Advertisement

மழை-5

வர்ஷி வீட்டில் செய்திகளையும் நாளிதழ்களிலும் சத்யாவை பற்றி செய்திகள் பார்த்து படித்து அவர்களுக்கு அவளோ சந்தோஷம் ..

அதுவும் நம் வர்ஷி அவளுக்கு பாராட்டு கிடைத்தால் கூட இவளோ மகிழ்ச்சி அடைந்துருப்பாளா என்பது சந்தேகமே ..அவள் சத்யாவை அந்த அளவு நேசித்தாள்..

சத்யாவிடமிருந்து  பதில் நேசத்தை கூட  எதிர்பார்க்காமல் அன்பை பொழியும் சுயநலமற்ற தூய நேசம் வர்ஷியுடையது ..

அவள் சத்யா மனதில் அவன் பெற்றோர்களால் ஏற்றப்பட்ட நெருப்பை தன் காதல் என்ற மழையால் அனைக்க நினைக்கிறாள்..

ஆனால் ஏனோ அவன் அவளை ஒரு ஜட பொருளாக பாவித்து விலகிவிடுகிறான்..

வர்ஷிக்கு சத்யாவை சிறு வயது முதல் தெரியும்..வர்ஷினியின் அப்பாவும் சத்யாவின் மாமாவும் நெருங்கிய நண்பர்கள் ..

வர்ஷியின் அப்பாவிற்கு தாமதமாகதான் திருமணம் ஆகியது..திருமணத்திற்கு பின் வர்ஷியின் அம்மாவும் சத்யாவின் அத்தையும் தோழிகள் ஆகியதால் இன்று அளவும் அவர்கள் நட்பு தொடர்கிறது..வர்ஷி பிறக்கும் சமயம் சத்யாவும் அவன் அத்தையுடன் மருத்துவமனை சென்றிருந்தான் ..பொதுவாக பிறந்த குழந்தைகள் பிங்க் நிறத்தில் இருப்பார்கள், ஆனால் வர்ஷியோ மஞ்சள் நிறத்தில் இருந்தாள்..

///பிறக்கும் போதே எல்லோரையும் குழப்பிய தெய்வமா நீ!!!///

கோலி கருவிழிகள் அடர் கரும் ஹெல்மட் தலை முடி என்று பார்ப்பதற்க்கு அவளோ அழகாக இருந்தாள் …..நிறத்தை வைத்து மஞ்சள் காமாலை இருக்குமோ என்று சந்தேகித்த மருத்துவர்கள் இரண்டு மணி நேரம் பிறகு தான் எதுவும் கூற முடியும் என்று சொல்லி எல்லோரின் ரத்த அழுத்தத்தை எகிற வைத்தனர்..

இரண்டுமணி நேரத்திற்கு பிறகு மருத்தவர்கள் குழந்தை ஆரோக்யமாக உள்ளாள் என்று கூறி ஏற்றிய ரத்த அழுத்தத்தை இறக…அதன் பிறகு வர்ஷி இரு குடும்பம் மற்றும் சத்தியின் தாத்தாவிற்கும் செல்லமாகி போனாள்…

சிறு வயதில் இருந்தே வீட்டில் குறும்பாகவும்,வெளியில் பொறுப்பாகவும் இருக்க ஆரம்பித்தாள்.. வர்ஷி சிறுமியா இருக்கும் போது உடன் விளையாடிய சத்யா அவள் வளர வளர அவளுடன் பேசுவதை குறைத்து ஒரு கட்டத்தில் அவளுடன் பேசுவதை நிறுத்திவிட்டான்..

///இவனுக்கு இதே வேலையா போச்சு///

ஆரம்பத்தில் அவன் பேசாததை நினைத்து வருத்தம் கொண்ட வர்ஷி போக போக அவன் குணம் இதுதான் என்று புரிந்துகொண்டாள்..

சத்யாவின் அத்தை எப்போதும் சத்யாவை பற்றி பேசுவதால் அவனை பற்றிய முழு விவரம் அவளுக்கு தெரியும்…..

அதனால் அவளறியாமலேஅவன் மீது பாசமும் வாஞ்சையும் ஏற்பட்டது, அது எந்த புள்ளியில் காதலாக மாறியது என்று தெரியவில்லை.அவள் முதல் வருடம் யூஜி படிக்கும் பொழுது அவள் சீனியர் ஒருவன் அவளை காதலிப்பதாக சொன்ன பொது அவனிடம் மென்மையாக மறுத்துவிட்டாள்..

அப்பொழுது அவள் மனதில் ஓர் சுக மின்னல்….

காதல் மனம் ஆல்ரெடி ரிசர்வ்ட் பை சத்யந்தேர்…

இது என் இடம்..யாரது?..உள்ளிருந்து சத்யா எரிக்க..உண்மை தெரிந்த மறு கணமே தொய்ந்து அமர்ந்துவிட்டாள்…

காதல்..காதல்…காதல்..விஷம் போல் உடலெங்கும், உடலெங்கும்நொடியில் பரவி,வலிகள் கூட இனித்தது..

அவன் மேல் இருப்பது காதல் நிச்சயம் ஆனது அன்றுதான்…

எப்படியும் அவன் யாரையும் காதலிக்க போவதில்லை, அதனால் நோய் தந்தவனிடத்தில் நோய் பிடித்த வகை சொல்ல வேண்டியது தான் என்று நினைத்து அவன் வீட்டிற்கு சென்றாள் ….

 

அப்பொழுது அவன் ஐ.ஏ.எஸ் ட்ரைனிங் முடித்து பணி நியமன உத்தரவுக்காக காத்து கொண்டிருந்த சமயம்..

கேட்டின் அருகில் இவளது கறுப்பியின் சத்தம் கேட்டு வாயில் காவலாளி கேட்டை திறந்துவிட்டான் ..

அவனிடம் நலம் விசாரித்தவள் தாத்தா இருக்கிறரா என்று கேட்டாள்..அவன் அவர் வெளிய போய்றுக்கிறார் சத்யாய்யா மட்டும் இருக்கிறார் என்றான்..

நான் போய் பார்க்கிக்கிறேன் என்று்ளே வந்துவிட்டாள்..

அங்கே அவளது இந்தர் மட்டும் வேஷ்டி டி- ஷர்ட்டில் அமர்ந்து பேப்பர் படித்துக்கொண்டிருந்தான்..ஒரு நிமிடம் அவனது கம்பீரத்தில் தன்னைதொலைத்தவள் ..

இப்பதான் காதல் பார்வை அதனால் ரொம்ப ஜொள்ளிங் வர்ஷா..முடியல…

75 kg தாஜ்மஹால் எனக்கே எனக்கா மலைத்து…கண்ணில் கவ்வி அவ்க் அவ்க் ன்னு உண்டு மனத்திரையில் சேவ் பண்ணி…திருடி

இவளின் பார்வை மாறியதை அவனும் அவளை பார்த்துவிட்டான்..உதட்டை ஓர் அலட்சிய சுளிப்பும் தந்து…

உள்ளே வா என்று வரவேற்றான் ..சும்மா ///கொழுப்பு தாண்டா சத்யா உனக்கு ///

அவள் வந்து அமர்ந்ததும் தாத்தா வீட்டில் இல்லை என்று கூறினான்..நான் உங்களை பார்க்க தான் வந்தேன் என்றவளை …

 

என்ன என்பது போல் பார்த்தான்..

///வாயை திறந்து பேச மாட்டாரோ இவரு பெரிய மன்மத ராசா என்று திட்டினாள் ..மயிண்ட் வாய்ஸில் தான் அதற்க்கு அவள் மனமோ அவன் மன்மதன் தான் என்று ஜொள்ளியது ///

அவரு வெளில போயிருக்குக்காரு… நேரம் ஆகும்…

அப்புறம்…

வெளில போறியா…என்பது போலவே பார்த்து வைக்க.

 

அவனின் அந்த அலட்சியத்தில் கூட ஆண்மையை கண்டவள்…. ///காதல் ஓவர் பிளோயிங்///மனதில் தன் காதல் தந்த தைரியத்தில்…

நேராக அவன் கண்ணை பார்த்து நான் என் வாழ்க்கையை உங்களுடன் காலம் முழுக்க வாழ ஆசைப்படுகிறேன் சத்தி..

என்றாள் அதிரடியாக வர்ஸ்…

 

அவள் சொன்னது புரிந்த அடுத்த நொடி அவன் கைதடம் அவள் கன்னத்தில் பதிந்தது….

///ஒருத்தி உன் மூஞ்சியும் பார்த்து காதலிக்கறேன்னு சொன்னா ஏதாவது பதில் சொல்லணும் ..இப்படியா அடிக்கறது பாவம் பிள்ளை///

யோவ் நீ யாருயா என்னை அடிக்க?…இப்ப தான் தெரிது..உரிமையா அடிச்சத்தால்..நீ தான் என் புருஷன்…நீ முள் கொத்து கொடுத்தாலும் எனக்கு பூங்கொத்து தான் சத்தி என் புருசா….

அடித்த வலியில் தானாய் கண் கலங்கி கண்ணீர் கொட்டினாலும்…வசனம் ஓவர்..வர்ஷா…

சாம்பிள் காட்டவா? கேட்டு அவனை அதிரவும் வைத்து…

அவன்சுதாரிக்கும் முன் …

எட்டாத கன்னத்தை எட்டி பிடித்து…அழுத்தி வலிக்க கடி கொடுத்து….பின் தன் இதழ் கொண்டு அதனை முத்தமிட்டு செப்பனிட்டு ….

உன் மனைவியை முறைப்படி உன் வீட்டுக்கு அழைக்கும் நாள் வரை காத்திருப்பேன் சத்தி…

ஓர் புன்னகை…கலங்கிய முகத்தில் துளியும் தன் காதலை விட்டுக்கொடுக்காத கர்வம்…

 

தான் செஞ்சது தப்பு உணர்ந்து…அதுக்கு வர்சியின்…பதிலும் பிடிக்காது…முகம் சுளித்து நின்ற..சத்யாவை …

ஒரு சல்யூட் போட்டு…மறைந்து விட்டாள்.. வர்ஷி..

அவன் கண்களிலிருந்து….மனதில்???!!!

அங்கிருந்து நேராய்

தன் வீட்டுக்கு வந்து அழைப்பு மணியை அழுத்த அவளது அன்னை கதவை திறந்து இவளை பார்த்து …

என்ன இன்னிக்கி சீக்கிரமே வந்துட்ட ஏன் என்றார்..தலை குனிந்து உள்ளே சென்றவள் ரொம்ப தலைவலி கொஞ்ச நேரம் படுக்கறேன் என்று சென்றாள்..

முகம்கூட கழுவாமல் தன் அறை கட்டிலில் அமர்ந்தவள் தன் கன்னத்தி,ல் அவன் கை தடங்களை தொட்டு முத்தமிட்டு மகிழ்ந்தாள்..

///அவளோ காதலு///

புது காதல் உடம்பெங்கும் குளிர் தந்து குதூகலப்படுத்த…கன்னத்து அரை காதல் எம்பளம் ஆனது…

கண்ணை காட்டு போதும் காலம் பூரா வரேன்..

என்ன வேணும் கேளு..கேட்காமல் நானும் தாறேன்..

சத்தியமா சொல்லுறேன்..நீதாண்டா என் ஆம்பளை…இது நிச்சயம்..நிச்சயமடா…அழகா..

தப்பு தப்பா பாடி..மயங்கி கிறங்கி வர்ஷி நிலைமை… கவலைக்கிடமா…போயிருச்சு..!///காதல் நோய்///

 

கண்ணெல்லாம் கனவே..கனவே…காதலன் யார் தெரிந்த நிலையால்….

கன்னத்தில் கை வைத்து எவளோ நேரம் இருந்தாளோ? உலகம் இயக்கத்தை இவளுக்காய் நிறுத்திவிட்ட மாறி..!

அவள் அம்மா அரை கதவை தட்டும் சத்தம் கேட்டு நினைவுக்கு வந்தவள் அறையை விட்டு வெளிய வந்தாள்..அவளது கன்னத்தை பார்த்து அம்மா அப்பா தம்பி மூவரும் அதிர்ந்தனர். அவளது அன்னை என்னடி இது யாரு உன்னை அடித்தது…

அவள் அன்னை வாயால் கேட்ட கேள்வியை அவளது தந்தையும் தம்பியும் கண்ணால் கேட்டனர்..

அப்பொழுதான் அவளுக்கு தான் முகம் கூட கழுவாமல் இருப்பது நியாபகம் வந்தது..என்ன சொல்வது என்று யோசித்து எப்படியும் தான் காதலிக்கும் விஷயத்தை வீட்டில் கூற போகிறோம்..

அதே இப்பொழுதே சொல்லிவிடலாம் என்று நினைத்து காலை கல்லூரியில் மாணவன் அவளை காதலிப்பதாக கூறியது ..அதன் பின் அவள் மனதில் எழுந்த எண்ணங்கள் தான் சத்யாவிடம் காதலை சொன்னது அதற்கு அவன் தன்னை அடித்தது முதல் அனைத்தையும் பகிர்ந்தாள்..

ரொம்ப நல்லவள் வர்ஷா….

\\\இது போல் மனதில் இருக்கும் உணர்வுகள் எந்த ஒளிவும் மறைவும் இல்லாமல் பெற்றோரிடம் பகிர்ந்த கொள்ள வரம் எத்தனை பிள்ளைகளுக்கு கிடைக்கும் ..இது ஒரு அற்புதமான வரம் ..பிள்ளைகளின் மனது அறிந்து பெற்றோர் நடப்பதும்..பெற்றோர்களில் நம்பிக்கையை காப்பாற்றும் பிள்ளைகளும் அமைந்துவிட்டால் அந்த குடும்பங்களில் தினம்தோறும் பண்டிகை தான்///

அவள் சொன்னதை கேட்ட பெற்றோர் இந்த வயதிலே உனக்கு காதலா என்று கேட்க்கவில்லை அவளது தெளிவான தைரியமான முடிவை கண்டு அவர்களுக்குபெருமையே..அதுவும் அவள் காதலிப்பது சத்யா என்றவுடன் பையனின் குணம் குடும்பம் குறித்த கவலையும் விட்டது..

சத்யா தங்கள் மகளை அடித்ததை அவன் குணம் இதுதான் இயல்பாக எடுத்துக்கொண்டனர்..

தங்கள் மகள் சத்யாவின் மனதை மாற்றிவிடுவாள் என்று நம்பினர் ..உடனே அவர்கள் சாந்திக்கும், சத்யாவின் தாத்தாவிற்கும் அழைத்து விஷயத்தை பகிர்ந்தனர்..அதை கேட்டு அவர்களுக்கு அவளோ சந்தோஷம்..இது குறித்து பெரியவர்கள் யாரும் சத்யாவிடம்  பேச வேண்டாம் என்று வர்ஷி கூறியதால் அவர்களும் சத்யாவிடம் பேசவில்லை ..

இன்று ஆண்டு விழா என்பதால் கல்லூரி விழா கோலம் பூண்டிருந்தது… மாணவிகள் அனைவரும் புடவையில் தேவதைகளாக உலா வந்தனர்..விழா நாள் என்பதால் மாணவ மனைவிகள் அனைவரும் அதீத உத்த்தோடு சுற்றிக்கொண்டிருந்தனர்..

நமது பைவ் ஸ்டார் குரூப் விழா ஒருங்கிணைப்பாளர்கள் என்பதால் பிஸியாக சுற்றிக்கொண்டிருந்தனர் ..

ஏற்கனவே நாளிதழலிலும், தொலைக்காட்சியிலும் சத்யாவின் புகைப்படத்தையும் பேட்டியும் பார்த்திருந்தவர்கள் அவனை நேரில் காண ஆவலாக இருந்தனர்..விழா ஆரம்பிக்கும் நேரம் ஆனதும் பரபரப்பு தொற்றி கொண்டது..

அருண் கருநீல வர்ண சூட்டில் கம்பீரமாக இருந்தான் உமா வழக்கம் போல் அவனை சைட் அடிக்கும் வேலையை செவ்வனே செய்தாள்..

அருணும் உமா அறியாவன்னம் அவளை பார்வையிட்டுக்கொண்டிருந்தான்..உமா கருநீல வண்ண சில்க் காட்டன் புடவையில் கழுத்தில் நீளமான முத்து மாலை காதில் முத்துக்களாலான பூத்தொடு இரு கையிலும் பார்டரில் முத்து வளையல் நடுவில் நீல நிற கண்ணாடி வளையல் என்று ஜொலித்தாள்.

உமா வரவேற்ப்பில் நின்றிருந்தாள் மற்ற நால்வரும் மேடையில் வேலையாக இருந்தனர்..

அப்பொழுது அங்கு வந்த காரில் இருந்து சத்யா இறங்கினான்..பிஸ்கட் நிற சூட்டில் கம்பீரம் மற்றும் கவர்ச்சியாக இருந்தவனை கண்டு மாணிவிகள் ஆ என்று பார்த்திருந்தனர்..

மாணவர்களோ அருண் சார் மாதிரி இவரும் அட்டகாசமா இருக்காரு நல்ல கலர் வேற நம்பளை ஒருத்தி கூட சைட் அடிக்க மாட்டா, கடன்  வாங்கி பேஸியல் பண்ணியது  எல்லாம் வேஸ்ட் என்று  நொந்தனர்…

/// இன்னிக்கும் இரண்டு கேக் பேக் பண்ற அளவு ஸ்டோமக் பர்னிங் கன்பார்ம்  ////

அருண் சத்யாவை பார்த்து வெல்கம் சார் என்று கூறி சிரித்து கொண்டே பூங்கொத்தை நீட்டினான்..

சத்யாவோ அவனை ஒரு முறை முறைத்துவிட்டு பூங்கொத்தை வாங்கி கொண்டான் .. அருணுக்கு பக்கத்தில் இருந்த கல்லூரி முதல்வரும் ஆசிரிய ஆசிரியைகளும் இவர் எதுக்கு இவர் எதுக்கு சாரை முறைக்கவேண்டும் என்று ஒரு நொடி யோசித்தாலும் உடனே சுதாரித்து அவனை விழா மேடைக்கு அழைக்க.. மேடைக்கு வந்தவர்கள் அமர்ந்ததும் முதல்வரும் அருணும் சில பல வரவேற்புரை வாழத்துரையை அவர்கள் பாணியில் அமர்க்களமாக அட்டகாசமாக பேசிவிட்டு சத்யாவை பேச அழைத்தனர்..

அவனோ தான் விழா முடிந்ததும் பேசுவதாக கூறிவிட்டான் ..உடனே கலை நிகழ்ச்சிகள் ஆரம்பமானது..

பைவ் ஸ்டார் குரூப்பில் வர்ஷியை தவிர மற்றவர்கள் எந்த நிகழ்ச்சியிலும் கலந்துகொள்ளாததால் உமாவும் தீபியும் நிகழிச்சியை தொகுத்து வழங்கினர் ..உமா மேடைக்கு வரும்போது அருண் அவளை சைட் அடிப்பதை சத்யா கவனித்துவிட்டான் ..

இதை பற்றி அப்பறம் அவனிடம் கேட்கலாம் என்று நினைத்து நிகழ்ச்சியை கவனிக்க ஆரம்பித்துவிட்டான்..

இரண்டு அரை நேரம் அட்டகாசமா சென்று  கொண்டிருக்கும் கலை நிகழ்ச்சியில் அடுத்து நம் வர்ஷா பாட வந்தாள்..பிஸ்கட் நிறத்தில் செல்ப் டிசைனில் அரக்கு வண்ண பார்டர் வைத்த பட்டு புடைவையில், அதற்க்கு மேட்சாக கழுத்தில் அரக்கு கல் வைத்த நீண்ட ஆரமும், காதில் அதே நிறத்தில் கற்கள் பதித்த ஜிமிக்கியும், கையில் கல் வளையலும், நெற்றில் மெரூன் வண்ண கல் போட்டும்,, அவளது அடர் கூந்தலை பின்னலிட்டு அதில் முல்லைப்பூ வைத்திருந்தவள் அழகினை கண்டு சத்யாவே ஒரு நிமிடம் தடுமாறி தான் போனான் . .//தலைவர் இப்போ தான் முதல் தடவை வர்ஷியை புடவையில் பார்க்கிறார் ///

வர்ஷி பாரதியார் கண்ணன் — என் காதலன் வரும் தொகுப்பில் வரும் பாடலை சத்யாவை பார்த்து

சிருங்கார ரசத்தில் பாட ஆரம்பித்தாள்.

தூண்டிற் புழுவினைப்போல் — வெளியே

சுடர் விளக்கினைப்போல்,

நீண்ட பொழுதாக — எனது

நெஞ்சந் துடித்த தடீ.

கூண்டுக் கிளியினைப்போல் — தனிமை

கொண்டு மிகவும் நொந்தேன்;

வேண்டும் பொருளையெல்லாம் — மனது

வெறுத்து விட்டதடீ.

///அவளது நீண்ட காத்திருப்பை சத்யாவிற்கு உணர்த்தியது///

பாயின் மிசைநானும் — தனியே

படுத் திருக்கையிலே

தாயினைக் கண்டாலும், — சகியே,

சலிப்பு வந்ததடி.

வாயினில் வந்ததெல்லாம், — சகியே,

வளர்த்துப் பேசிடுவீர்;

நோயினைப் போலஞ் சினேன், — சகியே

நுங்க ளுறவையெல்லாம்

உணவு செல்லவில்லை; — சகியே

உறக்கங் கொள்ளவில்லை.

மணம் விரும்பவில்லை; — சகியே,

மலர் பிடிக்கவில்லை;

குண முறுதியில்லை; — எதிலும்

குழப்பம் வந்ததடீ;

கணமும் உள்ளத்திலே — சுகமே

காணக் கிடைத்ததில்லை.

பாலுங் கசந்ததடீ; — சகியே,

படுக்கை நொந்ததடீ.

கோலக் கிளிமொழியும் — செவியில்

குத்த லெடுத்ததடீ.

நாலு வயித்தியரும் — இனிமேல்

நம்புதற் கில்லையென்றார்;

பாலத்துச் சோசியனும் — கிரகம்

படுத்து மென்றுவிட்டான்.

அவளது பாடலில் உள்ள பொருளில் தோழியின் மனதில் உள்ள வலியை தீபி உணர்ந்துகொண்டாள் அரங்கத்தில் உள்ள அனைவரும் அவளது குரலில் உள்ள குழைவுனிலியும், அவளது முக பாவத்திலியும் கட்டுண்டார்கள் அவளது குரலை தவிர வேறு எந்த ஒலியும் அந்த அரங்கத்தில் கேட்டகவில்லை

 

கனவு கண்டதிலே — ஒரு நாள்

கண்ணுக்குத் தோன்றாமல்,

இனம் விளங்கவில்லை, — எவனோ

என்னகந் தொட்டு விட்டான்.

வினவக் கண்விழித்தேன்; — சகியே,

மேனி மறைந்துவிட்டான்;

மனதில் மட்டிலுமே — புதிதோர்

மகிழ்ச்சி கண்டதடீ.

\\\கனவில் அவள் காணும் சத்யாவை நினைத்து அவள் முகத்தில் வெட்கச் சிரிப்பு மலர்ந்தது ///

 

உச்சி குளிர்ந்ததடீ; — சகியே,

உடம்பு நேராச்சு.

மச்சிலும் வீடுமெல்லாம் — முன்னைப்போல்

மனத்துக் கொத்ததடீ.

இச்சை பிறந்ததடீ — எதிலும்

இன்பம் விளைந்ததடீ.

அச்ச மொழிந்ததடீ; — சகியே,

அழகு வந்ததடீ.

எண்ணும்பொழுதி லெல்லாம், — அவன்கை

இட்ட விடத்தினிலே

தண்ணென் றிருந்ததடீ; — புதிதோர்

சாந்தி பிறந்ததடீ

எண்ணியெண்ணிப் பார்த்தேன்; — அவன்தான்

யாரெனச் சிந்தைசெய்தேன்;

கண்ணன் திருவுருவம் — அங்ஙனே

கண்ணின்முன் நின்றதடீ.

\\\அவள் பாடல் முழுதும் சத்யாவை பார்த்து பாடினாள்..அவனும் அவளை கண் எடுக்காமல் பாத்திருந்தான் அதை பார்த்து அருண் தனக்குள் சிரிர்த்துக்கொண்டான்///

சத்யாவின் மனதில் மாற்றம் ஏற்படுமா ?

Advertisement