Advertisement

 

மழை -3

கல்லூரியில் அவன் யாரு?… என்று யோசித்து கொண்டே உமா தீபி நின்ற இடத்தை பார்த்தாள்

அங்கு வெறும் மரம் மட்டுமே இருந்தது,…

தீபி எப்போவோ எஸ்கேப் ….

அப்பொழுது கல்லூரி முதல்வர் எல்லோரையும் ஆடிட்டோரியம் வர சொல்லி அறிவித்தார்…

அதற்க்குள் அவளது படையுடன் தீபியும் வந்து விட, முடிந்தஅளவு உமா கண்களில் சூரியினை நிறுத்தி தீபியை எரித்து விட்டு அவர்களுடன் சென்றாள் …

அங்கு மாணவ மாணவிகள் அனைவரும் எதற்கு எல்லோரையும் வர வரசொல்லிருக்கிறார்கள் என்று யோசனையாக இருந்தனர்,…

நமது 5 ஸ்டார் படையில் வர்ஷி,தீபிய தவிர மற்ற மூவரும் எதற்கு என்று யோசனையுடன் இருந்தனர்,

அப்பொழுது மேடையை நோக்கி பார்வையை செலுத்திய உமாவின் கண்கள் விரிந்தது,அங்கு முதல்வருடன் அவளுடன் சண்டை போட்டவன் இருந்தான்,இப்பொழுது உமா அவனை சைட் அடிக்கும் வேலையை செவ்வனே செய்தாள்,

மாநிறத்தில் 6 அடிக்கு சற்று குறைவாய் கற்றை மீசையுடன் அலைபாயும் கேசத்துடனும்,திருத்தமான முகத்தடன் இருந்தவன் மேல் இருந்து பார்வையை அவளால் எடுக்க முடியவில்லை ,வைத்த கண் வாங்காமல் தன்னை பார்த்தவளை நோக்கி,அவன் என்ன என்பதுபோல் புருவம் உயர்த்தினான்அவன்..அவள் உடனே வேறுபுறம் பார்வையை திருப்பி விட்டாள்…

//ஐய..சும்மா சைட் அடிச்சா …பதிலுக்கு பார்க்கிற…உக்கும்….//

அப்பொழுது கல்லூரி முதல்வர் பேச ஆரம்பித்தார்

மாணவ மாணவிகளே, ஆசிரிய,ஆசிரியைகளே நம் பழைய சேர்மன் உடல் நிலை சரி இல்லையென்று ,நம் அனைவருக்கும் தெரியும்,அதனால் இப்பொழுது அவரது மகன் MR .அருண் பிரசாத் புதிய சேர்மனாக பொறுப்பேற்க வந்துள்ளார்…

உங்கள் அனைவரின் சார்பாக அவரை வரவேற்கிறேன்என்று சொல்லி ஒரு பூங்கொத்தை

 அருணிடம் கொடுத்தார்,ஏற்கனவே மேடையில் அவன் தோற்றம் கண்டு ஜொள்ளிய மாணவிகள் கூட்டம்,இப்பொழுது அவன் சேர்மன் என்று தெரிந்ததும் இன்னும் ஜொள்ளினார்கள்… அவர்கள் ஜொள்ளத்தில்,,அந்த ஆடிட்டோரியம் மிதந்தால் கூட ஆச்சரியம் இல்லை..

\\\ரோட்டில் தண்ணி வந்தா அது வெள்ளம் …,மௌத்தில் தண்ணி வந்தா அது ஜொள்ளம்…. இது புது மொழி மக்களே ஹி ஹி … ///

 

மாணவர்களுக்கோ அவனது தோற்றம் கண்டு அவர்கள் ஸ்டோமக் பர்னிங்…ல் கேக் கலவையை வைத்தால் உடனே கேக் ரெடி ஆகி விடும் அந்த அளவு பர்னிங்///

உமாக்கு அவன் கல்லூரி சேர்மன் என்றதும் திக் என்று ஆனது, உடனே அவள் தீபியை பார்க்க அவளோ அருண் கல்லூரிக்கு வரும் போது என்ன பாார்வை பார்த்தாளோ, அதே அலட்சிய பார்வையை கொஞ்சமும் மாறாது பார்த்தாள்.

உமா தான் அவனை பார்க்கவும் முடியமால் பார்வையை அவன் மேல் இருந்து எடுக்கவும் முடியமால் தவித்தாள்.இப்பொழுது அருண் பேச ஆரம்பித்தான்…

முறைமையாய் வரவேற்பு வாழ்த்து உரையை கவர்ச்சிகரமாக ஈர்க்கும் வகையில் ஸ்டைலாய் தொடங்கியவன்…..

 

என் அப்பா இந்த கல்லூரியை எப்படி நிர்வகித்தாரோ அதே போல நானும் நிர்வகிக்க முயற்சி செய்கிறேன்….என் அப்பாவிற்கு கொடுத்த ஒத்துழைப்பை நீங்கள் எனக்கும் தருவீர்கள் என்று நம்புகின்றேன் உங்களுக்கு என்ன பிரச்னை என்றாலும் நேராக என்னிடம் சொல்லலாம் என்னிடம் எந்த தயக்கமும் வேண்டாம் …

நான் இங்கு இல்லாதபொழுது ஏதாவது ப்ரோப்ளம் என்றால் என் நம்பர் எப்பொழுதும் நோட்டீஸ் போர்டில் இருக்கும் அதற்கு கால் செய்து விவரம் தெரிவிக்கலாம் என்னால் முடிந்த அளவு விரைவில் சரி செய்ய பார்க்கிறேன் ஓகே ..என்று பேச்சை முடித்தான்….

அருண் பேசி முடிந்ததும் அனைவரையும்  வகுப்புக்கு  செல்லும்மாறு  அறிவித்தார்கள்…

அவர்கள் வகுப்பிற்கு செல்லும் முன் அருண் தீப்பியை பற்றி பார்ப்போம்….

இருவரும் அண்ணண் தங்கை என்றாலும் அவர்களின் அம்மா தீபியின் ஒன்பதாவது வயதில் இறந்துவிட்டதாலும்…

அவர்களின் அன்னையின் தங்கைக்கு குழந்தை இல்லாத காரணத்தாலும் தீபி சித்தி,சித்தப்பா வீட்டிலும் அருண் ஹாஸ்டல்லயும் இருந்தனர் விடுமுறையில் இருவரும் அவர்கள் வீட்டில்

சித்தி வீட்டில் மாறிமாறியிருப்பதால் தீபியின் அண்ணனை யாருக்கும் தெரியாது…..

அருணின் இரு நண்பர்களுக்கு மட்டும் தீபியை தெரியும்..அருண் படிப்பை முடித்துவிட்டு அவர்களது மற்ற தொழிலை பார்க்கிறான் இந்த கல்லூரியை இவர்கள் வாங்கி மூன்று ஆண்டுகள் தான் ஆகிறது.அருணின் தந்தையே முழுவதும் நிர்வகித்ததால் அருண் விடுமுறை நாட்களில் மட்டுமே அவருக்கு உதவி செய்வான்..

அருண்தான் அவர் மகன் என்று கல்லுரியின் முக்கிய  பதவி வகிப்பவர்களுக்கு மட்டும் தான்  தெரியும்.

 

வகுப்புக்கு சென்ற மாணவ மாணவிகள்  எல்லோரும் அருணை பற்றிய பேசிக்கொண்டயிருந்தனர்….

இதில் பைவ் ஸ்டார் நண்பர்களின்  வகுப்பும்  அடக்கம்…

பசங்க எல்லாம் அவனது ஆளுமையை வியக்க

//அதில் நந்தனும் தேவாவும் அடக்கம் //

பெண்கள் எல்லாம் அவன் கம்பீரத்தை கண்டு ஜொள்ளினர்….வகுப்பில் மற்ற தோழிகள் பேச்சை கேட்டு வர்ஷிக்கும் தீபிக்கும் சிரிப்பு வந்தது என்றால் உமாவுக்கோ இவர்கள் எப்படி என் அருணை

// கண்டதும் காதலாமா?…//

பற்றி பேசலாம் என்று காதில் புகை வந்தது அதற்குள் மூளை வேலை செய்து என் அருண் என்றா சொன்னேன் யோசிப்பதற்குள் அவர்கள் கிளாஸ் மேடம் என்ட்ரி …

///அவளே இப்போ தான் யோசிக்க ஆரம்பிச்சா அது உங்களுக்கு பொறுக்காதே மனசாட்சி திட்டிங் ஹி ஹி ///

மேடம் பாடம் எடுக்க வந்து விட்டதால், அவர்களுக்கு பிடித்த சப்ஜெக்ட் மற்றும் பிடித்த மேடம் என்பதால் .. எல்லோரும் நல்ல பிள்ளைகளாய் கிளாசை கவனிப்பதால் அவர்களை தொந்தரவு செய்யமால் நாம் சமர்த்து பிள்ளைகளா சத்யா ஆபீஸ்க்கு என்ட்ரி கொடுப்போம் …

வாங்க..

சத்யா ஆஃபிஸில் வந்த முதல் நாளே நம் தலைவர் அதிரடி மாற்றம் கொண்டுவந்தார் …

\\கதையின் மெயின் ஹீரோவாம் அதுனால பில்ட் அப்பு ஹி ஹி //

அதில் முதலாவது காலையில் வரும் மனுக்களை எந்த தாமதமும் இல்லாமல் அவன் பார்வைக்கு கொண்டுவர வேண்டும்,மனு குடுக்க வருபவர்களை எக்காரணம் கொண்டும் காக்க வைக்க கூடாது அதில் குறிப்பாக வயதானோரை .. பொதுமக்களிடம் மரியாதையாக பேச வேண்டும் .. இன்னும் பல பல மாற்றங்கள் .. முதலில் பழைய கோப்புகளைய ஆராய துவங்கிவிட்டான்அங்கு பணியில் இருக்கும் சிலர் இவனுக்கு கீழ் வேலை செய்வது கடினம் என்றும் இன்னும் சிலர் இவனுக்கு டிரான்ஸபெர் எப்பொழுது

\\\முதல் நாளே டிரான்ஸபெரா நல்ல வருவீங்கடா ஒருத்தன் நல்லது பண்ணினா பிடிக்காதே ///

 

என்றும் எண்ண துவங்கி விட்டனர் ..

அப்பொழுது அங்கு சில பள்ளி மாணவிகள் தங்கள் ஆசிரியை உடன் சத்யாவை சந்திக்க வந்தனர்,என்ன வென்று கேட்ட பியூனிடம் தாங்கள் புது ஆட்சியாளரை சந்திக்க வேண்டும் என்று கூறினர்,அவன் வந்த உடனே சத்யாவின் ரசிகன் ஆகிவிட்டதால் அவர்களைகாக்க வைக்காமல் சத்யாவின் பி.ஏ விடம் விவரம் தெரிவித்தான் அவனும் அவர்களை சத்யாவிடம் அனுமதி வாங்கி சத்யாவின் அறைக்கு அழைத்து சென்றான் ..

அவர்கள் உள்ளே வந்ததும் சொல்லுங்கம்மா உங்களுக்கு என்ன பிரச்சனை என்று வினவினான் …

அவர்கள் சிறு வயது ஆட்சியாளரை எதிர் பார்க்கவில்லை போல் அவனிடம் விஷயத்தை சொல்ல மிகவும் தயங்கினர்..

அவர்களது தயக்கம் கண்டு தன் பி.ஏ வை வெளிய அனுப்பிவிட்டு என்ன உங்க பிரதர் மாறி நினைச்சி விஷயத்த சொல்லுங்க அக்கா,

அந்தவிளிப்பில் நெகிழ்ந்த ஆசிரியை..தம்பி, நாங்கள் பக்கத்து ஏரியா ஸ்கூல்ல இருந்து வரோம்,எங்க ஸ்கூல் பக்கத்துல மூணு மாசம் முன்னாடி டாஸ்மாக் ஆரம்பிச்சாங்க. நாங்க முன்னாடி இருந்த ஆட்சியாளர் கிட்ட டாஸ்மாக் ஆரம்பிக்க பெர்மிஸ்ஸின் குடுக்காதீங்கன்னு சொன்னோம் ஆனா அவர் குடுத்துட்டாரு அதுக்கு அப்புறம் ஆரம்பிச்சது பிரச்சனை .எப்போதும் ஒரு பொறுக்கி கும்பல் ஸ்கூல் முன்னாடி வந்து நின்னு சின்ன பொண்ணுகளை அசிங்க அசிங்கமா பேசறது அவங்கள வர்ணிக்கர்துன்னு ஒரே அட்டகாசம் இப்போ ஒரு பத்து நாளா இந்த 6 பொண்ணுகளை லவ் பண்ண சொல்லி ஒரே டார்ச்சர் அது போக.

இந்த பொண்ணுங்கள தொட்டு பேசறாங்க அதுக்கு மேல சொல்ல முடியாம நிறுத்த …

ஒரு நிமிடம் கண் மூடி திறந்தவன் அவர்களை பாத்து என்னை நம்பி இன்னிக்கி ஒரு நாள் டைம் குடுங்க நாளைக்கு உங்க பிரச்சனை சரி ஆகிடும் என்று அவர்களை அனுப்பி வைத்தான் …

தன் பி.ஏ வை அழைத்து சில உத்தரவுகளை பிறப்பித்தான் ..அடுத்து அவன் எடுத்த நடவடிக்கையில் ஒரே நாளில் சென்னை ஹீரோ ஆகிட்டான் ..அதில் வர்ஷிக்கு ஏக பெருமை..அப்படி என்ன நடவடிக்கை எடுத்தான்??

Advertisement