Advertisement

 

“எஸ் அங்க இல்லை. ஆல்ரெடி நான் டெம்பரவரி எம்ப்ளாய்யா இருந்தேன் தானே அங்க. என்னை பர்மனென்ட் பண்ணிட்டு மங்கள்யான் ப்ராஜெக்ட்க்கு மாத்தறேன்னு சொன்னாங்க, அதுக்காக தான் நான் யூஎஸ் ட்ரைனிங் எல்லாம் போனேன்”

 

“எல்லாமே சக்சஸ் தான் ஆனா ப்ராஜெக்ட் பெயிலியர் ஆகிட்டு. டீம்ல நிறைய சேஞ்சஸ் பண்ண நிறைய பேரை மாத்திட்டாங்க, எனக்கு அந்த வேலையில அதுக்கு பிறகு இருக்க முடியலை. நான் தோத்துட்டேன்னு தோணிச்சு அதான் நானே வேலையை விட்டுட்டேன்”

 

“அந்த நேரத்துல தான் நீ திரும்ப வந்தே. நான் என்ன மிஸ் பண்ணேன்னு எனக்கு அப்போ தான் புரிஞ்சது. உன் கூட இருந்தப்போ எப்பவும் ஒரு பாசிட்டிவிட்டியை நான் பீல் பண்ணியிருக்கேன்”

 

“உன் பாஷையில சொல்லணும்ன்னா லக். நீ என்னோட இருக்கறது எனக்கு அதிர்ஷ்டம். உடனே முறைக்காத, அதுக்காக தான் உன்னை கூப்பிட வந்தேன்னு அது இதுன்னு. அப்படியிருந்தா எப்பவோ நான் உன்னை கூப்பிட வந்திருப்பேன்”

 

“உண்மையாவே உன்னைத் தேடி தான் இங்க வந்தேன். அம்மா எப்பவும் சொல்வாங்க மகாலட்சுமி எப்பவும் வீட்டில இருக்கணும், பொண்ணு இல்லாத வீடு என்ன வீடுன்னு. அவங்க சொல்லும் போது இதெல்லாம் என்ன சென்டிமென்ட் சுத்த பைத்தியக்காரத்தனம்ன்னு தோணியிருக்கு”

 

“ஆனா அவங்க சொன்னது எவ்வளவு நிஜம்ன்னு நான் யூஸ்ல இருந்து திரும்ப வந்த போதே உணர்ந்திட்டேன். ஆம்பிளைங்களை பொறுத்தவரை எப்படி இருப்போம் தெரியுமா”

 

“வேலைன்னு வந்திட்டா ரொம்பவே சின்சியரா இருப்போம். வேலை இல்லாத நேரத்துல திருமணம் ஆன ஆண்களோட எண்ணத்தை அவங்க மனைவி மட்டுமே ஆக்கிரமிப்பு செய்வா. என்னைப்பத்தி சொல்லவே வேணாம். நீ வேற இல்ல வீட்டுக்கு வந்தா மனசு உன்னை ரொம்பவே தேடும். ஐ ரியலி மிஸ் யூ குழலி” என்றவன் அவள் எங்கே தன்னைவிட்டு சென்றுவிடுவாளோ என்பது போல் அவளை தனக்குள் இறுக்கிக் கொண்டான்.

 

“இன்னொரு விஷயம் சொல்றேன் குழலி, இதுவும் நீ என்கூட இருக்கும் போது நான் பீல் பண்ணது தான். நீ என் கூட இருக்க வரைக்கும் எனக்கு தோல்வின்னு ஒண்ணு இருக்கவே இருக்காதுன்னு நான் நம்புறேன்”

 

“தோல்வின்னு ஒண்ணு கண்டிப்பா இருக்குங்க. அது நமக்கு வரவே கூடாதுன்னு எப்படி நினைக்க முடியும்”

 

“நான் தோல்வியே வரக்கூடாதுன்னு சொல்லலை. நீ இருக்கும் போது அது என்னை நெருங்காதுன்னு சொல்றேன்”

 

“அப்படியே ஒரு தோல்வி வந்தா என்னை மறுபடி ஊருக்கு போக சொல்லிடுவீங்களா”

 

“அப்படி ஒண்ணு வந்தா நீ என்னைவிட்டு போயிடுவியா??”

 

“நான் அப்படியில்லை”

 

“நானும் அப்படியில்லை”

 

“உங்களோட கஷ்டத்துலயும் நான் உங்களுக்கு தோள் கொடுப்பேன். உங்களுக்கு ஆதரவா எப்பவும் இருப்பேன்”

 

“தேங்க்ஸ் குழலி” என்று அவன் உணர்ந்து சொல்ல “அடிவாங்க போறீங்க”

 

“எங்கே அடி நீ அடிச்சா எனக்கு வலிக்குதான்னு பார்க்கறேன்”

 

“அடிக்க மாட்டேன்னு தைரியமா” என்றவள் “இப்போ உங்க வேலை??”

 

“முதலாளி மாதிரின்னு வைச்சுக்கோயேன். ரோபோட்டிக்ஸ் கிளாஸ் எடுக்கறேன். ரோபோட்ஸ் செய்யற ஆராய்ச்சியில இறங்கி இருக்கேன். இந்த டைம் நீ வந்தப்போ உன்னைக் கூட்டிட்டு போய் நான் செஞ்ச குட்டி குட்டி ரோபோட்ஸ் எல்லாம் காட்டணும்ன்னு ரொம்பவே ஆசையா இருந்தேன்”

 

“மங்களூர் ட்ரிப் முடிஞ்சதும் கூட்டிட்டு போகலாம்ன்னு காத்திட்டு இருந்தேன். எல்லாம் ஸ்பாயில் ஆகிட்டு, பிகாஸ் ஆப் மீ”

 

“இல்லை என்னால தான் நான் தான் ரம்யா விஷயத்தை வைச்சு சண்டை போட்டேன்”

 

“தட்ஸ் மை மிஸ்டேக் நான் முன்னாடியே உன்கிட்ட சொல்லியிருக்கணும் தானே”

 

“முன்னாடி நீங்க எப்படியிருந்தா எனக்கென்ன. இப்போ நீங்க எப்படியிருக்கீங்கன்னு தானே நான் பார்த்திருக்கணும். எல்லாம் என் தப்பு தான், உங்களுக்கு இப்போ என்னை பிடிச்சிருக்குன்னு தெரிஞ்ச பிறகும் என்னால நீங்க சொல்ல வர்றதை புரிஞ்சுக்க முடியாம கோபத்துல கிளம்பிட்டேன். அது என் தப்பு தான், ஆரம்பத்துல இருந்தே நான் உங்களுக்கு நல்லவிதமா தெரியலை”

 

“அப்படியில்லை குழலி என்னோட பார்வை தானே தப்பு”

 

“இல்லை என் மேலயும் தப்பியிருக்கு. உங்களுக்கு என்னை இம்ப்ரெஸ் பண்ணத் தெரியலைன்னு சொன்னேனே எனக்கு மட்டும் உங்களை இம்ப்ரெஸ் பண்ணவா தெரிஞ்சுது”

 

“குழலி உண்மையை சொல்லவா”

 

“என்ன உண்மை ரம்யா மாதிரி சௌம்யா, திவ்யான்னு எவளாச்சும் இருக்காளா??” என்றாள் பொய்யான முறைப்போடு.

 

“ஹா ஹா அதெல்லாம் இல்லை. நீ என்னை ரொம்ப இம்ப்ரெஸ் பண்ணிட்டே தெரியுமா. அதைத்தான் சொல்ல வந்தேன். லாஸ்ட் டைம் நாம இங்க இருந்து பெங்களூர் போன ட்ரிப் ஞாபகம் இருக்கா”

 

“சீரியஸ்லி அந்த ட்ரிப் நான் அவ்வளவு என்ஜாய் பண்ணேன். எத்தனையோ முறை ஊர்ல இருந்து இங்க வந்திருக்கேன், முதல் முதல்ல உன்னோட பெங்களூர் போனப்போ கூட அந்த அனுபவம் எனக்கு கிடைக்கலை”

 

“பட் லாஸ்ட் டைம் போன ட்ரிப் என்னால மறக்கவே முடியாது. நீ பேசினப்போ தான் நான் எப்படி இருந்தேன்னு தெரிஞ்சுக்கிட்டேன். நீ சொன்னது எல்லாம் சரி தானே, உன்கிட்ட நான் சரியா பேசலை, உன் பேச்சை கேட்கலைன்னு ரொம்பவே வருத்தப்பட்டேன் அப்போ”

 

“அப்போவே நான் இம்ப்ரெஸ் ஆகிட்டேன், தொபுக்கடீர்ன்னு விழுந்துட்டேன் உன்கிட்ட,  அது வரைக்கும் நீ என் மனைவி அப்படிங்கறது என்னோட மைன்ட்ல மட்டும் தான் இருந்துச்சு. அதுக்கு அப்புறம் அது என் மனசுல ரொம்பவே ஆழ பதிஞ்சு போச்சு”

 

“உன்னோட சின்ன சின்ன எதிர்பார்ப்புகளை நான் பூர்த்தி செய்யணும்ன்னு ஆசைப்பட்டேன். மங்களூர் ட்ரிப் முழுக்க என்னோட பிளான் தான். உன்னை கூட்டிட்டு போகலாம்ன்னா என் கூட நீ வருவியோ மாட்டியோன்னு தான் ஆத்விக்வை இங்க வர வைச்சு அப்படியே ட்ரிப் பிளான் மாதிரி செட் பண்ணேன்”

 

“என்னது எல்லாம் உங்க பிளானா அப்போ நமக்கு தனியா குடில் எல்லாம் உங்க பிளான் தானா”

 

“ஏன்டி லூசு கல்யாணம் பண்ணிட்டு எவனாச்சும் பேமிலியோட ஒண்ணா ரூம்ல தங்குவானா. அந்த ட்ரிப்பை நம்ம ஹனிமூன் ட்ரிப்பா மாத்த ட்ரை பண்ணேன். எங்க அதுக்குள்ள ரம்யா வந்து எல்லாம் சொதப்பிட்டா”

 

“ஆனா குழலி சும்மா சொல்லக்கூடாது உன்னோட ரசனையே தனி அழகு தெரியுமா. உன்னோட சேர்ந்து லைப் முழுக்க என்னோட டிராவல் ரொம்பவே அழகா இருக்கும்ன்னு நீ ஒவ்வொரு நிமிஷமும் என்னை நினைக்க வைச்சுட்ட, வைச்சுட்டே இருக்கே” என்று அவன் அவளை ரசனையாய் பார்த்து சொல்லவும் வெட்கமாக இருந்தது அவளுக்கு.

 

“குழலி” என்றவன் அவளை நெருங்க அவள் தள்ளிச் சென்றாள்.

 

“இன்னும் என்ன”

 

“லைட் ஆப் பண்ணலையே”

 

“பண்ணிட்டா போச்சு” என்றவன் விளக்கணைத்து வந்து அவளை அணைத்துக் கொண்டான்.

 

அதன் பின் வந்த நாட்கள் யாவும் இந்திரஜித் மற்றும் குழலியின் வாழ்க்கையை அழகாகவே மாற்றுவதற்காக வந்ததை போன்று நகர்ந்தது. இந்தர் முழுவதுமாக குழலியிடம் தன்னை ஒப்படைக்கவும் செய்தான் அவளை ஆட்கொள்ளவும் செய்தான்.

 

குழலி குழலி குழலி என்ற பெயர் தான் அவனுடைய இதய துடிப்பின் ஓசையாகவே மாறிப்போனது. குழலியின் மனதிலும் மதியிலும் இந்தர் நீக்கமற நிறைந்துவிட்டிருந்தான். அவனுக்காக அவள் ஒவ்வொன்றையும் செய்தாள் என்று சொல்வதைவிட யோசித்தாள் என்றே சொல்ல வேண்டும்.

 

இந்த மாற்றம் காதலினால் மட்டும் வந்த மாற்றம் அல்ல!! காதல் எதையும் வண்ணமையமாக்கும் அற்புத சக்தி கொண்ட ஆற்றல் தான். ஆனால் காதல் மட்டுமே மகிழ்வான வாழ்வை உருவாக்கிடாது. காதலோடு சேர்த்து புரிதலும் வாழ்க்கையில் இன்றியமையாததாகும். காதல் வாழ்க்கை பயணத்தில் சமநிலை வழியும் உண்டு, பள்ளம் மேடுகளும் உண்டு!!

 

இந்தர் குழலியின் வாழ்விலும் பள்ளம் மேடுகள் வந்தன… இனியும் வரலாம். காதல் என்ற ஒன்றினால் மட்டும் வாழ்வில் வரும் இன்ப துன்பங்களை எதிர்கொள்ள இயலாது. அன்போடு சேர்ந்த புரிதலால் மட்டுமே வாழ்க்கையை இரம்யமாகவும் இரசனையாகவும் மாற்ற இயலும்.

 

இந்தர் குழலியின் வாழ்க்கையில் காதலும் இருந்தது…. புரிதலும் இருந்தது…

இனி அவனுக்குள் குழலில் சண்டைக்காரி என்ற எண்ணமோ, அவளுக்குள் இந்தரின் முதல் காதல் ரம்யா என்ற எண்ணமோ எப்போதும் எழாது!

 

இந்தரின் இல்லத்தை ஆட்சி செய்ய வந்த கோமகள் குழலி அவன் மனதையும் ஆட்சி செய்தாள். புரிதலுடனும் திகட்ட திகட்ட காதலுடனும் அவர்கள் வாழ்வு அழகாக நகர தொடங்கியது.

 

சுபம்

Advertisement