Advertisement

Tamil Novel

மழை-2

 

பரபரப்பாக இருந்தது சத்யனின்அலுலகம்…

சென்னை வந்து மாவட்ட ஆட்சியாளராகபொறுப்பேற்று … நான்கு மணி நேரத்தில் இரண்டாவது மீட்டிங் ….

முதலாவது சக அலுவலக ஊழியர்களுடன்..

அவன் அலுவலகத்திற்கு வந்து அரை மணி நேரத்தில் தன் பி.ஏ வை அழைத்து மீட்டிங் ஏற்ப்பாடுசெய்யச் சொன்னான்,

வந்த உடனே மீட்டிங் என்றதும் இவன் அப்படி என்ன பேச போகிறாான், முன்னாடி இருந்த சில ஆஃபீசர்மாதிரி,நம்ம கிட்ட லஞ்சம் வாங்க கூடாது, மக்கள் கிட்ட எந்த பாரபட்சமும் பார்க்க கூடாதுனுசொல்லிட்டு , அவர் லஞ்சம் வாங்கிட்டு அவர்களுக்கு சாதகமாக செய்தது , அவரது சொந்தம் ,நண்பர்களுக்கு வேலை வாங்கி குடுத்தார், அதே போல் தான் சத்யாவும் என்று நினைத்து மீட்டிங்கு சென்றனர்,

எல்லோரும் மீட்டிங் ஹாலுக்குவந்ததும்,சத்யா எல்லோரையும் பொதுவாக பார்த்து விட்டு பேச ஆரம்பித்தான்,

வணக்கம் …என்னடா வந்த உடனே மீட்டிங் வைச்சுருக்கான்இவனும்,முன்ன இருந்த கலெக்டர் மாதிரி நம்ப கிட்ட நீதி,நியாயம்னுபேசிட்டு, பின்னாடி இவனும் இதுக்கு முன்னஇருந்தவங்க மாதிரி தான்னு, நீங்க நினைச்சிருப்பீங்க

//அட எமகாதகா இவன் கிட்ட உஷாராஇருக்கணும்எல்லோரோடமயின்ட்வாய்ஸ்//

இப்போ இந்த மீட்டிங் எதுக்குன்னா..

//அத தான் ராசா ரொம்ப நேரமாகேக்கறோம்//

நீங்க இதுவரை எப்படி வேலை செஞ்சிங்கனு எனக்கு முக்கியம் இல்ல ,

 

//அப்பாடா தப்பிச்சோம்டா சாமி //

 

இனிமே நான் சொல்ற படி தான் நடக்கணும்,அதே மாதிரி நான் தப்பு செய்தாலும் நீ செய்றதுதப்புனுஎன்கிட்டநேர சொல்லலாம் நான் திருத்திக்கறேன்,

தமிழ்நாட்ல நான் இப்போ தான் பொறுப்பேற்றுருக்கிறேன்,அதுவும் என் சொந்த ஊர்ல , நம்ப கிட்ட குறையோட வர மக்கள் குறைகளை முடிந்த அளவு தீர்க்கணும்னுநினைக்கறேன் அதுக்கு உங்களோடஒத்துழைப்பும்இருக்கும்னுநம்பறேன் என்று சொல்லி பேச்சை முடித்தான்.

 

 இதுக்கு முன்னாடி இருந்தவங்களைவிடஇவருவித்யாசமாதெரியறாரு, என்ன தான் செய்ய போறார்னு பார்க்கலாம் என்று,சகஊழியர்களும் அவனுக்கு ஒத்துழைப்பு குடுக்க முடிவு செய்து, உங்களுக்கு  எங்க ஒத்துழைப்பு எப்பவும் உண்டு  சார், என்று பதில் கோரசாக வந்ததும், சத்யா முகத்தில் மெல்லிய புன்னகை…

மீட்டிங் முடிந்து ..

தன் அறைக்கு வந்ததும் தனக்கு வந்த பூங்கொத்து வாழ்த்து செய்தி எல்லாம் பார்வை இட்டு கொண்டிருந்தான் ,

 

அங்கிருந்த பல வண்ண ரோஜாமலர்காளால் ஆன பூங்கொத்து ஒன்று  அவன் கருத்தை கவர்ந்தது அதை அனுப்பியது யாரு என்று பார்த்தான் ,

அதில்

“என் இ(ய)ந்திரனுக்குக்கு வாழ்த்துக்கள்”

என்ற கவிதை இருந்தது

ஹாய் இந்தர்,

“இந்த மலர்கொத்தும்

“என் காதலும்

வெவ்வேறில்லை ….

“உன் அகம் வந்து

“மனம் பரப்ப துடிக்கின்றன

“இரண்டுமே….

“மழையின் பெயர் கொண்டிருந்தும் …

“என் வாழ்வின் காதல் மழைக்காக

“உன் பதில் வேண்டி

“காத்துருக்கிறேனடா..

“என் காதல் ராட்சஷா…

அந்த கவிதையை படித்த உடனே அனுப்பியது யார் என்று கண்டுபிடித்துவிட்டான்…

அதை கோவமாக முறைத்து சென்று விட்டான்

 

\\பூவுல வர்ஷி முகம் தெரிஞ்சிருக்குமோ?..//

அடுத்த மீட்டிங்கு அனைத்து உயர் மட்ட காவல் அதிகாரிகளும்வந்துயிருந்தனர்,அவர்கள் அவனிடம் கை குலுக்கி தங்களை அறிமுகப்படுத்திக்கொண்டு,தங்கள்வாழ்த்துக்களையும்தெரிவித்தனர்,

அறிமுகம் முடிந்த உடன்

தன் பேச்சை துவங்கி விட்டான் சத்யா…

என்னை இங்கு மாவட்ட ஆட்சியாளராக மட்டும் மாற்றம் செய்யவில்லை ,இங்கு இளம்பெண்கள் கடத்தல் அதிகரித்து விட்டது ….

அதை பற்றி அறிந்து தகுந்த நடவடிக்கை எடுக்கவும் என்னை நியமித்துள்ளார் ,

இது மிகவும் ரகசிய ஆபரேஷன் ,என் கூட இதில்பணிபுரியப்போகும் என் குழுவை நான் தான் தேர்வு செய்ய போகிறேன் , இதில் யார் தலையீடும் இருக்காது, இந்த ஆபரேஷன்க்கு நான் வைத்த  பெயர் ஆபரேஷன் ‘g’ இந்த ஆபரேஷன் வெற்றிகரமாக முடிய உங்கள் அனைவரின் ஒத்துஉழைப்பும் இருக்கும் என்ன நம்புகிறேன் என்று பேச்சை முடித்தான்,

 அவன் பேச்சை கேட்ட மற்ற அதிகாரிகளும் அந்த வழக்கின் முக்கியத்துவம் உணர்ந்து,தங்களது உதவி இதில் இருக்கும்யென்றுஉறுதியளித்தனர்.

 

இங்கு கல்லூரியில் தனது நண்பர்கைளை எல்லாம் காக்க வைத்துவிட்டு ஒருவழியாக வந்து சேர்ந்தாள் அவர்களது தோழி தீபிகா (அருணின் தங்கை), ஏண்டி லேட்டா வரேன்னுஉமா கேட்டாள்,

 

உமா, நான் சொல்லிருக்கேன்இல்லசத்யாஅண்ணன்னுஇப்போ சென்னைக்கு வந்துட்டாருஇன்னிக்கி அவர் பிறந்தநாள்,

அவர் வீட்டுக்கு போயிட்டு வர லேட்ஆகிடுச்சு, இந்தாங்ககேக்எடுத்துக்கோங்க என நால்வருக்கும்கேக்கை நீட்டினாள் ,

வர்ஷி எடுக்கும்போது தனியாக ஒருபுறம் இருந்த கேக்கை அவளிடம் யாருமறியாமல்குடுத்தாள்..

(சத்யா கையால் குடுத்தகேக் துண்டு)

அப்போழுதுஉமா ,தீபி உனக்கு தெரியுமா நாளை மறு நாள் நடக்கும் காலேஜ் பங்க்ஷன்க்கு, தலைமை தாங்க கலெக்டர் வராரு என்றாள்,

அப்போ இன்னிக்கி நீ அழகு நிலையம் போய்டுவியே என்று கூறமூவரும்சிரித்துவிட்டனர்,

உமாதீபி அடிக்க போக அவள் ஓடி விட உமா துரத்தி கொண்டு சென்றாள்..

இங்கு சத்யனின்அறையில் மீட்டிங் முடிந்ததும் தன் டீமைகமிஷனர் உடன் சேர்ந்து முடிவு செய்து கொண்டிருந்தான்,அதன் படி ஒரு அசிஸ்டன்ட்கமிஷனர்நிரஞ்சன் ஐ பிஎஸ், தலைமையில் ஒரு இன்ஸ்பெக்டர் நான்கு கான்ஸ்டபில் கொண்ட குழு உருவாக்க பட்டது, இவர்கள் நேரடியாக சத்யாவின் கீழ் வேலை பார்ப்பார்கள்.

அவனை தொடர்பு கொள்ள முடியாத சமயங்களில் கமிஷனர் இடம் ரிப்போர்ட் செய்யலாம் என்று முடிவு செய்ய பட்டது,

நிரஞ்சன் வெளியூர் சென்றிருப்பதால் அவன் வந்ததும் தன்னை வந்து பார்க்க சொன்னான்.

கல்லூரியில்உமாவும் ,தீபியும் ஒருவரை ஒருவர் துரத்தி கொண்டு வந்தனர் , உமா எதிரில் வருபவனைகவனியாமல் அவன் மேல் மோதிவிடுபவள் போல் சென்று கடைசி நிமிடதில்மோதாமல்நின்றுவிட்டாள்,

பின்னாடி வந்த தீபியும் இவள் யாரை பார்த்து இப்படி நிற்கிறாள் என்று யோசித்து , உமாவின் பார்வை போன திசை  நோக்கி இவளும்பார்வையைசெலுத்தினாள்…

அங்கு நின்று இவர்களை கூர்மையான பார்வையால்துளைத்தவனை, பார்த்த உடனே கண்ணில் ஒரு அலட்சிய பாவம் கொண்டு வந்தாள் தீபி…

அவர்கள் நின்ற அச்சமயம்அம்மூவரை தவிர வேறு யாரும் அங்கு இல்லை ,

 

அவன் இவர்களை பார்த்து கோவமாகபொரியதுவங்கிவிட்டடான், இது காலேஜ் உங்க வீடு இல்ல,

(நாங்க எப்போயாஎங்கவீடுன்னு சொன்னோம்),

இப்படி தான் எதிரில் ஆள் வரது கூட தெரியாம அப்படி என்ன விளையாட்டு??

உமா அவனை நிதானமா ஒரு பார்வை பார்த்து விட்டு, இதை கேட்கநீங்கள் யாரு என்று நக்கலாக வினவினாள்..

நீங்கள் இந்த காலேஜில் என்ன வேலை செய்யறீங்க நான் உங்களை பார்த்ததே இல்ல,

அந்த கல்லூரியில்படிப்பவர்களின் இருந்து முதல்வர் வரை அடையாள அட்டை அணிந்துருக்க வேண்டும்,

அப்படி எதுவும் அவன் அணியவில்லை, அதனால் தான் தைரியமாக கேட்டு விட்டாள்..

அவன் நான் யாரு என்று கொஞ்ச நேரத்தில் தெரியும்என சொல்லி சென்று விட்டான்…

\\\இவரு பெரிய தோனி,பார்த்தஉடனேயே  அடையாளம்  தெரிய உமாமயின்ட்வாய்ஸ்///..

உமாதீபியிடம் இவன் யாரு? என்று கேட்க

தீபி அவளை முறைத்து விட்டு நானும் உன் கூட தானஇருக்கேன் எனக்கு எப்படி தெரியும் என்று சொல்லி செல்லும் அவனையே பார்த்து இருந்தாள்…

 

கவிதை : எழுத்தாளர் ஜான்சி

 

Advertisement