
ஒரு இரவு மட்டும் அங்கு தங்கி விட்டு அடுத்த நாள் சத்யாவை ஊருக்கு அழைத்து சென்றார். போகும் முன் யாருக்கும் தெரியாமல் அவனுடைய அறைக்கு சென்றவள் அவனை இறுக அணைத்து கொண்டாள். 
அவளை தன் நெஞ்சில் சாய்த்து கொண்டவன், “சீக்கிரம் காலேஜ் திறந்தா தான் இவளை என்னால பாக்க முடியும். சீக்கிரம் திறக்கட்டும்”, என்று நினைத்து கொண்டு அவளை நிமிர்த்தினான்.
“தினமும் போன் செஞ்சு பேசுறேன்னு எனக்கு சொல்ல ஆசை தான் சத்யா. ஆனா நமக்கு எந்த கஷ்டமும் கொடுக்காம நம்ம அம்மா, அப்பா நம்மளை சேத்து வைக்க முடிவு பண்ணிருக்காங்க. அதையே அட்வான்டேஜா எடுத்துக்க கூடாது. அதனால போன் செய்ய மாட்டேன். காலேஜ் திறந்த உடனே வா. அங்க தினமும் ஒரு பத்து நிமிஷம் பாத்து பேசலாம். சரியா?”, என்றான் கார்த்திக்.
“ஹ்ம்ம், நான் கிளம்புறேன்”, என்று போக பார்த்தவளின் கையை பிடித்து இழுத்தவன்  “நாம தான் சான்சை உருவாக்க கூடாது. ஆனா கிடைச்ச சான்சை யூஸ் பண்ணலாம்”, என்றான்.
புரியாமல் பார்த்தவளை “இனி எப்ப இப்படி தனியா மீட் பண்ண வாய்ப்பு கிடைக்கும்னு சொல்ல முடியாது. அதனால”, என்ற படியே அவளை இழுத்து அணைத்தவன், அவள் முகம் முழுவதும் முத்தமிட்டுவிட்டு அவள் உதடுகளில் இளைப்பாறினான்.
அவன் முத்தத்தை ஆழ்ந்து அனுபவித்தாள் சத்யா.
“வா கீழே போகலாம்”, என்று அவளை அழைத்து கொண்டு போனவன் சந்தோசத்துடன் வழி அனுப்பி வைத்தான்.
போகும் போது தேவகியை அவள் கட்டி அழுத நிகழ்வும் நடந்தது.
எல்லாரும் எதிர் பார்க்காமல் கிடைத்த லீவை சந்தோசமாக அனுபவிக்க, இவர்கள் இருவரும் எப்ப டா லீவ் முடியும் என்று எதிர் பார்த்தார்கள்.
அவர்கள் எதிர் பார்த்த நாளும் வந்தது. காலேஜ் திறந்ததும்  “சாயங்காலம் வரைக்கும் எல்லாம் காத்துட்டு இருக்க முடியாது”, என்று நினைத்து கொண்டு காலையிலே கோகிலாவை அழைத்து கொண்டு அவனுடைய டிபார்ட்மெண்ட்க்கே சென்றாள் சத்யா.
அவளை பார்த்ததும் அவன் முகமும் மலர்ந்தது.
இருவரின் காதல் பார்வைக்கு இடையே சங்கடத்துடன் நின்றாள் கோகிலா.
அதை உணர்ந்தவன், “நீ உன் பிரண்டை கூட்டிட்டு கிளாசுக்கு போ சத்யா. ஈவினிங் பாக்கலாம்”, என்று சொன்னவுடனே சத்யா முகம் கூம்பியது. அதை உணர்ந்தவன் கோகிலாவை கண்ணை காட்டினான்.
அதன் பின் தான் அவனை பார்த்து சிரித்தாள்.
அதன் பின் தினமும் அரை மணி நேரம் லைப்ரேரியில் அவர்கள் சந்திப்பு நடந்தது.  அவளுக்கு புரியாத பாடங்களையும் அவன் சொல்லி கொடுத்தான்.
முதல் கிளாஸ் பரிட்ச்சையில் பெயில் ஆன சத்யா அவன் முன்பு போய் ஒரே அழுகை.
அவளை சமாதான படுத்தியவன் தினமும் அவளுக்கு நடத்தி இருந்த பாடத்தை அவனுக்கு தெரிந்த அளவு சொல்லி கொடுப்பான். அப்படி சொல்லி கொடுத்து முடித்த பின்னர் அவள் கையை ஐந்து நிமிடம்  பிடித்திருப்பான்.
அந்த சிறு தொடுகையை கூட தாங்க முடியாமல் தவிப்பாள் சத்யா.
அந்த செமினாரில் காலேஜில் இருந்து யாரும் பங்கேற்காததால் சத்யாவும் அதற்கு போக வில்லை. “அடுத்த செமினார்க்கு போகலாம்”, என்று சொல்லி விட்டான் கார்த்திக்.

Advertisement