Advertisement

    தென்றல் – 2

“அதுக்கேன் டி இவ்வளோ ஷாக் ஆகுற…”

“நேத்தும் இப்படிதான் ப்ரித்வின்னு சொன்னாங்க…” என,

“அந்தண்ணா பேரு அதானே.. அதான் சொல்லிருக்காங்க..” என்ற பிரதீபாவை முறைத்தாள் தென்றல்.

“என்னடி???”

“அவங்க யாருன்னு உனக்கு தெரியுமா..???”

“எனக்கு மட்டுமில்ல காலேஜ்ல எல்லாருக்கும் தெரியும்.. ஏன் உனக்குமே தெரியும்…”

“எனக்குமா…??? இல்லையே… ஆனா இந்த நேம் எங்கேயோ கேட்ட போலவும் இருக்கு…” என்று தென்றல் யோசிக்க,

“லூசு அவங்க நம்ம சீனியர்டி…” என்ற பிரதீபாவிடம்,

“நம்ம சீனியரா… நான் யார் கூடவும் அப்படி பேசினது இல்லையே…” என்று கேள்வியை கேட்டாள் தென்றல்..

“ஆமா நீ யாரை தான் பார்த்திருக்க.. யார் வந்து உன்கிட்ட பேசினாலும் அசால்ட்டா பேசிட்டு போறது.. இல்லையா கண்டுக்காம போறது.. இப்போ பார் உன்னை தேடி வந்து பேசினா கூட பதிலுக்கு ஒரு மரியாதைக்கு பேசாம என்னை பிடிச்சு படுத்துற…”

“ஹா.. சரி சரி… உடனே அட்வைஸ் பண்ணாத… ஆமா இவங்க எப்படி நம்ம சீனியர்..??” என,

“ஷ்…. ப்ரித்வி அண்ணா நம்ம முதல் வருஷம் படிக்கிறப்போ.. மூணாவது வருஷம் படிச்சாங்க…” என,

“ஓ..” என்று யோசித்தவள்,  

“எனக்கு இப்பவும் யாருன்னு தெரியலை.. எதுவும் போட்டோஸ் இருக்கா.. நம்ம டிபார்ட்மென்ட் பாங்க்சன் போட்டோஸ்.. அதில இருப்பாங்கல்ல..” என்று ஆர்வமாய் கேட்க,

“எனக்கு தெரியாதுடி.. நீ முதல்ல பேசு…” என்று பிரதீபா சொல்ல,

“ஹ்ம்ம் பேசிக்கிறேன்…” என்று எழுந்தாள் தென்றல்..

“எப்போ பேச போற…” என்றவளின் கேள்விக்கு,

“பிரஷ் பண்ணிட்டு வர்றேன்டி…” என்று எழுந்து சென்றுவிட்டாள் தென்றல்..         

“ப்ரித்வி… உன்னோட நியு ப்ராஜெக்ட்டுக்கு அஸிஸ்ட் பண்ண கேண்டிடேட்ஸ் செலக்ட் பண்ணிட்டியா…” என்ற சுகேஷின் கேள்விக்கு, இல்லையென்று உதடு பிதுக்கினான் ப்ரித்வி..

“ஏன்டா.. எப்போவுமே நீ தான் என்னை போட்டு பாடா படுத்துவ.. இப்போ என்ன..??”

“தென்றல் வரட்டும் மாம்ஸ்…” என,

“ஹ்ம்ம் போன்ல பேசவே ஆயிரம் கேள்வி.. இதுல அந்த பொண்ணு எப்போ வந்து எப்போ பேசி.. டேய்…” என்று சுகேஷ் சலிக்க,

“கொஞ்ச நேரத்துல அவளே கூப்பிடுவா மாமா…” என்றவனின் வாக்கு பொய்யாகவில்லை..

அவளே அழைத்தாள்..

“ஹா.. ஹலோ” என்றவளின் குரலில் அத்தனை தயக்கம்… யோசனை எல்லாம்..

“எஸ் தென்றல்….” என்றவனின் உச்சரிப்பில் தன பெயர் வித்தியாசமாய் தெரிவது போல் இருந்தது அவளுக்கு..

‘சீனியர் தானே.. அண்ணான்னு சொல்லிடலாமா.. ஆனா நமக்கு தான் அப்படி எல்லாம் கூப்பிட்டு பழக்கம் இல்லையே…’ என்று யோசித்து மௌனமாய் இருக்க,

“ப்ரித்வினே கூப்பிடலாம் தென்றல்.. எந்தவொரு மறுப்பும் இல்லை…” என்று அந்தப்பக்கம் அவன் சொன்னதும், இவளுக்கு திடுக்கிட்டது தான் மிச்சம்..

‘என்னடா இது நான் தான் எல்லாருக்கும் ஷாக் கொடுப்பேன்.. கரன்ட்டுக்கே ஷாக் கொடுக்கிறானே…’ என்று நினைத்தவள்,

“ஹ்ம்ம்… ப்ரித்வி.. எதுக்கு என்கிட்ட பேசணும் சொன்னீங்க…” என்று என்னவோ அவளுக்கு ஆயிரம் வேலையிருப்பது போல் கேட்க, அவனுக்கு சிரிப்பை அடக்க முடியவில்லை.. ஆனாலும் எங்கே சிரித்தால் நேற்று போல் அழைப்பை துண்டித்துவிடுவாளோ என்று எண்ணியவன், அடுத்து மிக மிக பார்மலாக பேசினான்..

“எஸ்… நீங்க இன்டர்ன்ஷிப் ட்ரை பண்ணிட்டு இருக்கீங்க இல்லையா.. என்னோட ஜூனியர் மிஸ். நீட்டா உங்களை ரெபர் பண்ணாங்க… நவ் ஐம் டீலிங் வித் ஒன் அமெரிக்கன் ப்ராஜெக்ட்.. சோ ஐ நீட் சம் பிரெஷ் கேண்டிடேட்ஸ்.. உங்களுக்கும் அடுத்து பிராஜெக்ட் தானே.. வை டோன்ட் யு ஜாயின் வித் அஸ்..??” என்று சொல்ல,

“நீட்டாவா……” என்று யோசித்தவள், அப்போது தான் நினைவில் வந்தது போன மாதம் எதேர்ச்சையாய் ஷாப்பிங் சென்றிருக்கும் போது நீட்டாவை கண்டதும், என்னவோ போகிற போக்கில் இன்டர்ன்ஷிப் ட்ரை பண்ணனும் என்று இவள் சொன்னதும்..

அதை அவள் இத்தனை கிரமமாய் எடுத்து செய்திருப்பாள் என்று தென்றல் நினைக்கவில்லை.. சொல்லப் போனாள் அப்படி ஒருத்தியை கண்டதையே மறந்து போனாள்..

“ஹலோ தென்றல்……” என்றவன் அழைப்பில் மீண்டும் மீண்டவள்,

“யா…” என,

“சோ இதுக்கு தான் கூப்பிட்டேன்.. வில் யு ஜாயின் வித் அஸ்..???” என்றவனின் கேள்வியில் மீண்டும் தனக்குள்ளே யோசனை..

‘இவனையே எனக்கு இன்னும் சரியா தெரியலை… இதுல நான் என்ன சொல்ல..???’ என்று நினைத்தவள், பின் சட்டென்று ஒரு தெளிவு பிறக்க,

“நான் ஒன்னு சொல்லட்டுமா… தப்பா நினைக்க கூடாது..” என்று சொல்லி நிறுத்தினாள்..

ப்ரித்விக்கோ என்ன சொல்ல போகிறாளோ என்று இருந்தது.. முடியாது என்று மட்டும் சொன்னாலானாள் அடுத்து எல்லாமே கஷ்டம் தான்.. இவளை வேறு எந்த வழியில் அணுகுவது என்பது அவனுக்கு தெரியவில்லை.. மாதுரி சொன்னது போல் வீட்டினரை வைத்துத் தான் முயற்சி செய்ய வேண்டும்..

ஆனால் அவனது ஆசையெல்லாம் அவனை அவனுக்காகவே அவளுக்கு பிடிக்க வேண்டும் என்பது தான்..

“ஹலோ… ப்ரித்வி…. லைன்ல இருக்கீங்களா…???”

“யா.. யா.. சொல்லுங்க…”

“இல்ல.. எனக்கு சத்தியமா உங்களை இப்போ வரைக்கு நியாபகம் வரலை.. பிரதீபா சொன்னா நீங்க சீனியர்னு.. நானும் உங்களை ரிமெம்பர் பண்ண ட்ரை பண்றேன்.. பட் ஐ கான்ட்.. இப்படி இருக்கப்போ நான் எப்படி…” என்று அடுத்து தயங்க,

‘சுத்தம்… இதுக்கு நான் நேராவே போயிருக்கலாமோ..’ என்று தோன்றியது அவனுக்கு.. ஆனாலும் இத்தனை தூரம் வந்தாகிவிட்டது இனியும் விடுவதா.. பின்னே போவதா.. ம்ம்ஹும் அதெல்லாம் என்னால் முடியாது என்று தலையை உலுக்கியவன்.

“நத்திங் ப்ராப்ளம்.. நீங்க எப்போ ப்ரீயோ அப்போ என் கம்பனிக்கு ஒரு விசிட் கொடுங்க…” என,

‘அட இவன் என்ன அநியாயத்துக்கு நல்லவனா இருக்கான்.. பொசுக்குனு மரியாதையா வேற பேசுறானே.. நேத்து அப்படி பேசலையே.. கம்பனிக்கு கூப்பிடுறான்…’ என்றெண்ணியவள்,

“ஹா… இல்ல.. அது…” என்று தயங்க,,

“ஹ்ம்ம் ஓகே.. உங்களுக்கு இஷ்டமில்லேன்னா வேணாம்.. சாரி டிஸ்டர்ப் பண்ணிட்டேன்.. யு கேரி ஆன்…” என்றவன் அடுத்து அவள் பேசுவதற்கு முன்னே அழைப்பை துண்டித்துவிட்டான்..

நேற்று அவள் செய்தாள்… இன்று இவன் செய்கிறான்…  இருவருக்குள்ளும் காதல் நன்றாகவே செய்கிறது..

தன் அலைபேசியையே பார்த்தவள், அப்படியே அமர்ந்திருக்க, “ஏய் என்னடி பேசிட்டியா…???” என்றபடி வந்த பிரதீபாவை குழப்பமாய் பார்த்தாள்..

“என்ன தென்றல்..” என, சுருக்கமாய் அனைத்தையும் தென்றல் சொல்லி முடிக்க,

“வாவ்,.. சூப்பர்டி… நம்ம சீனியர்ஸ் நிறைய பேர் ப்ரித்வி அண்ணா கம்பனில தான் வொர்க் பண்றாங்க… இப்போதான் ராகினி சொன்னா…” என,

“அவளுக்கு எப்படி தெரியும்..??” என்று சட்டென்று புருவம் சுருக்கினாள் தென்றல்..

தன்னை அழைத்தது போல் ஒருவேளை ராகினிக்கும் அழைப்பும் வந்திருக்குமோ என்று தோன்றியது..

“லூசு.. ராகினியோட அண்ணன் நமக்கு டைரெக்ட் சீனியர் தானே… அவ தான் சொன்னா…” என்று விளக்க,

“ஓ…” என்றவள் “இப்போ என்னடி செய்றது..???” என,

“கண்ண மூடிட்டு ஓகே சொல்லு.. எப்படியும் ப்ராஜெக்ட்டுக்கு அலையணும்… இதுனா உனக்கு நல்லது தானே…” என்றவளை முறைத்துப்பார்தாள் தென்றல்..

“அட இப்போ என்னடி முறைக்கிற…??”

“நான் மட்டும்னா போக மாட்டேன்…”

“அதானே பார்த்தேன்..” என்றவள், “முதல்ல போய் அங்க பாப்போம்.. உனக்கு பிடிச்சிருந்தா அடுத்து நானும் ப்ரித்வி அண்ணாக்கிட்ட கேட்கிறேன்…” என,

“நீயாவே கேட்பியா..” என்றாள் தென்றல்..

“ஏன் இதுல கேட்க என்ன..??? எவனோ மூஞ்சி தெரியாதவன் கிட்ட எல்லாம் கேட்கிறோம்.. இவங்க நம்ம சீனியர் தானே.. அதுவுமில்லாம மார்னிங் என்கிட்ட பேசும் போது கூட நல்லாத்தான் பேசினாங்க…” என,

‘ஆனா நேத்து என்கிட்டே பேசின விதத்துக்கும் இப்போ பேசின விதத்துக்கும் நிறைய வித்தியாசம் இருந்ததே.. ஒருவேளை நான் தான் அப்படி நினைக்கிறேனா… ஆனா நேத்து என்னவோ சொல்லி கிண்டல் பண்ணது.. தென் என்னவோ என்னை நல்லா தெரிஞ்சது போல பேசினது எல்லாம்.. ஆனா இப்போ அப்படியே தலைகீழ்.. இதில எது உண்மை…’ என்று தனக்குள்ளே போட்டு மண்டையை கசக்க,

“டி என்ன அப்படியே இருக்க….” என்று பிரதீபா அவளை தட்ட, 

“ஹா ஒண்ணுமில்லடி.. ஒரு சின்ன குழப்பம்.. ஆனா அங்க போய் பார்த்தா சரியாகிடும் தானே.. சோ போய் பாப்போம்…” என்றாள் முடிவாக..

இங்கே தென்றல் சட்டென்று முடிவிற்கு வந்துவிட, அங்கே ப்ரித்வியோ குறுக்கும் நெடுக்குமாய் நடந்துகொண்டு இருந்தான்.. அவனது அலுவலகமும் வீடும் வேறு வேறல்ல, வீடு இருக்கும் அதே காம்பவுண்டில் தான் ஒரு தனி கட்டிடம் அவன் அலுவலகம்.. சுமார் முப்பது பேரை கொண்டு ஓராண்டிற்கும்  மேலாய் இயங்கிக்கொண்டு இருக்கிறது.

சீரான முன்னேற்றமே நிரந்தரம் என்பது அவனது கொள்கை.. ஆகையால் பின்புலம் பலமாக இருந்தாலும், தானே மெல்ல மெல்ல முன்னேறுவேன் என்று வாழ்விலும் சரி தொழிலும் சரி நிதானமாகவே எட்டுவைத்து ஏறிக்கொண்டு இருக்கிறான்..

அவன் ஒன்று கேட்டால் இல்லையென்று அவன் வீட்டில் யாருமே சொல்லப் போவது இல்லை தான்.. ஆனாலும் முதலில் தான் முயற்சிக்க வேண்டும் பின்னே தான் வீட்டினரின் உதவி எல்லாம் என்று இருப்பவனுக்கு இன்றுவரைக்கும் அவனது முயற்சிகள் அனைத்தும் வெற்றியை மட்டுமே கொடுத்திருக்கின்றன..

இப்போதோ அவன் வாழ்விற்காக ஓர் முயற்சி எடுக்கப்போகிறான்.. வெகு நாட்களாக மனதிற்குள்ளேயே போட்டு, அதனோடே வாழ்ந்து, சரியான தருணத்திற்காக காத்திருந்து இன்று தான் காதலிக்கும் கன்னிகையை கரம் பிடிக்க, முதலில் அவளுக்குத் தன்னை பிடிக்க வேண்டுமே என்ற எண்ணத்தில் ஒவ்வொன்றும் பார்த்து பார்த்து யோசித்து செய்யும் அவனது எண்ணங்கள் அனைத்தும் ஈடேறுமா??

தென்றல்.. எப்போது எப்படி இருப்பாள் என்று அவளுக்கே தெரியாது.. ப்ரித்வி எப்போதுமே ஒரேமாதிரி தான் இருப்பான்.. ஆனால் சூழ்நிலைகள் மனநிலையை மாற்றிவிடும் அல்லவா..

அந்த மாற்றத்தில் இருவருக்கும் சிக்குண்டு இறுதியில் யாரின் எண்ணம் ஈடேறும் என்பது இப்போது இருவருக்குமே தெரியாது..

தென்றல் சரியென்பதற்கு முன் ப்ரித்வியையும் அவனது அலுவலகத்தையும் பார்க்கலாம் என்று முடிவெடுக்க, ப்ரித்வியோ அவள் இங்கு வந்தால் மறுப்பு சொல்லவே விடக்கூடாது என்ற எண்ணத்தில் இருந்தான்..

“டேய் மாப்ள.. நீ சொல்றது எல்லாம் சரி.. ஒருவேளை அந்த பொண்ணுக்கு பிடிக்கலைன்னா.. ” என்று சுகேஷ் சொல்ல,

“முதல்ல வரட்டும் மாமா.. வந்து பார்த்தா கண்டிப்பா பிடிக்கும்..” என்றான் ப்ரித்வி உறுதியாக.

“என்னவோ சொல்ற.. ஆனா இதெல்லாம் அத்தைக்கு தெரிஞ்சா என்னாகும்னு தெரியலை.. சீக்கிரம் அவங்கக்கிட்ட சொல்லிடு ப்ரித்வி…”

“கண்டிப்பா மாமா… சீக்கிரமே சொல்லிடுவேன் அம்மாக்கிட்ட.. தென்றல் இங்க ஜாயின் பண்ணி கொஞ்ச நாள்ல சொல்லிடுவேன்…”     

“சரிடா.. அந்தப்பொண்ணு அடுத்து பேசினா சொல்லு…” என்று சுகேஷ் எழுந்து சென்ற பின்னே, தன் இருக்கையில் அமர்ந்தவனுக்கு மீண்டும் எண்ணங்கள் தென்றலை பார்த்த நிகழ்வுகளை கொண்டு பின்னோக்கிச் சென்றது..

ப்ரித்வி கல்லூரியின் மூன்றாவது ஆண்டில் இருக்கும் போது தான் முதல் வருட மாணவர்களுக்கான வரவேற்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.. பொதுவாக இதுப்போன்ற விசயங்களை எல்லாம் எடுத்து செய்வது இரண்டு மற்றும் மூன்றாவது ஆண்டு மாணவர்கள் தான் என்பதால், ப்ரித்விக்கு விழா முடியும் வரைக்குமே வேலை சரியாக இருந்தது..

ஆனால் அவன் எப்போதுமே நான் தான் இதெல்லாம் செய்கிறேன் என்று தன்னை முன்னிறுத்திக்கொள்ள மாட்டான்.. அது வேறு மாதிரி ஒரு வர்ணத்தை பூசும் என்பது அவனுக்கு நன்றாகவே தெரியும்.. ‘ஷட்டில்..’ என்பார்களே அதுபோல தான் அவன்..

நண்பர்களோடு பேசுவது, சிரிப்பது, நக்கல், நையாண்டி ஊர் சுற்றல் நண்பர்களுக்கு ஒன்றென்றால் ஓடுவது என்று எல்லாமே இருக்கும் ஆனால் ப்ரித்வி என்று யாரும் அவனை கை நீட்டி ஒன்று சொல்லிட முடியாது..

சொல்லப்போனால் அவன் இன்னார் வீட்டினன் என்று அங்கே இருப்பவர்  நிறைய பேருக்கு தெரியாது.. இப்படி ஒருத்தன் இங்கே படித்தானா என்றும் கூட சிலருக்கு தெரியாது..

ஆகையால் தான் தென்றலுக்கும் இப்படி தெரியாமல் போனது.. ஆனால் ப்ரிதவிக்கு தென்றலை இரண்டாவது முறை சந்திக்கும் வாய்ப்பு இத்தனை சீக்கிரம் வரும் என்று அவன் எதிர்பார்க்கவே இல்லை..

“டேய் மச்சி.. மைக் சரியா வேலை செய்யலைடா… வேற மைக் வேணும்…” என்று அவசரமாய் வந்த ராமை பார்த்து,

“ஏன்டா எல்லாம் செக் பண்ணித்தானே எடுத்திட்டு வந்தோம்..” என்று குழப்பமாய் பார்த்த ப்ரித்வி,

“சரி கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணு.. நான் போய் வேற எடுத்திட்டு வர்றேன்…” என்று விழா அரங்கில் இருந்து வெளியே போகவும், அதே நேரம் உள்ளே வேக வேகமாய் தென்றல் வரவும் சரியாய் இருந்தது..

இடித்துக்கொள்ளாத குறை தான்..

“சாரி சாரி…” என்று அவளே சொல்லிவிட்டு, யார் என்று கூட பார்க்காது சென்றுவிட்டாள். அவனோ அப்படியே நின்றுவிட்டான்..

‘இவ அவ தானே…’ என்று யோசிக்க, அவன் நண்பன் மேடைக்கு அருகே நின்று இவனுக்கு சைகை செய்ய வேகமாய் தன தலையை உலுக்கிக்கொண்டு வெளியேறினான்..

திரும்ப அவன் மைக்கோடு அரங்கத்தினுள் நுழையும் போது, முதலாமாண்டு மாணவிகளின் நடனம் நடந்துகொண்டு இருந்தது..

தென்றல் நடுவில் இருக்க, அவளை சுற்றி நால்வர்… கிராமிய பாடல்கள் சிலதை ஒரேதாய் தொகுத்து அதற்கு ஏற்ப நடனம் ஆடிக்கொண்டு இருந்தனர்.. மேடையில் ஒருவித நடனமென்றால் மேடைக்கு கீழே இன்னொருவித கொண்டாட்டம்..

மாணவர்களின் விசில் சத்தத்திற்கும், கரகோசத்திற்கும், ஆரவரதிற்கும் பஞ்சமே இல்லை.. தென்றலை சுற்றி ஆடிக்கொண்டு இருந்த மாணவிகள் கூட நடுவில் கவனம் சிதறி ஓரிரண்டு அசைவுகளை மாற்றிவிட, இவளோ நான் ஆட வந்தேன் ஆடி முடித்தே இறங்குவேன் என்பது போல வேறெதுவும் கவனிக்காது ஆடினாள்.

ஒருவழியாய் அவர்களது நடனம் முடிந்து தென்றலும் அவள் குழுவினரும் கீழிறங்கி வர, மேடைக்கு அருகே நின்றிருந்தோர் எல்லாம் அவர்களுக்கு வாழ்த்து தெரிவிக்க, அவர்களும் சிரித்தபடியே மேடையை கடந்து செல்ல,  ப்ரித்விக்கு அழைத்து பேசுவோமா என்று தோன்ற, இருந்தாலும் ஒரு தயக்கம்..

ஆனாலும் அவனையும் மீறி “தென்றல்…” என்று அழைத்துவிட, அவளோ திரும்பி மட்டும் பார்த்தாள்.. என்ன என்றெல்லாம் கேட்கவில்லை.. பார்த்தாள் அவ்வளவு தான்..

“நைஸ் பெர்பார்மன்ஸ்…” என,

“தேங்க்ஸ்..” என்றுவிட்டு அவள்பாட்டுக்கு சென்றுவிட்டாள்..

“டேய் மச்சி… நீயா பேசியது…” என்று ப்ரித்வியின் மற்றொரு நண்பன் தீபக்  வர,

“ஏன் எனக்கென்ன பேச வரதா..??” என்று இவனும் கேட்க,

“அதில்ல நீ நம்ம கிளாஸ் பொண்ணுங்கக்கிட்டவே அளந்து பேசுவ.. இதுல ஜூனியர் பொண்ணு.. அவ பேரெல்லாம் சொல்லி சரியா கூப்பிட்டு பேசுற…” என்று ப்ரித்வியை தீபக் ஆராய்ச்சியாய் பார்க்க,

“டேய்.. போ போய் வேலைய பார்.. நான் எங்க பேசினேன்.. ஜஸ்ட் விஷ் பண்ணேன்..” என,

“ஹா சரி சரி.. எல்லாம் இப்படிதான் ஆரம்பிக்கும்…” என்று அவனும் சொல்லிச் செல்ல, தானாக வந்து ஒரு புன்னகை ஒட்டிக்கொண்டது ப்ரிதவிக்கு..

அன்றைய இரவெல்லாம் அவனால் நிம்மதியாக உறங்க முடியவில்லை.. தெளிவாய் இருந்த மனதில் திடீரென்று ஒரு சலனம்.. முதல் முறை அவளை பார்க்கும்போது  அட என்று ஆச்சர்ய பட வைத்தாள்.. ‘பொண்ணுங்களுக்கு இந்த தைரியமாது இருக்கணும்’ என்று நினைத்திட வைத்தாள்.. 

இரண்டாவது முறை பார்க்கும் போதோ அவனுக்கு என்ன நினைக்கிறோம் என்றே தெரியாத ஒரு குழப்பத்தை கொடுத்தாள்.. இது வெறும் சலனம் தானா என்றும் தெரியவில்லை..

‘நம்ம வயசு அப்படி…’ என்று அவனுக்கு அவனே சொல்லிக்கொண்டு வழக்கமாய் தன் கல்லூரி வாழ்வை தொடர, அவ்வப்போது தென்றல் மீது படியும் பார்வைகளை மட்டும் அவன் மாற்றிக்கொள்ள முடியவில்லை.. முயற்சிக்கவும் இல்லை..

அவனுக்கு தென்றலை கவனிப்பது பிடித்திருந்தது.. அதை வெளிபடுத்தும் எண்ணமெல்லாம் இல்லை.. அவ்வப்போது கல்லூரி வளாகத்தில் அவளை காணும் போது ஒரு புன்னகையோடு அவளை கடந்துச் செல்வான்..

சில நேரங்கள் வேண்டுமென்றே அவள் இருக்கும் பக்கம் தேடி போய் பார்த்து வருவான்.. அனால் இதெல்லாம் தென்றலுக்கும் தெரியாது, மற்றவர்களுக்கும் தெரியாது.. அவனுக்குமே இது காதலா என்றெல்லாம் தெரியாது.. பிடிக்கிறது பார்க்கிறேன் என்ற அளவில் மட்டும் தான் இருந்தான்..

பிடித்தம் என்பது போய் அது காதல் தான் என்று உணரும் தருணமும் வந்தது..

 

Advertisement