Advertisement

             
                        கொஞ்சும் ஏழிசை நீ – 20
“என்ன மனு… ஏன் இவ்வளோ டல்லா இருக்க?? வாட் ஹேப்பன்??” என்று நூறாவது முறையாக கேட்டிருப்பாள் தனுஜா.
“ஐம் ஆல்ரைட் தனு…” என்று மானசாவும் அதற்கு நூறு முறையாவது பதில் சொல்லியிருப்பாள்.
இப்போதும் அதனையே சொல்ல, தனுஜாவோ மறுப்பாய் தலையாட்டி “ம்ம்ஹும்.. நீ நார்மலா இல்லை. சம்திங் இஸ் ஈட்டிங் யூ..” என, தனுஜாவின் முகத்தினை ஏறிட்டு பார்த்தவள்,
“நீ ஏன் இன்னும் என் முன்னாடி நிக்கிற.. கிளம்பு நீ..” என்று விரட்ட,
“அடிப்பாவி… அப்போ நீ வரலையா??” என்றாள் தனுஜா.
“நீ ரூம் விட்டு வெளிய போனாதானே, நான் ரெடியாக முடியும்..”
“ஓ… ஓகே ஓகே.. கம் பாஸ்ட்..” என்றுவிட்டு தனுஜா, மானசாவின் அறை விட்டு வெளியே செல்லவும், பின்னேயே வந்து கதவினை அடைத்தவள், அதன் மீதே சாய்ந்து நின்றுவிட்டாள்.
ஊட்டி வந்தும் கூட மூன்று நாட்கள் ஆகிவிட்டது. அவளால் இன்னமும் ஒரு தெளிவிற்கு வரமுடியவில்லை. காதலை உணர்ந்த மகிழ்ச்சியோ, காதலை சொன்ன பூரிப்போ, இல்லை அவனின் காதலையும் உணர்ந்துகொண்ட புத்துணர்வோ எதுவுமே இல்லை.
மாறாக ஒரு குழப்பம்.. திடீரென ஒரு பயம்.. மனதில் எப்போதுமே ஒரு அழுத்தம் குடிகொண்டதாய் இருக்க, அவளால் ஒரு நிலையில், அவளின் இயல்பில் இருந்திடவே முடியவில்லை.
அதிலும் சித்திரைச் செல்வனின் வீட்டில் இருந்து கிளம்புகையில், அவன் வருவானா மாட்டானா என்பது கூட அவளுக்கு சரி வர தெரியாது.
அழைத்து அழைத்துப் பார்த்து, ஓய்ந்து போய், பின் வழியே இல்லாது பாஸ்கருக்கு அழைக்க “சித்து டிரைவ் பண்றான்.. அங்கதான் வர்றோம்..” என்று அவன் சொன்னதும் தான் சிறிது மனது சமன் பட்டது.
‘சரி வருகிறான்…’ என்று நினைத்தாலும், வந்து என்ன செய்ய?? தனியே ஒரு வார்த்தை கூட பேச முடியாது.
அப்பா அக்கா எல்லாம் இங்கிருக்க, அவனோடு அவள் என்ன தனியே சென்று பேசிட முடியும். அதற்கெல்லாம் இடம் கொடாது தானே அவன் சரியாய் இவள் கிளம்பும் நேரத்திற்கு அரைமணி நேரம் முன்னம் வருகிறான்.
இதை கூடவா அவளுக்கு புரிந்துகொள்ள முடியாது…!!
மானசா, சித்திரைச் செல்வனுக்கு அழைத்து பேச முயற்சிக்கும் நேரமெல்லாம் அவன் சொல்வது ஒன்றே ஒன்றுதான் “நீ ரிலாக்ஸா இரு.. ஊருக்கு போயிட்டு வந்து பேசிக்கலாம்.. இப்போ எதையும் போட்டு கன்பியூஸ் பண்ணிக்காத..” என்பதே.
அவளுக்கோ ‘பேசினா தானே நான் ரிலாக்ஸா இருக்க முடியும்??’ என்பது.
வீட்டிற்கு வந்தவன் கூட, சம்பிரதாயமாய் தனுஜாவிடம் ஒரு புன்னகை, பின் பேச்செல்லாம் செந்தமிழோடும் பூபதியோடும் தான். உடன் பாஸ்கரும் இருக்க, மானசாவால் எதுவுமே செய்திட முடியவில்லை.
கிளம்பும் நேரமும் வந்துவிட, சித்துவின் முகத்தை முகத்தை தான் பார்த்திட முடிந்தது. மீனா அவளுக்கு ஊருக்கு கொடுத்துவிட என்று நிறைய பொருட்களை எடுத்து வைத்திருக்க, தனுஜா தான் அதெல்லாம் பார்த்து விழி விரித்தாள்.
“ஆன்ட்டி.. இவ்வளோ திங்க்ஸ் எதுக்கு..” என,
“அட இருக்கட்டும்… அதுக்காக வந்து தங்கின பிள்ளைய வெறும் கையோடவா ஊருக்கு அனுப்புறது..” என்று மீனா சொல்ல,
“இப்போ புரியுது மனுக்கு இங்க ஏன் இவ்வளோ பிடிச்சதுன்னு..” என்று தனுஜா சொல்கையில், நொடிப்பொழுது சித்துவின் பார்வை மனுவை தொட்டு மீள, அவளோ அவனை ஏக்கமாய் பார்த்துக்கொண்டு இருந்தாள்.
அவளைப் பார்த்தாலே தான் தன் உறுதியிழப்பது நன்கு தெரிந்தது சித்திரைச் செல்வனுக்கு. அன்றைய பொழுது அவன் திடமாய் இருந்திருந்தால், அவள் பேசுகையில் அப்படியில்லை என்று மறுத்திருந்தால், அவளிடம் நெருங்காது இருந்திருந்தால், இன்று அவன் இப்படி நிற்க வேண்டிய நிலை இல்லைதானே.
அவனின் விருப்பங்களை விழுங்கிக்கொண்டேனும் இருந்திருப்பானே..
ஆனால் இப்போது அப்படி இருந்திட முடியாது இல்லையா..??!!
‘கமிட்டட்…’ என்பது சாதாரண விஷயம் அல்லவே..
உணர்வுகளை கட்டுக்குள் வைப்பது அவனுக்குமே சிரமமாய் இருந்தாலும் அவளின் தவிப்புகளை காண்கையில் அவன் இன்னமும் கலங்கித்தான் போனான்.
செந்தமிழ் எதுவோ கேட்டுக்கொண்டு இருக்க “இதோ வந்திடுறேன்..” என்று வேகமாய் அவனின் அறைக்குச் செல்ல, மானசாவின் பார்வையும் அவனைத் தொடர்ந்தது.
பாஸ்கருக்கோ இவர்களை யாரேனும் கவனித்தால் என்னாவது என்று இருக்க, அறைக்குள் சென்றவன் அவனின் அலைபேசியில் இருந்து மானசாவிற்கு அழைத்தான்.
அவளோ அவளுக்கான அறையில் அலைபேசியை சார்ஜ் போட்டிருக்க, சத்தம் வந்தது கூட அவள் கவனிக்கவில்லை. மீனா தான் “உன் போன் அடிக்குது பாரு..” என,
“அ.. இதோ ஆன்ட்டி..” என்றவள் உள்ளே செல்ல, அழைப்பது சித்துவென்றதும் வேகமாய் எடுத்து “ஹலோ..” என, அவளுக்கு குரலே எழும்பவில்லை.
“ஏன் நீ இப்படி இருக்க?? பீ நார்மல் மானசா.. என்னையும் நார்மலா இருக்க விடு.. ப்ளீஸ்.. இட்ஸ் ஹர்ட்டிங் மீ..” என, மானசாவிற்கு கண்களில் இருந்து பொலபொலவென்று கண்ணீர் வழிந்தது.
எதுவும் பேசாது அவள் அமைதியாய் இருக்கவும் “மனு.. ப்ளீஸ் பேசு…” என்று அவனும் ஒரு தவிப்போடு சொல்ல,
“நா.. நான் பேசணும்னு சொன்னப்போ எல்லாம் நீங்க ஏன் பேசலை..” என்று கேட்டவளின் குரல் நடுங்க, அங்கே அவனுக்கு சுவரில் தலை வைத்து முட்டிக்கொள்ள வேண்டும் போலிருந்தது.
பெரும் தவறு செய்துவிட்டோம் என்ற உணர்வு..
ஒருத்தியின் உணர்வுகளோடு விளையாடுகிறோம் என்ற எண்ணம்..
“சொல்லுங்க சித்து சர்.. ஏன் பேசலை..” என்று மானசா திரும்பக் கேட்க,
“இப்போ அதெல்லாம் பேச நேரமில்லை.. நீ.. நீ சந்தோசமா ஊருக்கு போயிட்டு வா.. ஹெல்த் பார்த்துக்கோ.. எதுவும் போட்டு உன்னை நீயே ஹர்ட் பண்ணிக்காத.. ஓகே வா..” என, அவன் கடைசியாய் ‘ஓகே வா..’ என்று கேட்கையில் அவனின் குரலும் தான் அவள்பால் உருகி நிற்க, அதுவே மானசாவிற்கு பெரும் ஆறுதலாய் இருப்பது போலிருந்தது.
“ம்ம்ம்..” என்றவள், “ஊருக்கு போய் நான் கால் பண்ணா எடுக்கணும்..” என,
“நான் ப்ரீயா இருக்கப்போ நானே பேசுறேன்..” என்றான்.
“ம்ம் சரி..” என்றவளுக்கு ஏதோ ஒரு சிறு அமைதி மனதிற்குள்ளே.
அந்த அமைதியை மட்டுமே பிடிகோலாய் கொண்டு அவளும் ஊட்டி வந்திட, இதோ இங்கே வந்து மூன்று நாட்கள் ஆகியும் கூட சித்திரைச் செல்வன் சரியாய் பேசிட காணோம்.
வீட்டிற்கு வந்ததுமே முதல் வேலையாய் மீனாவிற்கும் பூபதிக்கும் அழைத்து பேசினாள். பின் இவனுக்கு அழைக்க, முதலில் எடுக்காதவன் பின் எடுத்து “ரீச்ட்டா??” என,
“ம்ம் எஸ்.. வந்தாச்சு.. நீங்க என்ன பண்றீங்க…” என்று கேட்க, அவனுக்கு சொல்ல முடியவில்லை வீட்டில் இருக்கிறேன் என்று.
அப்படி சொன்னால், அன்று அவளைத் தவிர்க்கவே கிளம்பினான் என்பது தெரிந்துவிடாதா என்ன??!
அவன் என்ன பதில் சொல்ல என்று யோசித்த அந்த நேரத்தில் மானசாவே அடுத்த கேள்வியும் கேட்டாள் “சோ இனி ஜார்ஜ் சார் தான் கிளாஸ் எடுப்பார்ல..” என்று..
அவளிடம் பொய் சொல்லும் நிலை வரவில்லை என்ற நிம்மதியில் “ம்ம் எஸ்.. அவர் ரொம்ப ஸ்ட்ரிக்ட்.. என்கிட்டே பேசின மாதிரி அவரோட எல்லாம் சண்டைக்கு போயிடாத..” என,
“அடடா.. நீங்களும் அவரும் ஒண்ணா… எந்தா சாரே இது…” என்று மானசா ராகம் பாட, அவனையும் அறியாது ஒரு முறுவல் அவன் முகத்தில்.
அவன் “ம்ம்ம்…” என்று சொன்ன விதத்திலேயே, “நீங்க ஸ்மைல் பண்றீங்க தானே..” என்று மானசா சரியாய் யூகிக்க,
“பார்டா… எப்படி??!!” என்றான், எப்படி கண்டுகொண்டாள் என்பதாய்.
“அதுவா.. நீங்க ஸ்மைல் பண்றப்போ சொல்ற ம்ம்ம் மட்டும் கொஞ்சம் டிப்ரன்ட்டா இருக்கும்..” என,
“ம்ம் அப்போ நீ கிளாஸ் கவனிக்கல…” என்றான் வேண்டுமென்றே சீண்டும் குரலில்.
“ஹலோ.. சின்சியரா கவனிச்சதுனால தான் இப்படி தெளிவா சொல்ல முடியுது..” என்று மானசா சொல்லும்போதே, சித்திரைச் செல்வனின் பின் நின்று மீனா
“செல்வா இந்நேரம் வெளிய என்ன பண்ணிட்டு இருக்க.. உள்ள வா..” என்று அழைக்க, அவரின் சத்தம் அப்படியே மானசாவிற்கும் கேட்க,
“நீ.. நீங்க வீட்ல இருக்கீங்களா??” என்ற கேள்வி பட்டென்று வர, சித்திரைச் செல்வனுக்கு ‘ஐயோ..!!’ என்றாகிப்போனது.
“சொல்லுங்க சர்.. வீட்ல இருக்கீங்களா..” என,
மீனாவும் “செல்வா…” என்றழைக்க,
“ம்மா இரும்மா..” என்று கத்தியவன் “ஆமா அதுக்கென்ன இப்போ..??” என்று அவளிடமும் கடுப்படிக்க,
“ஓ..!! ஓகே.. நீங்க போய் உங்க வொர்க் பாருங்க..” என்றவள் வைத்துவிட்டாள்.
“ம்ம்ச்…” என்ற சலிப்போடு, அலைபேசி திரையை பார்த்தவன், பின் திரும்பி “போன் பேசுறப்போ இப்படி வந்து பேசாதம்மான்னு எத்தனை டைம் சொல்லிருக்கேன்.. ஏம்மா இப்படி…” என்று மீனாவிடம் கேட்க,
“அதுசரி.. போன் பேசுறவன் உள்ள உக்காந்து பேச வேண்டியதுதான.. இப்படி வந்து கிணத்துக்கடியில உக்காந்து பேசினா.. பத்து மணியாச்சு.. இந்நேரம் யாருக்கு பேசின??” என்று மீனாவும் கேட்க,
“ஆ.. பேய் கூட பேசினேன்…” என்றுவிட்டு எரிச்சலுடனே எழுந்து சென்றான்.
‘பேய் கூட பேசினானா?!!’ என்று மீனா போகும் மகனையே பார்க்க, பின் அவரை அழைக்க பூபதி தான் வந்தார்.
அவரிடமும் “இப்படி கத்திட்டு போறான்..” என்று சொல்ல,
“இங்க பாரு மீனா.. அவனோட படிப்புல அவனுக்கு நிறைய டென்சன் இருக்கும்.. அவன் கத்துறதை எல்லாம் நம்ம பெருசா எடுக்கக் கூடாது..” என்று பூபதியும் சொல்ல,
“இந்த பாடமெல்லாம் கொஞ்சம் உங்க மகன்கிட்டயும் எடுங்க..” என்றுவிட்டு போனார் மீனா.
அறைக்கு வந்தவனோ, திரும்ப மானசாவிற்கு அழைத்துப் பார்க்க, அவள் எடுக்கவில்லை. மெசேஜ் அனுப்ப, அதனை படிக்கிறாள் என்பது தெரிந்தது. ஆனால் அதற்கான பதில் இல்லை. அவளிடம் நல்லமுறையில் பேசிவிட்டு, அதே நல்ல மனநிலையில் சிறிது நேரம் அவனின் படிப்பினைப் பார்க்கலாம் என்று எண்ணியிருந்தவனுக்கு இப்போது இரண்டையுமே செய்யும் எண்ணம் இல்லை.
“மனு பிக்கப் தி கால்…” என்று விடாது மெசேஜ் அனுப்ப, ஒரு பத்து நிமிடம் கழித்தே,
“நீங்க என்னை அவாய்ட் பண்ற சிச்சுவேஷன் நான் உங்களுக்கு கொடுக்க மாட்டேன்…” என்ற பதில் மட்டுமே அவளிடமிருந்து வந்தது.
“ஷிட்…!!!!” என்று அலைபேசியை கட்டிலில் வீசியவன், அப்படியே தலை பிடித்து அமர்ந்துவிட்டான்.
ஊர் உலகத்தில் காதலிப்பவன் எல்லாம் இப்படியா காதலிக்கிறான்??! இவனை விட வயதில் சிறியவர்கள் கூட, அத்தனை ஏன் அவர்களின் துறையிலேயே எத்தனை காதல் ஜோடிகள் உண்டு.. இவனே எத்தனை பேரினை பார்த்திருக்கிறான். அவர்கள் எல்லாம் எப்படி சந்தோசமாய் இருக்கிறார்கள்.
தன்னால் அப்படியொரு சந்தோசத்தை அனுபவிக்கவும் முடியவில்லை, மானசாவையும் அப்படியொரு நிலையில் இருக்க விடுவதில்லை என்பதே அவனை கொல்லாது கொன்றது.
அங்கே மானசாவிற்கோ, தான் இருக்கையில் அங்கில்லாது, இப்போது மட்டும் சித்து வீட்டினில் இருப்பதை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. இத்தனை ஒதுக்கம் காட்டுபவன் ஏன் காதலிக்கவேண்டும்.. இப்படித்தான் அவள் மனது கேள்வி எழுப்பியது.
இதே மன நிலையில் அடுத்த நாட்களும் இருக்க, அவளின் முகம் பார்த்துதான் தனுஜா கேள்வி கேட்க, இவளும் மழுப்ப வேண்டிய நிலை. வீட்டினில் இருந்தால் தானே எதுவும் கேள்வி வரும் என்று மானசாவே தான் ஷாப்பிங் போவோம் என, அதற்கும் இன்னும் இவள் கிளம்பக் காணோம்.
கதவினில் சாய்ந்து நின்றவள், அப்படியே நின்றுவிட “மனு ரெடியா..” என்று தனுஜா கதவு தட்ட, அதில் சுதாரித்தவள், “யா கம்மிங்…!!” என்றபடி வேக வேகமாய் தயாராகி கிளம்பிச் சென்றாள்.
ஏனோ தானாய் அவனுக்கு பேசவும் மனது இப்போது வரவில்லை.. பேசாது இருப்பதும் என்னவோ போல் செய்தது.. இவை அனைத்தையும் தனக்குள்ளே விழுங்கி தனுஜாவோடு வெளிசென்று வர, சிறிது மனது அமைதியானது.
வீட்டிற்குள் நுழையும் போதே, தனுஜவிற்கு ராபர்ட் அழைத்துவிட “ஓய்.. ராபி…” என்று உற்சாகமாய் அழைப்பினை ஏற்று பேசிக்கொண்டு போனாள் தனுஜா.
அவளின் முகத்தினில் தான் எத்தனை பொலிவு அந்த நொடியில்.  அவர்கள் இருவருக்கும் காதல் என்றதுமே அதை எத்தனை மகிழ்வோடு வந்து வீட்டினில் சொன்னார்கள். தனுஜாவின் முகத்தினில் இருந்த படபடப்பும் அதை மீறிய பூரிப்பும் இப்போதும் மானசாவிற்கு கண் முன்னே வந்து போனது.
“ஹ்ம்ம்…” என்று தானாக ஒரு ஏக்கமும் வர, அதிசயித்திலும் அதிசயமாய் சித்திரைச் செல்வனே மறுநாள் அழைத்தான். அதுவும் அவள் தூக்கத்தில் இருக்கையில்.
இரவு வெகு நேரம் விழித்திருந்து, எப்போது உறங்கினாளோ, காலை பொழுது விடிந்தும் கூட உறக்கத்தில் இருக்க, சித்திரைச் செல்வன் அழைக்கையில் காலை ஒன்பது மணி.
அலைபேசி சத்தம் கேட்டு, பாதி உறக்கத்தில், தன்னை எழுப்புவதற்குத்தான் அழைக்கிறார்கள் என்றெண்ணி யாரென்று கூட பாராது “ஹலோ…” என,
“இன்னும் தூங்குறியா நீ??” என்று கேட்ட குரலில், அடித்து பிடித்து எழுந்து அமர்ந்தாள் மானசா.
நிஜமாகவே அவன்தானா என்று அலைபேசி திரையை உற்றுப் பார்க்க, புகைப்படத்தில் சித்திரைச் செல்வன் அழகாய் புன்னகைத்துக் கொண்டு இருக்க, ‘என்ன திடீர்னு…’ என்று தோன்றினாலும்,
காரணமேயின்றி மானசாவிற்கு ஒரு உற்சாகம் பிறக்க “நான் தூங்கினா என்ன தூங்கலைன்னா என்ன??” என்று கேட்க,
‘ஆகா ஒரு செக்கன்ட்ல பார்முக்கு வந்துட்டா…’ என்று சுதாரித்தவன்,
“நீ எப்போ கிளம்பி வர??” என்று கேட்க,
‘இன்னிக்கு என்னாச்சு??’ என்று எண்ணியவள் “நான் வந்தா என்ன வரலைன்னா என்ன??” என்றாள் பதிலுக்கு.
‘யப்பா..!!!’ என்று கண்களை இறுக மூடி திறந்தவன் “சரி போ.. ஒரு குட் நியூஸ் சொல்லலாம்னு பார்த்தேன்.. நீ தூங்கு..” என்று பேச்சினை முடிக்கப் போக,
“என்ன.. என்னது??!!” என்றாள் மானசா வேகமாய்.
“இல்ல வேணாம்.. யூ ஸ்லீப்…” என்று சித்து வம்பிழுக்க,
“இப்போ சொல்றீங்களா இல்லையா??” என்றாள் ஏகப்பட்ட டெசிபலில்.
“ஹெச் ஓ டி.. எனக்கும் பாஸ்கிக்கும் கேம்ப் கேன்சல் பண்ணிட்டு, சர்டிபிகேட் ஸ்டூடண்ட்ஸ்க்கு கிளாஸ் ஹேண்டில் பண்ண சொல்லிருக்கார்… ஜார்ஜ் சார் சர்டிபிகேட் கோர்ஸ் ஹேண்டில் பண்ணலைன்னு சொல்லிட்டார்.. சோ இனிமே கிளாஸ் நாங்க தான்…” என்று அவன் சொல்லி முடிக்கவில்லை,
“ஹேய்..!!!! நிஜமாவா..” என்று கட்டில் மீதே ஏறி நின்றுவிட்டாள்.
“மங்கி… கீழ இறங்கு நீ முதல்ல…” என்று நேரில் நின்று பார்ப்பது போல சித்து சொல்ல,
“என்னவேனா சொல்லிக்கோங்க.. ஐம் டூ ஹேப்பி… இதோ.. இப்போவே.. கொஞ்ச நேரத்துல பிளைட் பிடிக்கிறேன்… கிளம்பி வர்றேன்…” என்று மானசா உல்லாசமாய் சொல்ல,
“லூசு.. நாளைக்கு தான் கிளாஸ்..” என்று அவனும் உரிமையோடு பேச,
“கிளாஸ் நாளைக்கு.. நான் இன்னிக்கு வர்றேன்.. என்னை வந்து பிக்கப் பண்ணிக்கோங்க..” என்று அவளும் சொல்ல,
“அதெல்லாம் முடியாது..” என்றான் வேகமாய்.
“நான் வர்றேன்.. நீங்களும் வர்றீங்க… அவ்வளோதான்…” என்றவள், அலைபேசியை வைத்துவிட்டு “மனு ஊருக்கு கிளம்புறா…” என்று வீடு முழுக்க கத்தியபடி தான் கிளம்பிக்கொண்டு சென்றாள்.

Advertisement