Advertisement
17
லண்டனில் வந்து இறங்கியவுடன் நண்பர்கள் வந்து அழைத்துக் கொண்டனர்.
இங்கிருந்து ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக அழைத்து பேசி வைத்தாள்,
வந்து சேர்ந்ததை தெரியப்படுத்திவிட்டாள், ஆனால் கிருஷ்ணாவிடம் மட்டும் அவளால் பேச முடியவில்லை.,
நவீனிடம் “உங்க அண்ணா கிட்ட சொல்லிரு, உங்க அண்ணாவுக்கு போன் பண்ணாலும் எடுக்க மாட்டாருன்னு தெரியும், இருந்தா போன் குடுக்குறியா”, என்று கேட்டாள்.
அவனும் கிருஷ்ணவை பார்த்து போனை காட்டி கேட்டான். அவன் வேண்டாம் என்று தலையசைத்தவுடன்,
“அண்ணா வீட்டில் இல்ல” என்று சொன்னான்.
“டேய் தெரியும்டா, உங்க அண்ணன் பக்கத்துல தான் இருப்பார் ன்னு தெரியும்., ஆனால் போன வாங்க மாட்டேன்னு சொல்லி இருப்பாரு அதுதானே”, என்று சொன்னாள்.
அதே நேரம் ஸ்பீக்கரில் போட்டிருக்க., வீட்டில் அனைவருமே கேட்டுக் கொண்டு தான் இருந்தனர்.
கலை தான் கிருஷ்ணாவின் அம்மாவிடம், “இவன் என்ன பண்ணுவான் ன்னு அவளுக்கு நல்லா தெரிஞ்சிருக்கு தெரிஞ்சும் கேக்கா பார்த்தீங்களா”, என்று சொன்னார்.
“நீ பேசாம இரு கலை, அவன் வேற அப்பப்போ நம்மையும் திரும்பி பார்த்துக்கிறான்”, என்று சொன்னார்.
இவர்களோ கண்டுகொள்ளாத படி நகர்ந்து செல்ல., இவளோ “சரி உங்க அண்ணன் கிட்ட சொல்லிரு., நான் கூடிய சீக்கிரம் பேசுறேன்”, என்று சொல்லி ஃபோனை வைத்தாள்.
அத்தனை பேரிடமும் பேசியது மனதிற்கு நிம்மதியாக இருந்தது, நண்பர்களோடு தான் தங்கி இருந்தாள்.
இவளுக்காக தங்கள் கல்லூரியில் படித்த தோழி ஒருத்தி வெளியே வேலை பார்ப்பதற்காக வீடு எடுத்து தங்கி இருந்தாள்.
அந்த வீட்டில் இவளும், இவளுடைய மற்றொரு தோழியும், அவளிடம் அனுமதி வாங்கி வேலை முடியும் வரை தங்கிக் கொள்வதாக கேட்டிருந்தனர்.
அதற்கு அந்த பெண்ணும் சம்மதித்திருந்தாள். இவளோடு தங்க வந்திருந்த தோழி தன் பெற்றவர்களிடம் விஷயத்தை சொல்லி இருந்தாள்.
அவர்களும் இந்தியாவில் வட மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பதால்., சரி என்று இவளை அனுப்பி வைத்திருந்தனர்.
துளசி வந்து இரண்டு நாட்களுக்குப் பிறகு தான் துளசியின் அப்பாவிற்கு விஷயம் தெரிந்தது.
“விசா முடியதுக்கு இன்னும் 15 நாள் இருக்கும் போதே வந்துட்டாளே” என்று துளசியின் அம்மாவிடம் கேட்டார்.
“அதை எதுக்கு என்கிட்ட கேட்கறீங்க, போய் அவ கிட்ட கேளுங்க”, என்றார்.
அவரும் இப்போது சற்று கோபமாக தான் பேசுவது போல இருந்தது. “ஒத்த புள்ள வச்சிருக்கோம், உங்க இஷ்டத்துக்கு தான் எல்லாமே நடந்துச்சு சரி., இப்பதான் அவ வேண்டாங்கிற இல்ல விட வேண்டியது தானே., அவ இஷ்டத்துக்கு விட்டிருந்தீங்கன்னா, இந்த பிரச்சினையே வந்து இருக்காது.
உங்க இஷ்டத்துக்கு கட்டாயப்படுத்தி கல்யாணம் அது இதுன்னு போய் தான்., அவ இஷ்டத்துக்கு போயிட்டா, இப்போ எல்லா விஷயமும் அவளுக்கு தெரிஞ்சிருக்கும்., என்ன பண்ண போறீங்க., 15 நாளைக்கு முன்னாடி வந்து இருக்கானா, வேற ஏதோ காரியமா தான் வந்து இருப்பா, சும்மா நீங்க பழையபடி உங்க கெடுபிடி ஆரம்பிக்காதீங்க.,வளர்ந்த பிள்ளை, இங்க எல்லாம் 18 வயதிலேயே பிள்ளைகள் தனியா போயிருது, ஏன் கல்யாணமே பண்ணிட்டு போயிருது., ஆனா நம்ம புள்ள நம்ம பேச்ச கேட்டு நல்லபடியா இருந்துச்சு., எந்த குறையும் சொல்ல முடியாது.,
இந்தியாவுல இருந்திருந்தால் நீங்க வளர்த்த கெடுபிடிக்கு., அவ பயந்து போய் இருந்தாலும் இருந்திருக்கலாம்., இங்க வளர போய் அவளுக்குன்னு சில பிரீடம் அவ கத்துக்கிட்டா., நீங்க மறுபடியும் கெடுபிடி வெச்சீங்கன்னா அவ வேற மாதிரி முடிவு எடுத்திட கூடாது., அதனால யோசிச்சு செய்யுங்க., எதையும் அவசரப்பட்டு செய்யாதீங்க”, என்று சொல்லிக் கொண்டிருந்தார்.
இவரோ “நீ உன் வேலையை பாரு, எனக்கு தெரியும் அவளை எப்படி கொண்டு வரணும்னு, இரு இந்த பிரச்சினை முடித்து அவளை வீட்டுக்கு கூட்டிட்டு வரனா இல்லையான்னு பாரு”, என்று சொன்னார்.
“நீங்க தான் ஏதோ தப்பா பண்றீங்கன்னு, எனக்கு தோணுது யோசிச்சி செய்யுங்க”, என்று சொல்லி லதா தன் கணவரை சத்தம் போட்டுக் கொண்டிருந்தார்.
வந்த அலுப்பு தீர ரெண்டு நாள் ஓய்வெடுத்தவள்., மூன்றாம் நாளில் இருந்து தனது வீசா விஷயமாகவும் இங்கிருக்கும் தன்னுடைய சிட்டிசன்ஷிப்பை கேன்சல் செய்வது விஷயமாகவும் அதற்கான அலுவலகங்களில் சென்று பார்த்து நிலவரங்களை அறிய தொடங்கினாள்.
அவளுக்கான சர்டிபிகேட் ஆக, இவளுடைய பர்த் சர்டிபிகேட்டிலிருந்து, பழைய இவள் அங்கு இருக்கும் போது இருந்த பழைய ரேஷன் கார்டு வரை வாங்கி வைத்திருத்தாள்.
அதை வைத்து இவள் இந்தியன் என்பதற்கான ஆதாரங்களையும், மீண்டும் இந்தியாவிற்கு செல்ல விருப்பம் இருப்பதையும் தெரிவித்தாள்,
“நீங்க அங்க வேலைக்காக போறீங்களா”, என்று கேட்டார்.
தனக்கு அங்கு திருமணமாகி விட்டதை ரெஜிஸ்டர் சர்டிபிகேட் காட்டினாள். நண்பர்களும் ஆமாம் என்றனர்.
இவள் அவனோடு சேர்ந்து எடுத்த புகைப்படங்களை அங்கு எடுத்து வைத்தாள், குடும்பத்தோடு எடுத்தது அவளும் அவனும் நின்று பேசும் போது அவள் அகிலாவின் கணவரை வைத்து எடுத்தது., என சில போட்டோக்களை வைக்க.,
அவர்களோ “ஓகே நாங்க வீசா எக்ஸ்டெண்ட் பண்றோம், ஆனா அங்க இருந்து எங்களுக்கு ப்ராப்பர் மெயில் வரணும்., உங்க ஹஸ்பண்டை ஒரு ரெக்வஸ்ட் மெயில் மட்டும் அனுப்ப சொல்லுங்க”, என்று சொன்னார்.
இவளும் “சரி” என்றாள்.
பின்பு இதற்கான அலைச்சலில் கிட்டத்தட்ட இந்த நடைமுறைகள் எல்லாம் அவள் செய்து முடிக்க அவளுக்கு ஏழு எட்டு நாட்கள் ஆகியது.
அவளுடைய சிட்டிசன்ஷிப்பை கேன்சல் செய்யக்கூடாது என்று, அவள் தந்தை இங்கு வந்து அவர் ஒரு ரெக்வர்ஸ்ட் மனு கொடுத்தார்.
அவளுக்கு திருமணம் ஆனதை அப்போதுதான் அங்குள்ள அலுவலக அதிகாரிகள் தெரியப்படுத்தினர். “உங்க பொண்ணுக்கு அங்கே மேரேஜ் ஆகிவிட்டது. நாங்க என்ன செய்ய முடியும்., பொதுவா இங்கே இருக்கிறவங்களுக்கு நாங்க 18 வயசுக்கு மேல அவங்களோட விருப்பப்படி இருக்க தான் அனுமதி கொடுக்கிறோம்., அப்படி இருக்கும் போது அந்த பொண்ணு அவங்களோட மேரேஜ் காட்டி நான் இந்தியா போறேன்னு சொல்லுறாங்க, சோ நாங்க விசா எக்ஸ்டெண்ட் கொடுக்க தான் செய்வோம்., அவங்க இந்தியா போய் அங்க இவங்களோட மேரேஜ் சர்டிபிகேட் வச்சு இவங்க அங்க உள்ள ஐடி கார்டு வாங்கி அங்க சிட்டிசன்ஷிப்பை மறுபடி வாங்குனதுக்கு பிறகு, இங்க அவங்களோட சிட்டிசன்ஷிப் கேன்சல் ஆகும்”, என்று சொன்னார்.
“இல்லையே பொய் சொல்றா, அவளுக்கு கல்யாணமாகி இருக்காது”, என்று அவள் தந்தை சொன்னார்.
“இல்லைங்க ஆயிருச்சு” என்று சொன்னவர், அதற்கு மேல் எந்த தகவலும் கொடுக்கவில்லை.,
கிட்டத்தட்ட இந்த அலைச்சலில் சோர்ந்து போயிருந்தாள்.,
வந்து பத்து நாளாகி இருக்க., முதல் மூன்று நாள் ரெஸ்ட் எடுத்தவள் பின்பு ஒரு வாரமாக இந்த வேலையில் தான் இருந்தாள்.
தற்செயலாக ஒரு பொதுவான இடத்தில் துளசியை பார்த்த அவள் பெற்றவர்கள் கேள்வி கேட்டனர், முத்தரசு கொஞ்சம் வார்த்தை விட, இவளோ அத்தனை நாள் கோபத்தையும் சேர்த்து வைத்து பேசித் தீர்த்து விட்டே அவ்விடத்தில் இருந்து கிளம்பினாள்.
துளசிக்கு இவ்வளவு பேச தெரியும் என்று அன்று தான் அவர்களுக்கு தெரிந்தது.
அறைக்கு வந்த பிறகு, இப்போது ‘அவளுடைய கணவனின் ரெக்வர்ஸ்ட் லெட்டர் கேட்டிருந்தார்கள். அவனிடம் எப்படி சொல்வது என்று யோசித்துக் கொண்டிருக்கும் போதே’, அலுவலக அதிகாரி சொன்னது நினைவு வந்தது.