Advertisement

மழை -6

 

வர்ஷி பாடி முடித்த மறு நொடி அரங்கமே கரவொலியால் அதிர்ந்தது..

அதில் சுதாரித்து வர்ஷியும் சத்யாவும் பார்வையை விலக்கினார்கள்..

வர்ஷி மேடையை விட்டு கீழ இறங்கியதும்..!! அவளிடம் சொல்லிவிட்டு தீபி அரங்கத்தை விட்டு வெளிய சென்றாள்..

பிங்க் நிற பட்டு புடவையில் வெள்ளை நிற கற்கள் பதித்து இருந்தது,அதற்க்கு தோதாக கழுத்தில் வெள்ளை கற்கள் வைத்த நெக்ல்ஸ், காதில் வெள்ளை கற்கள் பதித்த தொங்கட்டான்…

கைகளில் பிங்க் மற்றும் வெள்ளை கற்கள் பதித்த வளையல்கள் நெற்றியில் வெள்ளை நிற கல்பொட்டு… குட்டையான கூந்தலை பின்னலிட்டு அதில் பிங்க் மற்றும் வெள்ளை நிற ரோஜா வைத்து கொண்டு அழகு தேவதையாக வந்தவளை தூரத்தில் இருந்த இரு விழிகள் அங்குலம் அங்குலமாக ரசித்தது ..

அவள் அருகில் வர …விழிகளுக்கு சொந்தக்காரன் பின்னால் இருந்து அவள் வாயை பொத்தி இழுத்து அருகில் இருந்த மரத்தின் மேல் அவளை சரித்து தானும் அவள் மேல் சரிந்து அவள் இதழில் தன் இதழை கொண்டு சுவைக்க ஆரம்பித்தான் ….

அவன் வாயை பொத்தியதுமே தன்னவனின் ஸ்பரிசத்தை உணர்ந்து கொண்ட தீபி அவன் இழுத்த இழுப்புக்கு வந்தாள்..

பெண்ணவள் அவன் முத்தத்தில் உருகி கரைந்து கொண்டிருந்தாள்,அதை உணர்ந்து கொண்டவனோ மேலும் மேலும்

அவள் இதழனும்…

பூவில்தேனைஉறிஞ்சிக்கொண்டிருந்தான்.அந்த கள்ளனின் கைகள் கன்னியவள் அங்கங்களை பரிசோதனை செய்ய ஆரம்பிக்க அதில் உணர்வுக்கு வந்தவள் ..

அவனது கைகளை தட்டி விட்டு சுவாசிக்க மூச்சு வாங்க தன்னை அவனிடம் இருந்து விடுவித்துக் கொண்டாள்..

அதற்குள் அவனும் சகஜநிலைக்கு திரும்பியவன் அவளை கண்டு மயக்கும் புன்னைகை ஒன்றை சிந்தினான்..

அவன் புன்னகையை சிந்தியதும் அவனை கண் எடுக்காமல் பார்த்துக்கொண்டிருந்தாள் தீபி்..

கருப்பு ஜீன்ஸ் மஞ்சள் நிற காட்டன் சட்டை அணிந்து 6’அடி உடைத்த கோதுமை நிறம் ஓட்ட வெட்டிய தலை முடி,ஆளை துளைக்கும் கண்கள் கற்றை மீசை என அட்டகாசமாக இருந்தான்.

அவள் பார்வை விலக்காமல் இருப்பதை பார்த்து அவனும் அவளை இமைக்காமல் பார்த்தான்…

கண்ணினை கண் உண்ணும் பார்வை…

 

அவன் பார்வை தாங்க முடியாமல் தீபி அவன் நெஞ்சினில் சாய அவன் கைகள் அவளை இறுக்கி கொண்டது..

இருவரும் நான்கு வருடங்களாக நேசிக்கின்றனர்..

அவனது பணி சுமை மற்றும் இவளது படிப்பின் காரணமாக இரண்டு மாதத்துக்கு ஒரு முறை மட்டுமே சந்தித்துக்கொள்வர்..

இம்முறை அவர்கள் சந்தித்து மூன்று மாதங்கள் ஆகிவிட்டது.எதிர்பாராமல் நேர்ந்த சந்திப்பால் தீபி இன்பமான மனநிலையில் இருந்தாள்..

///காதலர்கள் என்றால் தினமும் சந்திக்க வேண்டும் மணிகணக்காக போனில் பேச வேண்டும் என்று இல்லை..ஒருவரையொருவர் புரிந்துக்கொண்டுதன் காதலன்/காதலி மேல் முழு நம்பிக்கை வைத்து காத்திருப்பதும் காதல் தான்..உண்மை காதல் இருக்குமிடத்தில் ஈகோபொறாமை போட்டி இருக்காது அன்பு பாசம் மட்டுமே இருக்கும்..தன் இணையின் சொந்தங்களை தன் சொந்தங்களாக பாக்கும் மனம் இருக்கும் ..பெண்கள் காதல் உன்னதமானது என்றால் ஆண்கள் காதலும் உயர்வானது///

 

இருவரும் எவளோ நேரம் மோன நிலையில் இருந்தார்களோ தீபியின் மொபைல் சத்தம் எழுப்பியதும் விழிப்புக்கு வந்தார்கள்..

 

மொபைல் எடுத்து ..

ஹலோ?…. என்றாள்..

 

என்னது ஹலோவா யாருனு நம்பர் கூட தெரியாம பேசற ..இதோ வரேன் போன, இன்னும் காணும்னு போன் செஞ்சா இவ ஹலோ ஹலோ சுகமானு பாட்டு பாடிட்டு இருக்கா..எங்கடி இருக்க? நீ ஹால்ல இருந்து வெளிய வந்து அரைமணி நேரம் ஆச்சு இன்னும் என்ன பண்ற?

 

எல்லாம் அண்ணண் குடுக்கற செல்லம்..அண்ணா ஊர்ல இருந்து வரட்டும் உன்ன பத்தி போட்டு கொடுக்கறேன் என்று வர்ஷி பொறியும்போதே….

வர்ஷிமா என்ற குரல் இடையிட்ட போது ….

 

ஆங்கிரி பேர்ட் மோடில் இருந்த வர்ஷா நார்மல் மோடுக்கு மாறி விட்டாள்..

 

அண்ணா சொல்லாம வந்துருக்கீங்க தீபி அண்ணிக்கு சர்ப்ரைசா?

 

ஆமாம்டா வர்ஷி என்று சொல்லிவிட்டு தீபியை பார்த்து கண் அடித்துவிட்டு அவளை தோளோடு அணைத்துக்கொண்டான்..

வர்ஷிமா நாங்க கொஞ்ச நேரத்துல உள்ள வந்துடறோம்..

 

ஓகே ..ஓகே…நீங்க பேசிட்டு வாங்க அண்ணா பை என்று வர்ஷி போன வைத்து விட்டாள்..

 

என்னடி என்ன வைத்த கண் வாங்காமல் பார்த்த? மாமா அவளோ அழகா இருக்கேனா??

சரசமாய் காதலன் வினவ….

நினைப்பு தான் உங்களூக்கு…..

செல்லமாய் கவிதையாய் நொடித்தாள் காதலி….

 

உன் நினைப்பு தான்டீ …இந்த பேச்சுக்கு ஒன்னும் குறை இல்ல. வேற எதுல குறைச்சல் சொல்லு சரி பண்ணிடலாம் என்றவன் …குரல் ஏக்கத்தில் கரகரத்து ஒலித்தது..

 

தீபியின் முகத்தை கையில் ஏந்தி அவள் கண்ணுக்குள் பார்த்து இந்த புடவையில் தேவதை மாறி இருக்கடா என்று கூறி அவள் இடையை வளைத்து மறுபடியும் அவளது பிங்க் நிற இதழ்களை தன் இதழ் கொண்டு சுவைத்தான்..

முடிலடி..மொத்தமும் வேணும் தோணுது…தாபம் தாளாமல் இளைய காதலனாய் புலம்ப..

எடுத்துக்கோங்க.. உங்ளுது தானே?…சும்மா சும்மா மிழற்றினாள் தீபி..

ரெண்டு பேரும் காதல் பித்தில் மிதந்து கிடந்தனர்…

பக்குவப்பட்ட காதல் தான்..அப்பப்ப இப்படி நொண்டி அடிப்பதும் ஓர் பேரழகே..!!!

காதலியின் சம்மதம்,நம்பிக்கை,பொறுப்பை விதைக்க, தானாக விலகியவன் அவளது கலைந்த முடிகளை சரி செய்து நெற்றியில் முத்தமிட்டு..

நீ உள்ள போடா நான் பத்து நிமிடம் கழித்து வரேன்..

கிளர்ந்த உணர்வுகளை சமன் படுத்த ..

 

சரி என்று சொல்லிவிட்டு…

அவன் கன்னத்தில் அழுத்தமாக முத்தம் குடுத்துவிட்டு உள்ளே ஓடிவிட்டாள்..தீபிகா…

பூவோ? தேனோ?

தேவதைகள் தானோ பெண்கள்…

தீபியை தொட்ட விரல்களின் மணம்… இன்னும் மகரந்தமாய்…தன்னுள் வீச…

 

தன்னவள் நினைவுகளுடன் மரத்தில் கண் மூடி சாய்ந்து நின்றவன் நிரஞ்சன் ஏசிபி..

 

இளம் வயதில் தன்னுடைய திறமையால் பல சிக்கலான வழக்குகளை தீர்த்துபோலீஸ் டிபார்ட்மெண்டில் தனக்யென்று தனி மரியாதையையும் அடையாளத்தையும் உருவாக்கி வைத்திருப்பவன்..

மிகவும் நேர்மையானவன் அதனால் கண்ணுக்கு தெரியாத எதிரிகள் பலர் அவனுக்கு உண்டு..

சத்யாவின் அத்தை பையன்,அருண் மற்றும் சத்யாவின் உயிர் நண்பன்..

 

சத்யாவுடன் மாணவிகள் காணாமல் போன வழக்கை விசாரணை செய்கிறவன்..இங்கு அரங்கத்தினுள் வந்த தீபி நேராக வர்ஷாவிடம் சென்றாள்..

வர்ஷி எத்தனை ப்ரோக்ராம் இன்னும் இருக்கு? ரொம்ப லேட்டா வந்துட்டேனா? இன்னும் ஒரு ப்ரோக்ராம் இருக்கு, இப்போ தான் நம்ப உமா உன்ன தேட ஆரம்பிச்சா பத்து நிமிஷத்துல வந்துடுவானு சொன்னேன் நீயும் வந்துட்ட என்றாள்..

வர்ஷியிடம் பேசிக்கொண்டே பார்வையை நாலா பக்கமும் சுழல விட்டவள் வீட்டுக்கு போனதும் என் இரண்டு அண்ணன்களுக்கும் சுத்தி போட சொல்லணும் எல்லா பொண்ணுங்களும் செமயா சைட் அடிக்கறாங்க …

பசங்க பொறாமைல பொங்கல் வைக்கறாங்க ..

இதுல உன் அண்ணண் வேற இன்னிக்கி அட்டகாசமாக வந்துருக்காரு …

பொண்ணுங்களுக்கு மயக்கம் வராம இருந்தா சரி..எதுக்கு பொலம்பற உன் அண்ணன்களை சைட் அடிக்கறாங்கனா இல்லை என் அண்ணனை சைட் அடிப்பாங்கனு கவலையா என்று வர்ஷி கேட்டுக்கொண்டு இருக்கும்போதே…

எ.சி.பி.நிரஞ்சன் அவர்களை இக்கல்லூரியின் சார்பாக இந்த விழாவுக்கு வரவேற்கிறேன் என்று கல்லூரிமுதல்வர் மேடையில் அறிவித்தார்…

Advertisement