Advertisement

“என்ன பாக்குற? நம்ப முடியலையா?  அன்னைக்கு டிபார்ட்மெண்ட்க்கு போகும் போதே பிரண்ட்ஸ் சொன்னாங்க. ஜஸ்டின் என்னை அடிக்க வெயிட் பண்றான்னு. நாலு கொடுக்கணும் போல தான் இருந்தது. ஆனா அம்மா யாரையும் அடிக்க கூடாதுனு சத்தியம் வாங்கிட்டாங்க. அவங்களும் பாவம். காலேஜ் ஆரம்பிச்சு ரெண்டாவது வருஷம் போறதுக்குள்ள மூணு சஸ்பென்ஷன் வாங்கிட்டேன். அம்மாவும் கிட்ட தட்ட பத்து தடவைக்கு மேல வந்து பிரின்சிபாலை பாத்துட்டாங்க. அதனால தான், அப்படி சத்தியம் வாங்குனாங்க. அதனால அவன் கிட்ட போய் அடி வாங்க முடியுமா சொல்லு? அதான் அவன் கிளாசிலே ஒளிஞ்சிக்கலாம்னு வந்தேன். அப்ப தான் நீ காலேஜ் உள்ள வந்த”
…..
“பாத்த உடனே மனசுல பதிஞ்சிட்ட சத்யா. எந்த பொண்ணுக்கிட்டயும் தோணவே செய்யாத ஒரு ஈர்ப்பு எனக்கு உன்கிட்ட தோணுச்சு. உன்னையே தான் பாத்துட்டே நின்னேன். உன் கண்ணுல இருந்த தடுமாற்றம் நீ பர்ஸ்ட் இயர்ன்னு சொல்லாம சொன்னது. செக்யூரிட்டி வந்து உங்கிட்ட பேசுனது எல்லாமே பாத்துட்டு தான் இருந்தேன்”
“நீ நான் இருக்கும் பக்கம் நடந்து வர வர, எனக்குள்ளே நீ புதைஞ்சு போற மாதிரி இருந்தது. அங்கே இங்க கண்ணை திருப்ப முடியாம உன்னை இமைக்க மறந்து பாத்துட்டு நின்னப்ப தான் என் மனசையே உணர்ந்தேன். உங்கிட்ட பேச சொல்லி மனசு சொல்லிட்டே இருந்தது. ஆனாலும் தயக்கமா இருந்தது. அப்ப தான் நீ விழுந்து வச்ச. உடனே ஓடி வந்தேன். ஆனா முள்ளையும் , ரத்தத்தையும் பார்த்து பதறிட்டேன். அப்ப நீ பேசுனதுல நான் மயங்கவே செஞ்சிட்டேன்”
…..
“அப்புறம் அன்னைக்கு சாயங்காலம் பாத்தப்ப, உன்னோட அறியாமையை நான் ரசிச்சேன். ஆனா ஜஸ்டின் கண்ணுல இருந்த காதல் எனக்கு எரிச்சலை கொடுத்தது. அவன் கிட்ட நீ சிக்க கூடாதுனு பொறாமை வந்தது. அப்பவே மனசுக்குள்ள உக்காந்துட்ட டி ரங்கம்மா. வீராங்கனை மாதிரி காப்பாத்த வந்தப்ப, இழுத்து வச்சு கிஸ் அடிக்கணும் போல இருந்தது. ஆனா அப்ப முடியுமா சொல்லு”
“அப்புறம் நீ ஊருக்கு போறேன்னு சொன்னப்ப, ரெண்டு நாள் பாக்க முடியாதேன்னு பஸ் ஸ்டாண்ட் வந்தேன். பஸ்ல சோக சித்திரம் போல உக்காந்துருந்த உன்னை பாத்ததும், எனக்கு கஷ்டமா இருந்துச்சு. ஆனா அது எனக்கான சோகம், என்னை பாக்காம நீ தவிக்கிறன்னு நான் கனவுல கூட நினைக்கலை. ஆனா அது புரிஞ்சப்ப, உன்னை அப்படியே தூக்கிட்டு போகணும் போல இருந்தது. ஆனா காதலிக்கிற வயசு இது இல்லைனு தெரியும்? அதுக்காக காதலிக்காம இருக்க முடியாதுன்னும் தெரியும். உன் மனசுல நான் இருக்குறதுக்கு சாட்சி, உன்னோட கண்ணீர். அப்ப இருந்த நிம்மதி வேற எப்பவும் நான் உணர்ந்தது இல்லை சத்யா. அந்த சாக்லேட்டை கொடுக்குறதுக்குள்ள எனக்கு வேர்த்து போச்சு. அவ்வளவு நடுக்கம். ஆனா உன் விரல் தொட்டது, எதோ சொர்க்கத்துல நீயும் நானும் மட்டும் இருக்கறதா தோணுச்சு. அதுக்கு மேல மறைக்க முடியாது. திங்கள் அன்னைக்கு சொல்லிரலாம்னு தான் ஒன்னு சொல்லணும்னு சொன்னேன்”
“அப்ப ஏன் சொல்லலை? நான் எவ்வளவு யோசிச்சேன் தெரியுமா? ரொம்ப ஏமாற்றமா இருந்தது”
“சொல்லணும்னு தான் நினைச்சேன். ஆனா கிடைச்ச சந்தோஷத்துல, திமிர் வந்து நீயா வந்து காதலை சொல்றியானு வெயிட் பண்ணேன்”
“திமிர் இருக்குன்னு ஒத்துக்கிட்டா சரி தான். அப்படி என்ன சந்தோஷமாம்?”
“என்னை மாப்பிள்ளை பாக்க வந்தாங்க சத்யா”, என்று சிரித்தான் கார்த்திக்.
அவன் நெஞ்சில் குத்தியவள் “அன்னைக்கும் இப்படி தான் சொன்னீங்க. எனக்கு அழுகையே வந்துட்டு தெரியுமா? இன்னொரு தடவை விளையாடாதீங்க ப்ளீஸ்”, என்றாள்.
“ஏய், லூசு விளையாடலை டி. உண்மையை தான் சொல்றேன்”
“அப்ப எதுக்கு என்னை கட்டி புடிச்சிட்டு இருக்கீங்க? உங்களை யாருக்கு மாப்பிள்ளை பாத்தாங்களோ அவளையே கட்டிக்கோங்க”
“அவளை தான கட்டிருக்கேன்”
“கார்த்திக்”
“ஆமா டி என் லட்டு. எப்படி முன்ன பின்ன தெரியாத ஒரு பொண்ணை எங்க அம்மா, அப்பா வீட்டுக்குள்ள சேத்துக்க மாட்டாங்களா, அதே மாதிரி நீ தான் உலகம்னு நினைச்சு வாழுற உன் அப்பா உன்னை முன்ன பின்ன தெரியாதவங்க வீட்டில் எப்படி தங்க வைப்பாங்க”
“ஆமா ஆனா அப்பா இங்க இருக்க சொன்னாங்களே. நானும் யோசிச்சேன். ஆனா புரியலை”
“டுயூப் லைட், இப்பவும் புரியலையா? என்னை மாப்பிள்ளை பாக்க வந்தது உன் வீட்ல உள்ளவங்க தான் டி”
“என்னது ?????”
“இந்த அதிர்ச்சியை இவ்வளவு கிட்ட இருந்து பாக்கணும்னு தான் அன்னைக்கு என் காதலை சொல்லலை”
“என்ன சொல்றீங்க கார்த்திக்?”, என்றவள் குரலில் பதட்டமும் ஆவலும் இருந்தது.
“அன்னைக்கு உன்னை காலேஜ்ல விட்டுட்டு, உன் மொத்த குடும்பம் வந்ததே என்னை பாக்க தான்”
“என்னது???? எல்லாரும் இங்க வந்தாங்களா?”
“ஆமா. என்னை பாக்க தான். படிச்சு முடிச்சு செட்டில் ஆன அப்புறம் கல்யாணம் செஞ்சு வைக்கலாம்னு பேச தான் வந்தாங்க”
“கார்த்திக் ப்ளீஸ் எனக்கு டென்ஷன் ஏறுது.  எனக்கே உங்களை காதலிக்கிறேன்னு லேட்டா தான் புரிஞ்சது. அப்புறம் எப்படி எங்க வீட்ல இருந்து வந்திருப்பாங்க. நான் யார் கிட்டயும் எதுவுமே சொல்லலை. பொய் சொல்லாதீங்க”
“நீ வாய்ட்டு சொல்லலைன்னா என்ன? என்கிட்டே செய்கையில் காதலை சொன்ன மாதிரி உங்க அப்பா கிட்டயும் சொல்லிருக்கியே”
“அப்பா கிட்டயா?”
“ஆமா. நான் எழுதி கொடுத்திருந்த நோட்டை கட்டி பிடிச்சிட்டு தூங்கிருக்க? எப்பவும் போல இல்லாம கண்ணுல கனவோடு திரிஞ்சிருப்ப. இத்தனை நாள் ஒழுங்கா இருந்த பிள்ளைக்கு என்னவோ ஆச்சின்னு என் மாமனார் கண்டு பிடிச்சிட்டார்”
“ஆ”, என்று வாய் பிளந்து அவன் சொல்வதை கேட்டு கொண்டிருந்தாள் சத்யா.
“கொசு உள்ள போயிராம சத்யா”
“கிண்டல் பண்ணாதீங்க. அப்பா கண்டு பிடிச்சிட்டாங்களா? என்னை தப்பா நினைச்சிருப்பாங்கள்ல? ஆனா இதெல்லாம் உங்களுக்கு எப்படி தெரியும்?”
“நீ என்ன நோட்டை இப்படி கட்டி புடிச்சு தூங்குறன்னு என் மாமனார் யோசிச்சிருக்கார். அதுல தான் என் நம்பரை எழுதி வச்சிருந்தேன்ல? உன்னை மாதிரி மக்கா இல்லாம அறிவாளி தனமா யோசிச்சு அந்த நம்பருக்கு காலே பண்ணிட்டார்”
“என்னது அப்பா உங்க கிட்ட பேசினாங்களா?”
“பேசினங்களாவா? அடுத்த அரை மணி நேரத்துல உனக்கு என் மேல இருந்த லவ்வை பாத்துட்டு என்னை பாக்காமல் மாப்பிள்ளையா ஆக்கிக்க சம்மதம் சொல்லிட்டார், உங்க அப்பா “
“எனக்கு மயக்கமா வருது. கனவு கண்டுட்டு இருக்கேனா?”
“கனவு இல்லைன்னு வேற எப்படியாவது நிரூபிக்கவா?”
“வேண்டாம் வேண்டாம். நீங்க கதையை சொல்லுங்க”
“அப்புறம் என்ன? அப்பா, அம்மா கிட்ட மாமா பேசினார், என்கிட்டயும் தான். உண்மையான காதலானு செக் பண்ணார். குடும்பத்தை பத்தி விசாரிச்சார். எங்க அப்பா சொந்த ஊருல போய் விசாரிச்சிக்கோங்கன்னு சொன்னார். என் கெஸ் சரின்னா மாமா எங்க சொந்த ஊருக்கு போய் எங்க குடும்பத்த பத்தி விசாரிச்சிருப்பார். அடுத்த நாளே பையன் அழகானவனா, அறிவானவனான்னு பாக்க மொத்த குடும்பமே கிளம்பி வந்துட்டு”
“அப்ப அன்னைக்கு ஏதோ கல்யாணம்னு சொல்லி எல்லாரும் வந்தது இங்க தானா?”
“ஆமா, ஆனா ஒரு பெரிய காமெடி பண்ணார் உங்க அப்பா”
“என்னது?”
“நான் ரொம்ப பயந்து போய் இருக்கேனா? அதனால கராத்தே கிளாஸ் போகணுமாம்”
“அது நான்  முதல் நாள் உங்களை பார்த்து அப்படி சொன்னதுல அப்பா  அப்படி நினைச்சிட்டாங்க. அப்புறம் தான தெரிஞ்சது சார் பெரிய ரவுடின்னு”
“தைரியமான ஆம்பளைன்னு சொல்லு டி. நான் ரவுடி எல்லாம் இல்லை”
“ரொம்ப பெருமை தான். அத்தை கிட்ட சொல்லுங்க. கிழி கிழின்னு கிளிப்பாங்க. இவ்வளவு நடந்துருக்கு. அப்புறம் எதுக்கு அடுத்த நாள் சொல்லலை?”
“ஒரு சர்ப்ரைஸ் கொடுக்கலாம்னு நினைச்சேன்”
“அன்னைக்கு எதுக்கு பீவர் அதனால லீவ் ன்னு சொன்னீங்க?”
“நீ தான் எனக்குன்னு முடிவான பிறகு உன்னை தொட்டு பாக்கணும்னு ஆசையா இருந்ததா? அதான் சும்மா விளையாட்டுக்கு”
“அப்ப எல்லாருக்குமே தெரியுமா? நமக்கு கல்யாணம் பண்ணி வைப்பாங்களா?”
“நீ படிச்சு முடிச்ச உடனே பண்ணி வைப்பாங்க”
“அப்பாக்கு என் மேல கோபம் இருக்குமா? மறைச்சிட்டேன், தப்பு பண்ணிட்டேன்னு திட்டுவாங்களா?”
“இல்லை டா சத்யா. மாமா ரொம்ப அருமையான மனுஷன். பொண்ணோட கண்ணுல இருந்த காதலை கண்டு பிடிச்சு, அதே நேரம் பொறுப்பா எங்க குடும்பத்தை பத்தி விசாரிச்சு யாரோட மனசும் நோகாம எல்லா வேலையும் செஞ்சிருக்காருன்னா அவர் கிரேட். கண்டிப்பா உன்னை அவர் தப்பா நினைக்கவே இல்லை”
“நான் ஆண்ட்டி, அங்கிள்ன்னு  சொன்னாலும் இதுனால தான் அத்தை, மாமான்னு கூப்பிட சொன்னாங்களா?”
“ஒரு வழியா என் செல்லத்துக்கு பல்ப் எரிஞ்சிருச்சே”
“ப்ச் கிண்டல் பண்ணாதீங்க. எனக்கு நம்பவே முடியலை”
“சரி கீழ வா, நானே உனக்கு ப்ரூவ்  பண்றேன்”
“இப்படியே வா கீழே போக போறீங்க?”
“ஏன் என்ன?”
“கீழே கொஞ்சம் குனிஞ்சு பாருங்க”
கீழே பார்த்தவனுக்கு, வெட்கத்துடன் சிரிப்பாக வந்தது. “சே போர்வை கீழ விழுந்ததையே கவனிக்கலையே”, என்று வாய் விட்டே சொல்லி கொண்டவன் “ஏன் சத்யா, நீ அப்பவே பாத்துருப்ப போலவே. எதுக்கு என்கிட்ட சொல்லவே இல்லை. இப்படியே பாத்துட்டே இருக்கணும்னு ஆசையா?”, என்று கேட்டான்.
அவனை பார்த்து முறைத்தவள் “சின்ன பிள்ளை மாதிரி மிக்கி மவுஸ் ஜட்டியோட தூங்குறது நீங்க. இதுல என்னை கிண்டல் பண்றீங்களா? தலை எல்லாம் காபி. ஒழுங்கா குளிச்சிட்டு வாங்க”, என்று சொல்லி விட்டு கீழே சென்று விட்டாள்.
சிரித்து கொண்டே குளிக்க சென்றான் கார்த்திக்.
சீண்டல்  தொடரும்….

Advertisement