Advertisement

கைப்பாவை இவளோ 04

                       விமானநிலையத்தில் மயங்கி விழுந்தவள் மீண்டும் கண்திறக்க மூன்று மணி நேரம் எடுத்தது. பீஷ்மன் தனது மருத்துவமனைக்கே அவளை தூக்கி வந்திருக்க, மீனலோச்சனி தான் அவளைக் கவனித்துக் கொண்டிருந்தார்

                        அதிகப்படியான மனஅழுத்தமும், கர்ப்பகால சோர்வும் அவளை மயக்கமடைய செய்திருந்தது. அவள் ஆழ்ந்து உறங்குவதற்காக சில மருந்துகளை குறைந்த அளவில் அவள் உடலில் ஏற்றியிருந்தார் மீனலோச்சனி

                     ஆனால், அந்த மருந்துகளையும் மீறி அவள் மனதின் அலைப்புறுதல் மேலெழும்ப, அமைதியான உறக்கம் அவளை அணுகவே இல்லை. அடிக்கடி ஏதோ முனகிக் கொண்டும், தேம்பிக் கொண்டும் என்று மூன்று மணி நேரங்களை தள்ளி விட்டவள் அதன்பிறகு மொத்தமாக விழித்துக் கொண்டாள்.

                 கண்களைத் திறந்தவளுக்கு மருத்துவமனை சூழலே வயிற்றில் புளியைக் கரைத்தது. அவள் கைகள் தன்னிச்சையாக வயிற்றை தடவிக் கொள்ள, சட்டென ஒட்டிக் கொண்ட பயத்துடன் வேகமாக எழுந்து அமர்ந்தாள்

                 பீஷ்மன் அந்த அறையின் சோஃபாவில் அமர்ந்து இருந்ததை அவள் கவனிக்காமல் போனாலும், அவள் கண்விழித்தது முதல் அவள் முகத்தை மட்டுமே கவனித்திருந்தான் அவள் பீம். அவள் முகத்தில் தெரிந்த அச்சமும், கண்களின் அலைபாய்தலும் பீஷ்மனை கரைக்க முயற்சிக்க, கண்களை இறுக மூடித் திறந்து தன்னை நிலைப்படுத்திக் கொண்டான்.

                 அவன் கண்களை மூடித் திறந்த நேரம், சரியாக சாஷாவும் அவனை கண்டுகொண்டாள். அவன் முகத்திலிருந்தே அவனது கோபம் புரிய, தனது நிலை என்னவென்று சரியாக தெரியாத நிலையில் மீண்டும் கண்ணீர்தான் துணை நின்றது.

                    பீஷ்மனை அவள் அழுகை மேலும் கோபமாக்க, அமர்ந்த இடத்தில இருந்து எழுந்து கொண்டான் அவன். அவனது அழுத்தமான நடையுடன் அவன் சாஷாவை நெருங்க

தனது அழுத்தமான நடையுடன் அவன் சாஷாவை நெருங்க, பயத்தில் இன்னும் பின்வாங்கினாள் அவள். அவள் கண்களை கூர்ந்தவன்பயமா இருக்கா சாஷா.” என்றான் நக்கலாக.

                   அவள்பீம்..” என்று திணற 

                  தன் வாய் மீது விரல் வைத்து அவளை அமைதியாகி இருந்தான் பீஷ்மன். “இந்த குழந்தை உனக்கு வேண்டாம்நான் முடிவு பண்ணிட்டேன்..” என்று எப்போதும் போன்ற அழுத்தத்துடன் அவன் கூற, என்ன பேச முடியும் அவனிடம்

                  சாஷாவுக்கு மூச்சே நிற்கும் நிலை தான். “வேண்டாம் பீம்.. ப்ளீஸ்..” என்று அவன் காலை பிடித்து கெஞ்சுவதற்கு கூட தயாராக இருந்தாள் அவள். ஆனால், பேச்சு வர வேண்டுமே. அவன் முன்னிலையில் அவள் மனமே சண்டித்தனம் செய்கிறதே.

                   தன்னையே நொந்து கொண்டு அவள் பீஷ்மனைப் பார்க்க, தன் வலது கையால் அவள் இடது கன்னத்தை தாங்கினான் அவன். “இது வேண்டாம் சாஷா. உன் நல்லதுக்கு தான் சொல்வேன் நான். புரிஞ்சிக்கோ.” என்று குழந்தையிடம் கூறுவதுப் போல் அவன் கூறி வைக்க, “எது நல்லதுஎன்று ஏளனம் செய்தது மனம்.

                கண்களை மூடி தன்னை நிதானித்துக் கொண்டவள்எனக்கு என் குழந்தை வேணும் பீம்..” என்று எப்படியோ ஒருவழியாக கூறிவிட 

                      “நீ என்ன நினைக்கிற சாஷா.. இதுவரைக்கும் உன்னை நான் விட்டு வச்சிருப்பேனா..” என்று பீஷ்மன் சிரிக்க, பதறிப் போனது அவளுக்கு.

              “பீம்என்று கூச்சலிட்டாள் சாஷா.

              அவள் சத்தத்தில்இன்னும் எதுவும் நடக்கல. ஆனா, கண்டிப்பா இன்னிக்கு முடியனும்..” என்றான் பீஷ்மன்.

               அவன் முடிவு செய்துவிட்டது புரிந்தாலும், அந்த நேரத்தில் ஏதோ ஒரு குருட்டு தைரியம் எட்டிப் பார்த்தது சாஷாவிடம்.  “என்னால முடியாது பீம். நான் என் குழந்தையை அழிக்க ஒத்துக்க மாட்டேன். எனக்கு என் குழந்தை வேணும்.. எங்களை விட்டுடு.. நான் எங்கேயோ..” என்று அவள் முடிக்கும் முன்னமே, அவள் அருகில் அவளை உரசிக் கொண்டு அமர்ந்தான் பீஷ்மன்

                  வாழ்வில் முதல்முறையாக அவனை தன் செயலால் மறுத்தாள் சாஷா. ஆம். அவன் உடல் தன்னில் உரசிய நொடி, தன்னிச்சையாக விலகி அமர்ந்தாள் அவள். பீஷ்மனின் அழுத்தம் அவள் செயலால் இன்னும் கூடிவிட, அவள் தோளில் கையைப் போட்டு தன்னோடு மொத்தமாக  உரச வைத்தான் அவளை.

                  சாஷா நடுக்கத்துடன் கண்களை மூடிக் கொள்ள, அவன் முகத்திற்கு வெகு அருகில் அவளது முகம். பயந்து சிவந்திருந்த போதும் ஒரு வகையில் போதையாக்கியது அவனை. அவள் முகத்தை ஆழ்ந்து பார்த்தவன் அவள் இதழ்களை தன் கட்டுப்பாட்டில் எடுத்துக் கொண்டான். நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு ஆழ்ந்த முத்தம்.

                 சாஷா கண்களை திறக்கவேயில்லை இறுதிவரை. எப்போதும் போல அவனிடம் ஒன்ற முடியவில்லை அவளால். காதல் மாறவில்லை தான். ஆனால், காட்சிகள் மாறியிருக்கிறதேஅவன் அருகாமையை ஏற்க முடியாமல் முதல்முறை தடுமாறினாள் அவள்

                  தான் அவனுக்கானவள் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை அவளுக்கு. ஆனால், அவன் தனக்குரியவன் இல்லை என்ற எண்ணம் சமீபகாலமாக இருக்கிறதே. அவனும் தன் நடத்தையால் அதை உறுதிப்படுத்தியவன் தானே. அப்படியிருக்கஇப்படி  தன்னை அவன் நெருங்குவதை ஏற்க முடியவில்லை அவளால்.

                   ஆனால், அவளின் அனுமதியை எல்லாம் கேட்டு நிற்பவனா பீஷ்மன். வழக்கம் போல அவன் தன் தேவையைத் தீர்த்துக் கொள்ள, சாஷாவின் கண்களில் கண்ணீர் வழிந்தது தன்னையறியாமல். அவள் கண்ணீரின் சுவையில் தான் அவளிடம் இருந்து விலகினான் அவன்.

                  அவள் கண்ணீர் அவனை பேதலிக்க செய்ய, “ஏன் கசக்குதா..” என்று மனசாட்சியே இல்லாத கேள்விதான் அப்போதும்.

                   என்ன சொல்வாள் சாஷா.. சொல்ல முடியுமா அவனிடம். அவள் மௌனத்தை மொழியாக்க, அவள் தாடையை கையால் பற்றி இறுக்கினான் பீஷ்மன். சில நொடிகள் வலி பொறுத்தவள், அவன் கைகளின் இறுக்கம் கூடவும், “வலிக்குது பீம்..” என்று தடுமாற, தன் கைகளின் இறுக்கத்தை குறைத்தான்.

                     ஆனால், அவன் கைகள் இன்னும் அவளைப் பற்றியிருக்க, “எனக்கு இந்த குழந்தை வேண்டாம். இதை அனுமதிக்க முடியாது என்னால. பிரச்சனை பண்ணாத..” என்றான் முடிவாக

                     சாஷாவின் உடல் நடுங்கஎனக்கு என் குழந்தை வேணும். நான் எந்த பிரச்சனையும் செய்யமாட்டேன். என்னை விட்டுடு.” என்றாள் மீண்டும்.

                      “பிரச்சனை பண்ற ஆப்ஷனையே நான் உனக்கு கொடுக்கலையே. பிறகெப்படி பண்ணுவ. நான் நினைக்கிறதை நீ செஞ்சாகணும்…” என்றான் பீம்.

                      அவன் பேச்சில் பயம் கொண்டாலும், “என்னால முடியாது பீம். இந்த விஷயத்தில நான் யாருக்கும் கட்டுப்படுறதா இல்லை. எனக்குள்ள இருக்கறது என் குழந்தை மட்டும்தான். எப்பவும் நான் உன் முன்னாடி வரமாட்டேன். உன் கண்ல படாம எங்கேயோ போயிடுறேன்.. என் பிள்ளையை மட்டும் விட்டுடு.”என்றாள் வேண்டுதலாக.

                        பீஷ்மனுக்கு அவள் கண்களின் வலி தெரிந்தாலும்,அவன் குறுக்குப்புத்தி அப்போதும் தலைகீழாகவே வேலை செய்தது.  “ஏன் சித்தார்த் என் பிள்ளைக்கு அப்பனா இருக்க சம்மதம் சொல்லிட்டானா…” என்றான் குதர்க்கமாக 

                    “யாரோட பிள்ளை ன்னு நான்தானே சொல்லணும்…” என்று தலைகுனிந்து கொண்டே அவள் பதில் கொடுக்க, அவள் கழுத்தைப் பிடித்திருந்தான் பீஷ்மன்

                               அவள் கழுத்தை இறுக்கியவன்என்ன வாய் நீளுது… ” என்று நக்கலாக புன்னகைக்க 

            “ஆமா.. எனக்கு என் குழந்தை வேணும். நான் பேசுவேன்..” என்று வலியை மீறி சிறுபிள்ளையைப் போல் உதட்டைப் பிதுக்கினாள் சாஷா

              “முதல்ல இப்படி உளர்றதை நிறுத்து சாஷா. பிறக்கவே இல்லை. அதற்குள்ள உன் பிள்ளையா…” என்று அதட்டினான் பீஷ்மன்.

               சாஷாஆமா.. என் குழந்தைதான். எப்பவும் நான் இதைத்தான் சொல்வேன். நிச்சயமா உன் பேரை எங்கேயும் சொல்லவேமாட்டேன். என்னை அனுப்பிடு..” என்றாள்.

              “எங்கே அனுப்பனும்..” 

             “எங்கேயோ போயிடுறேன்இந்த நாட்டை விட்டே போகப் பார்த்தேன் தானே. போயிடுறேன்.. ஆனா, என் குழந்தையை விடமாட்டேன்..” என்றாள் திடத்துடன்.

               “சோ.. முடிவு பண்ணிட்ட.” 

              “ம்ம்..” 

               “என்னால இப்போதைக்கு கல்யாணமெல்லாம் பண்ண முடியாது சாஷா.. இப்போ இந்த குழந்தை உனக்கு வேண்டாம்…” 

              “எனக்கும் கல்யாணம் வேண்டாம்நான்.. நான் கேட்கலையே.. எனக்கு என் குழந்தை போதும்.” என்று தேம்பினாள் அவள்.

             “உனக்கு நான் வேண்டாமா..” என்று பீஷ்மன் அவளைத் தெரிந்தவனாக கர்வத்துடன் வினவ 

            “எனக்கு என் குழந்தை வேணும்..” என்று அவனை தள்ளி வைத்தாள் சாஷா.

 

            “உன் கெரியர் அதை என்ன செய்ய போற..” 

             “நான் இனி நடிக்கறதா இல்ல. என்னோட அட்வான்ஸ் எல்லாத்தையும் திருப்பிக் கொடுத்துட்டேன்.” 

 

             “உன் அம்மாவே உனக்கு விஷம் வச்சிடுவாங்க .. இந்த விஷயத்துக்கு நான் உன்கிட்ட பேச வேண்டிய அவசியமே இல்ல. உன் அம்மா காதுல லேசா ஓதினாலே போதும். உன்னை அடிச்சு இழுத்துட்டு போய்டுவாங்க  ஹாஸ்பிடலுக்கு.”

               “உனக்காக மட்டும்தான் பேசிட்டு இருக்கேன். ஒழுங்கா நான் சொல்றதைக் கேளு. இதுதான் சரியா வரும்.” என்று சிறுபிள்ளைக்கு எடுத்து சொல்பவன் போல் பீஷ்மன் கூற 

               “என் பிள்ளையை கலைக்க சொல்ற உரிமை உங்க யாருக்கும் கிடையாதுஎன் அம்மா என்னை ஏதாவது செய்ய நினைச்சா, என்னை நானே அழிச்சுப்பேன். “

               “என் முகத்தை காட்டிதானே சம்பாதிக்கிறாங்க.. அந்த முகத்தை அழிச்சுப்பேன்..” என்றாள் நிதானமாக 

                “என்ன என்னை மிரட்ட நினைக்கிறியா..” 

               “எனக்கும் உங்களுக்கும் என்ன சம்பந்தம் இருக்கு. நான் எப்படி உங்களை மிரட்ட முடியும். நான் யார் உங்க வாழ்க்கையில.” 

                “கரெக்ட்.. நீ யாருமே இல்ல எனக்கு. உன் வயித்துல என் குழந்தை வளர்றதை அனுமதிக்க முடியாது என்னால. சோ, அழிச்சுடுவோம்.” என்றான் பீஷ்மன்.

 

                “இது உன் குழந்தை ன்னு நான் எப்போ சொன்னேன் பீம்

             என்று கேட்டவள் அவன் அதிர்ச்சியாவான் என்று எதிர்பார்க்க, சம்பந்தப்பட்டவர் சத்தமாக சிரித்தான்.

                      இப்போது சாஷா அவனை குழப்பமாக பார்க்க, “என்னைத்தவிர வேற எவனையாவது உன் பக்கத்துல நிற்க விடுவியா ன்னு யோசி முதல்ல. அப்புறம் குழந்தையை யோசிக்கலாம்.” என்றான் சிரிப்புடன்.

                   சாஷாவுக்கு புன்னகை வரவில்லை. மாறாக, அவன் கர்வத்தை நினைத்து கழிவிரக்கம் வந்தது. “அவன் கூறியபடி தானே இருக்கிறேன் நான்.” என்று தன்னை கீழாகவே உணர்ந்தாள் அப்போதும்.

                  “இவன் என்ன சொன்னாலும் தான் மாறக்கூடாதுஎன்ற முடிவு இன்னும் திடப்பட, அடித்து மிரட்டும் வேலையெல்லாம் செய்யமாட்டான் என்று அப்போதும் அவனை நம்பியது மனம்

                 அவள் தனது யோசனையின் விளைவாக அமைதியாக இருக்க, பீஷ்மன் பேசினான்.”உனக்கு ஒருநாள் டைம் தரேன் சாஷா. யோசிச்சு முடிவு செய். ஆனா, நான் சொல்றதை கேட்காத வரைக்கும் இந்த ஹாஸ்பிடலை விட்டு நீ வெளியேப் போக முடியாது. என்று தீர்மானமாக அவன் உரைத்துவிட 

                  “என்னை கொன்னுடேன் பீமாநான் நிம்மதியா போய்டுவேன் இல்ல. ஏன் என்னை இப்படி கொஞ்ச கொஞ்சமா சாகடிக்கிற.” என்று அவள் கதற, அவளை நெருங்கி முகத்தை மூடியிருந்த அவள் கைகளை விளக்கினான் பீஷ்மன்.

                  சாஷா அவனைப் பார்க்காமல் மேலும் அழ, யோசிக்காமல் அவளைத் தன்னுடன் அணைத்து கொண்டான் பீஷ்மன். அவன் நெஞ்சில் விழுந்தவள் மொத்தமாக பத்து நிமிடங்கள் அழுது தீர்த்தாள். .

                       அவள் அழுது முடிக்கும்வரை காத்திருந்தவன்  “உனக்கு என்னைவிட குழந்தை முக்கியமா சாஷா. நான் வேண்டாமா…” என்று கேட்க 

                  விரக்தியுடன் சிரித்தாள் அவள். “இந்த கேள்விக்கு பதில் தெரியாத அளவுக்கு நீ இன்னசன்ட் கிடையாது பீம். நீ தெரிஞ்சே என்னோட விளையாட நினைக்கிற. ஆனா, நான் தயாரா இல்ல. எனக்கு என் குழந்தை வேணும்..” என்று அவள் அழுத்தமாக கூறிவிட 

                          “இந்த குழந்தையை வச்சு என்னை வளைக்க முடியுமா உன்னால..” என்று கேட்டான் மீண்டும்.

           சட்டென அவனைவிட்டு விலகியவள்நான் இதை எதிர்பார்த்தேன் பீம். ஆனா, உன் அம்மாவோ, தாத்தாவோ கேட்பாங்க ன்னு நினைச்சேன். நீங்க கேட்பிங்க ன்னு நினைக்கல. ஆனாலும் பதில் சொல்றேன். நான் சொல்ல வேண்டியவ தான்.”

          “நான் நிறைய முறை உன்னை வளைக்க நினைச்சுருக்கேன் பீம். பெரிய பணக்காரன், அழகா இருக்க இதுக்காகவெல்லாம் இல்ல. என்னை வெறும் உடம்பா நினைக்காம, படுக்கையில கூட என்னை கட்டாயப்படுத்தாம எனக்கு காமத்தை சொல்லிக் கொடுத்த இல்ல. அதுக்காகவும் இல்ல. என் அம்மாவே சொல்லிக் கொடுத்தாங்க எனக்கு. இவனை பிடிச்சுக்கோ ன்னு.. அப்போகூட நான் உன்னை வளைக்க நினைக்கல..”

                       “நீ முதல் முறை என்னை தொட்டப்போ எனக்கு பத்தொன்பது வயசு பீம். படுக்கையைப் பத்தி எல்லாம் தெரியாமலா இருக்கும். அதுவும் என் அம்மாவுக்கு பொண்ணா பிறந்துட்டு நான் அப்படி சொல்ல முடியுமா.. உனக்கு முன்னாடியே நிறைய பேருக்கு என்னை விலைபேசி இருக்காங்க..”

                    “நான் சம்மதிக்காம போகவும் தான் கடைசியா சினிமாவை பிடிச்சாங்க. அப்பவும் வயசு வித்யாசம் எல்லாம் பார்க்கல. கிடைச்சவனுக்கு தள்ளிவிட தயாராதான் இருந்தாங்க. அவங்களைப் பொறுத்தவரைக்கும் பணம் தான் எல்லாமே. பணம் கிடைச்சா போதும்.”

                    “அவங்க நினைச்சபடி நீ கிடைச்ச. அவங்க உன்னை பயன்படுத்திக்கிட்டாங்க. அதுக்கு நான் விலை. எனக்கு மறுக்கிற அதிகாரத்தை நீங்க யாருமே கொடுக்கல பீம்.. நீங்க அத்தனை பேரும் உங்க விருப்பத்துக்கு என்னை வளைச்சிங்க…”

                     “ஆனா, நீ என் பாதுகாப்பையும்  யோசிச்ச. உனக்கு உன்னோட கணக்குகள் இருந்திருக்கலாம். ஆனா, நான் உன்கிட்ட வந்தபிறகு என்னை யாரும் தப்பா ஒரு பார்வை கூட பார்த்ததில்லை. உன்கிட்ட வந்தபிறகு தான் இந்த ஸ்டார் அந்தஸ்து எல்லாம் கிடைச்சது.. ஆனால், அப்போதும் ஒரு அளவுக்கு மேல உடம்பை காட்ட சொல்லி என்னை யாரும் கட்டாயப்படுத்தினதே இல்ல.

                      “அவங்களை பொறுத்தவரைக்கும் நான் பீஷ்மனோட கீப். நான் பீஷ்மனை வச்சிருக்கேன். நான் பீஷ்மனோட லீவ் இன் ரிலேஷன்ஷிப்ல இருக்கேன். அதனால என்னை நெருங்க பயம். எனக்கு அது பிடிச்சிருந்தது.”

                      “பத்துப் பேரோட படுக்கையை ஷேர் பண்றதுக்கு இது பெட்டர் இல்லையா.. நான் உன்னை அப்படிதான் நினைச்சேன் முதல்ல.. ஆனா, நீதான் என் மனசை கலைச்சது…”

                       “உனக்கு வேண்டியதும் என் உடம்பு தானே. அதோட வேலை முடிஞ்சுது ன்னு கிளம்பி இருக்கலாம் இல்ல. ஏன் எனக்கு ஆசைப்பட காத்து கொடுத்த. ஏன் எனக்கு  வாழற ஆசையை ஏற்படுத்தின. என்னை ஏன் ஒரு ராணியை மாதிரி உணர வச்ச..”

                “எல்லாமே உன்னால தான் பீம். உன்னாலதான் உன்னை வளைக்க நினைச்சேன். எப்போ உன்னை வளைக்க நினைச்சேனோ அப்போவே என்னை வளர்த்துக்க தொடங்கிட்டேன். பணத்துக்காக ன்னு யாரும் சொல்லிடக்கூடாது இல்லையாஅதற்காக..”

                  “உன்னை என் காதலால வளைக்கணும்ன்னு ஆசைப்பட்டேன் பீம். அது தப்பு ன்னு எனக்கு நானே அறிவுறுத்திகிட்ட நேரங்கள் நிறைய இருக்கு. ஆனாலும் வளைக்க நினைச்சேன். ரொம்ப பெரிய பேராசை போல. கடைசி வரைக்கும் என்னால முடியல.”

                   “ஆனா, நான் மொத்தமா எனக்குள்ள உனக்கு இடம் கொடுத்திருந்தேன். எந்த அளவுக்குன்னா என் அம்மாவை விட நான் உன்னை பெருசா மதிச்சேன். என் பீம் தான் எல்லாமே ன்னு நினைச்சிருந்தேன்.என் பீம் என்னை விடமாட்டான் ன்னு நம்பி இருந்தேன்.”

                    “நீ என்னை கல்யாணம் செய்துப்பேன் ன்னு எல்லாம் நான் ஆசைப்படல. ஆனா, கடைசிவரைக்கும் ஏதோ ஒரு வகையில என்னை உன்னோட வச்சுப்ப ன்னு நம்பினேன் நான். அசிங்கம் தான். ஆனாலும், ஆசை யாரை விட்டது. அந்த நிமிஷம் எனக்கு என் பீம் போதுமாக இருந்தான்.” 

                    “ஆனா, இது எல்லாமே தப்பு ன்னு நீ எனக்கு புரிய வச்ச. மொத்தமா தலையில அடிச்சு புரிய வச்ச. உன் பார்வை சாஷா பக்கம் திரும்பிடுச்சு. வெளிப்படையாகவே நீ என்னை அவாய்ட் பண்ண தொடங்கின. அப்போதான் புரிஞ்சது என் மரமண்டைக்கு. நான் விலை ன்றது. நான் ஆசைப்பட்டது தப்பில்லையா..”

                  “மொத்தமா உன்னை விட்டு ஒதுங்கிட்டேனே.. நான் உன்னை எந்த வகையிலும் தொடர முயற்சிக்கல.. ஆனா, நீ மறுபடியும் என் வாழ்க்கைக்குள்ள வந்த. என் விருப்பமே இல்லாம மறுபடியும் என்னை எடுத்துக்கிட்ட…”

                 “அதையும் என் தப்புக்கான தண்டனையா நினைச்சு தான் அமைதியா இருந்தேன். ஆனா, இது எனக்கு கடவுள் கொடுத்து இருக்க கடைசி வாய்ப்பு பீம்.”

 

                  “இதை என்னால இழக்க முடியாது. எனக்கு நீ வேண்டாம். உன்னோட எதுவுமே வேண்டாம் பீம். உன் பணத்துல கூட ஒரு பைசா வேண்டாம் எனக்கு. என் குழந்தையை கொடுத்திடு என்கிட்டேஎங்களை விட்டுடு பீம்என்று கையேந்தி நின்றாள் அவனிடம்.

                 “உன் கதை எல்லாம் ரொம்பவே நல்லா இருக்கு. வெறி எமோஷனல் ஆல்சோ.. ஆனா, எனக்கு உன்னை விடற ஐடியாவே வர மாட்டிங்குதே.. என்ன பண்ணலாம்..” என்று வில்லத்தனமாக சிரித்தவன் அவள் மிரண்டு விழிப்பதைக் கண்டு சிரித்துக் கொண்டான்.

                   அவன் பொம்மை அப்படி முழித்து பார்ப்பது அவனை ஈர்க்க, மீண்டுமொரு முறை அவள் இதழ்களை அணைத்து விடுவித்தவன்இங்கேயே இரு. வெளியேப் போக முயற்சி செய்யாத. நீ ட்ரை பண்ணாலும் உன்னால முடியாது. வீணாக அசிங்கப்பட வேண்டாம்..” என்று அவள் கன்னம் தட்டியவன் அவள் கன்னத்திலும் அழுத்தமாக தன் இதழைப் பதித்து விலகிச் சென்றான்.                

 

  

                   

      

                     

Advertisement