Advertisement

மழை -4

அன்று மாலை சத்யா வீடு திரும்பும் போதுஅவனின் தாத்தா அவனுக்காக வாசலில் காத்து இருந்தார்..

அவரை கண்டு அவன் முகம் புன்னகை கொண்டது.சிறு வயதில் ஸ்கூலில் இருந்து வரும்போது எப்படி தாத்தவிடம்உற்சாகமாசெல்வானோ இப்பொழுதும் அதே உற்சாக மன நிலையில் தாத்தாவிடம் சென்றான் ..

அவரும் அவனை கண்டு தழுவி கொண்டார்..இன்னிக்கி முதல் நாள் எப்படி போச்சு சத்யா? நல்லா போச்சு தாத்தா என்று பேசி கொண்டே வீட்டின் உள் சென்றனர் ..

அதற்குள் கங்காமாசத்யாவின் கார் சத்தம் கேட்டு அவனுக்கு சூடாக காபி கொண்டு வந்தார்..

அவனும் அதை வாங்கி பருகிவிட்டுகங்காமாவிடமும் சற்று பேசி விட்டு தன் அறைக்கு செல்லும் போது மாடி படிக்கட்டு பக்கம் இருந்து அந்த படத்தை பார்த்து ஒரு நொடி நின்று பின் அவனது அறைக்கு சென்றான்..

பெற்றோர் படத்தை பார்த்தால் குழந்தைகளுக்கு சந்தோஷம் தான் வரும்..ஆனால் நமது நாயகன் முகத்திலோ இறுக்கம் வந்தது…

சத்யாவின் தாத்தா பரம்பரை பணக்காரர் கிராமத்தில் செல்வந்தர் குடும்பம்..வயல் தோப்பு  ஏக்கர் கணக்கில்உள்ளது..அவருக்கு தான் ஒரு காவல் அதிகாரி ஆக வேண்டும் என்று ஆசை ..

அவரது ஆசைக்குபெற்றோரும் உடன் பட்டதால் அந்த காலத்திலேஐ.பி.எஸ் பாஸ் ஆகி உதவி ஆய்வாளராக பனியில் சேர்ந்தார் மிகவும் நேர்மை மற்றும் கண்டிப்பானவர்..

ராஜ வேல் வருகிறார் என்றால் குற்றவாளிகள்நடுங்குவார்கள் அவர் பெயரை கேட்டாலே அலறுவார்கள் …

தனது திறமையால் பல சிக்கலான கேஸைஈஸியாகதீர்த்துள்ளார்..அவரதுமனைவி மல்லிகா அவருக்கு தூரத்து சொந்தம்…நீளகூந்தலும் அழகிய பெரிய விழிகளும் முகத்தில் எந்நேரம் மின்னும் மஞ்சளுமாபார்ப்பவரை கை எடுத்து கும்பிட வைக்கும் தெய்வீக அழகுடன் இருப்பவர்..

பெற்றோர் ஆசிர்வாதத்துடன்மல்லிகாவை விருப்பப்பட்டு மணந்தவர் .வெளியில் சிம்மசொப்பனமாகவிளங்குபவர் வீட்டில் காதல் மன்னனாக…..

\\ஜெமினி கணேசன் மாறி //

வலம் வருவார் ..இப்பொழுதுஅவர் இருக்கும் வீடு அவர் மனைவின்ரசனைக்கு ஏற்ப வீட்டின் முன் பெரிய தோட்டம் அமைத்து் பல வகை மலர்கள் ,காய்கறி வாழை, மா, பலா, கொய்யா, தென்னை போன்ற மர கன்றுகளைவைத்தனர்.கன்றுகள்  இப்பொழுது பெரிய மரமாகி ,நல்ல விளைச்சல் கொடுப்பதோடுமட்டுமலாம்மால், பெரிய மரம் இருக்கும் வீடு என்று அந்த ஏரியாவில் பெயர் வாங்கிவிட்டது , மரங்கள்  இருக்கும் வீடுன்றால் எல்லோரும் அடையாளம்  சொல்லுவர்..

திருமணம் முடிந்து ஒரு வருடத்தில் முதல் மகன் பிறந்தான் மகனுக்கு கார்த்திகேயன் என்று பெயர் சூட்டினர் ..அடுத்த இரண்டு வருடத்தில் ஒரு பெண் குழந்தை . அதற்கு சாந்தி என்று பெயர் வைத்தனர்.

இருவரும் வளர வளர ராஜ வேலும் அவரது பணியில் பதவி உயர்வு பெற்றார்,அவர்பணிஒய்வுபெரும்பொழுதுகமிஷனராக இருந்தார்..

கார்த்திக்படிச்சிமுடிச்சதும்ஊரில் உள்ள நிலத்தின் பெயர்களில் பாங்கில் லோன் போட்டு தொழில் தொடங்கினான் ஆரம்பத்தில் சிறுசிறு சறுக்கல் இருந்தாலும் அதை சமாளித்து வியாபார உலகத்தில் தனக்கென்று இடத்தை நிலை நாட்டினான்..

சாந்தி படிப்பு முடிந்ததும் அவளை தன் நண்பன் மகனுக்கேராஜவேல் திருமணம் செய்து கொடுத்தார்..

கார்த்திக் வியாபார திறமை அவனது குடும்ப பின்னணி கண்டு,ரத்னம் பிசினஸ் உலகத்தின் ராஜா அவர் தன் ஒரே மகள் லக்ஷ்மியைகார்த்திக்கிற்கு திருமணம் செய்து வைத்தார் .லக்ஷ்மிக்கு எப்பவும் தான் பணக்காரி என்ற கர்வம் உண்டு ..மாமனார் மாமியார் நாத்தனார் என்று யாரையும் மதிக்க மாட்டாள்..

கிளப் பார்ட்டி என்று வீடு தங்கவேமாட்டாள்..கார்த்திக்கும் புகழ் போதை தலைக்கு ஏறியதாலும்மாமனாருக்கு அடுத்த வாரிசு தான் என்பதால் அன்னை தந்தை வளர்ப்பை மறந்து பணம் புகழுக்கு அடிமை ஆகிவிட்டார்..

கார்திக்லஷ்மி இருவரும் கடமைக்காக சேர்ந்து வாழ்பவர்..கார்த்திக் வியாபார நிமித்தமாக வெளிநாடுகளுக்கு சென்றால் லஷ்மி அவருடன் செல்வார்இல்லையென்றால் தன் தோழிகளுடன்டூர்கிளம்பிவிடுவார், வேலுமல்லிகாவும்மகனையும்மருமகளையும் எதுவும் கேட்க முடியவில்லை … லஷ்மிகார்த்திக்கு திருமணம் ஆகி இரண்டு ஆகியும் குழந்தை இல்லை என்று,எல்லோரும் பேச ஆரம்பித்ததால்இருவரும் குழந்தை பெற்றுக்கொள்ள முடிவியெடுத்தனர்…

 

இருவரும் காதல் இல்லமால் தங்கள் கௌரவத்திற்க்காக பெற்ற பிள்ளை தான் சத்யேந்தர்…பிறந்தஅன்று அவனை கையில் ஏந்திய தாத்தா பாட்டிக்கு அதற்கு பின் அவன்தான் சகலமும் , பிறந்த குழந்தையை கையில் வாங்கியது தான் கார்த்திக்லஷ்மி இருவரும் அதன் பிறகு அவனை திரும்பி கூட பார்க்கவேயில்லை…,

லஷ்மி அவனுக்கு தாய்பால்குடுக்கவில்லை,தாய் பால் குடுத்தால் அழகு குறைந்து விடுமாம் இது மாறி பெண்களும்நம்நாட்டில்உள்ளனர்..அவர்கள் எல்லாம் அடுத்தவர்கள் சொன்னால் கேட்க மாட்டார்கள் .. பட்டால் தான் திருந்துவார்கள்.. சத்யாவின் அத்தை சாந்திக்கு கல்யாணம் ஆகி ஓர் ஆண்டில் ஆண் பெண் குழந்தைகள் இராட்டையர்களாகப் பிறந்தார்கள்…

சத்யாபிறக்கும்போது அவனது அத்தையும்மூன்றாவதாக ஒரு ஆண் குழந்தை பிரசவித்தார்

அதனால் சத்யாவிற்கும் அவரே ஒரு வயது வரை தாய்ப்பால் ஊட்டினார்…. அதனால் சத்யாவின்மேல்அவருக்கும், அவர்மேல் சத்யாவிற்கும் பாசம் அதிகம் ..

கார்த்திக்கும்சாந்தியும்மகனது பெயர் சுட்டு விழாவையும் முதல் பிறந்தநாள் விழாவையும் தங்கள் கௌரவம் மற்றும் செல்வச்செழிப்பை பறைசாற்ற ஆடம்பரமாக செய்தார்கள்…

///பசிக்கும் நேரத்திற்கு ரசம் சாதம் கூட கொடுக்காமல் தேவை இல்லாத நேரத்தில் பீட்சா கொடுப்பது போல்///

சத்யாவிற்கு ஓரளவு விவரம் தெரிய ஆரம்பிக்கும்போது தன் பிறந்தநாளை மட்டும் ஆடம்பரமாக கொண்டாடும் தாய் தந்தை மேல் இயல்பான பிள்ளை பாசம் கூட வரவில்லை..

தாத்தா பாட்டி என்றால் அவனுக்கு உயிர் அத்தை மாமாதான் அவன் பெற்றோர்களாகஎண்ணினான்..

அவர்பிள்ளைகளை தன் உடன்பிறப்பாகநினைத்தான்அவர்களுக்கும்சத்யாவின் மீது பாசம் அதிகம்..சத்யா பள்ளியில் படிக்கும் போது அவன் பாட்டி தவறி விட

அவன் தாத்தாவை விட அவனை இயல்புக்கு கொண்டு வர தான் மிகவும் கஷ்டமாக இருந்தது ..பாட்டியின் காரியம் முடிந்த அடுத்த நாளே அவன் அம்மா அப்பா கவலையை மறக்க உலக சுற்றுலா கிளம்பியதைபார்த்தவன் தன் பெற்றோர் உடன் பேசுவதையே நிறுத்தி விட்டான்..

அதன்பின் அவனுக்கு எல்லாம் தாத்தா அத்தை குடும்பம் தான் .இதோ இன்று ஆட்சியாளராகபொறுப்பேற்றுவிட்டான் அவனது அத்தை பெண் மும்பையிலயும்,பெரிய மகன் சிங்கப்பூர்லியும்உள்ளார்கள்..அத்தை மாமா, மகளை காண சென்றிருப்பதினாலும் இளைய மகன் வேலை விஷயமாக வெளிஊர்சென்றருப்பதாலும், போன் மூலம் வாழ்த்துக்கள் தெரிவிக்க, சத்யாவின் பெற்றோர்கள் இப்பொழுதும்  சுற்றுலா சென்றருப்பதினால்  அவனுக்கு வாழ்த்து தெரிவிக்கவில்லை   ..

இப்பொழுது சத்யாரெப்பிரஷ் ஆகி தாத்தாவிடம் வந்து இன்று அலுவலகத்தில் நடந்தை பற்றியும் தான் அதற்க்குமேற்கொள்ளவுள்ள நடவடிக்கை பற்றியும் கூறி அவரின் ஆலோசனையும் கேட்டான், பின் இருவரும் இரவு உணவு உண்டு விட்டு படுக்க சென்றுவிட்டனர்..

மறுநாள் அந்த ஆசிரியைக்கு அழைத்து சில விவரங்கள் கேட்டான்.தன்பி.எ உடன் தனது சொந்த காரில் பள்ளி விடும் நேரம் கலாட்டா செய்யும் பொறுக்கிக்களின் வீட்டிற்கு சென்று தன்னை அறிமுகம் செய்துகொண்டு அவர்களின் பெற்றோரிடமும்திருமணமான இரு பொறுக்கிகள்மனைவிடமும் விவரத்தை தெரிவித்தான்..

சத்யா சொன்னதும் அவர்களுக்கு பெருத்த அதிர்ச்சி தன் பிள்ளை மற்றும் கணவனா இப்படி என்று வீட்டில் ஒழுக்கமாக இருப்பவர்கள் வெளியில் இந்த செயல் செய்கின்றார்களா என்று வேதனை கொண்டார்கள..

அவர்கள் சத்யாவைநம்பினார்கள்…அவன் சொல்வது பொய் என்று ஒரு வினாடி கூட எண்ணவில்லை ..அவர்கள் சத்யாவிடம் தாங்கள் என்ன செய்ய வேண்டும் என்று கேட்டார்கள் ..

 

அவனுக்கோ ஆச்சர்யம் தான் சொன்னதை எந்த கேள்வியும்கேட்க்காமல்நம்பியது எப்படி என்று? அவர்கள் ஓரளவு விவரம் தெரிந்தவர்கள்,அவன் அவர்களை தன் இடத்திற்கு வர வைக்காமல் அவன் அவர்களை தேடி வந்ததில் அவன் எப்படி பட்டவன் என்று கணித்துவிட்டார்கள் அதனால் தான் அவன் அவர்கள் மகன்களை பற்றி சொன்னதும் எந்த கேள்வியும்கேக்காமல் அவனை நம்பினார்கள் …

அவன் அவர்களிடம் உங்கள் மகன்கள் மற்றும் கணவன்மார்களுக்கு என்ன தண்டனை குடுக்க வேண்டுமென்று  முடிவெடுங்கள் என்று அவர்களுக்கு தனியே பேச  அவகாசம் குடுத்து வெளியே வந்துவிட்டான் ..அவர்களும் சற்று நேரத்தில் வெளிய வந்து தங்களது முடிவை அவனிடம்  கூறினர்..

சத்யாவும் அவர்களை அழைத்து கொண்டு பள்ளி நோக்கி சென்றுவிட்டான்..இவர்கள் பள்ளியைஅடையவும் அந்த மாணவிகள் பள்ளி விட்டு வெளியவருவதற்கும் சரியா இருந்தது……

மாணவிகள் வெளி வந்து சுற்றும் பய பார்வை பாற்றுவிட்டு நடக்க …. அப்பொழுது அந்த பொறுக்கிகள்மாணவிகளிடம் வந்து அசிங்கமாக பேசுவதையும் அவர்களை தொடுவதையும் தள்ளி இருந்து பார்த்த அவர்களின் அம்மாக்கள் மற்றும் மனைவிகள் அங்கு வந்து அந்த மாணவிகளை தங்கள் பக்கம் இழுத்தனர் …

தங்களது அம்மா மற்றும் மனைவியை பார்த்த அதிர்ச்சியில் இருந்து அவர்கள் வெளி வரும் முன் தாங்கள் கொண்டு வந்த துடைப்பம் மற்றும் செருப்பால் தனது மகன் மற்றும் கணவனை அடி பின்னி விட்டனர்…

அதை கண்டு அந்த மாணவிகளுக்குரு சந்தோஷம்…சத்யா அந்த மாணவிகளைவீட்டுற்கு அனுப்பிவிட்டு இவர்களிடம் வந்தான் ..உங்களை கேஸ் போட்டு உள்ள வைக்க ஒரு நிமிடம் கூட ஆகாது ஆனால் உங்கள் அம்மா மற்றும் மனைவிக்காக விடுகிறேன் என்று சொல்லி அவர்களது அம்மா மற்றும் மனைவியை வீட்டிற்கு அனுப்பி விட்டு அந்த பொறுக்கிகளை அழைத்து கொண்டு அலுவலகம் வந்தான்..

வந்த சிறிது நேரத்தில் விஷயம் கேள்வி பட்டு மீடியா ஆட்கள் வர அவர்களிடம் தான் பேசி கொள்வதாகபி.எ.விடம் கூறி அவர்கள் அனைவரின் முகத்தை மறைத்து அழைத்து வரும்படி கூறினான்..

மீடியாவிடம்பள்ளியின் பெயரை குறிப்பிடாமல்

நடந்ததைகூறினான்..

///பெற்றோர்கள் அனைவரும் தங்கள் பிள்ளைகள் செய்யும் தவறுக்கு துணை போகாமல் தண்டனை கொடுத்தால் தப்பு செய்யும் எண்ணம் வராது, தன் பிள்ளைகள் என்ன செய்தாலும் காப்பாற்றும் பெற்றோர் இருக்கும் வரை தப்புகள் குறையாது …///

 

 இன்று இந்த பிரச்னை இவளோ தூரம் வந்துருக்கமாணவிகளின்பெற்றோர்களும்காரணம்..அந்தபெண்களிடம் அந்த பொறுக்கிங்க  உங்களிடம் முதலில் இடைஞ்சல்  செய்யும்போது வீட்டில் சொல்லவேண்டிதான என்று கேட்டதற்கு  அவர்கள்  சொன்னார்கள், வீட்டில்  சொன்னால் படிப்பை நிறுத்திவிடுவார்கள்,பொட்ட பிள்ளை ஒழுங்கா அடக்க  ஒடுக்கமாஇருக்கணும்னு திட்டுவார்கள்  அதான் சொல்லவில்லை என்றார்கள்..

முதலில் தங்கள் பிள்ளைகளை பெற்றோர்கள் நம்ப வேண்டும், வெளிய என்ன நடந்தாலும்  வீட்டில் வந்து சொல்லும் முழு தைரியத்தைகுடுக்க வேண்டும் உனக்கு நாங்கள் இருக்கிறோம்  என்று நம்பிக்கையை விதைக்க  வேண்டும் ..பெண் பிள்ளைகளுக்கு மட்டும்  ஒழுக்கத்தை  சொல்லி கொடுக்காமல், ஆண் பிள்ளைகளுக்கும்  ஒழுக்க நெறி பெண்களுக்கு  மரியாதை குடுக்க சொல்லி வளர்க்க  வேண்டும் என்று கூறினான்..

பின் அந்த பொறுக்கிகள் முகம் தெரியாமல்புகைப்படம் எடுக்க மீடியாவிற்கு  அனுமதி குடுத்து இதை போல் தவறு எங்கு நடந்தாலும் தன்னிடம் தெரிவிக்குமாறுபொதுமக்களிடம் வேண்டுகோள் வைத்தான்..

 

 இவன் செய்த செயலை இரவு செய்தியிலும் மறுநாள் செய்தி தாளில் போட்டு சத்யாவைவெகுவாகபுகழ்ந்துஇருந்தனர்..

 

இதனால் சத்யாஒரேநாளில் சென்னையின் ஹீரோ ஆகிவிட்டான்..

Advertisement