Advertisement

மழை-10
 சத்யா காலையில் கண் விழித்து எழுந்து, தன் வழக்கமான உடற்பயிற்சியும்  செய்து முடித்து  வந்து மொபைல் பார்த்தால்,அப்பவும் மேடம் மெசேஜ் செய்யவில்லை..
என்ன ஆச்சு என் வருகுட்டிக்கு இன்னும் மெசேஜ் செய்யலை, மேடம் இன்னும் துயில் கலையிலியோ.. 
சோம்பேறி, இன்னிக்கி காலேஜ் வேற லீவு..பதினொருமணிக்கு  அத்தையை கத்த விட்ட  அப்புறம் தான் எழுந்துக்கும்  வாலு, நாம ஆபீஸ்  கிளம்பலாம்..மெதுவா மெசேஜ் அனுப்புவா என்று விட்டு குளிக்ககிச்சென்றான் ..
குளித்து ரெடி ஆகி  பூஜை அறை சென்றவனை, அவ்வீ ட்டில் உள்ள எல்லோரும் வியப்பாக பார்த்தனர் ..
சத்யாவிற்கு கடவுளுள் நம்பிக்கை பெரிதாக இல்லை..ஆனால் நமக்கு  மேல் ஒரு சக்தி  இருக்கு என்று   நம்புபவன்.. அவன் பூஜை அறைக்குள் நிற்க, சத்யாவின் பெற்றோர், தாத்தா, கங்காமா அங்கு அப்பொழுது தான் வந்த நிரஞ்சன் கூட தீபியை பார்ப்பது போல் விழிவிரித்து அறை வாயிலில்  நின்று அவனை பார்த்தனர்…
கண்மூடி கைகூப்பி  கடவுள் படங்களுக்கு  முன் நின்றவன்,” நான் இது வரை உங்களை வணங்கியது இல்லை, இப்பவும் நான் உங்ககிட்ட  கேக்கறது  என் வருக்காக  தான், அவளுக்கு உங்களிடம்  நம்பிக்கை அதிகம், அவளுக்கு எந்த துன்பமும் கொடுக்காமல்  என்னிடம்  சேர்த்துவிடுங்கள்”, 
“ஓகே வா என் வருவுக்கு ஏதாவது பிரச்சனை வந்தது நீ என்னோட இன்னொரு முகத்தை பார்க்கவேண்டிருக்கும் ” என்று  அந்த ஆறுமுகத்தை  மிரட்டி  விட்டு வெளிய வந்தான்..
சத்யா வெளிய வருவதை  பார்த்து அனைவரும்  டைனிங் ஹாலுக்கு ஸ்கேப்பு ,சத்யாவும் அங்கு வந்தவன் தாத்தாவிடம் செல்லம் கொஞ்சி கொண்டு இருந்த நிரஞ்சனை பார்த்து,
“ஏன்டா குழந்தையை கொஞ்ச வேண்டிய வயசுல  தாத்தாட்ட செல்லம் கொஞ்சிட்டு  இருக்க ஹம்..”
பாவம்டா என் தங்கச்சி ..
உன் தங்கச்சி இல்லா கண்டிஷன் போட்டா , அந்த கண்டிஷனலாம்  எப்போ முடிஞ்சி  நான் எப்போ சம்சாரி ஆகறது..அதான், நான் ஒரு நல்ல பொண்ணா பார்த்து  நாளைக்கே  கல்யாணம் செஞ்சுக்கலாம்  இருக்கேன் நீதான்  முன்ன இருந்து நடத்தி தரணும்..
நிரஞ்சன் பேச ஆரம்பித்ததுமே சத்யா தன் மொபைலில்  இருந்து தீபிக்கு கால் செய்து விட்டான், நிரஞ்சன் பேசியதை அனைத்தையும்  கேட்ட தீபி சூறாவளி காற்றை போல், நிரஞ்சனை சுழற்றி  அடிக்க காத்துக்கொண்டிருந்தாள்..
ரஞ்சன் எங்க நீ சொன்னதையெல்லாம்  திரும்ப சொல்லு, “எதுக்காக சொல்ல சொல்ற?”
 மொபைலை காமித்து,என் சிஸ்டர் லைன்ல இருக்கா, நீ சொன்னது சரியாய்  கேட்டகலையாம்,
  நீ இன்னொரு தடவை சொன்னா உன் பெர்ஸ்னாலிட்டிக்கு  மேட்சா பொண்ணு பாக்கறேன்னு  சொன்னா, இந்தா நீயே அவளிடம் சொல்லிடு என்று மொபைலை ரஞ்சன் கையில் தின்னித்து விட்டான்..
மொபைலில் பயந்துகொண்டே “தீபி என்று அழைத்தான்  அந்த  அடாவடியான ஏ.சி.பி., “
சார் உங்கள் திருமணத்திற்கு  எனது அட்வான்ஸ்  வாழ்த்துகள்..என கூறி மொபைல அனைத்து விட்டாள்..
என்னது இவளோ அமைதியா பேசறா, மேடம் உச்ச  கட்ட  கோவத்துல  இருக்காங்க போல!!
 டேய்  ரஞ்சன்    சத்யாவோட  பாசமலர்  சீன்  தெரிஞ்சும்  இப்படி மாட்டிகிட்டிய , உனக்கு இது தேவையா என்று வடிவேல் பாணியில் முகத்தை நோக்கி தன் விரலை நீட்டி, தனக்கு தானே  கேட்டு கொண்டிருந்தான் ..
என்னடா  உனக்கு நீயே  பொலம்பிட்டு, கண்ண குத்திக்கிட்டு இருக்க,போலீஸ்காரனுக்கு கண்ணு  முக்கியம்டா , என்று அடக்கப்பட்ட புன்னகையோடு கேட்ட சத்யாவை, முறைத்தான் நிரஞ்சன் ..
ஏன்டா ஏன்? என்று கேட்ட  நிரஞ்சனுக்கு “நண்பேன்டா” எனக்கட்டிப்பிடிக்க வந்த சத்யாவை அடிக்க துரத்தினான்  நிரஞ்சன்..
இரு அதிகாரிகளும் தங்கள் பொறுப்புகளை கடமைகளை  சிறிது நேரம் ஒத்திவைத்து விட்டு சிறுவர்கள்  போல் ஓடிப்பிடித்து  விளையாடி கொண்டிருந்தனர்..
நமக்கு எத்தனை வயதானாலும், நம் பாலியகால நண்பர்களை   கண்டுவிட்டால், நாமும்  சிறுவர்கள் போல் குதூகலித்து , அந்த பருவத்திற்க்கே போய் விடுவோம், எத்தனை பெரிய பதவியில்  இருந்தாலும் எத்தனை செல்வாக்கு  இருந்தாலும்   நண்பர்களிடம்  தான் நம் இயல்பான குணத்துடன்  பழக முடியும், நம்மை  நம் இயல்பான குணத்துடன்  ஏற்றுக்கொள்ளும்  தோழமை  கிடைப்பதும்  வரமே…
சத்யா குறும்புடன் ,சிரித்த முகத்துடன்,நிரஞ்சனுடன்  விளையாடுவதை கார்த்திக்கும்,லட்ஷமியும் ஆச்சரியமாக  பார்த்துக்கொண்டிருந்தார்கள்..
தங்கள் மகனா? தங்களிடம் முகத்தை எப்போதும்  இறுக்கமாக  வைத்து இருப்பவனா  என்று வியந்தனர்!!
தன்மகன் மற்றும் மறுமகளை பார்த்த ராஜவேலு,
“என்ன ஆச்சிரியம் நம் சத்யா தான் இது,உங்களால்  தான் அவன் உண்மையான  குணம் மாறிபோய் எந்நேரமும் இருக்கமாகவே இருக்கிறான்..இப்போது  தான் அவன் குணம் வெளி வருது..உங்க நடவடிக்கையால்  அவனை மறுபடியும் இறுக வைச்சுராதீங்க..அவன் சந்தோஷம இருக்க முக்கியம் காரணம் அவனது நண்பர்கள் ,தீபி அவனது அத்தை குடும்பம் , நேற்றில் வர்ஷி, அதை தயவு செய்து கெடுத்துவிடாதீர்கள்..”
அவன் வர்ஷினி தான் கல்யாணம் செஞ்சுப்பான், நான் அவங்க திருமணத்தை நடத்தி வைப்பேன் , இதுல  உங்களுக்கு விருப்பம்  இல்லைனா  நீங்க இந்த வீட்டை விட்டு வெளிய போங்க என்றார்!!
ஏற்கனவே பையன் தங்களை பேசியதில் இருந்து தங்கள் செய்கையில் வெட்கி இருந்தவர்கள், தற்பொழுது  ராஜவேலுவின் பேச்சில்  இருந்த விலகல் தனிமையில் ஆடி போயினர்..
“எங்களை மன்னித்துவிடுங்கள் அப்பா நாங்கள் செய்த செயலின்  வீரியத்தை  இப்பொழுது  தான் உணருகிறோம்..சத்யாவின் சந்தோஷம் தான் எங்களுக்கு  முக்கியம், திருமண முடிவில்  இருந்து எல்லாம் அவன் விருப்பம் தான் நாங்கள் எதுலயும்  குறுக்க நிற்க மாட்டோம், அவனுக்கு நல்ல அப்பா அம்மவா, உங்களுக்கு நல்ல மகனா மருமகளா  இருக்க ட்ரை  பண்றோம். சத்யாவை மட்டும் எங்க கூட பேச சொல்லுங்க, “ப்ளீஸ்  அப்பா..
கார்த்திக்,லட்ஷமி காலம் கடந்த வரும் பாசத்திற்கு எவ்வித மதிப்பும் இல்லை.. என்னால் உங்களுக்காக சத்யாவிடம் பேச முடியாது , அவன் அனுபவித்த வலி, வேதனை பச்…உங்கள் மாற்றத்தை  அவனுக்கு உணர்த்துங்கள்  பார்க்கலாம்…
 இருவரும் விளையாடி முடித்து டைனிங் ஹாலுக்கு வந்தனர்,
சத்யா உன்கிட்ட கொஞ்சம் பேசணும் ஆபீஸ்ல பேச வேண்டாம் தான் வீட்டுக்கு வந்தேன், நீ பண்ணின அலும்பல மறந்துட்டேன்,..
அவன் பேசியதை  கேட்டு புன்னகைத்த  சத்யா, விடுடா  சாப்பிட்டு  ரூம்ல போய் பேசலாம், சாப்பிட வர தான?
“டேய் நான் கங்காமா சமையலை  சாப்பிட தான் வீட்ல சாப்பிடாம வந்தேன், அதுக்கும் ஆப்பு ரெடி பண்ணாதடா  பாதகா , “
“சரி சரி புலம்பாம  வா சாப்பிடலாம் ” என்று இருவரும் நாற்காலியில் அமர்ந்தனர்.
சத்யா தன் பெற்றோர் பக்கம் பார்வையை கூட திருப்பாமல்  தாத்தாவிடம்  பேசிக்கொண்டே சாப்பிட்டான்..
நிரஞ்சன் கூட கார்த்திக் தானாகவே  வந்து பேசியதால்  அவனும் பதில் சொல்லிக்கொண்டே உணவு உண்டான்..
\\\என் தாய் மாமன்  என்னை இண்டெர்வியூ எடுப்பாருன்னு தெரிஞ்சா வீட்டிலே  சாப்பிட்டு வந்திருப்பேன்..ஷ்ஷ்ஹ்.. எவளோ கேள்வி நிம்மதியா சாப்பிட விடறாங்களா…////
உணவு முடித்து சத்யாவின் அறைக்கு வந்த நிரஞ்சன், “ஒரு நியூஸ் வந்துருக்குடா..இந்த கடத்தல்  கும்பல் அடுத்த கடத்தலுக்கு  பிளான்  பண்ணிட்டாங்கனு , ஆனா எப்போ எங்கன்னு  தெரியலைடா , ஒரு  ஹிண்ட்டும் இல்லாம என்ன பண்றது  ஒரே குழப்பமா  இருக்கு..”
குழம்பாம தெளிவா இரு, எனக்கு என்னவோ அடுத்த கடத்தல ஏதாவது தகவல்  நிச்சியம்  நமக்கு கிடைக்கும்னு தோணுது, நீ சிட்டி  புல்லா நம்ப டீமை  அலர்ட்   பண்ணு, செக் போஸ்ட  பிரீயா விடு,
 அப்போ தான் நாம ஒழுங்கா வேலை செய்யலைனு  நெனைச்சு அவனுக  அலட்சியமா  இருப்பாங்க..அந்த நேரம் பார்த்து நாம அட்டாக்  பண்ணலாம் ஓகே..
சரிடா எனக்கு ஒரு மீட்டிங் இருக்கு நான் கிளம்பறன், நானும் ஆபீஸ் தான் போறேன்  வா..
இருவரும் அவரவர்  அலுவலகம் நோக்கி விரைந்தனர்..
முக்கியமான வேலைகளை  முடித்து சத்யா மணி பார்த்த பொழுது நண்பகல்  ஆகிருந்தது… அதுவரை எழாத வர்ஷியின் நினைவுகள் மெல்ல  அவனை ஆக்கிரமித்தது..உடனே போனை எடுத்து பார்த்தால் மேடமிருந்து மெசேஜ் வரவில்லை..
என்ன ஆச்சு இவளுக்கு ஏன் மெசேஜ் பண்ணவில்லை.. தான்தான் அவளை மெசேஜ் பண்ண கூடாது என்று சொன்னதை மறந்து அவள் மேல் கோவம்  கொண்டான்…
மீண்டும் பணிகள்  அவனை இழுத்துக்கொள்ள  முழு மனதாக அதில் ஈடுபட்டான்..
அன்று அதிகமான  பணியின் சத்யா வேலை முடிந்து வீடு திரும்ப  இரவு ஆகி விட்டது..
வீட்டின் உள்ளே நுழைந்தவுடன்  ஹாலில்  இருந்த அன்னையை  கண்டுகொள்ளாமல், கிட்சனுள்  இருந்த கங்காமாவிடம் ,
கங்காமா நான் சாப்பிட்டாச்சு, எனக்கு பாலும் வேண்டாம் நீங்க தூங்குங்க  என்று தன் அறைக்கு சென்றுவிட்டான்..
மகனின்  உதாசீனத்தில்  லஷ்மியின்  கண் கலங்கியது..காலம் கடந்த  வருத்தத்தில் என்ன பயன் ..
அறைக்கு வந்த சத்யா குளித்து உடைமாற்றி  கட்டிலில் படுத்து  மொபைலை பார்த்தான்..
/// இதே வேலையா திரியறான்///
அது ஒரு மெசேஜ் கூட காட்டாமல் அவனை கடுப்படித்தது ..
அடியே  வரு ஏண்டி படுத்துற ..மெசேஜ் அனுப்புடி  செல்லம் ..
தலைவனை பிரிந்த  தலைவியை  தாக்கிய பசலை நோய் , இங்கு தலைவனை தாக்கியதோ?
அவன் வாடுவது தலைவியின் உள்ளுணர்வை தாக்கியதோ,
எத்தனை நேரம் அப்படியே படுத்து  இருந்தானோ, மெசேஜ் டோனில்  விழிப்புக்கு வந்தவன் மொபைலை பார்த்தான்.கிஷோரின்  மெசேஜ் ..
அக்கா உங்கள் சொல்  பேச்சு கேட்டு நல்ல பிள்ளையாய் இருந்ததுக்கு என்ன பரிசுன்னு  கேக்க சொன்னாள்?
அப்போதான் அவனுக்கு தன் கண்டிஷன் ஞாயபகம் வந்தது..
முகத்தை பல்  தெரியும் அளவு சிரித்து கொண்டு பதில் மெசேஜ்
     பரிசு :  “கண்டிஷன்  வேலிடிட்டி எக்ஸ்பயர்ட் “(condition validity expired)…
பத்து நிமிடத்தில்  மொபைல் ஹாங் ஆகற  அளவு மெசேஜ் ..
அவள் குரலை  கேட்க்கும் ஆவலில்  அழைப்பு விடுத்தான் ..
அந்த பக்கம் இந்தர் என்ற மெல்லிய  குரலுக்கு
சொல்லுடா, என்றவன் குரல் குழைந்து  ஒலித்தது..
கம்பீர  குரலையே  கேட்டு பழகிய  வர்ஷிக்கு இந்த குரல் உயிர் வரை சென்று சிலிர்த்தது…
இந்தர் உங்களுக்கு மெசேஜ் அனுப்பமா, உங்கள பாக்காம இருக்க முடியலை , ஒரு நாள் உங்க கண்டிஷன் பாலோ பண்றதுகுள்ள  நான் பட்ட  கஷ்டம் ..அப்ப்பா …நீங்கள் என்கூட முன்ன மாறி கூட இருங்க, ஆனா நான் மெசேஜ் அனுப்பறேன்  என்று சொல்லும்போதே  லைன்  கட் ஆகிவிட்டது..என்ன ஆச்சு மறுபடியும் கோவமா என்று எண்ணும்போதே விடீயோக்கால்லில் அழைப்பு வந்தது…
உள்ளம் துள்ள அட்டென்ட் செய்தாள்..
வர்ஷி நான் பேசி முடிக்கும் வரை எதுவும் பேசாதே என்றவன் குரல் ஆழ்ந்து  ஒலித்தது ..
எனக்கு உன் முகத்தை பார்த்து பேசணும், அதான் விடீயோக்களில் கூப்பிட்டேன்..
நான்இன்னிக்கி உன் மெஸேஜ்ஜ எவளோ மிஸ் பண்ணினேன்  தெரியுமா..உனக்கு நான் கண்டிஷன் போட்டதே  மறந்து போன் எடுத்து எடுத்து பார்த்து, நீ மெசேஜ் அனுப்பவில்லைனு உன் மேல கோவபட்டு,
சாரிடா, இன்னிக்கி நான் நானாவே  இல்லை, எப்படியோ  ஒழுங்கா வேலை மட்டும் செஞ்சேன், நேத்து உன்ன உன் வீட்ல ட்ரோப் செஞ்சதுல்லிருந்து, இதோ இந்த நொடி வரை உன் நினைப்பு தான்..
கிஷோர் மெசேஜ் அனுப்பலைனாலும்  நானே கொஞ்ச நேரத்துல உன் கூட பேசியிருப்பேன்..
கிஷோர் மெசேஜ் பார்த்ததும்  அப்படி ஒரு சந்தோசம் எனக்கு..
என்னை எனக்காக மட்டும் லவ் பண்ணும்  ஒருத்தி, என் மேல காட்டும்  எதிர்பார்ப்பு  இல்லாத அன்பு, கண்டிஷன் போட்ட அவனே பேசட்டும்னு வீம்பு  இல்லாம,ஈகோ இல்லாம என்ன நீ தொடர்புகொண்டவிதம், என்ன ஜெய்சிட்டடி நீ உன் அன்பால, குணத்தால,செய்காயால என்ன கௌரவபடுத்திட்ட இப்போ எனக்கு இருக்கற  உணர்வுகளை புரிஞ்சிக்க  நீ ஆம்பளையா  இருந்தா தான் முடியும்..
 எனக்கு உன்ன பக்கத்திலே என் நெஞ்சுல பொத்தி வைச்சுக்கணும்..
உன் மடியில் படுத்து வயற்றில் முகம் பதித்து செல்லம் கொஞ்சனும்..
நீ எனக்கு சாப்பாடு  ஊட்டிவிடனும்..
உன்ன விட்டுட்டு ஆபீஸ் போகமாட்டேனு  சொன்னா, நீ என்ன கெஞ்சி,கொஞ்சி ,முத்தம் குடுத்து சமாதானம் செஞ்சு அனுப்பனும்..
இன்னும் பெரிய லிஸ்ட்  இருக்குடா மெதுவா ஒவ்வொண்ணா  சொல்றேன்..
 வருமா நான் உன்ன ஹர்ட் செஞ்சதுக்கும்  இத்தனை  நாள் காக்க வைச்சதுக்கும்  சாரிடா..
உன்கிட்டசாரி சொல்ல எனக்கு எந்த ஈகோவும்  இல்லை..
உன்னை பற்றி என்னுள்  தோணும்  உணர்ச்சிகளுக்கும்,ஏக்கங்களுக்கும் பெயர் காதல் என்றால்..நான் உன்னை காதலிக்கறேன் என்றவன் ஆழ்ந்த  குரலில்
               “ஐ லவ் யூ வருமா, லவ் யு சோ மச், பிரம் பாட்டம் ஆப் மை ஹார்ட்”  (from bottom of my heart)
நீ என்னை எந்த அளவுக்கு காதலிக்கறன்னு தெரியும், உன் அளவு நான் காதலை காட்டுவேனான்னு  தெரியலை, ஆனா நிச்சயமா  உன்ன சந்தோஷமா வைச்சுக்க  முடியும்னு நம்பறேன்..
  சத்யா பேச பேச வர்ஷியின் முகத்தில் நவரசமும்  வந்து போனது..
அவன் சொன்ன ஐலவ்யுவை கேட்டு பாராசூட்டில் பறந்தாள்.
எத்தனை வருட காதல்… அது நிறைவேறியதில்   கண்ணில் நீர்  அரும்பி உதடு துடிக்க , கண்கள் விரிய  இருந்தவளின் தோற்றம் அவன் மனதில் ஆழமாக பதிந்தது..
இந்த நொடியை  இருவரும் பொக்கிஷமாக  மனதினுள் சேகரித்தனர், எவளோ காலமானாலும்  தித்திக்கும்  நினைவுகள் இருவருக்கும்…
வருமா என்னடா செல்லம்..
ஒன்னும் இல்லை என்று தலை ஆட்டியவள் பின் “ஐ டு லவ் யூ” என்றாள்…
அதை கேட்டு அவன் அவள் உதடுகளை பார்த்து கொண்டே அழுந்த  முத்தம் குடுத்தான்..அதில் ஏற்கனவே சிவந்து  இருந்த முகம் மேலும் சிவந்து ஜொலித்தது..
இருவரும் மௌனமாக சில நொடிகள் கடத்தியபின் மீண்டும் பேச ஆரம்பித்தார்கள், என்ன பேசினார்கள்  என்பது  இருவரின் ரகசியம். நடு ஜாமம்  வரை பேசியவர்கள், மொபைலிலில் சார்ஜ்  போனதால்  உறங்க  சென்றார்கள்..கனவில் வர வேண்டும் என்ற நிபந்தனையுடன்…
 என்கிட்டேயும் என்ன பேசினார்கள் என்று சொல்லவில்லை ..எனக்கு தெரியாது மக்காஸ் .. ஜோடி  சேர்ந்த  அப்புறம் சேர்த்து  வைச்ச  என்னையே  கழட்டிவிட்டுட்டாங்க..இவங்கள  என்ன பண்ணலாம்னு கமெண்டில்  சொல்லுங்க தோழமைகளே…மீ வெய்ட்டிங்…

Advertisement