Advertisement

தென்றல் – 10

தென்றலுக்கு அடுத்து வந்த நான்கு நாட்களும் நரகமாய் தான் கழிந்தது.. இன்னும் இரண்டே நாட்கள் தான். அவள் வந்த வேலை முடிந்துவிடும்.. அன்று ப்ரித்வியோடு பேசவேண்டும் என்று ஆவலாய் கிளம்பி வந்து அடுத்தடுத்து அவர்களையும் மீறி இருவரும் வார்த்தைகளை கொட்டியபின்னே இருவருமே இப்போது அமைதி காத்தனர்.

‘எனக்காக நீ வராம இருக்காத..’ என்று ப்ரித்வி சொன்னதற்காக அவள் போனாள் இல்லை.. அவனுக்காகவே தான் போனாள்.. அவனை காண வேண்டும் என்று தான் அடுத்து அடுத்து என்று நான்கு நாட்களும் செல்கிறாள்.. ஆனால் இப்போது ப்ரித்வி தான் கண்டுகொண்டான் இல்லை..

அன்று வீட்டிற்கு சென்று கமலியை கட்டியணைத்து அழுதவள், வெகு நேரம் அழுதபடி தான் இருந்தாள்..

“தென்றல்.. போறப்போ நல்லாதானேடி போன.. இப்போ என்ன ??” என்று கமலி அவளை சமாதானம் செய்ய, இன்னும் அவள் அழுகை கூடியது தான் மிச்சம்..

“என்னாச்சு தென்றல்..?? அந்த தம்பி முடியாதுன்னு சொல்லிடுச்சா??” எனவும், விலுக்கென்று நிமிர்ந்து பார்த்த தென்றல் இல்லையென்று தலையை ஆட்ட,

“அப்.. அப்போ சரின்னு சொல்லிடுச்சா??” என்றதற்கும் இல்லையென்று தலையாட்டினாள்,.

“ஏய்.. என்ன தான்டி சொல்ற.. கொஞ்சம் புரியும்படியா சொல்லேன்.. நீ இப்படி கண்ணீர் விடுற அளவுக்கு என்னாச்சு…” என,

“ம்மா.. நான் தானம்மா லாஸ்ட்ல ரொம்ப தப்பு.. நான் தான் ப்ரித்விய தப்பா நினைச்சிட்டேன்.. எல்லாமே என் தப்பு தான்மா…” என்றவள் நடந்ததை  முழுவதுமாய் சொல்லி மீண்டும் அழுது தீர்த்தாள்.

முகத்தை மூடிக்கொண்டு தேம்பி தேம்பி அழும் அவளையே கமலி கொஞ்ச நேரம் வருத்தமாய் பார்த்திருந்தார்..

‘என்ன பொண்ணு இவ.. தெளிவா பேசுறா.. எல்லாரையும் புரிஞ்சு நடந்துக்கிறா.. பின்னால நம்மாலே இல்லைனாலும் நல்லா வாழ்ந்திடுவான்னு நம்பிக்கைல இருந்தா, இப்படி அவளுக்கு பிடிச்ச விஷயத்தையே புரிஞ்சுக்காம சொதப்பிட்டு வந்திருக்காளே…’ என்று கமலி நினைக்க,

“என்னம்மா உனக்கு கூட என்மேல கோவம் வருதா.. ஆனாம்மா ப்ளீஸ்.. நான் வேணும்னே எதுவும் இப்படி செய்யலம்மா..” என,

“ஹ்ம்ம்.. இதில கோவப்பட்டு என்ன செய்ய தென்றல்.. யாரும் எதுவும் வேணும்னு பண்றதில்லை தான். ஆனா சில நேரத்துல கண் முன்னாடி இருக்கிறதா நம்பனும் தென்றல்.. நடிக்கிறான்னு நினைச்ச… ஆனா ப்ரித்வி நடிச்சிருந்தா நிச்சயம் உன்னால அவனை லவ் பண்ணிருக்க முடியாது.. ஏன்னா நான் உன்னை அப்படி வளர்க்கலை..

அதேபோல தான் அந்த பையனும்.. நீ சொல்றத வச்சு பார்க்கும் போது, நல்ல குணம்னு சொல்றதவிட தங்கமான குணம்னு தான் சொல்லணும்.. நீ மனசை போட்டு குழப்பாத.. ஆனா நீ பேசினது கொஞ்சம் ஜாஸ்தி தான்.. அதுனால கொஞ்சம் ஆரவிடு.. எல்லாம் சரியாகும்.. அந்த நவீன் கூட தான் உன்னை லவ் பண்றேன்னு சொல்லிட்டு திரிஞ்சான்.. ஆனா வீட்ல பொண்ணு பார்க்கவும் நல்லவன் போல கல்யாணம் பண்ணிட்டு போயிட்டான்.. அதான்டி நடிப்பு.. ப்ரித்வி உண்மை..” என்று அறிவுரை சொன்னார்..

“ஹ்ம்ம் இன்னும் ஒன் வீக்ல ப்ராஜெக்ட் முடிஞ்சிடுமே.. அதுக்குள்ள எல்லாம் சரியாகிடுமா??”

“அதுசரி.. எல்லாத்தையும் சொதப்பிட்டு வந்து, அதுக்குள்ள சரியாகிடுமான்னு கேட்டா..?? நீ தான் சரி செய்யணும்.. சும்மாயில்ல தென்றல்.. ஒருத்தர் உன்மேல வச்ச அன்பை ஒடச்சிட்டு வந்திருக்க.. உடனே அழாத.. ஆனா நீ தான் அந்த தம்பிய சமாதானம் செய்யணும்.. நான் நேத்தே அப்பாக்கிட்ட சொல்லிட்டேன்..” என, இது அடுத்த அதிர்ச்சி தென்றலுக்கு..

“சொல்லிட்டியா… ஏன்மா.. எதுவுமே முடிவு தெரியாம ஏன் சொன்ன..??”

“என்ன முடிவு… இப்போ நாங்க சொன்னா நீ வேற மாப்பிள்ளைக்கு கழுத்த நீட்டுவியா என்ன இல்லையே.. அதேபோல தான் அந்த பையனும்.. எனக்கு அப்படிதான் தோணுது.. கொஞ்ச நாள் போனா எல்லாம் சரியாகும்.. நீ போய் அடுத்து பேசி மன்னிப்பு கேளு.. அப்புறம் இன்னுமொன்னு அவங்கம்மாவுமே போன வாரம் உங்கப்பாக்கிட்ட பேசிருக்காங்க..”

“என்.. என்ன பேசினாங்க..????”

“ஹா.. அதெல்லாம் தெரியாது.. அவங்க பேசினாங்கன்னு மட்டும் தான் அப்பா சொன்னார். அதுனால நல்ல பிள்ளையா பண்ண தப்ப சரி பண்ண பாரு.. யாரும் முழுக்க நல்லவங்களும் இல்லை.. யாரும் முழுக்க கெட்டவங்களும் இல்லை.. இதை முதல்ல புரிஞ்சு நடந்துக்கோ..” என்ற கமலியின் வார்த்தைகள் தான் இப்போது வரைக்கும் தென்றலுக்கு தைரியம் கொடுப்பவை..

நான்கு நாட்கள்.. ஒவ்வொரு முறையும் ப்ரித்வியை காணும் போதெல்லாம் திடுக்கிடும் அவள் நெஞ்சம்.. சில நேரம் என்ன பல நேரம் அவனது பார்வையில் இவளில் நிலைத்து பின் முடியாது நகர்ந்து செல்வதை தென்றல் உணரும் போதெல்லாம் ஓடி சென்று அவனை கட்டிக்கொண்டு மன்னிப்பு கேட்க தோன்றும்,..

ஆனால் இருக்குமிடம் அப்படி செய்ய முடியாதே..

எப்போதுமே ப்ரித்வியிடமிருந்து வரும் பிரத்தியேக காலை வணக்கம் இப்போது காணாமல் போனது.. தேடி வந்து பேசுவது போய், தென்றல் தனித்திருந்தால் அவளை தவிர்த்து செல்ல ஆரம்பித்தான்.. பத்து பேர் இருந்தால் பொதுவாய் அனைவரிடமும் பேசுவது போல் அவளிடமும் ஓரிரண்டு வார்த்தை ஃபார்மலாய் பேசினான்.. பேசுவது போல் காட்டினான் அவ்வளவே..

இத்தனை நான் ப்ரித்வியின் கண்களில் தெரியும் நெருக்கம் இருந்த இடம் தெரியாமல் போய் அவன் கண்களில் தெரியும் வலியும், வருத்தமும் தென்றலுக்கு இன்னும் வலிக்கச் செய்தது..

தான் நோவது ஒரு வலியென்றால், பிறரை நோகச் செய்தது ஒரு வலியல்லவா… தென்றல் இப்போது இரண்டையுமே அனுபவிக்கிறாள்..

இன்னும் இரண்டே நாட்கள்.. அனைத்தையுமே முடிந்துவிடும்.. இனி இங்கே வர முடியாது..  எப்படி வருவது… ப்ரித்வியுடன் சுமுக உறவிருந்தாலாவது வரலாம்.. இங்கே சாதாரண பேச்சுக்கே பஞ்சமாய் போனது..

‘அடுத்து இங்க வரவே முடியாதா???’ என்ற எண்ணத்தில் மூழ்கி போனாள் தென்றல்..

“ஏய் தென்றல்.. என்ன.. போ.. இதெல்லாம் பிரிண்ட் அவுட் எடுத்திட்டு வா…” என்று பிரதீபா சொல்ல,

“ஹா… என்ன பிரதீப்.. என்ன சொன்ன??” என்றாள் சுரத்தேயில்லாமல்..

“அதுசரி.. போ டி இதெல்லாம் பிரிண்ட் அவுட் எடுத்துட்டு வா.. பைண்டிங் கொடுக்கணும்…” என்று விரட்ட,

“ம்ம்ச் நீயே போ டி.. எனக்கும் சேர்த்து எடு..” என்றாள் விரக்தியாய்..

“என்னது.. ஏன்டி நானும் பாக்குறேன் நீ நாலு நாளா சரியில்ல என்னாச்சு உனக்கு…??” என்று பிரதீபா குரலை உயர்த்த,

“என்ன தென்றல் அடுத்த சீனா..??” என்று ஜான்சி நக்கலாய் கேட்க, மற்ற நேரமாய் இருந்தாள் தென்றல் இருவரையுமே சும்மா விட்டிருக்க மாட்டாள், ஆனால் இப்போது??

“ம்ம்ச் போறேன்…” என்று பிரிண்ட் அவுட் எடுக்க செல்ல, ஜான்சியை ஒரு முறை முறைத்த பிரதீபா அவளும் எழுந்து தென்றல் பின்னோடு சென்றாள்..

ப்ரித்வியின் அலுவலகத்தில் பிரிண்டரும் அதோனோடு பொருத்திய ஒரு கணினியும் தனியாக ஓரிடத்தில் வைக்கப்பட்டிருக்கும்.. தேவை என்போர் அங்கே எடுத்துக் கொள்ளலாம்.. தென்றல் போய் அங்கே நிற்க, பிரதீபாவும் வந்தாள்.

“குடு நானே எடுக்கிறேன்..” என,

“ம்ம்ச் நானே எடுக்கிறேன்..” என்றாள் தென்றல்..

“நீதானே.. அங்க பார் பிரிண்டர் ஆன் பண்ணவேயில்ல.. தள்ளு உன்னைவிட்ட அப்புறம் தப்பு தப்பா செஞ்சிடுவ…” என்று பிரதீபா சாதாரணமாகச் சொல்ல,

“ம்ம் ஆமாடி.. நான் தப்பா தான் எல்லாமே செஞ்சிட்டேன்..” என்றாள் வருந்தி..

“என்னடி..?? என்ன சொல்ற..??”

“ம்ம்ச் ஒண்ணுமில்ல விடு டி…” என்றவள் அங்கிருந்த இருக்கையில் அமர,

‘என்னவோ சரியில்லை..’ என்று பிரதீபாவிற்கு தோன்றியதோ என்னவோ, சாதாரணமாகக் கேட்பது போல் கேட்டாள்.. “ஏன் தென்றல்.. நீ இங்க வரும்போது ப்ரித்வி அண்ணாவ உனக்கு பிடிக்கவே பிடிக்காது.. இப்போ எப்படி?? பிடிச்சிருக்கா??” என,  அவ்வளோதான் தென்றல் கண்ணீர் சிந்திவிட்டாள்..

“ஏய் ஏய் இப்போ நான் என்ன கேட்டேன்னு இப்படி அழற…” என்று அவளருகே செல்ல, பிரதீபாவிடம் தென்றல் கடகடவென்று ஒன்றுவிடாமல் சொல்லிவிட்டாள்..

அனைத்தையும் கேட்டபோது தென்றல் மீது அவளுக்கும் கோவம் வந்தது தான்.. ஆனால் அவளே வருந்தி அழுகிறாள்.. அவளை சொல்லி என்ன செய்ய.. ஆகையால் முடிந்தளவு தென்றலை சமாதானம் செய்தவள், நேரம் கிடைக்கவும் ப்ரித்வியை போய் பார்த்தாள்..

“அண்ணா தென்றல பாக்கவே கஷ்டமாயிருக்குண்ணா…”

“ம்ம் சொல்லிட்டாளா??” என்று கேட்டவனின் முகத்திலும் அதே வேதனை..

“கொஞ்ச நேரம் முன்னாடி தான் சொல்லி அழுதா.. கில்டியா ஃபீல் பண்றாண்ணா.. ரொம்ப மனசு வருந்துறா…” என,

“ஹ்ம்ம் அவ வெளிய சொல்லிட்டா நான் சொல்லல.. அவ்வளோதான் வித்தியாசம்…” என்றான் அவனும் உணர்ந்து..

“ரெண்டு பெரும் இப்படியே இருந்தா எப்படிண்ணா..??”

“இப்படியேவா?? எல்லாம் சரியாகும்.. அவளை நானும் என்னை அவளும் கண்டிப்பா விட்டிட மாட்டோம்.. யூ டோன்ட் வொரி..” என்று சமாதானம் செய்து அவளை அனுப்பி வைத்தான்..

ப்ரித்வி இதுவரை நடந்தவைகளை யாரிடமும் சொல்லவேயில்லை.. மாதுரிக்கு தெரிந்தால் வந்து தென்றலோடு சண்டையிட்டாலும் இடுவாள்.. ஆக தென்றலே கொஞ்சம் புரிந்துகொள்ளட்டும் என்றுதான் அவனும் வெறுமெனே இருந்தான்.. ஆனால் இனியும் அப்படி இருக்க முடியுமா.??

முடிவெடுத்தவனாய், எழுந்து வரவேற்பறைக்கு வந்தவன், அனைவரையும் ஒன்று கூட்டி “கைஸ்… ஓன் குட் நீயுஸ்…” என, தென்றலுக்கு என்ன சொல்ல போகிறானோ என்று இருந்தது..

அன்றுபோல் இன்றும் அனைவரின் முன்னும் தென்றல் என்று சொல்லிடுவானோ என்று பயந்து போய் படபடப்பாய் பார்க்க, அவள் தவிப்பை ரசித்தவன், பின் மெதுவாய் “நம்ம கம்பனியோட செக்கன்ட் ஆனிவர்சரி இன்னும் டூ டேஸ்ல வருது.. சோ ஒரு சின்ன பார்ட்டி  பண்ணலாமா???” என,

“ஹேய்….” “சூப்பர்…” “வாவ்…” “பார்ட்டியா…” என்று பல உற்சாகக் குரல்கள் கேட்க, தென்றலோ ‘ப்பூ.. இவ்வளோதானா…’ என்று பார்த்தாள்.    

“காம் டவுன்… காம் டவுன் ப்ளீஸ்…” என்றவன், “அதுமட்டுமில்ல.. நம்ம ப்ராஜெக்ட் ஸ்டூடண்ட்ஸ் சக்ஸஸ்ஃபுல்லா அவங்க பிராஜெக்ட் முடிச்சிட்டாங்க.. சோ பார்ட்டி கூட சேர்ந்து அவங்களுக்கும் சின்னதா ஒரு சென்ட் ஆப் கொடுக்கலாம்…” என, மீண்டும் அங்கே கரகோஷம்..

ஆனால் தென்றலுக்கோ மனம் கலங்கியது.. அப்போ இதோடு அவ்வளோதானா??

‘நான் தான் லூசு மாதிரி பண்ணேன்னா?? இவன்தான் பெரிய அறிவாளியாச்சே.. இவனுக்கு எங்க போச்சு புத்தி..’ என்று அன்றைய நாளெல்லாம் கறுவி, பின் என்னவோ பட்டென்று தோன்ற அவளுமே அந்த பார்ட்டி நாளுக்காக காத்திருக்கத் தொடங்கினாள்.

இரண்டு நாட்கள் கழித்து….

மாலை ஆறு மணியளவில் ப்ரித்வியின் அலுவலகம் பார்ட்டியில் கலைகட்டியது. அனைவரின் முகத்தில் மகிழ்ச்சி சிரிப்பு பளீரிட, இரண்டு பேராகவோ, மூன்று நான்கு பேராகவோ நின்று அங்கங்கே அனைவரும் பேசிக்கொண்டு இருந்தனர்.  

பார்ட்டிக்கென்று ப்ரித்வியின் கல்லூரி நண்பன் தீபக் வந்திருந்தான்.. நேகா வந்திருந்தாள். மாதுரி சுகேஷ் கூட வந்திருந்தனர்… ஆனால் இன்னும் ப்ரித்வி தான் வந்தபாடில்லை..

‘எங்க போனான் இவன்?? எல்லாரும் வந்தாச்சு.. ஆனா ப்ரித்வி மட்டும் காணோம்…’ என்று மொத்த இடத்தையும் தன் கண்களால் சல்லடை போட்டபடி நின்றிருந்தாள் தென்றல்..

க்ரே நிற டிசனைர் புடவையில் கழுத்தளவில் தொங்கும் நீல தோடுகள் போட்டு, ஒற்றை கையில் மட்டும் நிறைய மெட்டல் வளையல் போட்டு அழகாய் தன்னை அலங்கரித்து வந்திருந்தாள்.. பின்னே இந்த நாள் அவளுக்கும் சரி.. அவனுக்கும் சரி முக்கியமான நாள் அல்லவா..

“தென்றல் சூப்பரா இருக்க…” என்று மாதுரி சொல்ல,

“தேங்க்ஸ் க்கா..” என்றவள் பார்வை மீண்டும் ப்ரித்வியை தேடியது..

“ப்ரித்வி கொஞ்ச நேரத்துல வந்திடுவான்..” என்று மாதுரி அவள் தேடலுக்கான விடையை சொல்ல, லேசை வெக்கம் மேலிட பார்வையைத் திருப்பிக்கொண்டாள்.

அனைவரையம் காத்திருக்கச் செய்துவிட்டு ப்ரித்வி சிறிது நேரத்தில் வந்து சேர்ந்தான்.. தென்றலை போலவே க்ரே நிற கோட் சூட்டில் கண்களில் கண்ணாடி மின்ன வழக்கமாய் ஒற்றை விரலை மட்டும் பேன்ட் பக்கெட்டில் விட்டு, அனைவரையும் பார்த்தபடி வந்தவன் உதட்டில் மறையாத  புன்னகை..

“சாரி கைஸ் ரொம்ப வெய்ட் பண்ண வச்சிட்டேனா.. டுடே கொஞ்சம் இல்ல ரொம்பவே முக்கியமான நாள்.. சோ ரெடியாக கொஞ்சம் டைம்…” என்றவன் அனைவரையும் பார்ப்பது போல் தென்றலையும் பார்க்க,

அவளோ நேருக்கு நேராக அவனைத் தான் பார்த்தாள்.. இருவரும் ஒரே நிறத்தை உடைகள் அணிந்து வந்திருப்பது இருவருமே எதிர்பாராத ஒன்று..

“என்னடி சொல்லி வச்சு போட்டீங்களா???”

“ஆமா அது ஒன்னு தான் குறை…” என்று பிரதீபாவிடம் நொடித்துக்கொண்டாள் தென்றல்..

“ப்ரித்வி.. நான் கொஞ்சம் கூட நினைக்கலைடா தென்றலை நீ லாஸ்ட் வர விடவேயில்ல போல…” என,

“பின்ன லவ் எதுக்குடா பண்றோம்.. அப்படியே விட்டு போறதுக்கா..” என்று சொல்லி சிரித்தவனை அப்பட்டமாய் ரசித்தது தென்றலின் கண்கள்..

ப்ரித்வி இன்று ஒரு முடிவோடு வந்திருந்தான்.. இந்த பார்ட்டி முடியும் போது அவனுக்கும் தென்றலுக்குமான பிணக்கும் முடிந்திருக்க வேண்டுமென்று.. அவளிடம் பேச சரியான நேரம் பார்த்துக்கொண்டிருந்தான்.. யாராவது ஒருவர் அவனிடம் வந்து பேசியபடி இருந்தனர். ஆனால் அவனது பார்வையோ நொடிக்கொருதரம் அவளை தொட்டு மீள, அவளும் அப்படித்தான் பார்த்தபடி இருந்தாள்.. 

மெல்லிய இன்னிசையோடு பார்ட்டித் தொடங்க, ஒரு சிலர் மைக் பிடித்து பேசக்கூட செய்தனர்.. ஒருசிலர் பேசியவர்களை கிண்டல் செய்துகொண்டிருக்க, கூட்டத்தில் யாரோ ஒருவர் “ஹே ப்ராஜெக்ட் ஸ்டூடண்ட்ஸ் கிட்ட மைக் கொடுங்கப்பா.. பேசட்டும்..” என, அடுத்து ப்ராஜெக்ட் செய்ய வந்தவர்கள் ஒவ்வொருவராய் பேசத் தொடங்கினர்.

தென்றல் தன் முறைக்காக காத்திருக்க, அவள் கண்களில் ஒரு புது மின்னல் வெட்டி மறைந்தது.. ப்ரித்வியோ ‘இவ என்ன பேச போறாளோ..’ என்று பார்த்துக்கொண்டிருக்க,

“தென்றல் ப்ளீஸ் கம் ஹியர்…” என்று அவளை அழைத்து மைக்கை அவள் கைகளில் கொடுத்தனர்..

“தேங்க் யூ…” என்றவளின் பார்வை ப்ரித்வியை தவிர வேறு யாரையும் பார்க்கவில்லை. அவனும் அவளை தான் பார்த்துக்கொண்டிருந்தான்.

‘என்ன சொல்ல போறா…. என்ன சொல்ல போறா.. அவ பார்வையே சரியில்ல…’ என்று அவன் இதயம் துடிக்க, மைக்கை இரு கரங்களில் பிடித்து பேசுவதற்கு முன் ஒருமுறை மீண்டும் ப்ரித்வியை நேராய் பார்த்தவள்,

“தேங்க்ஸ் டூ எவ்ரி ஒன்.. இங்க வந்த இத்தனை நாள் சீக்கிரம் போச்சு.. ஆனா எல்லாமே ரொம்ப ஸ்வீட் டேஸ்.. அண்ட் இன்னிக்கு பார்ட்டி டே மட்டுமில்ல.. எஸ் ப்ரித்வி  சொன்னதுபோல இம்பார்டன்ட் டே ஆல்சோ…” என்றவள் அடுத்து ஒரு இடைவெளி விட்டு,

“இப்போ ஒரு விஷயம் உங்க முன்னாடி சொல்ல போறேன்.. இங்க ஒருத்தர நான் ரொம்ப ரொம்ப ஹர்ட் பண்ணிட்டேன்.. ஐம் ரியலி சாரி ஃபார் தட்… சாரி சொல்றது ஈசிதான்.. பட் இதை நான் ஃபீல் பண்ணி சொல்றேன்.. ஐ க்னோ தட் ப்ரித்வி உங்களுக்கு இது புரியும்னு…” என்றவள் அவன் கண்களை நேருக்கு நேராக சந்தித்தாள்..

லேசாய் அவளின் கண்கள் நீரில் மின்ன, ப்ரித்விக்கு இவள் என்ன பேசுகிறாள், என்ன சொல்ல போகிறாள் என்பது எல்லாம் அப்பால் போய், அவள் கண்களில் இருக்கும் கண்ணீர் மட்டுமே பெரிதாய் தெரிய “நோ பேபி…” என்று உதடுகள் ஆசைத்தான்..

“அண்ட்.. இன்னொரு விஷயம்…” என்று நிறுத்தியவள் சுற்றிலும் அனைவரையும் ஒரு பார்வை பார்த்து “ப்ரித்வி  ஐ லவ் யூ…” என, அனைவருக்குமே அது அதிர்ச்சி தான்..

‘அடிப்பாவி இப்படி பட்டுன்னு சொல்லிட்டா…’ என்று பிரதீபா பார்க்க,

‘தென்றல்…!!!!’ என்ற ப்ரித்வியும் அசந்து போய் தான் பார்த்தான்..

அவனையும் அறியாது அவனது வலக்கரம் அவளை நோக்கி நீள, வேகமாய் ஓடி வந்தவள் அவன் கரத்தினை பற்றிக்கொண்டாள்.. தென்றலின் கண்கள் மட்டுமில்ல, இப்போது ப்ரித்வியின் கண்களும் கூட லேசாய் நீரில் மின்ன,

“சாரி.. சாரி.. சாரி ப்ரித்வி.. சாரி ஃபார் எவ்ரி திங்.. ஐம் ரியலி சோ சாரி….” என்றவளின் தோள் மீது கரம் போட்டு தன் தோள் மீது சாய்த்துக்கொண்டவன்,

“ஐ லவ் யூ பேபி…” என்றான், அவள் கரத்தில் இருந்த அதே மைக்கை பற்றி..

சுற்றி இருந்த அனைவரும் எதோ படம் பார்ப்பது போல் பார்க்க, ஒருசில நொடிகள் மட்டுமே அங்கே அதிர்ச்சி மௌனம்.. ஆனால் அடுத்த நொடி அங்கே ஆனந்த அதிர்வலை இன்னும் அதிகரிக்க, கை தட்டல்களும், கிண்டல்களும், சிரிப்பும், லேசான சீண்டலுமாய் சற்று நேரம் கழிய, மாதுரி, சுகேஷ், தீபக், நேகா, பிரதீபா என்று அனைவரும் இவர்களை வந்து வாழ்த்த,

“சீனியர்… டபிள் பார்ட்டி கொடுங்க…” என்று ஒருத்தி கேட்க,

“டபிள் என்ன ட்ரிபில் கூட தர்றேன்…” என்றவன், இன்னும் இருக்கமாய் தென்றலை தன் மீது சாய்த்துக்கொண்டான்..

இது அவர்களுக்கான நேரம்..  சுற்றி யார் இருந்தாலும் பரவாயில்லை நாங்கள் இப்படிதான் இருப்போம் என்று ஒருவரை விட்டு ஒருவர் விலாகாமல் இருக்க, அவர்கள் பேசிக்கொள்ளட்டும்  என்று அனைவரும் சற்று தள்ளி தள்ளி தான் நின்றிருந்தனர்..

“தேங்க்ஸ் எ லாட் லாட் பேபி…” என்று இன்னும் தன்மேல் இறுக்கியவனை பார்த்த தென்றல்,  “ஐ ஹேட் யூ…” என,

“ம்ம்ஹும்..” என்று புருவம் உயர்த்தி இதழ்களில் ஒரு கிண்டல் சிரிப்பை உதிர்த்தான் ப்ரித்வி..

“ஐ ஹேட் யூ… ரொம்ப ரொம்ப ஹேட் பண்றேன்.. இப்படி என்ன லவ் பண்ண வச்சதுக்கு உங்களை ரொம்ப ஹேட் பண்றேன்…” என்றாள் அவளும் சிரித்த படி..

“ரொம்ப நல்லது.. நானும் உன்னை ஹேட்… ஹேட்… ஹேட்… பண்றேன்..” என்று அவனும் சொல்ல,

“லைப் லாங் உங்களை லவ் டார்ச்சர் பண்ணுவேன்… அதுக்கெல்லாம் சேர்த்து மொத்தமா ஹேட் பண்ணுங்க…” என்றவள், திடீரென “சாரி ப்ரித்வி..” என்று மீண்டும் சொல்ல,

“லூசு… நோ சாரி.. எல்லாமே மறந்திடு.. இனிமே லவ் டார்ச்சர்ஸ் மட்டும் தான்.. நான் ரொம்ப கேட்ட பையனா மாறப் போறேன்..” என்றவன் வில்லன் போல கைகளை தேய்க்க,

“ஹா ஹா வில்லனா.. நீங்களா… ஹா ஹா காதல் வில்லன் வேணா சொல்லலாம்…” என்று மலர்ந்து சிரித்தாள்..

“ப்ரித்வி அம்மா வந்துட்டாங்க…” என்று மாதுரி அழைக்க, சட்டென்று ஒரு பயம் தென்றலிடம் தொற்றிக்கொண்டது.. அதிர்ந்து போய் அவனைக் காண,

“அம்மாக்கு எல்லாமே தெரியும்.. சோ பீ கூல்.. அதுவும் போக நான் இருக்கேன்ல…” என்றவன் அவள் கரம் பற்றி அருள்மொழியிடம் அழைத்துச் சென்றான்..

இருவரையும் சின்ன சிரிப்புடன் பார்த்தவர், “என்ன லவ் பேர்ட்ஸ் எல்லாம் ஓகே ஆகிடுச்சா…” என,

அவர் கேட்ட விதத்தில் வியந்து தான் போனாள் தென்றல்.. ப்ரித்வி அப்படியே அவன் அம்மா போல் என்று மீண்டும் தோன்றியது..  

“மாம்.. கேக் கட் பண்ணலாம்…” என்று ப்ரித்வி சொல்ல, அருள்மொழி தான் கேக் கட் செய்தார்..

கேக்கை வெட்டியவர் முதல் வில்லையை தென்றலுக்கு தான் கொடுத்தார். அவள் மட்டுமில்லை ப்ரித்வி மற்றும் மாதுரி இருவருமே ஆச்சர்யமாய் அருள்மொழியை பார்க்க,

“என்ன அப்படி பார்க்கிறீங்க.. வருங்கால மருமகளை இப்போவே கரெக்ட் பண்ணிக்கிறேன்.. இல்லை ப்ரித்விக்கு அடிச்ச சூறாவளி என்னையும் அடிச்சிட்டா…” என்று சொல்லி சிரிக்க, அனைவரின் முகத்திலும் அந்த புன்னகை ஒட்டிக்கொண்டது.. 

அன்றைய தினம் மட்டுமல்ல, அடுத்து வரும் அனைத்து தினங்களுமே தென்றல் மற்றும் ப்ரித்வியின் வாழ்வில் காதல் சூறாவளி தான்.. ஆனந்த பேரலை தான்.. அது இருவரின் ஒருமித்த மனதையும், கோர்த்த கரத்தினையும் பார்க்கும் போதே அனைவருக்கும் புரிந்தது..

யாரும் அடுத்து அவர்களை தொந்தரவு செய்யவில்லை.. அவர்களும் பிறர் இருக்கிறார்கள் என்று நினைக்கவில்லை.. எல்லாம் முடிந்து இப்போது தான் ஒரு நேரம் கிடைத்திருக்கிறது.. அதை இருவருமே தொலைக்க விரும்பவில்லை..

“தென்றல்….” என்றவனின் அழைப்பிலேயே அவனது இத்தனை வருட காதல் தெரிந்தது அவளுக்கு..

“ம்ம்…”

“தேங்க்ஸ் எ லாட்.. ரியலி.. இதுக்கொரு தனி கட்ஸ் வேணும்.. இத்தனை பேர் முன்னாடி இவ்வளோ தைரியமா சொல்ல… நானே உன்கிட்ட தனியா பேச டைம் பார்த்தேன்.. பட் நீ.. சூறாவளி தான்.. கொஞ்ச நேரம் நின்னு அடிச்ச…” என்றவன் குரலிலும் முகத்திலும் அத்தனை பெருமிதம்..

இதைவிட ஒரு ஆண்மகனுக்கு என்ன வேண்டும்??

“ஹ்ம்ம் தப்பா புரிஞ்சுக்கிட்டது நான்.. தென் எல்லார் முன்னாடியும் சொல்லனும்னு ப்ளான் பண்ணியெல்லாம் வரல ப்ரித்வி.. சடன்னா தோணிச்சு… சொல்லிட்டேன்.. எங்க தனியா பேச அது மறுபடியும் எதாவது ஆகிடுமோன்னு ஒரு சின்ன பயம்.. நான் ரொம்ப சொதப்பிட்டேன்ல…” என,

“ஹா ஹா.. இனி எதுவுமே சொதப்பாது பேபி.. பிகாஸ் இனி நம்ம பேச போறதில்ல நம்ம காதல் மட்டும் தான் பேசும்…” என்றவன்,  “ஐ லவ் யூ பேபி..” என்று மெல்ல அவள் காதில் சொல்ல,

“ம்ம்ச் பேபி பேபி சொல்லாதீங்க…”என்று சிணுங்க,

“ஏன்?? நான் சொல்வேன்.. என் பேபீஸோட மம்மி எனக்கு பேபி தான்…” என,

“ஓ… அவ்வளோ தூரம் போயாச்சா…” என்று தென்றல் அவன் நெஞ்சில்  செல்லமாய் ஒரு குத்து, குத்தியவள், அவன் வேண்டுமென்றே வலிப்பது போல் நடிக்கவும்,

“இப்போ தெரியுதா நான் பேபியில்லன்னு..” என்று மிரட்ட,

“நீ பேபியில்லம்மா… நீ சூறாவளி தான்…” என்று அழகாய் தென்றலிடம் சரணடைந்தான் ப்ரித்வி.. 

          

                      

       

                      

         

  

      

          

                   

 

Advertisement