Advertisement

    “பாட்டி ஊருக்கு வந்தா மட்டும் தலைவருக்கு பிள்ளை மறந்துரும், எல்லாம் மறந்துரும்”, என்று சொன்னாள்.

   “பின்ன இங்க இந்த ரூமுக்கு வந்தா, முதல் முதல்ல வேகமா வந்தியே., வந்து ஜங்குன்னு கட்டிலில் உக்காந்துட்டு,  அதிகாரமா பேசுனியே அதுதான் ஞாபகம் வருது., அது மட்டுமா அழுத்தமா ஒரு ஹக் பண்ணிட்டு சொன்னியே., இங்க நான் மட்டும் தான்.,  துளசி ன்ற பேர்ல வேற யாரையாவது பார்த்தீங்க இருக்கு, அப்படின்னு மிரட்டிட்டு போனீயே, அதுதான் ஞாபகம் வருது”, என்று சொன்னான்.

    அவன் மேல் தலகாணியை தூக்கி அவள் வீசினாள்.

    அவனோ “பாப்பா அங்க கதை கேட்டு இருக்கா,  நான் இங்க கதை படிக்க வந்தேன் , படிக்கட்டுமா”, என்று கேட்டான்.

    “ஒன்னும் வேண்டாம்” என்று சொன்னாள்.

   அவனும் “ஆறு கேட்டேம்மா. நம்ம ஒன்னு தானே ரெடி பண்ணி இருக்கோம்”, என்று சொன்னான்.

    “அதெல்லாம் முடியாது”, என்று சொன்னாள்.

ஆனால் அவளை பேசி பேசியே தன் வசமாகிக்கொள்ள தெரிந்த கிருஷ்ணாவிற்கு., அவளை கைக்குள் அடக்கிக் கொள்ளவும் தெரிந்திருந்தது.,

  அடுத்த வருடம் குழந்தைக்கு ஐந்தாவது பிறந்த நாள் கொண்டாட தயார் செய்யும் போதே,  துளசிக்கு இரண்டாவது பேபிக்கு வளைகாப்பும் செய்ய ஏற்பாடு செய்து இருந்தனர்.

   பகலில் வளைகாப்பும், மாலை நேரத்தில் குழந்தையின் ஐந்தாவது பிறந்த நாளும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.,

    இப்போது அவள் அம்மா துளசியிடம் பேசிக் கொண்டிருந்தாலும்.,  அவளோ பிடி கொடுத்து பேச மாட்டாள்.

     ‘யாரோ என்பது போல, என்னவென்றால் என்னவென்று பதில் சொல்லிவிட்டு நகர்ந்து விடுவாள்’, அப்பாவிடம் சுத்தமாக பேச்சு கிடையாது.

    ஆனால் அதற்கெல்லாம் சேர்த்து வைத்து துளசியின் மகள் ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கிறாள்.

     துளசியின் அப்பாவை.,  துளசியின் மகள் தோப்புக்கரணம் போடு என்றாள், முத்தரசு போட்டே விடுவார்.

    அந்த அளவுக்கு பேத்தியின் பேச்சுக்கு மயங்கி போய் இருந்தார். இது வீட்டில் உள்ள அனைவருக்கும் தெரிந்தாலும், யாரும் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை.

     வளைகாப்புக்கு வந்திருக்கும் போது லதா நழுங்கு வைத்து வளையல் போட., அவரும் அருகில் இருந்து அட்சயத்தை தூவி மட்டும் வாழ்த்தினார்.

   ஏனென்றால் அவளுக்கு கோபம் வரும் என்பது அவருக்கும் தெரியும்.

   வளைகாப்பு முடிந்த அன்று மாலை நேரம் பாப்பாவின் பிறந்தநாளோடு அவன் அருகில் சேர்ந்து நின்றவள்,

   அவன் காதோடு “ஆறு பேபி” என்று சொல்லி அவனை கலாய்க்க.,  அவனும் அவளை பார்த்து சிரித்தபடி, அவள் கண்ணை பார்த்து பேசிக் கொண்டிருந்தான்.

   தூரத்திலிருந்து பார்ப்பவர்களுக்கு அத்தனை மகிழ்வாக இருந்தது. லதா தான் முத்தரசுவிடம், “என் பிள்ளை இப்படி சந்தோஷமா இருக்க வேண்டியவளை டென்ஷன் ஆக்கினதுனால தான் இப்ப உங்ககிட்டயும் பேசாம இருக்கா.,  அவ சந்தோஷத்த தூரத்தில் இருந்து பார்க்க மட்டும் தான் நமக்கு கொடுத்து வச்சிருக்கு”, என்று சொல்லி முத்தரசு விடம் கோபத்தை காட்டினார்.

   அவரோ “ஏமா சந்தோஷமான நேரத்துல, ஏன் இவ்வளவு டென்ஷன்” என்று சொன்னார்.

   “அவதான் சொத்து வாங்க மாட்டேங்குறா, என்ன பண்ண., பாருங்க எவ்ளோ கஷ்டப்பட்டு ஒத்த பிள்ளைக்கு, ஒத்த பிள்ளைக்கு ன்னு சம்பாதிச்சு என்ன பண்ண”, என்று கேட்டார்.

      “பொறுமா, இந்த டெலிவரி முடியட்டும், அப்புறம் சொத்து எல்லாம் பேரன் பேத்தி பேருக்கு எழுதி வைத்துவிடலாம்”, என்று சொன்னார்.

   அருகில் இருந்த நவீன், “நீங்க என்ன இப்படி சொல்லிட்டீங்க”, என்றான்.

   “ஏன்டா” என்றார்.

    இப்போ வயித்துல டூவின் பேபி, சரியா அப்போ கணக்கு க்கு மூணு தானே ஆகியிருக்கு.,  அவ டார்கெட் படி இன்னும் மூணு பேலன்ஸ் இருக்கே”, என்று சொன்னான்.

   முத்தரசோ அடக்க மாட்டாமல் சிரித்து விட்டு., லதாவை பார்த்தார்.

    லதாவும் “எழுதி வைங்க எல்லா டெலிவரி முடிஞ்சதுக்கு அப்புறம் எழுதி வைங்க”, என்று சொல்லிக் கொண்டிருந்தார்.

   வீட்டினர் தான், “இவ எப்போ  சரியாகுவா” என்று நினைத்து கொண்டு இருந்தனர்.

    “இப்பதானே அவங்க அம்மா கிட்ட லேஸா பேச ஆரம்பிச்சிருக்கா, இன்னும் கொஞ்ச நாள் ஆகும், அப்பா மேல இருக்க கோபம் போக” என்று சொல்லிக் கொண்டு இருந்தனர்.

   கிருஷ்ணா தான், அவளிடம் “நீ பேசினா தான் என்ன”, என்று கேட்டான்.

    “உங்களுக்கு வேணா கோபம் எல்லாம் போயிருக்குமா இருக்கும்., எனக்கு கோவம் அப்படியே தான் இருக்கு., எனக்கு இஷ்டம் இல்லாத ஒரு விஷயத்தை எவ்வளோ போர்ஸ் பண்ணி செய்ய ட்ரை பண்ணாங்க தெரியுமா?,

      அப்போ நான் அந்த இடத்துல எவ்வளவு கஷ்டப்பட்டு இருக்கேன்., ஒவ்வொரு நாளும் எவ்வளவு பயந்து இருக்கேன் தெரியுமா., அதனால  அவ்வளவு சீக்கிரத்தில் அந்த கோபம் எல்லாம் போகாது., அது சரியாக நாளாகும்”, என்று சொல்லி அவன் வாயை அடைத்து விடுவாள்.

    மறுநாள் கிருஷ்ணாவின் வீட்டில் அனைவரும் அமர்ந்திருந்தனர்.

    துளசியும் அனைவரும் பேசுவதை கேட்டபடி அமைதியாக அமர்ந்திருந்தாள்.

    குழந்தை பள்ளி விட்டு வந்திருக்க., அவளுக்கான ஹோம் ஒர்க் செய்து கொண்டிருக்கும் போதே அவளின் பாடங்களை கவனித்துக் கொண்டிருந்தவள்,

    அவளுடைய பிசினஸ் கணக்கு வழக்குகளையும் பார்த்துக் கொண்டிருந்தாள்.

   அப்போது அகிலா தான், “அண்ணி” என்று அழைத்தாள்.

    “சொல்லுங்க அண்ணி”, என்றாள் இவள் கிண்டலாக.,

    துளசியை அண்ணி என்று அழைக்கக்கூடாது என்று சொல்லி இருந்தாலும் துளசியை அண்ணி என்று அழைப்பதை தான் வழக்கமாக வைத்திருந்தாள் அகிலா.,

      வேண்டுமென்றே இவளும் அவளை நக்கலாக அழைக்க தொடங்கி  இருந்தாலும் “உங்களுக்கு சேட்ட ஜாஸ்தி தெரியுமா” என்று சொன்னாள்.,

    “என்ன” என்று கேட்டாள்.

   “இல்ல இரண்டாவது பேபிக்கே நான் திணறி போனேன்., நீங்க வேற நேத்து சொல்றீங்க., அத்தனை பேபிக்கும் போடனும்  ன்னு போடுவீங்களான்னு கேக்குறீங்க” என்று கேட்டாள்.

    “ஆமா எத்தனை பேபி பொறந்தாலும், அத்தனை பேபிக்கும் வளைகாப்பு பண்ணனும் இல்ல”, என்று சொன்னாள்.

      “கிருஷ்ணாவோ நீ பெத்துக்கணும்னு, நீயே  முடிவு பண்ணனா எப்படி., நான் வரல இந்த விளையாட்டுக்கு” என்று அவள் அருகில் வந்து காதில் சொன்னான்.

   அவனை கையில் அடித்தவள், ‘பிச்சு பிச்சு’ என்று சொன்னாள்.

      “இங்க பாருங்க பாவா விளையாடாதீங்க., என்னோட டார்கெட் 6., நீங்க முடியாது வேண்டாம் ன்னு சொன்னீங்கன்னா., நான் ஆறை  12 ஆக்கிருவேன்., எப்படி வசதின்னு யோசிச்சுக்கோங்க”, என்று சொன்னாள்.

  அவனும் “போதுமா போதும், ஏற்கனவே இப்ப ட்வின்ஸ் ன்னு டாக்டர் சொல்லி இருக்காங்க., இந்த காலத்துல மூன்று பிள்ளை வளக்குறது எல்லாம் பெரிய விஷயம் சரியா., ஏற்கனவே பாப்பா இருக்கா., இப்ப இரண்டு பேர் வரப் போறாங்க., நீ யோசிச்சு பாரேன் ஏழு மாதத்திலேயே உன் வயிறு இவ்வளவு பெருசு இருக்கு., இன்னும் ரெண்டு மாசம் உன்னை எப்படி தாங்கி தடுக்கி கொண்டு போக போறோம் ன்னு, எங்களுக்கு தெரியல.,

    இதுல இன்னும் மூனா நோ நோ நோ நோ” என்று சொன்னான்.

   அவளோ “எஸ் எஸ் எஸ்” என்று சொல்லிக் கொண்டிருந்தாள்.

வீட்டில் அனைவரும் சிரித்த வண்ணம் பார்த்து இருக்க.,

    நவீன் தான், “அப்புறம் நாங்க எல்லாம் என்ன பண்றது” என்று கேட்டான்.

    “டேய் உனக்கு இன்னும் வயசு இருக்குடா”, என்று சொன்னாள்.

   “எம்மா தாயே எனக்கும் வயசாயிட்டுமா, இப்பவும் பொண்ணு பாக்குறீங்க இல்ல., அப்புறம் எதுக்கு பாக்குறீங்க”, என்றான்.

    “அதுக்கென்ன பார்க்கலாம், நான் பெத்து பெத்து தரேன், நீ வளர்த்துக்கிட்டே இரு”, என்று சொன்னாள்.

   “அடிப்பாவி” என்றான்.

     வீட்டினர் சிரிப்போடு அமர்ந்திருந்தனர். ‘நவீனுக்கு நல்ல பெண் அமைய வேண்டும்’, என்ற எண்ணமும் ‘குடும்பத்தை பிரிக்காத, குடும்பத்தில் ஒற்றுமையை நிலைநாட்டும் வண்ணம் ஒரு பெண் வேண்டும்’, என்பதே அவர்கள் வேண்டுதலாக இருந்தது.

  அவனுக்கு நல்ல பெண் கிடைக்க வேண்டும் என்ற எண்ணம் அனைவரிடமும் முக்கிய தேடலாக இருந்தது.

   இந்த சந்தோஷ குடும்பம் இப்படியே இருக்க வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருந்தனர்.

அப்போது தான் பாட்டி, “ஏற்கனவே நேற்று லதா சொல்லிட்டு போனா., சுத்தி போடுங்கன்னு, நான் தான் மறந்துட்டேன், இருந்த வேலை ல”, என்றார்.

   கிருஷ்ணாவின் அம்மாவோ “இல்லத்த சூடம் தடவி வச்சேனே”, என்று சொன்னார்.

    “சூடம் தடவுனாலும், பத்தாது வத்தல் தடவி போடணும் பொறு, நான் எடுத்துட்டு வரேன்., எல்லாத்துக்கும் சேர்த்து தடவிருவோம்”,. என்று சொல்லிவிட்டு சென்றார்.

   ஆமாம் இவ்வளவு அழகான குடும்பத்தை யாரும் கண்ணு வைக்காமல் இருக்க வேண்டும் என்பதை இப்போது பெரியவர்களின் வேண்டுதலாக இருந்தது.

எல்லோரும் இன்புற்று இருக்க,இதே சந்தோஷத்துடன் வாழ இறைவனை பிரார்த்திப்போம்.

  நீங்களும் கண்ணு வைக்காதீங்க., எல்லாரும் நல்லா இருக்கணும்னு நினைங்க , நாமளும் நல்லா இருப்போம்.

        என்றும் அன்புடன்
ஆதி பிரபா.,

Advertisement