Advertisement

தென்றல் – 9

யாருமில்லா அலுவலகம், ஏசியின் சத்தம் மட்டும் கேட்டபடி இருக்க, தென்றலும், ப்ரித்வியும் ஒருவரை ஒருவர் பார்த்தபடி அமர்ந்திருந்தனர். சுற்றி இருக்கும் சூழலே வித்தியாசமாய், அமைதியாய் இருப்பது இன்னும் கொஞ்சம் அவர்களது தயக்கத்திற்கும் போசாக்கு சேர்க்க, தென்றலோ ப்ரித்வியை பார்ப்பதும், பின் தரையை பார்ப்பதுமாய் இருந்தாள். எங்கே காய்ச்சல் கூட வந்துவிடுமோ என்பது போல் இருந்தது அவளுக்கு..

ப்ரித்விக்கோ, எப்படி ஆரம்பிப்பது, எங்கிருந்து ஆரம்பிப்பது என்ற தயக்கம்.. ஐ லவ் யு மூன்றே வார்த்தைகள் தான்.. ஆனால் அதை சொல்வதற்குள் மூச்சடைத்தது அவனுக்கு.. ஆனாலும் யார் ஆரம்பிக்க என்ற மௌன விளையாட்டில் ப்ரித்வி தான் தோற்றான்..

“ஹ்ம்ம்…. தென்றல்….” என்றழைக்க,

“வர்றப்போ எத்தன டைம் கால் பண்ணேன் எடுக்கவேயில்லை…” என,

“சாரி பேபி… மார்னிங் வந்து வொர்க் பண்ணிட்டு இருந்தேன்.. போன் எங்க வச்சேன் தெரியலை.. தென் நீ வேற வர்றேன்னு சொல்லவும் வீட்டுக்கு போயிட்டு அகைன் ரெடியாகி வந்தேன்.. சோ இப்பவும் போன் எங்க தெரியலை.. தேடனும்…”

“ஓ… வெளிய எங்கயும் மிஸ் பண்ணிட்டீங்களா???”

பேச வந்தது என்ன, இப்போது பேசிக்கொண்டிருப்பது என்ன என்று இருவருக்குமே தெரியும். ஆனால் அதை தவிர்த்து மற்றது பேசுகையில் பேச்சு கொஞ்சம் இயல்பாய் வர, பேச்சு நீண்டது.

“நோ நோ இங்கதான்… இப்போ என்ன அப்புறம் தேடிக்கலாம்…”

“வொய்?? நான் என் போன்ல இருந்து கால் பண்றேன்.. தேடலாம்…” என்றவள், அவளது அலைபேசியில் இருந்து ப்ரித்வி எண்ணிற்கு அழைக்க, முதலில் எந்த சத்தமும் கேட்கவேயில்லை..


 

“கன்பார்ம்மா தெரியுமா இங்கதான் வச்சீங்களா..???” என்றபடி எழ,

“எஸ் மார்னிங் இங்க கொண்டு வந்திட்டு டூ த்ரீ கால்ஸ் பேசினேன்..” என்றபடி அவனும் எழ, சரி பேச கொஞ்சம் தயங்குகிறாள் நாமே ஆரம்பிப்போம் என்று ப்ரித்வி தான்,

“தென்றல் நீ பேசணும்னு வந்த.. பட் நம்ம இப்படி அகைன் சுத்தி பார்க்கிறோம்…” என,

“ஹ்ம்ம் இருக்கட்டும்.. உங்க போன் எடுத்திட்டு தென் பேசலாம்.. ஏன் வேற எதுவும் வொர்க் இருக்கா???” என, இல்லையென்று தலையாட்டினான்.. 

தென்றலுக்கு, நான் உன்னை காதலிக்கிறேன் என்று சொன்னால் அவன் என்ன பதில் சொல்வான் என்று தெரியாது.. ஆக இருக்கும் நேரத்தை நீட்டி கொஞ்ச நேரம் அவனோடு செலவிடலாம் என்று அவளும் சுற்றி அவனையும் சுற்றவைத்துக்கொண்டு இருந்தாள்.

சூறாவளி சுற்ற தானே வைக்கும்… அப்படிதான் தோன்றியது அவனுக்கும்.

“போன் தானே அப்புறம் கூட தேடிக்கலாம்…” என்றபடி அவள் பின்னே போக,

“ஷ்.. இங்க தான் சத்தம் கேட்குது.. எஸ் எஸ்…” என்று தென்றல் சொன்னதும், ப்ரித்வியும் சுற்றி முற்றி பார்க்க, மெல்லிய அலைபேசி சத்தம் கேட்டது..

“மார்னிங் இங்க வந்து கொஞ்சம் வொர்கவுட் பண்ணேன்…”

“ஓ.. அப்போ நீங்க வொர்க் பண்ணதுன்னு சொன்னது இது தானா…” என்றபடி கீழிருந்த கார்பெட்டை தூக்கிப் பார்க்க, ப்ரித்வியின் அலைபேசியில் அவள் பெயர் ஒளிர்ந்து மிளிர்ந்து..

‘சூறாவளி…. சுந்தரி….. சூறாவளி சுந்தரியா….’ என்று படித்தவளுக்கு அவன் முதல் நாள் தன்னை அழைத்து பேசியது நினைவில் வந்து போக,

‘அப்.. அப்போ நிஜம்தான்.. நிஜமாதான் அப்படி சொல்லிருக்கான்.. நா.. நான் தான் என்னோட இமேஜினேசன்னு நினைச்சிட்டேன்…’ என்றெண்ணியவள்,

“என்ன இது..???!!” என்று அவன் அலைபேசியை காட்ட,

“ஹே.. இங்க தான் இருக்கா… தேங்க்ஸ் தென்றல்..” என,

“நான் அதை சொல்லல… இதென்ன என் நேம் சூறாவளி சுந்தரின்னு இருக்கு…” என்று கேட்டவளின் குரலில் கோவம் தெரிய, இத்தனை நேரம் இலகுவாய் பேசிய தென்றல் இப்போதில்லை என்று உணர்ந்து போனது ப்ரித்விக்கு.

“தென்றல்..” என்று வியந்து பார்க்க,

“பதில் சொல்லுங்க.. அப்போ என்னை நீங்க பர்ஸ்ட் டே போன்ல இப்படிதானே சொன்னீங்க.. ஆனா அடுத்து பேசுறப்போ இது எதுவுமே நடக்காதது போல பேசினீங்க… ” என,

“ஷ்… தென்றல்… இப்போ ஏன் உனக்கு கோவம்..” என்று ப்ரித்வி மென்மையாய் பேச,

“ம்ம்ச் ப்ளீஸ் ப்ரித்வி.. நார்மலா இருக்க பாருங்க.. இந்த நேமுக்கு என்ன அர்த்தம்…???” என்று கோவமாகவே கேட்டாள்.. என்னவோ அவளிடம் அவன் எதையோ மறைத்துவிட்ட உணர்வு..

“முதல்ல உட்காரு தென்றல்…” என்று அவள் தோள்பற்றி அவளை அமரவைத்தவன், தானும் அவளருகே அமர்ந்தான்.   

“இந்த நேம் உனக்கு நான் இப்போ வச்சதில்லை.. உன்னை காலேஜ்ல பார்க்கிறதுக்கு முன்னாடியே வச்சது.. ஐ மீன் ரொம்ப வருஷம் முன்னாடி…”

“அப்.. அப்போ.. நம்ம ஏற்கனவே மீட் பண்ணிருக்கோமா??!!”

“நம்ம இல்ல.. நான் உன்னை பார்த்திருக்கேன்.. ஒரு ரிசெப்ஷன் வீட்ல… கார் பார்க்கிங்ல உன்கிட்ட ஒருத்தன் வம்பு பண்ணான்.. அவனை பேசியே ஒருவழி பண்ண நீ அப்போதான் உனக்கு இந்த நேம் மைண்ட்ல தோணிச்சு..” என்றவன் அன்றைய நாளின் நினைவுகளில் புன்னகை சிந்தினான்..

“ஓ…”

“தென் உன்ன காலேஜ்ல பார்த்தேன் பேபி.. ஐம் ஃபாலிங் லவ் வித் யு….” என்று தென்றலை கரங்களை பிடித்து அவன் நெஞ்சில் வைத்து சொல்ல, தென்றலின் கண்களிலோ அப்பட்டமான அதிர்ச்சி..

“வாட்…?!!!!!!!”

காதலை சொல்ல வந்து அது சொல்ல முடியாமல் மற்ற கதைகளை பேசி நேரம் கடத்திக்கொண்டு இருந்தவளிடம், தன் காதலை அவன் சொல்லிட, அவளுக்கு பேரதிர்ச்சி தான்..

“எஸ் பேபி.. ஐம் இன் லவ் வித் யு… இப்போயில்ல ரொம்ப வருசமா.. ஆனா இப்போதான் சொல்ல டைம் வந்திருக்கு போல…” என்று ப்ரித்வி உணர்ந்து சொல்ல, மெல்ல அவன் பிடியில் இருந்து தன் கரத்தினை உருவினாள் தென்றல்..

“தென்றல்… ஏன் தள்ளி போற.. நீ… நீயும் இதை பேசத்தானே வந்த??” என்று சற்றே உரிமையாய் ப்ரித்வி கேட்க,

“ம்ம் பேசத்தான் வந்தேன்.. ஆனா இதை கொஞ்சமும் எதிர்பார்கலை..” என்றவள் குரலில் அப்பட்டமாய் ஒரு காட்டம். தென்றலின் இந்த திடீர் மாற்றத்தின் காரணம் தெரியாது ப்ரித்வி கேள்வியாய் அவளைப் பார்க்க,

“என்ன பார்க்கிறீங்க..?? சோ இத்தனை நாள் நீங்க என்கிட்ட நடிச்சிருக்கீங்க.. அப்படிதானே..???” என்றாள் கோவமாய்..

“தென்றல்…!!!!!!!!”

“ஜஸ்ட் ஷட்டப்… நான் உங்களை கெஸ் பண்ணது சரிதான்.. நீங்க என்கிட்ட நடிச்சிருக்கீங்க.. மனசுல ஒண்ணு வெளிய ஒண்ணுன்னு நீங்க நடிச்சுத்தான் இருக்கீங்க..” என்று கத்தியவளை ப்ரித்வி ஒரு உணர்வற்ற பார்வை பார்த்தான்..

இத்தனை வருடமாய் மனதினில் தேக்கி வைத்த காதல்… தான் காதலிப்பவளும் தன்னை காதலிக்கிறாள் என்ற மகிழ்ச்சியில், இன்றாவது இத்தனை வருட காதலை அவளிடம் சொல்லிவிட வேண்டும் என்று மனம் நிறைந்த உணர்வில் வந்தவனை பார்த்து நீ நடித்திருக்கிறாய் என்று சொன்னால் அவனுக்கு எப்படியிருக்கும்…

“தென்றல்.. ப்ளீஸ் போதும்…” என்று கைகளை உயர்த்தி அவளை பேசவேண்டாம் என்று சொல்ல,

“ஏன் ஏன் போதும்…??? லாஸ்ட்ல எல்லாமே இதுக்கு தான் இல்லையா.. நானாவே உங்களை லவ் பண்ணனும்?? அப்படிதானே.. அதுக்குதானே இப்படி பண்ணீங்க… உங்களை பார்த்ததுமே எனக்கு தோணிச்சு நீங்க நடிக்கிறீங்கன்னு.. ஆனா லாஸ்ட்ல என்னயவே நம்ப வச்சு லவ் பண்ண வச்சுட்டீங்கள்ல…” என்று கண்களில் கண்ணீரும், முகத்தினில் கோபமுமாய் பேசியவளை திகைத்துத் தான் பார்த்தான்..

என்ன நினைக்கிறாள் இவள்?? என்ன நினைத்துக்கொண்டு பேசுகிறாள் இவள்?? நடிப்பா?? நானா?? இவளை இம்ப்ரெஸ் பண்ண நான் இப்படியெல்லாம் செய்தேனா?? அடக்கடவுளே என்று தான் தோன்றியது.. இத்தனை நாள் என்னை பார்த்து கூட என்னை புரியவில்லையா என்ற ஆதங்கம் தோன்ற, அவனை அவளுக்கு புரியவைக்கும் வேகமும் வந்தது..

“தென்றல்… பேபி.. அப்படியெல்லாம் இல்ல.. நானும் உன்னை தெரிஞ்சுக்கணும், நீயும் கொஞ்சமாவது என்னை புரிஞ்சுக்கணும்னு தான் இவ்வளோ நாள் வெய்ட் பண்ணேன்… இன்னிக்கு நீயே வந்திருக்கலைனாலும், நானே உன்னை தேடி வந்திருப்பேன்…” என்றவன் குரலும் முகமும் என்னை நம்பேன் என்று கெஞ்சாமல் கெஞ்சியது.  

“இதை நான் நம்பனுமா?? அதெப்படி ப்ரித்வி இத்தனை நாள் நல்லவர் வேஷம் போட்டீங்க.. இத்தனை வருசமா லவ் பண்ணிருக்கீங்க.. நானும் இத்தனை மாசமா இங்க இருக்கேன்.. தினம் தினம் பாக்குறீங்க.. ஆனா ஒன் டைம் கூடவா உங்களுக்கு என்கிட்டே சொல்லனும்னு தோணலை..”

“ம்ம்ச் இப்படி வார்த்தைக்கு வார்த்தை அர்த்தம் கண்டுபிடிச்சா எதுவும் செய்ய முடியாது தென்றல்.. ஆனா சொல்லு.. ஒன் டைம் கூட நீ என்கிட்ட வேற எதையும் பீல் பண்ணது இல்லையா???” என்றவனின் ஆழ்ந்த குரலுக்கும் பார்வையும் சில நொடிகள் அவளை திகைக்க வைக்க, ஆனாலும் தென்றல் என்ன சும்மாவா??

“நீங்க என்ன சொன்னாலும் சரி என்னால இதை ஏத்துக்கவே முடியாது ப்ரித்வி.. நான் நினைச்சது சரிதான் நீங்க நடிச்சிருக்கீங்க… உங்க நடிப்ப நம்பி நானே உங்களை லவ் பண்ணனும்னு நினைச்சிருக்கீங்க?? அப்போ இதுக்கு பேர் என்ன?? இப்போ நானே பேச வரவும் தான் உங்களுக்கு சொல்ல தைரியமே வந்திருக்கு.. இல்லாட்டி அதுவும் இருந்திருக்காது.. ச்சே உங்களை போய் நான் ஒருநிமிஷம் நல்லவங்கன்னு நினைச்சேனே…” என்று அவள் விடாமல் பேச,

“போதும் நிறுத்து தென்றல்…” என்று ப்ரித்வியும் பொறுமையிழந்து கத்திவிட்டான்..

அவளே கத்தி தான் பேசினாள், அவளுக்கும் மேலாய் அவன் சப்தமிட, யாருமில்லா அவ்விடமோ அவர்களின் சப்தங்களை உள்வாங்கி எதிரொலித்தது..

“என்ன விட்டா பேசிட்டே போற… அப்படி என்ன நான் நடிச்சத பார்த்த நீ?? நான் நல்லவனும் இல்லை கேட்டவனும் இல்லை..ஜஸ்ட் நான் நானா இருக்கேன் .. எனக்கு தெரிஞ்சு நான் இப்படிதான்.. எங்கம்மா எங்களை இப்படிதான் வளர்த்தாங்க.. அதில என்ன தப்பு பார்த்திட்ட நீ…??

நானும் பாக்குறேன் ஆரம்பத்துல இருந்தே பிடிக்கல, நடிக்கிற, நல்லவன் வேஷம்னு சொல்லிட்டு இருக்க.. எதுக்குமே ஒரு பொறுமையிருக்கு தென்றல்…” என்று கத்தியவன் அவளது அரண்ட முகத்தை பார்த்து,

“ம்ம்ச்….” என்று கண்களை மூடி ஆழ மூச்செடுத்துவிட்டு, தன்னை தானே சமன் படுத்தி, கண்களை திறந்தவன், “ப்ளீஸ் இனியும் இப்படி பேசாத பேபி…” என,

அவளோ “ஏன்..?? குற்றமுள்ள நெஞ்சு தான் குத்துதா??” என்றால் எகத்தாளமாய்..

“வேணாம் தென்றல் நீ கிளம்பு இப்போ எதுவும் பேசவே வேணாம்…”

“ஏன் ஏன் வேணாம்… பதில் சொல்ல முடியலையா?? ஆனா நான் இப்பவும் சொல்றேன்.. நீங்க பண்ணது தப்புதான்.. சரியோ தப்போ என்கிட்ட பர்ஸ்ட் டைம் பேசும்போதே நீங்க இதை சொல்லிருந்தீங்கன்னா உங்களை நான் நம்பிருப்பேன்.. ஆனா இப்போ.. இத்தனை நாள் மனசுக்குள்ளயே வச்சிருந்து.. ச்சே.. உங்கள சுத்தி இருக்க எல்லாரையும் ஏமாத்திட்டீங்க…” என,

“ஏய் நிறுத்து டி…” என்று ப்ரித்வி அவளை அடிக்கவே கை ஓங்கிவிட்டான்..

இது சுத்தமாய் அவன் குணமில்லை.. ஆனால் தென்றல் பேச பேச அவனையும் மீறி அவனுள் உணர்வுகளின் போராட்டங்கள்.. இத்தனை வருடம் இவளை மனதில் சுமந்ததற்கு நிமிடத்தில் நல்ல பெயர் கொடுத்துவிட்டாள்..

“ஓ.. நீங்க அடிக்க வேற செய்வீங்களா?? சோ.. இந்த அடாவடி ப்ரித்வி தான் நிஜம்.. இதுக்கு முன்னாடி இருந்த கிளாசி ப்ரித்வி சும்மா… அப்படிதானே…” என்று அவளும் விடாமல் பேச,

“ஆமா அப்படிதான்.. இப்போ அதுக்கென்ன?? அப்போ மனுஷனுக்கு கோவம் வரக்கூடாதா?? இப்போ உனக்கு என்னடி பிரச்சனை? நான் உன்கிட்ட முதல்லையே சொல்லலைன்னா.. இங்கபாரு உனக்கு என் நேம் கூட நியாபகமில்லை.. என்னை யாருன்னு கூட தெரியலை.. அண்ட் உன்னை பத்தியும் எனக்கு எதுவும் முழுசா தெரியாது.. அப்படியிருக்கும்போது எப்படி லவ் சொல்ல சொல்ற.. எதுக்குமே டைம் வேணாமா??

இதொண்ணும் சினிமாயில்ல.. ஒரு பொண்ணு பிடிச்சா அவ பின்னாடியே சுத்தி, போற வர்ற இடமெல்லாம் போய் அவளை தொல்லை பண்ணி, பாட்டு படி ஆட.. இது லைப்.. தென் நான் உன்னை இம்ப்ரெஸ் பண்ணனும்னு எதாவது பண்ணிருந்தா தான் அது நடிப்பு.. நான் எப்பவும் போல தான் இருந்தேன். அதுனால தான் உனக்கு இப்போ என்மேல லவ் வந்திருக்கு.. அதை முதல்ல புரிஞ்சிக்கோ..

அப்புறம் சொன்னியே நல்லவன் வேஷம்னு.. உன்னை பொருத்தவரைக்கும் நல்லவங்கன்னா யாரு?? எதுவும் டெபெனிசன் வச்சிருக்கியா.. ஆனா என்னை பொருத்தவரைக்கும் அடுத்தவங்களை தொல்லை செய்யாம தான் உண்டு தன் வேலையுண்டுன்னு இருக்கவங்கதான் நல்லவங்க.

உன்னை கை பிடிச்சிழுத்து, நீ என்னை லவ் பண்ணித் தான் ஆகனும்னு உன்னை கட்டாயப் படுத்தினேனா?? நான் நினைச்சா இது எதுவுமேயில்லாம எங்கம்மாக்கிட்ட சொல்லி எப்பவோ நம்ம கல்யாணம் கூட முடிஞ்சிருக்கும்.. ஆனா நம்ம ரெண்டுபேருக்குமே டைம் வேணும்னு டிசென்ட்டா வெய்ட் பண்ணேன் பாரு அது தான் நான் பண்ண தப்பு..

உனக்கு என்னடி பிரச்சனை.. நான் பணக்காரனா இருக்கிறதா?? இல்லை எங்கம்மா மினிஸ்டரா இருக்கிறதா?? இல்ல உன்னை ஏது இப்படி நினைக்க வச்சது.. பணக்காரங்க.. பதவியில இருக்கவங்க எல்லாம் இப்படிதான் இருப்பாங்கன்னு ஒரு தப்பான இமேஜ் உருவாக்கிட்டாங்க. ஆனா அப்படியில்லாம நார்மலா இருந்தா அது உனக்கு தப்பு இல்லையா…  

உனக்கு எக்ஸாம்பில் சொல்றேன், பல வருஷம் முன்னாடி சிகரெட் குடிக்கிறது கெட்ட பழக்கம்.. ஆனா இப்போ அதுவே எல்லாருக்கும் ஒரு பழக்கமா போச்சு.. யாரும் சிகரட் குடிக்கிற கெட்டப் பழக்கம் இருக்கான்னு கேட்கிறதில்ல, சிகரெட் குடிக்கிற பழக்கமிருக்கான்னு தான் கேட்கிறாங்க இப்போ.. அதுபோல தான் இப்போ நீயும்..

நானும் அந்த நவீன்  மாதிரி உன்னை போட்டு லவ் பண்ணு பண்ணுனு டார்ச்சர் பண்ணிருந்தா நீ நம்பிருப்ப..  தள்ளி நின்னேன் பாரு என்னை சொல்லணும்.. இங்க பார் லவ்ன்னு வந்தா அது நல்லவங்க கெட்டவங்கன்னு எல்லாம் பார்க்காது.. நானாவே இருந்தாலும் அதான்.. அதை புரிஞ்சுக்கோ…” என்று நீண்டதொரு பேச்சாய் பேசி முடிக்க, தென்றல் அப்படியே திகைத்துப் போய் நின்றாள்..

இதற்குமேல் அவளால் என்ன சொல்ல முடியும்..?? அவன் சொன்ன ஒவ்வொன்றும் அத்தனை உண்மை தானே… அதில் யாராலும் மாற்றுக் கருத்து சொல்லிட முடியுமா என்ன??? இல்லை இதில் மாற்றுக் கருத்தென்று எதுவும் இருக்கிறதா என்ன??

பிறருக்கு தொல்லையில்லாமல், அவரவர் வாழ்வை அவரவருக்கு பிடித்தது போல் வாழ்வது என்பது எப்படித் தவறாகும்?? இதில் தவறு சொல்ல என்ன இருக்கிறது..

அப்படியிருக்கையில் இத்தனை வருடமாய் காதலித்து அவன் நினைத்திருந்தால் இவளிடம் இப்படியெல்லாம் பேச்சே வாங்கவேண்டிய அவசியமில்லாமல் எப்போதோ திருமணத்தை முடித்திருக்கலாம்.. ஆனால் அவள் மனதை மட்டுமே முக்கியமாய் கொண்டு ப்ரித்வி செயல்பட்டால் அதற்கு பெயர் நடிப்பென்று அழகாய் சொல்லிவிட்டாள் தென்றல்..

தென்றல் திகைத்துப் போய் நிற்க, அவள் கண்களில் இருந்து கண்ணீர் சூடாய் வழிவது அவள் கன்னம் உணர்ந்தது.. காதல் கொண்ட மனமோ மௌனமாய் கதறியது..

ப்ரித்விக்கோ தானா இப்படி இவ்வளோ பேசினோம் என்று இருந்தது.. மனம் நிரம்ப வலியில் வழிந்தது.. ஒவ்வொரு முறையும் அவள் தன்னை நெருங்கி வரும் போதெல்லாம் சொல்லிவிட வேண்டும் சொல்லிவிட வேண்டும் என்று அவன் மனம் துடித்தது அவனுக்கு தானே தெரியும்.

எத்தனை கட்டுபாடுகள் தனக்கு தானே விதித்திருப்பான்.. அவனும் மனிதன் தானே.. அனைத்து உணர்வுகளும் அவனுக்கும் இருக்கும் தானே.. ஆனால் அவள்?? கொஞ்சம் கூட புரிந்துகொள்ளவில்லையே… அவன் கோவம் அடங்கவேயில்லை.. அடங்க மறுத்தது..

எங்கே விட்டால் அவளை எதுவும் அடித்துவிடுவோமோ என்றுகூட தோன்ற, சட்டென்று அவளிடமிருந்து விலகி, சாய்விருக்கையில் பொத்தென்று விழுந்தவன் தன் தலையை கைகளில் தாங்கி அமர்ந்துகொண்டான்.

அவன் அப்படி அமர்ந்த அதிர்வில் தான் தென்றல் சுயம் பெற, கலங்கிய கண்களோடு அவனைப் பார்த்தவள், மெல்ல “ப்.. ப்ரித்வி….” என,

அவனோ அமர்ந்த நிலையிலேயே தலையை கூட நிமிர்த்தாமல், கை எடுத்துக் கும்பிட்டவன்,

“தயவு செஞ்சு கிளம்பி போ தென்றல்… இனி எதுவும் சொல்லாத.. என்னால தாங்க முடியாது.. போ..” என, தென்றலுக்கு அது இன்னும் வலித்தது..

“ப்ரித்வி…” என்று அருகே போக,

“ப்ளீஸ் போ தென்றல்.. நான் ஏதாவது சொல்லிட போறேன்.. அப்புறம் உனக்கு தான் ஹர்ட் ஆகும்….” என்றவன் அவளைக் காணவே இல்லை.. முகத்தை அவள் பக்கம் திருப்பவேயில்லை..

“இல்.. இல்ல நான்…” என்று அவள் எதுவோ சொல்ல வர,

“நீ ஒன்னும் சொல்லவே வேணாம்.. நீ போ..” என்றான் குரலில் அழுத்தம் கொடுத்து..

ஒரு நொடியில் அனைத்தும் பொய் என்று அவள் சொன்னதுமே அவனது நெஞ்சில் இடி தான் விழுந்தது போல் ஆனது.. எந்தவொரு உறவிலும் நம்பிக்கை தான் அடிப்படை. அதுவே ஆட்டம் கண்டுவிட்டால் பின் என்ன செய்வது.

“ப்ரித்வி…” என்றவள் தயங்கி நிற்க,

“போன்னு சொல்றேன்ல…” என்று ப்ரித்வி கோவத்தில் கத்த, அவனை திரும்பி திரும்பிப் பார்த்தபடி தென்றல் வெளியே சென்றாள்..

கதவை திறந்து வெளி செல்லுமுன், “ஒரு நிமிஷம்…” என்று ப்ரித்வியின் குரல் அவளை நிற்க வைக்க, அவளும் திரும்பிப் பார்க்க,

“இன்னும் ஒன் வீக்ல உன் ப்ராஜெக்ட் முடியுது தானே.. எனக்காக வராம எல்லாம் இருக்காத.. வந்து நல்லபடியா முடிச்சிட்டு போ…” என்றவன் அதற்குமேல் எதுவுமில்லை என்பது போல் திரும்பிவிட்டான்..

தென்றலுக்கு மனம் கனத்து போனது.. ஆனால் இன்னும் அவளுக்கு தெளியவில்லை தான்.. ப்ரித்வி பேசியது அனைத்தும் அவன் மனதில் இருந்து வந்த உண்மையான வார்த்தைகள் என்று புரிந்தது தான்..

ஆனால்.. ஆனால்.. எதையுமே சட்டென்று ஒரு முடிவிற்கு கொண்டுவர அவளால் முடியவில்லை.. கத்தி அழ வேண்டும்போல இருந்தது.. அதுவும் முடியவில்லை.. ப்ரித்வியிடம் மீண்டும் சென்று பேசவேண்டும் போல இருந்தது.. ஆனால் அதற்கு தைரியமில்லை..

அவள் காதலையும் கொன்று இப்போது அவன் காதலையும் கொன்றுவிட்டாள்..

மென்மையாய் இருந்தவன் கோடையாய் காய்ந்துவிட்டான்.. இனி தென்றலாய் இவள் குளிர்விப்பாளா??

தென்றல் எப்படி வீடு வந்து சேர்ந்தாள் என்பது அவளுக்கே ஆச்சர்யம் தான்.. அவளின் வருகைக்காக கமலி காத்திருக்க, மகளின் வண்டி சத்தம் கேட்டதுமே வாசலுக்கே வந்து விட்டார்..

ஆனால் வண்டியிலிருந்து இறங்கி வீட்டினுள் வந்தவளின் முகமோ சுரத்தே இல்லாமல், கண்ணீரும் கலக்கமுமாய் இருக்க, “தென்றல்.. என்னாச்சுடா…” என்று பதறிப் போய் கேட்க,

அவளோ “அம்மா……….” என்று அழுதபடி அவரை இறுக அணைத்துக்கொண்டாள்..

               

                 

                

          

 

 

Advertisement