Advertisement

                                                            கொஞ்சும் ஏழிசை நீ – 21
மதுரை விமான நிலையம், இரவு நேர விளக்குகளால் ஜொலித்துக்கொண்டு இருக்க, அதனை விட பிரகாசமாய் இருந்தது மானசாவின் முகம். காரணம் சித்திரைச் செல்வன்.
அவளை அழைத்துக்கொண்டே செல்லவென்று விமான நிலையமே வந்திருந்தான். அதாகப் பட்டது அவள் வரவழைதிருந்தாள்.
“வரமாட்டேன்…” என்றுதான் சொன்னான்.
“நீயும் அன்டைம் வந்து நிக்காத..” என்றும் சொன்னான்.
அவள் கேட்டால் தானே..!!
“நோ வே… நீங்க வரலை.. நான் கால் டாக்சி புக் பண்ணி நேரா உங்க வீட்டுக்கு தான் வருவேன்.. திஸ் டைம் நான் உங்களை விடறதா இல்லை. நீங்க வந்துதான் ஆகணும் சாரே…” என்றிட, அவளின் இந்த பிடிவாதம் கூட அவனுக்குப் பிடிக்கத்தான் செய்தது.
அவனுக்கு படிப்பதற்கும் நிறைய இருக்க, மறுநாள் அவன் எடுக்கவேண்டிய வகுப்புகளுக்கும் நோட்ஸ் எடுக்க வேண்டியதும் நிறைய இருந்தது. இவளோ இப்படி பிடிவாதம் செய்ய, அழுத்தி மறுக்கவும் அவனுக்கு மனது வரவில்லை.
அத்தனை உற்சாகமாய் கிளம்பி வருபவளை, சுனங்க வைக்க விருப்பமில்லை. சரி வந்து இரவு நேரம் கூட படித்துக்கொள்வோம் என்று கிளம்பி வந்துவிட்டான். மானசாவிற்கோ அவனை கண் முன்னே பார்த்தாலும், அவன் கரம் கோர்த்துக்கொண்டாலும் கூட அவளால் இன்னமும் நம்பிட முடியவில்லை.
அவனின் முகத்தினை முகத்தினை பார்க்க “ஓய் நேரா பார்த்து நட..” என்று அவனும் செல்லமாய் அவளின் தலையை தட்ட,
“ஒவ்வொரு ஷாக்கா கொடுங்க சர்.. மை லிட்லில் ஹார்ட்ல ஆல்ரடி பெரிய பிளாட் போட்டுடீங்க நீங்க.. இப்படி அதிர்ச்சி எல்லாம் கொடுத்தா தாங்காது…” என்று அவள் சொல்ல,
“லூசு..!!” என்று செல்லமாய் கடிந்துகொண்டான்.
முதல் நாள் வரைக்கும் தான் கொண்ட தவிப்புகளும், குழப்பங்களும், பயங்களும் அவன் மீதுகொண்ட கோபமும் கூட இப்போது இருந்த இடம் தெரியாது காணாது போய்விட, இப்போதிருக்கும் அந்த க்ஷணத்தை ஆழ்ந்து அனுபவித்தாள் மானசா.
அவன் கரத்தோடு தன் கரத்தினை பற்றிக்கொண்டவள் விடவேயில்லை..!!
விருப்பங்கள் சொல்லிய இந்த சில தினங்களிலேயே அவளின் இத்துனை நெருக்கும் கொஞ்சம் வியப்பாகவும் இருந்தது சித்திரைச் செல்வனுக்கு. ஏனெனில் இன்னமும் அவளோடு அவனுக்கு சகஜமாய் பேசிட கூட வரவில்லையே.
அப்படியே வந்தாலும், அதற்கு அவனே தடையும் போட்டுக்கொள்கிறான்.
காதல் வந்தாகிவிட்டது. சொல்லியும் ஆகிவிட்டது. ஆனால் அதனை நல்முறையில் செயல்படுத்தலாமா வேண்டாமா என்ற தெளிவு இன்னமும் அவனுக்கில்லை. இருந்தும் அவளின் சந்தோசத்தினை கெடுத்திட கூடாது என்பதில் தெளிவாகவே இருந்தான்.
“ஸ்டில் ஐ கான்ட் பிலீவ் திஸ்..” என்று மானசா சொல்ல,
“அடடா.. கிளம்புற எண்ணம் இல்லையா உனக்கு..” என்றான் சித்து.
“போலாம்.. போலாம்… இப்போதானே செவன் ஆகுது.. டைம் இருக்கே..” என்று அவள் மெதுவாகவே நடக்க, சித்துவிற்கு சொல்லவும் முடியவில்லை தான் சீக்கிரம் செல்லவேண்டும் என்று.
பஸ் அது இதென்று நேரம் பிடிக்கும் என்றுதான், பாஸ்கியிடம் சொல்லி அவன் வீட்டு காரினை எடுத்துக்கொண்டு வந்திருந்தான். இங்கோ மானசா இப்போது தான் விமான நிலையத்தை சுற்றிப் பார்ப்பது போல் வேடிக்கை பார்த்துக்கொண்டு வர, இங்கிருந்து அவர்களின் பல்கலைகழகம் செல்லவே குறைந்தது ஒன்றை மணி நேரமேனும் ஆகும். ஒன்று அவனாவது சொல்ல வேண்டும் சீக்கிரம் போவோம் வேலை இருக்கிறது என்று. அதையும் சொல்லவில்லை. பின் எப்படி அவள் கண்டுகொள்வாள்.??!
விமான நிலையம் விட்டு வெளிவரவுமே “எனக்கு செம பசி…” என்று அவள் சொல்ல,
“ஹோட்டல் போலாம்..” என்று அவனே தான் அழைத்தும் செல்ல,
“நீங்க ஆர்டர் பண்ணுங்க..” என்று அவள் சொல்ல,
“உனக்கு என்ன ஹெல்த்துக்கு சேருமோ அதை மட்டும் ஆர்டர் பண்ணு.. எனக்கு நான் பண்ணிக்கிறேன்..” என,
“அதானே பார்த்தேன்..” என்று முறைத்தாள்.
“லுக் மானசா.. ஹெல்த் விசயத்துல நோ மோர் செண்டிமெண்ட்ஸ் ஆர் எனிதிங்…” என்று கண்டிப்புடனே சொல்ல,
“அப்பப்போ வாத்தியாரா மாறிடுறீங்க நீங்க..” என்றவள் அவளுக்கு வேண்டியதை சொல்ல, பின் அவனும் அவனுக்கு வேண்டியதை சொல்ல, அடுத்த ஒருமணி நேரம் பேச்சோடு உணவுமாய் தான் நகர்ந்தது.
என்ன பேசினார்கள் என்றால், அது தெரியாது. ஆனால் நிறைய பேசினார்கள். சித்திரைச் செல்வனிற்கே ஆச்சர்யம் தான். தான் இத்தனை பேசுவோமா என்று. அதுவும் ஒரு பெண்ணிடம்??!!
மனது அப்படியொரு உற்சாகம் கொண்டது. இதே உற்சாகம் என்றென்றும் வேண்டும் போலவும் ஆசை பிறந்தது. அடிக்கடி அவளறியாது நேரம் பார்தவன், பின் அதனையே மறந்து போனான்.
செந்தமிழ் மானசாவிற்கு அழைத்து “ரீச்டா..??” என்று விசாரிக்கவும் தான் இருவருமே நேரம் உணர்ந்தனர்.
“ஹா.. ப்பா.. செம பசி.. சோ சாப்பிட்டிட்டு இருக்கேன்…” என்று அவளும் சொல்ல,
“ஓகே டா…” என்று வைத்துவிட்டார்.
“இவ்வளோ நேரமாச்சா..??” என்று மானசாவும் கேட்க,
“ம்ம் பசி போயிடுச்சா??” என்றான் அவனும்.
“யா.. யா.. ஆக்சுவலி கொஞ்சம் தான் பசி..” என்றவள் “உங்கள பிடிச்சு வைக்க என்ன ரீசன் சொல்றதுன்னு தெரியலை..” என்று உண்மையை சொல்லிவிட, அவனுக்கே சங்கடமாய் போய்விட்டது.
எதுவும் சொல்லாது அவளைப் பார்க்க “நான்.. எதுவும் தப்பா சொல்லிட்டேனா??” என்றாள் இரு புருவங்களையும் உயர்த்தி.
“ம்ம்ஹும்..”
“பின்ன என்ன திடீர்னு சைலன்ட்..??”
“எனக்குதான் சரியா நடந்துக்க தெரியலை மனு.. பிராப்ளம் அதான்..” என்றவனின் குரலும் இறங்கிவிட,
“ஓ… போதும் போதும்.. பர்ஸ்ட் டைம் நம்ம வெளிய இப்படி டைம் ஸ்பென்ட் பண்றோம்.. எதுவும் பேசி ரெண்டு பேருமே மூட் ஸ்பாயில் பண்ணிக்க வேண்டாம்..” என்றவள், பேரர் வந்து வைத்துவிட்டு போன பில் எடுக்க,
“மனு..” என்றான் கண்டிப்புக் குரலில்.
“நான் தான் பே பண்ணுவேன்..” என்றவள் அவளின் கார்ட் வைக்க,
“ம்ம்ச்.. இங்க கொடு…” என்றான் பிடிவாதமாய்.
“நோ.. நான்தான்..” என்று அவள் சொல்லும்போதே, அவன் எழுந்துவிட, “என்னதிது??” என்று அவள் பார்க்க,
‘பில் கொடு..’ என்பதுபோல் கை நீட்டினான்.
“யார் பே பண்ணாலும் என்ன??” என்று அவள் சொல்ல,
“அதேதான்.. நான் பண்ணா என்ன??” என்றான் அவனும்.
“அட…” எனும் போதே “மானசா…” என்று அவனும் சொல்ல, தன்னப்போல் பில் அவன் பக்கம் சென்றது.
வாங்கிப்பார்த்தவன், அவனின் பர்ஸில் இருந்து பணம் எடுத்து வைக்க, மானசா அவளின் கார்ட் எடுத்து உள்ளே வைக்க, பேரர் வந்தவர் “சர் கார்ட் யூஸ் பண்ணா சம் ஆப்பர்ஸ் இருக்கு..” என,  சித்திரைச் செல்வனுக்கு சுள்ளென்று வந்துவிட்டது.
இன்னமும் அவன் அந்த அளவில் எல்லாம் பொருளாதார ரீதியில் முன்னேரிடவில்லை. அவன் பெயரில் வங்கிக் கணக்கு இருந்தாலும், அதில் பணம் இருந்தாலும் டெபிட் கார்ட் உபயோகிக்கும் அளவிற்கு தான் இன்னும் வசதிப்படவில்லை என்பது அவனின் எண்ணம்.
அதற்காக ஒன்றுமில்லாமலும் இல்லை..!!
“ஏன் பணமா கொடுத்தா வாங்கிக்க மாட்டீங்களா??!!” என்று அவன் கேட்ட தோரணையே கொடுப்பதை வாங்கிக்கொண்டு பேசாது போ என்பதாய் இருக்க,
பேராரோ மானசாவை பார்க்க, அவளோ சித்துவைப் பார்க்க “ஹெலோ…” என்றான் அதட்டல் தொனியில்.
“ஹா.. ஓகே சர்..” என்றவன் பணத்தினை எடுத்துக்கொண்டு நகர,  மானசாவிற்கு கிளம்பினால் போதும் என்றாகிப்போனது.
ஹோட்டல் விட்டு வெளியே வந்தும், காரில் ஏறியும் கூட சித்திரைச் செல்வன் எதுவும் பேசாது வர, இவளோ ஏதாவது பேசினாலாவது நன்றாய் இருக்குமென்றெண்ணி “யார் கார் இது..” என்றாள் சாதாரணமாய்.
“பாஸ்கி வீட்டு கார்..” என்று அவனும் சொல்ல,
‘ஓ..!! பாஸ்கிண்ணாதுவா..’ என்று அவளாக முணுமுணுக்க,
“ம்ம்ஹும்.. பாஸ்கி வீட்டு கார்.. அவனோடது இல்லை..” என்றான் அவள் சொன்னதை திருத்தும் விதமாய்.
“ரெண்டும் ஒண்ணுதானே ..” என்றவள் பேச்சு ஆரம்பித்துவிட்ட சுவாரஸ்யத்தில் திரும்பி அவனைப் பார்க்க,
“கண்டிப்பா இல்லை. இப்போ நான் சம்பாரிச்சு ஒன்னு வாங்கினாதான் அது என்னோடது.. இல்லைன்னா அதுக்கு யார் காரணமோ அது அவங்களோடது  தான்..” என,
“நான்லாம் எங்கப்பா காரை என்னோடதுன்னு தான் சொல்வேன்..” என்றாள் பிடிவாதமாய்.
“அது உங்கப்பாவோட கார் தானே..” என்று அவனும் சொல்ல,
“எஸ்.. ஆனா என்னுதும் கூடத்தான்..” என்றாள்.
“எப்படி நீ எதுவும் ஷேர் போட்டியா??” என்று கேட்டவனுக்கு சிரிப்பு தான் வந்தது.
“இப்போ ஏன் சிரிக்கிறீங்க.. எங்க வீட்ல இருந்தா அது என்னோடதுதான்.. இப்போ கல்யாணத்துக்கு அப்புறம் நீங்க வாங்கற எல்லாம் என்னோடது தான். அதுக்காக எல்லாம் நான் வேலைக்கு போய் சம்பாரிச்சு எனக்குன்னு எதுவும் வாங்கிக்க முடியாது..” என,
“அடிப்பாவி..!!!!!” என்று பார்த்து வைத்தான் சித்து.
“நிஜமா.. இப்போவே சொல்லிட்டேன்.. நானும் ஆன்ட்டி போல ஹவுஸ் வொய்ப் தான்..” என,
“ஹ்ம்ம்… இன்னும் லவ்வே ஒழுங்கா பண்ணல.. அதுக்குள்ள நீ ஏன் மேரேஜ் பத்தி எல்லாம் பேசுற..” என்றவனுக்கு உள்ளே என்னவோ பிசைந்தது..
காதல் கற்பனைகள் தாண்டி, கல்யாணக் கனவுகள்.. அது லேசுப்பட்டது அல்லவே..!!
“லவ் வேற மேரேஜ் வேறயா??” என்றாள் மானசா பட்டென்று.
அவனுக்கு நிஜமாகவே இக்கேள்வி புரியாது போக “என்னது??!!” என்றான்
“லவ் வேற மேரேஜ் வேறயா??” என்று அவள் திரும்பவும் கேட்க, “அதெப்படி ஒண்ணாகும்??” என்று இவனும் சொல்ல,
“ஒண்ணுதானே…” என்றாள் இரு கைகளையும் விரித்து.
“ஷ்..!! எனக்கு இந்த கான்சப்ட் புரியலை…” என்று தலையை ஆட்டிக்கொண்டவன் “நான் உன்ன போல எல்லாம் மனு.. ரொம்ப ரொம்ப நார்மல் பெர்சன்..” என,
“லவ்ல.. ஒரு கற்பனை இருக்கும்.. நம்ம சேர்ந்து வாழ்றதுபோல.. மேரேஜ்ல அதுவே நிஜமா நடக்கும்.. சோ இது எப்படி வித்தியாசமாகும்..” என,
அவன் இருக்கும் நிலையில் இப்போதைக்கு திருமணம் போன்ற கற்பனைக்கு எல்லாம் செல்ல கூட முடியாது இல்லையா??
அதை அவளுக்கு எப்படிச் சொல்லி புரியவைப்பது??!
பதிலேதும் சொல்லாது அவன் அமைதியாய் காரினை செலுத்த, “இப்போ சொல்லுங்க உங்களது எல்லாம் என்னது தானே..” என்றாள் மானசா.
‘இந்த பேச்சினை ஆரம்பித்ததே தவறோ..’ என்று அவனுக்கு பட,
“எனக்குன்னு இப்போதைக்கு எதுவும் இல்லை மனு.. அப்பா காசுல தான் சாப்பிடுறேன்.. படிக்கிறது ஸ்காலர்ஷிப்..” என்று சொல்ல,
மானசா அவன் முகத்தினை ஒருமுறை ஆழ்ந்து பார்த்தவள், பின் எதுவுமே கேட்கவில்லை. காதலாக பேசிட தெரியவில்லை என்றாலும், காதலியிடம் எப்படி பேசவேண்டும் என்றுகூடவா தெரியாது போனது இவனுக்கு.??
அக்கேள்வி மானசாவினுள் இருந்தாலும், அதனை அவனிடம் சொல்லி, பின் அதற்கும் ஒரு பேச்சு வரும் என்று புரிய, அப்படியே மௌனமாகிப் போனாள்.
அவள் அமைதியாய் வேடிக்கைப் பார்த்து வருவது கண்டு “என்னாச்சு??” என்று சித்து கேட்க,
“ம்ம் ஒண்ணுமில்ல..” என்று சொல்ல,
“திடீர்னு சைலென்ட் ஆகிட்ட..” என்றான் அவளை பக்கவாட்டில் ஒரு பார்வை பார்த்து.
முதல் முறையான தனிமை சந்திப்பு, ஒரு சிறு கார் பயணம், அதில் இத்தனை கருத்து முரண்பாடுகளா என்று மானசாவிற்கு தோன்றாமல் இல்லை. ஆனால் அதெல்லாம் இருவரின் வாழ்க்கை முறை கொடுத்த, வளர்ப்பு விதங்கள் கொடுத்த வித்தியாசங்கள் என்று யார் சொல்வார் அவளுக்கு.
இதற்குமேல் ஏதாவது பேசி அது சண்டை அது இதென்று ஆனால்.. போதும் என்று தோன்றிவிட “சாங் போடவா..” என்றாள்.
“இதெல்லாம் கேட்கணுமா நீ??” என்றவன், அவனே மியூசிக் சிஸ்டம் ஆன் செய்ய, மெலோடி பாட்டுக்களாய் தான் ஓடிக்கொண்டு இருந்தது.
ஆனால் அதில் எதுவுமே மானசாவிற்கு மனதிற்கு ஒட்டவில்லை. மாறாய் ஒரு வெறுமை சொல்வது போல்தான் இருந்தது. பாட்டில் வரும் வரிகள் எல்லாம் உருகி உருகி காதல் கொண்டு இருக்க, இங்கே பேச்சு வார்த்தைக்கு கூட பெறும் வரட்சியாய் இருக்க, ஜன்னலில் சாய்ந்து தலை வைத்துக்கொண்டாள்.
அத்துனை ஆவலாய் கிளம்பி வந்தவளுக்கு, இப்போது அதெல்லாம் எதுவும் இல்லாது போய்விட, அவளின் திடீர் மௌனம் கண்டு
“என்ன மனு..” என்று விசாரித்தான்.
“நத்திங்… தூக்கம் வர்றது போல இருக்கு..” என்றதும்,
“ஓகே.. தூங்கு.. ஹாஸ்டல் வரவும் எழுப்புறேன்..” என்று அவன் சொல்ல, “ம்ம்” என்றவள், அவன் பக்கம் திரும்பவே இல்லை.
ஆனால் சித்துவோ, அவ்வப்போது பாடலின் வரிகளை ஹம் செய்துகொண்டு காரினை செலுத்த, ‘இதாவது செய்கிறானே..’ என்று தானே திருப்தி பட்டுக்கொண்டாள் மானசா.
ஒரு கார் பயணமே அவர்களுள் பல வித்தியாசங்கள் காட்ட, வாழ்க்கை பயணம் என்பது எப்படி இருக்குமோ??!!          

Advertisement