Advertisement

9

குழலியின் எண்ணத்திலும் நடந்தவைகளை வந்து போயின. அருகிருப்பவனை எதிர்கொள்ள முடியாது சீட்டில் சாய்ந்து கண்ணை இறுக்கி மூடியவளின் விழிகளுக்குள் நடந்த ஒவ்வொரு நிகழ்வுகளும் வந்து போயின.

 

கயல்விழியை பேசவிட்டு கேட்டுக் கொண்டிருந்த இந்தர் “அத்தை” என்றழைக்க கண்ணீருடன் நிமிர்ந்து அவனைப் பார்த்தார்.

 

“உங்க பொண்ணை கல்யாணம் பண்ணிக்க வேணாம்ன்னு நான் நினைச்சிருந்தா பண்ணியிருக்கவே மாட்டேன். அவளே வரட்டும்ன்னு இவ்வளவு நாள் காத்திட்டு இருந்திருக்கவும் மாட்டேன்”

 

“சின்னப்பொண்ணு படிச்சுட்டு இருந்தவளை அன்னைக்கு சூழ்நிலையில நீங்க எல்லாரும் சேர்ந்து முடிவு பண்ணி கல்யாணம் பண்ணி வைச்சீங்க”

 

“பெரியாத்தாவுக்காக தான் உடனே கல்யாணம் பண்ணிக்க ஒத்துக்கிட்டேன். இல்லையின்னா அவ படிச்சு முடிக்கற வரை காத்திட்டு இருந்து தான் கல்யாணம் பண்ணியிருப்பேன்”

 

“இப்போவும் கிட்டத்தட்ட அது தானே நடந்திருக்கு. மூணாவது வருஷமும் கிட்டத்தட்ட முடிஞ்சிருச்சு. பரிட்சை மட்டும் தானே பாக்கி, பார்த்துக்கலாம். நீங்க கவலைப்படாம வீட்டுக்கு போங்க அத்தை. நான் ஊருக்கு போகும் போது குழலியும் என் கூட தான் வருவா. சந்தோசமா எங்களை வழியனுப்ப தயாரா இருங்க. நிம்மதியா தூங்குங்க, போயிட்டு வாங்க” என்று கூறி அவரை அனுப்பி வைத்தான்.

 

வரும் போது பெரும் குழப்பத்துடனும் மகளைக் குறித்த கவலையுடனும் வந்த தாய்க்கு தன் பேச்சின் மூலம் ஆறுதல் கொடுத்திருந்தான் இந்திரஜித்.

 

எப்போதும் போல் காலையில் விழித்த குழலி கண்களை மூடியவாறே எழுந்து அமர்ந்திருந்தாள். அவிழ்ந்திருந்த கூந்தலை அள்ளி முடிந்து கொண்டையிட்டவள் கொட்டாவி விட்டவாறே சோம்பலுடன் விழிகளை திறந்தவள் விதிர்த்து போனாள்.

சட்டவட்டமாய் அவளெதிரில் அமர்ந்திருந்தான் இந்திரஜித். அவள் கண்களையே அவளால் நம்ப முடியவில்லை. கண்ணை மூடித்திறந்தவள் கண்ட காட்சி பொய்யில்லை என்றதும் அவள் முகத்தில் அப்பட்டமாய் சினந்தது.

 

அதை கண்டும் காணாதவனாய் பார்த்திருந்தான் அவன். அவனை கண்டுக்கொள்ளாது எழுந்தவள் “அம்மா” என்று குரல் கொடுத்தவாறே வெளியேறினாள்.

 

“அத்தை இங்க இல்லை” என்ற பதிலில் திரும்பி அவனை முறைத்தாள்.

 

“உன்கிட்ட பேசணும் வந்து உட்காரு” என்றான் அதிகாரக்குரலில்.

 

“எனக்கு உங்ககிட்ட பேச எதுவுமில்லை”

 

“என் மனைவிகிட்ட எனக்கு பேச நிறைய இருக்கு”

 

“யாரு உங்களோட மனைவி??”

 

“உன் கழுத்துல நான் கட்டின தாலி இருக்கு தானே. டவுட்டுன்னா தொட்டுப் பார்த்துக்கோ” என்று அவன் சொல்ல எதுவும் யோசிக்காமல் அவள் கரம் உயர்ந்து தன் தாலிக்கொடியை பற்றியது. அதை திருப்தியுடன் பார்த்தான் அவள் கணவன்.

 

“நான் நேரா விஷயத்துக்கு வர்றேன். நாளைக்கு நான் பெங்களூர் கிளம்பறோம். நீ ரெடியா இரு. உன் திங்க்ஸ் எல்லாம் பேக் பண்ணிடு” என்றவன் எழ “நான் உங்க கூட வர்றேன்னு சொல்லவே இல்லை”

 

“நானும் நீ வர்றியான்னு கேட்கலை. வான்னு சொல்றேன்”

 

“என்ன புதுசா அதிகாரமெல்லாம் தூள் பறக்குது”

 

“நான் இதுவரைக்கும் உன்னை அதிகாரம் பண்ண நினைச்சதேயில்லை. அப்படி நான் நினைச்சிருந்தா நீ இந்த இரண்டு வருஷமா எனக்கு டிமிக்கி கொடுத்திட்டு இங்கவே இருந்திருக்க மாட்டே”

 

“ஆமா நாங்க தான் உங்களை வேண்டாம்ன்னு சொன்னோம். டிமிக்கி கொடுத்திட்டோமாம்ல, பேச வந்துட்டாரு” என்று அவள் இடித்துக்கொள்ள அவனுக்கு நன்றாகவே கோபம் எட்டிப் பார்த்தது.

 

அவன் யாரிடமும் எதற்காகவும் சென்று இப்படி பேசியதேயில்லை. யாரையும் கட்டாயப்படுத்தியும் அவனுக்கு வழக்கமில்லை. ஒருவர் ஒரு சொல் சொல்லாதவாறு நடப்பவன் அவன்.

 

மனைவி என்பதாலேயே குழலி எடுத்தெறிந்து பேசிய போதும் அமைதியாகவே இருந்தான். அவள் பேச்சில் கிண்டலும் நக்கலும் கலந்து வருவதை பார்த்தும் அவன் அமைதியாய் இருக்க முடியுமா என்ன.

 

இருந்தும் நிதானமாகவே வார்த்தைகளை கோர்த்தான். “நான் உன்னை வேண்டாம்ன்னு சொன்னதா எனக்கு ஞாபகமில்லையே” என்று சொல்ல இந்தரை கை நீட்டி குறை சொன்னவள் நான்கு விரல்களும் அவளுடைய தவறை எடுத்துரைப்பதை கவனத்தில் எடுக்கவில்லை.

 

“இப்போ எதுக்கு தேவையில்லாத பேச்சு. என்ன வேணும் உங்களுக்கு?? எதுக்கு காலையிலேயே இங்க வந்து உட்கார்ந்திருக்கீங்க??”

 

“நான் என் அத்தை வீட்டுக்கு வந்திருக்கேன். எதுக்கு வந்தே? ஏன் வந்தேன்னு கேட்கற உரிமை உனக்கில்லை. என் அத்தையை தவிர”

 

“நான் இந்த வீட்டு பொண்ணு”

 

“நீ என் பொண்டாட்டி அதை அப்பப்போ மறந்திடுறே”

 

“அப்பப்பா என்ன தான் பிரச்சனை உங்களுக்கு??” என்றாள் சலித்த குரலில்.

 

“உனக்கென்ன பிரச்சனை எதுக்கு என்னோட வரமாட்டேன்னு பிடிவாதம் பிடிக்கிற. அதுக்கான காரணம் எனக்கு தெரியணும்” என்றான் இரு கைகளையும் கட்டியவாறு அவளை கூர்ந்து நோக்கி.

 

“நான் உங்களுக்கு செட்டாக மாட்டேன்”

 

“எனக்கு புரியலை இதை எதுக்கு இப்போ சொல்றே?? உனக்கு பிடிக்கலைன்னா கல்யாணத்துக்கு முன்னாடியே நீ சொல்லியிருக்கலாமே”

 

“எனக்கு பிடிக்குது பிடிக்கலைன்னு நான் எப்போ சொன்னேன்”

 

“இப்போ சொன்னியே செட்டாக மாட்டேன்னு அதுக்கு என்ன அர்த்தம்”

 

“உங்களுக்கு தான் நான் செட்டாக மாட்டேன்னு சொன்னேன்”

 

“அதைத்தான் எதுக்கு சொன்னே??”

 

“நான் உங்களுக்கு பொருத்தமில்லைன்னு தெரிஞ்சு எதுக்கு என்னை கல்யாணம் பண்ணீங்க??”

 

அவள் ஏன் அப்படி சொன்னாள் என்று அவனுக்கு லேசாய் புரிய ஆரம்பித்தது. தரங்கிணி எப்போதோ அப்படிச் சொன்னாதாய் அவனுக்கு ஞாபகம். அதை அவள் கேட்டிருக்க வேண்டும் என்று புரிந்தது.

 

“பொருத்தமில்லைன்னு யார் சொன்னா??”

 

“உனக்கு நான் பொருத்தமில்லைன்னு நீ நினைக்கறியா??” என்று கேள்வியை அவளை நோக்கி திருப்பினான்.

 

“நான் தான் முதல்ல கேட்டேன், நீங்க விதண்டாவாதம் பேசறீங்க”

 

“எனக்கு இந்த கதை எல்லாம் வேண்டாம். பொருத்தமிருக்கோ!! பொருத்தமில்லையோ!! நீ என்னோட வர்றியா?? இல்லையா?? அதுக்கு எனக்கு பதில் வேணும்”

 

“நான் வரலை”

 

“ஏன்??”

 

“எனக்கு பிடிக்கலை”

 

“என்னையா??”

 

“எதுவும்…”

 

“யூ மீன் நம்ம கல்யாணம் பிடிக்கலை, என்னோட வாழறது பிடிக்கலைன்னு நான் எடுத்துக்கலாமா??” என்று கொக்கி போட்டான் அவன்.

 

“என்னை ஏன் இப்படி படுத்தறீங்க?? நான் உங்களுக்கு டைவர்ஸ் கொடுத்திர்றேன். நீங்க உங்களுக்கு பொருத்தமான செட்டாகற பொண்ணா பார்த்து கல்யாணம் பண்ணிக்கோங்க” என்றாள்.

 

“இதுக்கு என்ன அர்த்தம்??”

 

“நான் உங்களோட வரலைன்னு அர்த்தம்”

 

“ஓகே அக்ரீட்” என்று அவன் சொன்னதும் அவ்வளவு தானா என்று எங்கோ மனம் ஓலமிட கண்கள் நிறைவதை தடுக்க முடியாது விழிகளை வேறு புறம் திருப்பினாள் அவள்.

“சேம் தாட்” என்றவன் “நான் யாரை கல்யாணம் பண்ணிக்கணும்ன்னு நீ எனக்கு சொல்ல வேணாம். எனக்கு ஏற்கனவே கல்யாணம் ஆகிடுச்சு, இன்னொரு கல்யாணம் எல்லாம் என் லைப்ல இல்லை”

 

“சோ இப்படி வேணா செய்யலாம். உனக்கோ என்னை பிடிக்கலை, ஓகே ஓகே. என் கூட வாழறது உனக்கு பிடிக்கலை, எனக்கு நீ செட்டாக மாட்டே, சோ நான் வேணா உனக்கு விவாகரத்து கொடுத்திர்றேன்”

 

“உன்னை மாதிரி இல்லைம்மா வித் சம் கண்டிஷன்ஸ். என்னன்னு கேட்க மாட்டியா?? சரி நீ கேட்க மாட்டே நானே சொல்லிடறேன்” என்றவன் தொடர்ந்தான்.

 

“நீ உனக்கு பொருத்தமான ஒருத்தனை கல்யாணம் பண்ணிக்கணும். நான் இப்போவே இங்கவே விவாகரத்து பத்திரத்துல கையெழுத்து போட்டு கொடுக்கறேன். ஆனா உன் கல்யாணம் நடக்கிற மாதிரி இருந்தா தான் அதை லீகலா நான் கோர்ட்ல ப்ரோசீட் பண்ணுவேன்” என்று அவன் முடிக்கவும் அவள் முகம் சிவந்து போயிருந்தது கோபத்தில்.

 

“என்னை என்னன்னு நினைச்சுட்டு இருக்கீங்க. என்னைப் பார்த்து எப்படி நீங்க அப்படி சொல்லலாம். நான் இன்னொரு கல்யாணம் பண்ணிக்கணுமா?? அதைச் சொல்ல நீங்க யாரு”

 

“நீ சொன்னே கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி என்னை கல்யாணம் பண்ணிக்கச் சொல்லி நீ தானே சொன்னே. நீ சொன்னது சரின்னா நான் சொன்னதும் சரி தான். தப்புன்னா ரெண்டுமே தப்பு தான்”

 

“இங்க பாரு உன் கூடா வாதாட எனக்கு நேரமில்லை. நாளைக்கு காலையில நீ கிளம்பணும், இல்லைன்னு சொன்னா உனக்கு கல்யாணம் முடிச்சுட்டு லீகல் பார்மாலிட்டிஸ் எல்லாம் முடிச்சுட்டு தான் நான் இங்க இருந்து கிளம்புவேன். எது உனக்கு வசதின்னு நீயே முடிவு பண்ணு” என்றவன் அங்கிருந்து விறுவிறுவென்று கிளம்பிச் சென்றுவிட்டான்.

 

மழையடித்து ஓய்ந்தது போலிருந்தது அவன் பேசிச் சென்றது. அவன் சொன்னது போல அவன் இவ்வளவு பேசி அவள் இதுவரை கண்டதேயில்லை. அவளிடம் மட்டுமல்ல யாரிடமும் அளந்து தான் பேசுவான்.

 

என்றுமில்லா திருநாளாய் அவளிடம் வந்து பேசுகிறான், உண்மையாகவே அவளைத்தேடி வந்திருப்பானோ என்று அவள் மனம் மகிழ்ச்சி கொள்ளும் வேளையில் யாரோ மண்டையில் அடித்தது போல அவளுக்கு ஒன்று உறைத்தது.

 

‘அம்மா ஏன் இங்க இல்லை அவர் வர்ற நேரம் அவங்க இல்லையின்னா அப்போ அவங்க தான் அவர்கிட்ட போய் பேசியிருக்கணும். அவங்க கெஞ்சி இருப்பாங்க, இவரும் அவங்களுக்காக என்னை கூட்டிட்டு போறேன்னு வந்திருக்காரு’

 

‘ஆக அவருக்கா என்னை கூட்டிட்டு போகணும்ன்னு இதுவரைக்கும் அவருக்கு தோணவேயில்லை’ என்ற கசப்பான உண்மையை அவளால் ஜீரணித்துக் கொள்ள இயலவில்லை.

 

கண்கள் அருவியாய் பொழிய சிறிது நேரத்தில் எங்கோ சென்றுவிட்டு வந்த கயல்விழியின் கண்களில் அது தப்பாமல் விழுந்தது. இருந்தும் ஒன்றுமே கண்டுக்கொள்ளாது அவர் தன் வேலையை பார்க்க அதுவே சொல்லியது இந்திரஜித்தின் வருகைக்கான காரணம் யார் என்று.

 

மீண்டும் ஒரு பிடிவாதம் மனதில் எழ என்ன நடந்தாலும் நடக்கட்டும் ஒரு கை பார்த்துவிடுமோ என்ற இறுமாப்பு எழுந்தது அவளிடத்தில். அன்று மாலை அவளைத் தேடி வந்திருந்தார் தரங்கிணி.

Advertisement